தோட்டத்தில் பல்வேறு வகையான பொம்மைகளை வைத்து அனைவரின் கவனத்தையும் ஆஸ்திரேலியா பெண் ஒருவர் ஈர்த்துள்ளார். நாம் அனைவரும் வீட்டின் முன்புறம் இருக்கும் தோட்டத்தில் பல்வேறு வகையான செடிகளை நடுவது மற்றும் அலங்கரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோம். இது நமக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள அடலேட் பகுதியில் ஸ்மித் என்ற பெண்மணி 8 ஆண்டுகளாக அவரின் வீட்டின் முன்புறம் உள்ள தோட்டத்தை அலங்கரித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அதில் அதிக ஆர்வம் கொண்ட […]
Tag: உலகச் செய்திகள்
ஐ.நா சபையின் இந்தியாவிற்கான நிரந்தர உறுப்பினர் ஹைதி நாட்டிற்கு தங்களது ஆதரவை தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினரான டி. எஸ். திருமூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது “வட அமெரிக்காவிலுள்ள கரீபியன் தீவுகளில் ஹைதி நாடு உள்ளது. தற்பொழுது ஹைதி நாடானது தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த நிலையில் அங்கு கடத்தல், பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல், கொலை கொள்ளை […]
வீட்டில் நுழைந்து திருட முயற்சி செய்தவர்களை தலீபான்கள் கொன்று சடலமாக பொது இடத்தில் தொங்கவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள Herat மாகாணத்தில் obe மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இரண்டு திருடர்களின் சடலங்களானது ஜேசிபி வாயிலாக தொங்கவிடப்பட்டுள்ளது. அதிலும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்பவர்களை எச்சரிக்கும் விதமாக தான் பொது இடத்தில் சடலங்களை தலீபான்கள் தொங்கவிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இது குறித்து Herat மாகாண கவர்னரான Maulvi Shirahmad Ammar தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” அந்த மாவட்டத்தில் […]
மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நிட்வால்டன் மாநிலத்தின் Wolfenschiessen கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருக்கும் பள்ளி ஒன்றின் நிர்வாகம் அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆபத்தான விளையாட்டு குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இருப்பினும் மாணவர்கள் இந்த ஆபத்தான விளையாட்டு குறித்த எந்தவொரு கவலையுமின்றி இருப்பதாக ஊடக கல்வியாளரான Joachim Zahn தெரிவித்துள்ளார். அதிலும் இந்த விளையாட்டானது மூச்சை திணறவைக்கும் ஆபத்தான ஒன்றாகும். […]
மீன் பிடிக்க அனுமதி கோரி மீனவர்கள் அளித்த 47 விண்ணப்பங்களில் 12 மட்டுமே பிரித்தானியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியாவிற்கு சொந்தமானது ஜெர்ஸி தீவாகும். இத்தீவில் மீன் பிடிப்பதற்காக அனுமதி கோரி பிரான்ஸ் மீனவர்கள் விண்ணப்பம் ஒன்றை பிரித்தானியாவிடம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த 47 விண்ணப்பங்களில் 12 மட்டுமே பிரித்தானியவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் மிகவும் கோபம் அடைந்துள்ளது. மேலும் பிரான்சு ஐரோப்பிய அமைச்சரான Clement Beaune பிரித்தானியாவிற்கு விநியோகிக்கப்படும் மின்சாரமானது துண்டித்துவிடப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து […]
கனரக வாகனங்களுக்கான ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கனடா அரசு திணறி வருகிறது. பிரித்தானியாவில் பிரெக்சிட் விவகாரம், ஓட்டுனர்கள் முதிர்ச்சியடைந்து பணியிலிருந்து ஓய்வு பெறுதல், கடினமான பணிச்சுமை ஆகியவை கனரக ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட முக்கிய காரணங்களாகும். இதே நிலைமையானது தற்பொழுது கனடாவிலும் ஏற்பட்டுள்ளது. இதில் பிரெக்சிட் விவகாரம் தவிர்த்து மற்ற அனைத்து பிரச்சனைகளும் அடங்கும். அதிலும் நடப்பு ஆண்டின் இரண்டாவது பாதியில் சுமார் 18,000 ஓட்டுனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கனடா கணித்துள்ளது. மேலும் வரும் 2025 […]
இளவரசரை அவரது காதலியுடன் சேர்த்து வைத்தவருக்கு பரிதாபகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியா இளவரசர் வில்லியம் கல்லூரி படித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் ஃபேஷன் ஷோவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே அனைவரையும் ஈர்க்கும் விதமாக ஒரு பெண் மெல்லிய உடையணிந்து அழகுற நடந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை கண்டு வில்லியம் மயங்கி காதலில் விழுந்துவிட்டார். குறிப்பாக அந்த பெண் வேறு எவருமில்லை இளவரசி கேட் தான். அதுவும் முதலில் அவர்களின் காதல் மோதல், பிரிவு என பலவற்றை […]
தடுப்பூசி போட விருப்பம் இல்லாததால் வாட்டிகனில் போப் பிரான்சிஷின் பாதுகாவலராக இருந்த 3 பேர் சுவிட்சர்லாந்துக்கு திரும்பி சென்றுள்ளனர். வாட்டிகனில் போப் பிரான்சிஸ் அவர்களுக்கு பாதுகாவலராக பணியில் ஈடுபட்டிருந்த சுவிட்சர்லாந்தை சேர்ந்த மூவர் தடுப்பூசி போடாத காரணத்தினால் அந்நாட்டிற்கு திரும்பி சென்றுள்ளனர். மேலும் வாட்டிகனுக்குள் நுழையும் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் அல்லது தங்களுக்கு கொரோனா இல்லை என பரிசோதனை செய்து நிரூபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட்டிருந்தது. இந்தநிலையில் சுவிஸ் நாட்டவர்களான இந்த […]
உணவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால் ஊழியர்களும் விடுதியில் தங்கியிருந்தவர்களும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பிரித்தானியாவில் உள்ள Scarboroughவில் இருக்கும் Grand Hotelக்கு நேற்று காலை 10.15 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் உணவகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அச்சமடைந்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உணவகத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த ஊழியர்களையும் அதற்கு அருகிலிருந்த விடுதியில் தங்கியிருந்தவர்களையும் அவசரமாக அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் […]
இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்கள் நேற்று திடீரென சமூகவலைதளம் முடங்கியதற்காக மன்னிப்பு கோரியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் நேற்று மாலை சமூக வலைதளங்கள் திடீரென முடங்கியது. மேலும் பயனாளர்கள் இரவிலும் சமூக வலைதளம் முடக்கம் தொடர்ந்ததால் பெரும் அவதிக்குள்ளாகினர். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்களை எப்போதும் போல் பயனாளர்களால் பயன்படுத்த இயலவில்லை. இதற்கிடையே பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து வாட்ஸ் அப், […]
மசூதியின் நுழைவாயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இருக்கும் ஒரு மசூதியில் தலீபான்களின் செய்தி தொடர்பாளரான சபியுல்லா முஜாஹதின் தாயார் அவர்களுக்கு நேற்று முன்தினம் நினைவேந்தல் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மசூதியின் நுழைவாயிலில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதனால் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்துள்ளனர். இதனை தொடர்ந்து 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த […]
பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் சாக்வால் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் பேருந்து ஒன்று இரவில் கராச்சிக்கு சென்று கொண்டிருந்துள்ளது. அதிலும் அந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். குறிப்பாக கானேவால் மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அதன் டயர் வெடித்து சிதறியுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது […]
மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை கொன்றதாக செவிலியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள செஸ்டர் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் செவிலியராக 31 வயதான லூசி லெட்பி என்பவர் பணிபுரிந்துள்ளார். இவர் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் மட்டும் அந்த மருத்துவமனையில் ஐந்து ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என மொத்தம் எட்டு பேரை கொலை செய்துள்ளதாக லூசி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி மேலும் பத்து குழந்தைகளை கொல்ல […]
பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தலைவரிடம் மதத் தலைவர்கள் கோரிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளனர். ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை பருவநிலை மாற்றம் உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பசுமை வீடு வாயுக்கள் என்றழைக்கப்படும் நீராவி, கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை அதிகப்படியாக உமிழப்படுவதை தடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் மற்றும் பல்வேறு மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் கோரிக்கை […]
பிரிட்டனில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பழங்கால குகை ஒன்று ஆராய்ச்சி குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித இனமானது பல்வேறு பரிணாம வளர்ச்சியில் தான் தோன்றியது. அவ்வாறு தோன்றும் பொழுது பல்வேறு இனங்கள் அழிந்திருக்கும். அதில் ஒன்று தான் நியாண்டர்தால் மனித இனம். இவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பிரிட்டனில் உள்ள ஜிப்ரால்டர் பகுதியில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்ட வான்கார்ட் குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கிடைத்த பழங்கால தொல்பொருள்களின் […]
நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் carmichael என்னும் சுரங்கம் அமைந்துள்ளது. இதனை அதானி குழுவினர் வாங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பூர்விகமாக வசிக்கும் மக்களை வெளியேற்றுமாறு காவல்துறையினரிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை வெளியேற்ற முடியாது என்று கூறியுள்ளனர். இது தொடர்பான ஒரு செய்தியை ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் “வாங்கன் மற்றும் ஜகலிங்கூ பழங்குடியினர் இங்கு பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அங்கு நிலக்கரிச் […]
அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏழு பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலியாவில் ஜனாலே என்ற பகுதியானது லோயர் ஷாபெல்லேவிற்கு தெற்கில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் பஸ்லே மற்றும் புலோ-அலூண்டி கிராமங்களில் பாதுகாப்பு குழுவினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையினால் அங்கிருந்த அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக பயங்கரவாதிகளின் […]
கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து பாலி விமான நிலையம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நான்காவது நாடாக இந்தோனேசியா உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கொரோனா தொற்று பரவலானது அதிகமாக காணப்பட்டதால் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்பொழுது கொரோனா தொற்று பரவலானது படிப்படியாக குறைந்து வருவதால் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக முடக்கப்பட்ட விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் வரும் […]
புயல் தாக்கத்தின் காரணமாக மஸ்கட் நகரத்தின் வீதிகள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஓமனை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புயல் தாக்கியுள்ளது. அதற்கு சஹீன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த புயலானது மணிக்கு 120 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்துள்ளது. இதனால் கடற்கரையை ஒட்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அனைத்து வீதிகளும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இருப்பினும் புயல் கரையை கடந்த பிறகு அதன் வலிமை குறைந்துள்ளதாக […]
அதிக வலிமை வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தை பெற்றுள்ளது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு கடவுச்சீட்டு மிகவும் அவசியம். இதனை மற்ற நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதி சீட்டு என்று கூட கூறலாம். இந்த நிலையில் தற்பொழுது Arton Capital கடவுச்சீட்டு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அதிக புள்ளிகள் பெற்று உலகளவில் முதலிடத்தை ஐக்கிய அரபு அமீரகம் பிடித்துள்ளது. ஏனென்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 152 நாடுகளுக்கு செல்லலாம் […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து உலக நாடுகள் அங்கிருந்த தங்களது தூதரகத்தை காலி செய்ததை மீண்டும் திறப்பதற்கு அந்நாட்டில் தலிபான்களால் அமையப்பெற்ற புதிய ஆட்சியின் துணை பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதுமே உலக நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக அங்கிருந்த தங்களது தூதரகத்தை மூடியுள்ளது. இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களால் அமையப்பெற்ற புதிய ஆட்சியின் துணைத்தலைவர் சீனா, ரஷ்யா, […]
கனடாவில் விமான விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் செஸ்னா 172 என்ற விமானம் ஒன்று மான்ட்ரியல் நகரிலிருந்து புறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த விமானம் உயர பறக்க தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் அந்த செஸ்னா 172 என்ற விமானத்தில் இருவர் பயணித்ததாகவும் அதில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் மற்றொருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விபத்திற்கான காரணம் […]
இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சுகாதார அட்டையை சட்டபூர்வமாக அமலுக்கு கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்படலாம் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் பெற்று கொண்டதனை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் பொது இடங்களுக்குள் நுழையும்போது சுகாதார அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சுகாதார அமைச்சகம் அந்த முடிவில் காலதாமதம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 15-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் பெற்றுக் […]
ஷூரா அமைப்புக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று கத்தாரில் தேர்தல் நடைபெற்றுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் ஷூரா அமைப்பு பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான முதல் தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் 45 பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் மூன்றில் இரண்டு பங்கு பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். இந்த தேர்தலில் சுமார் 300 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். குறிப்பாக சட்டங்களை தோற்றுவித்தல், பட்ஜெட்களை அங்கீகாரம் செய்தல், முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்தல் போன்ற நடவடிக்கைகளை ஷூரா அமைப்பு மேற்கொண்டு வருகிறது. […]
அமெரிக்காவில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 320-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 4 கோடியே 36 லட்சத்து 19 ஆயிரத்து 754-ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் கொரோனாவுக்கு எதிரான போரில் சிறிதளவு மாற்றம் தென்படுவதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த மாத தொடக்கத்தில் மருத்துவமனைகளில் கொரோனா மீட்பு சிகிச்சையில் 93 ஆயிரம் பேர் இருந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது […]
பாகிஸ்தானில் பாடம் கற்க வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் மற்றும் அவருக்கு உதவி செய்த நபர் ஆகியோருக்கு அந்நாட்டின் நீதிமன்றம் அதிரடியான தண்டனையை விதித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக பள்ளிக்கு பாடம் கற்க வந்த 12 வயது மாணவியை ரஹ்மான் என்னும் ஆசிரியர் அவரது உதவியாளர் முயற்சியில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு மட்டுமின்றி அந்த மாணவியை பாலைவனத்தில் விட்டு விட்டு அங்கிருந்து இருவரும் தப்பி சென்றுள்ளார்கள். இதனையடுத்து பாலைவனத்தில் தனியாக […]
இங்கிலாந்தில் பிரக்சிட்டையடுத்து ஏற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் தட்டுப்பாட்டை போக்கும்படியான முக்கிய தகவலை அந்நாட்டின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் பிரக்சிட்டையடுத்து கனரக வாகன ஓட்டுனர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் தொடர்ந்து உணவு உட்பட பல அத்தியாவசிய பொருட்களுக்கும் கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி பெட்ரோல் மற்றும் டீசலின் விற்பனைக்கு கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கிறிஸ்துமஸ் வரை […]
கனடாவில் கரடிகளை புகைப்படம் எடுப்பதற்காக சென்ற புகைப்பட கலைஞருக்கு எதிர்பாராமல் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சால்மன் வகை மீன்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய காலகட்டம் என்பதால் grizzly bear எனும் கரடிகளையும் இந்த காலகட்டத்தில் அதிகமாக காண இயலும். இந்த நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் புகைப்படக் கலைஞர் ஒருவர் கரடிகளை புகைப்படம் எடுப்பதற்காக Babine ஏரிக்கரை வழியாக சென்றுள்ளார். அதாவது இந்த காலகட்டத்தில் சால்மன் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதால் அந்த இடம் கரடிகளை காண்பதற்கு […]
அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சையின் போது அழுத பெண்ணுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சை என்றாலே பொதுவாக அனைவருக்கும் பயம் ஏற்படும். அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்களிடம் நோயாளிகள் சில நேரங்களில் கத்துவது, கையை பிடித்து இழுப்பது, அழுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர். அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த மிட்ச் எனும் பெண் தனது மச்சத்தை நீக்குவதற்காக மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மச்சத்தை […]
பிரான்சில் இரண்டு மகள்கள் தாய் உயிரிழந்தது கூட தெரியாமல் அவருடைய சடலத்துடன் வசித்து வந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள Le Mans (Sarthe) என்ற நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்த சிறுமி ஒருவர் பள்ளிக்கு ஒரு வாரமாக செல்லாமல் இருந்துள்ளார். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் பள்ளிக்கு தகவல் அளிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமியின் குடும்பத்தினரை பள்ளி நிர்வாகம் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளது. ஆனால் சிறுமியின் குடும்பத்தினரிடமிருந்து […]
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் அமெரிக்க துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ்-க்கு வாஷிங்டனில் இரண்டு படுக்கை அறை கொண்ட 1,730 சதுர அடியிலான வீடு ஒன்று இருந்துள்ளது. அந்த வீட்டினை கமலா ஹாரிஸ் 2017-ஆம் ஆண்டு 1.775 மில்லியன் டாலருக்கு வாங்கி தற்போது அதனை 1.85 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சான் பிரான்சிஸ்கோவில் […]
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த உதவும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் மாத்திரை ஒன்றை கண்டறிந்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இவ்வாறு உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக […]
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது. இது குறித்த தகவலை புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும் நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்துள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத […]
ஈகுவடாரிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அந்நாட்டு அரசாங்கம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ஈகுவடார் நாட்டில் குயாஸ் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள சிறையில் அதிகபடியான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆகையினால் அந்த சிறையிலுள்ள கைதிகளுக்கிடையே அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க ஈகுவடார் அரசாங்கம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது குயாஸ் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள் உட்பட சுமார் 2,000 […]
இந்தியா பிரித்தானியாவிலிருந்து வருபவர்களுக்கு பரஸ்பர கட்டுப்பாடுகளை விதிக்க நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரஸ்பர (இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு பிரித்தானியாவில் விதிக்கப்படும்) கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அக்டோபர் 4 முதல் இந்தியாவில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அனைத்து […]
ரைஸ் குக்கரை திருமணம் செய்த இந்தோனேசிய நபர் ஒருவர் 4 நாட்களில் விவாகரத்து பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் வசித்து வரும் கொய்ருல் அனாம் என்னும் நபர் ரைஸ் குக்கரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் அந்த நபர் சட்டபூர்வமாக தனது திருமணத்தை மாற்றுவதற்காக ஆவணங்களிலும் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமூக வலைதளங்களில் அந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த நபர் குக்கரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற […]
நேற்று ருமேனியா நாட்டில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை ருமேனியா நாட்டின் கான்ஸ்டன்டா துறைமுக நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ருமேனியாவின் அவசரகால சூழ்நிலை ஆய்வாளர் ஒருவர் அனைத்து நோயாளிகளும் கான்ஸ்டன்டா மருத்துவமனையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதோடு தீயும் நள்ளிரவில் அணைக்கப்பட்டதாக கூறியுள்ளார். இதற்கிடையே சுகாதார அமைச்சகம் இந்த விபத்து குறித்த […]
ஆஸ்திரேலிய நாடு இந்தியாவின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை “கோவிஷீல்டு” என்ற பெயரில் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார மையத்தின் அனுமதி பெற்ற தடுப்பூசிகள் உட்பட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியா நாடு இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் இந்திய […]
கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக இந்த மாதம் முடிவு எடுக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரப் பட்டியலில் சேர்க்க கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த உலக சுகாதார அமைப்பு இது தொடர்பாக இம்மாதம் முடிவு […]
லண்டனில் 33 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டனை சேர்ந்த Sarah Everard (33) எனும் இளம்பெண் Clapham பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். இந்த நிலையில் காவல்துறை அதிகாரியாக போலி வேடமிட்டிருந்த Wayne Couzens (48) என்னும் நபர் Sarah-வை இடைமறித்து பேசியுள்ளார். அப்போது sarah தான் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் என்று அந்த நபரிடம் கூறியுள்ளார். […]
சீனாவில் உள்ளூர் அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்று உறுதியான மூன்று வீட்டு பூனைகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி சீனாவில் Miss Liu எனும் பூனைகளின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து Miss Liu தனிமைப்படுத்தப்பட்டதோடு அவருடன் இருந்த 3 பூனைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில் மூன்று பூனைகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் பூனைகளின் உயிரை […]
இத்தாலியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய பிரபல சமூக ஆர்வலர் உலக தலைவர்களை விமர்சனம் செய்துள்ளார். இத்தாலியில் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக சர்வதேச அளவில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலரான கிரேட்டா என்னும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் பங்கேற்றுள்ளார். இதனையடுத்து சுற்றுசூழல் மாசுபாடு தொடர்பாக நடைபெற்ற அந்த மாநாட்டில் பேசிய கிரேட்டா உலகத் தலைவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகத் தலைவர்கள் சர்வதேச அளவில் […]
ஒரே ஒருமுறை மட்டும் சார்ஜ் போட்டுக்கொண்டால் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்யக்கூடிய புதிய வகை மின்சார காரை பிரபல நிறுவனம் தற்போது அறிமுகம் செய்யவுள்ளது. மிகவும் பிரபல நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் எதிர்வரும் 20 வருடங்களில் மின்சார கார்களை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் ஒரே ஒரு முறை மட்டுமே சார்ஜ் போட்டுக்கொண்டால் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்யக்கூடிய அதிரடியான மின்சார கார் ஒன்றை தற்போது அறிமுகம் செய்யவுள்ளது. இவ்வாறு […]
நாசாவால் ஏவப்பட்ட ராக்கெட் மீண்டும் பூமியை வந்தடையும் போது திடீரென ஏற்படுத்திய முக்கோண அளவிலான ஒளியை கண்ட இங்கிலாந்து பொதுமக்கள் பீதியடைந்துள்ளார்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அட்லஸ் வி என்னும் ராக்கெட்டை விண்வெளி மண்டலத்திற்கு ஏவியுள்ளது. இதனையடுத்து அந்த ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது திடீரென முக்கோண அளவிலான ஒளியை வானில் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு உருவான ஒளியைக் கண்ட இங்கிலாந்து பொதுமக்கள் அது வேற்று கிரக விண்கலம் என்று நினைத்து அச்சமடைந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி […]
சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பாக சூரிய வளிமண்டலத்திலிருக்கும் கிரகங்கள் அனைத்தும் எவ்வாறு உருவானது என்பதை ஆராய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வியாழன் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும் சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பாக எவ்வாறு உருவாகியிருக்கும் என்பதை ஆராய வியாழன் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை ஏவ திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் லூசி என்னும் விண்கலத்தை வியாழன் கிரகத்திற்கு […]
காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு இளம் சமூக ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் உரையாற்றியுள்ளார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சமூக ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் காலநிலை மாற்றம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவர் தனது இளம் வயதில் இருந்தே சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து சர்வதேச அளவிலான மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அதிலும் பொது மேடைகளிலும் மாநாடுகளிலும் தனது கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்வார். அதிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த எந்தவொரு […]
தலீபான்களின் அச்சுறுத்தல் காரணமாக மகளிர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் சில வருடங்களாக மகளிர் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை 23 வயதான நிலாப் துராணி என்பவர் நடத்திவருகிறார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பின்பு பள்ளி திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அவர்கள் ஆட்சி அமைந்தவுடன் ஒரு பெண் கூட ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்காக பள்ளிக்கு வரவில்லை என்று கூறுகிறார். மேலும் முன்பதிவு செய்திருந்த பெண்களும் […]
கைக்குழந்தை ஒன்று பிச்சையெடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படமானது வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது பத்து மாத கைக்குழந்தையை வறுமையின் காரணமாக 20,000 rupiahவிற்கு இரவலாக கொடுத்துள்ளார். இதனையடுத்து குழந்தையின் உடல் முழுவதும் சிலவர் நிறச்சாயம் பூசப்பட்டு குறிப்பிட்ட சாலையில் பிச்சை எடுப்பதற்காக பயன்படுத்தியுள்ளனர். இந்த குழந்தை சில்வர் நிறச்சாயத்துடன் இருக்கும் புகைப்படமானது சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இது அனைத்து சமூக ஆர்வலர்களையும் தட்டி எழுப்பி நடவடிக்கை மேற்கொள்ள செய்துள்ளது. அதாவது […]
உலக நாடுகள் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதால் எரிபொருளின் தேவை அதிகரித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று பாதிப்பானது தற்பொழுது தான் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுகளை தளர்த்தி வருகின்றனர். மேலும் தங்களது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான முயற்சியை தொடங்கியுள்ளனர். இதனால் எரிபொருளின் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் இந்த எண்ணெயின் ஒரு பீப்பாய் விலையானது கடந்த ஐந்து […]
தங்க நிறத்தில் கை ஒன்று தெரிவது போன்ற புகைப்படத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். நமது விண்வெளி என்பது பல்வேறு ஆச்சரியத்தக்க அதிசயங்களை உள்ளடக்கிய ஒரு அழகான இடமாகும். அங்கு நடக்கும் அதிசயங்களை பார்ப்பதற்கு நமக்கு இரு கண்கள் போதாது. மேலும் அவ்வப்போது நாசா விண்வெளி மையம் விண்ணில் இருந்து புகைப்படங்களை அனுப்பும். அந்த வகையில் தற்பொழுது அது போன்ற புகைப்படத்தை நாசா அனுப்பி வைத்துள்ளது. அதில் விண்வெளியின் ஆழமான இருட்டில் தங்க நிறத்தில் கை போன்ற […]