குறுகிய காலத்தில் அதிக அளவு வாடிக்கையாளர்களை பெற்று தந்ததால் டிக்டாக் நிறுவனம் மக்களுக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். உலகில் அதிக அளவு பயனாளர்களை கொண்டது டிக்டாக் செயலி ஆகும். இதில் இசையுடன் நடனம் மற்றும் தனித்திறமைகளை காணொளியாக எடுத்து வெளியிடுவர். தற்பொழுது இந்தியாவில் மட்டும் பலக்கோடி பேர் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தினந்தோறும் 5.5 கோடி வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். மேலும் இப்பொழுது மாதம் 100 கோடி பேர் இதனை […]
Tag: உலகச் செய்திகள்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் தனிமைப்படுத்துதலுக்கான காலத்தை ஜப்பான் அரசு குறைந்துள்ளது. ஜப்பானில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை 14 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. மேலும் இந்தியா போன்ற கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள 40 நாடுகளிலிருந்து வருபவர்களும் அரசு தங்க வைக்கும் இடத்தில் இருக்கும் மூன்று நாட்கள் உட்பட மொத்தம் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனிமைப்படுத்துதலுக்கான நாட்களை […]
புதிய அரசியலமைப்பை அமல்ப்படுத்தப்போவதாக தலீபான்களின் நீதித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்களின் கைவசம் சென்றது. இதனால் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனையடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் தங்களது கொடியை நாட்டினர். இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ராணுவப் படைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர். தற்போது ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தலீபான்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் புதிய […]
சீனாவின் வான் மற்றும் கடற்படையினர் போர்க்கப்பலை எச்சரிப்பதற்காக பின்தொடர்ந்துள்ளனர். தைவான் எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறுகிறது. மேலும் தைவான் ஜலசந்தியின் வழியாக சர்வதேச கப்பல்கள் செல்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதிலும் ஐ.நா.சபை வடகொரியாவுக்கு எதிராக வருவாய்த்துறையின் நடவடிக்கையாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதற்காக பிரித்தானியாவின் HMS Richmond என்ற போர்க்கப்பல் சீனாவின் தென்கிழக்கு பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் HMS Richmond தைவான் ஜலசந்தியை வியட்நாம் செல்லும் வழியில் […]
இங்கிலாந்து நாடு மூக்கு வழி பயன்படுத்தும் ஸ்பிரே மருந்தை கொரோனா வைரஸ் நோயை தடுக்க உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் கோடிக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் அரசாங்கம் தடுப்பூசி போடும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை தடுக்க இங்கிலாந்து நாட்டில் போக்ஸ்பயோ என்ற நிறுவனம் மூக்கு வழியாக பயன்படுத்தும் ஸ்பிரே ஒன்றை உருவாக்கியுள்ளது. மேலும் அந்நாட்டு நிறுவனம் இந்தியாவில் அந்த […]
கலிபோர்னியாவில் காட்டை தீ வைத்து கொளுத்திய குற்றத்திற்காக காவல்துறை அதிகாரிகள் கைது செய்த இளம்பெண் தன்மீதான குற்றத்தை மறுத்துள்ளார். கலிபோர்னியாவில் 41 வீடுகள் உட்பட பல ஏக்கர் அளவிலான நிலங்களுக்கு தீ வைத்ததாக கூறி காவல் துறை அதிகாரிகள் அலெக்சாண்ட்ரா என்னும் இளம்பெண்ணை கைது செய்துள்ளார்கள். ஆனால் அந்த இளம்பெண் தான் வேண்டுமென்றே எந்த ஒரு பகுதிக்கும் தீ வைக்கவில்லை என்று தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதனையடுத்து அலெக்ஸாண்ட்ரா போராடி தாகத்தைத் தீர்ப்பதற்காக குடிநீரை கொதிக்க […]
இங்கிலாந்தில் ஏற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக 2050ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சமாக 16 புதிய அணு உலைகள் உருவாக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் பிரக்சிட்டையடுத்து கனரக வாகன ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இங்கிலாந்து நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகையினால் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது வருகின்ற 2050ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சமாக சுமார் 16 அணு உலைகளை […]
ஆப்கான் பொருளாதார நிலைமை குறித்து நார்வே அகதிகள் கவுன்சில் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ள நார்வே அகதிகள் கவுன்சிலின் பொது செயலாளரான Jan Egeland அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அங்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வங்கி அமைப்பு எப்போது வேண்டுமானாலும் சரிவடையலாம். மேலும் நான் பல குடும்பங்களிடம் விசாரித்தேன். அப்பொழுது அவர்களில் பலர் தேநீர், காய்ந்த மாறும் பழைய ரொட்டித்துண்டுகளை உண்டு உயிர் வாழ்வதாக என்னிடம் கூறினார்கள். இப்படியே தொடர்ந்தால் […]
இரு சிறுவர்கள் ரொட்டியை திருடிய குற்றத்திற்காக அவர்களை தலீபான்கள் கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. அங்கு அவர்கள் புதிய இடைக்கால அரசை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் தங்களின் புதிய ஆட்சியை உலக நாடுகள் ஏற்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். இதற்கிடையில் தலீபான்கள் தற்பொழுது தங்களின் உண்மையான முகத்தை காட்டி வருகின்றனர். அதிலும் கடந்த வாரம் கடுமையான தண்டனைகளை அறிவித்தது மட்டுமின்றி சடலங்களையும் பொதுஇடத்தில் தொங்கவிட்டு மக்கள் பார்க்கும்படி செய்தனர். இந்த நிலையில் […]
கொரோனா பரவலுக்கு பின்னர் பிறந்த குழந்தைகளின் ஆயுட்காலமானது குறைவாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து தற்பொழுது தான் படிப்படியாக மீண்டு வருகின்றனர். ஆனால் இன்னும் சில நாடுகள் கொரோனா தொற்றின் நான்காவது அலையையும் எதிர்கொள்ள ஆயத்தமாகவுள்ளனர். இருப்பினும் தற்பொழுது பெரும்பாலான இடங்களில் தொற்று பரவலானது குறைய தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆசியா நாடுகளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று சுமார் […]
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாகன் ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கனரக வாகன ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டு வாகன ஓட்டுனர்களுக்கு தற்காலிகமாக விசா வழங்கி அவர்களை வரவழைப்பதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று பிரித்தானியா பிரதமரான போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். ஆனால் அதிக ஊதியம் அளித்தாலும் சிறப்பு விசா கொடுத்தாலும் வெளிநாட்டு ஓட்டுனர்கள் வரமாட்டோம் என்று கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து […]
கிரீன்ஸ் கட்சியைச் சேர்ந்த திருநங்கைகள் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். ஜெர்மனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்தலில் Greens கட்சியை வேட்பாளர்களான Tessa Ganserer, Nyke Slawik என்ற இரு திருநங்கைகளும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் எங்கள் இருவரின் வெற்றி Greens கட்சிக்கு மட்டுமின்றி உலகில் உள்ள queer சமுதாயத்திற்கும் rans-emancipatory அமைப்பிற்கும் வரலாற்று சாதனையாக பார்க்கப்படும் என்று 42 வயதான Tessa Ganserer தெரிவித்துள்ளார். மேலும் […]
இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு உறவு தொடரும் என ஜெர்மனியின் SPD காட்சியைச் சேர்ந்த Olaf Scholz தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் மெர்க்கலின் CDU/CSU பழமைவாதக் கூட்டணிக்கு 24.1% வாக்குகளும் Olaf Scholzஸின் தலைமையிலான SPD கட்சி 25.7% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக Olaf Scholz மெர்க்கலின் அரசியல் வாரிசு என்று கூறப்படுகிறார். இந்த நிலையில் உறுதியான ஐரோப்பியா […]
சிக்னல் என்னும் மெஸேஜிங் செயலி செயலிழந்துள்ளதால் அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டின் துவக்கத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய பாதுகாப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதற்காக ‘சிக்னல்’ என்னும் மெஸேஜிங் செயலியை உருவாக்கியது. ஆனால் புதிய பாதுகாப்பு கொள்கையானது தோல்வியில் முடிந்தாலும் அந்த செயலியானது அனைவரிடமும் பிரபலமானது. மேலும் இது பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை கொண்டுள்ளது என்பதால் விரைவாக புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றது. இந்த நிலையில் நேற்று முதல் சிக்னல் செயலி திடீரென செயலிழந்துள்ளது. […]
பாகிஸ்தானை தோற்றுவித்தவரின் உருவச்சிலையானது அடையாளம் தெரியாத நபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் கடற்கரை ஒன்று உள்ளது. இந்த கடற்கரை ஓரத்தில் உள்ள குவாடர் என்ற பகுதியில் முகமது அலி ஜின்னா அவர்களின் உருவச்சிலை உள்ளது. இவர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரிப்பதில் முக்கிய பங்காற்றினார். இந்த நிலையில் இவரின் உருவச்சிலை அடையாளம் தெரியாத நபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதில் உருவச்சிலை முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு […]
வாட்ஸ்அப் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் பேடிஎம், கூகுள் பே போன்று கேஷ்பேக் கூப்பன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாட்ஸ்அப் யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனை வசதிகளை ஆரம்பித்தது. மேலும் சுமார் இரண்டு வருடங்களுக்கு தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெறும் வரையில் சோதனை முயற்சியில் (பீட்டா) இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் பேமெண்ட் அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் வாட்ஸ்அப்-ஆல் குறிப்பிட்ட கவனத்தை இந்தியாவில் பெற இயலவில்லை. […]
பள்ளி வாகன ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தின் உண்மை பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் லாங்ஃபெல்லோ தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் பேருந்து ஓட்டுநரான 72 வயது Richard Lenhart என்பவர் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அவரின் பேருந்தில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து Richardயை கத்தியால் குத்தியுள்ளான். மேலும் இச்சம்பவத்தின் போது பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அதனால் பேருந்தானது நிலை தடுமாறி தடுப்பு வேலியில் […]
எரிப்பொருள் பற்றாக்குறை குறித்து பிரெஞ்சு ஐரோப்பியா விவகாரத்துறை அமைச்சரான Clement Beaune கருத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் கனரக வாகனங்களுக்கு பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் புகார் அளித்துள்ளன.மேலும் சுத்தகரிப்பு மையங்களில் இருந்து எரிப்பொருள் நிலையங்களுக்கு பெட்ரோல் கொண்டு வருவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எரிப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டுநர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து இருந்து பெட்ரோல் போட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து நாட்டில் […]
உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் தலையிடலாமா என்பது குறித்து சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் வசிப்பிட உரிமை இல்லாதவர்கள் உள்நாட்டு விவகாரங்களில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து வாக்களிக்கலாமா அல்லது அவர்களுக்கு உரிமம் உள்ளதா என்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எழுபத்தி 73.2% பேர் வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று கூறியுள்ளனர். அதிலும் Young Socialist group என்ற அமைப்பு இந்த முடிவுக்கு எதிராக நடுநிலையாளர்களுக்கும் வலதுசாரியைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்துள்ளனர். மேலும் வெளிநாட்டவர்கள் உள்நாட்டு […]
புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தலீபான்களின் தகவல் மற்றும் கலாச்சார இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் புதிய ஆட்சியை அமல்ப்படுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் அங்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனால் மக்கள் அவர்களுக்கு பயந்து பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் புதிய கடவுச் சீட்டுகள் வழங்கப்படும் என்று தலீபான்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளும் கடவுச்சீட்டுக்களும் தற்காலிகமாக மட்டுமே செல்லும். இனி புதிய கடவுச்சீட்டு […]
ஆப்கானிஸ்தானிலுள்ள எவராவது தப்பு செய்தால் அவர்களுக்கு தலிபான்கள் கொடுக்கும் தண்டனை தொடர்பாக சிறிது காலத்திற்கு முன்பாக தலிபான்களின் அமைப்பை நிறுவிய நபரொருவர் கொடுத்த பேட்டிக்கு அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலுள்ள எவரேனும் தப்பு செய்தால் அவர்களுக்கு தலிபான்கள் கொடுக்கும் தண்டனை தொடர்பாக அண்மையில் தலிபான்களின் அமைப்பை நிறுவிய முல்லா நூறுதீன் என்பவர் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் தாங்கள் தப்பு செய்தவர்களுக்கு நிறைவேற்றும் தண்டனை குறித்து உலக நாடுகள் தங்களை கேள்வி கேட்கிறார்கள் என்று […]
ஜெர்மனியில் நடைபெற்ற தற்போதைய பொதுத்தேர்தலில் 205 இடங்களை பிடித்து வெற்றி வாகையை சூடிய மத்திய இடது சமூக ஜனநாயக கட்சி ஏஞ்சலா மெர்கலின் 16 வருட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஜெர்மனியில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இருந்தே அந்நாட்டை கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஏஞ்சலா மெர்க்கலின் என்பவர்தான் ஆட்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது ஜெர்மனி நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இவ்வாறு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏஞ்சலா மெர்கலினுடைய 16 […]
அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டை பார்க்க வந்த 39,000 ரசிகர்களில் 40 வயது மதிக்கதக்க பெண்ணும், அவர் வைத்திருந்த 2 வயது குழந்தையும் அரங்கத்தின் 3 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா என்னும் மாவட்டத்தில் கூடைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இதனை பார்ப்பதற்காக அமெரிக்க கூடைப்பந்து ரசிகர்கள் சுமார் 39,000 பேர் போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில் கூடைப்பந்து போட்டியை பார்ப்பதற்காக […]
அமெரிக்காவில் போலியாக போடப்பட்டுள்ள பேய் வீடு ஒன்றில் பணிபுரிந்த நபரொருவர் விதியை மீறி வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு அங்கு வந்த சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள ஒஹாயோ என்னும் மாவட்டத்தில் பொழுதுபோக்கிற்காக போலியான பேய் வீடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள அந்த வீட்டில் பணிபுரியும் மாறுவேடம் அணிந்திருப்பவர்கள் உண்மையான ஆயுதத்தை வைத்திருக்கக்கூடாது என்பது அங்கு விதிமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் போலியான அந்த பேய் வீட்டில் பணிபுரியும் நபரொருவர் உண்மையான கத்தியை […]
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு வீசியதில் நான்கு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானில் ஹர்னாய் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கோஸ்ட் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. அப்போது அந்த வாகனமானது சபர் பாஷ் பகுதியின் அருகே சென்ற போது பலம் வாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த […]
ஐ.நா.பாதுகாப்பு அமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என வெளியுறவுத்துறை செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா.சபையின் 76வது பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை அன்று உரையாற்றினார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளரான ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா ஊடகவியலாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது “உலக நாடுகளின் நலன்களையே முக்கிய நோக்கமாக கொண்டு ஐ.நா. சபை தொடர்ந்து இயங்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் ஐ.நா.சபை தனது கடமைகளை சரியாக செயல்படுத்தவில்லை. […]
இந்தோ-பசிபிக் மண்டலத்தின் பாதுகாப்பு குறித்த அறிக்கை ஒன்றை நான்கு நாடுகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் உருவாக்கிய குவாட் என்னும் அமைப்பின் உச்சி மாநாடானது அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமரான யோஷிஹிடே சுகா போன்ற தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார். மேலும் அவர்கள் நால்வரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை […]
அனைத்து கிராமங்களுக்கு சென்றடையும் வகையில் நலத்திட்டங்களானது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற ஐ.நா.சபையின் 76வது பொதுக் கூட்டத்தில் இந்தியா பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் அவர் உரையாற்றியதில் ” வீடு அல்லது நிலம் இல்லாதவர்களுக்கு அவற்றை அவர்களுக்கே சொந்தமாகும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தேசம் முழுவதும் ட்ரோன் மூலம் ஆறு லட்சம் கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு அவற்றை சீர்ப்படுத்துவதற்கான வேலைகள் தொடங்கப்படவுள்ளன. அதிலும் ஆளில்லா விமானங்கள் […]
ஐ.நா.சபையின் பொதுக்கூட்டத்தில் இந்தியா குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா பெண் அதிகாரி தக்க பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவில் ஐ.நா.சபையின் 76 ஆவது பொதுக்கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டமானது கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அதிகாரியும் ஐ.நா. சபையின் முதன்மைச் செயலருமான சினேகா துபே IFS கலந்து கொண்டார். இதே போன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் […]
சிரியாவில் நடைபெற்ற போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது. சிரியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் போரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாட்டு சபை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 3, 50,750 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதையும் விட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக இருக்கலாம் என்று மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பிரித்தானியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்று நடத்திய ஆய்வில் சிரியாவில் மொத்தம் 6,06,000 […]
அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சவப்பெட்டிகள் காணாமல்போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் ஜடா புயல் தாக்கியது. இதனால் அம்மாகாணத்தில் உள்ள சவப்பெட்டிகள் அனைத்தும் நான்கு வாரங்களாக நகரம் முழுவதும் காணப்படுவதாக தகவல் வெளியாகியது. அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் வீசிய புயலால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சவப்பெட்டிகள் இடுகாட்டில் இருந்து அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும் பலர் தங்கள் உறவினர்களின் சவப்பெட்டிகளை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து மீட்பு பணிக்குழுவை […]
பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் பராம்பரிய சின்னங்களை அமெரிக்கா இந்தியாவிடம் திருப்பி ஒப்படைத்துள்ளது. இந்திய பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். மேலும் அங்கு அவர் ஐ.நா.சபை பொதுக்கூட்டம் மற்றும் குவாட் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார். தற்பொழுது அமெரிக்காவில் இருந்த விலை மதிப்பற்ற கலைப்பொருட்களையும் பராம்பரிய சின்னங்களையும் இந்தியாவிற்கு மீட்டு கொண்டு வரப்போகிறார். இந்த கலைப்பொருட்கள் அனைத்தும் 7,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. இது குறித்து இந்தியா அரசு […]
இளம்பெண் தனது 15 வயதிலேயே குழந்தை பெற்றெடுத்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த அலெக்ஸிஸ் என்பவர் 15 வயதிலேயே தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே கடந்த 2017ல் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து தற்பொழுது அவர் கூறியதில் “நான் 2017 ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் திறந்த முதல் நாள் சென்று விட்டு வீடு திரும்பினேன். மேலும் வீட்டிற்கு வந்த பின்னர் தூங்குவதற்காக படுக்கைக்கு சென்ற போது எனது முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது. இதனையடுத்து […]
ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. சுவிட்சர்லாந்தில் ஒரே பாலின ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்படலாம் என்றும் அவர்கள் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் எனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த திருத்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக அமைப்பின் படி இந்த விவகாரத்திற்கு பொது வாக்கெடுப்பின் மூலமே முடிவு காண வேண்டும் என்று Swiss People’s Partyயைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் இது […]
மர்மக்குழியை நிபுணர்கள் ஆராய்ச்சி செய்ததில் வியப்பூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அல் மாரா பாலைவனமானது ஏமன் நாட்டில் உள்ளது. இதன் மத்தியில் ‘பர்ஹட்டின் கிணறு’ என்று கூறப்படும் மர்மக் குழி ஒன்று காணப்படுகிறது. இந்தக் குழியானது 367 அடி ஆழமும் 30 மீட்டர் விட்டமும் உடையது. மேலும் இந்த விநோதமான குழியினுள் செல்வதற்கு என்று வட்டவடிமான நுழைவாயிலும் உள்ளது. இதனை வானில் இருந்து காணும் பொழுது சிறியத் துளை போன்றே தெரியும். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இதனை “நகரத்தின் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு அமைத்த ஆட்சியை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற 76வது ஐநா பொது சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் பலவித கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார்கள். இதற்கிடையே தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைத்த ஆட்சியை உலக நாடுகள் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை. ஆனால் ஆப்கானிஸ்தானில் ஆட்சி […]
அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அமெரிக்க நாட்டிற்கு சென்ற இந்திய பிரதமர் அங்கு நடைபெற்ற பல நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் இன்று அவர் நாடு திரும்பியுள்ளார். அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை ஏற்ற இந்திய பிரதமர் அமெரிக்க நாட்டிற்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் மாநாடு உட்பட பல நிகழ்வுகளில் […]
நியூயார்க் நகரில் நடைபெற்ற 76ஆவது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி கொரோனா தொற்று தொடர்பாக பேசியுள்ளார். அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரிலிருக்கும் ஐ.நா பொது சபையில் நடைபெற்ற 76 ஆவது கூட்டத் தொடரில் இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். அப்போது உரையாடிய நரேந்திர மோடி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று தொடர்பாக பேசியுள்ளார். அதாவது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி […]
ஆப்கானிஸ்தானில் காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்ட 4 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கிரேன் மூலம் தூக்கி ஊரின் மத்தியில் தொங்க விட்டுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அதோடுமட்டுமின்றி ஆப்கனை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் பலவித கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளார்கள். இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறை அதிகாரிகள் அதி பயங்கரமாக கொலை செய்துள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹீரட் என்னும் நகரின் மத்தியில் காவல்துறை அதிகாரிகளால் […]
சிறுவன் பனிச்சறுக்கு விளையாட்டு அரங்கத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்தில் ஸ்டாஃபோர்ட்ஷையர் கவுன்டியில் டாம்வொர்த் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள A5 சாலையில் ஸ்னோடோம் என்ற உட்புற பனிச்சறுக்கு விளையாட்டு அரங்கம் ஒன்று உள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.40 மணியளவில் West Midlands அவசர சேவை மற்றும் Staffordshire காவல்நிலையத்திற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் விரைவாக அங்கு சென்ற போது […]
டெஸ்லா நிறுவனத்தின் CEO தனது காதலியை விட்டு பிரிந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகப் பணக்காரர்களில் ஒருவர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், டெஸ்லா நிறுவனத்தின் CEO போன்ற பன்முகத்திறமையாளர் எலான் மஸ்க். இவர் தனது காதலியான கிரிம்ஸை பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை எலான் மஸ்கே உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதில் “நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். ஆனால் கிரிம்ஸ் உடன் எனக்கு நல்ல உறவே உள்ளது. மேலும் எங்களுடைய குழந்தையை நாங்கள் சேர்ந்தே தான் […]
அமெரிக்கா அதிபர் மற்றும் இந்தியா பிரதமர் இருவரும் தேசப்பிதாவான மகாத்மா காந்தி குறித்து பேசியுள்ளனர். இந்தியா நாட்டின் பிரதமரான மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா வந்தடைந்துள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபரான ஜோ பைடனை சந்தித்து நெடு நேர ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த ஆலோசனையின் போது இருநாட்டு தலைவர்களும் தேசப்பிதாவான மகாத்மா காந்தி குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரதமர் மோடி தெரிவித்ததில் “இந்தியா […]
வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு இணங்க போலி கணக்குளை முடக்கியுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட சமூக வலைதளம் முகநூல் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் புகார்களை தெரிவித்துள்ளனர். அதிலும் ஒருவரின் சுய விவரங்கள் மற்றும் ரகசியங்களை பாதுகாப்பது தொடர்பாக அதிகமான புகார்கள் எழும்பியுள்ளது. இந்த புகார்களை சரிசெய்வதாக கூறினாலும் சில நேரங்களில் தங்கள் மீதுள்ள தவறுகளையும் முகநூல் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை […]
குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளால் உருவாக்கப்பட்ட குவாட் என்னும் அமைப்பின் உச்சி மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்ற நான்கு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இதுவரை 7.9 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 120 கோடி கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக உலகிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. […]
ஐ.நா.சபையின் பொதுக்கூட்டத்தில் இந்தியா பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் 76 வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கொள்வதற்காக பிரதமர் மோடி அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து இன்று மாலை புறப்பட்டு உள்ளார். அப்பொழுது அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் விடுதியின் வெளியே திரண்டனர். மேலும் அவர்கள் பிரதமரை கண்டதும் தங்களின் உற்சாகத்தை வெளிக்காட்டினர். இதனைத் தொடர்ந்து பிரதமரும் அவர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இதற்கு பிறகு […]
ஐ.எஸ். அமைப்பினரின் தொடர் தாக்குதல் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்திலிருந்து வெளிநாட்டுப் படைகள் கடந்த மாத இறுதியில் வெளியேறியுள்ளது. அந்த வெளியேற்றத்திற்குப் பின் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ச்சியான தாக்குதலை நடத்தி வந்துள்ளனர். இந்த தாக்குதலை அவர்கள் தலீபான்களை மையமிட்டு நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து தலீபானின் வண்டியை மையமாகக் கொண்டு மாகாணத் தலைநகரில் வைத்து வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தலீபான் போராளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதோடு […]
தட்டுப்பாட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க 5000 தற்காலிக விசாக்களுக்கு பிரதமர் அனுமதியளித்துள்ளார். பிரித்தானிய நாட்டில் உள்ள பல பகுதிகளின் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருளுக்காக காத்திருக்கும் வாகனங்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய அரசு எரிபொருள் பிரச்சினைக் குறித்து பதற்றம் வேண்டாம் எனவும் அது விரைவில் சரிசெய்யப்படும் எனவும் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனாலும் மக்கள் இந்த தட்டுபாட்டு நிலையால் பொருளாதாரச்சரிவு ஏற்படுமோ? என்ற பயத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதோடு போக்குவரத்து நெரிசலுக்கு கனரக […]
இலை குவியலுக்கு அடியில் சடலமாக கிடந்த பள்ளி ஆசிரியை கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். லண்டனில் ஒரு பள்ளியில் சபீனா நெஸ்ஸா என்ற 28 வயது இளம்பெண் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் வீடு தெற்கு லண்டனில் உள்ள கிட்ப்ரூக் பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் வீட்டின் அருகில் இருந்த பப்பில் சபீனா அவரது நண்பரை சந்திக்க சென்றுள்ளார். அப்பொழுது அதன் அருகில் உள்ள கேடர் பூங்காவில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை பூங்காவிற்கு […]
தந்தை மறுப்பு தெரிவித்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த சிறுவனுக்கு வெற்றி கிடைத்துள்ளது. உலக நாடுகளில் உள்ள சுகாதார வல்லுனர்கள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். அதிலும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் நெதர்லாந்தில் Groningen பகுதியில் உள்ள 12 வயது சிறுவன் தனக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் வரை சென்றுள்ளான். அதாவது […]
சுரங்கப்பாதையில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபர் மூச்சுத்திணறி இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் தெற்கில் அமைந்துள்ள மார்சேல் நகரில் இருக்கும் சுரங்கப்பாதையில் 37 வயதான நபர் ஒருவர் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார். மேலும் அந்த சுரங்கப்பாதையில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால் மூச்சு திணறி அங்கேயே அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு வருவதற்குள்ளாகவே அவர் இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவமானது அங்கு பெரும் […]