உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் கல்யாண்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளதால் மக்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக ஏராளமான நபர்கள் சாலையோரம் கடைகள் அமைத்து பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்த வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது. மேலும் இந்த வியாபாரிகளால் வாகனங்கள் சென்று வருவதற்கும் பயணிகள் செல்வதற்கும் இடையூறு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் கல்யாண்பூர் அருகில் […]
Tag: உதிரப்பிரேதசம்
பாஜக எம்பி மாரடைப்பினால் திடீரென காலமானார். உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அரவிந்த் கிரி. இவர் கோலா கோக்ரநாத் சட்டப்பேரவை தொகுதியில் 5 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இவர் மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அரவிந்த் கிரி திடீரென மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் உ.பியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் அரவிந்த் கிரியின் […]
சட்டவிரோதமாக மணல் கடலில் ஈடுபட்ட டிராக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா நெடுஞ்சாலையில் ஒரு சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடிக்கு மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் வந்துள்ளது. அந்த டிராக்டரை மறித்து சுங்கச்சாவடி அலுவலர் கட்டணம் கேட்டபோது திடீரென லாரி சுங்கச்சாவடியின் தடுப்புச் சுவர்களை உடைத்துக் கொண்டு சென்றது. இந்த டிராக்டரை தொடர்ந்து 13 டிராக்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சென்றது. […]