நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ‘உதவி பேராசிரியர்’ மற்றும் ‘ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவி பேராசிரியர்’ பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய (ugc net 2022 notification) விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக UGC NET தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலைக் கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வு அடுத்த மாதம் 8 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tag: உதவி பேராசிரியர்
கடந்த 2015 வருடம் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டுடன் சேர்த்து மொத்தமாக 4 மாநிலங்களில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மதுரையை தவிர்த்து மற்ற 3 மாநிலங்களில் கட்டுமானப்பணி தொடங்கி, அது முடியும் கட்டத்திற்கு வந்துவிட்டது. ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரையிலும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை, அரசாணை வெளியிடவில்லை என்று பல்வேறு புகார்களை குவிந்து வருகிறது. எனினும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையில் கடந்த வருடம் டிசம்பர் 21-ம் தேதி […]
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. விழுப்புரம் ,நீலகிரி மண்டலங்களில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உதவிப்பேராசிரியர் நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும் என யுஜிசி விதி உள்ளது. எனவே அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் உதவி பேராசிரியர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று பாண்டியம்மாள் என்பவர் வழக்கு தொடர்ந்தார். […]