பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் ரேஷன் கடைகளுக்கு அருகில் அரசியல் கட்சியினர் பேனர் வைக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில் பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசின் சார்பில் 2500 ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி வருவதாகவும், இந்த பரிசு பொருட்களை ஆளும் கட்சியினர் வீடு வீடாக சென்று வழங்கி வருவதாகவும் இதற்கு […]
Tag: உயர்நீதிமன்றம்
மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக ணையத்தில், கேபிளில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்கில் மூடப்பட்டதால் படம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த […]
மழைநீர் கடலில் வீணாகக் கலப்பதை தடுக்க நிபுணர் குழுவை அமைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திரநாத் கார்த்திக் தாக்கல் செய்த மனுவில், நிலத்தடி நீர் மேலாண்மை இல்லாதததால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும், அதிகப்படியான நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இந்த பிரச்சனை […]
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி திரு.சஞ்சய் பானர்ஜி வரும் 4ஆம் தேதி பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி திரு.ஏபி. ஷாகி பதவிக்காலம் கடந்த 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி திரு. சஞ்சய் பானர்ஜியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஐம்பதாவது தலைமை நீதிபதியாக நீதிபதி திரு.சஞ்சய் […]
உருமாற்றம் பெற்ற கொரோனா பரவுவதால், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பரிசோதனையை கட்டாயமாக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் திரு.ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பிரிட்டன் மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செய்த அதே தவறை மத்திய அரசு தற்போதும் செய்வதாகவும், வெளிநாட்டுப் பயணிகளை கண்டிப்பாக 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு மீது […]
விருதுநகரில் எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சத்து உணவுக்காக உதவித்தொகை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கவனக்குறைவால் ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டு பெண்ணொருவர் பாதிக்கப்பட்டார். அதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு சத்து உணவுக்காக மாதம் 7500 ரூபாய் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட […]
தமிழகத்தில் சமையல் எண்ணெய்யைப் பேக்கிங் செய்யாமல் சில்லறை விற்பனையில் விற்கக் கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உலக மக்களின் அன்றாட வாழ்க்கையில் தேவையான உணவுக்கு மிகவும் முக்கியம் சமையல் எண்ணெய். அவ்வாறு பயன்படுத்தும் சமையல் எண்ணெயை நல்லதாக உபயோகிக்க வேண்டும். ஆனால் மக்கள் அதனை கவனிப்பதில்லை. இந்நிலையில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் விற்பனைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் பேட்டின் செய்யாமல் சில்லரை விற்பனையில் சமையல் […]
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகளை சில்லரை விற்பனையில் ”பேக்கிங்” செய்யாமல் விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருள்நிதி என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவில் சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்படுகிறது. இது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சட்டப்படி […]
சபரிமலையில் வருகின்ற 20ஆம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் கொரோன அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி வாரத்தின் ஐந்து நாட்களில் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் […]
சென்னையில் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய ரஜினியின் மனைவி லதாவுக்கு கால அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அதை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுமார் 2 கோடி வரையில் வாடகை பாக்கியை கேட்டு நில உரிமையாளர்கள் அப்பள்ளி மீது வழக்கு […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜீத் பானர்ஜியை கொழிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தலைமை அடங்கிய கொலிஜியம் அமைப்பு இந்த பரிந்துரையை தற்போது வழங்கியிருக்கின்றார்கள். முக்கியமான நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கான பரிந்துரை என்பது கொலிஜியத்தால் வழங்கப்பட்டிருக்கின்றது. நீதியரசர் சஞ்சித் பேனர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அடுத்து பதவி ஏற்பதற்கான பரிந்துரை என்பது வழங்கப்பட்டிருக்கிறது. பொதுவாக தலைமை நீதிபதிகளின் பரிந்துரையை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்ளும். எனவே இந்த பரிந்துரை அப்படியே ஏற்கப்பட்டு சென்னை […]
மருத்துவ படிப்பில் 7.5% ஒதுக்கீட்டை ரத்து செய்ய தொடர்ந்த வழக்கில் மாணவர்கள் தலைக்கு மேலாக கத்தி தொங்குவதை நீதிமன்றம் அனுமதிக்காது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மருத்துவ மேற்படிப்பிற்கு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோனது. அதிகமானோர் தோல்வியடைந்து, சில சொற்ப எண்ணிக்கையிலேயே மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்த நிலையில் மாணவர் நலன் கருத்தில் கொண்டு தமிழக அரசாங்கம் 7.5 சதவீத உள் […]
தமிழக அரசு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பல்வேறு நிலைகளில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் என்ற முறையிலும், தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கனவே அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், […]
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 12 இடங்களே கிடைக்கும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடிய வகையில் தமிழக அரசு சட்டசபையில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. […]
சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ காணாமல் போனது ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கான சம்பவம் போன்று உள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடத்தல்காரர்களிடம் இருந்து 103 கிலோ தங்கத்தை சிபிஐ பறிமுதல் செய்தது. அதன் பிறகு அந்த தங்கம் காணாமல் போனது என அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில் சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ காணாமல் போனது ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கான சம்பவம். தங்கத்தின் எடை குறையும் […]
மனு ஸ்மிருதியை மேற்கோள்காட்டி பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திருமாவளவனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது. திருமாவளவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க லோக்சபா விதிகள் குழுவுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த லட்சுமி சுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இரண்டு மாதங்களில் முடிக்கப்படும் என சென்னை சைபர் குற்றப்பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தை ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்காக கட்டணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கட்டாயக் கல்விஉரிமைச் சட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடத்தை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கக்கூடிய மாணவர்களுக்கான கல்வி செலவை அரசே வழங்க வேண்டுமென இந்தச் சட்ட பிரிவுகள் சொல்கின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு எவ்வளவு செலவு செய்ய படுகிறதோ அந்த தொகையை அரசு […]
சென்னை மற்றும் சேலம் இடையேயான எட்டு வழி சாலைக்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு விதித்த தடை தொடரும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் சேலம் இடையே எட்டு வழி சாலை அமைப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டது. அதற்காக பல்வேறு விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்தது. அதனால் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முயற்சிப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்சென்னை மற்றும் சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டம் தொடர்பான […]
இனி முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் கட்டாயம் கொரோனா சிகிச்சை மையத்தில் பணி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி முக கவசம் அணிதல் மற்றும் […]
நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உடனடியாக சிசிடிவி அமைக்கும் பணிகள் தொடங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக நாட்டில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனால் நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் காவல் நிலையங்களில் சிசிடிவி அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. […]
தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியது. அதனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக […]
2ஜி முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 2ஜி முறைகேடு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ராஜா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து 2ஜி முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணைக்கு வருகின்றன. ஆ.ராஜா உப்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய புலனாய்வுத் துறை […]
தமிழகத்தில் தங்கத்தின் விலைக்கு இணையாக மணல் விற்பனை செய்யப்படுவதால் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மணலின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை செய்யப்படுவதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் மக்களுக்கு குறைந்த விலையில் மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி அரசு மேற்கொண்டுள்ள […]
அண்ணா பல்கலைக்கழகம் மீது மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் தமிழகத்தில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்த தேர்வுக்கு மாணவர்களிடம் கட்டணம் வசூலித்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்த தேர்வுக்கு கட்டணம் வசூலித்தது […]
வேளாண் பல்கலைக்கழக கலந்தாய்வு வழக்கு பற்றி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வேளாண் பல்கலைக்கழகம் கலந்தாய்வில் சுதந்திரப் போராட்ட வாரிசுகளுக்கான இட ஒதுக்கீடு நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் களுக்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தற்போது அமல் படுத்துவது ஏன்? கலந்தாய்வு பணி தொடங்கிய பிறகு அரசாணை வெளியிடக் கூடாது என்பது அரசுக்கு தெரியாதா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. […]
இந்த ஆண்டு ( 2020 – 2021 ) ஆம் கல்வி ஆண்டில் அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தமிழகத்தில் உயர்வு சிறப்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் தொலைதூரப் பகுதிகளில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்திய மருத்துவ குழுவின் 2000வது ஆண்டில் மருத்துவ பட்ட மேற்படிப்பு […]
சென்னையில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள விதிமீறல் கட்டடங்களை இடித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் – ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் விதிமீறல் கட்டட விவகாரத்தில் 2015 வெள்ளத்திற்கு பிறகும் அதிகாரிகள் யாரும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என அதிருப்தியை தெரிவித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராக தற்போது உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்கள். மேலும் தமிழக […]
அரியர்ஸ் வழக்கு விசாரணையை காண வீடியோ கான்பரன்சில் ஏராளமானோர் நுழைந்து இடையூறு ஏற்பட்டதால் வழக்கு விசாரணை தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவித்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கு 26வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் மதிய நேரத்தில் தான் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்ற நிலை இருக்கிறது. இதனிடையே நீதிமன்றம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடப்பதால் காலை […]
தமிழகத்தில் வான்வெளி ஆம்புலன்ஸ் சேவை உள்ளதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் மலைப் பகுதியில் உள்ள மக்கள் அவசர காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்ல மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மக்களுக்கு அவசர வசதி சென்று சேரும் வகையில் போதுமான அளவு ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்ய கோரிய வழக்கில், வான்வெளி ஆம்புலன்ஸ் வசதி உள்ளதா? என்று தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற கிளை […]
ஊட்டியில் அரசு மருத்துவமனை அமைப்பதற்காக 1,838 மரங்களை வெட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக அப்பகுதியில் வளர்ந்து இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு அரசு முடிவு செய்தது. ஆனால் மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்ற வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் மரங்களை வெட்ட கூடாது என்று உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் […]
தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தில் 35 சதவீதத்தை பிப்ரவரி மாதத்திற்குள் வசூலித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்பதை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் ஏற்கனவே செப்டம்பர் 31ம் தேதிக்குள் கடந்த ஆண்டு கல்வி கட்டணத்தை 75 சதவீதமாக நிர்ணயித்து அதில் 40 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அதே போல […]
பாஜகவின் வேலை யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சி நடத்தும் வேல் யாத்திரையில் தமிழக அரசும், காவல்துறையும் தலையிடக்கூடாது, 100 பேருக்கு மேல் செல்லக்கூடாது என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கரு. நாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கு இன்று காணொளி மூலமாக விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த […]
வேல் யாத்திரை நடத்திய பாஜக மீது தமிழக அரசு சார்பில் அடுக்கடுக்கான குற்றசாட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 100பேருக்கு மேல் நவம்பர் 16-ஆம் தேதிக்கு மேல் கூட கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்தும், வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பாஜக மீதும், வேல் யாத்திரை மீதும் அடுக்கடுக்கான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டன. […]
பாஜகவினர் வேலுடன் சென்றது கோயில் யாத்திரை அல்ல. முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை என்று டிஜிபி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. 10 வாகனகளில் 30 பேர் மட்டுமே செல்வோம் என்று பாஜகவினர் நீதிமன்றத்தில் கூறியதை பின்பற்றவில்லை என்றும் டிஜிபி தரப்பு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சொல்வது ஒன்றாகவும், நிஜத்தில் கடைபிடிப்பதும் வெவ்வேறாக உள்ளன என டிஜேபி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மேலும் பாஜக மாநில தலைவர் எல். முருகன் உட்பட கட்சியினர் […]
கிராமசபை ரத்து செய்திருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட திமுகவின் மூத்த தலைவர் கே.என் நேரு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகளின் கூட்டத்தை சமாளிக்க இயலும் போது கிராமசபை கூட்டங்களை நடத்த இயலாதா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். குறிப்பிட்ட விவகாரம் பற்றி தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று கூற அரசுக்கு அதிகாரம் எங்கே உள்ளது ? தனிமனித இடைவெளி காரணமாக கிராம சபை […]
ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்கள். சென்னையை சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர் தமிழகம் முழுவதும் போதுமான அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதில், தமிழகத்தில் 862 நேரடி […]
அரியர் தேர்வு ரத்து செய்யப் பட்டதில் உடன்பாடு இல்லை என்று யுஜிசி சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறது. யுஜிசி நிலைப்பாட்டை பதில் மனுவில் தெரிவிக்காதது ஏன் ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். கொரோனா காரணமாக தேர்வு நடத்த முடியாத நிலையில் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசுத் தரப்பிலிருந்து ஆரம்பத்திலிருந்தே இதற்கு யுஜிசி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அரிய […]
மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கக்கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி, சந்தோஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் தகுதியில்லாத விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்குவதை தொடர அனுமதித்தால் அது தகுதியான மாணவர்களுக்கு அநீதி செய்வதற்கு […]
சொத்துவரி குறைக்க கோரி மனுதாக்கல் செய்த நடிகர் ரஜினிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கோடம்பாக்கத்தில் தனக்கு சொந்தமாக ராகவா திருமன மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் எந்த வித திருமண நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வில்லை. 6 மாதங்களுக்கு மேலாக மண்டபம் பூட்டியே இருக்கும் நிலையில்தான் இருக்கின்றது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட திருமணமும் ரத்து செய்யப்பட்டு, பெறப்பட்ட முன் […]
10-ம் வகுப்பு படித்து விட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரை மாவட்டம் துவரிமான்னை சேர்ந்த மதுரேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும் ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு […]
திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள குரும்பபட்டி என்ற பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த […]
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.ஆனால், தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, […]
இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத புதுமையாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக கணவன்-மனைவி ஒரே நேரத்தில் பதவியேற்கவுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 10 மாவட்ட முதன்மை நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றம் மூத்த நீதிபதிகள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவர்களை உயர்நீதிமன்றம் நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளார். இதில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகள் கிடைத்துள்ள நிலையில் அந்த பத்து பேரில் இருவர் கணவன்-மனைவி […]
பேரறிவாளனக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளனுக்கு 90 நாட்கள் விடுப்பு வழங்கக்கோரி அவரது தாயார் திருமதி. அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது மகன் இருக்கும் புழல் சிறையில் 50 கைதிகள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் பேரறிவாளனுக்கு ஏற்கனவே உடல் நல பாதிப்புகள் உள்ளதால் கொரோனா தொற்று […]
நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு பற்றிய கருத்தை பெருந்தன்மையாக கடந்து விடலாம் என்று முன்னாள் நீதிபதி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார். சூர்யா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் […]
நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் நடைபெற்றது. இந்தத் தேர்வின் அச்சத்தையடுத்து, அடுத்தடுத்து 3 தமிழக தமிழக மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களின் மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்ததோடு, நீட் தேர்வை கண்டித்து […]
ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித் துறை சார்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் எதிராக வழக்கு தொடரப்பட்ட இருக்கிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லிப்ரா மொபைல் ரிங்டோன் இசை அமைத்துக் கொடுத்தற்காக அவர் பெற்ற 3 கோடியே 47 லட்சம் ஊதியத்தை அவரது பெயரில் வாங்காமல் ஏ.ஆர் ஆர் அறக்கட்டளை பெயரை வாங்கி இருக்கிறார். இதற்க்கு வருமானவரி தொகையை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. […]
சிமெண்ட் மூட்டை விலையை கட்டுப்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சிமெண்ட் மூட்டைகளின் விலை அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் ஒரு சிமெண்ட் விலையை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட சிமெண்ட் மூட்டை விலை 70 ரூபாய் அதிகமாக உள்ளது என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணை இன்று நடைபெற இருக்கின்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் மீண்டும் ஆலை இயங்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க டிசம்பர் […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் மீண்டும் ஆலை இயங்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க டிசம்பர் […]