இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருகின்ற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருகின்ற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவருடைய இந்த சுற்றுப்பயணம் உக்ரேன் போர் விவகாரத்தை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து உக்ரைன்-ரஷ்யா போர் […]
Tag: உலகச் செய்திகள்
இங்கிலாந்து நாட்டின் சுகாதார அலுவலர்கள் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பெற்றோர்கள் கிண்டர் வகை சாக்லேட்டுகளை தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்கள். இங்கிலாந்து நாட்டின் சுகாதார அலுவலர்கள் ஈஸ்டர் பண்டிகையையொட்டி பெற்றோர்கள் கிண்டர் ஜாய் சாக்லேட்டுகளை தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்கள். ஏனெனில் அண்மையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருத்தி கிண்டர் சாக்லேட்டுகளை உட்கொண்டு நோய்த் தொற்றுக் கிருமியால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அமெரிக்கா, கனடா, ஜெர்மனி முதலான நாடுகளில் […]
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக கூடப்பட்ட சட்ட சபைக்கு வருகை புரிந்த துணை சபாநாயகர் மீது பிடிஐ கட்சி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இம்ரான்கானின கட்சியிலிருந்த சில உறுப்பினர்கள் தங்களது ஆதரவை பி.எம்.எல். கியூ கட்சிக்கு வழங்கியுள்ளார்கள். ஆகையினால் பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியான உஸ்மான் புஸ்தார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். […]
பாகிஸ்தானின் புதிய அதிபரான ஷெபாஸ்ஸின் அரசு இம்ரான்கானின் ஆட்சியில் வழங்கப்பட்ட பெட்ரோல், டீசலுக்கான மானியத்தை நிறுத்தினால் அவற்றுக்கான விலை மேலும் அதிகரிக்கும் என்று எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் கணக்குப் போட்டுள்ளது. பாகிஸ்தானின் புதிய அதிபராக ஷெபாஷ் சமீபத்தில் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் எண்ணை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய கணக்கு ஒன்றை போட்டுள்ளது. அதாவது பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த இம்ரான்கானின் ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் […]
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார தட்டுப்பாட்டை கருத்தில் வைத்து அந்நாட்டுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலிய கழகம் வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாங்க உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாததால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை அதிபரான கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் வைத்துக்கொண்டு இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலிய கழகம் வாகனங்கள் பெட்ரோல், […]
400 கோடி டாலர் கடன் பெற அமெரிக்கா செல்லும் இலங்கைக் குழு. இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியால் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் 12 மணி நேரம் மின்இணைப்புகள் துண்டிக்கப்படுகிறது. மேலும் பன்னாட்டு பண நிதியத்தில் வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் உள்ள இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடைசி புகலிடமாக பன்னாட்டு பண நிதியத்தில் 400 கோடி டாலர் கடன் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியான மெகபூபா முப்தி வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள சோபியான் நகரிலிருக்கும் காஷ்மீரி பண்டிட் பாலகிருஷ்ணன் என்பவர் அண்மையில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முப்தி பயங்கரவாதிகளின் தாக்குதலால் படுகாயமடைந்த பால் கிருஷ்ணனின் குடும்பத்தினரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மெகபூபா அவரது வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்படி […]
நைஜீரியாவிலுள்ள 4 கிராமங்களுக்குள் அதி பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த சுமார் 70 பேரை கொன்று குவித்துள்ளார்கள். நைஜீரியாவில் பிளாடீயூவின் என்ற மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தின் தலைநகரிலுள்ள 4 கிராமங்களுக்குள் அதி பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் கொள்ளை கும்பல் புகுந்துள்ளது. அவ்வாறு புகுந்த கொள்ளையர்கள் கிராமங்களில் இருந்த வீடுகளுக்குள் சென்று பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைவரையும் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்கள். அதன் பின்பு அவர்களது வீடுகளுக்குள் புகுந்து பணம், பொருட்கள் […]
நெப்டியூன் கிரகத்தில் நிகழும் மாற்றத்தால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சூரிய குடும்பத்தில் புளூட்டோ குறுங்கோள் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நெப்டியூன் சூரிய குடும்பத்தின் கடைசி கிரகமாக விளங்குகிறது. இந்த நெப்டியூன் கிரகம் சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில் லீசெஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நெப்டியூன் கிரகம் குறித்து ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் நெப்டியூனின் வெப்பநிலை மாற்றம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளில் நெப்டியூனின் வெப்பநிலை மாற்றங்களை கண்காணித்த […]
ஊரடங்கு நீடித்தால் பொதுமக்களின் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படலாம் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். சீனா நாட்டின் ஷாங்காய் நகரம் அமைந்துள்ளது. இந்த ஷாங்காய் நகரமானது மிகப்பெரிய வர்த்தக நகரமாக திகழ்கின்றன. இந்த நகரில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முடக்கியுள்ளனர். மேலும் வாகன போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் நகர வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. […]
அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள உக்ரைனிய குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்த டால்பின்களின் சாகச நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உக்ரேன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 47வது நாளாக நீடித்து வருகிறது. குறிப்பாக ரஷ்ய ராணுவ படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் நகரிலிருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி தப்பித்து வந்த உக்ரேனிய மக்கள் ஒடிசா நகரில் தற்காலிகமான அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு விடுதி நிர்வாகம் சார்பில் டால்பின்களின் சாகச நிகழ்ச்சி ஏற்பாடு […]
அமெரிக்காவில் வைத்து போயிங் மற்றும் ரேதியான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்காவின் ராணுவ மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய ராணுவ மந்திரியான ராஜ்நாத் சிங்கும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அந்நாட்டிற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில் நேற்று இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சில முக்கிய நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். அதாவது அவர் வாஷிங்டன் […]
பாகிஸ்தானில் இம்ரான்கானின் ஆட்சி கலைக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தில் அடுத்த வெளியுறவுத் துறை மந்திரியாக பிலாவல் பூட்டோ நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்கள். இதன் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதில் 174 உறுப்பினர்கள் பாகிஸ்தானின் பிரதமருக்கு எதிராக வாக்களித்ததால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிரதமர் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி […]
பாகிஸ்தானின் பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன் க்றத்தில் வெற்றி பெற்றதையடுத்து அவர் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் உயர்மட்ட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்கள். இதன் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதில் 174 உறுப்பினர்கள் பாகிஸ்தானின் பிரதமருக்கு எதிராக வாக்களித்ததால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் […]
4 மாதங்களுக்கு ஒரு முறை புதிய வகைக் கொரோனா பரவி வரும் நிலையில் அத்தொற்று முடிவுக்கு வருவதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது என ஐ.நா சபை பொது செயலாளர் கூறியுள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த தொற்று உருமாறி அனைத்து பகுதிகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஐ.நா சபை பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரேஸ் […]
ஜமாத் உத் தவா என்ற பயங்கரவாத இயக்கத்தை நடத்தி வரும் சயீத் என்பவருக்கு பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து கொண்டு இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனராக இருந்த ஹபீஸ் சயீத் மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த அதி பயங்கர வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக இருந்துள்ளார். இந்த அதிபயங்கர தாக்குதலில் 166 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து இ தொய்பா பயங்கரவாத இயக்கம் […]
பிரபல பாப் பாடகி பிரிட்னி தனது சுயசரிதை புத்தகத்தை எழுதுவது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகமெங்கும் பாப் இளவரசி என்று 40 வயதாகின்ற பிரிட்னி ஸ்பியர்ஸ் கொண்டாடப்படுகிறார். இவர் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதுவது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தனது வாழ்க்கையில் நடந்த பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத நினைவுகளை சுயசரிதை புத்தகத்தில் பகிர்ந்து கொள்ள போவதாக வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தனது புத்தகத்தை எழுதுவதில் அறிவுசார் அணுகு முறையை […]
இலங்கையில் ஏப்ரல் 5 ஆம் தேதி நள்ளிரவு முதலிலிருந்து அவசரநிலைச் சட்டம் வாபஸ் செய்யப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால் பொது மக்கள் வீதியிலிறங்கி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியை முன்வைத்து அந்நாட்டு மந்திரிகள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள். இந்நிலையில் இலங்கை அதிபரான கோத்தபய […]
உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் விவகாரத்தில் உலகம் முழு உண்மையை இன்னும் அறியவில்லை என்று காணொலி வாயிலாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது ஒரு மாத காலத்திற்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய போருக்கு பிறகு ஐக்கிய பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றியுள்ளார். அப்போது அவர் ரஷ்ய படைகளுக்கும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்குமிடையே எந்தவித வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார். இதனை […]
உக்ரேன் மீது ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் தொடுத்து வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் தலைவர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்ய […]
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணியளவில் அந்நாட்டு நாடாளுமன்றம் கூடவுள்ளது. இலங்கையில் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால் பொங்கி எழுந்த பொதுமக்கள் வீதியில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த சூழ்நிலை கருத்தில் கொண்டு இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இலங்கை நாடாளுமன்றத்தில் 4 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி அரசுக்கு அளித்து வந்த […]
சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49.15 கோடியை தாண்டியுள்ளது. சீனாவிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு பரவிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியினை மிகத்தீவிரமாக செலுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,15,64,095 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு இருக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் […]
ஹாங்காங் நகரில் வருகின்ற மே 8 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று அதன் தலைவர் கூறியுள்ளார். சீனாவின் ஆளுகையிலிருக்கும் ஹாங்காங் நகரின் தலைவராக கேரி லாம் உள்ளார். இந்த நகரிலுள்ள பொதுமக்களை நாடுகடத்த அனுமதிக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனையடுத்து ஒருகட்டத்தில் அனைவரும் லாம் பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து ஹாங்காங் நகரில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற […]
இலங்கை பிரதமரை தவிர மற்ற அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வருகிறது. இதனால் மக்கள் உணவு மற்றும் எரி பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அந்நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியினால் பொது மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் இலங்கையில் அவசர நிலை […]
சீனாவில் கடந்த ஒரே நாளில் 438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. சீனாவிலுள்ள ஷாங்காய் நகரத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அங்கு மிகக் கடுமையான ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த ஒரேநாளில் கொரோனாவால் 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி கொரோனா பாதிப்பு குறித்த அறிகுறிகள் எதுவுமின்றி 7788 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமரின் மகனும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான நமல் ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வருகிறது. இதனால் மக்கள் உணவு மற்றும் எரி பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அந்நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியினால் பொது மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் […]
இலங்கைக்கு இந்தியா அளித்துள்ள கடனுதவி எரிபொருள் மற்றும் உணவுகள் ஆகியவை இலங்கை மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் என இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான விமான எரிபொருள் பெட்ரோல் டீசல் மற்றும் உணவுப் பொருட்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அதோடு மட்டுமல்லாமல் மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக இந்திய அரசு இலங்கைக்கு […]
தடை செய்யப்பட்ட ரஷ்ய பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் அதிபர் புதின் மான் கொம்புகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தினை குளித்ததாக கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஷ்ய பத்திரிக்கை நிறுவனமான ப்ரோகெட் கடந்த ஜூலை மாதம் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் தற்போது ரஷ்ய அதிபர் புதின் குறித்து அதிர்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அதிபர் புதின் தைராய்டு மற்றும் புற்றுநோய் நிபுணர்களுடன் தனது மருத்துவ பயணத்தை மேற்கொண்ட போது மான் கொம்புகளின் ரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தில் குளித்ததாக […]
ஜார்கண்டில் நடந்த தீவிர தேடுதல் வேட்டையின் பேரில் கள்ளத்தனமாக இயங்கிய சிறிய துப்பாக்கி தொழிற்சாலையை காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள். ஜார்கண்ட்டை சேர்ந்த ஒருவரை அம்மாநில காவல்துறை அதிகாரிகள் கள்ள துப்பாக்கிப் புழக்கம் தொடர்பாக கைது செய்துள்ளார்கள். அவரிடம் நடந்த தீவிர விசாரணையின் பேரில் கொல்கத்தா படையினர் டும்கா மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் சர்வா கிராமத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள். அப்போது ரவிக்குமார் என்பவர் கோதுமை மாவு மில் என்று கூறி கள்ளத்தனமாக சிறிய துப்பாக்கி தொழிற்சாலை […]
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டின் புதிய அதிபரை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான்கான் ஆட்சியில் அந்நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்கள். இதற்கான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த நிலையில் பிரதமர் இம்ரான்கான் அதிபரிடம் அதனைக் கலைத்து மீண்டும் பாகிஸ்தானில் தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட […]
இங்கிலாந்தில் 5 முதல் 11 வயது வரையிருக்கும் குழந்தைகளுக்கு நாளையிலிருந்து உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசி போடும் பணிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாளையிலிருந்து 5 முதல் 11 வயது வரையிருக்கும் குழந்தைகளுக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு […]
வட கொரியா அண்மையில் நடத்திய பாலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டு ராக்கெட் தொழில் அமைச்சகத்தின் துணை நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. வட கொரியா கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனையை செய்துள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது வட கொரிய ராக்கெட் தொழில் அமைச்சகத்தின் துணை நிறுவனங்களான ஹப்ஜாங்காங் டிரேடிங் […]
செர்பியாவிலுள்ள சுரங்கத்தினுள் மீத்தேன் வாயுவின் அளவு திடீரென அதிகரித்ததால் அதில் பணிபுரிந்து வந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். செர்பியாவிலுள்ள சோக்கோபஞ்சா என்ற நகரிலிருக்கும் சுரங்கத்தில் சுமார் 49 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில் திடீரென அதனுள் மீத்தேன் வாயுவின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அதில் பணிபுரிந்து வந்த 8 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள். இதில் சிக்கிய 20 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை […]
இலங்கையில் நிலவி வரும் மிக கடுமையான பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிப்பதை முன்வைத்து வருகின்ற மே 1 ஆம் தேதியிலிருந்து தான் பதவி விலகுவதாக ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வருகிறது. இதனால் மக்கள் உணவு மற்றும் எரி பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அந்நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் […]
பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான்கான் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள மொத்த 342 பாராளுமன்ற தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கு 172 இடங்களை கைப்பற்றியிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இவ்வாறு இருக்க பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானின் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இதற்கான விவாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இம்ரான்கான் ஆட்சி […]
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் அணுஆயுதப் பதற்றத்தை தங்களது மினிட்மேன் வகை ஏவுகணை சோதனை தூண்டும் எனக் கருதி அதனை ரத்து செய்துள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி திட்டமிட்டிருந்த மினிட்மேன் வகை ஏவுகணை சோதனையை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. ஏனெனில் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் அணு ஆயுத பதற்றத்தை தங்களது […]
சவுதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்டதால் அமீரக பிறை பார்க்கும் கமிட்டி இன்றிலிருந்து ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அனைவரும் புனித ரமலான் மாதத்தில் 30 நாட்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ள நோன்பு இருக்கிறார்கள். இந்நிலையில் சவுதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்டதால் அமீரக பிறை பார்க்கும் கமிட்டி இன்றிலிருந்து ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது இஸ்லாமிய நாள்காட்டி பிறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க அமீரகத்தில் ரமலான் மாதத்தை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் […]
ஜெர்மனியில் 7 பேருக்கு உணவில் விஷம் வைத்ததாக கூறி 32 வயதுடைய பல்கலைக்கழகத்தில் பயிலும் மனநலப் பிரச்சினைகள் கொண்ட மாணவி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். ஜெர்மனியிலுள்ள Darmstadt தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் பயிலும் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்கள் என மொத்தமாக சேர்த்து 7 பேர் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட நபர்களை பரிசோதனை செய்கையில் அவர்களது உணவிலும், பானங்களும் நச்சுத்தன்மை கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் அதிகாரிகள் அதே […]
சுவிட்சர்லாந்தில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையிலும், மனிதர்களைப் போன்று இரு கால்களால் இயங்கக்கூடிய வகையிலும் பன்முகத்தன்மை கொண்ட நவீன ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் பன்முகத்தன்மை கொண்ட நவீன ரோபோவை உருவாக்கியுள்ளார்கள். இந்த ரோபோ மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய தன்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மனிதர்களை போன்று இரு கால்களிலும் இந்த ரோபோ இயங்கக் கூடியதாக உள்ளது. இது மீட்பு, வினியோகம் போன்ற பல பணிகளை மேற்கொள்ளும் தன்மையை […]
உக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் இராணுவ நடவடிக்கையால் அந்நாட்டிலிருந்து தற்போது வரை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐநா தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் அதிக பலம் வாய்ந்த ராணுவ படைகள் உக்ரேன் மீது போர் தொடுத்து வருகிறது. இந்தப் போர் 6 ஆவது வாரமாக நீடித்து வருகிறது. இந்த போரினால் உணவு, உறைவிடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளின்றி தவித்து வந்த அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள். அதன்படி தற்போது வரை உக்ரேனிலிருந்து […]
ரஷ்யா பேச்சையை மீறி உக்ரைனிலுள்ள கீவ், செர்னிகிவ் நகரங்களில் விமானங்களின் மூலம் குண்டு மழை பொழிந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் பலம்வாய்ந்த ரஸ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனையடுத்து இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் ரஷ்யா கீவ், செர்னிகிவ் ஆகிய நகரங்களிலிருந்து தங்களது படைகளை பின் வாங்கிக் கொள்வதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. […]
வட கொரியா அண்மையில் ஹாலிவுட் திரைப்பட டிரைலர் பாணியில் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியது தொடர்பாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் அந்நாடு உலக நாடுகளை ஏமாற்றியுள்ளதாக தென்கொரியாவும், அமெரிக்காவும் குற்றம் சாட்டியுள்ளது. வட கொரியா அண்மையில் ஹாலிவுட் திரைப்பட டிரைலர் பாணியில் ஏவுகணை சோதனை நிகழ்த்துவது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அதிபர் கிம் ஜாங் உன் ஒரு பெரிய கதவிலிருந்து மாசாக எண்ட்ரி கொடுக்க அவருக்கு இருபுறமும் ராணுவ உயரதிகாரிகள் நடந்து வருகிறார்கள். மேலும் […]
அமெரிக்க வெளியுறவுத் துறை முக்கிய பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை முக்கிய பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரஷ்யாவிலிருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக தங்கள் நாட்டிற்கு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் உக்ரேனில் நிலவும் அதிபயங்கர போரின் காரணத்தால் ரஷ்யாவிலிருக்கும் அமெரிக்க குடிமக்களை அந்நாட்டு அதிகாரிகள் துன்புறுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் அமெரிக்க குடிமக்கள் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள 37,500 மெட்ரிக் டன் டீசலை தரையிறக்க முடியவில்லை என்று என்று பெட்ரோலிய கூட்டமைப்பு தலைவர் சுமித் தெரிவித்துள்ளார். இலங்கையின் பெட்ரோலிய கூட்டமைப்புத் தலைவர் சுமித் அந்நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இலங்கையிலுள்ள எரிபொருள் நிலையங்களில் டீசல் இருப்பு இல்லாததால் இன்றோடு சேர்த்து இருநாட்கள் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள சுமார் 37,500 மெட்ரிக் டன் டீசலை தரை இறக்க முடியவில்லை […]
வடகொரிய அரசு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்த ஹாலிவுட் பாணியில் டிரைலர் காட்டியுள்ளது. வடகொரிய அரசு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த சோதனை குறித்து வட கொரிய அரசு தொலைக்காட்சியில் ஹாலிவுட் திரைப்பட டிரைலர் போன்று செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதாவது ஒரு பெரிய கதவு திறக்கப்பட்டு அதிலிருந்து கருப்பு நிற கண்ணாடியுடன், தோல் ஜாக்கெட் அணிந்து கொண்டு அதிபர் கிம் ஜாங் உன் வெளியே வந்துள்ளார். அது மட்டுமின்றி […]
ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா பல உரு மாற்றங்களைப் பெற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இவ்வாறு இருக்க இந்தியா உட்பட சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது மெதுவாக குறைந்து வருகிறது. ஆனால் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி ஜெர்மனியில் ஒரே நாளில் மட்டும் 67,500 […]
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக கிரீஸில் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அண்டை நாடான பல்கேரியாவிற்கு சென்று அதனை வாங்கி வருகிறார்கள். ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளுக்கிடையே 35 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதன் காரணமாக கிரீஸில் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அதாவது கிரீஸில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 167 ரூபாயாக உள்ளது. ஆனால் அண்டை நாடான பல்கேரியாவில் கிரீசை விட ஒரு […]
ரஷ்ய ஜனாதிபதி புடினை ஃபேஸ்புக்கில் விமர்சித்த கஜகஸ்தான் நாட்டிலுள்ள வானொலி நிலையத்தில் பணிபுரியும் பெண் தொகுப்பாளர் ஒருவரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. கஜகஸ்தான் நாட்டில் இயங்கிவரும் வானொலி நிலையம் ஒன்றில் லியூ பனோவா என்ற பெண்மணி தொகுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பேஸ்புக்கில் நடந்த விவாதம் ஒன்றில் ரஷ்ய அதிபர் புதினை கமெண்ட் அடித்துள்ளார். அதாவது “ஓவராக பேசினால் வோவோ அங்கிளை கூப்பிட வேண்டியிருக்கும்” என்று கமெண்ட் செய்துள்ளார். இவர் வோவோ அங்கிள் என்று குறிப்பிட்டது ரஷ்ய […]
அமெரிக்காவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 1976 ல் ஓட்டுனருடன் 26 குழந்தைகள் இருந்த பள்ளி பேருந்தை கடத்தி சென்று அவர்களை உயிருடன் புதைத்த ஒருவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் கடந்த 1976 இல் நியூ ஹால் வுட்ஸ் என்பவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டுநர் மற்றும் 26 குழந்தைகள் இருந்த பள்ளி பேருந்தை கடத்தியுள்ளார். அதன்பின்பு அந்த பேருந்துடன் 27 பேரையும் மொத்தமாக உயிருடன் தனக்கு சொந்தமான குவாரி ஒன்றில் புதைத்துள்ளார். அதுமட்டுமின்றி […]
ரஷ்யப் படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தை சுற்றி பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறி உக்ரைன் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதுகுறித்து அந்நாட்டின் துணை பிரதமர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ரஷ்ய படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தை சுற்றி பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்டதாக உக்ரைன் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து உக்ரைன் நாட்டின் துணை பிரதமரான இரினா தனது சமூக வலைதளப் பக்கத்தில் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். […]