Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! மீண்டும் முழு ஊரடங்கு…. வீடுகளில் முடங்கிய “1.7 கோடி மக்கள்”….!!

சீனாவில் கடந்த சில தினங்களாகவே அதிகரித்துவரும் ஓமிக்ரான் தொற்றால் 5280 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனாவில் கடந்த சில தினங்களாகவே தற்போது உலகையே ஆட்டிப் படைத்து வரும் ஓமிக்ரான் தொற்று அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மார்ச் 14 ஆம் தேதி மட்டும் சீனாவில் ஓமிக்ரான் தொற்றால் 5280 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் சீனாவின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஹென்சன் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிக கடுமையான ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

“இது ஒரு விபத்துதான்”… உள்நோக்கம் எதுவுமில்லை…. பாகிஸ்தானில் பாய்ந்த இந்திய ஏவுகணை…. கருத்து தெரிவித்த அமெரிக்கா….!!

இந்திய ஏவுகணை ஒன்று கடந்த 9ஆம் தேதி பாகிஸ்தானில் விழுந்தது தொடர்பாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் பகுதியில் இந்திய ஏவுகணை ஒன்று கடந்த 9 ஆம் தேதி விழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவ அமைச்சகம் பராமரிப்பு பணியின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இது குறித்த உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவின் இந்த விளக்கத்தை பாகிஸ்தான் […]

Categories
உலகசெய்திகள்

உச்சகட்ட கொடூரம்: மசூதியில் தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள்…. உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா…? வெளியான தகவல்….!!

உக்ரேனின் துறைமுக நகரமான மரியுபோலிலுள்ள மசூதி ஒன்றின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது. உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 18 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ஆகையினால் இருதரப்பு மோதலில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “இது நடந்தா” கண்டிப்பா “3 ஆம் உலகப்போர்” தான்….. தகவல் வெளியிட்ட ஜோ பைடன்….!!

உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிற்கும், நோட்டாவுக்குமிடையே நேரடியாக சண்டை ஏற்பட்டால் அது 3 ஆம் உலகப்போராகத்தான் அமையும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 17 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் “புதிய வைரசை” உருவாக்குவது…. குற்றச்சாட்டை முன்வைத்த ரஷ்யா…. நிராகரித்த ஐ.நா சபை….!!

ஐ.நா பாதுகாப்பு சபையில் நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யா உக்ரைன் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 17 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு இருக்க அமெரிக்க பாதுகாப்பு துறை உதவியுடன் உக்ரைன் ஆய்வகங்களில் வைத்து உயிரி ஆயுதத்தைத் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: “242 இந்தியர்களுடன்”…. தலைநகர் வந்தடைந்த “சிறப்பு விமானம்”…!!

உக்ரேனில் சிக்கித்தவித்த 242 இந்தியர்களை ஏற்றுக்கொண்டு போலந்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று டெல்லி வந்தடைந்துள்ளது. உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 16 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த இரு தரப்பு மோதலில் […]

Categories
உலக செய்திகள்

FLASH: உக்ரேன் தலைநகரை நெருங்கிய ரஷ்யப் படைகள்…… காட்டிக்கொடுத்த “செயற்கைக்கோள் புகைப்படம்”….!!

உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு அருகில் 64 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரஷ்யப் படைகளின் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தொடர்புடைய செயற்கைக்கோள் புகைப்படத்தை மாஸ்டர் டெக்னாலஜி நிறுவனம் எடுத்துள்ளது. உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 15 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

போர் விவகாரம்: சேவைகளை நிறுத்தும் “வணிக நிறுவனங்கள்”…. சொத்துக்களை முடக்க “சட்டம் போட்ட ரஷ்யா”….!!

ரஷ்யாவில் பல வணிக நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்தி வைத்துள்ள நிலையில் அந்நாட்டின் பிரதமர் இது தொடர்பாக புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 15 நாளுக்கும் மேலாக போரை தொடுத்து வருகிறது. இதனால் உலக நாடுகள் ரஷ்யாவிற்கு உக்ரைன் மீதான போரை முன்னிட்டு கண்டனம் தெரிவித்து வருகிறது. இவ்வாறு இருக்க அமெரிக்காவின் பணப்பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: ரஷ்யாவில் சேவையை நிறுத்திய “அமெரிக்க வங்கிகள்”…. வெளியான தகவல்….!!

ரஷ்யாவில் உக்ரேன் மீதான போரினால் தங்களது வணிக செயல்பாடுகளை நிறுத்துவதாக அமெரிக்க வங்கிகள் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 15 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேன் மீது தரை, வான், கடல் என மும்முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த அத்துமீறும் செயலுக்கு அந்நாட்டின் மீது உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: படாத பாடுபடும் ரஷ்யா…. “சேவையை நிறுத்தும்” பிரபல நிறுவனங்கள்…. லிஸ்டில் சேர்ந்த “அமேசான்”….!!

உக்ரேன் போரை முன்னிட்டு ரஷ்யாவிற்கு சில்லறை தயாரிப்புகள் மற்றும் பிரைம் வீடியோ வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 15 ஆவது நாளாக போரை தொடுத்து வருகிறது. இதனால் உலக நாடுகள் ரஷ்யாவிற்கு உக்ரைன் மீதான போரை முன்னிட்டு கண்டனம் தெரிவித்து வருகிறது. இவ்வாறு இருக்க அமெரிக்காவின் பணப்பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உக்ரேன் மீதான போரை […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய மேஜர் ஜெனரல்” சுட்டுக்கொலை…. பதிலடி கொடுத்த உக்ரேன்…. வெளியான தகவல்….!!

கிரிமியாவை கைப்பற்றியதற்காக பதக்கம் வென்ற மூத்த ராணுவ அதிகாரியான ரஷ்ய மேஜர் ஜெனரல் போரில் கொல்லப்பட்டதாக உக்ரேன் உளவுத் துறை தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 13 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்… “பொதுமக்கள் வெளியேற்றத்தை ரஷ்யா தடுக்குது”…. ஜெலன்ஸ்கி பகீர் குற்றச்சாட்டு….!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 13 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த இரு தரப்பு மோதலில் அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

இந்த ஆண்டும் “பிரபல நாடு கிரே பட்டியல்” தான்…. எதுக்குன்னு தெரியுமா…? இதோ வெளியான தகவல்….!!

ஐ.நாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்த அம்சத்தை பாகிஸ்தான் நிறைவேற்றாததால் நடப்பாண்டிலும் அந்நாடு கிரே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக எப்.ஏ.டி.எப் தெரிவித்துள்ளது. உலகெங்கிலுமுள்ள பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்கான கண்காணிப்பு பணிகளை பாரிசை தலைமையிடமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்த குழு பல நாடுகளில் இது தொடர்பான ஆய்வுகளை நடத்தி அதற்கேற்ப அவைகளை வகைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு இந்த […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு எதிரான “நியாயமான ஒருங்கிணைப்பை” முன்னெடுப்பார்…. 2 வார சுற்றுப்பயணம்…. தகவல் வெளியிட்ட அமெரிக்கா….!!

ரஷ்யா உக்ரேன் போருக்கு மத்தியில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹரிஷ் அடுத்த 2 வாரத்திற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24 ஆம் தேதி போர்தொடுக்க ஆரம்பித்துள்ளது. அவ்வாறு தொடுக்கப்பட்ட போர் தொடர்ந்து நேற்றோடு 10 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த போர் விவகாரத்தில் அமெரிக்கா ரஸ்யாவிற்க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அது மட்டுமின்றி அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளை அணிதிரட்டுவதில் முனைப்பு காட்டி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவை” விட்டு எல்லாரும் வெளியேறுங்க…. பிரபல நாட்டின் அதிரடி உத்தரவு….!!

ரஷ்யாவின் மீது பிரான்ஸ் பொருளாதார தடையை விதித்ததோடு மட்டுமின்றி அந்நாட்டிலிருக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை விச்சு, வான் மற்றும் தரைவழித் தாக்குதல் போன்றவற்றை நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்ய படைகள் உக்ரேனின் தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற நகரங்களை கைப்பற்றுவதற்காக தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

“உச்சமடையும் கொரானா”…. விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு…. வெளியான தகவல்….!!

தென்கொரியாவில் கொரோனா உச்சம் பெற்று வரும் நிலையில் கடந்த 4 ஆம் தேதியிலிருந்து அதிபர் தேர்தலுக்கு முன் கூட்டியே வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. தென்கொரியாவில் கடந்த 3 ஆம் தேதி 2,66,838 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க தென்கொரியாவில் வருகின்ற 9 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக சுமார் 3,500 க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதியிலிருந்து அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை”…. உக்ரேன் அதிகாரி படுகொலை…. பின்னணியில் யார்…? கட்டவிழ்க்கப்படுமா மர்மம்….!!

ரஷ்யாவுடன் போர் விவகாரம் தொடர்பாக சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உக்ரைன் அதிகாரி ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை விச்சு, வான் மற்றும் தரைவழித் தாக்குதல் போன்றவற்றை நடத்தி வருகிறது. இவ்வாறு இருக்க இரு நாடுகளுக்கிடையேயான சமரச பேச்சுவார்த்தையும் […]

Categories
உலக செய்திகள்

போர் விவகாரம்: “3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை” எப்போன்னு தெரியுமா…? வெளியான தகவல்….!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையேயான 3 ஆவது கட்ட பேச்சுவார்த்தை வருகின்ற மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க போரை கைவிட்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐநா பொது சபை உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளது. அதன்படி 2 நாடுகளும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் தான் சாக்குபோக்கு சொல்லுது… “3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை” எப்போ…? தகவல் சொன்ன ரஷ்ய மந்திரி….!!

உக்ரைன் போர் விவகாரம் தொடர்புடைய பேச்சு வார்த்தையை தாமதப்படுத்துவதற்கான சாக்கு போக்குகளை தொடர்ந்து முன்வைக்கிறது என்று ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க போரை கைவிட்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐநா பொது சபை உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளது. அதன்படி 2 நாடுகளும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. இதில் போர் […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு: ரஷ்யாவில் இனி “ATM கார்டுகள்” வேலை செய்யாது…. அதிரடி கொடுத்த பிரபல நிறுவனங்கள்….!!

உக்ரேன் மீது அதிபயங்கர தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர் கார்டு தங்களது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 10 ஆவது நாளாக அதிபயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரைனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கி தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை ரஷ்யா நடத்தி வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் விசா மற்றும் மாஸ்டர் கார்ட் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: தாக்குதல் நடத்த பச்சைக்கொடி…. ரஷ்யாவின் கையில் “நோட்டா” வா…? கடும் கோபத்தில் “ஜெலன்ஸ்கி”….!!

உக்ரைனின் வான் பரப்பில் விமானங்கள் பறக்கக் தடை விதிக்கும்படி அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த கோரிக்கையை நோட்டா அமைப்பு நிராகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக அதிபயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவ்வாறு இருக்க நோட்டா அமைப்பிடம் தங்களது வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கும்படி உக்ரேன் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை […]

Categories
உலக செய்திகள்

சொந்த காசுல சூனியம்னா இதானோ…. “இந்தியாவின் மீது பொருளாதார தடையா”…? தீவிர ஆலோசனையில் “ஜோ பைடன்”….!!

ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து அதிபர் ஜோ பைடன் ஆலோசித்து வருவதாக தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து 2016 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியா ஆயுதங்களை அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குகிறது. இதனால் இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிக்கவா வேண்டாமா என்று அதிபர் ஜோ பைடன் ஆலோசித்து வருவதாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: இந்தியாவின் ஆதரவு ரஷ்யாவிற்கா…? வீடியோவில் கசிந்த ரகசியம்…!!

நாளை ஏவப்படவுள்ள ஒன் வெப் ராக்கெட்டில் இந்தியா கொடியை தவிர அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொடிகளை மறைப்பது தொடர்புடைய வீடியோவை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்ஸின் தலைவர் வெளியிட்டுள்ளார். ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 8 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க ரஷ்யாவின் மீது அமெரிக்கா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“வன்முறையால் பாதிக்கப்பட்ட உக்ரேனுக்கு வழங்குகிறேன்”…. 65 கோடி ரூபாய் நிதி…. ஜப்பான் தொழிலதிபரின் அதிரடி முடிவு….!!

உக்ரேனின் அரசாங்கத்திற்கு ஜப்பானின் தொழிலதிபரான ஹிரோஷி 65 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்துள்ளது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரேனின் பல பகுதிகளை ரஷ்ய படை வீரர்கள் சூறையாடியுள்ளார்கள். இந்நிலையில் ஜப்பானின் ராகுடென் வர்த்தக நிறுவனத்தின் நிறுவனரான ஹிரோஷி உக்ரைனுக்கு 65 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் உக்ரேன் மீதான வன்முறையால் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! இப்படி ஒரு அவல நிலைமையா…? அகதிகளாக தஞ்சமடையும் “உக்ரேனியர்கள்”…. ஐ.நா அதிர்ச்சித் தகவல்….!!

ரஷ்ய படையெடுப்பு காரணமாக உக்ரேனை விட்டு பிப்ரவரி 26ஆம் தேதியன்று மட்டும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளார்கள். ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 4 ஆவது நாளாக போரைத் தொடுத்து வருகிறது. இதனால் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனியர்கள் தங்கள் நாட்டைவிட்டு அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளதாக ஐ.நா சபையின் அகதிகளுக்கான கமிஷனர் சபியா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, சுமார் 1,60,000 மக்கள் சர்வதேச எல்லையை […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “புதின் போரை நிறுத்தினார்”…. பட் “இந்த நாடு” தூண்டி விட்டுட்டு…. வெளியான பரபரப்பு தகவல்….!!

உக்ரேன் மீதான 2 ஆம் நாள் போருக்கு பிறகு ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அந்நாடு வர மறுத்துள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா வான், தரை, கடல் என மும்முனைகளிலிருந்தும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி தலைநகர் கீவையும் ரஷ்ய படை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளார்கள். இந்நிலையில் கிரெம்பிளின் என்று அழைக்கப்படும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “பொருள் மற்றும் உயிரிழப்புகள்” கவலையளிக்கிறது…. ஜெலன்ஸ்கியிடம் கூறிய மோடி….!!

போரால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், பொருளிழப்புகளும் கவலையளிப்பதாக உக்ரேன் அதிபரிடம் தொலைபேசியில் மூலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா வான், தரை, கடல் என மும்முனைகளிலிருந்தும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி தலைநகர் கீவையும் ரஷ்ய படை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளார்கள். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியிடம் உக்ரைன் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

“இந்திய அரசே” எங்களுக்கு ஆதரவு தாருங்கள்…. வேண்டுகோள் விடுத்த ஜெலன்ஸ்கி…. மோடியின் திட்டம் என்ன?….!

உக்ரேன் அதிபர் இந்திய பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஐ.நா பாதுகாப்பு சபையில் தங்கள் நாட்டிற்கு ஆதரவு தெளிவிக்கும் விதமான அரசியல் நிலைபாட்டை எடுக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் தொடர்ந்து 3 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால் போர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேனுக்கு “பிரான்ஸ்” ஆதரவு…. தேசியக்கொடி நிறத்தில் ஒளிர்ந்த “ஈபிள் கோபுரம்”….!!

பிரான்ஸிலுள்ள உலகப் புகழ் வாய்ந்த ஈபிள் கோபுரத்தில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு கொடியின் நிறங்களில் வண்ண விளக்குகள் ஒளிர்ந்துள்ளது. உக்ரேனில் ரஷ்யா தொடர்ந்து 3 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி ரஷ்யா தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு….! “ரஷ்யாவை குறிவைத்த ஹேக்கிங் குழு”…. முக்கிய தகவல்கள் கசிவு…. அதிர்ச்சியில் அதிகாரிகள்….!!

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களை அடையாளம் தெரியாத அனானமஸ் என்ற பெயர் கொண்ட ஹேக்கிங் குழு கசிய விட்டுள்ளது. உக்ரேனின் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 3 ஆவது நாளாக தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து ரஷ்யப் படைகளை அந்நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை தாக்கி அழித்துள்ளார்கள். இவர்களுக்கு உக்ரேன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக அடையாளம் தெரியாத அனானமஸ் என்று பெயர் கொண்ட […]

Categories
உலக செய்திகள்

“யாராவது கிட்ட வந்தீங்கன்னா” அணுவாயுதம் தான்…. மிரட்டல் விடுத்த “அதிபர் புதின்”…. 3 ஆவது நாளும் தொடரும் போர்….!!

உக்ரைனை ஆக்கிரமிப்பதை தடுக்கும் விதத்தில் எந்த ஒரு நாடும் நேரடியாக ரஷ்யாவை தாக்கினால் அது பயங்கரமான அணு ஆயுதத் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று மறைமுகமாக அதிபர் புடின் மிரட்டல் விடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து 3 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தப் போருக்கு முன்பாகவே அதிபர் புதின் உக்ரேன் விவகாரம் தொடர்பாக உலக நாடுகளுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்திருப்பது அம்பலமாகியுள்ளது. அதாவது ரஷ்யா மிகவும் பலம் வாய்ந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: ரஷ்யாவின் “வீட்டா அதிகாரம்”…. தோல்வியில் முடிந்த “ஐ.நா தீர்மானம்”…!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. உக்ரேனின் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 3 ஆவது நாளாக தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து ரஷ்யப் படைகளை அந்நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை தாக்கி அழித்துள்ளார்கள். இவர்களுக்கு உக்ரேன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா சபையில் இன்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு […]

Categories
உலக செய்திகள்

“பேச்சுவார்த்தைக்கு நாங்க ரெடி”…. எங்க, எப்போ வச்சிக்கலாம்…? தகவல் சொன்ன ஜெலன்ஸ்கி….!!

போர் நிறுத்தம் மற்றும் அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உக்ரேன் தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் உக்ரேனின் மீது தொடர்ந்து 3 ஆவது நாளாக வான், தரை, கடல் என மும்முனைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரேனின் பல பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதேபோல் உக்ரேன் அரசும் ரஷ்ய ராணுவத்திற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க உக்ரேன் நாட்டு அதிபரான ஜெலன்ஸ்கி முக்கிய […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “இந்தியாவின் ஆதரவு” ரஷ்யாவிற்கா….? ஐ.நாவில் வாக்கெடுப்பு…. அமெரிக்காவின் உறவில் புதிய விரிசல்….!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா உட்பட பல முக்கிய நாடுகள் பங்கேற்கவில்லை. உக்ரேனின் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 3 ஆவது நாளாக தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து ரஷ்யப் படைகளை அந்நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை தாக்கி அழித்துள்ளார்கள். இவர்களுக்கு உக்ரேன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா சபையில் இன்று உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

“தரை, வான், கடல்” என மும்முனையிலிருந்து தாக்கும் ரஷ்யா…. “சீன அதிபருடன்” ஆலோசனை நடத்திய புதின்…. முற்றுப்புள்ளி பெறுமா போர்….!!

உக்ரேனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சீன அதிபர் ஜின்பிங்குடன் ரஷ்ய ஜனாதிபதி புதின் ஆலோசனை நடத்தியுள்ளார். உக்ரேனில் நேற்று 2 ஆவது நாளாக தொடர்ந்து ரஷ்யா தங்களது தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யா கடல் வழி, தரைவழி, வான் வழி என மூன்று பகுதிகளிலிருந்தும் உக்ரேன் மீதான தங்களது தாக்குதலை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரேனின் பல பகுதிகளில் ரஷ்ய ஏவுகணை மழையையும் பொழிந்து வருகிறது. அதே போல் உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக்கொள்ள ரஷ்யாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

“இதுதான் உக்ரேன் பெண்மணி”…! பாசிசவாதிகளே “உங்களுக்கு இங்கே என்ன வேலை”…? அரண்ட ரஷ்ய வீரர்…. வைரலாகும் வீடியோ….!!

உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ வீரரிடம் அந்நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் உங்களுக்கு எங்கள் மண்ணில் என்ன வேலை என்று கேள்வி எழுப்பி கடுங்கோபத்துடன் வாதிடுவது தொடர்புடைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைனுக்குள் போர் தொடுத்த ரஷ்யா 2 ஆவது நாளான இன்றும் தங்களது வேலையை தொடர்ந்து காண்பித்து வருகிறது. இதனையடுத்து உக்ரேனின் பல பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. இவ்வாறு இருக்க உக்ரேனின் தலைநகரான கீவ் நகரம் முழுவதும் இரவு […]

Categories
உலக செய்திகள்

“ஏவுகணை மழையைப் பொழியும்” ரஷ்யா… கவலைக்கிடமான “தமிழ் மாணவர்களின்” நிலைமை…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து அந்நாட்டின் தலைநகருக்கு அருகேவுள்ள வினிட்சியா பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அங்கே இருக்கும் சுரங்க அறையில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 2 ஆவது நாளாக போரைத் தொடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. இவ்வாறு இருக்க ரஷ்யா உக்ரைனிலுள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்: நெஞ்சை பதைக்கும் வீடியோ…. “மகளை கட்டியணைத்து கதறிய தந்தை”…. 130க்கும் மேல் பலி….!!

ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து உக்ரைனை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பும் போது இருவரும் அழுவது தொடர்புடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஷ்யா உக்ரேனில் 2 ஆவது நாளாக போரை தொடுத்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு இருக்க ரஷ்யாவின் இந்த அதி பயங்கர தாக்குதல் ராணுவ வீரர்கள் உட்பட தற்போது வரை 130 க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் ரஷ்யா உக்ரேனில் நடத்திவரும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: இன்று ரஷ்யாவின் தடை “சட்டமாக மாறும்”…. கண்டனம் தெரிவித்த “உலகத் தலைவர்கள்”….!!

அதிபர் புதின் ஒரு திட்டமிட்ட போரை தேர்ந்தெடுத்துள்ளார் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேலான படைகளை குவித்திருந்த புதின் அதிரடியாக அந்நாட்டிற்குள் நேற்று போரை தொடுத்துள்ளார். இந்த செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். அதன்படி அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதின் ஒரு திட்டமிட்ட போரை தொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் ஜெர்மனியின் பிரதமரான […]

Categories
உலக செய்திகள்

போர் எதிரொலி: ஒரே நாளில் ஆட்டம் கண்ட “சர்வதேச சந்தை”…. 100 டாலரை கடந்த….!!

உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தொடங்கிய தாக்குதலையடுத்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது. உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த ரஷ்ய படைகள் நேற்று அதிரடியாக அந்நாட்டின் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதுகுறித்து அதிபர் விளாடிமிர் புதின் தங்கள் நாட்டை பாதுகாக்க உக்ரைனை ஆக்கிரமிப்பதை தவிர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் “உக்ரைன் மீதான இந்த அதிரடி தாக்குதலால்” நேற்று ஒரே நாளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரேனை ஆக்கிரமிப்பதை தவிர வேறு வழி தெரியல”…. அப்பாவி பொதுமக்கள் இலக்கல்ல…. புதின் அதிரடி…!!

உக்ரைனை ஆக்கிரமிப்பதை தவிர ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரேன் நோட்டா அமைப்புடன் சேர்வதற்கான பணிகளை துவங்கியுள்ளது. இதனால் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா உக்ரேனை மிக கடுமையாக எச்சரித்துள்ளது. இதனையடுத்து ரஷ்யா உக்ரேனின் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைவீரர்களை குவித்ததோடு மட்டுமின்றி போர் தொடக்கத்தின் முதல் கட்டமாக உக்ரைனிலுள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நாடுகளாக […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! அடுத்தடுத்து சிதைந்த உக்ரேன்…. “முதல் நாள் போர் வெற்றிகரமானது”…. ரஷ்யா அதிரடி…!!

உக்ரேனின் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்த சில மணி நேரங்களுக்கு பிறகு முதல் நாள் போர் வெற்றிகரமானது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடித்து வந்துள்ளது. இதனையடுத்து உக்ரேன் நோட்டா அமைப்பில் சேர நினைத்துள்ளது. ஆனால் இதற்கு ரஷ்யா உக்ரேனை மிக கடுமையாக எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கு மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இதற்காக […]

Categories
உலக செய்திகள்

“வெடிகுண்டு சத்தத்த” போட்டுட்டு வந்தாங்க பாருங்க…. பொழியும் ஏவுகணை…. மிரண்டுபோன உக்ரேன்….!!

உக்ரைனிலுள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் தீவிரம் காட்டி வரும் ரஷ்யா அந்நாட்டிற்குள் பல்வேறு எல்லைப்பகுதிகள் வழியாக ஊடுருவி நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் நோட்டா அமைப்பில் சேர்வதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்துக்கு […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களை குறிவைக்கும் “ஆன்லைன் மோசடி கும்பல்”…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…. மிரண்டுபோன போலீஸ்….!!

இந்தியர்களை குறிவைத்து ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்த இரண்டு சீனர்கள் மற்றும் 115 நேபாளிகளை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். நேபாளத்தின் தலைநகரான காத்மண்ட் மற்றும் பக்தபூரில் இந்தியர்களை குறிவைத்து சில கும்பல் ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய அதிகாரிகள் இது தொடர்பாக 2 சீனர்கள் மற்றும் 115 நேபாளிகளை கைது செய்துள்ளார்கள். அவர்களிடம் […]

Categories
உலக செய்திகள்

“27 வயது நடிகையிடம்” மயங்கிய எலான் மஸ்க்…. இணையத்தில் வைரலாகும் பேச்சு….!!

உலக பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்திலிருக்கும் 50 வயதாகின்ற தொழிலதிபர் எலான் மஸ்க் 27 வயதாகும் நடிகை நட்டாஷாவுடன் காதல் வலையில் சிக்கியுள்ளார். உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் ஆவார். இவருக்கு கடந்த 2000ம் ஆண்டு ஜஸ்டின் என்பவருடன் திருமணம் முடிந்துள்ளது. இவரை 2008ஆம் ஆண்டு எலான் விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து அவர் டலுலா என்ற நடிகையை 2 தடவை திருமணம் முடித்து இரண்டு முறையும் விவாகரத்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “எந்த சமரசமும் கிடையாது”…. விளாடிமிர் புதின் திட்டவட்டம்….!!

உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நலன்களில் எந்த சமரசமும் செய்ய போவதில்லை என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இதற்கிடையே ரஷ்யா உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல முறை அதனை எச்சரித்துள்ளது. இருப்பினும் தங்களுக்கு உக்ரேன் மீது போர் தொடுக்கும் எண்ணமில்லை என்று ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “இந்தியர்களின் நல்வாழ்வுக்கு” முன்னுரிமை கொடுங்கள்…. அவசரக் கூட்டத்தில் வலியுறுத்திய “டி.எஸ் திருமூர்த்தி”….!!

உக்ரேனில் வாழும் இந்தியர்களின் நல்வாழ்வு தான் எங்களுக்கு முன்னுரிமை என்று ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ் திருமூர்த்தி அவசரகால கூட்டத்தில் வைத்து பேசியுள்ளார். உக்ரேன் ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக நடந்த அவசரக் கூட்டத்தில் இந்திய தூதர் டி.எஸ் திருமூர்த்தி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது உக்ரைனில் வாழும் இந்தியர்களின் நல்வாழ்வு தான் எங்களுக்கு முன்னுரிமை என்று கூறியுள்ளார். மேலும் உக்ரைனில் அமைதி மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி: “இதுக்கு மட்டும் தான்” வெயிட்டிங்…. உக்ரைனை தாக்க காத்திருக்கும் ரஷ்யா…. வெளியான ஷாக் தகவல்….!!

ரஷ்யாவுக்கு வெளியே அந்நாட்டு படைகளை பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் படி அதிபர் விளாடிமிர் புதின் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ரஷ்யா உக்ரைனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குதித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…! “டெல்டாவை ஓவர்டேக்” செய்த ஓமிக்ரான்…. திணறும் அமெரிக்கா….!!

அமெரிக்காவில் டெல்டா பாதிப்புகளை விட தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஓமிக்ரானால் 17 சதவீத கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆபிரிக்காவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி முதன் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி அனைவரிடத்திலும் பெரும் அச்சத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் டெல்டா பாதிப்பை விட ஓமிக்ரானால் மிகக் கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு…! “இதுல எதாவது உள்குத்து இருக்கா”…? ரஷ்யா-பெலாரஸ் “கூட்டு போர் பயிற்சி” நீட்டிப்பு…. வெளியான அதிரடி தகவல்….!!

ரஷ்யா-பெலாரஸ் ராணுவ கூட்டு பயிற்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அது மேலும் ஒரு வாரம் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் நீண்ட தெற்கு எல்லையை பகிர்ந்துள்ள பெலாரஸ் ராணுவத்துடன் இணைந்து 10 நாட்கள் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த கூட்டு ராணுவ பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் அது மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக பெலாரசின் விக்டர் பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெலாரசின் பாதுகாப்பு துறை அமைச்சர் விக்டர் கூறியதாவது, ரஷ்யா […]

Categories

Tech |