இந்தியா சாா்பாக ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்கும் பணிகளை நிறைவு செய்வதற்கான காலவரம்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா சாா்பாக ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக்டன் கோதுமை மற்றும் உயிா்காக்கும் மருந்துகளை அட்டாரி-வாகா எல்லையைக் கடந்து பாகிஸ்தான் வழியே அனுப்பிவைக்க கடந்த வருடம் நவம்பா்மாதம் அந்நாடு அனுமதி வழங்கி இருந்தது. அதாவது அசாதாரண சூழ்நிலை என்ற அடிப்படையில் இந்த மனிதாபிமான உதவிக்கு அந்த நாடு ஒப்புதல் வழங்கி இருந்தது. இந்த […]
Tag: உதவி பொருட்கள்
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மருந்து பொருட்களை அனுப்பி வைத்து உதவிக்கரம் நீட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்ற பிறகு முதன் முறையாக மனிதநேயமுடன் உதவியாக 1.6 மெட்ரிக் டன் உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தானியர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அடிப்படையில் இந்தியா இந்த உதவியை செய்துள்ளது. இதனிடையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து டெல்லிக்கு 10 இந்தியர்கள் மற்றும் 94 ஆப்கானிஸ்தானியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை […]
ஆப்கான் மக்களுக்கு இந்தியாவின் உதவிப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக கடும் பசி பட்டினியால் வாடும் ஆப்கான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் இந்தியா அனுப்பி வைக்கும் உதவிப் பொருட்களுக்கு சில நிபந்தனைகளுடன் பாகிஸ்தான் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக முதலில் இந்திய சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதனையடுத்து புதிய அறிவிப்பு ஒன்றை பாகிஸ்தான் வெளியிட்டது. அதன்படி இந்திய உதவிப் பொருட்கள் ஆப்கான் […]