பிகாம், பிபிஏ மற்றும் பி சி ஏ படிப்புகளில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடம் கட்டாயம் என்று உயர்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பி காம்,பிபிஏ மற்றும் பி சி ஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடத் தேர்வு இடம்பெறவில்லை என்றும் […]
Tag: உயர்கல்வித்துறை
தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Edமாணவர் சேர்க்கையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. B.Ed சேர விரும்பும் எஸ்சி எஸ்டி மாணவர்கள் 40%, எம் பி சி பிரிவினர் 43 சதவீதம், பிசி பிரிவினர் 45 சதவீதம்,மற்ற பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண்களை இளங்கலை படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும் என்றும் இணையான படிப்புகள் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் UG, PG முடித்திருந்தாலும் தொடர்புடைய படிப்புகளில் B.Ed சேரலாம் […]
மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை www.tndce.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். பெயரிலோ, முன்னெழுத்திலோ மாற்றம் இருப்பின் ஆதாருடன் வங்கி கணக்கின் நகலையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். CSSS திட்டத்தின் […]
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்ட்டரில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வித்துறை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்ட்டரில் தமிழ் பாடம் கட்டாயம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்திலும் தமிழ் பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும். சில கல்லூரிகள், பல்கலைகழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று தகவல் வெளியானது. இதனை […]
மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு. நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மாதம் ரூ1,000 உதவித்தொகை பெற 3,58,304 மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6ம் வகுப்பு முதல் […]
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நடந்த முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர வருகின்ற ஜூன் 22ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். விருப்பமுள்ள மாணவர்கள் www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் வருகிற 27-ஆம் தேதிக்கு பதில் 22ஆம் தேதி ஆன்-லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.பொறியியல் கல்லூரிகளில் […]
சென்னையில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லக்கூடிய மாணவர்களில் பலர் பேருந்து பயணம் செய்து வருகிறனர். இவர்களில் சில பேர் பேருந்துகளில் தகராறு செய்வது, கூரை மேல் ஏறி பயணம் மேற்கொள்வது, பஸ் டே எனும் பெயரில் அட்டூழியம் செய்வது, ஆயுதங்களுடன் மோதல்களில் ஈடுபடுவது ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு செய்வது பிற பயணிகளுக்குத் தொல்லை தருவதுடன், மாணவர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் தமிழக கல்லூரிகளுக்கு […]
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகையான பல்கலைக்கழகங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தை இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பித்து மாற்றி அமைக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். தேசிய மற்றும் உலகளாவிய தரவரிசையில் தமிழக பல்கலைக்கழகங்களை இடம்பெற செய்யும் வகையிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்த கூடிய வகையிலும் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்டத்தை மாற்றிய பிறகு தமிழ், இலக்கியம், […]
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் ஜனவரி 20ஆம் தேதி வரை அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செமஸ்டர் […]
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து உயர்கல்வித்துறை தனியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக உயர்கல்வித் துறை சார்பில் தனியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில் சட்டவிதிகளை மீறி 10.5 சதவீத இட உள் ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆணையங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு சட்டத்துறை […]
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் வன்னியர்களுக்கு 10.5% ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 10.5% இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால் அதை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கொண்டு நிரப்பலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒரு பிரிவில் ஏற்படும் காலி இடங்களை மற்றொரு பிரிவினரை கொண்டு சுழற்சிமுறையில் நிரப்பிக் கொள்ளலாம் என அனுமதி வழங்கி உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற வேண்டும் என்று உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், இறுதித் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பின்பு மாணவர்களின் கற்றல் நலன் கருதி தேர்வுகள் நடக்கும் கட்டாயம் ஏற்பட்டது. அதனால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டது. […]
கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. அரசு பள்ளியை நோக்கி நிறைய மாணவர்கள் செல்கிறார்கள்.. தமிழகம் முழுவதும் 143 அரசு கலைக்கல்லூரி செயல்படுகிறது. இந்நிலையில் 2021 – 22 கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.. அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரைத்த நிலையில் இந்த மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் வந்தது. இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படாததால் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். எனவே ஆகஸ்ட் […]
அண்ணாப் பல்கலைக்கழகம் நடத்திய ஆன்லைன் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக பல மாணவர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் பல்கலைக்கழகம் மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நடந்தவற்றை விசாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அதில், மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தேர்வு கட்டணத்தை 23 தனியார் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செலுத்தவில்லை. […]
புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அம்மாநில உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. அதன்பிறகு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் […]
அரசு அனுமதித்த இறுதியாண்டு முதுகலை மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களை கல்லூரிக்கு அழைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் முதுகலை மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்க படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அரசு அனுமதித்த இறுதியாண்டு முதுகலை மாணவர்களைத் தவிர பிற ஆண்டுகளில் […]
தமிழக அரசு அரியர் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வரும் இந்த வழக்கில், இன்றைக்கு தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. தமிழக உயர்கல்வித்துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அனைத்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை ஆலோசித்து தான் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உயர்கல்வித் துறை சார்பாக சென்னை உயர் […]
அரியர் தேர்வில் ஆல் பாஸ் இன்னும் அறிவிப்பில் எந்த விதி மீறலும் இல்லை தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் அரியர் தேர்வில் அனைவரும் ஆல் பாஸ் என்பதை ஒத்துக் கொள்ள முடியாது என்று யுஜிசி பதில் மனு தாக்கல் செய்திருந்த சூழ்நிலையில் நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமீறல்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து […]
இறுதி பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அவர்களின் ஊருக்கு அருகாமையில் உள்ள கல்லூரிகளில் எழுத உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலால் கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கல்லூரிகளில் பயின்று வரும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு செப்.15-ம் தேதி முதல் நடத்தப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. […]
கல்லூரி மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு இறுதி பருவத்தேர்வு என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வு செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதனை பின்பற்றி […]
இன்றைய காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பலரும் பகுதிநேர வேலை வாய்ப்புக்கு சென்றுக்கொண்டு படித்து வருகிறார்கள். அதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களை நாம் சொல்ல முடியும். மாணவர்கள் இப்படியான முறையில் கல்வி கற்பதற்கு சாத்தியமாக இருந்தது கல்லூரி வகுப்புகள் இரண்டு ஷிப்டாக நடத்தப்பட்டது தான். இந்த முறையில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார்கள்… வேலை பார்த்துக்கொண்டு படிக்க எதுவாக இரண்டு ஷிப்ட் வகுப்பு முறை இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது […]
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக இணையதளம் வாயிலாக அரசு கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதனால் மாணவர்களுக்கு மிகப் பெரும் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவர் ஒரே விண்ணப்பம் வாயிலாக பல கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதன் தொடக்கம் இன்று மாலை தொடங்கியது. இணையதளம் வாயிலாக பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. www.tngasa.in, www.tndceonline.org இல் […]
தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து வெளிப்பட்டிருக்கிறது. இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது கலை அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.முதல் முறையாக கலை அறிவியல் படிப்பிற்கான விண்ணப்ப முறையை ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு […]
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி என்றெல்லாம் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தி வந்த நிலையில் தற்போது உயர்கல்வித் துறையும் ஆன்லைன் சார்ந்த விஷயங்களை நோக்கி நகர்ந்துள்ளது. தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களில் மாணவர் […]
கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடித்தவுடன் ஒரே நேரத்தில் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். கலை, அறிவியல் கல்லூரிகளில் 735 வகுப்பறைகளை கட்டுவதற்கு ரூ. 150 கோடியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளார். கல்லூரிகளில் வகுப்பறைகள் கட்டும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டவுடன் காலை, மாலை என நடக்கும் வகுப்புகள் ஒரே நேரத்தில் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 114 அரசுக் கல்லூரிகள் செயல்பட்டு […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை வந்த பிறகே கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளுக்கு நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் கல்லூரிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழும்பி வந்த நிலையில் கல்லூரிகள் திறப்பு குறித்தும், செமஸ்டர் தேர்வு குறித்தும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் […]
தமிழகத்தில் உள்ள கல்லுரிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம், அச்சுறுத்தல் காரணமாக தற்போது கல்லூரிகள் விடுமுறையில் இருக்கின்றன. இந்த காலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறக்கூடிய ஒரு காலகட்டம். ஆனால் தற்போது கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதாலும், தற்போதைய சூழலில் மே 3ஆம் தேதி வரைக்கும் கல்வி நிறுவனங்களில் இயங்காது என்ற நிலை இருக்குகின்றது.இத்தகைய சூழ்நிலையில் பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவிப்புகளை பல்கலைக்கழகங்கள் வெளியிட்டு வந்தன. இதனால் மாணவர்களுக்கு எப்போது […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தமிழக உயர் கல்வித்துறையில் 44 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்தார். அதில் சில , அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் நிர்வாகத்தின் மின்ஆளுமை நடைமுறைப்படுத்தப்படும். அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் நிர்வாகத்தில் ரூபாய் 1 கோடி செலவில் மின் ஆளுமை நடைமுறைப்படுத்தப்படும். 23 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு தொடர் இணைய வசதி ஏற்படுத்த 4.60 கோடி நிதி ஒதுக்கீடு. கல்லூரி வளாகங்களில் ரூபாய் 2.50 […]