சத்தியமங்கலம் அருகே நாடக கலைஞர் நடித்துக் கொண்டிருந்தபோது கீழே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உக்கரம் ஊராட்சியில் குப்பன் துறை என்ற கிராமம் உள்ளது. இதில் ஒவ்வொரு வருடமும் மழை வேண்டி இரண்யா நாடகம் நடத்துவது வழக்கம். அந்த நாடகத்தில் அந்த ஊரை சேர்ந்த ராஐய்யன் என்பவர் முன்னின்று நடத்துவார். இந்த நாடகத்தில் 25க்கும் மேற்பட்டவர் நடிப்பார்கள். இந்த நாடகத்தில் நரசிம்மன் வேடத்திலும் […]
Tag: உயிரிழந்த சம்பவம்
சென்னையை அடுத்த தாம்பரத்தில் மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் தையல் வேலை பார்த்து வந்தவர் கவுசல்யா இவரது வீட்டின் இரும்பு கதவில் மின்சார கம்பி அறுந்து உரசிக்கொண்டிருந்தது. இதனை அறியாத கௌசல்யா இரும்பு கதவை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கௌசல்யா உயிரிழந்தார். மின்வாரியத்தின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு […]
திருப்பூர் அருகே நெல் ஊறவைக்கும் பாய்லரில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. தாராபுரத்தில் இயங்கிவரும் தனியார் அரிசி மில்லில் திருவாரூரைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இன்று வழக்கம்போல் தனது பணியைத் தொடங்கிய அவர் நெல் ஊறவைக்கும் பாய்லரில் தண்ணீரை நிரப்பி நெல் மூட்டைகளை கொட்டிய போது பாய்லரில் அவர் தவறி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில் வந்த போலீசார் மற்றும் […]
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பண்ணையில் அடைக்கப்பட்டு இருந்த 6 ஆடுகள் காட்டு விலங்குகள் கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 6 ஆடுகளும் புளியரை பகவதி புரத்தைச் சேர்ந்த சோமன் என்பவனுக்கு சொந்தமானதாகும். ஆட்டு பண்ணை ஒன்றை உருவாக்கி அதில் 6 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை ஆட்டு தொழுவத்திற்கு சென்ற சோமன் ஆங்காங்கே ஆடுகள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆடுகள் அனைத்தும் மிருகங்கள் கடித்து இருந்ததாக கூறப்படுகிறது. […]