நாளை தொடங்க இருந்த பிஇ பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தால் பொறியியல் படிப்புக்கான பொது பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவு வெளியானதும் 2 நாட்களில் பிஇ பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கும் என விழுப்புரத்தில் பொன்முடி பேட்டி அளித்துள்ளார்.
Tag: உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டம் படிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நாங்கள் புறக்கணிக்கிறோம். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் அரசியலைப் புகுத்துவதற்கு கவர்னர் முயற்சி செய்கிறார். பட்டமளிப்பு விழா தொடர்பாக அரசிடம் எதுவும் ஆலோசனை செய்யப்படவில்லை. மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அரசை ஆலோசனை செய்யாமல் காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா அறிவிப்பு […]
தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் கீழ், ஏராளமான பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு அந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயன்படும் வகையில், புதிதாக பல பாட திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில், தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழியை, மாணவர்களுக்கு ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படுவதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஜப்பான் தூதரக அதிகாரிகள், இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை, சந்தித்து பேசினர். இந்நிலையில் அவர்களுடனான சந்திப்புக்கு […]
பொறியியல் படிப்புக்கு ஜூன் 20-ம் தேதியில் இருந்து ஜூலை 19-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்’ என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பொறியியல் சேர்க்கை குறித்து மாணவப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து சென்னை, தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் ஜூன் 20ம் தேதியில் இருந்து ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 20ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகின்றது. அப்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விருதுநகர், திருச்சுழி, தர்மபுரி ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்க்காடு, தாளவாடி, மானூர் ஆகிய இடங்களில் புதிதாக 10 அரசு, கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் பிளஸ் டூ […]
மே2-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து மே 7-ஆம் தேதி மு.க ஸ்டாலின் முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு .க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட 133 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக எம்எல்ஏக்கள் […]
பொறியியல் மாணவர்களை ஆல் பாஸ் செய்ய கூடாது என்று வெளியான தகவல் பொய்யானது என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ,பொறியியல் படிப்புகளில் அரியர் போட்டிருந்த மாணவர்களை ஆல் பாஸ் செய்வதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்துள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் கூறியதாக தகவல் ஒன்று வெளியாகியது. மேலும் அரியர் மாணவர்களை ஆல் பாஸ் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஏஐசிடிஇ மின்னஞ்சல் செய்தி அனுப்பி இருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்தது. இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் இது குறித்து கொடுத்த […]
செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் நடத்த உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அந்த வகையில் அது குறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருக்கும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆன்லைன் தேர்வு என்பது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மற்ற மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். எந்த தேர்வு வைக்கலாம்? ஆன்லைனா? அல்லது ஆப்லைனா? என்பது குறித்து […]
இறுதி செமஸ்டர் தேர்வுகள் எப்பொழுது, எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் பல்வேறு துறைகள் முடக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்றும் சமீபத்தில் அரசு உத்தரவு தெரிவித்திருந்தது. ஆனால் இறுதிப பருவத்தில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு எந்த விலக்கும் கிடையாது என்றும் அவர்களுக்கு தேர்வு என்பது கட்டாயம் என […]
கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடித்தவுடன் ஒரே நேரத்தில் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். கலை, அறிவியல் கல்லூரிகளில் 735 வகுப்பறைகளை கட்டுவதற்கு ரூ. 150 கோடியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளார். கல்லூரிகளில் வகுப்பறைகள் கட்டும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டவுடன் காலை, மாலை என நடக்கும் வகுப்புகள் ஒரே நேரத்தில் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 114 அரசுக் கல்லூரிகள் செயல்பட்டு […]