தமிழகத்தில் சொத்துவரி 25 சதவிகிதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள நிர்பந்தம் காரணமாகவே இந்த வரி உயர்வு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சொத்து வரி உயர்வை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திருச்சி மாவட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு […]
Tag: #உயர்வு
மத்திய அரசை காரணமாக வைத்து சொத்து வரியை தமிழக அரசு உயர்த்துவதா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “திமுக அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ளது பெரும் கண்டனத்துக்குரியது. முந்தைய அரசு 100% விழுக்காடு வரை சொத்து வரி உயர்த்தியதை கண்டித்து போராட்டம் நடத்தி விட்டு தற்போது 150 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்தி உள்ளது எவ்வகையில் ஏற்புடையது. தற்போதைய சொத்து வரி […]
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மண்டல இணை, துணை மற்றும் உதவி ஆணையாளர் களுடன் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் அதிக வாடகை வசூலிப்பது தொடர்பாக சீராய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்திற்கு உட்பட்டு […]
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாகவும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன ர். இந்நிலையில் ஹோட்டலில் சாப்பிடும் உணவுப் பொருட்களின் விலையை 10 சதவீதம் உயர்த்தப்போவதாக ஹோட்டல் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். ஏப்ரல் 6-ஆம் தேதி (நாளை) நடக்கும் ஓட்டல் அதிபர்கள் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனால் இட்லி, பூரி, பொங்கல் விலை ரூபாய் 5 ம், சாப்பாடு, பிரியாணி வகைகள் ரூ.20 ம் உயரக்கூடும் […]
புதுச்சேரியில் ஆட்டோவிற்கான FC கட்டணம் 700 ரூபாயாக இருந்த நிலையில், அதனை திடீரென 4600 ரூபாயாக உயர்த்தி புதுச்சேரி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதனால் ஆட்டோ தொழிலை நம்பியுள்ள பல ஆட்டோ டிரைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதோடு இந்த FCகட்டண உயர்வு அவர்களுக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. உயர்த்தப்பட்ட ஆட்டோ FC கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர்கள் திடீரென ஆர்டிஓ அலுவலகத்தின் முன்பு தங்களது ஆட்டோக்களை நிறுத்தி முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு […]
நாடு முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி பாஜக தொடக்க நாள் மற்றும் சாதனை நாள் விழா விழா நடைபெற்றுவருகிறது. அன்றைய தினம் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தொண்டர்களுடன் பேசயிருக்கிறார். இதற்காக புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் பாஜக நிர்வாகிகள் பிரதமரின் உரையை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் சந்தித்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன் பேசியபோது, நாடு முழுவதும் முதன் முறையாக ஏப்ரல் 16-ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி விழா […]
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் தமிழகத்தை விமர்சித்து வந்தனர். அவற்றிற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் சொத்துவரி உயர்த்தப்பட்ட பிறகும் அது இந்தியாவின் பல்வேறு மாநகரங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது என விளக்கம் தெரிவிக்கப்பட்டது. இதைக் குறிப்பிடும்போது அரசு தரப்பில் சென்னை மாநகராட்சியில் 600 சதுரடி குடியிருப்புக்கு குறைந்தபட்சம் சொத்துவரியாக 1,215 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதும், இதே பரப்பளவுள்ள குடியிருப்புக்கு மும்பையில் […]
122 இல்லாத அளவிற்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானியல் கழகம் அறிவித்துள்ளது. நாட்டில் கடந்த மார்ச் மாதம் இதுவரை 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானியல் கழகம் அறிவித்துள்ளது. போதிய மழையின்மை காரணமாக கடந்த மார்ச் மாதம் வட மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவிவருகிறது. தில்லியில் மார்ச் மாதம் 15.9 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மார்ச் மாதம் முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் வெயில் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுங்க கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கான விமான கட்டணம் ரூ.8,200-ல் இருந்து ரூ.11,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை போல சென்னையிலிருந்து மும்பைக்கு செல்ல ரூ.7,400 ஆக இருந்த விமான கட்டணம் ரூ.8,500 ஆகவும், […]
மத்திய அரசின் நிபந்தனையால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு சொத்து வரியை உயர்த்தியது. இதனால் பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அமைச்சர் கே என் நேரு இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் மத்திய அரசு விதித்த நிபந்தனை காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. வரியை உயர்த்த விட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி கிடைக்காது என்று மத்திய […]
திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலை பகுதியில் மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை புதூர் நாடு அருகே மினிவேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருவிழாவிற்கு அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற போது இந்த சம்பவம் அரங்கேறி […]
தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பூசி காரணமாக பல்வேறு நாடுகளில் சற்று குறைந்து வருவதால் ஊரடங்கு, முக கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா போது முடக்கம் அமலில் இருந்த 2020ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் குழந்தை திருமணங்கள் அதிகரித்திருந்ததாக மக்களவையில் கேள்வி […]
சொத்து வரி உயர்த்தியது தொடர்பாக தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகம் முழுவதும் சொத்து வரியை நூறு சதவீதம் வரை திமுக அரசு உயர்த்தியுள்ளது கண்டனத்திற்குரியது. இதுதான் நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தரப்போவதாக சொன்ன விடியலா? கொரோனா பாதிப்புக்கு பிறகு முழுமையான இயல்புநிலை இப்போதுதான் ஏற்பட தொடங்கியிருக்கும் நிலையில், இப்படி ஒவ்வொன்றாக மக்கள் தலையில் இடி விழுவது […]
தேசிய மற்றும் மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறையாக ஜவுளித்துறை விளங்குகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களுக்கும் வேலை வாய்ப்பினை உருவாக்கித் தருகின்ற துறையாகவும், அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் துறையாகவும் ஜவுளித் தொழில் விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை கொண்ட ஜவுளித்துறை பஞ்சு விலை உயர்வால் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றது. 2020 -21ம் நிதி ஆண்டு துவக்கத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பஞ்சின் […]
தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து வணிக சிலிண்டர் விலை நேற்று ரூபாய் 200க்கு மேல் உயர்ந்தது. இதனால் ஓட்டல், டீ கடைகளில் உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் டீ ,காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ ரூபாய் 12 ரூபாய்க்கும், 12 ரூபாய்க்கு விற்பனை […]
ஜவுளித் தொழிலை காக்கும் வகையில் பஞ்சு விலையை குறைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தேசிய மற்றும் மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறையாக ஜவுளித்துறை விளங்குகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களுக்கும் வேலை வாய்ப்பினை உருவாக்கித் தருகின்ற துறையாகவும், அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் துறையாகவும் ஜவுளித் தொழில் விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை கொண்ட ஜவுளித்துறை பஞ்சு விலை உயர்வால் கடந்த ஓராண்டு […]
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் தமிழகத்தில் இனி வரும் நாட்களில் […]
புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 100 யூனிட்டுக்குள் ரூ 1.55 ஆக இருந்த கட்டணமானது தற்போது 1.90 ரூபாயாக ஆக அதிகரித்துள்ளது . மேலும் 101 முதல் 200 யூனிட் வரை 2.60 ரூபாயாக இருந்த கட்டணம் 2.75 ரூபாயாக அதிகரித்துள்ளது.
நூல் விலை கிலோவுக்கு மேலும் 30 உயர்ந்துள்ளதால் தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர். திருப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் இந்த நிறுவனங்களுடன் சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய பொருளாக இருப்பது நூல். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர் கிடைத்தவுடன் அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து நூல் விலையை உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலையைக் கருத்தில் கொண்டு ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதில் […]
தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டதால் சுற்றுலா செல்வதற்கு பலரும் தயாராகி வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுற்றுலா செல்வதற்கு பல்வேறு இடங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு புது தடை ஒன்று தடாலென தலையில் விழுந்துள்ளது. அது என்னவென்றால் இன்று முதல் (ஏப்ரல் 1) டோல்கேட் கட்டணத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி டோல்கேட் கட்டணத்தை பத்து ரூபாய் முதல் […]
வணிகப் பயன்பாடு சிலிண்டரின் விலை 268.50 ரூபாய் உயர்ந்துள்ளது. மத்திய அரசு சமையல் கேஸ் மற்றும் வணிகப் பயன்பாடு சிலிண்டரின் விலையை மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றது. இந்நிலையில் இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது. இதில் வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை 268.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு […]
ஹிந்துஸ்தான் யுனிவர்சல் லிமிடெட் நிறுவனம் குளியல் சோப், துணி துவைப்பதற்கு சோப் உள்ளிட்ட சோப்புகளின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி Lux, surf Excel, vim, bar, Rin ஆகியவற்றின் விலை உயர்கிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் டவ் மற்றும் லைஃப்பாய் சோப்புகளின் விலையை உயர்த்திய நிலையில் இந்த மாதம் ப்ரூ காபி விலையை 7 சதவீதம் உயர்த்தியது. இதுமட்டுமல்லாமல் பேஸ்வாஸ் விலையையும் 9 சதவீதம் உயர்த்தியுள்ளது. மக்கள் பயன்படுத்த கூடிய அனைத்து அத்தியாவசிய […]
டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் குறைந்தபட்ச பயணசீட்டு கட்டணத்தை அதிகரிக்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து அமைச்சரும் பயண சீட்டு கட்டணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனியார் பேருந்து உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். தனியார் பேருந்து உரிமையாளர்கள் மாணவர்களுக்கான குறைந்தபட்ச சலுகை கட்டணத்தை ரூபாய் 6ஆகவும், குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்துவதற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக அதிகரிக்கபடுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 30 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் அகவிலைப்படி 3% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப் பட்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் 47.68 லட்சம் […]
ஃபிக்ஸட் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதங்களை ஐசிஐசிஐ வங்கி உயர்த்தியுள்ளது. முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தியிருக்கிறது. புதிய வட்டி விகிதங்கள் மார்ச் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் இரண்டு கோடி ரூபாய் வரை ஐந்து கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு குறைந்த பட்சமாக 2.50 சதவிகித வட்டியும்,அதிகபட்சமாக 4.65 சதவீத வட்டியும் ஐசிஐசி பேங்க் வழங்குகிறது. மேலும் […]
நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று (ஏப்.1) முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் சென்னை புறநகரில் உள்ள வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் ரூபாய் 10 முதல் ரூபாய் 40 வரை கட்டணத்தை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ஒரே நாளில் திரும்பி வருவதற்காக ரூ.90-லிருந்து ரூ.100-ஆகவும், ஒருமுறை சென்று வரக்கூடிய ஜீப், வேன், கார்களுக்கு ரூ.60-லிருந்து ரூ. 70-ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் […]
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஏற்கனவே வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான (போர்வெல்) உதிரிபாகங்கள் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டீசல் விலையும் நான்கு மாதங்களுக்குப் பிறகு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்கனவே போர்வெல் அமைப்பதற்கான செலவில் இருந்து தற்போது கூடுதலாக ஒரு அடிக்கு ரூபாய் 7 வரை செலவு உயர்ந்துள்ளது. எனவே போர்வெல் கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. அதன்படி, போர்வெல் அமைக்க 300 அடி வரை ஒரு அடிக்கு […]
சேலம் மாவட்டம் பேப்பர் அலாய்டு விற்பனையாளர்கள் சங்க செயலர் விஸ்வநாதன் கூறியிருப்பதாவது, “வெளிநாட்டிலிருந்து பேப்பர் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதை காரணம்காட்டி பேப்பர் விலையானது கடந்த 2021 பிப்ரவரி முதல் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிரசித்திபெற்ற காகித ஆலைகளான டிஎன்பிஎல் சேசாய், பலார்பூர் ஜெ.கே. வேஸ்ட் கோர்ட்ஸ், ஆந்திரா பேப்பர் ஆலை போன்றவற்றுக்கு தேவையான மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தது. அது தற்போது முற்றிலும் நின்றுவிட்டது. காகித ஆலைகள் தங்களது தயாரிப்பு பேப்பர் உள்ளிட்டவற்றின் விலையை ஜனவரி 15 […]
வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை வரும் ஏப்ரல் மாதம் முதல் 10 சதவீதத்துக்கு மேல் உயர இருக்கிறது. இதனிடையில் திட்டன்தீட்டப்பட்ட மருந்துகள் விலையில் 10.7 % விலை உயர்வினை அரசு வழங்கியுள்ளது. அதாவது இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட மருந்துகளில் 10.7 % விலை உயர்வை அனுமதித்துள்ளது. இவையே அனுமதிக்கபட்ட அதிகபட்சமான விலை உயர்வாகும். இதன் காரணமாக […]
ஆக்சிஸ் வங்கி பிக்சட் டெபாசிட்(FD) திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. அந்த அடிப்படையில் 6 மாதம்- 9 மாதம், 9 மாதம்- 1 ஆண்டு வரை பொதுமக்களுக்கு 4.40 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 4.90 சதவீதம், 1 ஆண்டு-2 ஆண்டு, 2 ஆண்டு- 3 ஆண்டு வரை பொதுமக்களுக்கு 5.10 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.60 சதவீதம், 3 ஆண்டு- 5 ஆண்டு வரை பொதுமக்களுக்கு 5.45 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.95 சதவீதம், 5 ஆண்டு- […]
ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மாதம் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. 917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது 967 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சுமார் நான்கரை மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்ததை தொடர்ந்து தற்போது […]
பொருளாதார நெருக்கடியால் பழங்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தபட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கொரோனாவுக்கு பின்னர் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையில் சீனாவிடம் இருந்து பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடன் வாங்கி அதனை கட்ட முடியாமல் தவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள், தங்கம், பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளும் இலங்கையில் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பாலாடைக்கட்டி, தயிர், பழங்கள் ஆகியவற்றிற்கான வரிகள் அதிகரிக்கப்பட்டு ஆறு […]
பென்சன் தொகை உயர்வது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர்களுக்கு பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் மட்டுமே பென்சன் வழங்கப்படுகிறது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிஎப் சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்ச மாதாந்திர பென்ஷன் ரூபாய் 1000 என்பது மிகவும் குறைவாகும் […]
விமானங்களில் டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் பிரச்சினையை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோலிய பொருட்களின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. விமானகங்களில் பயணம் செய்வோருக்கு தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிவாயு விலை தற்போது அதிரடியாக உயர்ந்து இருக்கிறது. இதன் விலை வரலாறு காணாத அளவில் 18 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டிருக்கிறது. விலை உயர்வுக்கு பின் டெல்லியில் […]
சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய திட்டம் போன்ற ஓய்வூதிய திட்டங்களின் மூலம் இதுநாள் வரையிலும் 59.45 லட்சம் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். அந்த அடிப்படையில் கடந்த வருடம் நவம்பர் […]
ரஷ்யா-உக்ரைன் போர் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் இரண்டு நாட்டு பேச்சுவார்த்தையின் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளிலும் போரின் காரணமாக உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. போர் காரணமாக சர்வதேச அளவில் வணிக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் பொருளாதாரத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது விலைவாசி […]
உக்ரைன்-ரஷ்யா போரால் இந்தியாவில் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் டீசல், பெட்ரோல் விலை உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்த்தப்பட்டால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிக்கல் உருவாகும். பெட்ரோல் விலை உயர்வு ஆண்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மறுபக்கம் இல்லத்தரசிகளுக்கு கவலையளிக்கும் வகையில் சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் […]
சென்னையில் 126 வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40, டீசல் ஒரு லிட்டர் ரூ.91.43- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்தது. தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். இன்று உத்திரப்பிரதேசம், மணிப்பூர், உத்திரகாண்ட், கோவா மற்றும் […]
தமிழ்நாட்டில் மின் கட்டணம் 20 சதவீதம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை சில தினங்களுக்கு முன்பு அதிகரித்த நிலையில் தற்போது மின்சார கட்டணமும் அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடனே நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பி. ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என கூறியிருந்தார். அதேபோல் தமிழக அரசு நிதி நிலையை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை […]
தமிழகத்தில் மது வகைகள் மீதான வரியை வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் விலை 10 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை நேற்று முன்தினம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மின் கட்டணமும் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்தல், மின்வாரிய செயல்பாட்டைக் கண்காணித்தல்,மின் வாரியம் மற்றும் மின் நிறுவனங்கள் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பணிகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு […]
மார்ச் 16 ஆம் தேதிக்குள் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அகவிலைப்படி உயர்வு குறித்து காத்திருக்கின்றனர். ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வந்தது. இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில் மார்ச் 16-ம் தேதிக்கு முன்பாகவே அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு […]
பென்ஷன் தொகையை 1,500 ரூபாயாக உயர்த்ப்படுவதாக இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. 2022 – 23 ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் இமாசல பிரதேச மாநில முதல்வர் ஜெய் ராம் தாகூர் தாக்கல் செய்துள்ளார். அதில் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் நிறைய சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் மிக முக்கியமான ஒன்றாக பென்ஷன் தொகை உயர்வு. முதியோருக்கான மாதாந்திர பென்ஷன் தொகை தற்போது நடைமுறையில் உள்ள 1,001 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பென்ஷன் […]
தமிழ்நாடு அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக 60 வயது மேற்பட்டோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை பெண்கள் ஆகியோருக்கு அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெரும்பாலான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இந்த ஓய்வூதிய தொகை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்குக்கு பின் நிலவிய பொருளாதார நெருக்கடியால் விலைவாசி அதிகரித்து […]
பதிவு செய்யப்பட்ட நெசவாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை ,பெங்களூரு ஆகிய பகுதிகளில் எல்லைகளில் இருக்கும் சித்ரதுர்கா, தாவணகரே, ஹாவேரி, தார்வாட், பெலகாவியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தனியார் ஒப்புதலுடன் மெகா ஜுவல்லரி தொழிற்சாலை அமைக்கப்படும். பீதரில் மத்திய அரசின் உதவியுடன் 90 கோடி ரூபாய் செலவில் ‘சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் பெட்ரோகெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி’ […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகை வழங்கப்படவில்லை. அகவிலைப்படி என்பது பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகையாகும். இந்நிலையில் தற்போது ஹோலி பண்டிகை வர […]
உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பணவீக்கம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பணவீக்கத்தை சமாளிக்கும் பொருட்டு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் அமெரிக்கா மட்டுமன்றி சர்வதேச அளவிலும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறாக அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் பட்சத்தில் வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் ஆகியவற்றிற்கான இஎம்ஐ விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் […]
டெல்லி மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், ஊதிய உயர்வு வழங்க கோரி கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி மாநில அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது, “டெல்லி மாநில அங்கன்வாடி பணியாளர்களுக்கு கௌரவ ஓய்வூதியம் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாக வழங்கப்படுவதாக ஆளும் ஆம் ஆத்மி அரசு பொய் கூறுகிறது. தமிழகத்தில் முறையே அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளரின் கவுரவ ஊதியங்கள் 12,200 ரூபாய் மற்றும் 8,650 ரூபாய் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் விலை தற்போது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக திருப்பதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தற்போது தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனை நடத்தியது. அதில் தரிசன டிக்கெட் விலையை உயர்த்துவது குறித்து திட்டமிடப்பட்டது. இந்நிலையில் டிக்கெட்டுகள் குறித்த விவரத்தை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு சிபாரிசு கடிதங்கள் கொண்டு […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் இருந்து வரவேண்டிய சூரியகாந்தி எண்ணெய் சரக்குகள் தேங்கி நிற்பதால் எண்ணெய் விலை அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் கருங்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன. இதன் விளைவாக துறைமுகங்களில் சுமார் 3,80,000 டன் சூரியகாந்தி எண்ணெய் சரக்குகள் தேங்கியுள்ளன. இந்த சரக்குகளின் விலை சுமார் 570 மில்லியன் டாலர் ஆகும். மேலும் உக்ரைன் மற்றும் […]
ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]