மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டதால், உத்தவ் தலைமையில் ஒரு அணியினரும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியினரும் என 2 பிரிவினராக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இரண்டு அணியினரும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறி வருவதால் தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை முடக்கியுள்ளது. இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த […]
Tag: உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி கடந்த மாதம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. ஏனெனில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்னாத் ஷிண்டே, கட்சியை விட்டு விலகி பாஜகவுடன் கூட்டணி அமைத்து மராட்டிய முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார். சிவசேனா கட்சியில் உள்ள 56 எம்எல்ஏக்களில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு கொடுத்தனர். அதன் பிறகு மொத்தமுள்ள 18 எம்பிகளில் 12 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருக்கின்றனர். உத்தகவ் தாக்கரே பக்கம் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் ஆதரவு […]
சிவசேனா உத்தவ் தாக்கரே அணிக்கு ‘தீபச்சுடர்’ சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். சிவசேனா கட்சி பெயரும், வில்லம்பு சின்னமும் முடக்கப்பட்டதால் புதிய சின்னம் மற்றும் பெயர் ஒதுக்க உத்தவ் தாக்கரே கோரி இருந்தார். உதயசூரியன், திரிசூலம், தீபச்சுடர் ஆகிய மூன்றில் ஒரு சின்னத்தை கோரி இருந்தார் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே. தற்காலிக சின்னம் மற்றும் கட்சி பெயர் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருந்த உத்தவ் தாக்கரே அணிக்கு தீபச்சுடர் சின்னம் […]
மும்பையில் இரண்டு வழித்தடங்களில் இயக்க இருக்கும் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கின்றார். மராட்டிய மாநிலத்தில், குடிபட்வா என்று அழைக்கப்படும் மராட்டிய புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மும்பை வாசிகள் வெளியில் சென்று வருவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும் இரண்டு புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மெட்ரோ 2ஏ மற்றும் மெட்ரோ 7 […]
மும்பையில் இரண்டு வழித்தடங்களில் இயக்க இருக்கும் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றார். மராட்டிய மாநிலத்தில், குடிபட்வா என்று அழைக்கப்படும் மராட்டிய புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மும்பை வாசிகள் வெளியில் சென்று வருவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும் இரண்டு புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மெட்ரோ 2ஏ மற்றும் மெட்ரோ 7 […]
கோயில்களை திறக்க வேண்டுமென்று போராட்டம் நடத்துவதற்கு பதிலாக கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது: கோவில்களை திறக்க வேண்டும் என்று கூறி பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலாக கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள். கோவில் உள்ளிட்டவற்றை திறக்க கோரி போராட்டம் நடத்த வேண்டாம். டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் தற்போது பரவி வருகின்றது. இந்த நேரத்தில் நோயாளிகள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள […]
உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசை முடக்கும் வரை நான் அனைத்து சட்ட முயற்சிகளையும் செய்வேன் என்று நாராயணன் தெரிவித்துள்ளார். மராட்டிய போலீசாரால் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த மத்திய மந்திரி நாராயணன் ரானே மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பற்றி தான் பேசிய அத்தனையும் சரி என்றபடியே கூறினார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது: “நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது கூட தெரியாத ஒருவரின் மீது […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களும் அடுத்தடுத்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒருசில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாதிப்பு சற்று குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே ஜூலை […]
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை ,அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில முதலமைச்சர் ,பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸின் 2வது அலை வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து உள்ளது. அதுமட்டுமில்லாது நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ,மருத்துவ உபகரணங்கள் ,ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் வென்டிலேட்டர் போன்றவற்றிக்கு ,தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக ஆக்சிஜன் சிலிண்டர் களுக்கு […]
மகாராஷ்டிராவில் தற்போது அதிகரித்துள்ள கொரோனா தொற்று காரணமாக, 25 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துமாறு, அம்மாநில முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ,தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 45 வயது மேற்பட்டவர்களுக்கு , தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. தொற்று அதிகரித்து வரும் […]
முககவசம் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து நாம் தப்பிப்பதற்கு பாதுகாப்பான ஒன்று என மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் மஹாராஷ்டிர மாநிலத்தில் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வைக்க மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளரை சந்தித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சத்ரபதி சிவாஜி காலத்தில் நடந்த போர்களில் வாழும், கேடயங்களும் பயன்படுத்தப்பட்டாலும், […]
மகாராஷ்டிர மாநில கட்சியின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவையும், அவர் தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். முன்னதாக இவர் மும்பை காஷ்மீர் போல் உள்ளது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால் கோபமடைந்த உத்தவ் தாக்கரே கங்கனாவின் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசம் குறித்து விமர்சனம் செய்தார். இதற்கு தற்போது எதிர்வினை ஆற்றியுள்ள கங்கனா ரனாவத், தகுதி இல்லாமல் வாரிசு அடிப்படையில் […]
பிகாரில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதியளித்த பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ள மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வங்கதேசம் அல்லது கஜகஸ்தானைச் சேர்ந்தவர்களாக அந்தக் கட்சி கருதுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ள காரணத்தால், மும்பை, தாதரிலுள்ள சாவர்கர் மண்டபத்தில் வைத்து நடைபெற்ற சிவசேனா கட்சியின் தசரா பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, பிகாரில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ள பாஜக மற்ற மாநில மக்கள் […]
மராட்டிய மாநிலத்திற்குள் நுழைந்து வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிபிஐக்கு வழங்கப்பட்டு வந்த அனுமதியை திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் உத்தப்தாக்கரே அறிவித்துள்ளார். உத்தவ்தாக்கரேவின் இந்த அறிவிப்பால் சிபிஐ அதிகாரிகள் தன்னிச்சையாக நுழைந்து எந்த வழக்குகள் தொடர்பாகவும் இனி விசாரணை மேற்கொள்ள முடியாது. மும்பை உள்ளிட்ட இடங்களில் சில தொலைக்காட்சிகள் செய்த டிஆர்பி மோசடி தொடர்பான வழக்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் காவல் நிலையம் விசாரணை மேற்கொண்டது. ஆனால் வழக்கை திடீரென சிபிஐக்கு உத்தரபிரதேச காவல்துறை கொடுத்துள்ளது. […]
கா்நாடகாவில் மராத்தி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை சேர்க்கும் வரையில் ஒன்றுபட்ட மராட்டியம் முழுமை அடையாது என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயால் ஆரம்பிக்கப்பட்ட ‘மார்மிக்’ என்ற வார இதழின் 60-வது ஆண்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பங்கேற்றார். இந்த விழாவில் அவர் பேசுகையில்: “மும்பையில் மராத்தி பேசும் மக்களின் உரிமைகளுக்காக போராட சிவசேனா தொடங்கப்பட்டதற்கு காரணமே இந்த இதழ் தான். இந்த இதழ் விரைவில் […]
கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மூன்றாவது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து அடியோடு முடங்கின. இதனால் நகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலைமையை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு படை பல்வேறு இடங்களில் களமிறக்கப்பட்டு மீட்பு பணி முடுக்கி […]
ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பாஜக கட்சி அல்லாத பிறருக்கு அழைப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக பிரபலமான புண்ணிய பூமி என்று அழைக்கப்படும் ராமர் பிறந்ததாக கூறப்படும் அயோத்தியில் பல பிரச்சனைகளுக்கு தடைகளுக்கு பிறகு ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான வடிவமைப்புகள், கோவிலை எடுத்து கட்டவிற்கும் நிறுவனம் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக வைரலாகி வருகிறது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக வருகின்ற ஐந்தாம் தேதி பூமி […]
அரசை கவிழ்க்க எதற்காக செப்டம்பர் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே பாஜக மீது சாடி இருக்கிறார். மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தன்னுடைய 60-வது பிறந்தநாளை முன்னிட்டு சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-” மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் நேர்மறையாக இருக்கின்றன. மூன்று கட்சிகளின் அனுபவத்தோடு இந்த அரசு சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. எனது தலைமையிலான அரசாங்கத்தினுடைய எதிர்காலமானது எதிர்க்கட்சிகளின் […]
மகராஷ்டிராவில் மே 21ம் தேதி சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் + காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மாநில முதலமைச்சராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள உத்தவ் தாக்கரே ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற வேண்டும், இல்லை என்றால் அவர் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வாக வேண்டும். கொரோனாவின் தாக்கம் […]
சட்டமேலவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பதால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் சட்டமேலவை தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்பாக மகாராஷ்டிராவின் தலைமைச் செயலாளர் ஒரு கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்திருந்தார். அதில் கொரோனா பாதிப்பு ஏற்பட இருக்க கூடிய சூழ்நிலை உரிய பாதுகாப்போடு சட்ட மேலவைத் தேர்தல் நடத்தலாம், அதில் எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது மாநில அரசின் சார்பில் இருந்து உரிய […]
மும்பை பாந்த்ரா போராட்டம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், பாந்த்ராவில் நடைபெற்ற போராட்டம், தடியடி கவலை அளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைய இருந்த […]
மகாராஷ்டிர மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447 ஆக இருக்கக் கூடிய நிலையில், உயிரிழப்பு 239 ஆகியிருக்கிறது. கொரோனாவால் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடிய மாநிலம் மகாராஷ்டிரா தான். மகாராஷ்டிர மாநிலத்தில் 1,574 பேருக்கு நோய் பற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர். 188 பேர் குணமடைந்துள்ளனர் . இதனை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிர மாநில அரசு […]
மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே,வருகிற மாா்ச்-7ம் தேதி அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது டுவிட்டரில், “ மார்ச் மாதம் 7-ம் தேதி மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்திக்கு சென்று ஸ்ரீ ராமரை வழிபடுகிறார் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்கூறினார். மாா்ச் 7-ம் தேதியுடன் உத்தவ் தாக்கரே பதவியேற்று 100 நாள்கள் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அன்று ராமர் கோவில் வழிபாடு […]