ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றிய பின் பெண்களுக்கான சுதந்திரத்தை பறித்து வருவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். இது குறித்து ஆப்கானிஸ்தானில் உயர் கல்வித்துறை மந்திரி நேடா முகமது நதீம் விளக்கம் அளித்துள்ளார். உயர்கல்வியில் பயிலும் பெண்களுக்கான நடைமுறைகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. மேலும் ஹிஜாப் விதிகளை முறையாக பின்பற்றாத பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது திருமணத்திற்கு செல்வது போல் உடை […]
Tag: உயர்கல்வி
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் உயர் கல்வி தொடராமல் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து உயர்கல்வி தொடர உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது 777 மாணவர்கள் உயர்கல்வி தொடராமல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மாணவர்கள் விரும்பிய பாடம் கிடைக்காதது மற்றும் குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் […]
அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செப்டம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2,3,4 வருடம் பயிலும் சுமார் 1.10 லட்சம் மாணவிகள் பயனடைந்து இருக்கின்றார்கள். இந்த சூழலில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை பெற இந்த திட்டத்திற்கு நவம்பர் ஒன்றாம் […]
உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளி கல்வித்துறை கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, வறுமை, குடும்ப சூழ்நிலை, நிதி பற்றாக்குறையால் தமிழ்நாட்டில் 6,718 மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக வரும் இருபதாம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2021- 2022 ஆண்டில் அரசு மேல்நிலைப் […]
அனைத்து உயா்கல்வி பாடப்பிரிவுகளுக்கும் ஒரே நுழைவுத் தோ்வு நடத்துவதற்கு மத்திய அரசானது திட்டமிட்டு வருவதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சா் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்தாா். 2 நாள் அரசு பயணமாக மத்திய இணையமைச்சா் ராஜ்குமார் ரஞ்சன் சிங் காஞ்சிபுரத்துக்கு கடந்த சனிக்கிழமையன்று வந்தாா். இதனையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவருக்கு இந்துசமய அறநிலையத் துறை சாா்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் காமாட்சி அம்மனை வழிபட்ட அவா், காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் தனியாா் […]
உயர்கல்வி தொடராத +2 முடித்த மாணவர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை, ஒவ்வொரு மாணவரையும் தொடர்புகொண்டு வழிகாட்டுதல்கள் வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஒரேங்கிணைந்த மாநில திட்ட இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு 2022-23ல் உயர்கல்வி தொடர்ந்துள்ளனரா என்பதனை அறிந்திடவும், அவ்வாறு உயர்கல்வி தொடரா மாணவர்கள் இருப்பின் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை […]
மதிய கல்வித்துறை சமீபத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டு இருக்கிறது. அதில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகள் கலந்து கொண்ட உயர்கல்வி மேம்பாடு என்னும் கருத்தரங்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி இந்தியாவிலேயே உயர் தரத்திலும் சதவீதத்திலும் தமிழ்நாடு முதலாவதாக இருக்கிறது. உயர் கல்விக்காக முதல்வர் அதிக நிதியினை ஒதுக்கி இருக்கிறார். கல்வி தரத்தை மேலும் உயர்த்த முதல்வர் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். அதன்படி அரசு பள்ளிகளில் […]
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவி தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர்கல்வித்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்ட மாற்றப்பட்டதாக அறிவித்தார். அதன்படி உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கும் […]
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 உதவித்தொகை பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவி தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர்கல்வித்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்ட மாற்றப்பட்டதாக அறிவித்தார். அதன்படி உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று […]
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட பல புகழ்பெற்ற அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர சிபிஎஸ்சி மாணவிகளை ஊக்கப்படுத்துகிறது Udaan திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் அந்த கல்லூரிகளில் சேர நடக்கும் நுழைவுத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 1000 மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். அவர்களில் 50 சதவீதம் பெயர் எஸ்சி எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருப்பார்கள். 11ஆம் வகுப்பு படிப்பவர்கள் ஆக இருந்தால் பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அவ்வபோது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் […]
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உடன் இணைந்து படிப்புகளை வழங்கிட முன்வருமாறு 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமாககூட்டு, இரட்டை படிப்புகளை இந்திய – அந்நிய உயர்கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் வழங்கலாம் என்று என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அதற்கான வழிகாட்டுதல்களையும் அண்மையில் வெளியிட்டது. அதன்படி கல்வி வரும் கல்வியாண்டில் (2022-2023) இந்தியாவில் உள்ள IITs, IIMs, பல்கலைக்கழகங்கள், […]
90 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் உயர்கல்வி படிக்க தங்கள் நாட்டிற்கு வருவதாக வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா நாட்டில் உயர்கல்விக்காக சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று அந்நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் ஆணையர் டாக்டர் மோனிகா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் உள்ள உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து சென்னையிலுள்ள நுங்கம்பாக்கத்தில் வைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது “எங்கள் நாட்டில் 90 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் புத்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உயர் கல்வி நிறுவனங்களுடன் இங்கிலாந்து பல்கலை கழகங்கள் இணைந்து சிறப்பு பயிற்சி வழங்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும். இதன் மூலம் தமிழக இளைஞர்கள் உயர் கல்வி திறன் மேம்பாடு கலை பண்பாடு ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுனர் ரவி உரையை தொடங்கினார்.ஆளுனர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பேசிய ஆளுநர், உயர் […]
உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விரைவில் தமிழ் வழியில் புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கிராமப்புற மாணவர்கள் ஆங்கில வழியில் மருத்துவம், பொறியியல் படிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தங்களுடைய தாய் மொழியில் உயர் கல்வியை உறுதி செய்யும் லட்சியத்தை பாடநூல் கழகம் விரைவில் நிறைவேற்றபடும் என்றும் தெரிவித்துள்ளார்.
2019-20 உயர்கல்வி ஆண்டறிக்கையில் ஆசிரியர்கள் நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு குறைவாக உள்ளதாக திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உயர்கல்வித்துறை நிலவரம் குறித்த அறிக்கையை இந்திய ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றது. அதன்படி 2019- 2020 கான ஆண்டறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்களை பார்க்கும்பொழுது உயர் கல்வித்துறை ஆசிரியர் நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு மிக குறைவாக உள்ளது. […]
இந்தியாவில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையில் சிக்கிம் 75.8% ஆக உயர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இரண்டாவது இடம் (51.4%) , உத்திரகாண்ட் 3வது இடம்(41.5%), கேரளா 5வது இடம் (38.8%) பிடித்துள்ளன. 2030ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கூறப்பட்டிருந்த நிலையில், சிக்கிம், தமிழ்நாடு அசத்தியுள்ளது. பாஜக ஆளும் பல மாநிலங்கள் பின்தங்கியுள்ளன. தமிழ்நாட்டில் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51.4% ஆக உயர்ந்துள்ளதாக AISHE தகவல் தெரிவித்துள்ளது. […]
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் போராட்டத்தில் பங்கேற்ற பலரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நூற்றுக்கணக்கான நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பதிவான […]