உலக மக்கள் தரமற்ற காற்றை சுவாசிக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகில் 99 விழுக்காடு மக்கள் தரமற்ற காற்றை சுவாசிக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காற்றின் துகள்கள் நுரையீரலுக்குள் ஆழமாக ஊடுருவி சென்று நரம்புகள் மற்றும் தமனி களுக்குள் நுழைந்து நோயை உண்டாக்குகிறது. மேலும் கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் காற்றின் தரமானது மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் […]
Tag: உலகசெய்திகள்
சூரிய புயல் பூமியைத் தாக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரிய புயல் இன்று பூமியை 17 வகை ஒளி சிதறல்களுடன் தாக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் இன்று முதல் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என்றும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு செயற்கை கோள்கள் செயலிழந்தும் காணப்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பூமியின் மீது லேசான சூரியப் புயல்கள் உருவாகலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சூரியனில் ஏற்படும் மாற்றங்களை நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக […]
ப்ளூ நைல் நதியில் படகு மூழ்கிய விபத்தில் 13 பெண்கள் உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் தென் கிழக்கு மாகாணத்தில் சென்னார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ப்ளூ நைல் என்ற நதி உள்ளது. இந்த நிலையில் தோட்ட வேலைக்கு சென்ற 29 பெண்கள் நைல் நதியில் படகில் பயணித்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் படகு திடீரென்று நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் படகை […]
ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். குறிப்பாக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க் உலகின் முதல் நிலை பணக்காரராக இருந்து வருகிறார். மேலும் இந்த உலகம் முழுவதும் டெஸ்லா மின்னணு காருக்கு பிரத்யேக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை இவர் தன்வசப்படுத்தியுள்ளார். இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் 7.3 கோடி பங்குகள் எலான் […]
அமெரிக்காவில் வானிலை மற்றும் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டில் கடந்த ஒரு வாரமாக மோசமான வானிலை காரணத்தால் 3300க்கும் மேலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விமானங்களை கண்காணிக்கும் இணையதளம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது “புளோரிடா, போர்ட் லாடர்டேல் மற்றும் ஆர்லண்டோ போன்ற இடங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது. மேலும் புளோரிடாவில் புயல் வீசியதால் விமான சேவை கடும் பாதிப்பிற்குள்ளனது” என்று […]
படகு கவிழ்ந்த விபத்தில் 90 அகதிகள் உயிரிழந்துள்ளனர். லிபியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடி 100க்கும் மேற்பட்டவர்கள் படகில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் படகு நடுகடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தண்ணிரில் தத்தளித்து கொண்டிருந்த 4 பேரை பிரான்ஸ் நாட்டு சர்வதேச கடல் எல்லையில் எண்ணெய் கப்பல் மீட்டுள்ளது. மேலும் மற்றவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி […]
உறை பனியில் இருந்து திராட்சை கொடிகளை பாதுகாக்க விவசாயிகள் புதிய யுக்தியை கையாளுகின்றனர். பிரான்ஸ் நாட்டில் சாப்ளிஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் திராட்சைக் கொடிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளன. இந்நிலையில் ஒயின் தயாரிப்புக்கு பெயர் பெற்ற பிரான்சில் நாட்டில் நிலவும் உறை பனியால் திராட்சை சாகுபடி வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை அடுத்து பனியில் திராட்சைக் கொடி உறையாமலிருக்க விவசாயிகள் செடிகளை சுற்றி தீப்பந்தங்கள் ஏற்றி வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் உறைபனியில் இருந்து திராட்சை பயிர் கெடாமல் […]
கலிபோர்னியாவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ரமென்டோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் செய்தியாளரிடம் கூறியதாவது “சாக்ரமெண்டோ நகரில் 10வது ஜெ ஸ்ட்ரீட்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு […]
உக்ரைனில் கை கால்கள் கட்டப்பட்டு பின்னந்தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் புச்சா, ஹாஸ்டோமல், இர்பின் போன்ற நகரங்கள் அமைந்துள்ளது. இந்த நகரங்கள் ரஷ்ய ராணுவ படைகளால் கைப்பற்றப்பட்டு பின்னர் உக்ரைனிய ராணுவ படைகளால் மீட்கப்பட்டது. இதனை அடுத்து ரஷ்ய ராணுவ படைகள் இந்த நகரங்களில் இருந்து வெளியேறிய பிறகு அங்குள்ள பொது மக்களின் சடலங்கள் கை கால்கள் கட்டப்பட்டு பின்னந்தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் புதைகுழிகளில் இருந்ததாக அந்நாட்டு அதிபரின் உதவியாளர் நிக்கிஃபோரோவ் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பலர் உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ரமென்டோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்திருப்பதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் செய்தியாளரிடம் கூறியதாவது “சாக்ரமெண்டோ நகரில் […]
தெற்கு பிலிப்பைன்ஸில் திடீரென ரிக்டர் அளவுகோலில் 5. 8 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தெற்கு பிலிப்பைன்சில் உள்ள சூரிகாவோ டெல் சுர் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இன்று அந்நாட்டின் நேரப்படி மாலை 6.24 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பயாபஸ் நகரில் இருந்து வடகிழக்கில் 75 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் தரைப்பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் […]
ப்ளூ அர்ஜுன் நிறுவனத்தின் ராக்கெட் நான்காவது முறையாக விண்வெளி சுற்று பயணத்தை மேற்கொண்டது. அமேசான் முன்னாள் நிறுவனர் ஜெப் பெசாஸின் ப்ளூ அர்ஜுன் நிறுவனத்தின் ராக்கெட் நான்காவது முறையாக 6 பேர் கொண்ட குழுவுடன் விண்வெளி சுற்று பயணத்தை மேற்கொண்டது. இந்நிலையில் ப்ளூ அர்ஜுன் நிறுவனத்தின் தலைமை ராக்கெட் வடிவமைப்பாளர் உள்பட 6 பேர் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இந்த ராக்கெட் மேற்கு டெக்ஸாஸில் உள்ள வான் ஹார்ன் ஏவுதளத்தில் வைத்து ராக்கெட் ஏவப்பட்டது. […]
அமெரிக்காவில் மூன்று மாகாணங்களில் சூறாவளி காற்று மற்றும் கன மழை பெய்து வருகின்றது. அமெரிக்கா நாட்டில் மிஸ்சஸ்சபி, புளோரிடா, கான்சாஸ் போன்ற மாகாணங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் இந்த மாகாணத்தில் தற்போது சூறாவளி காற்று மற்றும் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கான்சாஸ் மாகாணத்தில் விழுந்த மின்னல் பயங்கர வெளிச்சத்துடன் மீண்டும் மீண்டும் எழும்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து உயரமான கட்டிடத்தில் மின் காந்த கம்பியின் மீது உரசி மீண்டும் மேகங்களில் மின்னல் ஊடுருவி வருகின்றன. மேலும் பாதசாரி ஒருவர் […]
நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளம்பெண்ணின் காதில் நண்டு புகுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கரீபியன் தீவுகளில் puerto Rico என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் இளம்பெண் ஒருவர் கடலில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது காதில் சிறிய அளவிலுள்ள நண்டு ஒன்று எதிர்பாராத நேரத்தில் புகுந்தது. இதனால் அந்த பெண் வலியில் அலறி துடித்துள்ளார். இதனை கண்டு அருகிலிருந்த ஒருவர் இடுக்கி போன்ற சிறிய கருவியின் மூலம் காதில் புகுந்த நண்டை சுலபமாக […]
தனது உரிமையாளரை விட்டு பிரிந்த குரங்கு குட்டி வனவிலங்கு பூங்காவில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈக்குவடார் நாட்டில் ஆனா பியட்ரிஸ் என்ற பெண் 18 வருடங்களுக்கு முன் ஒரு மாத குரங்கு குட்டியை வனத்திலிருந்து எடுத்து வந்து ஈஸ்ட்ரெலிட்டா என பெயர் சூட்டி வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வன விலங்குகளை வீட்டில் வளர்ப்பது சட்டவிரோத செயல் எனக் கூறி அதிகாரிகள் அங்கிருந்த குரங்கு குட்டியை விலங்குகள் பூங்காவிற்கு எடுத்து சென்றனர். […]
பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளனத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பேருந்து ஒன்று 30 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு மலை பாதையில் தொழிற்சாலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் படுக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து […]
நியூ கலிடோனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள பிரான்சின் நாட்டில் நியூ கலிடோனியா என்ற தீவு அமைந்துள்ளது. இந்தத் தீவில் நேற்று அதிகாலையில் அந்நாட்டு நேரப்படி 2.27 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இதனால் பிஜி மற்றும் கலிடோனியாவில் கடற்கரையில் அலை […]
பென்குயின் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தென் ஆப்பிரிக்கா நாட்டில் பென்குயின் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை அடுத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பென் குயின்கள் இருந்த நிலையில் இப்பொழுது 10 ஆயிரம் ஜோடிகள் மட்டுமே உள்ளன. இதனை தொடர்ந்து இங்குள்ள மீனவர்கள் அதிக அளவில் மத்தி மற்றும் நெத்திலி மீன்களை பிடிப்பதால் பென் குயின்களுக்கு […]
மெக்டொனால்டு உணவகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டில் ஸ்வோல் என்ற நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் மெக்டொனால்டு என்ற உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்த உணகத்தில் வாடிக்கையாளர்களை போல் இரண்டு பேர் நுழைந்து உணவை ஆர்டர் செய்து விட்டு மேசையில் அமர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் எதிர்புறத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த இருவரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த தாக்குதலில் […]
ஆய்வு பணி மேற்கொண்டு இருந்த ஐக்கிய நாடுகளின் ஹெலிகாப்டரை போராளிகள் குழுவினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். காங்கோ நாட்டு ராணுவத்தினருக்கும் மார்ச் 23 இயக்க போராளிகளுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வடக்கு கிவ் மாகாணத்தில் வைத்து கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலினால் ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இதனை அடுத்து மோதல் ஏற்பட்ட இடங்களில் ஐக்கிய நாடுகளின் ஹெலிகாப்டர் ஆய்வு பணி நடத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் மார்ச் 23 இயக்கத்தினர் ஐக்கிய நாடுகளின் […]
டாங்க் என்ற மாவட்டத்தில் பாதுகாப்பு தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் டாங்க் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றவர்களை […]
வியட்நாமை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகனுக்காக ஆயிரக்கணக்கான டாலர்களும், பல மணி நேரமும் செலவிட்டு பீரங்கி ஒன்று வடிவமைத்துள்ளார். வியட்நாமை சேர்ந்த ஒருவர் தனது செல்ல மகனுக்காக பழைய வேன் ஒன்றின் புறத்தோற்றத்தை மாற்றி பீரங்கி போல் வடிவமைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வேன் மேற்புறத்தில் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் ஆகியவற்றை அகற்றிவிட்டு மரப் பலகைகளை வைத்து பீரங்கி ஒன்றை தயார் செய்துள்ளார். மேலும் இந்த வேன் பிரங்கி செய்ய ஆயிரக்கணக்கான டாலர்களும், பல […]
கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்காக ஷாங்காய் நகரம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சீனா நாட்டில் ஷாங்காய் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் வணிக மையமாக விளங்கும் ஷாங்காயில் சுமார் 2 கோடியே 60 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரில் கொரோனா தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த நகரில் நேற்றைய நிலவரப்படி சுமார் 6 ஆயிரம் பேருக்கு […]
தொடர் கனமழையினால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர். ஆஸ்திரேலியா நாட்டில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் லிஸ்மோர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கொட்டி தீர்த்த கன மழையால் அங்கே உள்ள ஆற்றங்கரை உடைந்து சாலைகளிலும் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பாக முகாம்களில் தங்கி உள்ளனர். இந்த மாதத் தொடக்கத்தில் அப்பகுதியில் வெள்ளம் அதிகமாக […]
ரஷ்யா மற்றும் சீனா நாட்டின் வெளியுறவு துறை மந்திரிகள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அன்ஹுய் மகாணத்தில் ஆப்கானிஸ்தான் குறித்து பேச சீனா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரஷ்யா வெளியுறவு துறை அமைச்சர் உட்பட பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்றுயுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போருக்குப்பின் முதல்முறையாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லவ்ரோவ்-வும் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் இ-யும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த கூட்டத்தில் வைத்து ரஷ்யாவும் சீனாவும் தங்களுக்கு […]
நியூ கலிடோனியாவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூ கலிடோனியா தீவில் டானில் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.0ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து அந்தப் பகுதியில் அடுத்தடுத்த நில அதிர்வுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் சேதம் மற்றும் […]
இந்திய நாட்டில் கொரோனா மூன்றாவது அலை முடிவுக்கு வந்ததாக அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்தியா நாட்டில் கொரோனா தொற்றின் 3-வது அலையானது முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. இதனால் அமெரிக்கா இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வது ஆபத்து கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு முன் தடுப்பூசி போடப்பட்டிருப்பதையும் கொரோனா தடுப்பூசிகளை புதுப்பித்த நிலையில் […]
செக் குடியரசு நாட்டின் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செக் குடியரசு நாட்டின் பிரதமரான பீட்டர் பியலாவுக்கு வயது 57 ஆகும் . இந்நிலையில் இவர் நேற்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் தனது வீட்டில் 7 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக கூறினார். இது குறித்து இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “குறைந்தபட்சம் வீட்டில் இருந்தபடி எனது பணிக்கு திரும்ப விரும்புகிறேன் […]
பெல்ஜியம் நாட்டில் ஏப்ரல் மாதம் 6, 7 தேதிகளில் நோட்டோ மாநாட்டில் பங்கேற்க உக்ரைன் நாட்டிற்கு அழைப்பு வந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் பெல்ஜியம் நாட்டில் பிரசெல்ஸில் வைத்து ஏப்ரல் மாதம் 6,7ம் தேதிகளில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் ஜார்ஜியா, பின்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு போன்ற நாடுகள் (வட அட்லாண்டிக் ஒப்பந்த […]
அடையாளம் தெரியாத தனி நபர் ஒருவர் பொதுமக்களின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் பினெய் ப்ராக் எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தனிநபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்குள்ள மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனை […]
திடீரென பனிப்புயல் விசியதால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் பென்சில்வேனியா என்ற பகுதியில் நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் நேற்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விசிய பனி புயலால் சாலையில் சென்ற கார்கள், லாரிகள் மற்றும் டிராக்டர்கள் உள்ளிட்ட 50 முதல் 60 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டது. இதில் சில வாகனங்கள் மட்டும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த […]
மினசோட்டா பகுதியில் ஏராளமான பனி வாத்துக்கள் கடல் அலைகளைப் போன்று மேலும் கீழுமாக பறந்து பார்வையாளர்களை கவர்ந்தது. அமெரிக்கா நாட்டின் மினசோட்டா மாகாணத்தின் விட்டன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பனி வாத்துக்கள் நீர்நிலைகளுக்கு மேல் கூட்டம் கூட்டமாக பறந்தன. இது கடல் அலைகள் போன்று மேலும் கீழுமாக பறந்து பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த பனி வாத்துக்கள் குளிர் நிறைந்த பிரதேசங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வர தொடங்கியுள்ளது. இது வசந்தகாலம் தொடங்கிவிட்டது என்பதை […]
விதியில் கொட்டிக்கிடக்கும் பனிக்கட்டிகளால் வாகனங்கள் பிரேக் பிடிக்காமல் தனது கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளானது. அமெரிக்கா நாட்டில் பென்சிலிவேனியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிப்புயல் வீசுகின்றது. மேலும் வீதிகளில் கொட்டிக்கிடக்கும் பனிக்கட்டிகளால் வாகனங்கள் பிரேக் பிடிக்காமல் தனது கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளனது. இந்த விபத்தினால் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
கடல் பரப்பில் மிதந்து கொண்டிருந்த கண்ணிவெடிகளை ருமேனியா கடற்படையினர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர். உக்ரேன் ராணுவப் படையினரால் ரஷ்ய போர்க் கப்பல்களை தகர்ப்பதற்காக கருங்கடலில் கண்ணிவெடிகள் மிதக்க விட்டுள்ளனர். இந்த கண்ணி வெடிகள் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு ருமேனியா நாட்டை அடைந்துள்ளது. இந்நிலையில் கரையில் இருந்து 72 கிலோ மீட்டர் தொலைவில் மிதந்து கொண்டிருந்த இந்த கண்ணி வெடிகளை மீனவர் ஒருவர் கவனித்து ருமேனியா கடல் படையினருக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து இந்த கண்ணி வெடிகளை […]
கிழக்கு உக்ரைனுக்கு ரஷ்யா தனது தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படையை அனுப்பியுள்ளது என்று பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ரஷ்யா நாட்டின் பின்னடைவைத் தொடர்ந்து அமைப்பின் மூத்த தலைவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிப்படையினர் போரில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாவது “ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு நெருக்கமானவர் என்று பெயர் பெற்ற வாக்னர் குழுவும் இதன் கூலிப்படையினரும் மாலி, […]
அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் வடக்கு அந்தமானில் உள்ள திக்லிபூரில் இருந்து 147 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சிறிய ரக விமானம் சூப்பர் மார்க்கெட்டில் மீது விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ நாட்டில் அகாபுல்கோ நகரிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் ஓட்டுனர் உள்பட 4 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த விமானம் திடீரென்று மத்திய மெக்சிகோவின் டெமிக்ஸ்கோ என்ற பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மற்றவர்கள் […]
ரஷ்யா நாட்டின் நிபந்தனையை ஜி 7 நாடுகள் நிராகரித்துள்ளது. ரஷ்யாவுடன் நட்பில் இல்லாத நாடுகள் இயற்கை எரிவாயுவிற்கு பணம் செலுத்த வேண்டுமெனில் ரஷ்யா நாணயமான ரூபிளில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்தார். மேலும் இது குறித்து ஜெர்மனியின் எரிசக்தி துறை அமைச்சர் ராபர்ட் ஹேபெக் “பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் கனடா போன்ற நாடுகளின் அதிகாரிகளிடம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு விவாதித்துள்ளனர். அதன் பின் […]
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குள் நடந்த தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். மெக்சிகோ நாட்டின் போதை பொருள் கடத்தல், எரிபொருள் திருடுதல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போதைப்பொருள் கும்பல்களுக்குள் அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த போதைப் பொருள் கும்பலில் தொடர்புடையவர்கள் 3.4 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் குற்றவாளியாகவும் உள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த […]
வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா என்ற மாகாணத்தில் மர்டன் மாவட்டத்திலிருந்து கால்கொட் நகருக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் இந்த வேன் உப்பர் டீர் மாவட்டத்தில் உள்ள மலை பகுதியில் உள்ள செங்குத்தான வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்தவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே […]
பயங்கரவாதிகள் இருவரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இஸ்ரேல் நாட்டில் தலைநகரான டெல் அருகே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் மற்றும் அரேபிய அமைச்சர்கள் சேர்ந்து கூட்டம் ஒன்றில் பங்கேற்றனர். இந்நிலையில் கூட்டம் நடந்து கொண்டிருந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது திறந்தவெளியில் துப்பாக்கியுடன் வந்த இருவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த இருவரை சுட்டு விட்டு தப்பிக்க முயன்றுள்ளனர். மேலும் அந்த சமயத்தில் போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில் இரு தீவிரவாதிகள் […]
பாங் காபி நகரையும் மின்புரி நகரையும் இணைக்கும் வகையில் கால்வாயில் மின்சார படகு இயக்கப்படுகின்றன. தாய்லாந்து நாட்டில் பாங்காங் என்ற இடத்தில் கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் 11 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த கால்வாயில் பாங் காபி நகரையும் மின்புரி நகரையும் இணைக்க மின்சார படகுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்த மின்சார படகில் இலவசமாக பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மின்சார படகுகளின் […]
ஆப்கான் நாட்டில் பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் முடப்பட்டதை கண்டிக்கும் வகையில் ஆசிரியர்களும் மாணவிகளும் பேரணியாக சென்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரத்தில் மீண்டும் தலிபான்கள் மூட உத்தரவிட்டுள்ளனர். இதனை கண்டித்து மாணவிகளும் ஆசிரியர்களும் பேரணியாக சென்றுள்ளனர். மேலும் அங்கு 12 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை மட்டுமே பள்ளிக்கு செல்ல அனுமதித்த தலிபான்களை கண்டித்து உலக அளவில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இதனை அடுத்து பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு […]
மக்கள் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தியுள்ளனர். இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உணவு, மருந்து, பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளதால் இலங்கை அரசை கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் அந்நாட்டின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜனநாயக அரசை அகற்றிவிட்டு தலிபான்கள் தலைமையிலான புதிய அரசு நியமிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனநாயக அரசை முழுவதுமாக அகற்றிவிட்டு தலிபான்கள் தலைமையிலான புதிய அரசு நியமிக்கப்பட்டது. இந்த புதிய அரசை உலக நாடுகள் எதுவும் ஏற்கவில்லை. மேலும் ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து வரும் நிதியை நிறுத்தியதோடு வெளிநாடுகளில் உள்ள அந்நாட்டுக்கு சொந்தமான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் ஆப்கானிஸ்தான் கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள […]
அமெரிக்கா நாடு உக்ரைனின் பாதுகாப்பிற்கு 100 மில்லியன் டாலர்களை வழங்குகிறது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. உக்ரேனின் தலைநகரான கீவ் மற்றும் மரியுபோல் போன்ற பல இடங்களில் கட்டிடங்கள் எலும்புக்கூடுகளை போல் காட்சி அளிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்கா உக்ரைன் நாட்டின் பாதுகாப்பிற்கு 100 மில்லியன் டாலர்களை வழங்குகிறது. இது குறித்து அமெரிக்க நாட்டின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியதாவது “புதினின் கொடூரமான தாக்குதலில் இருந்து […]
விஞ்ஞானிகள் மனித உடலிலிருந்து ரத்தப் பரிசோதனைக்கு எடுத்த ரத்த மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்து நாட்டின் விஞ்ஞானிகள் மனித உடலிலிருந்து ரத்தப் பரிசோதனைக்கு எடுத்த ரத்த மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வுக்கு உட்படுத்திய 50 சதவிகிதம் ரத்த மாதிரிகளில் குளிர்பானங்களில் அடைத்து விற்கப்படும் பெட் பாட்டில்களில் நுண்துகள்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கூறியதை சர்வதேச சுற்றுச்சூழல் அறிவியல் பத்திரிக்கையில் ஆய்வுக் […]
போரினால் சோகத்தில் இருந்த உக்ரைனிய குழந்தைகளுடன் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற ஹீரோக்கள் விளையாடி வருகின்றனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்றுடன் 32- வது நாளாக நீடித்து வருகிறது. மேலும் கிவ், கார்கிவ், மரியுபோல் போன்ற நகரங்களை சுற்றி வளைத்த ரஷ்ய ராணுவ படைகள் ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து ரஷ்ய ராணுவ படைகள் ஆங்காங்கே குண்டுகள் வீசிக் கொண்டு இருப்பதால் உக்ரேனிய மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள […]
ஆர்ஸ்க் போர் கப்பல் மீது உக்ரைன் ராணுவ படையினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ரஷ்யாவின் ஆர்ஸ்க் போர்க்கப்பல் தென் கிழக்கு உக்ரைனில் உள்ள பெர்டியன்ஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கப்பலின் மீது உக்ரைன் ராணுவ படையினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரஷ்யாவின் ஆர்ஸ்க் போர் கப்பல் எரிந்து சேதம் அடைந்து கவிழ்ந்து கிடப்பதை செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இதனை மேக்சர் டெக்னாலஜி நிறுவனமானது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த போர்க்கப்பலில் பிடித்த தீ […]
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டுமெனில் உக்ரைன் நாட்டுடனான போரை நிறுத்த வேண்டும் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது ஒரு மாதத்திற்கும் மேல் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை கண்டித்து மற்ற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தும் ரஷ்யா நாட்டிற்கு சொந்தமான 5,100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதோடு அந்நாட்டின் தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் மீதும் பொருளாதார தடையை விதித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து வெளியுறவு […]