ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களுடன் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ வீரர்கள் இருந்ததை உறுதி செய்வது தொடர்பாக எந்தவித ஆதாரமும் இல்லை என்று அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களுடன் ஒன்றாக சேர்ந்து அந்நாட்டில் சண்டையிடுவதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் தங்களது ராணுவ படை வீரர்களை அங்கு அனுப்பி வைத்ததாக பாகிஸ்தான் நாட்டின் மீது புகார் எழுந்துள்ளது. […]
Tag: உலகச் செய்திகள்
கொரோனா காலகட்டத்தில் சுகாதார வல்லுனர்களின் எச்சரிக்கையையும் மீறி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய அந்நாட்டின் பிரதமருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்த நிலையில் தற்போது அவர் அதிரடியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாகாலகட்டத்தில் ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் இதற்கு எதிராக பிரதமரிடம் சுகாதார வல்லுனர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள். இருப்பினும் பிரதமர் அதனை பொருட்படுத்தாமல் செயல்பட்டதால் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு 26 […]
ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி சீனா இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பயன்படுத்துவதாகவும், ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சிப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி செய்தி தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கிய நட்பு நாடுகளை அணுகி ஜோ பைடன் நிர்வாகம் ஆதரவை உறுதிபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் […]
அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் 5 ஆவது சக்திவாய்ந்த சூறாவளியினால் பெய்துவரும் கன மழையை முன்னிட்டு அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 5 ஆவது சக்தி வாய்ந்த சூறாவளியாக கருதப்படும் ஐடாவினால் அந்நாட்டிலுள்ள பல மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனையடுத்து சூறாவளியினால் பெய்த கன மழையினால் கிட்டத்தட்ட 42 பேர்கள் பலியாகியுள்ளார்கள். இதிலும் குறிப்பாக அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரம் ஐடா சூறாவளியினால் பெய்த கன மழையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயார்க் […]
அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர்கள் கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்திய இரட்டை கோபுரம் உட்பட 4 அதிபயங்கர தாக்குதலை நினைத்து தற்போது வரை அமெரிக்க வாசிகள் அச்சப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்னர் அந்நாட்டிலுள்ள மிகவும் பிரபலமான இரட்டைக் கோபுரம் உட்பட 4 பகுதிகளில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர்கள் பயணிகள் விமானத்தில் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதலினால் சுமார் 3,000 பேர் அநியாயமா பலியாகியுள்ளார்கள். இந்நிலையில் தற்போது […]
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அதன் தலைநகரில் சுமார் 40 நிமிடங்கள் தங்களது வலிமையை காட்டும் விதமாக நடத்திய ஆயுத அணிவகுப்பு தொடர்பான காட்சிகள் அந்நாட்டிலுள்ள அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள அரசு தொலைக்காட்சியில் தலிபான்களின் ஆயுத அணிவகுப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதாவது ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டின் தலைநகரில் தங்களது வலிமையை வெளிகாட்டும் விதமாக ஆயுத […]
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் விமான சேவையை தொடங்குவது தொடர்பாக அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டிலுள்ள ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி அந்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனையடுத்து கத்தார் அரசாங்கம் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரிலுள்ள காபுல் விமான நிலையத்தை மீண்டும் உபயோகப்படுத்துவதற்கு உதவி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது ஆப்கனிலுள்ள அரியனா என்னும் ஏர்லைன்ஸ் நிறுவனம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஆப்கனை […]
ஜெர்மனியிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து 4,300 வைரங்கள் பதிக்கப்பட்ட சுமார் 21 நகைகளை திருடியதாக வழக்கு பதியப்பட்ட 6 பேரை காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஜெர்மனியில் கிரீன் வால்ட் என்னும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சுமார் 113 1.8 மில்லியன் யூரோ மதிப்புடைய 4,300 வைரங்கள் பதிக்கப்பட்ட 21 நகைகளை மர்ம நபர்கள் அருங்காட்சியகத்தில் மின் விநியோகத்தை தடை செய்து திருடி சென்றுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி அருங்காட்சியகத்திற்கு அருகிலிருந்த […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களால் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தின் முதன்மை தலைவராக விசுவாசத்தின் தளபதி இருப்பார் என்று தலிபான்களினுடைய கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் செப்டம்பர் 3-ஆம் தேதி தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் தங்களது புதிய அரசாங்கத்தை அமைக்கவிருப்பதாக அறிவிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தலிபான்களின் பல்வேறு தலைவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் ஒன்றுகூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் […]
இங்கிலாந்தில் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் லாட்டரியின் மூலம் மிகவும் அதிகப்படியான தொகையை வென்ற பெண் ஒருவர் அவருடைய வீட்டில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 2013ம் ஆண்டு லாட்டரியின் மூலம் margaret என்னும் பெண்மணி 27 மில்லியன் பவுண்டுகளை வென்றுள்ளார் .ஆனால் இவர் தனது வாழ்க்கை இந்த லாட்டரியை வென்றதன் பின்னர் மிகவும் மோசமாக இருந்ததாக அடிக்கடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது 50 வயதுக்கு மேலான margaret வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். […]
அகதிகள் விடுதியில் காளான் சாப்பிட்ட சிறுவர்கள் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு பயந்து கடந்த 23 ஆம் தேதி அன்று காபூலில் இருந்து விமானம் மூலம் இரு சிறுவர்கள் தங்கள் குடும்பத்தோடு போலாந்து வந்தடைந்துள்ளனர். அவர்கள் அங்கு சென்றவுடன் வார்சாவுக்கு (Warsaw) அருகிலுள்ள போட்கோவா லெஸ்னா நகரில் இருக்கும் அகதிகளுக்கான விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து மறுநாள் இருவரும் தங்களது சகோதரியுடன் காளான் சாப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மூவருக்கும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு ஆகஸ்ட் […]
கனமழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளமானது கிராமங்களில் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 22 மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6.47 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் நல்பாரி, தர்ராங், லகிம்பூர் போன்ற மாவட்டங்களில் உள்ள […]
வேலை நேரத்தில் படுத்து தூங்கிய மருத்துவர் மீது மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள கிரேட்டர் மான்செஸ்டரில் Fairfield மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் Dr Raisah Sawati என்னும் இளம்பெண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை தேவைப்பட்ட போதோ அல்லது நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு செல்லும் போது Dr Raisah Sawatiயின் கையெழுத்திற்காகவோ அனைவரும் அவருக்காக காத்திருந்துள்ளனர். ஆனால் மருத்துவர் வர தாமதமானதால் உடனே ஒலிபெருக்கி […]
ஆப்கானிஸ்தானில் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்காக பெண்கள் ஆளுநர் வளாகம் முன்பாக போராட்டம் நடத்தினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் ஹெராட் மாகாண ஆளுநர் வளாகம் முன்னால் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முழக்கமிட்டனர் மேலும் கல்வி, வேலை போன்ற பெண்களின் […]
கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்த குழந்தைகளை புதுவிதமாக வரவேற்ற ஆசிரியைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ரஷ்யாவில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி திறக்கப்பட்டன. மேலும் ரஷ்யாவில் பள்ளிகள் திறக்கப்படும் நாளை அறிவு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் பள்ளிக்கு திரும்பும் குழந்தைகளை வரவேற்கும் வகையில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதே போன்று ரஷ்யாவின் தென்கிழக்கு நகரில் உள்ள கபரோவ்ஸ்கில் இருக்கும் பள்ளி எண் 76ல் நடன நிகழ்ச்சி ஓன்று […]
இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அவர்களின் உடைமைகளை திருடும் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். பிரான்ஸில் இறுதிச் சடங்கில் இறந்தவரின் தோழி என்று கூறிக்கொண்டு பெண் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அந்தப் பெண் சவப் பெட்டியின் அருகே சென்றவுடன் இறந்தவரின் கம்மல், மோதிரம், நெக்லஸ் போன்ற அணிகலன் காணாமல் போனதை அவரின் குடும்ப உறுப்பினர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக குடும்ப உறுப்பினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பெண் […]
தீ விபத்தில் சிறுவன் பலியானதால் அவனது குடும்ப உறுப்பினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் ஒரு கூட்டுக் குடும்பம் வசித்து வருகின்றது. அந்தக் குடும்பத்தில் Remi Miguel Gomez Hernandez என்னும் 9 வயது சிறுவன் உட்படமொத்தம் 14 பேர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் ‘அம்மா என்னை காப்பாற்றுங்கள் அம்மா’ என்று ஒரு அழுகுரல் கேட்டுள்ளது. இதனை அடுத்து அந்த சிறுவனின் பெற்றோர் முழித்துக்கொண்டுள்ளனர். இதன் […]
கனடாவில் தனது மனைவியைக் கொன்ற கணவன் தானும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்துள்ள சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவை சேர்ந்த Charlene மற்றும் Delane இருவரும் நெடுநாள் காதலர்களாக இருந்து பின் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிய நிலையில் இரு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒரு நாள் Charlene தனது அக்காவான Della Duquetteடிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அதில் “நீங்கள் […]
தலிபான்கள் வசம் சென்ற ஆப்கானிஸ்தானிலுள்ள தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று மீண்டும் பெண் தொகுப்பாளருடன் காலை நிகழ்ச்சியை ஒளிபரப்ப தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கையில் மும்முரம் காட்டி வருகிறார்கள். மேலும் தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய உடனே அவர்கள் பெண்களுக்கான சில கட்டுப்பாடுகளை அந்நாட்டில் கொண்டு வந்துள்ளார்கள். அதில் ஒன்றாக ஊடகத் துறையில் பணிபுரிந்து வந்த பல பெண்களை தலிபான்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளார்கள். மேலும் வெளிநாடுகளில் ஊடகத்தில் பணி […]
நியூயார்க் நகரில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்நகர மேயர் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தை Ida புயல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக அந்நகரில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. இதனையடுத்து நியூயார்க் நகர மேயரான Bill de Blasio தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நியூயார்க் நகரத்தில் இன்று அவசரநிலை பிரகடனத்தை அறிவிக்கிறேன். ஏனெனில் நியூயார்க் முழுவதும் கனமழை மற்றும் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]
ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து போப் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள கருத்தால் அனைவரிடமும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து போப் பிரான்சிஸ் வானொலி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அமெரிக்கா படைகள் வாபஸ் பெற்றதை அடுத்து அங்கு உருவாகியுள்ள புதிய அரசியல் நிலைமை குறித்து போப் பிரான்சிஸிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாக கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதில் “அடுத்தவர்களின் மீது தங்களின் சொந்த கருத்துகளை வலுக்கட்டாயமாக திணிப்பது […]
லண்டனிலுள்ள தேம்ஸ் நதிக் கரையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் கிட்டத்தட்ட 875 டன் பிளாஸ்டிக் குப்பைகளை அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளதாக திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஒருவர் சமூகவலைத்தள பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். லண்டனிலுள்ள தேம்ஸ் நதிக்கரையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் சுமார் 1,000 த்துக்கும் மேலான பொதுமக்கள் கலந்து கொண்டு அங்கேயே டென்ட் கொட்டகை அமைத்து மிகவும் மகிழ்ச்சியாக ஆடி பாடி தங்கியுள்ளார்கள். மேலும் தேம்ஸ் நதிக்கரையிலுள்ள 6 மைதானங்களில் இந்த இசை நிகழ்ச்சி விழா […]
தலிபான்களின் வசம் வராத பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் நடைபெற்று வரும் மோதலின் மூலம் சுமார் 10 க்கும் மேலான சோதனைச் சாவடிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக தலிபான்களின் அதிகாரி ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களின் வசம் வராமலுள்ள பஞ்ச்சீர் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கு எதிராக திர்ப்பு படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திர்ப்பு படையின் தலைவராக அகமது மசூத் என்பவர் உள்ளார். இவர் சமீப காலத்தில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்வோம் என்றும், ஒருபோதும் அவர்களிடம் சரணடையமாட்டோம் […]
இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளரும், அவரது உதவியாளரும் சுவிட்சர்லாந்திலுள்ள விடுதி ஒன்றில் சேர்ந்து தங்கிவிட்டு இரவு உணவிற்காக வெளியே செல்வது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளராக matt hancock என்பவர் இருந்துள்ளார். அவர் தனது உதவியாளருடன் முத்தமிடுவது தொடர்பான புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியதால் அவரை சுகாதார செயலாளர் பொறுப்பிலிருந்து அந்நாட்டு அரசாங்கம் நீக்கியுள்ளது. அதன்பின்பு தலைமறைவான இருவரும் தற்போது ஒன்றாக சேர்ந்து காரிலேயே சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். இதனையடுத்து […]
தலிபான்களின் வசம் வந்த ஆப்கானிஸ்தான் விவகாரத்தை அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் கையாண்ட விதத்தை முன்னிட்டு 60 சதவீதம் மக்கள் அவர் தகுதி இழப்பு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வாக்களித்துள்ளார்கள். அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்று அறிவித்ததையடுத்து தலிபான்களின் வசம் ஆப்கானிஸ்தான் சென்றுள்ளது. ஆகையினால் அமெரிக்க வாக்காளர்களில் 52% பேர் அதிபர் ஜோ பைடனுக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்கள். அதாவது அவர் […]
காலக்கெடு முடிந்த தங்களது சுகாதார அட்டைகளையும், ஓட்டுனர் உரிமங்களையும் புதுப்பிக்க தவறும் கனடாவிலுள்ள ஒன்றாரியோ மாவட்ட பொதுமக்களுக்கு அம்மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலின் காரணத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின் காலக்கெடு முடியும் நபர்களது அடையாள அட்டைகளை புதுப்பிக்க தேவையில்லை என்று கன்னட நாட்டிலுள்ள ஒன்றாரியோ மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது மேல் குறிப்பிட்டவாறு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்த சுமார் 17% கனட நாட்டிலுள்ள […]
இளவரசி டயானா குறித்த ரகசியங்களை அவரது தோழியான சாரா ஃபெர்குசன் வெளியிட்டுள்ளார். பிரித்தானியா இளவரசியான டயானா மற்றும் இளவரசரான சார்லஸின் மணவாழ்வானது அவர்களுக்கு இனிமையை தரவில்லை. அதற்கு மாறாக அதிக பிரச்சினைகளை கொடுத்ததால் சார்லஸ் தன் முன்னாள் காதலியான கமீலாவுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். இது போன்று டயானாவும் குதிரைப் பயிற்சியாளரான James Hewitt என்பவருடன் உறவை ஏற்படுத்திக் கொண்டார். இவர்கள் இரண்டு பேரின் தகாத உறவினால் இளவரசர் ஹரி மிகவும் பாதிக்கப்பட்டார். மேலும் இளவரசர் ஹரியின் தந்தை […]
ராணுவ படைகள் விட்டுச்சென்ற நவீன ஆயுதங்களை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் முழுவதுமாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் கடந்த 31 ஆம் தேதி வரை அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கு தலீபான்கள் கெடு விதித்திருந்தனர். மேலும் தலீபான்களுக்கு பயந்து உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஆப்கானில் இருந்து வெளியேறினர். இதனையடுத்து நேற்று முன்தினம் அமெரிக்கப் படைகள் முற்றிலும் ஆப்கானை விட்டு வெளியேறியதை அடுத்து தலீபான்கள் ஆப்கானை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக […]
பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கடந்த புதன்கிழமையன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இங்கிலாந்தில் உள்ள Leicestershire மாநிலத்தில் இருக்கும் Narborough பகுதியில் கடந்த 1983 ஆம் ஆண்டு நவம்பரில் 15 வயதான Lynda Mann என்னும் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு இருக்கும் பொழுதே 1986ஆம் ஆண்டு அதே போன்று 15 வயது பெண்ணான Dawn Ashworth என்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களிடமிருந்து வெறும் இரண்டே வாரங்களில் 14,500 க்கும் மேலான ஆப்கன் மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொது மக்களை மீட்டுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபின் அந்நாட்டில் சிக்கியிருக்கும் வெளிநாட்டவர்களையும், ஆப்கன் மக்களையும் அனைத்து நாடுகளும் மீட்டு வருகிறார்கள். அதன்படி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் சுமார் 2 வாரங்களில் கிட்டத்தட்ட 14,500 க்கும் மேலான வெளிநாட்டவர்களையும், ஆப்கன் மக்களையும் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்டுள்ளார்கள். இந்த தகவலை இங்கிலாந்து […]
ஸ்விட்சர்லாந்தில் தனியார் இணையதளத்தின் மூலம் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது கற்பை ஏலத்திற்கு வைத்தது தொடர்பான விளக்கத்தை அவர் அளித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் ஜெனிவா என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்து வசித்துவரும் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனியார் இணையதளத்தில் Eclosia என்னும் பெயரின் மூலம் தனது கற்பை ஏலத்திற்கு வைத்துள்ளார். மேலும் இவர் இறுதியாக தனது கற்பை சுமார் 5,00,000 பிராங்குகள் தொகைக்கு தனியார் இணையதளத்தில் ஏலத்திற்கு வைத்துள்ளார். இந்நிலையில் இது குறித்த விளக்கத்தை […]
அமெரிக்கா ராணுவ வீரர்கள் முழுவதுமாக ஆப்கானில் இருந்து வெளியேறியதை தலீபான்கள் கொண்டாடி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறுவதை அடுத்து அந்நாட்டை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் நேற்றுடன் ஆப்கானில் இருந்த கடைசி அமெரிக்கா ராணுவ வீரரும் வெளியேறினார். இதனால் தலீபான்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தங்களின் மகிழ்ச்சியை வெளியுலகிற்கு காட்டுவதற்காக சாலைகளில் பேரணியாக சென்றனர். அதிலும் வானத்தை நோக்கி துப்பாக்கி குண்டுகள் முழங்கினர். குறிப்பாக காபூல் நகரில் […]
பயங்கரவாத அமைப்புக்காக நிதி திரட்டிய ஜெர்மனி பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் Denise S. என்பவர். இவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்காக பணம் திரட்டியதாகவும், மத்திய கிழக்கு நாடுகளுடன் அவர்களுக்காக பணப்பரிவர்த்தனை செய்து வருவதாகவும் சந்தேகம் எழுப்பியதை அடுத்து Denise S. கடந்த திங்கட்கிழமை அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் பணம் திரட்டுவது குறித்த தகவல்களை ஐ.எஸ் அமைப்பிலுள்ள பெண் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் Denise S. மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]
குழந்தைகள் தன்னை தேடி வாடுவதாக கட்டீரா ஹஸ்மி என்ற ஆப்கானிஸ்தான் பெண் தனது சோகத்தை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள கஸ்னி நகரைச் சேர்ந்தவர் 32 வயதான கட்டீரா ஹஸ்மி. இவர் ஆப்கானில் காவல்துறையில் பணிபுரிந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்பார்வை பறிபோனதால் இந்தியா வந்துள்ளார். தற்பொழுது அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் டெல்லியில் வசித்து வருகிறார். மேலும் கட்டீரா ஹஸ்மி தனது கண்களை இழந்த சோகத்தை அனைவரிடமும் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதில் “ஆப்கானிஸ்தான் […]
ஆப்கானிஸ்தானில் உள்ள மொழிப்பெயர்ப்பாளர்கள் தங்களுக்கு பிரான்ஸ் ராணுவம் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வந்தனர். இதனையடுத்து தலீபான்கள் மீட்பு பணிக்கான கெடுவை கடந்த 31 ஆம் தேதி வரை விதித்திருந்தனர். இந்த நிலையில் நேற்றுடன் அனைத்து மீட்பு பணிகளும் முடிவடைந்துள்ளன. இன்னும் அந்நாட்டை விட்டு […]
தலீபான்கள் தலைவரை பேட்டி எடுத்த முன்னனி ஊடகத்தின் பெண் ஊழியர் ஒருவர் ஆப்கானை விட்டு வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியதை அடுத்து தலீபான்கள் அந்நாட்டை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை ‘இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான்’ என்று பெயர் மாற்றம் செய்யப்போவதாகவும் ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ஆப்கானின் முன்னணி ஊடகத்தில் பணிபுரியும் அர்கன்ட் என்ற பெண் ஊடகவியலாளர் தலீபான்களின் தலைவரான […]
பெண் என்று நினைத்து பழகிய திருநங்கையை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனை சேர்ந்தவர் 27 வயதான போக்டா நோ. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சமூக ஊடகத்தின் மூலம் நிக்கி என்பவருடன் பழகி நட்பு பாராட்டி உள்ளார். இதன் பின்பு ஜூன் 6 ஆம் தேதியன்று போக்டா நோவுடன் நிக்கி டேட்டிங் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து காரில் […]
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோராசன் பிரிவினருக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலாளர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்ப பெறப்பட்டதை அடுத்து அங்கிருந்த பிரித்தானியப் படைகளும் வெளியேறின. இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒரு பிரிவான கோராசன் அமைப்பினரால் பிரித்தானியா மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று அந்நாட்டின் விமானப் படைத் தலைவர் Sir Mike Wigston தெரிவித்துள்ளார். மேலும் காபூலில் தற்கொலை படை தாக்குதலில் இரண்டு பிரித்தானியர்கள் உட்பட சுமார் […]
விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சவுதி அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள Asir மாகாணத்தின் தலைநகரான Abha நகரில் சர்வதேச விமான நிலையம் ஓன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பயணிகள் விமானம் சேதமடைந்துள்ளதாகவும் சவுதி அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதிலும் கடந்த 24 மணி நேரத்திற்குள் விமான நிலையத்தை குறிவைத்து 2 ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. […]
விமான நிலையத்தில் அதிக அளவு சிகரெட் பாக்கெட்களை வைத்திருந்த முதியவர் ஒருவர் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். பிரித்தானியாவில் உள்ள Rugby நகரை சேர்ந்தவர் 56 வயதான Bojkin. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு Slovakiaவில் இருந்து பிரித்தானியா வந்துள்ளார். அப்போது luton விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் Bojkinனை தடுத்து நிறுத்தினர். ஏனெனில் அவரது சூட்கேசில் சிறிய ரக சிகரெட் பாக்கெட்கள் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே அதனை சோதனை செய்து பார்த்த பொழுது […]
இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகள் விளையாட வேண்டும் என்று சீனா அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. உலக அளவில் அனைத்து குழந்தைகளும் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டனர். இதனால் அவர்களின் மனநலமும் உடல் நலமும் பாதிக்கப்படுவதாக பல்வேறு செய்திகளின் மூலம் அறிகிறோம். இந்த நிலையில் சீனாவில் 18 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாகமான நேரங்கள் ஆன்லைன் விளையாட்டுக்களில் செலவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற கிழமைகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் […]
ரயில் நிலையத்தில் பெண் உட்பட ஐந்து பேரை வாலிபன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ஹாரோ கவுன்சிலில் இருக்கும் சிவிக் சென்டரின் அருகே ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 4:00 மணியளவில் சண்டை ஓன்று நடந்துள்ளது. இந்த நிலையில் 20 வயதுடைய வாலிபன் ஒருவன் அங்கு நடந்த சண்டையில் பெண்கள் உட்பட 5 பேரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளான். இது குறித்து அறிந்த […]
மாணவியர்கள் மாணவர்களுடன் சேர்ந்து படிக்கக் கூடாது என்று தலீபான்களின் உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றத்தை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் அவர்கள் அங்கு புதிய ஆட்சி அமைப்பதற்கான பணிகளை தீவிரமாக கையாண்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள பெண்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது என்று கூறப்படுகிறது. ஏனெனில் தலீபான்கள் ஆட்சி அமைப்பதால் […]
காபூல் விமான நிலையத்தை நோக்கி எறியப்பட்ட ராக்கெட் குண்டுகளை அமெரிக்கா வான்பாதுகாப்பு தளவாடம் இடைமறித்து அழித்தது. அமெரிக்கா கூட்டுப்படைத் தலைமையகத்தின் செய்தி தொடர்பாளரான வில்லியம் அர்பன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கடந்த திங்கட்கிழமை அன்று காபூல் விமான நிலையத்தை நோக்கி 5 ராக்கெட் குண்டுகள் எறியப்பட்டன. இதனை எதிர்க்கும் விதமாக விமான நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த அமெரிக்காவின் சி-ராம் வான்பாதுகாப்புத் தளவாடம் செயல்பட்டது. அதிலிருந்து வந்த பீரங்கி குண்டுகள், ராக்கெட் குண்டுகள் எதிர்வந்த ராக்கெட் குண்டுகளை இடைமறித்து […]
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு தலீபான்கள் எந்தவித தடையும் விதிக்க கூடாது என்று 9௦ நாடுகள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு அங்கு தலீபான்களின் அதிகாரம் கொடி கட்டி பறந்தது. இதனையடுத்து தலீபான்கள் ஆப்கான் நாடு முழுவதையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் ஆப்கானில் தலீபான்கள் புதிய ஆட்சியை அமைக்க திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆப்கானில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த தூதரங்கள் அங்கிருந்து வெளியேறி […]
பிரித்தானியா இளவரசருடன் நீண்டக்கால தொடர்பில் இருந்த பெண் குறித்து ராஜ குடும்ப நிபுணர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள ராஜ குடும்பம் குறித்து அவர்களின் குடும்ப நிபுணரான Robert Jobson பேட்டி ஒன்றை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ளார். அதில் ” Prince Philip’s Century: The Extraordinary Life of the Duke of Edinburgh என்ற புத்தகம் குறித்து பேசினார். அவற்றுள் இளவரசர் பிலிப்பிற்கும் பல பெண்களுக்கும் இடையேயான நட்பு […]
ஆப்கானை விட்டு தப்பி வரும் அனைவருக்கும் உதவி கரம் நீட்டி அழைத்துக் கொள்ளவேண்டும் என்று ஐ.நா.சபை உயர் ஆணையர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக ஆப்கானியர்கள் மத்தியில் பயம் மற்றும் பதற்றம் நீடித்து வருகிறது. இதனை காபூல் விமான நிலையத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் நமக்கு உணர்த்துகின்றன. இந்த சம்பவங்கள் அனைத்தும் உலகில் உள்ள […]
ஆக்ஸ்போர்டில் உள்ள புரூக்ஸ் பலகலைக்கழகத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பேர் ஒன்றாக பட்டப்படிப்பை முடித்துள்ளனர். பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரில் புரூக்ஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு உடன்பிறப்புகள் ஒன்றாக படித்து பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் நால்வரும் துபாயில் பிறந்துள்ளனர். அனைவருக்கும் வயது தற்போது 20 ஆகிறது. அதில் அபயா என்ற பெண், மீதி மூன்று சகோதரர்களின் பெயர்கள் அப்தெல்ரஹீம், ஒசாமா, அஹ்மத் ஷபான் போன்றோர் ஆவர். இவர்கள் நால்வரும் […]
ஆப்கானில் பாதுகாப்பு மண்டலத்தை அமைக்கவேண்டும் என்று அதிபர் இமானுவேல் மேக்ரான் ஐ.நா.சபையிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பாதுகாப்பு மண்டலத்தை அமைக்க வேண்டும் என்று பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஐ.நா. சபையிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இதனை தற்பொழுது ஈராக்கில் உள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாக்தாத்தில் நடந்த செய்தி மாநாட்டில் பேசிய பொழுது தெரிவித்துள்ளார். இந்த பாதுகாப்பு மண்டலத்தினால் தலீபான்கள் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். மேலும் […]
பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்கா வீரர்களுக்கு அதிபர் ஜோ பைடன் மௌன அஞ்சலி செலுத்தினார். அமெரிக்காவில் உள்ள டென்வர் மாகாணத்தில் டோவர் விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. இந்த தளத்திற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ராணுவ வீரர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்றுள்ளார். மேலும் 13 வீரர்களின் சவப்பெட்டி அருகில் கண்மூடி இரு நிமிடங்கள் அதிபர் ஜோ பைடன் மௌன அஞ்சலி செலுத்தினார். இதற்கிடையில் வரும் ஆகஸ்ட் […]