உருமாறிய கொரோனா பரவல் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என CM ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 வகை தொற்று குஜராத்தில் மூவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் மிரட்டும் புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவுவது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என்றும் […]
Tag: உருமாறிய கொரோனா
கொரோனா தடுப்பூசி போடாதவர்களால் தான் உருமாறிய கொரோனா பரவுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனையானது நேற்றைய நிலவரப்படி, 31,536 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. அதில் 52 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் அதிகரித்து வரும் கொரோனவால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசிகளை செலுத்த […]
தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல நாடுகளும் தென்ஆப்பிரிக்காவுடனான விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி குறித்து மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதில் “ஓமிக்ரான்” என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் […]
தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல நாடுகளும் தென்ஆப்பிரிக்காவுடனான விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி குறித்து மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதில் “ஓமிக்ரான்” என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலைக்கு காரணம் டெல்டா, டெல்டா […]
உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு காப்பா, டெல்டா என புதிய பெயர்களை சூட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா என பல நாடுகளிலும் உருமாறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்தந்த நாட்டின் பெயரால் இந்த வைரஸ்களை அழைப்பதற்கு ஆட்சேபங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் இத்தகைய வைரஸ்களுக்கு புதிய பெயர்களை சூட்டியுள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம் உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப குழுவின் தலைவர் […]
சுவிட்சர்லாந்து, தனிமைப்படுத்துதல் பட்டியலில் தற்போது பிரிட்டன் நாட்டையும் சேர்த்திருப்பதாக அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து அரசு, நேற்று மாலை ஆறு மணியிலிருந்து, பிரிட்டன் மக்கள் தங்கள் நாட்டிற்கு வந்தால் சுமார் பத்து தினங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. அதாவது தற்போது உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவிவருவதால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டன் மக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாக செலுத்தி கொண்டிருந்தாலும் கூட, கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 18 மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகம் பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]
வௌவாலின் உடலிலிருந்து உருமாறிய கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவ தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. இதனால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பான ஆய்வை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளஸ்கோ பல்கலைக்கழகம் செய்தது. அந்த […]
பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 187 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல முடியாத வகையில் போக்குவரத்து சேவை அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் நாட்டின் […]
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய 4 பேருக்கும் உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களை மத்திய அரசு தனிமை படுத்தியுள்ளது மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த விமான பயணிகளில் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 187 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியாகியுள்ளது.
கொரோனாவால் ஏற்கனவே பாதிப்படைந்து குணமடைந்தவர்களை புதிய கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் மற்றும் தென்ஆப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. எனவே பிரிட்டனில் மூன்றாம் கட்ட ஊரடங்கு முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோன்று விதிமுறைகளை ஐரோப்பிய நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் […]
ஜெர்மன் அதிகாரிகள் உருமாறிய கொரோனா தொற்று அதிக அளவில் பரவும் தன்மை வாய்ந்தது என்று நிரூபித்துள்ளனர். தற்போது உலகை நடுங்க வைத்து கொண்டிருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த தொற்றுநோய்கான ராபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவர் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் பிரிட்டன், டென்மார்க் ,நெதர்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றுக்கான முடிவுகளை ஆய்வு செய்ததில் இந்த கொரானா வைரஸ் பழைய […]
உருமாறிய கொரோனா மற்ற நாடுகளிலும் வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து புதிதாக உருமாறிய கொரோனா பிரிட்டனில் இருந்து மற்ற நாடுகளுக்கும் பரவி வருகின்றது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் பிரிட்டனுடனான தங்களுடைய விமான போக்குவரத்தை தடை செய்தது. இந்நிலையில் புதிய வகை உருமாறிய கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிதல் உள்ளிட்ட […]
கொரோனா உருமாறிக்கொண்டே தான் இருக்கும் என அமெரிக்க மருத்துவதுறை தலைவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்துள்ள நிலையில் கொரோனவை கட்டுப்படுத்துவதற்காக ஒருசில நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் மருத்துவ துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் விவேக் மூர்த்தி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் முறையை குறித்து கூறியுள்ளார். அதில், கொரோனா மேலும் மேலும் உருமாறிக் கொண்டே தான் இருக்கும். அது எப்படி உரு […]
உருமாறிய கொரோனா முந்தைய கொரோனாவை விட ஆபத்தானது என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் புதிய உருமாறிய கொரோனாவும் பரவியுள்ளது. இது முந்தைய கொரோனாவை விட ஆபத்து என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் வேகமாக பரவும் தன்மையுள்ள இந்த உருமாறிய கொரோனா அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி மருத்துவ விஞ்ஞானிகள் உருமாறிய கொரோனா குறித்த ஆராய்ச்சியில், புதிய […]
இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் தற்போது வரை மொத்தம் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதார மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்த அறிக்கையில், நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 நள்ளிரவு வரை சுமார் 33,000 பயணிகள் பிரிட்டனிலிருந்து பல்வேறு இந்திய விமான நிலையங்களில் இறங்கினர். இந்த பயணிகள் அனைவரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் […]
இந்தியாவில் தற்போது வரை உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது. […]
இந்தியாவில் தற்போது வரை உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது. […]
இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளத. கடந்த வருடம் டிசம்பர் மாதம் உருவான கொரோனா உலக நாடுகள் முழுவதிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏராளமான நடவடிக்கைகள் எடுத்து தற்போது பாதிப்பின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில் பிரிட்டனில் இருந்து புதிதாக உருமாறிய கொரோனா இந்தியாவிற்கு வந்தவர்கள் மூலம் பரவியுள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த 53 பேருக்கு புதிய தொற்று உறுதி செய்யப்பட்ட […]
உருமாறிய கொரோனா இந்தியாவிலும் தமிழகத்திலும் அதிகமாக பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்கள் கொரோனாவில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனா முந்தைய வைரசை விட வீரியம் மிக்கதாக இருப்பதாகவும், வேகமாக பரவி வருவதாகவும் தகவல் கூறப்படுகின்றது. மேலும் இந்த உருமாறிய கொரோனா ப்ரிட்டனிலிருந்து வந்தவர்களால் இந்தியாவிலும் தற்போது பரவத் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து இந்தியாவில் உருமாறிய கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 லிருந்து 58 […]
இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் மொத்தம் ஆறு இடங்களில் உருமாறிய கொரோனா மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் இரண்டு இடங்களிலும், கல்கத்தாவில் ஒரு இடத்திலும், புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் என 6 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நிலையில் நேற்றைய தினம் வெறும் 38 ஆக இருந்த உருமாறிய கொரோனா எண்ணிக்கை தற்போது 58 ஆக மாறி இருக்கிறது. இதில் ஒரே நாளில் புனேவில் மேற்கொள்ளப்பட்ட […]
உலகம் முழுவதும் நான்கு வகையான கொரோனா வைரஸ் உருமாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா […]
புதுவகை கொரோனாவால் இந்தியாவில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவில் இருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது புதியதாக வீரியமிக்க உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் வீரியமிக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்த வகை கொரோனா முந்தைய கொரோனாவை விட வேகமாக பரவும் என்றும், வீரியமிக்கதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த புது வகைக் கொரோனா பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையங்களில் வைத்து […]
இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் […]
இறந்த நோயாளி ஒருவரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் இருந்துள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனை ஆட்டிப் படைத்து வரும் புதிய கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் மாதம் முதலே ஜெர்மனியிலும் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த நோயாளி ஒருவரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்புதிய கொரனோ வைரஸ் குறித்து மாநில சுகாதார அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த […]
தமிழகத்திலும் உருமாறிய கொரோனா பரவியுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிலிருந்தே உலகம் இன்னும் மீளாத நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து அங்கிருந்து வந்தவர்களின் மூலமாக கேரளா, இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவி வருகின்றது. தற்போது தமிழகத்திலும் ஒருவருக்கு ஒரு மாறிய வீரியம் மிக்க கொரோனா உறுதியாகியுள்ளது. இவர் பிரிட்டனில் இருந்து வந்தவர் ஆவார். அந்த நபருக்கு வீரியமிக்க கொரோனா உறுதி செய்யப்பட்ட பிறகு,அவருக்கு தனி அறையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. […]
உருமாறிய கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகமாக பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் இன்னும் முடிவடையாத நிலையில் இங்கிலாந்தில் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் ஒன்று பரவ வேகமாக பரவுவதக்கவும், அது முந்தைய வைரஸை விட வீரியம் அதிகமானது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு மண்டலத்தை விரைவாகவும், அதிக சக்தியுடன் தாக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குமட்டல், வாசனை இல்லாமல் போதல், காய்ச்சல், வலி […]
உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா சிங்கப்பூருக்கு பரவியுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கொரோனாவிலிருந்து மாறுபட்ட புதிய வகை கொரோனா பரவி வருகிறது, இதனால் உயிர்பலி ஏற்படும் அபாயம் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினாலும் முந்தைய கொரோனா வைரஸை விட இது 70% அதிகம் பரவக்கூடியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் எதிராளியின் காரணமாக பல்வேறு நாடுகள் பிரிட்டனுக்கு விமான சேவையை ரத்து செய்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் […]