Categories
அரசியல் மாநில செய்திகள்

மெழுகுவர்த்தி எடுத்துகோங்க… முகக்கவசம் போட்டுக்கோங்க… திமுகவின் அதிரடி அழைப்பு…. !!

உத்தரபிரதேச இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திமுக மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாக அமைந்திருக்கின்றது. காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி அவர்களும், பிரியங்கா காந்தி அவர்களும் அந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டது, காவல்துறையால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்ணினத்தின் மீதான இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் காந்தி கைது…. உ.பியில் பரபரப்பு…. யோகி அரசை கண்டித்து காங். போராட்டம் …!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேஷத்தில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஹத்ராஸ். அந்த பகுதியில் தான் உயிரிழந்த பெண்ணின் குடும்பம் இருக்கின்றது. குடும்பத்தாரை  சந்திப்பதற்காக இன்று காலை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மூலமாக வந்து […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 22 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் …!!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அதிர்ச்சி நாடு முழுவதும் இருந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் இது போல ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது மக்களை வேதனையடைய வைத்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் பலாத்காரம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமையால் தலித் பெண் உயிரிழப்பு – பா.ஜ.க.-வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்…!!

உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் நேற்று நள்ளிரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எரிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஹத்ரஸ் மாவட்டம் சன்பா கிராமத்தை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண் கடந்த 14ஆம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அப்பெண் வெளியில் சொல்லிவிடுவார் என கருதிய அந்த கொடூர கும்பல் இளம்பெண்ணை கடுமையாக தாக்கினார்கள். இதில் நாக்கு துண்டிக்கப்பட்ட அப்பெண் உயிருக்கு […]

Categories
மாநில செய்திகள்

திருமணமான 3 மாதத்தில் பெண்ணுக்கு நடந்த துயரம்….. அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்….!

வரதட்சனை கொடுமையால் திருமணமான 3 மாதத்தில் பெண்ணுக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த முலாயம்சிங் என்பவருக்கும் விம்லேஷ் குமாரி என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. குமாரியின் பெற்றோர் திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு வரதட்சணை கொடுத்தனர். இருப்பினும் திருமணத்திற்கு பிறகு தங்கச் செயின் மற்றும் பைக் வரதட்சணையாக வேண்டும் என முலாயம் மற்றும் அவரது பெற்றோர்கள் குமாரியை கொடுமைப்படுத்தி வந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் குமாரியை அடித்து […]

Categories
மாநில செய்திகள்

ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ 30 கோடி நிதி…!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நேற்று வரை 30 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது என ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி அளித்தது. கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை […]

Categories
தேசிய செய்திகள்

நடுங்க வைத்த வில்லன்… தெறிக்கவிட்ட தமிழன்… கொண்டாடும் காவல்துறை …!!

நாட்டையே உலுக்கிய உ.பி போலீசார் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுள்ளார்  நாட்டையே உலுக்கிய 8 காவலர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்வதில் முக்கிய பங்காற்றியவர் கான்பூர் மாவட்ட எஸ்.எஸ்.பி தினேஷ் குமார் பிரபு. தினேஷ்குமார் பிரபு தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது தந்தையின் பெயர் பிரபு, அவர் இளங்கலை மேலாண்மை பட்டம் முடித்து, அதன் பின்னர் அகில இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

3000 போலீஸ் தேடும் உ.பி ரவுடி…! புல்லட் ஃப்ரூஃப் கார்களில் உலா….!!

கடந்த நான்கு நாட்களில் தேசிய அளவிலான ஊடகங்கள் ஒரு ரௌடியை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். புல்லெட் புரூப் கார்களில் சுற்றி வரும் பயங்கர ரவுடி: உத்தரப்பிரதேஷத்தில் உள்ள மிகப்பெரிய ரௌடியை பிடிப்பதற்கு 50 போலீஸ் செல்கிறார்கள். அவரை பிடிப்பதற்கு 200 மீட்டர் முன்னாடி செல்லும் போது கரண்ட் ஆப் ஆகுது. அது மட்டுமல்ல,  புல்டவுஸர் ரோட்டில் நின்றது. போலீசார் இதனை  சிந்திக்காமல்,  இது சதியாக இருக்குமா என சிந்திக்காமல்… பிடிக்கவந்த ஆர்வத்தில் இறங்கி புல்டவுசர் எல்லாம் தாண்டி […]

Categories
தேசிய செய்திகள்

போலீசாரை கூண்டோடு வேட்டையாடிய வில்லாதி வில்லன்!

நடந்தது என்ன ? உத்திரபிரதேச மாநிலம் திக்ரு என்ற கிராமத்தில் அதிகாலை 3 மணி அளவில் உத்தரபிரதேச போலீசாருக்கு ஒரு தகவல் வந்தது. 60 குற்றங்களுடன் தொடர்புடைய துபே என்பவர் இந்த இடத்தில் ஒளிந்து இருக்காரு என்ற தகவல் வருகின்றது.  அவர் மீதான எந்த குற்றமும் நிரூபித்து பெரிய தண்டனை வாங்கிக்கொடுக்க முடியவில்லை…. ஜெயிலில் போட்டால்  வெளியே வந்து மறுபடியும் தப்பு பண்ணி பெரிய gangster  ஆகி வலம் வருகிறார். அவரை சுற்றி துப்பாக்கி ஏந்திய கூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் அதிர்ச்சி… டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி கும்பல்… பரபரப்பில் போலீசார்..!!

உ.பியில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 போலீசார் பலியான சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகேயுள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபேயை தேடி டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் காவல்துறையினர் , குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்றனர். அப்போது, காவல்துறையினருக்கும், அங்கிருந்த ரவுடிகளுக்குமிடையே துப்பாக்கி சண்டை […]

Categories
தேசிய செய்திகள்

மணமேடையில் திடீரென சரிந்த மணப்பெண்… பின்னர் ஏற்பட்ட சோகம்… கதறும் மணமகன்..!

திருமணத்திற்கு தயாராக இருந்த பெண் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு வினிதா என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் முடிவு செய்தனர். இந்த திருமண ஏற்பாடுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. மணமகன் மற்றும் மணப்பெண் மேடையில் அமர்ந்து இருந்த நிலையில் திடீரென மணப்பெண் வினிதா மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் உடனடியாக வினிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

1.25 கோடி பேருக்கு வேலை வழங்கும் “தற்சார்பு வேலை வாய்ப்புத் திட்டம்”… பிரதமர் தொடங்கி வைத்தார்!!

உத்தரப்பிரேதசத்தில் 1.25 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தற்சார்பு வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் 6 மாநிலங்களில் 116 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பிரதமர் ஜூன் 20ம் தொடங்கி வைத்தார். வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக உ.பி.யின் 31 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தால் உத்தரபிரதேச மாநிலத்தின் 31 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதி மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெறுவர் என தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் தேர்வில் முதலிடம்….. ஜனாதிபதியின் பெயர் தெரியவில்லை…. உ.பி ஆசிரியர் தேர்வின் அவலம் …!!

ஆசிரியர் தேர்வில் மோசடி நடந்ததாக கூறி கைது செய்யப்பட்டவர்களில் முதலிடம் பிடித்த ஒருவரிடம் கேள்வி கேட்ட பொழுது நாட்டின் ஜனாதிபதி பெயரை தெரியாது எனக் கூறியுள்ளார் உத்தரபிரதேச மாநிலத்தில் 67 ஆயிரம் ஆசிரியர் பணியை நிரப்புவதற்காக அண்மையில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் மோசடி நடந்ததாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு லட்சக்கணக்கில் பலரிடம் இருந்து பணம் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய அதனை […]

Categories
தேசிய செய்திகள்

கடிதம் எழுதிய பிரதமர் ….! ”இதையும் எழுதுங்க” மோடியை விமர்சித்த அகிலேஷ் …!!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் இந்தியா – நேபாளம் எல்லை பகுதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு பார்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஜந்தாரா. இவர் நேற்றுமுன்தினம் அதாவது மே 30ஆம் தேதி சனிக்கிழமை இந்தியா – நேபாள நாடுகளின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இரு  நாடுகளுக்கு உட்பட்ட எல்லையோரத்தில் குழந்தையை பெற்றெடுத்தன் நினைவாக அந்த குழந்தைக்கு  ”பார்டர்”  என புதுமையான பெயரை அப்பெண் சூட்டியுள்ளார். ”பார்டர்”  என பெயர் சூட்டியுள்ள இந்தக் […]

Categories
மாநில செய்திகள்

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு: வேளாண்துறை தகவல்!!

வெட்டுக்கிளி படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி, தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து அச்சுறுத்தும் வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. தற்போது, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தற்போது வெட்டுக்கிளிகள் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு வயல்கள் மட்டுமின்றி பச்சை மரங்களும் வெட்டுக்கிளிகளால் பெரும் சேதமடைந்துள்ளன. தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரபிரதேச சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர், தமிழக முதல்வர் இரங்கல்!!

ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றபோது லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு லாரிகள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 15 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லாரியில் இருந்த தொழிலாளர்கள் ராஜஸ்தானில் இருந்து ஜார்கண்டின், பீகாரில் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். இது தொடர்பாக போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த ஊருக்கு சென்றபோது நேர்ந்த சோகம்…உத்தரபிரதேசத்தில் லாரிகள் மோதிய விபத்தில் 24 பேர் பலி!!

உத்தரபிரதேச மாநிலம் அவுரியா என்ற பகுதியில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றபோது லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு லாரிகள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதில், 24 பேர் உயிரிழந்துள்ளார். 15 பேர் மிகவும் மோசமாக படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

துட்டு இல்ல… “சாப்பாட்டுக்கு வழியில்ல”… சைக்கிளிலேயே உ.பி செல்லும் வட மாநிலத்தவர்கள்!

வட மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் உணவு, பணம் இல்லாததால் சைக்கிளிலேயே கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக எச்சரிக்கை நடவடிக்கையாக மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலத்தில் இருந்து பணிநிமித்தம் இடம்பெயர்ந்தவர்கள் உண்ண உணவின்றி வேலை இன்றி தவித்து வரும் சூழல் உருவாகியுள்ளது. போக்குவரத்து வசதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள சூழலில் ஆங்காங்கே சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் ஊருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கோயில் வளாகத்தில் 2 பூசாரிகள் மர்மான முறையில் கொலை… உத்தரபிரதேசத்தில் பரபரப்பு..!

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாரில் உள்ள ஒரு கோவிலில் இரண்டு பூசாரிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சடலங்கள் ஜெகதீஷ் என்ற ரங்கி தாஸ் (55), ஷெர் சிங் அல்லது சேவா தாஸ் (45) ஆகிய இருவர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து கோயிலுக்கு வந்து சடலங்களை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அறிக்கைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 30ம் தேதி வரை எந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி இல்லை: உத்தரபிரதேச அரசு உத்தரவு..!

ஜூன் 30 வரை எந்தவொரு பொதுக்கூட்டத்தையும் மாநிலத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நிலைமையைப் பொறுத்து மேலும் சில முடிவு எடுக்கப்படும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 32வது நாளாக அமலில் உள்ளது. மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி கட்சி மூலம் 3வது முறையாக ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் உடல்நலக்குறைவால் காலமானார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். 68 வயதாகும் ஆனந்த் சிங் பிஷ்த் வயது மூப்பு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மார்ச் 15ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் நேற்று அவரது […]

Categories
தேசிய செய்திகள்

மோசமான நிலையில் முதல்வரின் தந்தை – மருத்துவர்கள் தீவிர சிகிச்சை ..!!

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆன்ந்த் சிங் பிஷ்ட் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தையான ஆனந்த் சிங் பிஷ்ட்க்கு வயது 89 ஆகிறது.கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி சிறுநீரக பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆனந்த் சிங் பிஷ்ட் சேர்க்கப்பட்டார்.அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாகவே அவரது உடல்நிலை மிகவும் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 125 பேர், ராஜஸ்தானில் 122 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி: மாநில அரசு தகவல்!

உத்தரபிரதேசத்தில் புதிதாக 125 பேருக்கும், ராஜஸ்தானில் புதிதாக 122 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஐ எட்டியுள்ளது. மேலும் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

சாலையில் ரூ 500 நோட்டுக்கள் – கொரோனாவை பரப்ப சதி ? உ.பியில் பரபரப்பு ..!!

சாலையில் வீசப்பட்ட 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் கொரோனா பரப்புவதற்காக இருக்கலாம் என காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் சகேத் நகரில் நேற்று காலை ரூபாய் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் சாலையில் கிடைத்துள்ளன. இதனைக்கண்ட அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இருக்கும் பேப்பர் காலனி பகுதியிலும் 500 ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு கிடைக்கப்பெற்றது. இது […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் புதிதாக 21 கொரோனா…. மொத்த எண்ணிக்கை 431 உயர்வு!

உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று 21 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,380, தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பாதி டம்ளர் பால்….. மீதி எங்கே….? ஆத்திரத்தில் மகனை கொன்ற தந்தை….!!

ஒரு டம்ளர் பாலிற்காக தந்தை மகனையும் சகோதரனையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேசம் புரான்பூர் பகுதியில் சோஹன்னா கிராமத்தை சேர்ந்த குருமுக்  சிங்  இவர் மகன் மகள் மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த திங்கள் கிழமை அன்று மகள் மற்றும் மனைவி வெளியே சென்ற பொழுது வீட்டிலிருந்த மகன் ஜஸ்கரனிடம் பால் கொண்டுவர கேட்டுள்ளார். ஜஸ்கரன் பால் கொண்டு வந்து கொடுக்க டம்ளரில் பாதி அளவு பால் இருப்பதை […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் கட்டாயமாக முகமூடி அணியனும்.. இல்லாட்டி சட்டப்படி நடவடிக்கை பாயும்: உத்தரபிரதேசம் அரசு

உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் அனைவரும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார். முகமூடி அணியாமல் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கொரோனா அதிகமாக பாதித்த 15 மாவட்டங்களை உத்தரபிரதேச அரசாங்கம் சீல் வைத்தது. கவுதம் புத் நகர் (நொய்டா), தலைநகர் லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பரேலி, புலந்த்ஷஹர், ஃபிரோசாபாத், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அதிகம் பாதித்த 15 மாவட்டங்களுக்கு சீல்: உத்தரபிரதேசம் அதிரடி

கொரோனா அதிகமாக பாதித்த 15 மாவட்டங்களை உத்தரபிரதேச அரசாங்கம் சீல் வைத்துள்ளது. கவுதம் புத் நகர் (நொய்டா), தலைநகர் லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பரேலி, புலந்த்ஷஹர், ஃபிரோசாபாத், மகாராஜ்கஞ்ச், சீதாபூர், சஹரன்பூர் மற்றும் பஸ்தி ஆகிய 15 மாவட்டங்களை அம்மாநில அரசாங்கம் சீல் வைத்து மக்கள் செல்ல தடை விதித்துள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் ஹோம் டெலிவரி மூலம் கொண்டு சேர்க்கப்படும் என்றும் மற்றும் மருத்துவ குழுக்கள் மட்டுமே உள்ளே செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் கலந்துகொண்ட 1,203 பேர் கண்டறியப்பட்டனர்… உத்தரபிரதேசம் அரசு

டெல்லியில் நடந்த தப்லீகி ஜமாஅத் மதநிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1203 பேர் அடையாளம் காணப்பட்டதாக உத்தரபிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில், 897 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் இதுவரை 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வந்த தகவலின்படி, உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 42 பேர் டெல்லி தப்லீகி ஜமாத் அமைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் இன்று புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்!

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசாங்க வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதில் சுமார் 42 பேர் டெல்லி தப்லீகி ஜமாத் அமைப்பு நடத்திய மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் 335 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தையும், 309 பேருடன் தமிழகம் 2வது இடத்தையும் பெற்றுள்ளது. சுமார் 157 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறையினரை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உத்தரபிரதேச அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் லாக் டவுனின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் காவல்துறையினரைத் தாக்கும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் உள்பட பல இடங்களில் காவல்துறையினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மக்களை கண்காணிக்க ரோந்து பணிக்கு சென்ற காவலர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பயத்தால் அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய அரசு அதிகாரி: அதிர்ச்சியில் குடும்பம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் அலுவகத்திலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஹரன்பூர் அருகே நாகூர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய மூத்த போலீஸ் சூப்பிரண்டு தினேஷ் குமார், ” நாகூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் தற்கொலைக்கு முன்னதாக அவர் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் தடுத்து நிறுத்தம்… உத்தரவுக்கு காத்திருக்கும் 10,000 தொழிலாளர்கள்..!

ராஜஸ்தானைச் சேர்ந்த 10 ஆயிரம் தொழிலாளர்கள் உத்தரப் பிரதேச எல்லையில் உத்தரவிற்கு காத்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவையே முடக்கியுள்ளது. இதன் எதிரொலியால், நாடு முழுவதும் வருகின்ற 14ஆம் தேதிவரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதில் சிலர் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இந்நிலையில் டெல்லியில் வேலை பார்த்த தொழிலாளர்கள் 10,000 பேர் 500 கிலோ மீட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி-ல் 144 தடையை மீறியவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையால் சர்ச்சை: மன்னிப்பு கேட்ட மாவட்ட எஸ்எஸ்பி

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சொந்த ஊருக்கு நடைபாதையாக சென்ற நபர்களுக்கு காவல்துறை அளித்த தண்டனையால் சர்ச்சை கிளம்பியது. நாடு முழுவதும் பிரதமர் வேண்டுகோளின் அடிப்படையில் 144 தடை உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேபோல பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு பணியில் காவல்துறை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உ.பி: நொய்டாவில் 144 தடை உத்தரவு ….!!

சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. உத்திரபிரதேச மாநிலத்தில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள நொய்டாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஏப்ரல் 5ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு என மாசட்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

தேர்வு கிடையாது….. ”எல்லாரும் ஆள் பாஸ்”…. உ.பி அரசு அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா பாதிப்பால் மாணவர்களுக்கு தேர்வு கிடையாது அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆல் பாஸ் என்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். எட்டாம் வகுப்பு வரைக்கும் மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சி என்ற ஒரு நடைமுறை தான் தற்போது வரைக்கும் இருக்கிறது. இதில் சில சட்ட திருத்தங்கள் , விவாதங்கள் எல்லாம் […]

Categories
மாநில செய்திகள்

உ.பியில் சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்பட பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு! 

உத்தரப்பிரதேசத்தில் சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்பட பேனர்களை அகற்ற அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. இதுபோல் உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடைபெற்றது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் அறிவுறுத்தலின் இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களின் புகைப்படங்களையும், முகவரிகளையும் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளன.  உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ, ஹஸ்ரத்கஞ் போன்ற ஊர்களின் முக்கிய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா அச்சம் : ”லக்னோவில் இறைச்சிக்கு தடை” உ.பி அரசு அதிரடி …!!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் திறந்தவெளியில் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 28 பேருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு கொரோனா பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த சுற்றைக்கை அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் மீன்கள் , பாதி வேகவைத்த இறைச்சிகள் , திறந்தவெளி இறைச்சி கடை […]

Categories

Tech |