சீன நாட்டில் 60% மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைய வாய்ப்பிருப்பதாகவும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகலாம் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. எனவே, கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இந்நிலையில், கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட தொடங்கினர். எனவே, சீன அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனைத்தொடர்ந்து அங்கு கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிகமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், மூத்த […]
Tag: உயிரிழப்புகள்
உலக சுகாதார மையம், உலக நாடுகளில் கொரோனா தொற்று 24% குறைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில் தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பியா மற்றும் ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய 40% மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா பரவல் குறைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகளும் குறைய தொடங்கியிருக்கிறது. எனினும், ஆசியாவின் ஒரு சில இடங்களில் அதிகமாக இருக்கிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தினுடைய தலைவராக இருக்கும் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ், […]
சென்னை மாவட்டத்தில் மட்டும் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிபத்தில் சிக்கி நடப்பு ஆண்டில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் 841 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அதில் ஹெல்மெட் அணியாமல் பயணத்ததில் 80 இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் 714 இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 2021 […]
தென்னாப்பிரிக்க நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் மூன்று வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தொற்றின் தீவிரம் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கவில்லை. கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் 300 நபர்களுக்கு சராசரியாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 8,000 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனினும், அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக் […]
காற்று மாசுபாட்டால் இந்தியாவில் 10 லட்சம் பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசுபாடு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உலக அளவிலேயே இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று ஸ்டேட் ஆஃ ப் குளோபல்ஏர் அமைப்பு தெரிவித்து உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக 9,79,700 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியாவை விட சீனாவில் மட்டும் 14,24,000 பேர் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழந்துள்ளனர். இவ்வாறு […]
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் தொடர்பில் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா, படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது. எனினும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டதால், பல்வேறு நாடுகளில் கொரோனா குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். எனினும் கொரோனா தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. எனவே உலக நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 17.77 கோடி மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். […]
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக இலங்கையில் பலத்த மழை பெய்து வருவதால் களு, களனி, தெதரு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, அதிகளவு தண்ணீர் அணைகளிலிருந்து திறக்கப்பட்டதால் கொழும்பு, கம்பா, கலுட்ரா, பட்டாளம், ரத்னபுரா என பத்து மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளனது. மேலும் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 60 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2.71 லட்சம் பேர் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் உட்பட மூன்று பேர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் சற்று குறைந்துள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி திண்டுக்கல்லை சேர்ந்த 16 வயது சிறுவன் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]
டெல்லியில் தடுப்பூசி இல்லாத காரணத்தினால் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்து வந்தால் எத்தனை உயிரிழப்புகள் ஏற்படும் என்பது தெரியவில்லை என்று அவர் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: “டெல்லியில் தடுப்பூசி இல்லை என்ற காரணத்தினால் நான்கு நாட்களாக 18 முதல் 44 வயது நபருக்கு போடப்படும் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய […]
உலகத்தில் தினம்தோறும் பல்வேறு சம்பவங்கள் நடந்து மக்களை ஆட்டி படைத்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி மக்களை அச்சறுத்தி வருகிறது. இதற்கிடையே மேலும் பல சம்பவங்கள் அரங்கேறி மக்களின் உயிரைப் பறித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இதில் முக்கியமான சம்பவம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தைவானின் கிழக்கு பகுதியில் இருக்கும் சுரங்கப் பாதையில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 36ஆக அதிகரித்தது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கனடாவில் […]
தேசிய குற்ற ஆவண காப்பகம் ரயில் விபத்துகளில் சென்ற வருடம் மட்டும் 24,000 பேர் உயிரிழந்ததாக புள்ளிவிவர தகவல்களை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 27,987 ரயில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதில் 76.3 சதவீதம் ரயில் விபத்துகள் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விவரங்களை தெரியப்படுத்தியுள்ளது. அதோடு கடந்த வருடம் நடந்த இந்த ரயில் விபத்துகளில் 24,619 பேர் மரணம் அடைந்ததாகவும், அதில் 21,361 பேர் ரயில் மோதியதால் ரயிலில் இருந்து கீழே […]
சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர். மேலும், இவர்களுக்கு கொரோனா தவிர உடல்ரீதியான வேறு சில பிரச்சனைகளும் […]
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதித்த 70 வயது மருத்துவர் உள்பட 10 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பலியான கீழ்பாக்கத்தை சேர்ந்த 70 வயது மருத்துவர், மிண்ட் சாலையில் கிளினிக் நடத்தி வந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று உயிரிழந்தனர். வில்லிவாக்கத்தை சேர்ந்த 56 வயது ஆண், ஏழுகிணறை சேர்ந்த […]
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் கடந்த 24 மணி நேரத்தில் 922 பேரைக் கொன்று குவித்துள்ளது. இதனால் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,09,042 ஆக உயர்ந்துள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக சுமார் 200 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் அமெரிக்கா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அமெரிக்காவில் 19 லட்சத்து 65 ஆயிரத்து 708 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, 7 லட்சத்து 38 ஆயிரத்து 646 பேர் கொரோனாவில் […]
சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கே.எம்.சி மருத்துவமனையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபரும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 65 வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள், திருவள்ளூரை சேர்ந்த 50 […]
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தவிர்த்து பிற நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சைகளும், சுகாதார சேவைகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான சேவைகளும் சீராக இயங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் தற்போது, கொரோனவள் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3,900 […]
இந்தியாவில் மே மாத மத்தியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,000 ஆக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பெங்களுருவில் உள்ள ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி கழகம், இந்திய அறிவியல் நிறுவனம் மும்பையில் உள்ள ஐஐடி மற்றும் புனேவில் உள்ள ராணவத்திற்கான மருத்துவக்கல்லூரி ஆகியவை இணைந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்ற ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளன. இந்த தரவு இத்தாலி மற்றும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததன் விகிதாசாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், […]
ஸ்பெயின் நாட்டில் உயிரிழப்புகள் எண்ணிக்கை கடந்த 17 நாட்களாக கணிசமாக குறைந்துள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த 17 நாட்களில் மட்டும் 605 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாகவும். இது முன்பை விட குறைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. ஸ்பெயினில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் சுமார் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனாவால் 1,614,369 (16.14 லட்சம்) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் மட்டும் 96,788 ஆக உள்ளது. மேலும், இதுவரை 3,62,409 […]