ஆபத்தை உணராமல் பிஞ்சிவாக்கம் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்ததனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கேசாவரம் அணையில் இருந்து கூவம் ஆற்றிற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கின்றது. இதனால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிச்சைவாக்கத்தில் இருக்கும் தடுப்பணை நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது. தடுப்பணை முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சி அளிக்கின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை […]
Tag: உபரிநீர் திறப்பு
தொடர் கனமழை காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் பரம்பிக்குளம் அணையில் சென்ற சில மாதங்களாக பருவ மழை பெய்து வரும் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்தது. மேலும் சென்ற ஜூலை மாதம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இந்த நிலையில் சென்ற ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்து வருவதால் வினாடிக்கு 5500 கன அடி நீர்வரத்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை வெளுத்து வாங்கியது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதன் பிறகு சற்று மழை குறைந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 29ஆம் தேதி வரை மழை நீடிக்கும் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மிகவும் குறைக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த 9ஆம் தேதி 119 அடியை எட்டியது. இந்நிலையில் […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் […]
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து இரண்டு மதகுகள் வழியாக உபரிநீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 13 மதகுகளில் 3 மற்றும் 4வது மதகுகள் 35 சென்டிமீட்டர் உயர்த்தப்பட்டு அணையில் இருந்து வினாடிக்கு 534 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் இந்த தண்ணீர் வல்லக்கடவு வழியாக இடுக்கி அணைக்கு சென்றடையும்.முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. […]