சமந்தாவின் பதிவு ரசிகர்களிடையே ஆறுதல் அடைய செய்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் தற்போது மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் இவர் பேட்டி ஒன்றில் பேசியபோது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நான் போராடிக் கொண்டிருக்கின்றேன். இருப்பினும் மனம் தளர மாட்டேன் என உருக்கமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசி இருந்தார். இந்த நிலையில் பாடகி சின்மையின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன், ” […]
Tag: உருக்கம்
தமிழ் சினிமாவில் 1990-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மதுபாலா. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மதுபாலா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, முன்பெல்லாம் திருமணம் ஆன நடிகைகள் நடிக்க முடியாது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. எனக்கு நடிகை ஹேம மாலினியை பார்த்து தான் நடிப்பதற்கு ஆசை வந்தது. அதன் பிறகு கே. பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியைச் சேர்ந்தவர் நடிகை ஹம்சா நந்தினி. இவர் மாடலிங் துறையில் கலக்கி வந்த நிலையில், தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அதன் பிறகு நான் ஈ மற்றும் ருத்ரமாதேவி போன்ற திரைப்படங்களில் நடிகை ஹம்சா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது முழுமையாக […]
நடிகை ரஞ்சிதாவின் கணவர் உருக்கமாக சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் ஒருவராக ரச்சிதா பங்கேற்று இருக்கின்றார். இவர் பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த போது அதில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில மாதமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலையில் நடிகர் தினேஷ் தனது இணையதள பக்கத்தில் உருக்கமான […]
எஸ்.ஜே.சூர்யா உயர்ந்த மனிதன் திரைப்படத்தை கைவிடப்பட்ட போது கதறி அழுததாக தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவை சுற்றி பொய்களால் வலை பின்னப்படுகின்றது. இதில் தான் சிக்கி இருப்பதை உணர்ந்து அதிலிருந்து அவர் எப்படி தன்னை விடுவித்துக் கொள்கின்றார். என்பது குறித்து சொல்லும் புதுமையான கதை இதுவாகும். இந்த கதை ரசிகர்களை மகிழ்விப்பதோடு இறுதியில் படம் […]
மாணவி பிரியா குறித்து ஜி.வி.பிரகாஷ் உருக்கமாக பதிவிட்டுள்ளார். சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து வீராங்கனையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை தான் உயிரிழப்பிற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றார்கள். இதனால் பொதுமக்களும் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என […]
திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வேன் என நடிகை திவ்யா கூறியுள்ளார். கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வருகின்றார்கள். தனது கணவர் கர்ப்பிணியான என்னை அடித்து […]
நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா குறித்து உருக்கமாக பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பி இருக்கின்றார். இவர் தற்பொழுது வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் நானே வருவேன் திரைப்படம் இம்மாதம் 30-ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் தனுஷ்-செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பிறகு […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன்தான். ஆரம்பத்தில் இவரின் படங்கள் ஹிட் கொடுக்காத நிலையில் அடுத்தடுத்த இவரின் நடிப்பில் வெளியான பல படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.பின்னர் இவரின் திரைப்படங்கள் ஹிட் ஆகாத காரணத்தால் நடிப்பில் இருந்து ஒதுங்கி தயாரிப்பு பணிகளில் ஈடுபட […]
கவிஞர் கபிலனின் மகள் தூரிகை இறப்பிற்கு இயக்குனர் வசந்தபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை நேற்று முன்தினம் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்செய்தியானது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தூரிகை, பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் இயக்குனர் வசந்தபாலன் தனது இணையபக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, […]
தூரிகை இறப்பிற்கு சீமான் உருக்கமான பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல பாடலாசிரியரான கபிலன் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் திரையுலக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை நேற்று முன்தினம் இரவு சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் இருக்கும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். இதுகுறித்து […]
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் புறக்கணிக்கப்பட்டது பற்றி உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் பாடகர் தெருக்குறல் அறிவு. 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்ற 28ஆம் தேதி மகாபலிபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரி கிராமத்தில் தொடங்கியுள்ளது. இது வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியில் பங்கேற்க 186 நாடுகளில் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். […]
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர் பொன்னம்பலம். கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான கலியுகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் இவர் நடித்த வில்லன் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் பிரபல நடிகர் பொன்னம்பலம் வலது காலில் இரு விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு வீட்டில் ஓய்வெடுக்கும் கேப்டன் விஜயகாந்தை, இன்னும் நான் பார்க்கவில்லை. அவரை பார்த்தால் செத்துவிடுவேன் என்று […]
சினிமா துறையில் தனக்கு யாரும் இல்லை எனவும் தான் ஒரு அனாதை எனவும் நடிகர் பார்த்திபன் உருக்கமாக பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகின் பிரபல நட்சத்திரமான பார்த்திபன் அவரே இயக்கி நடித்து வருகின்ற திரைப்படம் இரவின் நிழல். இத்திரைப்படம் புதிய சாதனை படைத்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் பார்த்திபன் பல சோதனை படங்களை எடுத்து சாதனை படங்களாக்கி வருகின்றார். இவர் ஒத்த செருப்பு திரைப்படத்தை கையிலெடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவர் தற்போது இரவின் நிழல் […]
தமிழ் சினிமாவில் அழியாத கோலம் படம் அறிமுகமானவர் பிரதாப் போத்தன்(70). இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இந்தநிலையில் நேற்று சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடியில் குடியிருப்பில் இறந்துவிட்டார். கடந்த சில நாட்களாகவே பிரதாப் போத்தன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழ் […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளிடையே கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, ரோலேக்ஸ் […]
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழாவில் கலந்துகொண்டனர். இதில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் தந்தை பெரியார் விருப்பப்படி திராவிடர் கழகத்தால் கலைஞருக்கு சிலை வைக்கப்பட்டது. அது சிலரால் கடப்பாறையை கொண்டு […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. கடந்த சில வாரங்களாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி விசாரணை முடிவு பெற்றது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளனுக்கு சாதகமாகவும், இதில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை உச்ச நீதிமன்றம் முன் வைத்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனுக்கு மருத்துவ படிக்க சென்ற ஏராளமான இந்திய மாணவர்கள் தூதரகத்தின் உதவியால் இந்தியாவிற்கு திரும்பி வருகின்றனர். இந்தநிலையில் இன்று தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் விமானம் மூலம் தூத்துக்குடி வந்து சேர்ந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதா (21), தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சேர்ந்த சிவ சுந்தரபாண்டியன் (22), மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த ஹரினி […]
டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ள கோலி, இந்திய கிரிக்கெட் அணியை முன்னெடுத்து செல்ல தன்னை கண்டெடுத்தது தோனி என்று கூறி உருக்கத்துடன் நன்றி கூறியுள்ளார். தனது ரசிகர்கள், ரவி சாஸ்திரி மற்றும் பிசிசிஐ-க்கும் நன்றி தெரிவித்த அவர், டெஸ்ட் கேப்டனாக சந்தித்த தாழ்வுகளிலும், நம்பிக்கையையும், முயற்சியையும் ஒருபோதும் குறைத்ததில்லை என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் தாமரை செல்வி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவராவார். 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த தாமரை செல்வி, கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பைனல்ஸ் லிஸ்டில் கண்டிப்பாக இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட தாமரைச்செல்வி வெளியேற்றப்பட்டது பெரும்பாலான ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை செல்வி லைவ் வீடியோவில் பேசியுள்ளார். அதில் தான் இறுதி வரை செல்லாமல் […]
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், நயன்தாரா, விவேக், அனிகா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.இதையடுத்து டைரக்டர் சிறுத்தை சிவா #Viswasam என்கிற ஹேஷ்டேகுடன் அந்த படம் பற்றி ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி விஸ்வாசம் படம் […]
கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நாடுமுழுவதும் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கள்ளக்காதல் மற்றும் அதனால் ஏற்படும் கொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழமை வாய்ந்த நம் கலாசாரத்தில் காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டு தற்போது மேற்கத்திய கலாசாரம் பல தரப்பினரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இதன் காரணமாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு சில சமூக அக்கறையற்ற சக்திகளால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தன் குழந்தையுடன் வேறொரு நபருடன் சென்றுவிட்ட மனைவியை கண்டுபிடித்து தருபவருக்கு 5,000 ரூபாய் […]
யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று ஒரு தந்தையாக நான் கேட்டுக்கொள்கிறேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் என் அன்பான வணக்கம். சமீப காலமாக நாம் அதிகம் கேள்விப்படும் செய்தி ஒன்று என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும், அதனைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வது என செய்திகள் ஒவ்வொன்றையும் கேள்விப்படும்போது உண்மையை […]
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்த செய்ததாக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். கோவையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த பிளஸ் டூ மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதனால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் தனியார் பள்ளியின் ஆசிரியர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு அமைப்புகள் சார்பாக போராட்டம் நடைபெற்று வந்ததை அடுத்து பள்ளியின் முதல்வர் மீதும் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை […]
கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி தனியார் பள்ளி ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், ரீத்தா ஓட தாத்தா , எலிசா சாரோட அப்பா, இந்த சார்…. யாரையும் விட கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.அவர் குறிப்பிட்டுள்ள நபர்களின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை […]
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி பிறந்தநாளை முன்னிட்டு அவரது நெருங்கிய நண்பரான கமலஹாசன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் கமலஹாசன் தனது நெருங்கிய நண்பரும், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் நண்பருக்காக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் […]
இயேசு நாதர் சிலுவையைச் சுமந்து போல நான் விராலிமலையை சுமந்து வருகிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
13 வருடம் கழித்து தி நகருக்குச் சென்ற வசந்தபாலன் மனதில் ஏற்பட்ட உணர்வுகளை பகிர்ந்துள்ளார். பிரபல இயக்குனர் வசந்தபாலனின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடித்தெரு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. தி நகரில் உள்ள கடைகளில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்டும் படமாக இது இருந்தது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய வசந்தபாலன் தற்போது இயக்கும் புதிய படத்திற்காக ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்காக 13 வருடம் கழித்து தி […]
எஸ்.பி.பி. மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். சினிமா திரையுலகையும் தாண்டி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பின்னணி பாடகரான எஸ்.பி.பி பாலசுப்ரமணியத்திற்கும் இடையே நெருங்கிய நட்புறவு உண்டு. தமிழ் சினிமா திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்களை இவர்கள் இணைந்து பாடியுள்ளனர். சமிபத்தில் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது “பாலு சீக்கிரம் எழுந்து வா” என இளையராஜா காணொளி மூலம் தனது வருத்தத்தை வெளியிட்டார். எஸ்.பி.பி மீண்டு வரவேண்டும் என்று அவருக்காக பல பிரார்த்தனையும் […]