மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கை ஜூலை மாதத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 50% இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு […]
Tag: உயர்நீதிமன்றம்
உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நடந்த உடுமலை சங்கர் கொலை சம்பவம் தொடர்பாக திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் தற்போது குற்றவாளிகளை 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஒரு கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து இருந்தார்கள். அதேபோல் தாய் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டு இருந்தது. […]
டாஸ்மாக் கடைகளுக்கான பாதுகாப்பை குறைத்து கொரோனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு பணிக்கு அதிக காவல்துறையினரை ஈடுப்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக உள்துறை, வருவாய் துறை செயலாளர்கள், டிஜிபி, டாஸ்மாக் நிர்வாகம் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: கோவையை சேர்ந்த தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனா பரவலை தடுப்பதற்கு பலகட்டங்களாக ஊரடங்கு […]
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்,பாரதியின் ஜாமினை ரத்து செய்யகோரிய வழக்கு மீதான தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விவரம்: கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பட்டியலினத்தவருக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு […]
தஞ்சை மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் முறைகேடு என ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம்சாட்டி தொடர்ந்த வழக்கை, ஆர்.எஸ் பாரதி வாபஸ் பெற்றுள்ளார். வழக்கின் விவரம்: நெடுஞ்சாலை துறையில் சாலை அமைக்க முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 462 கி.மீ சாலைகள் […]
தமிழக முதல்வர், அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது. தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.12ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக கிராமங்களில் இணையதள வசதிக்கு 2019ஆம் ஆண்டு டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டது. ஆயிரத்து 950 கோடி மதிப்பிலான இந்த டெண்டரில் முறைகேடு நடந்ததாகவும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் மே மதமே புகார் அளித்தும், எந்த […]
வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கும் வகையில் தமிழக விமான நிலையங்களில் விமானங்களை தரையிறங்க அனுமதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுள்ளனர். நாளை இது தொடர்பாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக அவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை […]
தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மார்ச் 24ம் தேதி முதற்கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடந்து கொரோனோவின் தாக்கம் குறையாததால் ஜூன் 30ம் தேதி வரை 5ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விவரம் : சென்னை […]
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 50% இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு […]
பைபர் ஆப்டிக்ஸ் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு என்று ஆர்.எஸ்.பாரதி சென்னை உயநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது லஞ்சஒழிப்பு துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனாகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய […]
பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த டெண்டரை இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க […]
மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு வழக்கில் மத்திய அரசுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம் : மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுக, அதிமுக மற்றும் பாமகவினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை […]
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 % ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி சண்முகம் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அகில இந்திய அளவில் மருத்துவம் மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2018ஆம் […]
சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த 20 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 20 காவலர்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது இதன் காரணமாக சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக ராயபுரம் மண்டலத்தில் 5,216 பேரும், […]
ஊரடங்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இம்மானுவேல் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்து மார்ச் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பலர் வருவாய் இழந்து வறுமையில் வாடியுள்ளனர். குறிப்பாக குறைந்த […]
50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு விசாரணை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது. 2020 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மூலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவமனை படிப்புகளில் இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும். இதில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கவில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியதோடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதன் விசாரணையில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியதன் அடிப்படையில் ஏற்கனவே திராவிடர் […]
வீட்டு உபயோக இணைப்புக்கான மின் அளவு கணக்கீடு குறித்த மின்வாரிய உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தினால் முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின் கணக்கீடு நடைபெற்று மின் கட்டணம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டு மாத […]
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என அறிவித்துள்ளனர். மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுக மற்றும் பாமகவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் […]
தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விவரம்: மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு […]
சென்னையில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து நாளைக்குள் விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்து 36,841 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,392 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. […]
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கு விவரம் : அந்த மனுவில் ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் […]
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்குரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் […]
10ம் வகுப்பு தேர்வை ஒத்திவைகோரிய வழக்கு வரும் 11ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கூடுதலாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுதேர்வை மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. தேர்வினை ரத்து செய்யவேண்டும் எனவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது சமரியான கேள்விகளை கேட்ட […]
வரும் காலங்களில் தமிழகத்தில் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலை 2வது வாரத்தில் நடத்தலாமா? எனபது குறித்து அரசு பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான விசாரணை தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு இதுவே சரியான […]
தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்டது. இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு மையங்களுக்கு மாணவர்களை இ-பாஸ் முறையில் அழைத்து வருவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கு விவரம் : இந்த நிலையில் இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறியும், மேலும் […]
இன்றைய விசாரணைக்கு அரசு தலைமையில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்றால் 10ம் வகுப்பு தேர்வுக்கு தடை விதிப்பது தொடர்பாக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உள்ள நிலையில் எந்த அடிப்படையில் 9 லட்ச மாணவ, மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க உள்ளீர்கள் என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சுமார் 35,000 கொரோனா பாதிப்பில் சுமார் 25,000 பேர் சென்னையில் மட்டும் உள்ளனர். எனவே ஜூலை 2வது வாரத்தில் […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பொதுத்தேர்வினை ஒரு மாதம் வரை ஏன் தள்ளி வைக்கக்கூடாது என அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். வழக்கு விவரம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த இந்த மனுவை வாபஸ் பெற்று கொண்டதையடுத்து வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி […]
வெளி மாநில தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்பி முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள 400 தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஏற்கனவே மே 16ம் தேதி நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் […]
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜி ராஜேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல மனுவில் தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 22 அரசு மருத்துவமனைகளையும், 112 தனியார் மருத்துவமனைகளையும் அரசு அனுமதித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் இது தொடர்பான உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு 4, 500 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் 6000 ரூபாய், […]
ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு உதவி […]
தீபா, தீபக் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிடுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இந்த நிலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க ஒரு நிா்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கேகே நகரை சேர்ந்த புகழேந்து மற்றும் ஜானந்தன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி தீபா, தீபக் ஆகியோா் தாக்கல் செய்திருந்தனர். இந்த […]
கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என சிஎம்டிஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தை மூலம் ஆயிரக்கணக்கானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தையானது கடந்த 5ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல கோயம்பேட்டில் இருந்த பூக்கடைகள் மாதரவாரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி கோயம்பேடு உணவு தானிய விற்பனையாளர்கள் […]
சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலை காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சலூன்களை திறக்கக் கோரி முடித்திருத்துவோர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் வருவாய் இல்லாமல் இருக்கும் சலூன் தொழிலாளர்களுக்கு தலா ரூ.30,000 வழங்க உத்தரவிட […]
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை மோசமாக உள்ளது என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மலைக்கண்ணு என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதனால் வட மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். […]
சிலிண்டர் டெலிவரி பணியாளர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் காப்பீடு செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி […]
அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி முன்ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த, 12ல் கரூர் கலெக்டர் அன்பழகனை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தார். பின், நிருபர்களிடம் பேசும்போது, கலெக்டரை படித்த முட்டாள் எனவும், இனிமேல் ஆய்வு கூட்டத்துக்கு எங்களை அழைக்கமால் இருந்தால், கலெக்டர் வெளியே நடமாட முடியாது’ எனவும் தெரிவித்தார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசில், கலெக்டர் […]
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் 10ம் வகுப்பு தேர்வுகளை எப்படி நடத்துவீர்கள்? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1ம் தேதி நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் தேர்வு தேதியை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தற்போது ஜூன் 15ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜூன் 15ம் தேதியும் தேர்வுகள் நடத்தக்கூடாது என்றும், பள்ளிகளில் வகுப்புகளை […]
சலூன் கடைகள் செயல்பட அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச்25ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சலூன் கடைகள் செயல் பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கத் தலைவர் முனுசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விவரம்: அவர் தாக்கல் செய்த மனுவில், “ஊரடங்கிற்கு முன்னதாக 15 ஆயிரம் ரூபாய் வரை […]
ஊடரங்கில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லக்கூடிய பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கறிஞர் எம்.எல். ரவி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்களை காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் துன்புறுத்தக்கூடாது எனவும், அவ்வாறு துன்புறுத்த தடை […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி இல்லாததால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தலைவர் மாயவன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து ஜூன் 12ம் தேதி […]
தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்றும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் மதவழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்ததை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கு விவரம்: சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட மதவழிபாட்டு தலங்களை திறக்க தமிழக […]
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வீடுகள், நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் எனக்கூறி ராஜசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சொத்துவரி, விவசாயக்கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால […]
வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் பார்த்தால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்பி முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள 400 தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா […]
தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் இயங்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிகாவும் அரசுக்கு கண்டனம் […]
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தை பொருத்த வரை டாஸ்மாக் விவகாரத்தில் 2 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. கடந்த 6ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் நிபந்தனையுடன் திறக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தார்கள். பின்னர் 8ஆம் தேதி அந்த நிபந்தனைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என சொல்லி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை […]
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க இருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து. இதன் உத்தரவு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கலாம். இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து […]
தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் நாளை முதல் மது விநியோகத்துக்கான நடவடிக்கையை டாஸ்மாக் முழு வீச்சில் செய்து வருகின்றது. இதற்காக கலர் கலர் வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படுகின்றது. உச்சநீதிமன்ற […]
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க இருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து. இதன் உத்தரவு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கலாம். இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து […]