Categories
மாநில செய்திகள்

“‘கடவுளே ஆக்கிரமித்தாலும் அகற்றப்படும்”…. உயர்நீதிமன்றம் அதிரடி…..!!!!!

பொது இடத்தை அபகரித்து புது கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடவுளின் பெயரால் பொது இடத்தை அபகரித்து கோவில் கட்டி நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. ஆகவே பொது இடத்தை கடவுளே அபகரித்து இருந்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் சாலையை ஆக்கிரமித்து மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு இருப்பதாக பாப்பாயி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் விவகாரம்… நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தை தருகிறது… அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து…!!!

இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை குழு தலைவரான வருத்தம் தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் கலோரிக்கு ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டது. எனவே, இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இது தொடர்பான தீர்ப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியானது. கர்நாடக உயர்நீதிமன்றம், வெளியிட்ட தீர்ப்பில், ஹிஜாப் பிரச்சனையில் அரசாங்கம் பிறப்பித்த ஆணை, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு […]

Categories
அரசியல்

“தேர்தல் முடிவை மாற்றி அறிவித்தேன்”…. கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம் அளித்த அதிகாரி….!!!!

கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி மதுரை மாவட்டம் டி.கல்லுபட்டி பேரூராட்சியில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று எண்ணப்பட்டது. அதில் 10-ஆவது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும், திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும் 284 வாக்குகளை பெற்றனர். இதன் காரணமாக வார்டு உறுப்பினர் தேர்தல் குலுக்கள் மூலம் நடத்தப்பட்டது. அதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரி திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

மார்ச்-7ஆம் தேதி முதல் நேரடி விசாரணை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!!

கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம் , புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அதற்கு பதில் பல நிலுவையில் இருந்ததால் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதன்பின் கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் காணொலி மற்றும் நேரடி விசாரணை என்று கலப்பு முறையில் முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

உச்சத்தில் இருக்கும் கொரோனா…. “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைங்க”…. ஐகோர்ட்டில் வழக்கு..!!

கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் 22ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற மருத்துவர் நக்கீரன் தரப்பில் வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,  […]

Categories
மாநில செய்திகள்

உங்க இஷ்டத்துக்கு கட்டிடம் கட்டக்கூடாது…. வார்னிங் கொடுத்த உயர் நீதிமன்றம்….!!!!

அனுமதியை மீறி கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி கூடாது என்று ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவர் மணிகண்டன் என்பவர் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜோசப் ரெட்டியார் காலனியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்த 15 அடி அகலம் உள்ள பொதுப் பாதையில் ஜெரோம் ஸ்டாலின் மற்றும் ரீட்டா மேரி ஆகியோர் ஐந்தடி வரை ஆக்கிரமிப்பு […]

Categories
மாநில செய்திகள்

கற்றல் குறைபாடு…. 343 மாணவர்கள் பாதிப்பு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதற்கு நிபுணர் குழு அமைக்க வேண்டும். இதற்காக பள்ளிகளில் உள்ள பெற்றோர் ,ஆசிரியர் சங்கங்களை மறு சீரமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோ என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக பள்ளிக்கல்வி ஆணையத்தின் சார்பில் இணை இயக்குனர் அமுதவல்லி பதில் மனு தாக்கல் செய்தார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 13 பேர் விடுதலை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி சிறைப்பிடிக்கப்பட்டு வருவது வழக்கமாகவே மாறிவிட்டது. அந்த வகையில் ராமநாதபுரம் மண்டபம் பகுதியிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி மீன்பிடிக்க 2 விசைப் படகுகளில் சென்ற மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த மன்னார் மாவட்ட நீதிபதி, அவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மதுப் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

உருமாறிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் டிசம்பர் 31-ஆம் இரவு 7 மணி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை மதுபானம் விற்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தான் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளோம் என புதுவை அரசு வாதிட்டது. இருந்தபோதிலும் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மது அருந்துபவர்கள் அதனை கடைபிடிக்க மாட்டார்கள் என நீதிபதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

பருவமெய்தியதும்…. “முஸ்லீம் பெண்கள் விரும்பியவரை கல்யாணம் பண்ணலாம்”…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

முஸ்லீம் பெண் பருவமடைந்தவுடன் அவள் விருப்பப்படி யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 33 வயது இந்து இளைஞரை திருமணம் செய்தார் 17 வயது முஸ்லிம் பெண்.. ஆனால் இந்த திருமணத்திற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இந்த தம்பதியரின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.. இதையடுத்து முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு மனுவை தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழக காவல்துறையில் சிறப்பு கால முறை ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 558 தூய்மை பணியாளர்களுக்கும் கல்வித்துறை தூய்மைப் பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கல்வித்துறை தூய்மைப் பணியாளர்களுக்கு இணையாக காவல்துறை தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக உள்துறை டிஜிபி உள்ளிட்டோர் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வைத்தியநாதன் மற்றும் விஜயகுமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சிவகார்த்திகேயனின் “அயலான்” படத்தை வெளியிட தடை… ஐகோர்ட் அதிரடி!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ படம் மாபெரும் வெற்றியை பெற்றது.. அதனைத் தொடர்ந்து ‘அயலான்’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.. இந்த சூழலில் அந்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.. அதாவது, படத்தை தயாரித்துள்ள 24 ஏஎம் நிறுவனம் பெற்ற ரூ 5 கோடி கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்றும், வட்டியோடு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ராஜேந்திர பாலாஜியின் சதோதரி…. ஐகோர்ட் கிளையில் மனு….!!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் அவரை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவர் தலைமறைவாக உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உணவகங்களில் இனி இது கட்டாயம் இருக்கணும்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

உணவகங்களில் புகார் எங்களை வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவகங்கள், மளிகை கடைகளில் மக்கள் புகார் அளிக்க ஏதுவாக அதிகாரிகள் செல்போன் எண்களை ஒட்டவேண்டும். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவு கலப்படம் பற்றி ஆய்வு மற்றும் நடத்தினால் போதாது, கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை என்று உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : தமிழ்த்தாய் வாழ்த்து…. உயர்நீதிமன்ற கிளை கருத்து….!!!

தமிழ் தாய் வாழ்த்து தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. சென்னையில் நடந்த விழா ஒன்றில் தமிழ் தாய் வாழ்த்து பாடும் பொழுது காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அமர்ந்து இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழ் தாய் வாழ்த்து இறைவணக்கப் பாடல் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று எந்த உத்தரவும் கிடையாது என்று குறிப்பிட்டது. தமிழ் மீது கொண்ட அதீத […]

Categories
மாநில செய்திகள்

தமிழை கட்டாய பாடமாக்க முடியாது…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி பயிற்று மொழியாக உள்ளது. இலவச கல்வி என்ற பெயரில் ஒன்றிய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்குவது போல தெரிகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 95 விழுக்காடு மாணவர்கள் இந்தி அல்லது சமஸ்கிருதம் தெரியாதவர்கள். அவர்களுக்கு சமஸ்கிருத பாடத்தை கட்டாயமாக்குவது அநீதியானது. எனவே தமிழகத்தில் இயங்கும் ஒன்றிய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயப்பாடமாக்கவும், மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ…!!! அரை நிர்வாணமாக…. அதுவும் உயர்நீதிமன்ற விசாரணை…. நீதிபதிகள் கடும் ஷாக்…!!!!

உயர்நீதிமன்ற விசாரணையில் நபர் ஒருவர் வீடியோ காலில் அரைநிர்வாணமாக ஆஜராகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தொடர்பான பாலியல் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்பொழுது வீடியோ வாயிலாக விசாரணை தொடர்பான நபர் ஆஜராகியுள்ளார். இதனைப் பார்த்த அனைவரும் பயங்கர அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் அந்த நபர் வீடியோ காலில்ஆஜரான போனது அரைநிர்வாணமாக இருந்துள்ளார். இதனால் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: காற்று மாசுபாடு…. டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்….!!!!

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் காற்றின் தரம் மிக மோசமான நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது. வாகன புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை ஆகியவற்றால் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்கணிப்பு ஆராய்ச்சிக்கான அமைப்பை இதை நாள்தோறும் கண்காணித்து வருகிறது. இன்று காலையிலும் காற்றில் புகை மாசு அதிகமாக இருந்ததால் காற்று தரக்குறியீடு 316 என்கிற அளவில் இருந்தது. டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள்…. அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் தலைமைச் செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்திலுள்ள பல ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க கோரிய வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தண்ணீர் மிகவும் அவசியமானது. தற்போது மழை காரணமாக நீர் கிடைத்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நான்கு மாதங்களுக்கு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நீர்நிலை ஆக்கிரமிப்புகள்….. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!

நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது மட்டுமல்லாமல் வீடுகள், நிறுவனங்கள் போன்றவற்றை கட்டிக் கொள்கின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் “மாநிலம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்பை ஆக்கிரமிப்பு பற்றி ஒரு வாரத்தில் அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

வழிபாட்டு தலங்களை இடிக்க உத்தரவு…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களை இடிக்கவும், விசாரணை நடத்தி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் வழிபாட்டு தளம் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், வழிபாட்டுத்தலம் கட்ட ஆட்சேபம் எதுவும் இல்லாததால் அங்கு கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பதற்காக அரசு நிலத்தை ஆக்கிரமித்து அனுமதிக்கலாமா? என்று நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வியாபாரம் செய்ய கூடிய இடங்கள் எவை…? மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

சாலையோர வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டப்படி சென்னையில் எந்த இடத்தில் வியாபாரம் செய்ய வேண்டும் என்பதை அறிவிக்க மாநகராட்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தையும், விதிகளையும் அமல்படுத்த கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது சட்டப்படி வியாபாரிகள் வியாபாரம் எங்கு செய்யலாம்? எங்கெல்லாம் வியாபாரம் செய்யக்கூடாது? என்று ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் […]

Categories
மாநில செய்திகள்

நளினி மனுவை தள்ளுபடி செய்யுங்கள்…. தமிழக அரசு வேண்டுகோள்….!!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9_ஆம் நாள் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சாட்டை துரைமுருகன் இனி வாயைத் திறக்கக் கூடாது – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

தமிழக, கேரள முதலமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் இருக்கும் சாட்டை துரைமுருகனுக்கு, பிணை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியை உடைத்து கற்கள், ஜல்லி உள்ளிட்டவற்றைச் சட்டவிரோதமாகக் கேரளத்துக்குக் கடத்துவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சாட்டை துரைமுருகன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனையும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசியதோடு, […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவு இல்லம் – கடந்து வந்த பாதை …!!

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சென்னை போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த வேதா நிலையம் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும் என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தார். இது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறக்கட்டளை ஒன்றும் […]

Categories
அரசியல்

வீடு தீபா தீபக்குக்கே சொந்தம்… உடனே சாவியை கொடுங்க… வேதா இல்லத்தில் ஏமாந்து போன அதிமுக …!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடைமை ஆக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் கடன் தள்ளுபடி… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் வரம்பு நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடன் தள்ளுபடி செய்யும் போது அதை யாருக்கு செய்ய வேண்டும் என்பதை வரையறை செய்வதற்கும்,எந்த விவசாயிக்கு கடன் தள்ளுபடி என்பதை முடிவு செய்யவும் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் சிறு,குறு விவசாயிகள் என வரையறுத்து 5 ஏக்கர் வரையிலான கடன் தள்ளுபடி செய்தது சரியே என்றும் தெரிவித்துள்ளது. அதேசமயம் அனைத்து விவசாயிகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

எவ்வித அச்சமும் இல்லாமல் நேர்மையாக செயல்படுவேன்…. புதிய தலைமை நீதிபதி அதிரடி பேச்சு….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சிப் பானர்ஜி மேகாலயா ஐகோட்டிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர நாத் பண்டாரி சென்னை கவர்னர் மாளிகையில் பொறுப்பேற்றார். அந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில் பேசிய தலைமை நீதிபதி பண்டாரி, பணியில் எந்தவித பயமும், பாரபட்சமும் இல்லாமல் நேர்மையாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன். மேலும் இங்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதி… வரும் 22ம் தேதி பதவியேற்ப்பு விழா …!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி வரும் 22ஆம் தேதி பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அலகபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து நீதிபதி பண்டாரி பொறுப்பேற்கும் வரை மூத்த நீதிபதி துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக இருப்பார் எனவும், நீதிபதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் போக்குவரத்தை சீர்படுத்த சிறப்பான திட்டம்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் போக்குவரத்தை சீர்படுத்துவதற்கு சிறப்பு படை அமைக்குமாறு மாநகர காவல் ஆணையர் அங்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் சட்டவிரோதமாக அதிக அளவு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி குரோம்பேட்டை புதுவை நகர் சிறுதொழில் வியாபாரிகள் சங்கம் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிபதி, வணிக நிறுவனங்களிடம் மாமூல் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்த போலீஸார் சிலர் அனுமதிப்பதாகவும், இதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழித்தடத்தில் இனி ஆட்டோ இயங்க அனுமதி பெற வேண்டும்….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உரிய அனுமதி இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்ல ஆட்டோ ரிக்ஷாகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே 150க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உரிய அனுமதி பெறாமல் இயக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நந்தா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், புதுச்சேரி தடத்தில் , கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே உள்ள குறுகிய தூரத்தை கருத்தில் கொண்டு, ஒரே […]

Categories
மாநில செய்திகள்

மழை, வெள்ள பாதிப்பு…. “அரசு சரி செய்கிறது”… தாமாக முன்வந்து விசாரிக்க மறுத்த ஐகோர்ட்!!

சென்னையில் மழை பாதிப்பை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 6ஆம் தேதி கனமழை பெய்ய தொடங்கியது.. இந்த கனமழை இன்று முதல் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இந்த இடைப்பட்ட நாட்களில் சென்னையில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.. அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் வீடுகளிலும் தண்ணீர்கள் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழை ஒருபோதும் பயிற்று மொழியாக்க முடியாது…. மத்திய அரசு தடாலடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு கூறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் செல்வகுமார். அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் மத்திய அரசு ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்குத் மட்டும் முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மீதமுள்ள 20 மொழிகளையும் புறக்கணிக்கிறது. அதனால் தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் […]

Categories
மாநில செய்திகள்

கோவில் நகைகளை உருக்க தடை…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் அறங்காவலர் நியமனத்துக்கு பிறகு கோவில் நகைகள் உருக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஹைகோர்ட்டில் உத்தரவாதம் அளித்துள்ளது.அறங்காவலர் களை நியமிக்கும் வரை கோவில் நகைகளை உருகுவது குறித்து எந்த முடிவும் உருக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில் நகைகளை உருக்க தடை விதிக்கக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இண்டிகேட் கலெக்டிவ் அறக்கட்டளை தொடர்ந்த இந்த வழக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்க […]

Categories
மாநில செய்திகள்

அரசு நிலத்தில் சிலைகள் அமைக்க கூடாது… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

அரசு நிலங்களில் சிலை அமைக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மாவட்டம் , அவினாசி சாலையில் மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்களின் சிலைகள் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு இன்று விசாரணை செய்தது. பின்னர் அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக் கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் எதிர்காலத்தில் அனுமதி இன்றி சிலைகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வீடற்ற மக்களுக்கு வீடு…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை…!!!

வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது குறித்த செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சேலம் தாத்தையாம்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தை வீடில்லா ஏழைகளுக்கு மனையாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழகத்தில் வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான விரிவான திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

அர்ச்சகர்கள் நியமனம்…. இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…. தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலையத்துறையின் புதிய விதிகளை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பதில் அளிக்க ஆணையிட்டுள்ளது. கோவில் அர்ச்சகர்கள் நியமனம் பற்றிய இந்து சமய அறநிலையத் துறையின் புதிய விதிகளை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோவில்கள் திறப்பு…. அரசே முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளி,சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடந்த 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.கொரோனா தொற்றுப் பரவலைகட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதனால் மாநிலம் முழுவதும் பாஜக. இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அனுமதி வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தினர். ஆனால் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தப்பு நடந்தால்… தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்… உயர்நீதிமன்றம் நம்பிக்கை!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்க ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும், அதேபோல் மீதமுள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.. இதனை தொடர்ந்து இன்று பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.. இந்நிலையில் திரிசூலம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், வார்டு உறுப்பினர் பதவிக்கும், யூனியன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் வெள்ளிக்கிழமை கோவில்கள் திறப்பு?…. ஐகோர்ட்டில் இன்று விசாரணை….!!!

தமிழகத்தில் விஜயதசமியை முன்னிட்டு வருகின்ற கோவில்களை  வெள்ளிக்கிழமை கோவில்களை திறக்கவேண்டும் என்று ஆர். பொன்னுசாமிஎன்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 வது அலை படிப்படியாக குறைந்துள்ளது. அதனால் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் வழிபாட்டுத் தலங்கள் மூடி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி பண்டிகையை வரவிருக்கிறது. நவராத்திரி பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை அன்று […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வையுங்கள் – ஐகோர்ட் உத்தரவு!!

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த 22ஆம் தேதி அட்டவணை வெளியிட்டது. இதையடுத்து பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த போவதில்லை என்று புதுச்சேரி அரசாங்கம் தெரிவித்திருந்தது.. இவ்வழக்கு விசாரணையால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.. மேலும் 5 நாட்களுக்குள் […]

Categories
மாநில செய்திகள்

கண்டெய்னர் லாரி விபத்துகள்…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

உயர்நீதிமன்றம் கண்டெய்னர் லாரி விபத்துகளைப் பற்றி ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சாலைகளில் கண்டைனர் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கண்டெய்னர் லாரிகளில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான எடையை ஏற்றி செல்லுவதால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேனர் கலாச்சாரம்…. முழுமையாக தடுக்க…. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில் பேனர்கள் வைக்கும் கலாசாரத்தை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகள் அமைக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திமுக அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நடந்த முன்னாள் எம்எல்ஏவின் திருமணத்திற்கு வந்திருந்தார். அவரை வரவேற்பதற்காக பேனர் வைத்ததில் 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனையடுத்து மோகன் ராஜ் என்பவர் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தமிழ்நாடு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்  9 மாவட்டங்களுக்கு வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம்  உள்ளாட்சி தேர்தலில் எந்த புகாரும் இல்லாத வண்ணம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளது என்று […]

Categories
மாநில செய்திகள்

கோயில் நிலங்களுக்கு நியாமான வாடகை நிர்ணயிக்க…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் குத்தகைக்கு விடப்பட்டுள்ள அனைத்து கோயில் நிலங்களுக்கும் நியாமான வாடகை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குத்தகைக்கு விடப்பட்டுள்ள அனைத்து  கோவில் நிலங்களுக்கும் நியாயமான வாடகை மட்டும் நிர்ணயிக்க அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு  அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகையை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“அதிமுக தீர்மானம்” சட்ட விரோதம் இல்லை…. உயர்நீதிமன்றம் கருத்து…!!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றியதில் சட்டவிரோதம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. புரட்சித்தலைவி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டு புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. இதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து திருச்செந்தூரை சேர்ந்த ராம் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அளித்த […]

Categories
மாநில செய்திகள்

நிலத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும் – ஐகோர்ட்!!

சென்னை வெளிவட்ட சாலைக்கான நிலத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வண்டலூர் – நெமிலிச்சேரி இடையே 29.65 கி.மீட்டர் தூரத்திற்கு நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நில உரிமையாளர்கள் வழக்குத் தொடுத்தனர்.. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிவட்ட சாலைக்கான நிலத்தை  கையகப்படுத்தியது செல்லும் என்று நீதிபதி இளந்திரையன் தீர்ப்பளித்துள்ளார். மேலும் அவர் அனைத்து நடைமுறைகளையும் அரசு முறையாக பின்பற்றி உள்ளதாக கூறி வழக்குகளை தள்ளுபடி […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம்.. ஐகோர்ட் அறிவுறுத்தல்!!

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைப்பது தான் மாணவர்களின் நலனுக்கு சிறந்தது என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் கல்வியை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள முறையை தான் பின்பற்றுகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளுக்கு மேலாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தையே சார்ந்துள்ளது. எனவே  புதுச்சேரி மாநிலத்திற்கு தனியாக கல்வி வாரியம் அமைக்க வேண்டும் என்று ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.. […]

Categories
மாநில செய்திகள்

மனித கழிவுகளை அகற்ற…. “மனிதர்களை பயன்படுத்துவதில்லை”…. உறுதி அளிக்க உத்தரவு…!!!

இன்றைய நவீன காலகட்டத்தில் பலவிதமான நவீன கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. அதேபோல சாக்கடை களையும், கழிவுநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்வதற்கும் நவீன கருவிகள் வந்த நிலையிலும் அற்ப பணத்துக்காக மனிதர்களே அள்ளும் நிலை தற்போது நீடித்து வருகிறது. இதனால் உயிர் பலிகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டி ஆகியவற்றை சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனித கழிவுகளை அகற்றுவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி… “அனுமதி கொடுங்க”… நாங்க தலையிட முடியாது… உயர்நீதிமன்றம் அதிரடி!!

விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.. மேலும் பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபடுமாறு அறிவித்துள்ளது.. இதனையடுத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, இல.கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]

Categories

Tech |