Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW: அதிமுக பொதுக்குழு வழக்கு – வெள்ளிக்கிழமை விசாரணை …!!

உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கில் ஒற்றை நீதிபதியின்  பொதுக்குழு செல்லாது  என்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அவ்வழக்கு விசாரணை இரட்டை நீதிபதி அமர்வு  விசாரித்த போது, அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவு வந்திருந்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மூணு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: சீமை கருவேல மரங்களை அகற்றுக: உயர்நீதிமன்றம் உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக மாதம் தோறும் அறிக்கை தாக்கல் செய்யவும், மாவட்ட  ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நீர் நிலைகளில் வளர்ந்திருக்கும் சீமை கருவேல மரங்களை படிப்படியாக அல்லாமல் மொத்தமாக அகற்ற வேண்டும் என்றும் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தடை விதிக்க வேண்டும்…. வி.சி.க தலைவர் திருமா மனு..!!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெற கோரி விசிக  தலைவர் தொல் திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு அனுமதி வழங்க காவல்துறைக்கு தடை விதிக்க வேண்டும். மத நல்லிணக்கத்தை குழைத்து பிரித்தாலும் கொள்கையை பின்பற்றுவது ஆர்.எஸ்.எஸ்.. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் மீது லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு… இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைப்பு… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!!!!

நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்கரி நிறுவனத்தின் பட தயாரிப்பிற்காக பைனான்சியர் அன்புச் செழியன் இடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த கடனை அடைத்த லைக்கா சினிமா நிறுவனம் பணத்தை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களிலும் உரிமையையும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. கடனை செலுத்தாமலேயே வீரமே வாகை சூடும் எனும் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்….. “ஒட்ட நிதி கொடுத்தது பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர்”…. ஐகோர்ட்டில் போலீசார் தகவல்..!!

முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டியதன் பின்னணியில் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டவர் உள்ளதாக ஐகோர்ட்டில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி வட சென்னையின் பல்வேறு பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது தொடர்பாக துறைமுகம் கிழக்குப் பகுதி திமுக செயலாளர் ராஜசேகர் அளித்த புகார் அடிப்படையில், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி மண்ணடியை சேர்ந்த ரமேஷ், […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்..!!

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வேளாண் சட்டத்திற்கு எதிராக 2020 ஆம் ஆண்டு கரூரில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Categories
மாநில செய்திகள்

டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.பி. வேலுமணி மனு வேறு அமர்வுக்கு மாற்றம்..!!

தம்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் எஸ்.பி. வேலுமணி மனுவை எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் பிரகாஷ் டீக்காராமன் அமர்வு இனி வேலுமணி மனு குறித்து விசாரணை நடத்தும்..

Categories
மாநில செய்திகள்

காவல் நிலையத்திலேயே மாமுல் வாங்குறாங்க – உயர்நீதிமன்றம் கருத்து

தமிழக காவல்துறையின் ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக உள்ள முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ் மற்றும் வெங்கடேசன் தங்களை சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு  நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் முன்பு விசாரணை வந்தபோது,  காவல்துறை தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர்கள் 40 வயதை கடந்து விட்டதாலும், துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும் அவர்களை சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது எனவும் வாதிட்டார்கள். இதை ஏற்று நால்வரின் மனுக்களை […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் நீக்கம்….. அரசு உத்தரவு செல்லும்…. தடை விதித்த ஐகோர்ட்..!!

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக இருந்த சரஸ்வதி மற்றும் துரைராஜ், முரளி குமார் உள்ளிட்ட உறுப்பினர்களை நீக்கி கடந்த பிப்ரவரியில் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நீக்கம் சட்டவிரோதம் என கூறி அரசின் உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!!

போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னத்துக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற பன்னீர்செல்வம் தனக்கு பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட போலீஸோடு ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: RSS ஊர்வலம் அனுமதி – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு …!!

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் அனுமதி கோரப்பட்டதாகவும், அதை மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி சென்னையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரான சுப்பிரமணியன் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

கோவில் வழிபாடுகளில் சாதி பாகுபாடு கூடாது: உயர்நீதிமன்றம் அதிரடி …!!

கோயில் அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டுத் தளம் என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறி இருக்கிறார்கள். கோவில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையிலான பாகுபாடு கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து கூறியிருக்கிறது

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் கே.என் நேரு மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்..!!

அமைச்சர் கே.என் நேரு மீது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு எஸ்.பி வேலுமணி குறித்து அவதூராக பேசியதாக கோவை நீதிமன்றத்தில் நேருவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. எஸ் பி வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நேரு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக்கூறி வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.

Categories
மாநில செய்திகள்

கல்வி வணிகமாயிடுச்சு…! எல்லாம் தகுதி இல்லாதவர்கள்… ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுங்க… நீதிமன்றம் அதிரடி உத்தரவு

B.E (Architecture) படிப்பிற்கு நாட்டா தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது கட்டாயம் என Architecture கவுன்சில் கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருப்பினும் பல மாநிலங்களில் நாட்டா தகுதித் தேர்வில் தேர்ச்சியை வற்புறுத்தியதால், Architecture கவுன்சில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதியில் வெளியிட்ட அறிக்கையில் நாட்டாவை வற்புறுத்த தேவையில்லை என்றும், ஜே.இ.இ உள்ளிட்ட தகுதி தேர்வுகளின் அடிப்படையில் B.E (Architecture) சேர்க்கலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொலை அல்ல… பலாத்காரம் அல்ல… சரியான ஆதாரம் அல்ல… ஐகோர்ட் நீதிபதி கருத்து…!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ,  கொலையோ இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் முதலில் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்த காவல்துறை, பின்னர் இந்திய தண்டனைச் சட்டத்தில் மைனர் பொண்ணை தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டம்,  தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது. ஜாமீன்: இந்த வழக்கில் கைது […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டு கிரிக்கெட்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு…. ஜாமீன் வழங்கப்பட்ட பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு நிபந்தனைகள் என்ன?

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் இரண்டு ஆசிரியைகள் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.  கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தற்கொலை என பள்ளி தரப்பில் கூறப்பட்டாலும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டு பெற்றோர் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 4 நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்…! சீலிடப்பட்ட கவரில் 3அறிக்கை தாக்கல்… பார்த்த உடனே உத்தரவிட்ட நீதிபதி …!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவர் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு  இன்றைய தினம் வந்த போது, தமிழக அரசின் சிபிசிஐடி தரப்பின் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞசர் முகமது ஜின்னா ஆஜராகி, மூன்று அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 1.) பள்ளி கல்வித்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில்,  கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவக் […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி.வேலுமணி வழக்கில் உத்தரவு – தமிழக அரசு முக்கிய வாதம் …!!

தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்குககில் நீதிபதி  உத்தரவை பிறப்பித்திருக்கிறார். முந்தை அதிமுக ஆட்சியில் டெண்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருந்ததாக கூறி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கோரி அறப்பொரு இயக்கம்,  திமுகவினருடைய அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கோரிக்கை வைத்தனர். உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அமைச்சருக்கு எதிரான  குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: எங்களுக்கு வேற வேலை இல்லையா ? அதிமுக வழக்கில் நீதிபதி காட்டம் ..!!

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உட்கட்சி தேர்தல், இரட்டை தலைமை தேர்வு,  பொதுக்குழு நடத்தப்பட்டது,  உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தாமல் தேர்தல் நடைபெற்றது ஆகியவற்றை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனர் மற்றும் கே.சி பழனிச்சாமியின் மகன் உள்ளிட்டோர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல அதிமுக தேர்தல் நடைமுறைகளை எதிர்த்து கே.சி பழனிச்சாமி தனியாக ஒரு வழக்கும், பொதுக்குழு உறுப்பினராக இருக்கக்கூடிய மற்றொருவர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர். சண்முகம் என்பவர் ஜூன் 23ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்தும் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: கனியமூர் கலவர வழக்கு: திடீர் முடிவு எடுத்த கோர்ட்… தள்ளுபடி செய்து அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தையடுத்து பள்ளியில் நடைபெற்ற கலவரம்,  தீவைப்பு சம்பவம் தொடர்பாக  சிறப்பு புலனாய்வு போலீசார் அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு உத்தரவிடக்கோரி மதுரை சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மாணவி மரணம் தொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை அதே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவில்லை என்றால், எடப்பாடி சவுகரியமாக அமர்ந்துவிடுவார் – தீர்ப்பின் முழு விவரம் …!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன்,  ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக  பொதுக்குழு செல்லாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். அது மட்டுமல்லாமல் ஜூன் 23ஆம் தேதி முன்பிருந்த நிலையில்தான் இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். மேலும் சட்டத்தின் ஆட்சி என்பது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, மாநிலத்தில் அரசை நடத்தக்கூடிய கட்சிகளுக்கும் பொருந்தும். அந்த கட்சியினுடைய உறுப்பினரின் உரிமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG NEWS: பொதுக்குழு வழக்கு – வெளியானது உத்தரவு முழுவிவரம்…!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன்,  ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக  பொதுக்குழு செல்லாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். அது மட்டுமல்லாமல் ஜூன் 23ஆம் தேதி முன்பிருந்த நிலையில்தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த தீர்ப்பின் உடைய முழுமையான விவரம் என்பது வெளியாகி இருக்கிறது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஜெயச்சந்திரன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: இபிஎஸ் பதவி செல்லாது…. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு …!!

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ஜூன் 23ஆம் தேதியில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒப்புதல் கொடுக்கப்பட்டு நடைபெற்ற பொதுக்குழு வரை இருந்த நிலையிலே இருக்க வேண்டும். செயற்குழு,  பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது. இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்தது ரத்து. பொது குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பு ஓபிஎஸ்சுக்கு சாதகமான, மிக முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஓபிஎஸ் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…. சென்னை ஐகோர்ட் அதிரடி….!!!!

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஒபிஎஸ் தொடர்ந்த வழக்கில், “அதிமுக பொதுக்குழு செல்லாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு இபிஎஸ்-க்கு பின்னடைவாக ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் நீண்ட நாட்களாக நிலவி வந்த ஒற்றை தலைமை பிரச்சனை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது.    

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தேவையில்லாத ஆர்டர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி உத்தரவு ..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது ஆர்டர்லி முறை குறித்து நீதிபதி கடும் அதிர்ச்சியை தெரிவித்து இருந்தார். 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். ஆனால் ஆங்கில ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது. உடனே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மீது நடவடிக்கை எடுக்காத எஸ்பிகளை கண்காணிக்க வேண்டும். இல்லை என்றால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட நேரிடும் நேற்று தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி […]

Categories
Uncategorized

கோயில் சொத்தை அறநிலையத்துறை சொத்தாக கருதக் கூடாது – உயர்நீதிமன்றம் கருத்து

கோயில்சொத்துக்களை இந்து சமய அறநிலைத்துறை சொத்தாக கருதக்கூடாது. குத்தகைக்கு தர ஆணையருக்கு அதிகாரம் இருந்தால் அறங்காவலர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். அறநிலையத்துறை சட்டப்படி மட்டுமே கோயில் சொத்தை குத்தகைக்கோ,  வாடகைக்கோ விட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக்கில் அரசியல் கட்சி பிரமுகர்களை நியமிப்பதா ? ஐகோர்ட் அதிருப்தி …!!

இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாத நியமனத்தால் ஏராளமான இளைஞர்களின் அடிப்படை உரிமை பறிப்பு. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்காமல் விருப்பம் போல் டாஸ்மாக் பணியாளர்களை நியமிப்பதா? டாஸ்மாக்கில் விருப்பம் போல் அரசியல் கட்சி பிரமுகர்களை நியமிப்பதை ஏற்க முடியாது. டாஸ்மாக்கில் நியமனங்கள் நியமனதிற்கு எந்த விதியும் வகுக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. டாஸ்மார்க் நிறுவனம் தொடங்கி 19 ஆண்டுகள் ஆகியும் விதி வகுக்காததை அரசு கவனிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால்…. நீதிமன்றம் பலே யோசனை….!!!!

கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரோ பேங்கில் ஆவின் பால் விற்பனை செய்ய முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு விசாரணைக்கு வந்த போது,பெரும்பாலான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில்தான் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. உடலுக்கு தீங்கு என்று தெரிந்தும் பிளாஸ்டிக் உறைகளில் வரும் உணவுகளை சாப்பிடுகிறோம் என்று […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வார்த்தை போதும்..! மத்திய அரசிடம் சொல்லிடுவோம்… தமிழக அரசை எச்சரித்த ஐகோர்ட்..!!

ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜேபிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும்,  ஆனால் அரசிடம் இருந்தோ,  டிஜிபிடமிருந்தோ அது வருவதில்லை என்று நீதிபதி அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடப்படும் நிலையில்,  தற்போதும் ஆங்கிலேய ஆட்சியில் காலத்திலிருந்த ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடாக இருக்கிறது என கூறிய நீதிபதி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2நாளில் முடிந்த வழக்கு…! வேகம் காட்டிய ஐகோர்ட்… தீர்ப்புக்காக ஓபிஎஸ், ஈபிஎஸ்.. பெரும் எதிர்பார்ப்பில் அரசியல் களம் ..!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்து வழக்குகள் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உடைய நீதி அரசர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி தன்னுடைய வாதங்களை தொடங்கினார்கள். சட்டப்படி பொதுக்குழு; அப்போது பொது குழுவானது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு… நாளை மாலைக்குள்… ஐகோர்ட் அதிரடி …!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றது. அதிமுக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறது. இது இரண்டு நாட்களாக நேற்று மதியம், இன்று காலை என்று இரண்டு நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு,  பொதுக்குழு உறுப்பினர் வைர முத்து தரப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி மற்றும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 2432பேர் ஆதரவு இருக்கு; ஓபிஎஸ் மனு உகந்ததல்ல; ஈபிஎஸ் தரப்பு முக்கிய வாதம் ..!!

2ஆவது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இபிஎஸ் தரப்பு தங்களின் அதிரடி வாதங்களை முன்வைத்து வருகின்றது. எதிர்மனுதாரர்களில் ஒருவராக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல; ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் அறிவிக்க வேண்டும்; 5தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்க வேண்டிய அவசியம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு சட்டப்படியே கூட்டப்பட்டது; நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது; எடப்பாடி தரப்பு வாதம் …!!

அண்மையில் நடந்த அதிமுக பொது குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும்,  நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும் அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் இருந்து மனு தொடரப்பட்டது. இந்த வழக்கு முதலில் சென்னை உயர் நீதிமன்றம் பிறகு உச்ச நீதிமன்றம் என மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணை வந்தது. அதிமுக பொதுக்குழு விதிப்படி தான் கூட்டப்பட்டதா?  நிரந்தர அவைத் தலைவராக கட்சியின் விதிப்படி தமிழ் மகன் உசை நியமிக்கப்பட்டாரா ? அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு: 2ஆவது நாளாக விசாரணை…பதில் சொல்லும் எடப்பாடி தரப்பு…!!

அண்மையில் நடந்த அதிமுக பொது குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும்,  நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும் அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் இருந்து மனு தொடரப்பட்டது. இந்த வழக்கு முதலில் சென்னை உயர் நீதிமன்றம் பிறகு உச்ச நீதிமன்றம் என மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணை வந்தது. நேற்று முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது ஏன் ? என்று விளக்கமளிக்குமாறு இபிஎஸ் தரப்புக்கு நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு : விசாரணை தொடங்கியது..!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக  ஓபிஎஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு தொடங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது இந்த மனு மீதான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி வாதாடுகிறார். அப்போது எடுத்த எடுப்பில் நீதிபதி முக்கிய கேள்வி எழுப்பி உள்ளார்.. அதாவது […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் வழக்கு….. “தண்டனை குறைப்பு”….. சாட்சி சொல்ல மக்கள் முன்வருவதில்லை…. ஐகோர்ட் வேதனை..!!

பாலியல் வழக்கில் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி ஜெயச்சந்திரன் புலன் விசாரணைக்கு சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். குற்ற வழக்குகளில் புலன் விசாரணைக்கு சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வேதனை தெரிவித்துள்ளார். பொது நலனின் அக்கறை கொண்டுள்ள ஒரு சிலர் மட்டுமே சாட்சி சொல்ல வருவதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் தண்டனையை எதிர்த்து பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத் செய்த […]

Categories
மாநில செய்திகள்

எந்தெந்த பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள் இருக்கு?… தமிழக அரசுக்கு வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்திலுள்ள எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள், உள் கட்டமைமப்பு வசதி இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை வரும் 27-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ்சந்திரன் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதி இருக்கிறது என ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு […]

Categories
Uncategorized

“அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க கோரி மனு”…. உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு….!!!!

தமிழ்நாட்டில் கடந்த 2019 -2021 ஆம் வருடங்களுக்கு இடையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களில் நல்ல நிலையிலுள்ள சாலைகளை மீண்டும் போட்டதன் வாயிலாக ரூபாய் 692 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சமூகஊடகங்களில் அறப்போர் இயக்கம் தரப்பில் ஆதாரங்கள் வெளியிடப்பட்டது. இவ்விவகாரம் குறித்து அதிமுகவின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி சமூகவலைதளங்களிலும் அறப்போர் இயக்கம் செய்திகளை வெளியிட்டு வந்தது. இதையடுத்து அறப்போர் இயக்கம் என்ற அமைப்புக்கு […]

Categories
மாநில செய்திகள்

“சாட்சி வாக்குமூலத்தை மட்டுமே வைத்து தீர்ப்பளிக்க முடியாது” – உயர்நீதிமன்றம் உத்தரவு

மாஜிஸ்திரேட் முன் சாட்சியங்கள் தந்த வாக்குமூலத்தை மட்டும் முக்கிய ஆவணமாக வைத்து தீர்ப்பு தர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாட்சிகளின் வாக்குமூலத்தை மட்டுமே முக்கிய ஆவணமாக கருதி விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது. கொலை வழக்கில் ஆயுள்சிறை விதித்ததை எதிர்த்து சிவா என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தாலி போடாத மனைவி….. கணவன் எடுத்த அதிரடி முடிவு…. நீதிமன்றம் கருத்து என்ன…????

கணவனை பிரிந்து வாழும் தன்னுடைய மனைவி மாங்கல்யம் எனப்படும் தாலியை கழற்றி வைத்திருப்பது என்பது கணவனுக்கு அதிகபட்ச மனவலிமையை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட அவருக்கு விவாகரத்து வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தாலியை கழற்றி வீசுவது, கணவருக்கு மனரீதியான துன்புறுத்தலை கொடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தனது மனைவி தொடர்ந்து தாலி அணியாததால், மன உளைச்சலில் சிவக்குமார் என்பவர் விவகாரத்து கேட்டு, வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தாலி என்பது திருமண வாழ்க்கையின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பரபரப்பு தீர்ப்பு…. பெரும் எதிர்பார்ப்பு ….!!!!

பெரும் பரபரப்புக்கு மத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கவுள்ளது. முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களோடு புறப்பட்டு சென்றார். இதனிடையே அதிமுக பொது குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில் இன்னும் சற்று நேரத்தில்(காலை 9 மணி) உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு இபிஎஸ் புறப்பட்டு செல்கிறார். அதே சமயம் ஓபிஎஸ் தனக்கு எதிராக தீர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

பண மோசடி வழக்கு…. நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை…!!!

நிரவ் மோடி, தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்துவதை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீது மீதான விசாரணை இங்கிலாந்து நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நடந்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தின் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி 13 ஆயிரம் கோடி பணத்தை மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிவிட்டார். இந்தியாவின் கோரிக்கை படி கடந்த 2019 ஆம் வருடத்தில் லண்டன் காவல்துறையினர் அவரை கைது அங்கு சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்தியா தாக்கல் செய்த வழக்கில், […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து தரப்பு மக்களும் சமம்….. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி….!!!

அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எந்த ஒரு சமூகத்தைப் பற்றியும் தவறாக பேசுவது ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து நடிகை மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ சமூக வலைத் தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்ததின் பேரில், அவரும் அவரது நண்பரின் பெயரில்  7 பிரிவுகளின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

“மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்”….. உயர்நீதிமன்றம் கேள்வி….!!!!

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் வனப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு பின்னர் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அந்த தொகையை திரும்பி வழங்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளது. காலி மது பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழக கோவில் திருவிழாவில் நாடகம் நடத்த…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

மதுரை மாவட்டம் முதலைகுளம் பகுதியில் கருப்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், உசிலம்பட்டி அருகில் திருவிழாவின்போது கலைநிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த மனுவை சென்ற வாரம் விசாரணை மேற்கொண்ட தனிநீதிபதி, ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்துவதற்கு நிபந்தனைகள் விதித்து அனுமதியளித்தார். அவற்றில் ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்தும்போது ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்களை அனுமதிக்ககூடாது எனவும் நிகழ்ச்சிகளை […]

Categories
தேசிய செய்திகள்

“எல்லாருக்கும் பென்சன் கட்டாயம்”…… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

எல்லா ஊழியர்களுக்கும் பென்ஷன் வழங்க வேண்டியது அவர்களின் அடிப்படை உரிமை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. எல்லா ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு சம்பளம், பென்ஷன் வழங்கப்பட வேண்டியது அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமை என ஒரிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அந்த உயர்நிலைப்பள்ளி அரசு ஆதரவு […]

Categories
தேசிய செய்திகள்

“முத்தமிடுவது கடும் குற்றமல்ல”…. மும்பை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…..!!!!

பாலியல் துன்புறுத்தல் பற்றிய வழக்கு விசாரணையின்போது, ​​முத்தம் இடுவது இயற்கைக்கு மாறான குற்றமல்ல என்று மும்பைஉயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. அதாவது 14 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கு விசாரணையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன் கீழ் முத்தமிடுவதும், காதலிப்பதும் இயற்கைக்கு மாறான குற்றங்கள் அல்ல என கூறி குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இவ்வழக்கின் தீர்ப்பை வழங்கிய பம்பாய் உயர்நீதிமன்றம் நீதிபதி அனுஜா பிரபுதேசாய் கூறியதாவது, ​​”பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் மற்றும் முதல் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி பிரேமலதா என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்திருந்தார். தன் மீதுள்ள வழக்குகள் பற்றி வேட்புமனுவில் உதயநிதி தவறான தகவல் தந்ததாக வாக்காளர் பிரேமலதா மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி வெற்றிக்கு எதிரான மனுவை  நிராகரித்தது  உயர்நீதிமன்றம். உதயநிதி மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம் வாக்காளர் பிரேமலதாவின் மனுவை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மதுக்கடைகளை மூட நேரிடும்…. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை திரும்பப் பெறுவதற்கான திட்டத்தை வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் திட்டத்தை வகுக்கவில்லை என்றால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் வனப்பகுதி மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கு விசாரணையில் தமிழகத்திற்கு அதிரடி உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பார்களை மூடும் உத்தரவுக்கு தடை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என தனி நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகள் பார்களை நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை இல்லை எனக்கூறி டாஸ்மாக் […]

Categories

Tech |