கனடாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் இறப்பிற்கு உலக மக்கள் சமூக ஊடகங்களில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் பிறந்து தனது 17 வது வயதில் படிப்பிற்காக நதியா சவுத்ரி அமெரிக்கா சென்றார். அதிலும் நரம்பியல் மருத்துவரான நதியா பல ஆண்டுகளாக கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கருப்பை புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் 45 வயதான நதியா மரணமடைந்துவிட்டார் என்னும் செய்தியை கான்கார்டியா பல்கலைக்கழகம் கடந்த செவ்வாய்கிழமை […]
Tag: உலகச் செய்திகள்
தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரமாக டிஜிட்டல் அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரமாக டிஜிட்டல் அட்டைகளை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலை இலங்கை அரசின் தொழிநுட்ப அமைச்சகத்தின் செயலாளரான ஜயந்த டி சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அதில் “இரு தவணை தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் வெளிநாடுகளுக்குச் செல்ல ஆர்வமாக உள்ளவர்களுக்கும் டிஜிட்டல் அட்டைகளை வழங்கும் […]
அணு ஆயூத நீர்மூழ்கி கப்பல் மீது மர்ம பொருளொன்று மோதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்க நாட்டிற்குச் சொந்தமான அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஆசிய பசிபிக் கடல் பகுதியில் மூழ்கி இருந்துள்ளது. அப்பொழுது அதனை மர்ம பொருள் ஒன்று தாக்கியுள்ளது. இதில் சில கடற்படையினர் காயமடைந்துள்ளதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்கான தெளிவான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இருப்பினும் நீர்மூழ்கிக் கப்பல் சிறப்பாக இயங்குவதாகவும் அதற்கு எந்தவொரு சேதாரமில்லை என்றும் கூறப்படுகிறது. […]
சீனா ராணுவம் இந்தியா எல்லைப்பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா ராணுவம் கடந்த வாரம் இந்தியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. அதாவது சுமார் 200 சீனா ராணுவ வீரர்கள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியில் இந்திய இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தகவலை இந்தியா ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த இரு தரப்பும் மோதலில் எவருக்கும் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதிலும் லாடக் கிழக்கு பகுதியின் எல்லை பிரச்சினைக்கு இந்தியா மற்றும் […]
பிரித்தானியாவில் தந்தை மற்றும் அவருடைய இரண்டாவது மனைவி இருவரும் சேர்ந்து 6 வயது மகனை கொடுமைப்படுத்திக் கொலை செய்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்தியர்கள் தனிமை படுத்தபடமாட்டார்கள் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து அரசு சமீபத்தில் அங்கீகரித்தது. எனினும் தடுப்பூசி போட்ட இந்தியர்கள் இங்கிலாந்திற்கு செல்லும் பட்சத்தில் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்த படுவார்கள் என அறிவித்திருந்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தி தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்துவந்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் அனைவரும் பத்து நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் […]
புளூ காய்ச்சலினால் இறப்போரின் எண்ணிக்கையானது அதிகளவில் இருக்கும் என்று பிரித்தானியாவின் மருத்துவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே புளூ காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக மருத்துவர்கள் கவலை அளித்துள்ளனர். மேலும் பிரித்தானியாவின் துணை தலைமை மருத்துவ அதிகாரியான Jonathan Van-Tam கூறியதில் “இந்த ஆண்டு மக்களிடையே குறைந்த அளவில் நோய் எதிர்ப்பு சக்தியானது காணப்படுகின்றது. ஏனெனில் கொரோனா தொற்று பரவலினால் மக்களுக்கு கடந்த ஆண்டு காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்தாதே இதற்கு […]
தடுப்பூசி நிறுவனங்கள் இணைந்து 2000த்திற்கு அதிகமான குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தியுள்ளனர். அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மன் நாட்டின் பயோஎண்டெக் நிறுவனமும் சேர்ந்து உருவாக்கிய தடுப்பூசிகளை 5 முதல் 15 வயதுக்குட்பட்ட 2000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதித்துள்ளனர். ஆனால் இதில் மூன்றில் ஒரு பங்கு மருந்து மட்டுமே பெரியவர்களிடம் பரிசோதிக்கப்பட்டது. இருப்பினும் மருந்தானது 2 தவணை செலுத்தியதற்கே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைத்துள்ளது. மேலும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அதிக வலிமையுடன் காணப்பட்டனர். ஆனால் […]
கனடாச் சேர்ந்த பிரபல நடிகர் புளூ ஆரிஜின் நிறுவனம் மூலமாக விண்வெளிக்கு செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமேசானின் தலைவரான ஜெப் பெசோஸூக்கு சொந்தமானது புளூ ஆரிஜின் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் விண்கலம் மூலம் கனடாவைச் சேர்ந்த 90 வயதான பிரபல நடிகர் வில்லியம் சாட்னர் விண்வெளிக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் நடித்த ஸ்டார் டிரெக் தொடரானது மிகவும் பிரபலமானது ஆகும். இவர் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நியூ ஷெப்பர்டு 18 […]
டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 32 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு 5.9 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் நிலநடுக்கமானது டோக்கியோவின் கிழக்கிலுள்ள சிபா மாகாணத்தில் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது. இதனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் […]
புதிய தொழிற்சாலையை அமைக்கப்போவதாக அமெரிக்கா தடுப்பூசி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றிற்கு எதிராக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்தந்த நாடுகளில் உள்ள அரசுகளும் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதனை ஊக்குவிப்பதற்காக இலவச தடுப்பூசி மையங்கள் அமைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தியுள்ளது. அதிலும் ஆப்பிரிக்காவில் […]
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 14-வது ஆண்டாக இன்று போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண்டுகளாக முன்னிலையில் உள்ளார். மேலும் இன்று போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 92.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இதையடுத்து […]
இருநாடுகளின் அதிபர்களும் விரைவில் காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்த வல்லரசு நாடுகளாகும். இந்த இரு நாடுகளும் சமீபகாலமாக மோதல் போக்கை கொண்டுள்ளதால் சுமூகமான உறவு காணப்படவில்லை. குறிப்பாக வர்த்தகப் போர், கொரோனா பாதிப்பு , சீனா தைவானுக்கு அனுப்பிய போர் விமானங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் […]
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் தொடர்ந்து 4-வது முறையாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் தொடர்ந்து 4-வது முறையாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் போர்ப்ஸ் பத்திரிக்கை ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு 177 பில்லியன் டாலர் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது இடத்தை டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் […]
சுவிட்சர்லாந்தில் நடந்த சண்டையில் இருபது வயது வாலிபர் படுகாயமடைந்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் காலென் மாநிலத்தில் Bahnhofstrasse என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்று சண்டையிட்டுள்ளனர். இதில் 20 வயது வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செயின்ட் காலென் மாநில போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். […]
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பயணிகள் விமானம் துருக்கியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குவைத்திலிருந்து Jazeera ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சில மணி நேரத்திலேயே அதற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விமானமானது துருக்கியில் உள்ள Trabzon விமான நிலையத்தில் உடனடியாக தரையிறக்கப்பட்டது. மேலும் அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தனியான இடத்தில் வைத்து அவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான தகவலை Trabzon ஆளுநர் Ismail Ustaoglu சமூக […]
நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம் முன்பாக மக்கள் திரண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தலீபான்களின் கட்டுப்பாட்டில் சென்றது. இதனால் அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து பல மாகாணங்களை தலீபான்கள் தங்கள் கைவசப்படுத்தினர். மேலும் தலீபான்கள் உத்தரவின் படி, கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அங்கு தங்கியிருந்த அனைத்து அயல்நாட்டு படைகளும் முழுவதுமாக ஆப்கானை விட்டு வெளியேறினர். […]
பெண்கள் கர்ப்பமடைந்திருப்பதை பற்றிய தரவுகளை ஆய்வகங்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஈரானின் வடக்கில் உள்ள மஜந்தரன் மாகாணத்தில் நீதித்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “ஆய்வகங்கள் கருவுற்றிருக்கும் பெண்கள் குறித்த விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் கருக்கலைப்பு சம்பவங்களை தடுக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அறிந்த ஈரானைச் சேர்ந்த பெண்கள் அரசின் மீது கடுமையான […]
பிரித்தானியாவில் பல ஆயிரம் லிட்டர் பாலை டிரக்குகள் கிடைக்காத காரணத்தினால் சாக்கடையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பால் உற்பத்தியாளர்கள் கனரக ட்ரக் வாகனங்கள் பற்றாக்குறையால் தாங்கள் உற்பத்தி செய்த ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை வீணாக சாக்கடையில் கொட்டும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு அத்தியாவசிய பொருள்களுக்கும் டிரக் வாகனங்கள் பற்றாக்குறை காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் காலகட்டத்திலும் பால் ஏராளமாக வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு […]
குழந்தையின் ஞானஸ்நான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் சென்ற இரண்டு குடும்பங்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோமேனியாவின் செல்வந்தர்களில் ஒருவரும் பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரருமான Dan Petrescu (68), அவரது மகன் Dan Stefano (30), அவரது மனைவி Dorotea Petrescu Balzat (65) உள்ளிட்டோர், இத்தாலியை சேர்ந்தவரும் Petrescu-வின் நண்பருமான Filippo Nascimbene (32)-ன் மகனான Rafael-ன் ஞானஸ்நான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு வருகை தந்துள்ளனர். மேலும் கடந்த […]
தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா என்பவருக்கு இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இயற்பியல், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இயற்பியல், மருத்துவம் நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் அறிவிக்கப்பட்டது. அதில் இங்கிலாந்தில் வசித்து வருபவரும், தான்சானியா நாட்டை சேர்ந்தவருமான […]
இங்கிலாந்து நாட்டின் அரச குடும்ப உறுப்பினர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் சட்ட வல்லுநரது தொலைபேசியை வேவு பார்த்தது துபாய் நாட்டின் பிரதமர் தான் என்று கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் அரசு குடும்ப உறுப்பினர்களுக்காக நீதிமன்றத்தில் Fiona Shackleton என்னும் சட்ட வல்லுனர் ஆஜராவது வழக்கமாகும். இதனையடுத்து சமீபத்தில் இவருடைய தொலைபேசி வேவு பார்க்கப்பட்ட விஷயம் அந்நாடு முழுவதும் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜ குடும்ப உறுப்பினர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞரது தொலைபேசியை யார் வேவு பார்த்தார் என்ற […]
கனடாவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனம் மாத்திரைகளை திரும்பப்பெறப் போவதாக கூறியுள்ளனர். நம்மில் பெரும்பாலோனோர் தலைவலி, காய்ச்சல், உடம்பு வலி, ஜலதோஷம் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் பாராசிட்டமால் மாத்திரைகளை பயன்படுத்துகிறோம். மேலும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிகளவில் வலிநீக்கிகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு எடுத்துக்கொள்ளும் வலிநீக்கிகள் நமது உடம்பிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடும். எடுத்துக்காட்டாக பாராசிட்டமால் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் தலைசுற்றல், வாந்தி, மயக்கம் அதிக வியர்வை வெளியேற்றம், பசியின்மை, வயிற்றுவலி போன்ற […]
ஆக்கஸ் ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியா வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கா செயலருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உடன் ஆஸ்திரேலியா நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் ஏற்கனவே பிரான்ஸிடம் பல மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்ட பின்னரே அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்காக ஆக்கஸ் என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரான்ஸிற்கு எந்தவொரு தகவலோ அல்லது முன்னறிவிப்போ அளிக்காமல் ஆஸ்திரேலியா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. […]
வேதியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு மூலக்கூறு உருவாக்குவதற்கான புதிய வழிமுறையை கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வேதியியல், இயற்பியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமை அன்று இயற்பியல், மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸ்-ன் பொதுச்செயலாளர் கோரன் ஹான்சன் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் […]
நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாய் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து வடகிழக்கில் 16 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இது குறித்த தகவலை பாகிஸ்தான் புவியியல் மையம் வெளியிட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து சரிந்து விழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் […]
லண்டனில் சாரா எவரார்ட் விழிப்புணர்வு கூட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண், போலீஸ் அதிகாரிகள் தன்னை ஆப் மூலம் விரட்டுவதாக கூறி உள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் கடந்த மார்ச் மாதம் சாரா எவரார்ட் என்ற 33 வயது பெண் வானே கோஸின்ஸ் என்ற காவல்துறை அதிகாரியால் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக பொய்யாக கைதுசெய்யப்பட்டு பின்பு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது. பின்னர் இந்த போலீஸ் அதிகாரி சாராவின் கழுத்தை நெரித்து கொன்று உடலை அருகில் உள்ள […]
முகநூல் நிறுவனத்திற்கு சொந்தமான செயலியானது தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. உலக அளவில் மக்கள் அனைவரும் வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்றான இன்ஸ்டாகிராம் என்னும் செயலி அதிகமாக அனைவராலும் உபயோகப்படுத்தப்படுகின்றது. அந்த செயலியில் அதிக அளவு காணொளி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இது தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் […]
பிரித்தானியாவின் பிரபல பாப் பாடகியான கிறிஸ்டி பெட்டெரில்லி நாட்டின் மிகப்பெரிய பணக்கார விவாகரத்து பெற்ற பெண்ணாக மாறியுள்ளார். பிரித்தானியாவில் ஸ்டரோபோஷாயர் மாகாணத்தில் பிறந்தவர் கிறிஸ்டி பெட்டெரில்லி. இவர் 1988ஆம் ஆண்டு மிஸ் யூ.கே பட்டம் பெற்றார். அதன் பிறகு லண்டனுக்கு சென்ற கிறிஸ்டி லண்டனில் பிரபலமான பாடகியாகவும் பாடலாசிரியராகவும் இருந்து வந்தார். கிரிஸ்டி கடந்த 2000 ஆம் ஆண்டு இத்தாலிய வம்சாவளியை சேர்ந்த பேர்ட்ரெல்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் பேட் பேர்ட்ர்டரெல்லி உலகப் பணக்காரர்களில் ஒருவர் […]
கொரோனா தொற்று பாதிப்பானது குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் ஒரு வாரகாலமாக பரவிய கொரோனா தொற்று பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை காணும்பொழுது கடந்த வாரத்தை விட தற்பொழுது பாதிப்பானது குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவரை உலக அளவில் புதிதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 31,00,000 ஆகும். இதனை அடுத்து 50,000 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இது முந்தை வாரத்தை விட […]
கொரோனா தொற்று பாதிப்பானது குறைந்துள்ளதாக சீனா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகில் முதன் முதலாக கொரோனா தொற்றானது சீனாவில் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்றானது அமெரிக்கா, இந்தியா போன்ற பல்வேறு நாடுகளுக்கு பரவியது. ஆனால் இந்த கொரோனா தொற்று பரவலை சீனா வெகுவாக கட்டுப்படுத்தியது. இருப்பினும் சமீப காலமாக அங்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் சீனாவில் உள்ள நகரங்களிலும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த பயணிகள் […]
பக்க விளைவுகள் ஏற்படும் என்பதற்காக மாடர்னா தடுப்பூசியை ஸ்வீடன் அரசு தடை செய்துள்ளது. உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்றிற்கு எதிராக மக்கள் பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்வீடனில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி அளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மாடர்னா தடுப்பூசியினால் இளைஞர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மாடர்னா தடுப்பூசியின் பக்கவிளைவுகளை தொடர்ந்து ஆராய்ந்ததை […]
பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவமானது அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள டொராண்டோவில் ஜார்ஜ் எஸ் ஹென்றி பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் பள்ளியில் 16 வயது சிறுவன் ஒருவன் நடைபாதையில் நடந்து சென்றுள்ளான். அப்போது அவனிடம் மற்றொரு 15 வயது சிறுவன் பேசியுள்ளான். இந்த நிலையில் இருவருக்கும் […]
பொதுமக்களின் ஊதியத்தில் உயர்வை வழங்க பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். பிரித்தானியாவில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பொதுமக்கள் ஆண்டுக்கு ஆயிரம் பவுண்டுகள் வரை வருமானம் ஈட்ட முடியும் என்று கூறப்படுகிறது. அதிலும் பிரித்தானியாவில் 8. 91 பவுண்டுகள் குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது இது 9.42 பவுண்டுகளாக உயரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஆண்டுக்கு 5.7 லட்சம் பேர் ஊதிய உயர்வைப் […]
விமான சேவையானது 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கொழும்பில் உள்ள விமான நிலையத்தில் தொடங்கப்படவுள்ளது. இலங்கையிலுள்ள கொழும்பில் இரத்மலான விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன. அதிலும் முதல் விமானமானது அடுத்தமாதம் மாலத்தீவுக்கு புறப்படவுள்ளது. இதனை இலங்கையின் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மாலத்தீவு ஏர்லைன்ஸ் உடன் நடத்தப்பட்ட நீண்டநேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரத்மலானவில் இருந்து விமானங்களை இயக்க ஒப்புக் கொண்டுள்ளனர். இருப்பினும் […]
எரிசக்தி விலை உயர்வுக்கு ஐரோப்பா தான் காரணம் என்று ரஷ்யா அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டு எரிசக்திதுறைச் சார்ந்த அதிகாரிகளை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறியதில் “ஐரோப்பா பெரும் தவறிழைத்துவிட்டது. அதிலும் spot சந்தைக்கு ஆதரவாக நெடுங்கால ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டு வந்ததுதான் எரிவாயு விலை உயர்வுக்கு முக்கிய காரணம். இந்த கொள்கையானது மிகவும் தவறு என்று தற்பொழுது புரியும்” என்று கூறியுள்ளார். மேலும் கடந்த புதன்கிழமை அன்று ஐரோப்பிய மற்றும் பிரித்தானியாவில் […]
டோஷிபா நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக சூய்ச்சி ஈட்டோ பொறுப்பேற்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவிலுள்ள சீனா நிறுவனமான டோஷிபாவின் நிர்வாக இயக்குனராக சூய்ச்சி ஈட்டோ பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே இவர் டோஷிபாவின் உலகளாவிய ஆற்றல் சார்ந்த தொழில்களிலும் பல்வேறு முக்கிய தொழிற்பிரிவுகளிலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். அதிலும் டோஷிபா நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக டோமோஹிக்கோ ஒக்காடா என்பவர் கவனித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டோஷிபா நிறுவனம் இந்திய […]
கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து பழைய நிலைமைக்கு திரும்பிவிட்டதாக பட்டத்து இளவரசர் கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று பரவலானது படிப்படியாக குறைந்து மீண்டும் பழைய நிலைமை திரும்பியுள்ளது. இதனை அபுதாபி பட்டத்து இளவரசரான ஷேக் முகமது பின் சயீத் தெரிவித்துள்ளார். இந்த கடினமான சூழலில் இருந்து நாங்கள் பல அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுக்கொண்டுள்ளோம். #MohamedbinZayed: We overcame the […]
பிலிப்பைன்ஸ் கடற்கரை பகுதியில் உலக நாடுகள் போர் ஒத்திகை நடத்தியதற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சீனக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா விரும்புகிறது. இதோடு மட்டுமின்றி தைவானையும் கையகப்படுத்த சீனா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஒன்றிணைந்து பிலிப்பைன்ஸ் கடற்கரை பகுதியில் போர் ஒத்திகை நடத்தியுள்ளனர். இது குறித்து அறிந்த சீனா கடும் கோபத்தில் உள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் ஆஸ்திரேலியா அணுசக்தியால் […]
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் முன்பாக சிலர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையிலுள்ள கொழும்பில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அமைந்துள்ளது. அதன் முன்பாக ஈரான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அகதிகள் சரியான பதில் கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக கூறியுள்ளனர். அதிலும் 2018-2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அகதிகளாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்களை அண்மையில் தான் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளனர். எனினும் […]
பனிப்பாறைகள் உருகி அதிலிருந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்கிருமிகள் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நம் புவியானது வெகுவாக வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருகி அதிலிருந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களும் நுண்கிருமிகளும் வெளிவரும் என்று ஆய்வின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “ஆர்டிக் பகுதியில் இருக்கும் பனிபாறைகள் 90 லட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்டவை. மேலும் அவை சுமார் பத்து லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் புவி வெகுவாக வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருகி அதிலிருந்து பனிப்போரில் […]
ஐ.நா.விற்கான இந்தியா நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் அமெரிக்காவில் நடைபெறும் பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஐ.நா.விற்கான இந்தியா நிரந்தர தூதரகத்தின் ஆலோசகரான அமர்நாத் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அவர் கூறியதாவது “பாகிஸ்தானில் நிரந்தர உறுப்பினர் இக்கூட்டத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றி பேசுகிறார். ஆனால் பிரதமர் இம்ரான்கானோ ஒசாமா பின்லேடன் போன்ற சர்வதேச பயங்கரவாதிகளை தியாகி என்ற பட்டம் […]
ஐ.நா. அமைதிப்படை ஊழியர் ஒருவர் மாலியில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா. அமைதிப்படை ஊழியர்கள் மாலியின் கிடால் பிராந்தியத்தில் உள்ள டெசாலிட் நகரில் காரில் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்களுடைய கார் எதிர்பாராதவிதமாக சாலைக்கு அடியில் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கி வெடித்து சிதறியுள்ளது. அந்தக் கோர சம்பவத்தில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும், ஐ.நா. அமைதிப்படை ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. […]
நேற்று முன்தினம் வனவிலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு அக்டோபர் 4 உலக வனவிலங்குகள் தினமாக கொண்டாடப்பட்டுள்ளது. தாவரங்கள் மற்றும் மனிதர்களைப் போலவே நமது சுற்றுச்சூழல் அமைப்பில் விலங்குகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் நகரில் கடந்த 1931-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு காங்கிரஸ் மாநாட்டில் உலக விலங்குகள் தினமாக அக்டோபர் 4-ஆம் தேதி பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி விலங்குகளின் நலனை பாதுகாப்பது, நிதி திரட்டுதல், விலங்குகளுக்கான தங்கும் இடங்களை […]
ரஷ்யா அதிபர் தனது வகுப்பு ஆசிரியருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது வெளியுறவுத்துறை அமைச்சகத்தினால் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக நேற்று உலகம் முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அந்நாட்டு அதிபரான விளாடிமிர் புதினின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜனாதிபதி தனக்கு எடுத்த வகுப்பு ஆசிரியரை நேரில் சந்தித்து கட்டியணைக்கும் நெகிழ்ச்சியான தருணம் புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி விளாடிமிர் புதிர் தனது குழந்தைப் பருவத்தின் போது […]
இங்கிலாந்த் அரசாங்கத்தின் எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட Insulate Britain என்னும் போராட்டக்காரர்களை அந்நாட்டின் பிரதமர் விமர்சனம் செய்துள்ளார். இங்கிலாந்த் அரசாங்கத்தின் எச்சரிக்கையை மீறி அக்டோபர் 4 ஆம் தேதி Insulate Britain என்னும் போராட்டக்காரர்கள் லண்டன் நகருக்குள் நுழைந்து அங்குள்ள பல முக்கிய பகுதிகளில் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் அரசாங்கத்தின் எச்சரிக்கையை மீறி லண்டன் நகருக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது இங்கிலாந்து நாட்டின் […]
பிரித்தானியா தூதரகத்தின் முன்னாள் ஓட்டுனரை மர்ம நபர்கள் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் அமைந்துள்ள பிரித்தானியா தூதரகத்தில் 11 ஆண்டுகளாக அங்குள்ள அதிகாரிகளுக்கு ஓட்டுனராக 44 வயதுடைய ஒருவர் பணிபுரிந்துள்ளார். மேலும் கடந்த மே மாதம் தான் 150 ஓட்டுனர்கள் வெளியேறுவதற்கான விண்ணப்பத்தை அளித்துள்ளனர். அதில் இவரும் ஒருவர். அதுவும் காபூலிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் அவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஆயுதமேந்திய ஐந்து மர்ம […]
பிரான்சில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கத்தோலிக்க மதகுருமார்களால் சீரழிக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்சில் பாலியல் வன்கொடுமைகள் குறித்த சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிலும் இந்த வன்கொடுமைகளில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தை சேர்ந்த 3,000 பாதிரியார்களும், பிற ஊழியர்களும் ஈடுபட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் இதுவரை 330,000 குழந்தைகள் கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதில் 10 முதல் 13 வயதிற்குள் உள்ள சிறுவர்கள் 80 […]
பத்து வருடங்களில் உலக அளவில் 14 சதவீதம் பவளப்பாறைகள் பருவநிலை மாற்றத்தால் அழிந்துள்ளதாக விஞ்ஞானிகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். உலகின் மிகப்பெரிய பவளப்பாறை திட்டான “தி கிரேட் பேரியர் ரீஃப்” ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு கடலோர பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. அவை தவிர கிழக்கு ஆசியா, பசுபிக் பெருங்கடல், தெற்கு ஆசியா, வளைகுடா பகுதிகள், மேற்கு இந்திய பெருங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில் அதிக அளவில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன. ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பின் குழு கடந்த […]
இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் அமைதி, இலக்கியம், பொருளாதாரம், மருத்துவம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை புரியும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நோபல் பரிசு கௌரவமிக்க விருதாக உலக அளவில் கருதப்படுகிறது. அதிலும் நார்வே நாட்டில் மட்டும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. அதை தவிர சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் மற்ற […]