தண்ணீரில் மூழ்கி மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனூர் நடுத்தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவா(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சிவா மின் மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த சிவா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
Tag: உயிர் இழப்பு
சோபாவில் இருந்து விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் பகுதியில் டிரைவரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 9 மாத ரிதனா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் ரிதனாவை வீட்டிலிருந்த சோபாவில் படுக்க வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை சோபாவில் இருந்து உருண்டு தரையில் விழுந்தாள். இதனை பார்த்த பெற்றோர் குழந்தையை மீட்டனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை […]
நாகப்பட்டினம் அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் அருகிலுள்ள நாகூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு திருமண வயதில் மகன் பொன்னியின்செல்வன் (27) உள்ளார். இவர் நாகப்பட்டினம் அடுத்துள்ள திருவாரூர் சாலையில், பெருமாள் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். அப்போது அவர் செல்லும் வழியில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதனை முந்தி செல்ல முயன்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக அங்கிருந்த பொதுமக்கள் கூறினர். இதனை […]
அண்ணா நகர் அருகே துணிகளை அயன் செய்தபோது மின்கசிவு ஏற்பட்டு பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்தின் அண்ணாநகர் 37-வது தெருவில் வசித்து வருபவர் நளினி. இவர் நேற்று முன்தினம் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அவரின் துணிகளை அயர்ன் செய்த போது அயன்பாக்ஸ்ஸில் ஏற்பட்ட மின் கசிவின் மூலம் அவர் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்து உள்ளார். இதை பார்த்த அவர் குடும்பத்தினர் நளினியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவரை […]