Categories
உலக செய்திகள்

பெண்களால் சுமக்க முடியாத ஒன்றை திணிப்பது போன்றதாகும்…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

பெண்களை மந்திரி பதவிக்கு தேர்ந்தெடுப்பதென்பது அவர்களால் சுமக்க முடியாத ஒன்றை பெண்களிடம் திணிப்பது போன்றதாகும் என்று ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமின்றி தலிபான்கள் ஆப்கானிஸ்தானிலுள்ள பெண்களுக்கென பல கட்டுப்பாடுகளையும் அந்நாட்டில் விதித்துள்ளார்கள். இதனால் ஆப்கன் பெண்கள் அந்நாட்டில் தலிபான்களுக்கு எதிராக மிகவும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் தங்களது உரிமைகளுக்காக போராடும் பெண்களை ஆப்கானிஸ்தானிலுள்ள அனைத்து […]

Categories
உலக செய்திகள்

தலீபான்கள் பிடியில் தூதரகம்…. கிழிக்கப்பட்ட புத்தகங்கள்…. தகவல் வெளியிட்ட ர் சிஹ்வல்ட் ஹேக்….!!

நார்வே நாட்டின் தூதரகத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். அதில் இடம்பெறும் பிரதமர், துணை பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களின் விவரங்களும் வெளிவந்தன. பொதுவாக தலீபான்கள் பழமையை விரும்பக்கூடியவர்கள். இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதி கிடையாது. அதிலும் ஆண்கள் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தலீபான்கள் அமல்படுத்தி வருகின்றன. இதனையடுத்து தற்போது காபூலில் உள்ள நார்வே நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. கொரோனாவிற்காக அமைக்கப்பட்ட மருத்துவமனை…. தீவிர விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகள்….!!

ஐரோப்பிய நாட்டிலுள்ள தற்காலிக கொரோனா மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அதிலிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து சிதறி கட்டிடம் முழுவதும் பரவிய தீயினால் சுமார் 14 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக வடக்கு மாசிடோனியாவும் திகழ்கிறது. இந்த நாட்டில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்காக தற்காலிக மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட திடீர் தீயினால் மருத்துவமனையிலிருந்த ஆக்சிஜன் […]

Categories
உலக செய்திகள்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா…. தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. ஜப்பான் அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு….!!

ஜப்பான் நாட்டில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்காக போடப்பட்ட கட்டுப்பாடுகள் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் அந்நாட்டு அரசாங்கம் அதிரடியான முடிவை எடுத்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதேபோல் ஜப்பான் நாட்டிலும் கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வரப்பட்ட கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் வரும் 12 ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

‘எங்களுக்கு வேறு வழியில்லை’…. கண்ணீருடன் ஈரான் தம்பதியினர்…. பேட்டி எடுத்த பிரபல பத்திரிக்கை….!!

பிரித்தானியாவிற்குள் அத்துமீறி நுழையும் புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவது தொடர்பாக வெளியுறவு செயலாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பிரித்தானியாவிற்கு மக்கள் சட்டத்திற்கு புறம்பாக பிரான்சில் இருந்து கடல் எல்லையைத் தாண்டி படகுகளில் வருகின்றனர். அவர்களை திருப்பி அனுப்பும் விதமாக சட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து பிரித்தானியா வெளியுறவு செயலாளர் பிரீத்தி பட்டேல் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இதனையடுத்து பிரித்தானியாவின் திட்டத்தையும் மீறி நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரான்சில் இருக்கும் கலாயிஸ் துறைமுகத்தில் திரண்டுள்ளனர். இது குறித்து தகவல் சேகரிக்க […]

Categories
உலக செய்திகள்

இக்கட்டான பொருளாதார நிலை…. சொந்த மகளையே விற்க முயலும் சோகம்…. தகவல் வெளியிட்ட தந்தை….!!

தனது சொந்த மகளையே பொருளாதார காரணத்தால் விற்பதற்கு முடிவு செய்துள்ளதாக ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது கைப்பற்றிய தலிபான்களின் கீழிருக்கும் தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டில் மிர் நசீர் என்னும் நபர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது நசீரின் குடும்பம் தலிபான் பயங்கரவாதிகளின் ஆட்சியில் சிக்கியுள்ளார்கள். இதனையடுத்து பொருளாதார சூழ்நிலையின் காரணத்தால் நசீரால் தனது குடும்பத்தை காப்பாற்ற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. […]

Categories
Uncategorized உலக செய்திகள்

‘தனியாக வெளியே செல்ல வேண்டாம்’…. கனடாவில் மாணவர் கொலை…. எச்சரிக்கை விடுத்துள்ள இந்தியா தூதரகம்….!!

இந்தியா மாணவர் ஒருவர் கனடாவில் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அனைவரிடமும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள Nova Scotiaவில் Truro நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் 23 வயதுடைய Prabhjot Singh Katri என்ற இந்தியா மாணவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரிகள் எந்தவித தகவலும் […]

Categories
உலக செய்திகள்

சிறப்பு திட்டத்தின் கீழ்…. குடியுரிமை வழங்கல்…. தகவல் வெளியிட்ட அமைச்சர்….!!

முன்களப்பணியாளர்களாக செயலாற்றியவர்களுக்கு பிரான்ஸ் அரசு குடியுரிமை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் போது முன்களப்பணியாளர்களாக செயலாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை குடியுரிமை அமைச்சரான Marlene Schiappa நேற்று வெளியிட்டுள்ளார். அதில் “சிறப்பு திட்டத்தின் கீழ் 16,000 பேர் பிரெஞ்சு குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 12,012 பேருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருவர் பிரான்சில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தால் மட்டுமே குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க […]

Categories
உலக செய்திகள்

போராட்டம் நடத்தும் பெண்கள்…. தடை விதிக்கும் தலீபான்கள்…. உத்தரவு வெளியிட்ட உள்துறை அமைச்சகம்….!!

பெண்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதற்காக தலீபான்களின் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தலீபான்களின் உள்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் “நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஒருவேளை போராட்டம் நடத்தப்பட வேண்டுமென்றால் முன்னதாகவே அனுமதி பெறுதல் வேண்டும். அதிலும் போராட்டத்தில் முழக்கமிடுதல், வாசகங்கள் ஏந்திச் செல்லுதல் போன்ற செயல்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 1990களில் […]

Categories
உலக செய்திகள்

குடிமக்களுக்கு நற்செய்தி…. இரு நாடுகள் சந்திப்பு…. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உள்துறை அமைச்சர்….!!

சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா இரு நாடுகளும் லண்டனில் வைத்து முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளும் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளனர். அந்த ஒப்பந்தத்தில் சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் பிரித்தானியர்கள் மற்றும் அந்நாட்டிற்கு வருகை புரியும் பிரித்தானியா பயணிகள் தங்களின் மருத்துவம், ஓய்வு ஊதியம், மற்றும் சமூக நலப்பாதுகாப்பு போன்றவற்றின் பலன்களை சுவிட்சர்லாந்திலும் பெறமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று லண்டன் சென்ற சுவிட்சர்லாந்து உள்துறை அமைச்சரான  Alain Berset இந்த ஒப்பந்தத்தில் […]

Categories
உலக செய்திகள்

மோசடி வழக்கில் கைதான அதிபரின் சித்தப்பா…. நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை…. உறுதி செய்த பாரீஸ் நீதிமன்றம்….!!

சிரியாவின் அதிபரான பஷார் ஆசாத்தின் சித்தப்பாவான Rifaat Assadதிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. சிரியாவின் மறைந்த முன்னாள் அதிபர் ஹபீஸ் ஆசாத்தின் இளைய சகோதரர் Rifaat Assad. இவர் 1984 ஆம் ஆண்டு மார்ச்சில் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு நாட்டை விட்டு வெளியேறி பிரான்ஸில் குடிபுகுந்தார். மேலும் Rifaat Assadதின் சகோதரரும், மறைந்த முன்னாள் அதிபருமான ஹபீஸ் ஆசாத் தற்போது இருக்கும் சிரியா அதிபரான பஷார் ஆசாத்தின் தந்தை […]

Categories
உலக செய்திகள்

‘இணைந்து செயல்படுவோம்’…. மன்னிப்பு வழங்கப்படும்…. அழைப்பு விடுத்த தலீபான்களின் முக்கிய தலைவர்….!!

அனைவரும் நாடு திரும்புங்கள் என்று தலீபான்களின் முக்கிய தலைவரான முல்லா முகமது ஹசன் அகுந்த் ஆப்கான் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தலீபான்களின் முக்கிய தலைவரான முல்லா முகமது ஹசன் அகுந்த் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ” ஆப்கானின் முன்னால் ஆட்சியின் போது பணிபுரிந்த பணியாளர்கள் அனைவரும் தைரியமாக நாடு திரும்புங்கள். அதிலும் தூதரகங்கள் அவற்றின் அதிகாரிகளுக்கும் நாங்கள் முழு பாதுகாப்பை தருகிறோம். எங்கள் […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல் தொடக்கம்…. ஆப்கானில் விமான சேவைகள்…. 200 பேர் பயணம்….!!

கத்தார் அரசின் உதவியுடன் ஆப்கானில் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனையடுத்து அந்நாட்டு அதிபரான அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து தலீபான்கள்  புதிய ஆட்சி அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தலீபான்கள் அமைப்பின்  தற்போதைய […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் பெண்கள்…. கிரிக்கெட் விளையாட தடை…. தகவல் வெளியிட்ட அகமதுல்லா வாசிக்….!!

பெண்கள் கிரிக்கெட் விளையாடக்கூடாது என தலீபான்கள் அமைப்பின் கலாச்சார ஆணையத் துணை தலைவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 வருடகாலமாக தங்கியிருந்த அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனை அடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். மேலும் ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கையில் சிக்கியதால் அங்கு புதிய […]

Categories
உலக செய்திகள்

சரமாரியாக தாக்கப்பட்ட சிறுவன்…. இணையத்தில் வைரலான வீடியோ…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

இங்கிலாந்தில் பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கிய காவல்துறை அதிகாரிக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனையை விதித்துள்ளது. இங்கிலாந்திலுள்ள பள்ளி ஒன்றில் கிறிஸ்டோபர் க்ரூஸ் என்னும் காவல்துறை அதிகாரி மாணவர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட பிரிவின்கீழ் உள்ளார். இவர் சென்றாண்டு 10 வயது பள்ளி மாணவன் ஒருவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அந்த 10 வயது சிறுவன் சட்டென தரையில் விழுந்துவிட்டதோடு மட்டுமின்றி காவல் துறை அதிகாரியிடமிருந்து தப்பிப்பதற்காக ஒரு அறையினுள் நுழைந்துள்ளான். ஆனால் காவல் துறை அதிகாரி அந்த 10 […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தில் காரை ஓட்டிய நபர்… காவல்துறையினர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பிரிட்டனில் நபர் ஒருவர் தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்ற சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள டட்டஸ்டன் என்ற நகரில் ஆரோன் ஓ ஹல்லோரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டட்டஸ்டன் நகர ரயில் நிலையத்திற்குள் தனது மிட்சுபிஷி காருடன் சென்றுள்ளார். மேலும் சுமார் அரை மைல் தூரத்துக்கு காரை ஆஸ்டன் பகுதியை நோக்கி தண்டவாளத்தில் இறக்கியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் தண்டவாளத்தின் ஓரமாக காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

உரிமைகள் பறிபோகுமா….? போராட்டம் நடத்தும் பெண்கள்…. கட்டுப்பாடு விதித்த தலீபான்கள்…!!

பெண்கள் உரிமை மற்றும் சுதந்திரத்திற்காக போராடுவதை அடக்குவதற்காக தலீபான்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனை அடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றது. இதனால் ஆப்கான் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் சுதந்திரம் பறி போகுமோ என்ற பயவுணர்வு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தலீபான்கள்  இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்…. குற்றத்தை ஒப்புக்கொண்ட வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

55 வருடங்களுக்கு பின்பாக யூரோ 2020 கால்பந்திற்கான இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணியிலுள்ள கருப்பினத்தவர்களை இணையத்தின் வாயிலாக இனவெறி தாக்குதல் நடத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது. யூரோ 2020 கால்பந்திற்கான இறுதி சுற்றுக்கு சுமார் 55 வருடங்கள் கழித்து இங்கிலாந்து அணி சென்றுள்ளது. ஆனால் இறுதிப் போட்டி வரை சென்ற இங்கிலாந்து அணி வெற்றி வாய்ப்பை தவற விட்டதால் கால்பந்து ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

இக்கட்டான சூழ்நிலையில் பெண்களின் பாதுகாப்பு…. தேர்தலுக்கு ரெடியாகும் பிரான்ஸ்…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

அதிகமாக செலவாகும் என்பதால் கருத்தடையின் பயன்பாடுகள் குறைந்து பெண்களின் பாதுகாப்பிற்கு இக்கட்டான சூழ்நிலை உருவாகும் என்ற கூற்றை முன்வைத்து அடுத்தாண்டு தேர்தலுக்கு ரெடியாகும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டில் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சுகாதார துறை அமைச்சர் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 25 வயது வரை இருக்கும் இளம்பெண்களுக்கு கருத்தடை இலவசம் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இரண்டா…? பீதியிலிருக்கும் பொதுமக்கள்…. வட அமெரிக்காவில் நடந்த சம்பவம்….!!

வட அமெரிக்க நாட்டில் கனமழையும், நிலநடுக்கமும் ஒரே நாளில் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சத்திலுள்ளார்கள். வட அமெரிக்க நாடுகளில் ஒன்றாக மெக்சிகோவும் உள்ளது. இந்த மெக்சிகோ நாட்டில் டவுண்டவுன் என்னும் நகரம் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. இந்த நகரத்தில் திடீரென பெய்த கனமழையால் ஆங்காங்கே வெள்ளநீர் புகுந்துள்ளது. மேலும் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி ஆங்காங்கே நிற்கும் கார்களை அடித்துச் சென்றுள்ளது. இதனால் போக்குவரத்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி மருத்துவமனைகளுக்குள்ளும் திடீரென பெய்த கனமழையால் வெள்ள […]

Categories
உலக செய்திகள்

‘பூஸ்டர் தடுப்பூசி போடக்கூடாது’…. பணக்கார நாடுகளின் நடவடிக்கை…. வேதனை தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனர்….!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் பெரும்பாலும் பணக்கார நாடுகளுக்கே சென்றடைவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் வேதனை தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் இயக்குனரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனீவாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” ஒவ்வொரு நாடுகளும் தங்களின் மக்கள் தொகையில் குறைந்தது 40% அளவிற்கு தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னரே பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து தீர்வு எடுக்க வேண்டும். அதுவரையில் பூஸ்டர் தடுப்பூசி செல்வது குறித்து எந்தவொரு அனுமதியும் வழங்கக்கூடாது. […]

Categories
உலக செய்திகள்

2 குழுமங்களுக்கிடையேயான ஒப்பந்தம்…. தடை உத்தரவை நீக்கிய நீதிமன்றம்….!!

சிங்கப்பூரிலுள்ள நீதிமன்றம் விதித்த தடை ஒப்பந்தத்தை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் சமரச நீதிமன்றம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சமரச நீதிமன்றம் ரிலையன்ஸ் மற்றும் ஃபியூச்சர் ரீடெய்ல் என்ற இரு குழுமங்களுக்கிடையேயான ஒப்பந்த திட்டத்திற்கு தடை உத்தரவை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டின் படி சிங்கப்பூரிலுள்ள சமரச நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. அதாவது ரிலையன்ஸ் மற்றும் பியூச்சர் ரீடைல் என்ற இரு குழுமங்களுகிடையேயான […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. பலரும் படுகாயமடைந்த சோகம்…. அதிகாரியை நியமித்த அமைச்சகம்….!!

கனடாவிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை செய்வதற்கு காவல்துறை அதிகாரி ஒருவரை நியமனம் செய்துள்ளதாக தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் தெரியவந்துள்ளது. கனடாவிலுள்ள ரொறொன்ரோ என்னும் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதோடு மட்டுமின்றி இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பலரையும் மீட்புக்குழுவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள். இதுகுறித்து தொழிலாளர் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! மாதந்தோறும் 100 பிராங்குகளா…? நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளம்…. கோரிக்கை விடுத்த தொழிற்சங்கங்கள்…!!

சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சுமார் 100 பிராங்குகள் அதிகமாக சம்பளத்தை பெறுவதற்கு உரிமையுண்டு என்று அந்நாட்டிலுள்ள முக்கிய தொழிற்சங்க குழுமம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சுமார் 100 பிராங்குகள் அதிகமாக சம்பளத்தை பெறுவதற்கு உரிமையுண்டு என்று அம்பரல்லா குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்திலுள்ள தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அதாவது அந்நாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக 4,000 பிராங்குகள் வழங்க வேண்டும் என்பதாகும். இதனையடுத்து சுவிட்சர்லாந்திலுள்ள 20 தொழிற் சங்கங்களில் […]

Categories
உலக செய்திகள்

ரிப்பனை வெட்டிய சிறுவன்…. தலையில் தட்டிய ஜனாதிபதி…. துருக்கியில் நடந்த சம்பவம்….!!

துருக்கியில் ஜனாதிபதி வெட்டவிருந்த சுரங்கப்பாதை திறப்பு விழாவின் ரிப்பனை அங்கிருந்து சிறுவன் ஒருவன் வெட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. துருக்கியில் புதிதாக கட்டப்பட்ட நெடுஞ்சாலை சுரங்கப்பாதைக்கான திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக அந்நாட்டின் ஜனாதிபதி சுரங்கப்பாதை கட்டப்பட்ட இடத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து விழாவில் கலந்து கொண்ட சிறுவன் ஒருவன் ஜனாதிபதி வெட்ட விருந்த ரிப்பனை அவசரப்பட்டு வெட்டியுள்ளார். அதன்பின்பு அந்த சிறுவன் வெட்டிய ரிப்பனை இழுத்துப் பிடித்து மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

காரில் நடந்த கொள்ளை சம்பவம்…. ஓட்டுனரை சுட்ட சிறுவன்…. பலியான இந்தியர்….!!

காரினுள்ளே கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களில் சிறுவன் ஒருவன் ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 21 வயதான குலதீப் சிங் என்பவர் நியூயார்க் மாகாணத்தில் uber கார் ஓட்டுனராக பணிபுரிகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 10 மணியளவில் 8வது அவென்யூ மற்றும் வெஸ்ட் 131வது தெரு வழியாக பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது காரில் இருந்த 15 வயது சிறுவன் குலதீப் சிங்கை தலையில் சுட்டுள்ளான். மேலும் காரில் இருந்த மற்றொரு நபர் […]

Categories
உலக செய்திகள்

‘என்றும் இளமையுடன்’…. சாகாவரம் குறித்து ஆராய்ச்சி…. முதலீடு செய்த அமேசான் நிறுவனர்….!!

சாகாவரம் குறித்து ஆராய்ச்சி நடத்துவதற்காக பல கோடிகளை அமேசான் நிறுவனர் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புராணக் காலத்திலேயே மன்னர்கள் மரணத்தை தழுவக் கூடாது என்பதற்காக சாகாவரம்  பூஜைகளை நடத்தியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த சாகாவரம் குறித்து தற்பொழுதும் பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். ஆனால் அப்படி ஒரு இலக்கை இதுவரை மனித சமூகம் எட்டவில்லை என்பதுதான் நிதர்சனம். மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள பணக்காரர்களும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து இது குறித்து ஆராய்ச்சி நடத்தி […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு… வெளியான பரபரப்பு தகவல்..!!

நேற்று முன்தினம் மாலை மெக்சிகோ நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் மாலை மெக்சிகோ நாட்டில் உள்ள அகாபுல்கோ நகரில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவானதாக தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த நிலநடுக்கம் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் அகாபுல்கோ […]

Categories
உலக செய்திகள்

உடல் எடையை குறைத்த அதிபர்…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!

அதிபர் கிம் ஜாங் உன் மிகவும் மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் புகைப்படமானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்றவுடன் நமது அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது அவருடைய ஆட்சிமுறை மற்றும் கொலு கொலு கன்னங்கள். அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வட கொரியாவின் அதிபராக இருந்து வருகிறார். இதனையடுத்து நெடுநாட்களாக அவர் உடல் பருமன் காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்தார் என தகவல்கள் கசிந்தன. இதற்கிடையில் தற்பொழுது […]

Categories
உலக செய்திகள்

‘நிஜமாகவே பிரச்சனை உள்ளது’…. தலீபான்களுக்கு உதவும் சீனா…. கருத்து தெரிவித்த அதிபர் ஜோ பைடன்….!!

வெள்ளைமாளிகையில் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து நாடு முழுவதும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனை தொடர்ந்து தலீபான்கள் தற்பொழுது இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் அவர்களுக்கு முதலாவதாக தங்களது ஆதரவை தெரிவித்தது சீனா ஆகும். இதே போன்று தலீபான்களும் சீனாவை தங்களது மிக முக்கிய நட்பு நாடு என்று உறவு பாராட்டி வந்தனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

சிறையில் இருந்து…. கைதிகள் தப்பியோட்டம்…. உறங்கிய கண்காணிப்பு அதிகாரிகள்….!!

சிறையில் இருந்து கைதிகள் சுரங்க பாதை அமைத்து தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள கில்போவா எனும் இடத்தில் உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஆறு கைதிகள் சுரங்கம் அமைத்து தப்பிச் சென்றுள்ளனர். மேலும் கைதிகள் சுரங்கப் பாதையின் வெளிச்சுவரை தாண்டி வெளியேறியுள்ளனர். குறிப்பாக இவர்கள் பாலஸ்தீனியர்கள் ஆவர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளானது வலைதளங்களில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் இது தானா….? பணப்பரிமாற்றத்திற்கு வரும் பிட்காயின்…. அங்கீகாரம் செய்த எல் சல்வடோர் அரசு….!!

பணப்பரிமாற்றத்திற்காக எல் சல்வடோர் அரசு பிட்காயினை தேசியளவில் அங்கீகாரம் செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள எல் சல்வடோர் நாட்டில் தேசிய அளவிலான பண பரிமாற்றத்திற்கு பிட்காயினை அந்நாட்டு அரசு அங்கீகரித்துள்ளது. இதுவரை எல் சல்வடோர் நாட்டில் அமெரிக்கா டாலர் பணப்பரிமாற்றத்திற்காக பயன்படுத்துப்பட்டது. இந்த நிலையில் இனிமேல் பிட்காயினும் பணப்புழக்கத்திற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் பிட்காயின் உறுதி தன்மையற்று இருப்பதாலும் முறையான பாதுகாப்பு இல்லாததாலும் பல நாடுகள் இதனை பணப்பரிமாற்றத்திற்கு கொண்டு வர தயங்கி வந்தனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்…. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்…. ஜிம்பாப்வே அரசின் அதிரடி நடவடிக்கை….!!

கொரோனா தொற்று பரவலின் காரணமாக தடுப்பூசி போடும் பணிகளில் ஜிம்பாப்வே அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆப்பிரிக்கா நாடான  ஜிம்பாப்வேவில் மொத்த மக்கள் தொகை 15 மில்லியன் ஆகும். இந்த ஆண்டிற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால் இதுவரை 1.7 மில்லியன் மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 12 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சீனாவில் இருந்து தடுப்பூசிகள் வாங்குவதற்கு நிதி அளித்துள்ளதாக  ஜிம்பாப்வே […]

Categories
உலக செய்திகள்

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு…. தலீபான்கள் செய்தி தொடர்பாளர்…. வெளிவந்துள்ள முக்கிய தகவல்கள்….!!

இடைக்கால அமைச்சர்கள் குழு குறித்த விவரங்களை தலீபான்கள் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறதை தொடர்ந்து கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் அந்நாட்டை முழுவதுமாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனையடுத்து அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து விமானம் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து தலீபான்களுக்கு பயந்து ஆப்கானியர்களும் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு தப்பி சென்றனர். அதிலும் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்த அகதிகள்…. மீட்பு பணியில் காவல்துறையினர்…. வெளிவந்துள்ள தகவல்கள்….!!

பிரித்தானியாவை மீன்பிடி படகில் வந்த அகதிகளை கடற்படை காவல்துறையினர் மீட்டுள்ளனர். பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி மக்கள் அகதிகளாக வந்துள்ளனர். அதாவது  Calais, Dunkerque மற்றும் Boulogne-sur-Mer போன்ற கடற்பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த மீட்பு பணியில் அகதிகள் சிறிய ஆபத்தான மீன்பிடி படகுகள் மூலம் வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 56 அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணம் செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை கடற்படை காவல்துறையினர் மீட்டுள்ளனர். குறிப்பாக அகதிகளாக வந்த  56 […]

Categories
உலக செய்திகள்

‘நான் ஒரு ஐ.எஸ். தீவிரவாதி’…. தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பு…. போலீசாரிடம் சிக்கிய நபர்….!!

தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பரில் உணவகங்கள், மதுபான விடுதிகள், கச்சேரி அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பல பொது இடங்களில் ஐ. எஸ் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் தற்போது தாக்குதல் நடத்தியவர் என்ற சந்தேகத்தில் Salah […]

Categories
உலக செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்….தாக்குதல் நடத்திய தலீபான்கள்…. வைரலான வீடியோ காட்சி….!!

சாலையில் ஊர்வலமாக சென்ற பெண்களை தலீபான்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அடித்து விரட்டும் வீடியோ காட்சியானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள்  பறிக்கப்படும் என்ற பயவுணர்வு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

தாக்குதல் நடத்திய வாலிபர்…. 7 பேர் படுகாயம்…. சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளி….!!

சூப்பர் மார்க்கெட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கை வாலிபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 37 வயதான Ahamed Aathill Mohamed Samsudeen  என்ற இலங்கையர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் இந்தத் தாக்குதலுக்குப் பின் Samsudeen போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் காயமடைந்த ஏழு பேரில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

ரயில் தண்டவாளத்தில்…. தவறி விழுந்த பயணி….. சம்பவ இடத்திலேயே பலி….!!

 தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ரயில் விபத்து புலனாய்வு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரித்தானியா தலைநகரான லண்டனைச் சேர்ந்த 59 வயதான Jama Mohamed Warsame என்பவர் கடந்த ஆண்டு மே 26-ஆம் தேதி Lambethல் தங்கியுள்ளார். மேலும் அங்கிருந்து அவர் வீடு திரும்புவதற்காக புறப்பட்டுள்ளார். அப்பொழுது தான் லண்டனில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் சுங்க ரயிலில் பயணித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

மிகவும் வெப்பமான காலநிலை…. கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…. குறைந்த அளவே பெய்த மழைப்பொழிவு….!!

சீனாவில் தற்போது நிலவி வரும் மிகவும் வெப்பமான காலநிலையால் சுமார் 60 ஆயிரம் ஹெக்டர் அளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளது. சீனாவில் நடப்பாண்டில் சென்ற ஆண்டைவிட 14% குறைவாகவே மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து சீன நாட்டில் மிகவும் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. இவ்வாறு சீனாவில் நிலவி வரும் மிகவும் மோசமான காலநிலையால் சுமார் 60 ஆயிரம் ஹெக்டர் அளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளது. அதோடு […]

Categories
உலக செய்திகள்

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள்…. செய்தி தொடர்பாளரை சுட்டுக் கொன்ற சம்பவம்…. வெளியான தகவல்….!!

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களை பஞ்ஷீர் பள்ளத்தாக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள் என்று தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்ட தேசிய கிளர்ச்சி படையினர்களின் செய்தி தொடர்பாளரை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளார்கள் என்னும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை மட்டும் கைப்பற்ற முடியாமல் இருந்துள்ளது. ஆகையினால் ஆப்கானிஸ்தான் நாட்டின் துணை அதிபர் தலைமையில் தேசிய கிளர்ச்சி படைகள் தலிபான்களுக்கு எதிராக பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மேல் குறிப்பிட்டுள்ள இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல் நிலவி வந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தும் கொரோனா…. வெளியாகியுள்ள தற்போதைய நிலவரம்….!!

அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தியும் கூட உலகளவில் சுமார் 22.19 கோடிக்கும் மேலான மக்களை கொரோனா பாதித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து மிகவும் தீவிரமான தாக்கத்தை அனைத்து நாடுகளிலும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா ஒட்டுமொத்தமாக உலகளவில் 22.19 கோடிக்கும் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

போராட்டத்தில் குழந்தைகள் அமைப்பு…. முடக்கப்படவுள்ள இணையதளங்கள்…. பிரான்ஸ் அரசின் அதிரடி முடிவு….!!

சிறுவர்களின் வாழ்வுக்கு கேடு விளைவிக்கும் ஆபாச இணையதளங்களை முடக்கவுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. உலகிலுள்ள பல்வேறு நாடுகள் ஆபாச படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கி வருகின்றனர். இந்த நிலையில் பிரான்சிலும் இது விரைவில் வரப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏனெனில் பிரான்சில் மிகவும் குறைந்து வயது கொண்ட சிறுவர்களை இது போன்ற இணையதளங்கள் பெரிதும் பாதிக்கின்றன. இதனால் இந்த நடவடிக்கையை பிரான்ஸ் அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக  e-Enfance மற்றும் Voix de l’Enfant போன்ற குழந்தைகள் நல பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

‘மக்களின் உதவி தேவை’…. காணாமல் போன பெண்…. ட்விட்டரில் பதிவிட்ட போலீசார்….!!

காணாமல் போன பெண்ணை கண்டுப்பிடிப்பதற்காக போலீசார் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர். லண்டனில் உள்ள  பார்னெட்  பகுதியை சேர்ந்த 41 வயதான கிறிஸ்டினா அலெக்ஸெண்ட்ரூ என்பவர் அவரின் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இது குறித்து அப்பகுதி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில் “41 வயதான கிறிஸ்டினா அலெக்ஸெண்ட்ரூ அவரின் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அவரை கண்டுப்பிடிக்க பொது மக்களின் உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

போதை தரும் நீராவி…. விமான நிலையத்தில் விற்பனை…. வியப்பூட்டும் தகவல்….!!

நீராவியை நுகர்ந்தாலே போதை தரும் பானத்தை சிங்கப்பூர் விமான நிலையத்தில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் நீராவி பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் அவ்வாறு நீராவி பிடிப்பதினால் கொரோனா தொற்றில் இருந்து தடுக்க முடியாது என்று சுகாதாரத் துறையும் மருத்துவர்களும் விளக்கமளித்தனர். இருந்தும் கூட மக்கள் வீடுகளில் நீராவி பிடிப்பதை நிறுத்தவில்லை. இது போன்ற சம்பவம் சிங்கப்பூரில் உள்ள ஷாங்கே சர்வதேச சர்வதேச விமான நிலையத்தில் நடந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அவசர நிலைக்கட்டுப்பாடு…. ஒப்புதல் அளித்த இலங்கை நாடாளுமன்றம்…. கண்டனம் தெரிவிக்கும் எதிர்கட்சியினர்….!!

உணவு பொருட்களின் விலை உயர்வை தடுப்பதற்காக அவசரநிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த சில நாட்களாக உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதற்காக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசரநிலை கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகளுக்கு 132 பேர் ஆதரவும்  51 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். மேலும் அவசரகால சட்டம் கொண்டு வரப்பட்டால் அது இலங்கையில் ராணுவ ஆட்சி உருவாக வழிவகுக்கும்  என தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை […]

Categories
உலக செய்திகள்

‘பிடிக்கதாவர்களுக்கு காட்ட வேண்டாம்’…. புதிய வசதி அறிமுகம்…. வாட்ஸ் அப் நிறுவனம்….!!

வாட்ஸ் அப் நிறுவனம் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக அளவில் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. இந்த நிலையில் முகநூல் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியில் உள்ள புரொஃபைல் புகைப்படம், இறுதியாக ஆன்லைன் வந்தது போன்ற தகவல்களை பயனாளர்கள் தாங்கள் விரும்பாதவர்களுக்கு காண்பிக்க இயலாத வகையில் அமைத்துக் கொள்ளும் புதிய வசதியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியானது. அதாவது […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே முதன் முதலாக…. குழந்தைகளுக்கு தடுப்பூசி…. கியூபா அரசின் நடவடிக்கை….!!

உலகிலேயே முதன் முதலாக 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியினை கியூபா அரசு தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து தடுப்பூசியானது பெரியவர்களுக்கு மட்டும் போடப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 வயதுக்கு மேலான சிறுவர்களுக்கும் செலுத்தப்படவுள்ளது. இந்த நிலையில்  உலகிலேயே இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை முதன் முதலாக  கியூபா தொடங்கியுள்ளது. இதற்கிடையில் அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் […]

Categories
உலக செய்திகள்

தப்பியோடிய கைதிகள்…. தீவிரமாக தேடி வரும் அதிகாரிகள்…. பாராட்டு தெரிவித்த அதிபர் கட்சி….!!

இஸ்ரேலிலுள்ள சிறையில் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்களில் 6 பேர் கழிவறை மூலம் குழிதோண்டி தப்பியோடியதை குறித்து பாலஸ்தீனர்களின் அதிபர் கட்சி பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள அதிகாரிகளால் பாலஸ்தீனர்கள் கைதுசெய்யப்பட்டால் அவர்களை பாலஸ்தீனிய மக்கள் ஹீரோவாக கருதுகிறார்கள். இதற்கிடையே இஸ்ரேல் நாட்டில் சில்போவா என்னும் பாதுகாப்பு மிகுந்த சிறை ஒன்று உள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 6 பாலஸ்தீனர்கள் இந்த சில்போவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இஸ்ரேல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு வியாதியா….? தீவிர பரிசோதனை செய்த மருத்துவர்கள்…. வெளிவந்த ஆச்சரியமூட்டும் விஷயம்….!!

சீனாவில் ஒரு பெண் தூக்கமின்மை நோயினால் இருக்கிறார் என்பதை பரிசோதனையின் மூலம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் லி ஜானிங். இவர் தன்னுடைய ஐந்து வயதிலிருந்து ஒருமுறை கூட தூங்கியதில்லை என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். இதற்கிடையில் அவருக்கு தூக்கமின்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் இவரை சோதிக்க முயன்றுள்ளனர். ஆனால் சோதிக்க முயன்ற அனைவரும் இரவில் தூங்கி போயுள்ளனர். குறிப்பாக லி ஜானிங் […]

Categories

Tech |