வன்முறையாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கில் கடந்த அக்டோபர் மாதம் பொது தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சியா மதத்தலைவர் முக்தாதா அல்-சதார் கட்சி 73 இடங்களில் வெற்றி பெற்றது. இவர் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி இருந்தாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு அல்சதார் மறுத்துவிட்டார். இதன் காரணமாக அல்சதாருக்கு நெருக்கமான முஸ்தபா இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் ஈரான் நாட்டுக்கு நெருக்கமான அல் […]
Tag: உண்ணாவிரதப் போராட்டம்
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான நவல்னி கைதிகளுக்குகாக அமைக்கப்பட்டிருக்கும் சுகாதார மையத்திற்கு செல்வார் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் மருத்துவர்கள் கூறியதையடுத்து உணவருந்த சம்மதம் தெரிவித்த நிலையில், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதற்கிடையே இவர் தனியார் மருத்துவர்களின் சிகிச்சை பெறுவதற்கு சிறைத்துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் கடந்த 3 வாரங்களாக இவர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் இவருடைய தனிப்பட்ட மருத்துவர் […]
தலைநகர் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பலமுறை வலியுறுத்தியும் ஊதியம் வழங்கப்படாததால் டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஊதியம் வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் […]
இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் இன்னும் முடிவை அறிவிக்காதது ஏன் என இந்திய முஸ்லீம் லீக் குற்றம் சாட்டியுள்ளது. ஏழரை சதவீதம் இட ஒதுக்கீடு பற்றி ஆளுநர் முடிவை அறிவிக்காதது அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில கூடாது என்பதற்கான மறைமுக சதி என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் திரு காதர் முகிதின் குற்றம் சாட்டியுள்ளர். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இட ஒதுக்கீட்டை கொள்கையில் தமிழகத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக விமர்சித்தார்.
நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவில் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வருமான வரித்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் வெங்கடேசன் இவ்வாறு தெரிவித்தார்.
பட்டாவில் தவறாக பதிவு செய்த பெயரை நீக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆசாத்புரம் முஸ்லிம் ஜமாத் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு மேலப்பத்தை, பத்தை பகுதி-1 கிராமம் புல எண் 413/1ல் உள்ள ஆசாத்புரம் முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான இடத்தை வருவாய்த்துறை UDR பட்டாவில் சாமிக்கண்ணு என்பவர் பெயரில் தவறாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வருவாய்த்துறையினர் UDR பட்டாவில் தவறாக பதிவு செய்த பெயரை நீக்க 2018ல் கொடுத்த […]