Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW: இனி இதை படித்தாலும் சட்டப்படிப்பு – உயர்நீதிமன்றம் சூப்பர் உத்தரவு!!

பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்பு படிக்க தகுதியானவர்கள் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மூன்றாண்டு சட்டப் படிப்பை படிப்பதற்கு பத்தாம் வகுப்புக்கு பிறகு   பிளஸ் டூ முடிக்க வேண்டும். அதற்கு பிறகு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்று விதிகள் பார்கவுன்சில் அறிவித்து இருந்தது. ஆனால் பத்தாம் வகுப்புக்கு பிறகு டிப்ளமோ முடித்தவர்களும், பொறியியல் முடித்த பிறகு, பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை நிலவுவதாக […]

Categories
மாநில செய்திகள்

சரக்கு எவ்வளவு விலைக்கு வாங்குறீங்க…? ஜன.,6 ஆம் தேதிக்குள்…. நீதிமன்றம் உத்தரவு…!!!

கோவை வழக்கறிஞரான லோகநாதன் என்பவர் டாஸ்மாக் குறித்த விவரங்களை கேட்டபோது, அது மூன்றாம் நபர் வர்த்தகம் தொடர்புடையது என்று கூறி விவரங்களை வழங்க டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் வழக்கறிஞர் லோகநாதன் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமனறம், டாஸ்மாக்குகளுக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து? எவ்வளவு விலைக்கு? மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை ஜனவரி 6ம் தேதி சீல் வைத்த […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி உயர்வு செல்லும்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

சொத்து வரி உயர்வு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் நிராகரிக்கபட்டுள்ளது. மாநகராட்சிகளின் தீர்மானங்கள் செல்லும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சொத்து வரி உயர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்துவரி உயர்வை அமல்படுத்தவும் உத்தரவு பிரபிக்கபட்டுள்ளது. மேலும் சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெறுவதற்கு வசதியாக மாநகராட்சி இணையதளங்களை மேம்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்ரீமதி பெற்றோரின் கோரிக்கை நிராகரிப்பு – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிருந்தது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்  வரக்கூடிய சூழலில் மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையினிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது,  உயிரிழந்த மாணவி செல்போனை  பயன்படுத்தவில்லை எனவும்,  பள்ளி வார்டனின் செல்போன் மூலம் தான் பெற்றோரிடம் பேசி வந்ததாகவும், எனவே மாணவி எந்த செல்போனையும் பயன்படுத்தவில்லை என மாணவியுடைய தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிபதி மாணவி ஒருவேலை  செல்போனை ஏதும் […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்…. தடையில்லை…. மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்..!!

மின் இணைப்புடன் ஆதார இணைக்க வற்புறுத்தக் கூடாது என வழக்கறிஞர் ரவி என்பவர் தொடர்ந்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.. தமிழகத்தில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தை பெற மின் நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்எல் ரவி (வழக்கறிஞர்) என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம்….. இனி இப்படித்தான்…. வெளியான புதிய உத்தரவு….!!!!!

தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்கள் கட்டணம் இல்லாமல் ச் சிகிச்சை பெறவேண்டும் என்ற நோக்கத்தை மையமாக கொண்டு முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் கட்டணமின்றி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலமாக ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது இந்த திட்டமானது மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற […]

Categories
மாநில செய்திகள்

“குப்பை லாரிகளுக்கு நேரம் நிர்ணயிக்க வேண்டும்”… வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்…!!!!!

சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் குப்பை லாரிகளுக்கு நேரம் நிர்ணயிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். “அதில் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதாவது பள்ளி,  அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்கக் கூடாது குப்பை லாரிகள் காலை நேரங்களில் இயக்கப்படுவதனால் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ…. உயர்நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!

கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ வரும் நிறுவனங்களின் பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி தர வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்துள்ளது. கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூக்கு வரும் நிறுவனங்கள் மாணவர்களை தேர்வு செய்து விட்டு சென்று விடுகின்றது. ஆனால் மீண்டும் மாணவர்களை அழைப்பதே கிடையாது. பிறகு இது குறித்து விசாரித்தால் அப்படி ஒரு நிறுவனமே இல்லை என புகார்கள் எழுகின்றன. இது போன்ற போலி நிறுவனங்களை தடுப்பதற்கு அந் நிறுவனங்களின் மூன்று ஆண்டு பின்புலத்தை ஆராய்ந்த பிறகே […]

Categories
மாநில செய்திகள்

TNPSC மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை – தமிழக அரசு விளக்கம்.!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்புமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய பணி நியமனங்களில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம சித்தார்த்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இனி இது இருந்தால் வாகனம் பறிமுதல்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான வாகனங்களில் நம்பர் பிளேட் என்பது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தான் உள்ளது. நம்பர் பிளேட்டில் தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது தெய்வப் படங்கள் என பல புகைப்படங்கள் பதிவு எண்ணை விட பெரிதாக பதிவிடப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக உள்ளதாக கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தமிழகத்தில் வாகன ஓட்டுனர்கள் தங்களின் நம்பர் பிளேட்டில் விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படங்களை மிகவும் பெரிதாகவும் பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஒரு வழக்கு ரத்து – ஒரு வழக்கு ரத்து இல்லை…!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை  ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாகவும்,  வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எஸ்.பி வேலுமணி தரப்பில் இரண்டு மனுக்கள் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி ….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மாணவி மரணம்  தொடர்பாக, அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டது. அதன் பின்னர் அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை அந்த பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற விசாரணை தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு நடைபெற்று வந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணை வந்த போது, இந்த பள்ளிக்கூடத்தின் கட்டடம் வழக்கு விசாரணைக்கு தேவைப்படுகிறதா ?  என்ற அறிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கியது ஐகோர்ட்..!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 504 மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 5ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் அனுமதி வழங்கியுள்ளார். பொதுத்தேர்வு எதிர்நோக்கி  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பைக் ஓட்டிகளே உஷார்…! இதை செய்தால் அவ்வளவு தான்…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் சமீப காலமாகவே பலரும் இருசக்கர வாகனங்களில் வேகமாக சென்று சாகசங்கள் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது அதிகரித்து வருகிறது என்று  உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். இந்த மனுவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த ஐந்து வருடங்களில் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டியது, வாகனங்களின் வடிவத்தையும், சைலன்சர்களை மாற்றியும் ஒட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலீஸ் மீது பொய் குற்றசாட்டு கூறினால் – கடும் நடவடிக்கை எடுங்க… ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

போலீஸாருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து உயர்நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. சட்டத்தின்படியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றசாட்டை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. போலீசாருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் உண்மை தன்மை குறித்து விசாரிக்க வேண்டும் என்பதது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

போலீஸ் மீது பொய் குற்றசாட்டு – நடவடிக்கை எடுக்க உத்தரவு …!!

காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய்குற்றசாட்டை தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறையினர் தங்கள் கடமையை சுதந்திரமாகவும், நியாயமாகவும் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க உத்தரவு – ஐகோர்ட் அதிரடி.!!

பறக்கும் படைகளை அமைக்க தமிழக மருத்துவத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர்கள் வருகையை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவிலியர்கள் வருகை, நோயாளிகளுக்கான சிகிச்சையையும் பறக்கும் படைகள் கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சோதனை நடத்த மண்டல, மாவட்ட அளவில் பறக்கும் படைகளை அமைக்க வேண்டும். பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை மருத்துவத்துறை கண்காணிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் மருந்துகள் காலாவதி […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை….. தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ்..!!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இதனை ரத்து செய்ய கோரி மும்பையை சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் இன்றைய தினம் பொறுப்பு தலைமை நீதிபதி  ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கல்லூரி வாசலில் போலீஸ் பாதுகாப்பு ? பொறுக்கிகளுக்கு ஆப்பு: நீதிமன்றம் செம யோசனை …!!

மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாமே என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யோசனை தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.  என்பதும் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழகம் முழுவதும் மகளிர் கல்லூரிகள்,  பள்ளிகள் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இவ்வாறு ஒரு யோசனையை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மாணவிகளின் பாதுகாப்பு க்கு […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமீறல் அபராதம் உயர்வு….. அரசாணையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு.!!

போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி, மதுரையை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

“எலான் மஸ்க்கை எதிா்தரப்பாக இணைக்கக் கோரிய விண்ணப்பம்”…. தில்லி உயர்நிதிமன்றம் நிராகரிப்பு…..!!!!!

டிம்பிள் கௌல் என்ற டுவிட்டா் பயனாளா் தன் பக்கத்தில் வரலாறு, இலக்கியம், அரசியல், தொல்லியல் உள்ளிட்ட கல்விசாா்ந்த தகவல்களைப் பதிவிட்டு வந்தாா். இதையடுத்து டுவிட்டரின் விதிகளை மீறியதாகக் கூறி டிம்பிள் கௌலின் கணக்கு முடக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிம்பிள் கௌல் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். இவ்விவகாரத்தில் டுவிட்டா் நிறுவனம் தன்னிச்சையாக செயல்பட்டு இருப்பதாக தன் மனுவில் அவா் குற்றம்சாட்டினாா். கணக்கை முடக்குவதற்கு முன் தன் தரப்பு வாதத்தைக் கேட்க டுவிட்டா் நிறுவனம் கால அவகாசம் […]

Categories
மாநில செய்திகள்

ஏழை மக்களை அரசு மருந்துகள் சென்றடைவதில்லை – ஐகோர்ட் நீதிபதி கருத்து …!!

அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை விநியோகிப்பது என்பது ஒரு தீவிரமான பிரச்சனை. காலாவதியான மருந்துகளை வினியோகிப்பதில் மருந்து நிறுவனங்களும்,  விநியோகஸ்தர்களும் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற விதத்திலும் நீதிபதி கூறி இருக்கிறார். விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை என்று கூறி இருக்கக்கூடிய நீதிபதி,  ஏழைகளுக்கு இந்த விலை உயர்ந்த மருந்துகளை வழங்காமல் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்படுவதாகவும் கூறி அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் – நீதிபதி அதிரடி உத்தரவு

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவறவிட்டிருக்கிறார். பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,  92 மதிப்பெண்கள் பெற்றவர் விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண்ணை வழங்க கோரி மத்திய அரசுக்கும்,  தேசிய தேர்வு முகமைக்கும் மனு அளித்து இருந்தார். அவர் மனு பரிசீலிக்கபடாத நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2010ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு சிவசங்கர் பாபா மீது வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, “சட்டவிரோத செயல்கள் வெளிவரும் போது, அந்த நபரால் பாதிக்கப்பட்ட பலர் புகார் அளிப்பது இயல்பு. இந்த வழக்கிலும் தாமதாமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறி வழக்கை ரத்து செய்தார்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: YOTUBE மீது நடவடிக்கை; டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அந்த உத்தரவில் மக்கள் பிரதிநிதிகளை இழிவு செய்யும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சமூக ஒழுக்கத்தை பராமரிக்க நீதித்துறை செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் பற்றிய இழிவான கருத்து கூறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போன்ற கருத்துக்களை வெளியிடும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஆ.ராசாவுக்கு எதிரான மனு தள்ளுபடி – ஐகோர்ட் அதிரடி

ஹிந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ, ராசா மீது வழக்கு பதிவு செய்ய கோரி ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு பதிய எந்த முகாந்திரமும் இல்லை என்றும், எந்த குற்றமும் நிரூபணமாகவில்லை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். காவல்துறையின் உடைய விளக்கத்தை ஏற்று மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு – அரசுக்கு ஐகோர்ட் யோசனை …!!

மருத்துவ படிப்பில்  7.5சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் தற்போது அரசுக்கு ஹை கோர்ட் யோசனை கொடுத்திருக்கிறது. தனியார் தொழிற்சாலையில் இரவு நேர காவலாளியாக பணிபுரிபவரின் மகள்தான் வர்ஷா. இவர் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ படிப்பு ஆசையில் இருந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக துணை மருத்துவ படிப்பில் சேர்ந்திருந்தார். க்ரிட்டிக்கல் ஹேர் டெக்னாலஜி என்ற படிப்பை படித்துக் கொண்டு இருமுறை நீட் […]

Categories
மாநில செய்திகள்

உத்தரவு போட்ட ஐகோர்ட்; நேரில் ஆஜர் ஆன பள்ளிக் கல்வி ஆணையர் ..!!

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப்பலன் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளி கல்வித்துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரருக்கு ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாக நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவு மட்டும் போதாது,  ஓய்வூதிய தொகையை இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பப்ஜி விவகாரத்தில் முடிவு கட்டியே தீருவோம் ; நீதிபதிகள் அதிரடி ..!!

தடை விதிக்கப்பட்ட பிறகும் பப்ஜி, பிரீ பையர் ஆகிய விளையாட்டுகளை விளையாடும் பிரச்சனைக்கு முடிவு கட்டியே தீர்வோம் என்று நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். யூட்யூப், கூகுள் நிறுவனங்கள் இது தொடர்பான பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பப்ஜி,  பிரீ பையர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு – நீதிமன்றம் அதிரடி

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளி கல்வித்துறை ஆணையர் நேரில் உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1993 அரசாணையின்படி பண பலன்களை வழங்க உயர்நீதிமன்ற குழு உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுபடி பணப்பலன் வழங்கவில்லை என ஆசிரியர் ஹரிகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையரை நேரில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. பலமுறை அவகாசம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: நவம். 15ஆம் தேதி முதல் 2 மாதங்களுக்கு; டாஸ்மாக்கிற்கு நீதிமன்றம் ஆணை …!!

டாஸ்மாக்கில் காலி பாட்டல்களை வாங்கும் விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. வன பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் இருக்கக்கூடிய மலைவாழ்  ஸ்தலங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டல்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்று, பின்னர் அந்த காலி மதுபாட்டில்களை  திரும்ப ஒப்படைக்கும் போது, அந்த பத்து ரூபாய் தொகையை திரும்ப ஒப்படைக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த திட்டம் தமிழகத்தில் இருக்கக்கூடிய மலைவாழ் ஸ்தலங்களில் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வரக்கூடிய நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கொலை வழக்குகளுக்கு தனி பிரிவு – நீதிமன்றம் பரிந்துரை

தமிழகத்தில் கொலை வழக்குகளை விசாரிக்க தனி பிரிவை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்திருக்கிறது. சட்ட ஒழுங்கு காவல்துறையினரே கொலை வழக்குகளை விசாரிப்பதால், அதிக வேலைப்பளு இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தனி விசாரணை பிரிவை உருவாக்குவது சட்ட ஒழுங்கு காவல்துறையினருக்கு பனிச் சுமையை குறைக்கும் என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்பு – பெரும் பரபரப்பு …!!

வேல்முருகன் என்ற நபர் சென்னை படப்பையை சேர்ந்த இவர் சாதிச் சான்றிதழ் கேட்டு பலமுறை அந்த பகுதியில் இருக்கக்கூடிய அதிகாரிகளை கேட்டுள்ளார். ஆனால் ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.இது தொடர்பாக தலைமைச் செயலகம் சென்றுள்ளார். தலைமைச் செயலகத்திலும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. முதலமைச்சருடைய தனி பிரிவுக்கு மனு அளித்து கேட்டுள்ளார்,  அங்கேயும் அவருக்கான சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து எல்லா இடத்திலும் அவர் சாதி சான்றிதழ் பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால் கிடைக்கவில்லை. கடைசியாக விரக்தி அடைந்து இருக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

கலப்பு திருமண சான்றிதழ் சமர்ப்பிக்க தாமதம்….. அதுக்காக பணி நியமனத்தை மறுக்க கூடாது…. ஐகோர்ட் உத்தரவு.!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோ என்பவரை 4 வாரங்களில் பணி நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலப்பு திருமண சான்றிதழை தாமதமாக சமர்ப்பித்தார் என்பதற்காக பணி நியமனத்தை மறுக்கக்கூடாது என்றும், இளங்கோ என்பவருக்கு 4 வாரங்களில் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பள்ளிக்கல்வித் துறைக்கு  உத்தரவிட்டுள்ளது. அதாவது, கலப்பு திருமணம் புரிந்தவருக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 4 வாரங்களில் மனுதாரருக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

இனி பிள்ளைகளுக்கு சொத்து ரத்து – பெற்றோர்களுக்கு உரிமை உண்டு – ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு ….!!

கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைக்க இருப்பதை ரத்து செய்ய உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அறிவித்திருக்கிறது. சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தனது சொத்துக்களை மூத்த மகன் பெயரில் எழுதி வைத்திருந்தார். அதனால் வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும் மருத்துவ செலவுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால் சொத்துக்கள் எழுதி வைத்ததை  ரத்து செய்ய கோரி அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரித்த கீழமை நீதிமன்றம் அந்த […]

Categories
மாநில செய்திகள்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம்: உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

இராணுவ வீரர்களுக்குரிய ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் முறையாக நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. மதுரை மாவட்டம் மீனாம்பாள் புரம் முன்னாள் இராணுவ வீரர் சின்னதுரை தாக்கல்செய்த மனுவில் “ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கை ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம். இந்த திட்டத்தை 2014 ஏப்ரல்-1 முதல் செயல்படுத்த மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அந்த வகையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 2014-2015 முதல் ஒரே பதவி, ஒரே […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் வைத்த வாதங்கள்….. “நவ.,6ஆம் தேதி ஊர்வலம் நடத்த அனுமதி”….. காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

நவம்பர் 6தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததை அடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் முரளிதர்…!!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் முரளிதரர். அவர் சென்னை மற்றும் தென்னிந்தியாவிலே நன்கு பரிச்சயமான பிரபல வக்கீல் ஆக இருந்து. பின்னர் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். அவரை உச்சநீதிமன்றம் ஒரிசா மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளித்திருந்தது; தற்பொழுது அவர் ஒரிசா நீதிமன்றத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கிறார் அப்படிப்பட்ட நிலையிலே அவரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக பணியிடை மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலே மூத்த நீதிபதிகள் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட நிலமோசடி வழக்கு ரத்து…. ஐகோர்ட் உத்தரவு..!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் ஆகிய 3 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன்வள உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன் குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் குமாருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

‘பொன்னியின் செல்வன்’….. “படத்தை இணையத்தில் வெளியிட தடை”….. ஐகோர்ட் அதிரடி..!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிராதமாக இணையத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவானது பொன்னியின் செல்வன்திரைப்படம். 2 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி நாளை (30ஆம் தேதி) திரையரங்கில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாடல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இத்திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு தாக்கல்…. தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்..!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருக்கக்கூடியவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: காவல்துறை சீராய்வு மனு …!!

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து பல இடங்களில் காவல்துறை உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆர்எஸ்எஸ் தரப்பில் காலையில் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டால் அந்த மனுக்கான நடைமுறை நாளைக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதி இளந்திரையன் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் காவல்துறை ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகம் முழுவதும் தடை…. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழகம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் ஆர்.எஸ் .எஸ் உட்பட அந்த அமைப்பும் ஊர்வலம் நடத்தக்கூடாது என தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக போலீசாரும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ் .எஸ் ஊர்வலம் நடத்த தடை விதித்தனர்.. இந்த […]

Categories
சினிமா மாநில செய்திகள்

மீரா மிதுனை கைது செய்ய முடியல: வேறு வேறு இடத்துக்கு போயிட்டே இருக்காரு; தமிழக காவல்துறை தகவல் …!!

தலைமறைவாக இருப்பதால் நடிகை மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை என  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக  நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். இந்த நிலையில் ஜாமினில் விடுதலையான மீரா மிதுனுக்கான குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை – காவல்துறை தகவல் …!!

தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் நடிகை மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை காவல்துறை தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக  நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். இந்த நிலையில் ஜாமினில் விடுதலையான மீரா மிதுனுக்கான குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

‘ரூட் தல’ குட்டிக்கு ஜாமீன்….. “ஆனா இவங்களுக்கு 6 நாட்கள் உதவனும்”….. ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னையில் உள்ள மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு 6 நாட்கள் உதவியாக இருக்க ‘ரூட் தல’ குட்டிக்கு உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. சென்னை பச்சைப்பன் கல்லூரி மாணவர் குட்டி  ‘ரூட் தல’ எனக்கூறி புறநகர் ரயிலில் கத்தி மற்றும் கற்களை காட்டி பயணிகளை மிரட்டியதையடுத்து அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று  உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,  சென்னை மித்ரா மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு 6 சனிக்கிழமைகளில் உதவ ரூட்டு தல மாணவருக்கு  நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

Free Fire: இரத்தம் தெறிக்கும் கேம்…. தடை செய்ய முடியல… நீதிபதிகள் வேதனை …!!

அண்மைக்காலங்களாகவே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமனனோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி இருக்கின்றனர். அதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்பது குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறது. நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது மகள் மொபைல் போனில் பிரீ பையர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சசிகலா வழக்கு – அக்டோபர் 26ல் இறுதி விசாரணை..!!

சசிகலா தொடர்ந்த வழக்கை இறுதி விசாரணைக்காக அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டது செல்லும் என்று சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத்தொடர்ந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் சசிகலா தொடர்ந்த வழக்கு அக்டோபர் 26 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சுற்றுச்சூழல் அனுமதி விதியில் இருந்து ஈசாவுக்கு விலக்கு….. ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால் ஈஷா அறக்கட்டளைக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என ஐகோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.  ஈசா அறக்கட்டளை சார்பாக விதி மீறி கட்டிடங்களை கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கோரி ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ்க்கு தடை விதிக்க கோரி அறக்கட்டளை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ஃப்ரீ ஃபயர் விளையாட்டு: நீதிபதிகள் வேதனை …!!

அண்மைக்காலங்களாகவே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமனனோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி இருக்கின்றனர். அதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்பது குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறது. ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் இரத்தம் தெறித்து போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறை தூண்டுகின்றது. கொரோனா முடக்கம் இளைய தலைமுறையினருக்கு சோதனையான காலகட்டமாக […]

Categories

Tech |