சீனா உட்பட சில நாடுகளில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை (டிச.23) சீனாவில் இருந்து தில்லி வழியாக இந்தியா திரும்பிய உத்திரபிரதேசம் ஆக்ராவை சோ்ந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆக்ரா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி அருண் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபா் அவருடைய வீட்டில் […]
Tag: உத்திரபிரதேசம்
உத்தரப்பிரதேசம் மாநிலம் மல்புரா போலீஸ் நிலையத்தில் சென்ற டிச..16-ம் தேதி ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், கடந்த 16ம் தேதி காலை 7.30 மணியளவில் பள்ளிக்கு சென்ற இரண்டு சகோதரிகள் வீடு திரும்பவில்லை. இவர்களில் ஒருவர் 10ம் வகுப்பும், மற்றொருவர் 12ம் வகுப்பும் படித்து வந்தனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பின் காவல்துறையினர் பெற்றோரிடம் விசாரித்தபோது மதிப்பெண் குறைவாக எடுத்தது பற்றி சகோதரிகளின் தாய் அவர்களை திட்டியது தெரியவந்தது. இந்நிலையில் காணாமல் போன சகோதரிகளில் ஒருவரின் சமூகஊடக […]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் அவரது உறவினர் பையனான தீபக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த இளம் பெண் தீபக்கின் உறவினர்கள் அவர்களது திருமணத்திற்கு மறுப்பதாக கூறி ராட்சத தண்ணீர் தொட்டி மீது ஏறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணை சமாதானப்படுத்தி கீழே இறக்கியுள்ளனர். காதலனை கரம் பிடிக்க […]
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்ப்ரஸ்வேயில் 2 பேருந்துகள் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்மிர்பூர் பகுதியில் டிசம்பர் 15-ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. அதாவது முன்னாள் ராணுவ வீரரான பரசுராம் என்பவரின் மகள் நேகாவுக்கும், கடற்படையில் பணிபுரியும் யோகி பிரஜாபதி என்ற யோகேந்திராவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பரசுராம் தன்னுடைய மகள் நேகாவுக்கு வித்தியாசமாக புல்டோசர் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். பொதுவாக திருமணத்தின்போது சொகுசு கார் பரிசாக வழங்கப்படும். ஆனால் ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு புல்டோசரை பரிசாக வழங்கியது பலரது மத்தியிலும் […]
பணி நேரத்தின் போது சினிமா பாடலுக்கு நடனமாடிய 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமஜன்ம பூமி என்னும் பகுதியில் இந்து மத கடவுள் ராமரின் வழிபாட்டு தளம் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக இந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் கான்ஸ்டபிள் பணி நேரத்தின்போது போஜ்புரி பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இதில் 3 கான்ஸ்டபிள் நடனமாட அதை மற்றொரு பெண் கான்ஸ்டபிள் வீடியோ […]
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஜனவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, வரும் 25ம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையும், 29 ஆம் தேதி அன்று குரு கோவிந்த்சிங் ஜெயந்தியும் மற்றும் வர இருக்கும் ஜனவரி 1 ஆம் தேதி அன்று புத்தாண்டை முன்னிட்டும் பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிகள் கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை தினங்களை கருதி அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த […]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் அருகே வருண் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் சந்தோஷ் தன்னுடைய பேத்தி ரியா அகர்வாலுடன் லால்குர்தி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பாட்டியின் காதில் இருந்த ஒரு கம்மலை பறித்து விட்டு பைக்கில் வேகமாக சென்றனர். உடனே ரியா மிகவும் துணிச்சலாக மர்ம நபர்களை பைக்கிலிருந்து பிடித்து இழுத்து தள்ளி விட்டார். அதோடு அவர்களுடன் சண்டையிட்டு ஒரு கம்மலையும் பிடுங்கிவிட்டார். இதனையடுத்து […]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 8-வது தமிழக குழுவின் பிரதிநிதிகளுடன் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உரையாடினார். அப்போது இந்த பயணத்தின் போது தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பிரதிநிதிகள் மத்திய அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். அதன் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக காசி மற்றும் தமிழகம் இடையே “காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில்” என்ற […]
உத்திரபிரதேச மாநிலத்தில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் வழங்கப்பட இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் மற்றும் லேப்டாப்புகளின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களால் அதை வாங்குவது கடினமான ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அரசாங்கம் லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போனை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு வழங்கும் இலவச லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போனை […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி ஊர் தலைவருடன் ஹோட்டலில் ஒன்றாக இருக்கும்போது தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக பிடித்து நடு ரோட்டில் வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார். அதன் பிறகு அமன் தன்னுடைய மனைவி மற்றும் ஊர் தலைவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மனைவி நீண்ட நாட்களாக இதை செய்துவரும் நிலையில், என்னுடைய நண்பர்கள் உதவியுடன் இன்று தான் […]
நாடு முழுவதும் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஹோலி பண்டிகை என்று மக்களுக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இலவச சிலிண்டர் அனைவருக்கும் கிடைத்து விடாது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு இலவச எரிவாயு சிலிண்டர் மற்றும் அதற்கு மானியம் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மட்டுமே இலவச ஸ்லீவ் டிரஸ் சலுகை கிடைக்கும் என கூறப்படுகிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் மக்களுக்கு […]
உத்திரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் சந்திரவீர் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாக இவரது மனைவி சவிதா புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். துப்பு எதுவும் கிடைக்காமல் கிடைப்பிலேயே இருந்த இந்த வழக்கில் அதிரடி திருப்புமாக மனைவியே கணவனை கொலை செய்ததை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். இது குறித்து காஜியாபாத் எஸ்பி தீக்ஷா சர்மா கூறியது, சவிதாவும் அவரது காதலரான பக்கத்து வீட்டுக்காரர் அருண் ஆகிய […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், கான்பூர் ஆகிய பல்வேறு நகரங்களில் கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பிரயாக்ராஜ் நகரில் ஒரு பள்ளியில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒருநாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது. இது குறித்து பிரயாக்ராஜ் தலைமை மருத்துவர் அதிகாரி நானக் ஷரண் கூறியது, ‘மாவட்டத்தில் டெங்கு ஆய்வு செய்வதற்காக பல பகுதிகளில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகிறது’ […]
உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு குறிப்பாக பிரயாக்ராஜ் மற்றும் கான்பூர் பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு இருக்கிறது. இந்த டெங்கு பாதிப்பின் காரணமாக பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு டெங்கு காய்ச்சலின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடிக்கப்படுவதாக தலைமை மருத்துவ அதிகாரி நாணக் சரண் கூறியுள்ளார். இந்த டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக முதல் மந்திரி […]
உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்றுவதற்காக சுரேஷ் சந்திரா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்து முடித்து வீட்டுக்கு திரும்பினார். அதன் பிறகு அக்டோபர் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கடும் வலி ஏற்பட்டது. இதனால் மற்றொரு மருத்துவரிடம் சென்றுள்ளார். அங்கு அவர் ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவரது இடது பக்க சிறுநீரகமே காணாமல் போய் இருப்பது […]
நகை கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரி என்னும் பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருபவர் ராகுல். இந்த நிலையில் அவரது கடைக்கு இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியுடன் வந்துள்ளனர். இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த தொழில் அதிபரை சுட்டுள்ளனர். அதை பார்த்த பெண்கள் அலறிய போது அவர்களிடம் துப்பாக்கியை காட்டி அந்த மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். […]
உத்திரபிரதேசம் கான்பூர் பகுதியில் 10 வயது சிறுவன் ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பங்கஜ் மிஷ்ரா என்ற காவல் நிலைய அதிகாரி வழக்கு பதிவு செய்துள்ளார். அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்த சிறுவன் அந்த மாவட்டத்தின் சிறுவர் நீதிமன்ற குழு முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த […]
உத்திரபிரதேச மாநில அலிகாரியில் ஒரு நபர் காலை வேளையில் காட்டு பகுதியில் காலை கடன் கழிப்பதற்காக சென்று உள்ளார். அவர் திரும்பி வரும்போது அங்கிருந்து ஒரு தோட்டத்தில் விளைந்திருந்த சில கொய்யா பழங்களை பறித்துள்ளார். இதனை அங்கிருந்து இருவர் பார்த்து உள்ளனர். உடனே அந்த நபரை பிடித்து கம்பால் அடித்து தாக்கியுள்ளனர். இதனால் அந்த நபர் சுயநினைவிழந்தார். அதன் பிறகு அவரை அங்கே விட்டுவிட்டு அவர்கள் இருவரும் தப்பிவிட்டனர். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் […]
உத்தரபிரதேச மாநில வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை ஓட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின் படி கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிருங்கார் கௌரி, கணபதி, ஹனுமன், நந்தி சிலைகளை தினந்தோறும் வழிபட அனுமதி அளிக்குமாறு 5 பெண்கள் உள்ளிட்ட சிலர் கொடுத்த வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஞானவாபி […]
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் சிவானந்தம். இவருடைய வீட்டில் வழக்கம் போல மனைவி மூலிகை டீ போட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த சிவானந்தம் அவருடைய 6 வயது மகன், ஐந்து வயது மகன் உள்ளிட்டர் டீயை குடித்துள்ளனர். அது மட்டும் இன்றி வீட்டிற்கு வந்த அவருடைய மாமா பக்கத்து வீட்டைச் சேர்ந்த சோப்ரான் என்பவரும் மூலிகை டீயை குடித்துள்ளார்கள். பின்னர் சிறிது நேரத்தில் இந்த ஐந்து பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு […]
உத்திரபிரதேச மாநிலத்தில் நாக்லா கன்ஹாய் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிவானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாங் (6), திவாயான்ஷ் (5) என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டில் டீ குடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து சிவானந்தனின் மாமனார் ரவீந்திர சிங்கும், பக்கத்து வீட்டுக்காரர் சோப்ரான் ஆகியோரும் டீ குடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் டீ குடித்த சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 5 பேரையும் மீட்டு […]
உத்திரபிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், 6-வது முறையாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என அரசு முடிவு செய்தது. இதனால் அயோத்தி நகரில் தீப விளக்குகளை ஏற்றுவதற்கு முடிவு செய்தனர். அதன்படி 15.76 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. […]
மத்திய அரசின் உள்துறை மந்திரி ஆகவும் அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு தலைவராகவும் இருக்கின்ற அமித்ஷா தலைமையிலான குழு சமீபத்தில் ஜனாதிபதியிடம் அளித்திருக்கின்ற அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மற்றும் பிராந்திய மொழிகள் கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது அதிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் முதன் […]
மத்திய பிரதேசம் சத்தருப்பூர் மாவட்டத்தில் விபத்தில் மரணம் அடைந்த தனது சகோதரியின் மகளை மாவட்ட மருத்துவமனையில் பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகு அந்த நபர் பிணத்தை புதைக்க அரசு மயானத்தை தேடி அலைந்துள்ளார். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் தனியார் மயானத்தில் புதைக்கவோ அல்லது வாகனம் வைத்து கொண்டு செல்லவும் போதிய வசதி இல்லாத காரணத்தினால் தோளிலேயே தூக்கிக்கொண்டு தனது சொந்த கிராமத்திற்கு பேருந்தில் சென்று டிக்கெட் எடுக்கவே பணம் இல்லாத […]
டெல்லியே சேர்ந்து 40 வயது பெண் கடந்த சனிக்கிழமை பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் சென்றுள்ளார். பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றிவிட்டு டெல்லி திரும்புவதற்கு இரவு காசியாபாத் பஸ் நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த பெண்ணை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரண்டு நாட்களாக அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியானது மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் மிகவும் தீவிரம் காட்டி வந்துள்ளது. ஆனால் சில மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் மாணவர்களை தேர்வு எழுத விடாமல் ஒரு நாள் முழுக்க வெயிலில் நிற்க வைத்துள்ளது. இதனால் மாணவர்கள் அழுது கொண்டே வெளியே நிற்கின்றனர். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அப்போது ஒரு சிறுமி […]
உத்திரபிரதேசத்தில் முதல்வர் யோகி தலைமையான பாஜக ஆட்சியில் மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் சஞ்சய் நிஷாத். இந்நிலையில் மாவ் நகரில் நடந்த காட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியுள்ளார். ஆனால் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் அதனை கவனிக்காமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டும், முணுமுணுத்துக் கொண்டும் இருந்துள்ளனர். அவரது பேச்சை யாரும் கேட்கவில்லை. இதனை பார்த்த நிஷாத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் நீங்கள் என்னை விட பெரிய அரசியல்வாதியா? அப்படி என்றால் நீங்கள் பேசுங்கள், இல்லையென்றால் என்னுடைய […]
உத்திரபிரதேசம் அலிகாரில் ஒரு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 4 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலையில் இந்த விபத்து நடைபெற்றது. இதுகுறித்த தகவலறிந்ததும் தீயணைப்புபடையினர் அங்கு சென்றனர். இதையடுத்து அங்கு மீட்புபணி நடைபெற்று வருகிறது என்றும் இதுவரையிலும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் இந்திரா விக்ரம்சிங் கூறியதாவது, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இடிந்து விழுந்த […]
உத்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் கடைகளுக்கு உள்ளம் வெள்ளநீர் புகுந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் விளைநிலங்களும் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மாநில ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை 12ஆம் தேதி வரை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மதரசா கல்வி வாரியம் […]
36 வருடங்களாக தந்தை வீட்டில் இருட்டு அறையில் சிறை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள முகமதாபாத் என்னும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கிரீஸ் சந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 53 வயதில் ஸ்வப்னா ஜெயின் என்ற மகள் இருக்கின்றார். மனநலம் குன்றிய குழந்தையாக பிறந்த ஸ்வப்னாவை அவரது தந்தை 17 வயது முதல் வீட்டை விட்டு வெளியே அனுப்பியது கிடையாது. மேலும் அந்தப் பெண்ணின் […]
உத்திரபிரதேசத்தின் லக்னோ நகரில் 81 வது வருடாந்திர இந்திய சாலைகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது நான் யோகிஜிக்கு வாக்குறுதி அளித்துள்ளேன். 2024 ஆம் வருடம் முடிவதற்குள் உத்தரபிரதேசத்தில் அமெரிக்காவிற்கு இணையான சாலை உட்கட்டமைப்பை நாங்கள் ஏற்படுத்தி தருவோம். இதற்காக உத்தரப்பிரதேசத்தில் ரூபாய் 5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்ட பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதனை […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியில் பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு கான்பூர் மற்றும் கதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் டிராக்டரில் சென்றுள்ளனர். இவர்கள் சாமி தரிசனம் முடிந்த பிறகு டிராக்டரில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென நிலை தடுமாறிய டிராக்டர் ஒரு குளத்தில் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் […]
உத்திரபிரதேசம் மாநில முசாபர் நகர் மாவட்டத்தில் பாலத்தை தகர்க்கும் பணியை ஓட்டுனர் மேற்கொண்டார். அப்போது திடீரென பாலம் முழுமையாக பெயர்ந்ததால் புல்டோசர் ஆற்றில் விழுந்து மூழ்கியது. நல்ல வேலையாக ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். https://twitter.com/i/status/1574283820177694721
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் பாஜக அரசில் அமைச்சராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா என்பவருக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் அங்கிதா பண்டாரி (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த பெண்ணிடம் ரிசார்ட்டுக்கு வருபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு ரிசார்ட்டில் வேலை செய்பவர்கள் கூறியுள்ளனர். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக பேசி முடிவெடுக்க கடந்த 18-ஆம் தேதி இளம்பெண்ணை வெளியே […]
உத்திரபிரதேச மாநிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மொரதாபாத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு ஐந்து நபர்களால் கொடூரமான முறையில் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளானார். பின்பு சிறுமியை குற்றாவாளிகள் சம்பவ இடத்திலேயே நிர்வணமாக விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து சிறுமி ரத்தப்போக்குடன் தன் கிராமத்திற்கு சாலையில் நிர்வாணமாக நடந்தே சென்றுள்ளார். சிறுமி நடந்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கொடூரம் என்னவென்றால் அந்த சிறுமிக்கு யாரும் உதவவில்லை. பதிலாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். […]
உத்திரபிரதேச மாநிலம் சந்த் கபீர் நகர் பகுதியில் ராம்பூர் கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் நேற்று மாலை இளம் காதலர்கள் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 18 வயதான ஆண் மற்றும் 15 வயதான பெண் இருவரும் காதலித்து வந்ததாகவும், இவர்களது சாவில் மர்மம் இருப்பதாகாவும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று இருவரின் குடும்பத்தினரும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்களின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை […]
உத்திரபிரதேசம் ட் தியோரியா பகுதியில் 2 மாடி கட்டிடமான பாழடைந்த வீட்டில் திலீப்(35) என்பவர் வசித்து வருகிறார். அவரது மனைவி சாந்தினி. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயது மகள் உள்ளார். இருவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி மற்றும் 2 வயது மகள் ஆகியோர் கீழ்தளத்தில் உள்ள அறைக்கும் அருகில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணிக்கு திடீரென வீடு இடிந்து விழுந்தது. இந்த விபத்தால் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் வீட்டின் முன் அமர்ந்திருந்த சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பீரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் முன்பு ஒரு சிறுமி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த சலீமுதின் மற்றும் ஆசிப் என்கின்ற இருவரும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பலத்த காயமடைந்த சிறுமி அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். […]
உத்திரபிரதேசத்தில் ஆண்களுடன் நட்பாக பழகி நிர்வாண வீடியோ காலில் பணம் பறித்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் நூதன முறையில் மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. முன்பெல்லாம் செல்போன் மூலம் உங்களை அழைத்து உங்களது வங்கி கணக்கு எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும். இதனால் உங்களின் அக்கவுண்ட் எண் போன்ற வங்கி விவரங்களை கொடுங்கள் என்று கேட்டு அதை வைத்து வங்கியில் உள்ள பணத்தை திருடி வந்தனர். இதைத்தொடர்ந்து தற்போது […]
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு கொண்ட விசாரணையில், கோரக்பூர், அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளொன்றுக்கு 55 மில்லியன் லிட்டர் கழிவுநீர் ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் கலக்க விடப்படுகிறது. மேலும் உத்தரபிரதேசம் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, திட்டமிடப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை பற்றி தெளிவாக இல்லை. உயிரி தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு பணிகளுக்கு பிறகும் நீரின் தரம் சரியாக இல்லை. தற்போது நீர் […]
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த பெண்ணுக்கு தொழிலதிபர் ஒருவன் தொடர்பு இருந்துள்ளது. அதனை கணவர் கண்டுபிடித்துள்ளார். இந்த பிரச்சனைக்காக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.. இந்த தகராறில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மனைவி கணவனுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். கணவன் தனது மகளுடன் சென்று மனைவி தேடி வந்தார். அப்போது ஆக்ராவில் உள்ள ஷிக்கந்த்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்த கொடுமை பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள மதோடன்டா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு சென்று வரும்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவரை கிண்டல் செய்வதும் பாலியல் ரீதியாகவும், தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 2-ம் தேதி பள்ளியை விட்டு வரும் போது […]
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளம் உள்ளது. இந்த மத வழிபாட்டுத்தளத்தில் மதரீதியான பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இங்கு இஸ்லாமிய மத மாணவ, மாணவிகள் மதப்பாடம் பயின்று வருகின்றனர். இந்த மத பாடங்களை இஸ்லாமிய மதபோதகர் ஒருவர் கற்பித்து வருகிறார். இந்நிலையில் மதப்பாடம் படிக்க வந்த 10 வயது சிறுமியை மத வழிபாடு தலத்தில் வைத்தே பாடம் எடுக்கும் அந்த மத போதகர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து தனக்கு நடந்த கொடுமை குறித்த […]
உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான் பூர் மாவட்டம் திலகர் தாலுகாவை சேர்ந்த ஓம்பிரகாஷ் (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் இறந்து விட்டதாக ஒரு வருடத்திற்கு முன் அரசு ஆவணங்களில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதனை அறியாமல் அவர் முதியோர் உதவித்தொகை பெற வங்கிக்கு சென்றபோது அவர் இறந்து விட்டதாக அவரிடமே வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதை கேட்டு அதிர்ச்சடைந்த அவர் தான் உயிருடன் இருப்பதை அதிகாரிகளிடம் நிரூபிக்க போராடி வருகின்றார். இந்த நிலையில் தனது கரும்பு சர்க்கரை ஆலை […]
தனது கணவன் ஐந்தாவது திருமணம் செய்யவிருந்ததை இரண்டாவது மனைவி தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூரில் வசிக்கும் சபி அகமது என்பவருக்கு ஏற்கனவே நான்கு மனைவிகள் உள்ளன. இதில் ஐந்தாவது ரகசியமாக திருமணம் செய்து கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். இதனால் தனது மனைவிகள் அனைவரையும் ஹஜ் யாத்திரைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதில் இரண்டாவது மனைவி மட்டும் குழந்தைகளுடன் வீட்டிலிருந்துள்ளார். அகமது கடந்த செவ்வாய் அன்று ஐந்தாவது திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், திருமண […]
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் யஷ்பால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகன் யஷ்சோன்கியா. இவர் பிறந்த அடுத்த நாளே கண்ணில் குளுக்கோமா நோய் தாக்கம் இருந்ததை கண்டறியப்பட்டது. அதன் பிறகு யஷ் தனது 8 வது வயதில் பார்வை திறனை முற்றிலும் இழந்தார். அதனைத் தொடர்ந்து 5 ஆம் வகுப்பு வரை சிறப்பு பள்ளியில் பயின்று, அதற்குப் பிறகு வழக்கமான பள்ளியில் அனைத்து மாணவர்களுடன் சேர்ந்து பயின்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு என்னுடைய கல்வி […]
ஆட்டோவின் மேற்கூறையில் சிறுவர்கள் அமர்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பெரெய்லி என்ற பகுதியில் ஒரு ஆட்டோவின் மேற்கூறையில் சில சிறுவர்கள் அமர்ந்தவாறு பள்ளிக்கு செல்கின்றனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் பள்ளிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய வாகன ஓட்டிகளே குழந்தைகளை அபாயகரமான முறையில் அழைத்துச் செல்வது […]
உத்திரபிரதேசத்தின் நொய்டாவில் சூப்பர் டெக் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் சூப்பர் டெக் எமரால்ஸ் கோர்ட் என்ற குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த வளாகத்தில் அபெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள 334 அடி உயரமுள்ள 32 மாடிகள் உடைய கட்டிடமும், சியேன் என பெயரிடப்பட்டிருக்கின்ற 318 அடி உயரமுள்ள 29 மாடிகள் உடைய கட்டிடமும் முறையான அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் இந்த கட்டிடங்களில் 21 கடைகளும் 915 குடியிருப்புகளும் கட்டப்பட்டு இருந்தது. […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பஸ்தி மாவட்டத்தில் ருதவுலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குடும்பத்துடன் அங்கித் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவில் வெளியே செல்கிறேன் என்று கூறிவிட்டு திரும்பி வரவில்லை. இந்நிலையில் அந்த பகுதியில் கரும்பு தோட்டம் அருகில் உள்ள 18 வயது வாலிபர் உடல் ஒன்று கிடைத்தது. இதனை பார்த்த தோட்ட உரிமையாளர் பராஸ் நாத் சவுத்ரி உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணா மிஸ்ரா தலைமையில் போலீசார் சம்பவம் […]