Categories
உலக செய்திகள்

வன்முறையினால் புலம்பெயரும் மக்கள்…. உதவி வழங்க ஏற்பாடு…. தகவல் வெளியிட்ட ஐ.நா.சபை….!!

ஆப்கானில் புலம்பெயர்ந்தோருக்கு தேவையான உதவிகளை ஐ.நா.சபை வழங்க முடிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள மக்கள் அவர்களுக்கு பயந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம் பெயர்ந்து சென்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வன்முறைச் சம்பவங்களினால் மட்டும் 6.35 லட்சம் பேர் தங்களின் சொந்த வசிப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா.வின் மனிதநேய அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இவர்களில் 12000திற்கும் மேற்பட்டோர் பஞ்ஜஷீர் பள்ளத்தாக்கில் இருந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் இதில் 1300 பேருக்கு உதவிகள் […]

Categories
உலக செய்திகள்

3 வது முறையாக கனடாவில்…. ஆட்சி அமைக்கும் லிபரல் கட்சி…. வெற்றி பெற்ற இந்தியா வம்சாவளி வேட்பாளர்கள்….!!

நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாலான இந்தியா வம்சாவளி வேட்பாளர்கள் வெற்றி வாகையை சூடியுள்ளனர். கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதிலும் லிபரல் கட்சி 158 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து 149 இடங்களில் வெற்றியை உறுதி செய்துள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது லிபரல் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போழுதும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் சிறிய […]

Categories
உலக செய்திகள்

பணத்திற்காக காதலர் கொலை செய்தாரா….? குளியலறையில் இறந்து கிடந்த பெண்…. வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்….!!

பணத்திற்காக காதலியை கொலை செய்த காதலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Anna Florence Reed  என்னும் 22 வயது பிரித்தானியா பெண் தன் காதலரான Marc Schatzle என்ற ஜெர்மன் நாட்டவருடன் நெருக்கமாக இருக்கும் போது மூச்சுத்திணறி இறந்துவிட்டார் என்றும் அவரின் சடலம் குளியலறையில் கிடைத்தது எனவும் தகவல்கள் வெளியாகியது. தற்பொழுது இந்த வழக்கில் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது Anna இறந்த Ticinoவில் இருக்கும்  La Palma au Lac என்ற தனியார் […]

Categories
உலக செய்திகள்

கனடா பிரதமரின்…. கருப்பு நிற புகைப்படம்…. கருத்து தெரிவிக்கும் பொதுமக்கள்….!!

தேர்தல் சமயத்தில் ஜஸ்டின் ட்ரூடோவின் கருப்பு நிறத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவின் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதில் அவர் முகத்திலும் கைகளிலும் கருப்பு நிற சாயத்தைப் பூசிக் கொண்டு இருந்தார். இவ்வாறு முகம் முழுவதும் சாயத்தை பூசிக்கொள்வது  கருப்பின மக்களை அவமதிக்கும் செயல் என்றும் இனவெறுப்பு கொள்கையை சார்ந்த விஷயமாகும் என்றும் கூறப்பட்டது. மேலும் அதே நேரத்தில் இப்படி செய்தது […]

Categories
உலக செய்திகள்

‘இவர்களுக்கும் இது பொருந்தும்’…. விரைவில் விதிகள் அமல்…. இங்கிலாந்து அரசின் நடவடிக்கை….!!

பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டாலும் சில விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலகம் முழுவவதும் பரவி வரும் கொரோனா தொற்றால் கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். மேலும் சில நாடுகளில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடையும் விதித்துள்ளனர்.  குறிப்பாக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகளை […]

Categories
உலக செய்திகள்

ஆட்சியை கைப்பற்றப்போவது யார்….? லிபரல் கட்சி முன்னிலை…. இந்திய வம்சாவளி பெண் வெற்றி….!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் கனடா பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கனடா பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் மத்தியில் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. தற்போது கிடைத்த தகவலின்படி ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களிலும் கன்சர்வேட்டிவ் கட்சி 122 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர். இதனால் லிபரல் கட்சி தான் ஆட்சியை கைப்பற்றும் என்று […]

Categories
உலக செய்திகள்

‘என்னால் நம்ப முடியவில்லை’…. தேர்தலில் மோசடி…. எதிர்க்கட்சி தலைவர் கருத்து….!!

ஐக்கிய ரஷ்யா கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதை நம்பமுடியவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். ரஷ்யா நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன் மூலம் 450 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த 17 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்று திங்கட்கிழமை அன்று முடிவடைந்தது. மேலும் தேர்வுகள் முடிவடைந்த திங்கட்கிழமையில் இருந்தே வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கியது. இதனையடுத்து வாக்குகள் எண்ணும் பொழுதிலேயே ஐக்கிய […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிபரான புதின்…. அனேக இடங்களில் வெற்றி…. தகவல் தெரிவித்த தேர்தல் ஆணையம்….!!

நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ரஷ்யா கட்சி அனேக இடங்களில் வெற்றி பெற்றது என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தலானது கடந்த 17 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. அதிலும் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடந்து முடிந்தது. அதிலும் அதிபர் புதினின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான சட்டத்தை மாற்றுவதற்கு அவரின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை […]

Categories
உலக செய்திகள்

விண்வெளி மையம் அமைக்க…. கட்டுமான பணிகள் தொடக்கம்…. சீனாவின் அதிரடி நடவடிக்கை….!!

விண்ணில் சொந்தமாக ஆய்வு மையத்தை அமைப்பதற்கான வேலைகள் தொடங்கியுள்ளது. விண்வெளியில் புதிதாக ஆய்வு மையத்தை சீனா சொந்தமாக வடிவமைத்து வருகிறது. இந்த பணியானது 2021 ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக முடிவடையும் என்று சீனா கூறியுள்ளது. மேலும் அந்த விண்வெளி மையத்திற்கு தியான்ஹே என்று பெயரிட்டுள்ளனர். இந்த விண்வெளி மையத்திற்கான நடுப்பகுதியை கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து விண்வெளி மையத்தை கட்டமைக்கும் பணிகளுக்காக கடந்த ஜூன் மாதத்தில் சென்ஷு […]

Categories
உலக செய்திகள்

நான்கு வருடங்களாக…. செவிலியரை துன்புறுத்திய மருத்துவர்…. சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்….!!

இங்கிலாந்தில் செவிலியர் ஒருவரை நான்கு வருடங்களாக துன்புறுத்திய மருத்துவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் லிங்கன்ஷையரில் உள்ள கிரிம்ஸ்பை  இடத்தில் டயானா பிரின்சஸ் ஆஃப் வேல்ஸ் என்னும் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக 61 வயதான ஹொஸாம் மெட்வாலி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சுமார் நான்கு வருடங்களாக தனது 33 வயது காதலியை கெட்ட சக்திகளிடம் இருந்து காப்பற்றுவதாக கூறி இஸ்லாமிய […]

Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு மட்டும் ஏன்….? தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எல்லைகள்…. வெள்ளைமாளிகை அறிக்கை….!!

கனடா மற்றும் மெக்சிகோ மீதான பயண விதிமுறைகளை தொடர்ந்து அமெரிக்கா நீட்டித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரனோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கனடா மற்றும் மெக்சிகோ மீது கடுமையான பயண விதிமுறைகளை கடந்த மார்ச் 2020 இல் அமெரிக்கா அமல்படுத்தியது. மேலும் அந்த கட்டுப்பாடுகளை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வந்தது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியவுடன் கனடா கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி தேவையற்ற பயணங்களாக இருப்பினும் இரண்டு தவணை […]

Categories
உலக செய்திகள்

தளர்த்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள்…. தகவல் வெளியிட்ட வெள்ளை மாளிகை…. பாராட்டிய பிரித்தானியா பிரதமர்….!!

பிரித்தானியா மீதான பயன்க்கட்டுப்பாடுகளை தளர்த்தியதாக வெள்ளைமாளிகை தகவல் தெரிவித்துள்ளது. பிரித்தானியா பிரதமரான போரிஸ் ஜான்சன் கடுமையான பயண கட்டுப்பாட்டு விதிமுறைகளை அகற்ற வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடனிடம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து வெள்ளை மாளிகை தற்போது வெளிநாட்டு பயணிகள் அமெரிக்காவில் நுழைவதற்கான  இரண்டரை ஆண்டுகள் தடையை அகற்றுவதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும்  கொரோனா தொற்றுக்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவில் எந்தவித தடையும் இல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

‘என் பெயர் எமிலி’…. புது வீட்டில் இருந்த பொம்மை…. திகிலூட்டும் கடிதம்….!!

பிரித்தானியர் வாங்கிய வீட்டில் பொம்மையும் அதனுடன் கடிதமும் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Walton என்ற இடத்தில் கட்டப்பட்ட ஒரு வீட்டை கடந்த வெள்ளிக்கிழமை அன்று Jonathan Lewis என்பவர் வாங்கியுள்ளார். இதனையடுத்து வாங்கிய புது வீட்டில் அவர் நுழைந்தவுடன் ஒரு மூலையில் இருந்து ஒயர் வெளிவருவதை கண்டுள்ளார். இதனை தொடர்ந்து அங்கு சென்று பார்த்துள்ளார். அந்த ஒயர் ஆனது ஒரு துவாரத்தின் வழியாக வந்தவுடன் உடனடியாக சுவரை தட்டியுள்ளார். குறிப்பாக சுவர் பிளாஸ்டர் ஆஃப் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் மீது குற்றம் சாட்டிய பெண்…. பாதிக்கப்படும் அரச குடும்பம்…. பிரித்தானியா நீதிமன்றம் தலையீடு….!!

இளவரசர் ஆண்ட்ரூ மீது தொடுக்கப்பட்ட பாலியல் வழக்கானது பிரித்தானியா நீதிமன்றத்தின் கண்பார்வைக்கு வந்துள்ளது. பிரித்தானியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ மீது கடந்த 2001 ஆம் ஆண்டு  வர்ஜீனியா கியூஃப்ரே என்னும் பெண் அமெரிக்காவில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் இளவரசர் ஆண்ட்ரூ தன்னை கட்டாய பாலியல் வன்புணர்ச்சி செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கை இவ்வளவு வருடங்களாக பொருட்படுத்தாமலும் உரிய பதில் அளிக்காமலும் இளவரசர் ஆண்ட்ரூ அலட்சியப்படுத்தி வந்தார். தற்போது […]

Categories
உலக செய்திகள்

‘பெண்கள் போக கூடாது’…. பறிக்கப்படும் உரிமைகள்…. தகவல் வெளியிட்ட இடைக்கால மேயர்….!!

பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது என்பது குறித்து தலீபான்களின் இடைக்கால மேயர் தகவல் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 15 ஆம் தேதி மீண்டும் தலீபான்களின் பிடியில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமை பறிபோகும் என்ற அச்ச உணர்வு அனைவரிடமும் ஏற்பட்டது. இதற்கிடையில் தான் தலீபான்கள் “பழைய அரசை போல் செயல்பட போவதில்லை” என்று அறிவிப்பு விடுத்தனர். ஆனால் அதற்கு […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல் அமல்…. புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்…. சுவிட்சர்லாந்து அரசின் அதிரடி நடவடிக்கை….!!

சுவிட்சர்லாந்துக்கு வருகை புரியும் பயணிகள் பின்பற்ற வேண்டிய புதியக் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்ப்படுத்தப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்துக்கு வருகை தருபவர்கள் தங்களிடம் கொரோனா பாஸ் இல்லாத நிலையில் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். மேலும் நான்கு நாட்களுக்குப் பிறகு மறுபடியும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பாக இரண்டாவது கொரோனா பரிசோதனை செய்யாதவர்களுக்கு 200 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும். அந்த பரிசோதனையின் தரவுகளை தொடர்புடைய மாகாணத்தின் அலுவலகத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? அமெரிக்கா, ஆஸ்திரேலியா மீது கடும் கோபத்தில் உள்ள பிரபல நாடு… சர்வதேச அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு..!!

பிரான்ஸ் நாடு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட கோபத்தால் ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து தங்களது நாட்டு தூதரை திரும்ப பெற்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவை எதிர்கொள்ள இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஆக்கஸ் என்ற புதிய பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கியுள்ளது. அதன்படி அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கிடைக்கவும், படைபலத்தை அதிகரிக்கவும் உதவுவோம் என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா நாடு பிரான்சிடமிருந்து நீர்மூழ்கி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள்… பிரபல நாட்டில் முக்கிய தகவல்..!!

அமெரிக்காவில் பொதுமக்களுக்கு இதுவரை 38.3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் பொதுமக்களுக்கு ஜான்சன் & ஜான்சன், பைசர்/பையோஎன்டெக், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை அமெரிக்காவில் பொதுமக்களுக்கு மொத்தம் 38,30,38,403 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு […]

Categories
உலக செய்திகள்

கூட்டத்தில் துப்பாக்கியுடன் நுழைந்தவர்…. மடக்கி பிடித்த போலீஸ் அதிகாரிகள்…. கண்காணிப்பு பணிகள் தீவிரம்….!!

நாடாளுமன்றம் வளாகத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில் துப்பாக்கியுடன் நுழைந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதற்காக அவருக்கு நாடாளுமன்ற அங்கீகரிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் தோல்வியடைந்த டிரம்ப் அவர்களின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் முன்பாக கலவரம் செய்தனர். இந்த கலவரத்தில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவமானது அமெரிக்கா நாடாளுமன்ற வரலாற்றில் பெரும் கரையாக […]

Categories
உலக செய்திகள்

மதப்பள்ளியில் தலீபான்களின் கொடி…. சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்…. வழக்கு பதிவு செய்த போலீசார்….!!

மதப்பள்ளியில் தலீபான்கள் கொடி நாட்டப்பட்டதற்கு காவல்துறையினர் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் லால் மஸ்ஜித் என்னும் பள்ளிவாசல் அருகில் மதப் பள்ளிக்கூடம் ஓன்று அமைந்துல்லாது. இந்த மதப்பள்ளியில் தலீபான்கள் தங்களின் கொடியை நாட்டியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாட்டியுள்ள கொடியை அகற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் அப்பள்ளியின் மதகுருவான மவுலானா அப்துல் அஜீஸ் என்பவர் கொடியை அகற்றவிடாமல் காவல்துறையினரை தடுத்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் […]

Categories
உலக செய்திகள்

சுரங்கம் வழியாக தப்பித்த கைதிகள்…. சுற்றி வளைத்த போலீசார்…. தகவல் தெரிவித்த ராணுவம்….!!

சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீனியர்கள் ஆறு பேரையும் போலீசார் கைது செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட கில்போவா சிறையில் பாலஸ்தீனியர்கள் ஆறு பேர் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் கடந்த 6 ஆம் தேதி கழிவறை வழியாக சுரங்கம் அமைத்து சிறையிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தப்பியோடிய இவர்கள் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தப்பியோடிய பாலஸ்தீனியர்கள் மேற்கு கரை பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிற்கு குடியேறிய குடும்பம்…. பின்னர் நடந்த சோக சம்பவம்…. தீவிர விசாரணையில் ஈடுபடும் போலீஸ்….!!

ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக நியூசிலாந்திற்கு சென்ற மருத்துவ தாய் தன்னுடைய சொந்தக் குழந்தைகளை கொன்றது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நியூசிலாந்து நாட்டிற்கு மருத்துவரான லாரன் என்பவர் தனது 3 குழந்தைகள் மற்றும் கணவருடன் ஒரு புதிய வாழ்க்கை தொடங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து லாரனும், அவரது குடும்பத்தாரும் நியூசிலாந்து நாட்டிலுள்ள திமரு என்னும் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் குடி புகுந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து லாரன் குடியேறிய அந்த வீட்டிலிருந்து குழந்தைகள் அலரும் […]

Categories
உலக செய்திகள்

விலை உயர்ந்த கைக்கடிகாரம்…. குற்றத்தை ஒப்புக்கொண்ட வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காரிலிருந்த கடிகாரத்தை திருடி சுமார் 28,000 திர்ஹம்களுக்கு அடுத்தவருக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது. ஐக்கிய அமீரகத்திலுள்ள பிசினஸ் பே என்னும் இடத்தில் நின்று கொண்டிருந்த காரில் விலை உயர்ந்த கைக்கடிகாரம் 2 இருந்துள்ளது. இதனையடுத்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காரினுள் இருந்த விலை உயர்ந்த 2 கைகடிகாரங்களையும் திருடி அடுத்தவருக்கு சுமார் 28,000 திர்ஹம் என்னும் விலைக்கு விற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உரிமை புதைக்கப்பட்டுவிட்டது…. ஹிட்லராக சித்தரிக்கப்பட்ட அதிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கொரோனா குறித்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரென்ச் நாட்டின் அதிபரை ஜெர்மனியின் சர்வாதிகாரியாக சித்தரித்த நபரை குற்றவாளி என தீர்ப்பளித்த பிரெஞ்ச் நாட்டின் நீதிமன்றம் அவருக்கு சுமார் 10,000 யூரோக்களை அபராதமாக விதித்துள்ளது. பிரெஞ்ச் நாட்டின் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்டியடிக்க சில கட்டுப்பாடுகளை அங்கு கொண்டு வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 62 வயதாகும் முன்னாள் விளம்பர நிர்வாகி ஒருவர் ஜனாதிபதி இம்மானுவேலை ஜெர்மனியின் சர்வாதிகாரியாக சித்தரித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

90 ஆண்டுகள் “சீல்” வைக்கப்பட்ட உயில்…. விருப்பம் தெரிவித்த மறைந்த இளவரசர் பிலிப்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தனது மனைவியின் மரியாதை காப்பாற்றப்பட வேண்டும்என்ற இங்கிலாந்து இளவரசரின் விருப்பத்திற்கிணங்க அவர் எழுதிய உயில் தொடர்பாக தலைநகரிலுள்ள ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இங்கிலாந்து இளவரசரான மறைந்த பிலிப்பின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 30 மில்லியன் பவுண்டுகளாகவுள்ளது. ஆனால் இங்கிலாந்து நாட்டின் ராணியின் கணவர் கடந்தாண்டு தன்னுடைய 99 ஆம் அகவையில் இறைவனடி சேர்ந்துள்ளார். இதற்கிடையே தான் எழுதிய உயில் தனது மனைவியின் மரியாதைக்காக ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போனவர்…. சடலமாக மீட்பு…. வீட்டை சுற்றி வளைத்த போலீசார்….!!

லண்டனில் காணாமல் போன ஆண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது தொடர்பாக போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள தெற்கு லண்டனில் எரித் என்னும் பகுதியில் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தேம்ஸ் வேளி போலீசார் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இறந்தவர் யார், அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் 46 வயதான Duane Denny என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் […]

Categories
உலக செய்திகள்

தந்தையுடன் பேசிய கடைசி வார்த்தைகள்…. நெகிழ்ச்சியாக கூறிய இளவரசர்…. பிரபல செய்தி நிறுவனத்திடம் பேட்டி….!!

இளவரசர் தனது தந்தையுடன் பேசிய கடைசி உரையாடல் குறித்து பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். பிரித்தானியா இளவரசரான பிலிப் மரணப்படுக்கையில் இருந்த பொழுது கூட நகைச்சுவையாக  பேசியுள்ளார் என்று அவருடைய மகன் சார்லஸ் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ” கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று எனது தந்தையான பிலிப்பிடம்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்பொழுது அவரின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி பேச முயற்சித்தேன். குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

அத்துமீறி நுழைந்த சீன போர் விமானங்கள்… பிரபல நாடு குற்றச்சாட்டு… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீன போர் விமானங்கள் தங்களது நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சீனாவும் தைவானும் கடந்த 1949-ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக பிரிந்தது. இருப்பினும் சீனா தனது நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று கூறி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தேவை ஏற்பட்டால் படைபலத்தை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்கமாட்டோம் என்று எச்சரித்து வருகிறது. மேலும் சீன போர் விமானங்கள் தைவானின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணின் சடலம் மீட்பு…. பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு…. செய்தி தொடர்பாளர் தகவல்….!!

லண்டனில் இளம்பெண் சடலம் மீட்டெடுத்தது தொடர்பாக காவல்துறை செய்தி தொடர்பாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் Cator பூங்காவிற்கு அருகில் Onespace Community மையம் உள்ளது. அந்த மையத்தின் அருகில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 5.30 மணியளவில்  20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அந்த பெண் குறித்த தகவல்கள் தெரிந்திருப்பினும் முழு அடையாளம் காணப்படவில்லை. இதனால் அப்பெண்ணின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவிக்காமல் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

நவால்னி ஆதரவாளர்கள் உருவாக்கிய செயலி… ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம் அதிரடி… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்கள் உருவாக்கிய செயலியை தங்களது வலைதளங்களிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ரஷ்யாவின் துமா மாகாண தேர்தல் நடைபெற்றது. எனவே நவால்னியின் ஆதரவாளர்கள் “யுனைட்டட் ரஷ்யா” என்ற நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக திகழும் கட்சியின் வேட்பாளரை தோற்கடிப்பதற்காக செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த செயலி ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் வலைதளங்களில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யா அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சான்றிதழ் கட்டாயம்…. பிரான்ஸ் அரசு நடவடிக்கை…. கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்கள்….!!

கொரோனா சான்றிதழை கட்டாயப்படுத்தியதற்காக மக்கள் ஈஃபில் கோபுரத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் செய்து வருகின்றனர். அதில் ஒரு வகையாக இலவச  முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பும் மக்கள் அனைவரும் தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் மக்கள் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிப்பதற்காக […]

Categories
உலக செய்திகள்

ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம்…. நஷ்டஈடு கேட்ட பிரான்ஸ் அதிபர்…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் பிரான்ஸ் அதிபர் அமெரிக்காவிடம் நஷ்டஈடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இணைந்து AUKUS என்னும் முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்கினர். இதனையடுத்து நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்காக ஆஸ்திரேலியா புதிய ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா மற்றும்  இங்கிலாந்துடன் ஏற்படுத்தி கொண்டது. அதிலும் ஏற்கனவே பிரான்ஸ் உடன் ஆஸ்திரேலியா நீர்முழ்கி கப்பல்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்திருந்தது. அதனை ரத்து செய்துவிட்டு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துவுடன் ஆஸ்திரேலியா புதிய ஒப்பந்தம் […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகளைத் திறக்க உத்தரவு…. மாணவிகள் செல்ல தடை…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….!!

தலீபான்களின் இடைக்கால அரசின் கல்வித்துறை அமைச்சகம் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளது. தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றினர். இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் பறிபோகும் என்ற அச்சம் அனைவரிடமும் எழுந்தது. ஆனால் தலீபான்கள் தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில் “1996 முதல் 2001 வரை இருந்த அரசை போல தற்பொழுது செயல் பட போவதில்லை. மேலும் பெண்களுக்கான அனைத்து உரிமைகள் மற்றும் சுதந்திரம் […]

Categories
உலக செய்திகள்

தீடிரென குவிக்கப்பட்ட போலீசார்…. கூறப்பட்ட பொய்யான தகவல்…. ட்விட்டரில் தகவல் அளித்த காவல்துறை….!!

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு தெருவில் தீடிரென போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரித்தானியா தலைநகரான லண்டனில் திடீரென போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை தகவல் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அதில் “Westminsterரில் உள்ள ஆக்ஸ்போர்டு தெருவில் மர்மநபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளதாக எங்களுக்கு 9.30 மணியளவில் அழைப்பு வந்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு சிறப்பு அதிகாரிகள் அனுப்பப்பட்டன. மேலும் அவர்கள் அங்கு மர்ம நபரைத் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

முடியை வெட்டிய ஆசிரியர்…. இழப்பீடு கேட்ட தந்தை …. வழக்குப்பதிவு செய்த போலீசார்….!!

பள்ளியில் தனது மகளின் முடியை வெட்டிய ஆசிரியரிடம் தந்தை ஒரு மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் 7 வயது சிறுமியான Jurneeயின் முடியை ஆசிரியர் ஒருவர் வெட்டியுள்ளார். இதனையடுத்து Jurneeயின் தந்தையான ஹாஃப்மேயர் தனது மகளின் மீது உரிமைமீறல் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவமானது இன வேற்றுமை காரணமாக நான் நடந்துள்ளதாகவும்  ஹாஃப்மேயர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தனது மகளை பள்ளியில் இருந்து முழுவதுமாக […]

Categories
உலக செய்திகள்

மறைந்த கலைஞரின் கனவு…. மருமகனால் நிறைவேற்றம்…. திறந்து வைத்த பிரான்ஸ் அதிபர்….!!

பல்கேரியாவைச் சேர்ந்த சுற்றுச்சுழல் கலைஞரின் 60 ஆண்டு கால கனவை அவரது மருமகன் நிறைவேற்றியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ‘ஆர்க் டே ரியோம்ப்’ என்னும் நினைவுச்சின்னம் உள்ளது. இதனை 2500 மீட்டர் வெள்ளி மற்றும் நீல நிற பிளாஸ்டிக் தாளினால் மூடப்பட்டுள்ளது. இந்த கலைப் படைப்பை பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மேக்ரான் திறந்து வைத்துள்ளார். மேலும் அவர் இது பற்றி  கூறியதில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களினால் நினைவுச்சின்னம் அதிக அளவில் சேதமடைந்ததுது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களை குறிவைத்து தாக்குதல்…. பலியான பொதுமக்கள்…. தகவல் தெரிவித்த சுகாதாரத்துறை அதிகாரிகள்….!!

தலீபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பொதுமக்களும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்களின் கையில் சென்றது. இதனால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனையடுத்து போதிய உணவு, குடிநீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் 5 வயதுக்குட்பட்ட ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் பி.டி.13 பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

விலங்குகளுக்கு பரவும் கொரோனா தொற்று…. தேசிய உயிரியல் பூங்காவில் ஆய்வு…. தகவல் வெளியிட்ட கால்நடை மருத்துவர்….!!

தேசிய உயரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று ஆனது மனிதர்கள் மட்டுமின்றி விலங்குளையும் தாக்குகிறது. இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசியில்  தேசிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 6 ஆப்பிரிக்கா சிங்கங்கள், சுமத்ரான் புலி மற்றும் 2 அமுர் புலிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் சோம்பல், இருமல் மற்றும்  தும்மல் போன்ற பல அறிகுறிகளை […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்…. பலியாகும் பொதுமக்கள்…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

கொரோனா தொற்று பரவலினால் மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 30,144 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் படி மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது  74,00,739 ஆக அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி கடந்த ஒரு நாளில் மட்டும் 164 பேர் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

அடுத்து என்ன திட்டம்….? செயற்கைக்கோள் எடுத்த படங்கள்…. வெளிவந்த தகவல்கள்….!!

யுரேனியம் செறிவூட்டல் ஆலையை புகைப்படம் எடுத்து செயற்கைக்கோள் வெளியிட்டுள்ளது. வடகொரியா அண்மையில் பல சக்தி வாய்ந்த ஏவுகணைகளை ஏவி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தனர். இதற்காக ஐ.நா. சபையும் பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தென்கொரியாவும் அவர்களுக்கு போட்டியாக  நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக அனுப்பினர். இந்த நிலையில் மாக்சர் என்னும் செயற்கைக்கோள் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் வடகொரியா நாட்டில் உள்ள யோங்பியோன் யுரேனியம் செறிவூட்டல் ஆலையை புகைப்படம் எடுத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஆட்சி அமைக்க போவது யார்….? நடக்கவுள்ள தேர்தல்…. போட்டியிடும் இந்தியர்கள்….!!

நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டியிடுகின்றனர். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்தியர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். அதிலும் கடந்த ஆண்டு அமெரிக்காவில் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றார். மேலும் அந்நாட்டின் பல உயர்ந்த பதவிகளிலும் இந்தியர்களை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார். இதே போன்று கனடா அரசியலிலும் இந்தியர்கள் பொறுப்பு வைக்கின்றனர். குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு கனடாவில் […]

Categories
உலக செய்திகள்

’22 ஆண்டுகள் சிறை’…. பண மோசடி செய்த இந்தியர்…. தீர்ப்பு வழங்கிய அமெரிக்கா நீதிமன்றம்….!!

பண மோசடி செய்த குற்றத்திற்காக இந்தியர் ஒருவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்கர்களை ஏமாற்றி பணம் பறித்த இந்தியருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வர்ஜீனியா நீதிமன்ற அட்டர்னியான ராஜ் பாரேக் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஸேஷாத்கான் பதான் என்னும் இந்தியர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து 4 ஆயிரத்திற்கும் மேலான அமெரிக்கா மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். மேலும் அவர்கள் புலனாய்வுத் துறை, போதை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

எளிமையாக்கப்பட்டுள்ள விதிமுறைகள்…. மகிழ்ச்சியில் பயணிகள்…. அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து செயலாளர்….!!

பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது குறித்து போக்குவரத்து செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் பயணக்கட்டுப்பாடுகள் எளிமையாகப்பட்டுள்ளது குறித்து போக்குவரத்து செயலாளரான கிராண்ட் ஷாப்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அக்டோபர் 4 ஆம் தேதி முதல் சிவப்புப் பட்டியலில் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருப்பின்பயணத்திற்கு முன் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டாம். மேலும் அக்டோபர் மாதத்திலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் வருகைக்கு இரண்டு நாட்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரேசில் முன்னாள் கால்பந்து வீரர்…. மருத்துவமனையில் அனுமதி…. தகவல் வெளியிட்ட பீலேவின் மகள்….!!

முன்னாள் கால்பந்து வீரர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பிரேசில் நாட்டை சேர்ந்தவர் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் பீலே. இவர் உடல்நலக்குறைவால் sao paulo நகரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து கடந்த வாரம் தான் உடல்நிலை சரியாகி வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் அவர்  தற்பொழுது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தான் […]

Categories
உலக செய்திகள்

30 நிமிடங்கள் மட்டும் தூக்கம்…. ஜப்பானின் வினோத மனிதர்…. நம்ப மறுக்கும் பொதுமக்கள்….!!

12 வருடங்களாக வெறும் அரைமணி நேரம் மட்டுமே தூங்குவதாக ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 34 வயதான டெய்சுகே ஹோரி என்பவர் கடந்த 12 வருடங்களாக நாளொன்றுக்கு வெறும் அரைமணி நேரம் மட்டுமே உறங்குவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் ஆரோக்கியத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் குறைவான நேரம் மட்டும் தூங்குவோர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இவர் நூற்றுக்கணக்கான மக்களுக்கு குறைந்த நேரம் தூங்குவது எப்படி என்பது குறித்தும் பயற்சி அளித்து […]

Categories
உலக செய்திகள்

காலை கடித்த விஷப்பூச்சி…. கால்பந்து பயிற்சியாளருக்கு ஏற்பட்ட விபரீதம்…. பரிசோதனையில் தெரியவந்த உண்மை….!!

கால்பந்து பயற்சியாளருக்கு காலில் கொடிய விஷம் கொண்ட சிலந்தி கடித்து உடலில் வெள்ளை எண்ணிக்கை குறைந்துள்ளது. பிரித்தானியாவில் Norfolkகைச் சேர்ந்த 31 வயதான கால்பந்து பயிற்சியாளர் லீவிஸ் ஆல்ப். இவர் தனது காலில் கொப்பளம் ஒன்று உள்ளதை கண்டுள்ளார். மேலும் இது வெயிலில் விளையாடியது காரணமாக தான் ஏற்பட்டுள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சில நாட்களில் அவருக்கு அதீத காய்ச்சலும் அதனை தொடர்ந்து கடுமையான உடல் வலியும் ஏற்பட்டு உள்ளது. மேலும் தனக்கு கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

‘முதுகில் குத்தும் செயல்’…. ஒப்பந்தத்தை ரத்து செய்த ஆஸ்திரேலியா…. வேதனை தெரிவித்த பிரான்ஸ் அதிபர்….!!

பிரான்ஸ் தனது தூதர்களை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது. ஆஸ்திரேலியா நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்காக பிரான்ஸ் அரசுடன் 90 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று ஆஸ்திரேலியா பிரதமரான ஸ்காட் மாரிசன் பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மேக்ரானுக்கு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். இதனால் குழப்பமடைந்த பிரான்ஸ் அதிபர் என்ன நடக்கிறது என்பதை அறிந்து […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்…. வெளிநாடு செல்லும் இளைஞர்கள்…. தகவல் தெரிவித்த தலீபான்கள்….!!

வேலையின்மை காரணமாக இளைஞர்கள் பல்வேறு நாடுகளுக்கு வேலை தேடி செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. மேலும்  தற்போது தான் ஆப்கான் பழைய நிலைமைக்கு திரும்புகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதால் இளைஞர்கள் பல்வேறு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக காபூல் நகர மக்கள் மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

‘யாருக்கும் தீங்கு விளைவிக்காது’…. ஆக்கஸ் கூட்டணிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்…. கருத்து வெளியிட்ட பாதுகாப்பு நிபுணர்….!!

முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மைக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து ‘ஆக்கஸ்’ என்னும் முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டாண்மையானது இந்தோ- பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்ககம் மற்றும் அவர்களின் அதிகமான ராணுவ ஊடுருவலை தவிர்த்து அதனை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று மூன்று நாடுகளும் தெரிவித்துள்ளன. மேலும் இந்த பாதுகாப்பு கூட்டாண்மை சீனா உட்பட எந்தவொரு உலக நாடுகளுக்கும் பாதிப்பை விளைவிக்காது என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

முக்கிய நாடுகளின் ஒப்பந்தம்…. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி…. பிரதமரின் அதிரடி பதில்….!!

  பிரான்சுடன் தனது நாட்டின் உறவு மிகவும் வலிமையாக உள்ளது என்று இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இங்கிலாந்து உட்பட 3 முக்கிய நாடுகள் AUKUS என்னும் பாதுகாப்பு வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றை ஆசிய பசுபிக் கடலில் போட்டுள்ளது. இவ்வாறு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை தொடர்ந்து AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பங்கேற்றுள்ள 3 முக்கிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா பிரான்ஸ் நாட்டுடனான நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஒப்பந்தத்தை அதிரடியாக முடித்துள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் இந்த […]

Categories

Tech |