தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை என கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம். தமிழக முழுவதும் இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில் தென்காசியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை […]
Tag: உயர்நீதிமன்ற மதுரை கிளை
பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.. மதுரையை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக போக்ஸோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. இதில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும் வழக்குகள் நிறைய பதிவாகி வருகிறது. இதனால் பள்ளியில் பயிலக்கூடிய பெண் குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் […]
சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி, சூதாட்ட விளையாட்டுகள் பற்றி தெரிய வந்ததற்கு பெற்றோரே காரணம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்த ஐயா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில் ஆன்லைன் லாட்டரிகள் விளையாட்டுகளுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன, அதற்கான சந்தைகளும் தற்போது காலங்கள் போல அதிகரித்து வருகின்றன. இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் கடன், வறுமை போன்ற பல்வேறு பிரச்சனைகள் […]
சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி, சூதாட்ட விளையாட்டுகள் பற்றி தெரிய வந்ததற்கு பெற்றோரே காரணம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுகள் தெரிய வந்தது எப்படி? அதற்கு காரணம் பெற்றோர் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதோடு அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது, பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுத்துவிட்டு குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை […]
மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ, இரட்டை அர்த்த பாடல்களோ இடம் பெறக் கூடாது. கரகாட்டத்தில் நாகரீகமான உடைகளை அணிய […]
திருச்சி திருமலை கிராமத்தில் 100 வீடுகளை கொண்ட குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா உய்யக்கொண்டான் திருமலை கிராமத்தில் அங்கீகரிக்கப்படாத நிலத்தில் 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை, இந்த முறைகேடு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் […]
தமிழகத்தில் கோயிலுக்குள் யாகங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என்றும், கோயிலுக்கு வெளியே யாகங்கள் நடைபெற விதிகளை வகுக்க அரசுக்கு அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரத்தில் விரதம் இருக்கும் பக்தர்களை அனுமதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெளியே கந்த சஷ்டி விரதம் இருக்க அனுமதி அளித்த அரசு நிலைப்பாடு சரியே […]
ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறித்து போல் உள்ள காட்சிகள் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் எனது மகள் கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த ஆறாம் தேதி முதல் எனது மகளை காணவில்லை. இது தொடர்பாக விசாரித்த போது எனது மகள், அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, ஃப்ரீ […]
அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலை தொடர்ந்தால் துறை செயலாளர் ஆஜராக நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திர பதிவு செய்யப்படுகின்றன? இது போன்ற நிலை தொடர்ந்தால் அந்த துறை செயலர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. வழக்கின் பின்னணி என்னவென்றால் தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கை […]
பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி ஓட்டு மொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று ஒரு யூடியூப் சேனலில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதுதொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக அவர் மீது ஏன் […]
குலசை தசரா விழாவின்போது பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள், சினிமா பாடல்கள் பாடவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவின் போது குலசேகரப்பட்டினத்தில் நடக்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இந்த திருவிழாவின்போது பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. அதாவது, கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் என்னும் பெயரில் ஆபாச நடனங்கள் […]
மாட்டுவண்டி பந்தயம் நடத்தக்கோரிய மனு மீது நெல்லை எஸ்.பி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி பிறந்த நாளில் நெல்லை மாவட்டத்தில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயங்கள் நடத்த அனுமதி கிடையாது என பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து […]
தடை செய்யப்பட்ட பின்னரும் பிரீ பையர் விளையாட்டு செயல்படுவது எப்படி என்ற கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற மன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ப்ரீ பயர் (Free fire) விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில், இளம் தலைமுறை விளையாடுவது எப்படி காவல் துறையினரும் சைபர் கிரைம் துறையினரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.. அதோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லை எனில் இளம் தலைமுறையினர் […]
கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சக்தி குமார் சுகுமார் குரூப் உத்தரவில், தமிழகத்தில் கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும். பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. ஆடல், பாடல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சி அல்லது மதத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பிளக்ஸ் போர்டுகள் […]
தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய சட்ட உறுப்பினர் நியமனம் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக மின்வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்ட உறுப்பினரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று […]
நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. கல், ஜல்லி மற்றும் எம் சாண்ட் போன்ற பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. விதிகளை மீறி செயல்பட்டதாக 300 கோடி அபராதம் விதித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது.கல்குவாரிகளை மீண்டும் அளவீடு செய்து விதிகளை மீறி இருந்தால் அபராதம் விதிப்பது குறித்து நோட்டீஸ் தரலாம் […]
திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்றும் எனவே மணமக்கள் விரும்பினால் ஆன்லைன் வீடியோ மூலம் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த சுதர்ஷினி அமெரிக்காவை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்வது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் சாட்சிகள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி உரிய வகையில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பல்வேறு நாடுகளில் ஆன்லைன் வழியாக திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரர் […]
யூடியூபை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழி முறைகள் தேவை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. யூடியுப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர். நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் பற்றி கடுமையாக விமர்சித்த வழக்கில் சாட்டை துரைமுருகன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. […]
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி, ஊழியர்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதிக்கு கொரோனா உறுதியானதால் நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது என்பதால் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிறையில் உள்ள முருகன் என்பவர் ஜாமீன் கோரிய வழக்கு, இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் மனுதாரரின் வழக்கறிஞர்இந்த வழக்கினை விசாரிக்கும் காவல் ஆய்வாளர் மற்றும் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தவறான தகவல் கொடுத்ததாகவும், அதனால் மனுதாரரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அவர் கூறினார். இதையடுத்து […]
வாகனங்களில் வெளிப்புறம் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறியதாவது, வாகனங்களில் வெளிப்புறம் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்கவேண்டும்.. புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்களை 60 நாட்களில் நீக்க வேண்டும். வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள், கட்சி தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம். தேர்தல் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல.. வாகனங்களில் தடைசெய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள், விதிகளை மீறிய […]
பொது விநியோகத் திட்டத்திற்கான 20,000 மெகா டன் பருப்பு, 80 லட்சம் பாமாயில் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முறையான வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றி டெண்டர் அறிவிப்பாணை விடுத்து கொள்முதல் செய்யலாம் என்றும், இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
ஆணவக்கொலையில் இருந்து காப்பாற்றுமாறு சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் தாக்கல் செய்த வழக்கில் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியை சேர்ந்த ரம்யா என்ற இளம் பெண், அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். சுரேந்தர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ரம்யாவின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய […]
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக […]
மது விற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மாநிலம் மதுவில் மூழ்கியுள்ளது குறித்து அரசு கவலை கொள்வதில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துங்கள் என்று ஐகோர்ட் மதுரை கிளை யோசனை கூறியிருக்கின்றது. மதுரையை தட்டான்குளம் மேலூர் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்தவர் மதுரை உயர்நீதிமன்ற […]
சர்க்கரை பாகு மற்றும் சில ரசாயனங்களைச் சேர்த்து பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்று தயாரித்து விற்பனை செய்வதைத் தடுக்கக்கோரி வழக்கில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் சர்க்கரை, சர்க்கரை பாகு ஆகியவற்றை கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்க இடைக்கால தடை விதிக்கக்கோரி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு, மனுதாரர் சமர்ப்பித்த […]
பணத்தை மையமாக கொண்டு நடைபெறும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய புதிய சட்டம் தேவை என உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் சேர்ந்த சிலுவை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கொரோனா வைரஸ் தடுப்பிற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த என் மீதும் தன் நண்பர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து இருக்கின்றது. பொது […]
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை – மகன் இருவரும் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு காவலர்கள் அப்ரூவலாக மாறி இருக்கின்றார்கள். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற கொடூர சம்பவம் அடுத்தடுத்து வெளியே வந்து கொண்டு இருக்கின்றது. இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட எஸ்ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் மிகவும் துணிவோடு சாட்சியமளித்த அந்த பெண் காவலர் ரேவதி தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அந்த பெண் காவலர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான […]
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான […]
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் முகத்தை மறைக்கும் ஷீல்டு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில் முன்னெச்சரிக்கையாக போலீசாரின் முழு முகத்தையும் மறைக்கும் ஷீல்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போலீசார், முகத்தை மறைக்கும் ஷீல்டு பயன்படுத்துவதை மாவட்ட எஸ்.பிக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் கொரோனா தொற்று காலத்தில் களத்தில் இறங்கி பணியாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப்பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், வருவாய் […]
தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக தற்போது வரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஜெயபாரதி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: தமிழகத்தில் வழிபாட்டு தளங்கள் திறக்கப்படும்போது உரிய கொரோனா தடுப்பு வழிமுறைகளை வகுக்கக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் ஜெயபாரதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் தமிழகம் முழுவதும் […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விவரம் : தென்காசியை சேர்ந்த கனகராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் கொரோனா பரவலை தடுக்க ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போது நடத்துவது சரிய அல்ல என குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்களின் மன நிலை கடுமையாக […]
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகை முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு விவரம் மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கொரோனா காலத்தில் களத்தில் பணியாற்றும் காவலர்கள், சுகாதாரப்பணியாளர்கள், ஊடகப்பணியாளர்கள், மருத்துவர்கள், வருவாய் அலுவலகர்கள் மற்றும் அரசு சாரா தன்னார்வலர்கள் உள்ளிட்டோர்களுக்கு என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. […]
ஒரு கையில் கபசுரக் குடிநீர் மறுகையில் உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுவையும் அரசு கொடுக்கிறது என மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கொரோனவை தடுப்பதற்கு ஊரடங்கு அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த நிலையில் மது அருந்துவதால் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் எனவே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிப்பது மட்டுமல்லாமல், எந்த வகையிலும் மதுவை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என […]
பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள மதுபானங்களை அழிப்பது பற்றி அந்தந்த குற்றவியல் நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குற்றவியல் நீதிமன்ற சொத்து அறைகளில் உள்ள மதுபானங்களை அளிப்பது குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய கடைகளான மளிகை, உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் போன்றவை தவிர்த்து பிற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வணிக வளாகங்கள், […]