கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வங்காள தேசத்தில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8400 ஆக உயர்ந்துள்ளது.இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் 12,348 பேருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 407 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,45,831 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் கொரனாவினால் இன்று உயிரிழந்தனர். […]
Tag: #உயர்வு
பிரான்சில் எரிவாயு கட்டணம் அதிகரிக்க உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பிரான்ஸில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதியுடன் உள்ளனர். இருப்பினும் அவர்களது அன்றாட வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் எரிவாயு கட்டணம் விலை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயுவிற்கு 1.5 சதவீதமும்,சமையல் மற்றும் வெந்நீருக்காக பயன்படுத்தப்படும் எரிவாயு 3.4 சதவீதமும், சமையல், வெந்நீர் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சுங்க கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. மேலும் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் […]
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி தரும் வகையில் பால் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெயின் விலை குறைந்திருக்கும் இந்த நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் பெரும் […]
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் கேஸ் விலையை தொடர்ந்து ரயில்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து […]
தமிழகத்தில் இன்று சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் போது மிகக் குறைவாக விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும், ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் […]
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வகையில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த போதிலும், நீட் தேர்வு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தற்போது வரை பல உயிரிழப்புகளும் அதனால் ஏற்பட்டுள்ளன. ஆனால் அரசு அதற்கு கருணை காட்டவில்லை. மருத்துவ […]
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியதை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 5000 ரூபாயில் இருந்து 6250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுனர்களுக்கான தொகுப்பு ஊதியம் 4250 ரூபாயில் இருந்து 5500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று முதல் எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் மக்களின் அன்றாட தேவைகளில் மிக முக்கியமான ஒன்று கேஸ் சிலிண்டர். அதனை தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாகவே கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டர்கள் விலை இன்று முதல் 50 ரூபாய் அதிகரிக்கிறது. கடந்த மூன்று […]
உள்நாட்டுக்குள் விமானப் பயணம் செய்வது அதிக செலவு என்ற நிலை வந்துவிட்டது. எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக, உள்நாட்டு விமானப் பயணக் கட்டணம் அதிகபட்சமாக 30 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளதாவது 180 நிமிடங்கள் முதல் 210 நிமிடங்கள் வரை பயணம் செல்லும் விமானங்களுக்கான கட்டணம் ரூ.18,600 ஆக இருந்தநிலையில், 30 சதவீதம் அதாவது ரூ.5,600 உயர்த்தப்பட்டு ரூ.24,200 ஆக அதிகரித்துள்ளது. குறைந்த அளவாக […]
உள்நாட்டு விமான பயண டிக்கெட் கட்டணங்களுக்கான வரம்பு 10% முதல் 30% வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் […]
வீட்டு உபயோக சிலிண்டர் விலை இன்று திடீரென 25 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனா சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை பிப்ரவரி 1ஆம் தேதி உயர்த்தப்படாத நிலையில், தற்போதைய திடீரென 25 ரூபாய் உயர்த்தி எண்ணை நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த செய்தி […]
சிலிண்டருக்கு 196 ரூபாய் உயர்ந்துள்ளதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விலை விற்கப்பட்டு வருகின்றது. வீட்டு உபயோகத்துக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வீட்டு சிலிண்டர் விலை ரூபாய் 710 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த மாதம் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகையாக தற்காலிக ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில்: “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி, டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட சிறப்பு மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. உள்ளாட்சி மன்ற பணியாளர்கள் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். திங்கள் ஒன்றுக்கு […]
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 17 சதவீதம் அகவிலைப்படி தரும் மத்திய அரசு 21 சதவீதமாக உயர்த்தி தர ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. 24 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்தியா பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மாநில அரசின் பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய அரசு ஊழியர்களுக்கு சம்பள தொகையை பிடித்தம் செய்தது. அதேபோல் மத்திய அரசு ஊழியர்களுக்கு […]
ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தி அதை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு பற்றி அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் […]
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் விற்கப்படும் அம்மா சிமெண்ட் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அம்மா சிமெண்ட் சார்பாக குறைந்த விலையில் சிமெண்ட் மூட்டை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அம்மா சிமெண்ட் விலை மூட்டைக்கு 190 லிருந்து 216 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2015 முதல் ஒரு மூட்டைக்கு 185க்கும் ஒரு சாக்கின் விலை ஐந்து ரூபாய் என மொத்தமாக 190 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த […]
நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 1,410.50 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் மானியம் இல்லாத சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டர்களின் விலை ரூபாய் 56 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில், 19 கிலோ எல்.பி.ஜி கேஸ் சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .1,354.50 லிருந்து ரூ .1,410.50 ஆக உயர்ந்துள்ளது. சிலிண்டருக்கு […]
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் உயர்ந்து 37,960- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹4745 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ₹4740 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹5 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ₹38,920-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹ 40 உயர்ந்து ₹37,960-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து 38,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்து 38,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 32 ரூபாய் குறைந்த 4,802 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து 66 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெங்காய விலை இன்னும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தீபாவளிப் பண்டிகை வரை விலை குறைவதற்கு வாய்ப்பே இல்லை என வியாபாரிகள் பலரும் தெரிவித்துள்ளனர். வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் கன மழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதிப்பால் அங்கு இரும்பில் இருக்கும் வெங்காயத்தைக் கொண்டு செல்லவும் முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் தமிழகம் மட்டுமன்றி டெல்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம் போன்ற பிற மாநிலங்களிலும் […]
வெங்காயம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக கடுமையான ஏற்றம் கண்டன. மொத்த விற்பனை இடத்திலேயே ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் விலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. சில்லறை வணிகர்கள் 2 […]
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடையில் எஞ்சிய தாள்களை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. வாகன நெரிசல் காரணமாக டெல்லியில் வழக்கமாக காற்று மாசு அதிகமாகவே காணப்படும். குளிர் காலங்களில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக காற்று மாசு வெகுவாக குறைந்தது. பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டு வாகனங்கள் இயக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால், கடந்த சில நாட்களாக காற்று மாசு உயரத் தொடங்கியது. பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட டெல்லியைை சுற்றியுள்ள […]
நாடு முழுவதும் டிஜிட்டல் வாயிலான பணபரிவர்த்தனை கடந்த 5 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2015, 2016ஆம் நிதியாண்டு முதல் 2019, 2020 ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் வளர்ச்சி விகிதம் நாடு முழுவதும் 55 சதவீதத்தை எட்டி உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 593 கோடியாக இருந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை கடந்த மார்ச் மாதம் 3,434 கோடி […]
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீட்ரூட் தற்போது 35 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெண்டைக்காய் 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ முட்டைகோஸ் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உஜாலா கத்திரிக்காய் 40 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும், வரி கத்திரிக்காய் 25 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும் குறைந்துள்ளது. […]
மக்கள் கூட்டத்தை தவிர்க்க பெங்களூர் ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் தொடங்கி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுபோக்குவரத்து சேவை செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர கர்நாடக மாநிலம் பெங்களுரூ ரயில் நிலையத்தில் நடைமேடைக் கட்டணத்தை உயர்த்தியது. இது குறித்த அறிவிப்பை தென்மேற்கு ரயில்வே துறை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதாவது இதற்கு முன் நடைமேடைக் […]
ஏற்றம் இறக்கமாக உள்ள தங்கத்தின் விலை இன்று மட்டும் 136ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் உயர்ந்து காணப்படுகிறது. அதாவது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் 4,947 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 39,576 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. இந்தநிலையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 17 ரூபாய் உயர்ந்து 4,964ஆகவும், ஒரு […]
இன்று முதல் சுங்க சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கி உள்ளது. இந்த ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து சேவை, இ – பாஸ் சேவை போன்ற முக்கிய தடைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டண உயர்வு இருக்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அந்த […]
கொரோனா காலகட்டத்தில் பொருளாதார இழப்பை சந்தித்து இருந்த நாடு தற்பொழுது உற்பத்தியை பெருக்கி இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதுமே பொருளாதார இழப்பை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக இந்த வருட முதல் காலாண்டில் பெரும் பொருளாதார வீழ்ச்சி கண்டிருந்தது இந்தியா. இதன் காரணம் பொது போக்குவரத்து முடக்கம், தொழிற்சாலைகள் முடக்கம், தேவாலயங்கள் முடக்கம், பள்ளி, கல்லூரிகள் முடக்கம், இதுபோன்ற சூழ்நிலையில் நாடு முழுவதும் பொருளாதார இழப்பு மேம்பட்டு இருந்தது. ஆனால் தற்பொழுது அந்தநிலை சற்று மாறி உள்ளது. […]
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 9 காசுகள் உயர்ந்து ரூ.84.73 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஆரம்பத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பெரிதளவு மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் […]
மெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றது. அதனை தொடர்ந்து மெக்சிகோ பலி எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. மெக்சிகோவில் ஒரே நாளில் மட்டும் 6,482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,56,216 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 644 பேர் உயிரிழந்ததை […]
நேபாள நிலசரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. நேபாள நாட்டில் பருவமழை தொடங்கி இருப்பதால் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகள் முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், கன மழை மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீரில் நீந்தி செல்லும் நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். அதனால் பொதுமக்களின் இயல்பு […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70.76% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 66,999 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் 942 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23.96 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் தற்போது வரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47,033 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,53,622 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் […]
இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்திருக்கிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த 82-க்கும் மேலான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அதன் பின்னர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு […]
பெங்களூரு கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பதற்றம் நீடிக்கிறது. பெங்களூருவில் உள்ள புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திரு. சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர், சமூகவலைதளத்தில் ஒரு மதம் குறித்த சர்ச்சை பதிவை வெளியீட்டு இருந்தார். இதையடுத்து புலிகேசி பகுதியில் உள்ள எம்.எல்.ஏ வீட்டின் மீது ஒரு கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் அச்சமடைந்த எம்.எல்.ஏவும் , நவீனும் […]
கடந்த 21 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலைஅடைந்துள்ளனர் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் […]
ஊழல் குற்றசாட்டு நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெரும் வயது உயர்த்தப்பட்டதை எதிரித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கருப்புசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 58ல் இருந்து 59 ஆக உயர்த்தியது. நேர்மையாக, நியாயமாக பணிபுரிந்த அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை ஓராண்டு நீடிப்பதால் எந்த தவறும் […]
இந்தியா முழுவதும் குணமடைந்தவர்களின் மீட்பு விகிதம் இன்று 49.2% ஆக உள்ளது என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, 2ம் நாளாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது என தெரிவித்தார். நாடு முழுவதும் கோரோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,86,579 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 94,041 பேரும், தமிழகத்தில் 36,841 பேரும், டெல்லியில் 32,810 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5,991 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,35,205 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 1,33,632 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் முதல்முறையாக குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை சிகிச்சையில் இருப்பவர்களை விட அதிகரித்துள்ளது. தற்போது மீட்பு விகிதம் 48.88% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை […]
தென்காசியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை தென்காசி மாவட்டத்தில் 83 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் நேற்று வரை 51 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் சிகிச்சையில் 32 பேர் உள்ளனர். இந்த நிலையில் இன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,350 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நோயாளிகளின் மீட்பு விகிதமும் 38.73% ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 24.25 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக என்றும் நேற்று மட்டும் 1.08 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]
அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு பிறகே ஆம்னி பேருந்து கட்டண உயர்வு பற்றி முடிவெடுக்கப்படும் என அன்பழகன் தெரிவித்துள்ளார். தற்போது ஆம்னி பேருந்தில் எவ்வித கட்டண உயர்வும் இல்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ஊரடங்கிற்கு பிறகு ஆம்னி பேருந்துகளை இயக்குவது குறித்து இதுவரை வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு கூறவில்லை என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் […]
ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்வதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தகவல் அளித்துள்ளார். ஒரு கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும் போது புதிய கட்டணம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் […]
தமிழக அரசு பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தியதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மே 31ம் தேதி முதல் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்த புதிய உத்தரவு பொருந்தும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 58ல் இருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை உத்தரவிட்டார். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வந்தது. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று […]
தமிழகத்தில் 50 பரிசோதனை மையங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 12,000 பேர் பரிசோதனை செய்கிறார்கள் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறியதாவது: அதிகளவில் பரிசோதனை செய்வதால் தான் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளன. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் குணமடைந்தவர்களின் சதவிகிதம் 52% ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,755 ல் இருந்து 1,821 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 495 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவில் இருந்து 94 பேர் […]
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை ரூ.20 உயர்த்தி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, 100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.229 ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், நாளொன்றுக்கு ரூ.25 உயர்த்தி […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1477ஆக அதிகரித்துள்ளது மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கின்றதோ அதற்கு இணையாக அல்லாமல் குறைந்த அளவிலே தினமும் குணமடைந்து மக்கள் வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை இருந்து வந்ததாலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மரணம் இல்லை, குணமடைய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், தமிழகத்தில் […]
100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.229 ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், நாளொன்றுக்கு ரூ.25 உயர்த்தி ரூ.256 ஆக வழங்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் […]
ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,502-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 36,016 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஒரு கிராம் ரூ. 5,000-ஐ நெருங்கும் என தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. […]