கனடா அரசு, தங்கள் நாட்டில் வசிக்கும் இரண்டு இந்தியர்களுக்கு உயரிய கவுரவ விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. கனடாவில் வசிக்கும் இந்தியர்களான பர்மிந்தர் ரெய்னா, அஜய் அகர்வால் ஆகிய இருவருக்கு Order of Canada என்ற உயரிய கௌரவ விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதை 1967 ஆம் வருடத்தில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உருவாக்கினார். இந்த உயரிய கௌரவ விருதானது, சமுதாயத்திற்கான சேவைகள் மற்றும் கற்பனைகளை உண்மையாக்கும் கண்டுபிடிப்புகள், சமூகத்தை ஒன்றிணைக்கும் இரக்கம் உடையவர்களை பெருமைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. […]
Tag: உயரிய விருது
பாகிஸ்தானில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரை காப்பாற்ற முயற்சித்த நபருக்கு நாட்டின் உயரிய விருது வழங்கப்படும் என்று பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருக்கிறார். பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட் மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பிரியந்தா என்ற இலங்கையைச் சேர்ந்த நபர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரை அங்கிருந்து சக பணியாளர்கள் கடுமையாக தாக்கி, உயிருடன் எரித்துக் கொன்றனர். இந்நிலையில், அந்த சம்பவத்தின் போது, ஒரு நபர் பிரியந்தாவை அவர்களிடமிருந்து காப்பாற்ற முயற்சித்த வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் வெளியானது. […]
அமெரிக்க அரசின் புலிட்ஸர் என்ற ஊடக துறைக்குரிய உயர்ந்த விருதிற்காக இந்த வருடம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஊடகத் துறையில் மிக உயர்ந்த விருதான புலிட்ஸர் விருதை இந்த வருடத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேகா ராஜகோபாலன் பெறுகிறார். இவர் சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் தடுப்பு முகாம் தொடர்பில் புதிய விதமாக செய்திகளை வெளியிட்டதால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு இந்திய வம்சாவளியினரான நீல் […]
அமெரிக்காவின் பத்திரிகையாளர்களுக்கான உயரிய விருது தமிழக வம்சாவளியான லண்டன் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் உலகில் ஊடகத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வருடம்தோறும் 21 பிரிவுகளில் விருது வழங்கி கௌரவபடுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று 105-ஆவது ஆண்டிற்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் சர்வதேச செய்தியாளருக்கான புலிட்சர் விருதை லண்டனில் வசிக்கும் தமிழக வம்சாவளியான மேகா ராஜகோபாலன் என்பவர் பெற்றுள்ளார். அவர் சர்வதேச நிருபராக புஸ்ஸ்ஃபீட் நியூஸ் ( BuzzFeed News ) எனும் நிறுவனத்தில் […]
இந்திய பெண்கள் பிரிட்டனில் கொடுக்கும் உயரிய விருதை பெற தேர்வாகி பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகின்றனர் பிரிட்டனில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்பாட்டிற்கான விருது பெறும் 50 பெண் இன்ஜினியர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் ஜீரோ கார்பன் திட்டத்தில் தங்களது பங்களிப்பை வழங்கிய 50 பேர் தேர்வு செய்ய பட்டுள்ளனர். வெளியான பட்டியலில் பிரிட்டனில் அணுசக்தி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அறிவியல் குல்ஹாம் அறிவியல் மையத்தின் இன்ஜினியரான சித்ரா சீனிவாசன், […]