ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக கூடியிருக்கும் அப்பாவி மக்களின் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் தற்கொலைத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து நாட்டின் ஆயுதப்படை அமைச்சர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்நாட்டை விட்டு வெளியேற நினைத்த ஆப்கானியர்களும், அங்கிருக்கும் வெளிநாட்டவர்களும் தலைநகர் காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் முன்பாக பசியும் பட்டினியுமாக காத்துக்கிடக்கிறார்கள். […]
Tag: உலகச் செய்திகள்
இங்கிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டிலிருந்த உணவுப் பொருட்களினுள் ஊசி மூலம் மர்ம பொருளை செலுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். இங்கிலாந்தின் தலைநகரான லண்டனிலுள்ள Waitrose, Tesco, sainbury போன்ற சூப்பர் மார்க்கெட்டிலிருக்கும் உணவு பொருட்களினுள் ஊசி மூலம் மர்ம பொருளை நபரொருவர் செலுத்தியுள்ளார். மேலும் இவர் மேற்கு லண்டனுக்கு சென்று அங்கிருக்கும் பொதுமக்களை மிகவும் ஆபாசமாக திட்டியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளை பேசிய நபரை […]
தலீபான்கள் மிகவும் கொடுமையானவர்கள் என்று ஆப்கான் பெண் ஒருவர் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்த நிலையில் 199௦ல் தலீபான்கள் நடத்திய ஆட்சியில் இருந்த Fariba Akemi என்ற 40 வயது பெண் தற்பொழுது அவர்கள் ஆப்கானை கைப்பற்றியுள்ள நிலைமை குறித்து ‘THE INDEPENDENT’ என்ற ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி […]
காபூல் விமான நிலையத்தின் முன்பாகயிருக்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து சென்று விடுங்கள் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள பொதுமக்களையும், வெளிநாட்டவர்களையும் அங்கிருந்து வெளியேற்றும் பணியில் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பிற நாடுகளுக்கு செல்ல வேண்டி காபூல் விமான நிலையத்தின் முன்பாகயிருக்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் உடனடியாக […]
சுவிஸில் தாயைக் கொன்ற மகனுக்கு மனநல சிகிச்சை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் Emmenbrücke என்ற பகுதியில் ஒரு வீட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெண் ஒருவர் பயங்கரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் வீட்டில் பயன்படுத்தப்படும் சமையலறை கத்தியினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கொலையை அப்பெண்ணின் 21 வயதான மகன் செய்துள்ளான். இதனை அவனே போலீசாரை தொடர்பு கொண்டு கூறியுள்ளான். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
ஜப்பான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,500 பேருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கொரோனாவின் மாறுபாடு மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 21,500 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 42 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதற்கிடையே ஜப்பான் நாட்டின் அரசாங்கம் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அமலுக்கு கொண்டு வந்துள்ள அவசர நிலை […]
தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது உலக வங்கி அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் உலக நாடுகள் அனைத்தும் தலிபான்களுக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் உலக வங்கி அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தற்போது வரை வழங்கி வந்த நிதி உதவியை இனி அளிக்கப் […]
சஜித் என்பவரின் 1௦ ஆண்டுக்கால வசிப்பிடக் கோரிக்கையை பிரித்தானியா அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பள்ளியில் சஜித் என்ற சிறுவன் படித்து வந்துள்ளான். இதனையடுத்து அவனது பள்ளிக்கு வந்த தலீபான்கள் புத்திக் கூர்மையான மாணவர்கள் குழு ஒன்றை தங்களின் பயிற்சிக்காக கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளனர். மேலும் அந்த மாணவர்களின் உயர் கல்விக்கான அனைத்து செலவுகளையும் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளனர். ஆனால் சில நாட்களிலேயே அவர்களின் உண்மையான முகம் வெளிவந்ததுள்ளது. அந்தக் கூட்டத்தில் 13 […]
அமெரிக்காவில் பிறந்து பிரான்ஸ் குடியுரிமை பெற்ற காபரே நடன மங்கையான கருப்பினப் பெண் ஒருவருக்கு பிரான்சின் உயரிய கௌரவம் ஒன்று அளிக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பிறந்து பிரான்சில் குடியுரிமை பெற்ற ஜோஸ்பின் என்னும் கருப்பின பெண் காபரே நடனமாடுவதில் மிகவும் பிரபலமானவர் ஆவார். பிஇதனையடுத்து இவர் 2 ஆம் உலகப்போரின்போது பிரான்ஸ் அரசாங்கத்திற்கு உளவாளியாக செயல்பட்டு சில முக்கிய தகவல்களை பிரான்ஸ் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். இதனால் இவருக்கு பிரான்ஸ் நாட்டின் சில உயரிய விருதுகள் […]
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் காபூல் விமான நிலையத்தை கடந்து செல்லும்போது ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அவரை தலையில் சரமாரியாக தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களுடைய ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். இதனால் அந்நாட்டிலுள்ள வெளிநாட்டவர்களும், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் மூலம் பிற நாடுகளுக்கு செல்ல முயன்று வருகிறார்கள். […]
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவத்தில் ஆட்கள் சேர்க்கும் முகம் தொடர்பான தகவல் ஒன்றை நெல்லை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். திருச்சியிலுள்ள ராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் அலுவலகத்தின் மூலம் நாகர்கோவிலில் முகாம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த முகாம் வருகிற 15.9.21 முதல் 30.9.21 ஆம் தேதி வரை நாகர்கோவிலில் இருக்கும் அறிஞர் அண்ணா மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளதாக நெல்லை மாவட்ட கலெக்டர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இதில் விண்ணப்பிக்க விரும்பும் நெல்லை இளைஞர்கள் வருகிற 30 […]
ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த மத்திய ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டின் அதிபராக 8 வருடங்களாக ஹசன் ஹப்ரி என்பவர் இருந்துள்ளார். இவர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சுமார் 40 ஆயிரம் பேரை கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் பல போர் குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து 1990 ஆம் ஆண்டு சாட் நாட்டின் அதிபர் பதவியை ராஜினாமா செய்த ஹசனின் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களை மீட்கும் பணி நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஜோ பைடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறுவதோடு, ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் அமெரிக்க குடிமக்களை காபூலில் இருந்து வெளியேற்றும் பணி நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தலிபான்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பதினை பொறுத்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவு பெறும் என்று பத்திரிகையாளர் […]
கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் ஜோஸ் நார்த் என்னும் இடத்தில் எல்வா ஜங்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கையில் துப்பாக்கியுடன் திடீரென்று புகுந்துள்ளனர். மேலும் அவர்கள் கிராமத்தில் உள்ள மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அவர்கள் வீட்டிலுள்ள பொருட்கள், உடைமைகள் போன்றவற்றை அடித்து உடைத்துள்ளனர். இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஆளுநர் சைமன் லாலங் […]
கொரோனா வைரஸ்க்கு எதிராக புதிய தடுப்பு மருந்துகளை போர்ச்சுக்கல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் மூன்று மருந்துகளை போர்ச்சுக்கல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தை லிஸ்பன் நோவா பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாகியுள்ளனர். இந்த மூன்று மருந்துகளின் கூட்டு கலவையானது கொரோனா வைரஸின் உற்பத்தியை குறைக்கும் என்று கூறியுள்ளனர். இதுபற்றி சிசிலியா அர்ரியானோ […]
பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வானது கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடை பெற்றது. இந்த ஆய்விற்காக 21 கொரோனா தோற்று பாதிக்கப்படாத பாலூட்டும் தாய்மார்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு முன்பாக மூன்று முறை தாய்ப்பால் மற்றும் அவரது […]
வனப்பகுதியில் பரவியுள்ள காட்டுத்தீயினால் 42,000த்திற்கும் மேலான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் எல்டொரோடா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டுத்தீயானது பற்றி எரிந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். அதிலும் காட்டுத்தீயானது கொழுந்துவிட்டு எரிவதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை […]
சீனத் தூதரிடம் தலீபான்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அப்துல் சலாம் ஹனாபி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனை அடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்குள்ள அமெரிக்கா, இந்தியா, மற்றும் ஐரோப்பியா நாடுகளைச் சேர்ந்த மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தலீபான்கள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கா படைகள் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற தலைநகரான காபூலிலுள்ள விமான நிலையத்தில் பல நாட்களாக பட்டினியாக காத்திருக்கும் சிறுவர்களுடன் அமெரிக்க விமானப் படையினர்கள் கொஞ்சி விளையாடுவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டிலிருக்கும் பொதுமக்கள் தலிபான்களுக்கு பயந்து அங்கிருந்து வெளியேறுவதற்காக தலைநகர் காபூலிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக பல நாட்களாக பசியும் […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் அந்நாட்டிலிருக்கும் வெளிநாட்டுப் படைகள் தலிபான்கள் கொடுத்த நேரத்திற்குள் அங்கிருந்து வெளியேறவில்லையெனில் போர் ஏற்படலாம் என்று எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அந்நாட்டில் ஆட்சி அமைப்பது குறித்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களால் முடிந்த அளவிற்கு காபூல் விமான நிலையத்திற்கு விமானங்களை அனுப்பி ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை அங்கிருந்து மீட்டு வருகிறார்கள். இந்நிலையில் தலிபான்களின் செய்தி தொடர்பாளர் The […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் பொதுமக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி மற்ற நாடுகளுக்கு செல்வதை இனி தலிபான்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் பொதுமக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக இனி காபூல் விமான நிலையம் செல்வதை தலிபான்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று தலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேற தூண்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வெளிநாடுகளுக்கு செல்ல தற்போது […]
ஆப்கானிஸ்தான் அரசுப்பணிகளில் பெண்களும் பணி அமர்த்தப்படுவார்கள் என பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தலிபான்கள் உறுதியளித்துள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களுடைய புதிய ஆட்சியை அமைப்பதற்காக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தானிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று தலிபான்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்க படைகள் அந்நாட்டில் படித்த மருத்துவர்கள் உள்ளிட்ட திறமையானவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க கூடாது என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக […]
தலீபான்கள் அனைவரையும் கொன்று வருவதாக ஆப்கானின் முன்னாள் உள்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறு குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று அனைவரையும் பாகுபாடின்றி தலீபான்கள் கொன்று வருகின்றனர். மேலும் இத்தகைய செயல் முறைகளினால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்ய முடியாது என்று முன்னாள் உள்துறை அமைச்சர் Masoud Andarabi கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதில் […]
தலிபான்கள் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்களை கடத்தி செல்வதோடு மட்டுமின்றி அவர்களை பயன்படுத்தி தங்கள் வசமமில்லாத பகுதிகளிலிருக்கும் வீடுகளில் சோதனை செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் துணை அதிபர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு பஞ்ஷர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகள் வராமல் உள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் தலிபான்கள் நுழைந்தவுடன் அந்நாட்டின் அதிபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் துணைத் அதிபர் […]
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆப்கானில் உள்ள தலீபான்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருபது வருடங்களாக தங்கியிருந்த நேட்டோ படைகளை வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்கா படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர். மேலும் தலீபான்கள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைத்து நாட்டு படைகளும் ஆப்கானில் இருந்து வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானில் இருந்து பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் […]
இந்திய புகைப்பட கலைஞரின் மரணம் குறித்து அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தியாவிலுள்ள மும்பையைச் சேர்ந்தவர் டேனிஸ் சித்திக் என்ற புகைப்படக் கலைஞர். இவர் மும்பையில் உள்ள ராய்ஸ்டர் பத்திரிக்கையில் பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ரோஹிங்கியா அகதிகள் பிரச்சனையை ஆவணப்படுத்தி காட்டியதற்காக உயரிய விருதான புல்லிட்சர் விருது பெற்றார். இதனையடுத்து இவர் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்தும் தாக்குதலை பற்றி தகவல் சேகரிக்க அங்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தலீபான்களிடம் சிக்கிய காவல் அதிகாரி ஒருவரை […]
சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் உயிரை காப்பாற்ற தவறிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள வாகோஃப் ரிமாண்ட் சிறையில் இலங்கை பெண் ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து டப்ளின் நடைமுறையின்படி அந்த இலங்கை பெண் மால்டாவுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அந்த இலங்கை பெண்ணின் வசிப்பிட உரிமைக்கு மால்டா தீவு தான் பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில் அவர் தங்கியிருந்த சிறையில் கண்காணிப்பு கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2௦18ல் ஜூன் 12 ஆம் தேதி […]
ஆப்கானின் நிலைமை குறித்து பசுபிக் நாடுகளுடன் அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சிக்கியுள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இது போன்று ஆப்கானில் நிலவும் மோசமான சூழ்நிலைக்கு காரணம் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டது தான் என்று பல்வேறு உலக நாடுகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த […]
ஆப்கானில் இருந்து மீட்கப்பட்டவர்களில் ஒருவர் தலீபான்களுடன் தொடர்பில் இருந்தவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் சிலர் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து மீட்டு வருகின்றனர். ஆனால் அவ்வாறு செயல்படும் உலகநாடுகளுக்கு புதிதாக ஒரு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, தலீபான்களின் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறும் ஆப்கான் மக்களை காப்பாற்றும் நோக்கில் அதிபர் இமானுவேல் […]
விமானம் கடத்தப்பட்டுள்ளதாக உக்ரேன் நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அவர்களின் அதிகாரம் அங்கு கொடிகட்டி பறக்கிறது. இதனால் அங்குள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த மக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர். மேலும் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அனைத்து வெளிநாட்டு படைகளும் ஆப்கானில் இருந்து வெளியேற வேண்டும் என்று தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து காபூலில் கடந்த ஞாயிறுக்கிழமை அன்று உக்ரேன் விமானம் ஒன்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது என்று […]
இளம் பெண்களை மீட்டதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த அல்லிசன் ரெனோ என்பவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் 16 முதல் 18 வயது வரை உள்ள இளம் பெண்களை ஆப்கானில் இருந்து 60 வயதான அல்லிசன் ரெனோ என்ற அமெரிக்காவைச் சேர்ந்தவர் காப்பாற்றியுள்ளார். அதாவது “ஆப்கானிஸ்தானில் ரோபோட்டிக்ஸ் குழுவில் 10 இளம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். […]
வீட்டில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கனடாவில் வின்னிபெக் நகரத்தில் உள்ளது young street. இந்த தெருவில் 500 வது பிளாக்கில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி அன்று 45 வயதான Deena Anne Markwick என்ற பெண் துப்பாக்கியால் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் […]
உருமாறிய கொரோனா வைரஸானது புதிய வகை மாறுபாடுகளை அடைந்தால் பாதிப்பு உருவாகும் என மருத்துவர் சாய்ரெட்டி தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றானது உருமாறி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் பெடரல் தொழில்நுட்ப நிறுவனமான ETH Zurich இன் பேராசிரியரும் நோயெதிர்ப்பு நிபுணருமான மருத்துவர் சாய்ரெட்டி கொரோனா வைரஸ் வகைகளில் ஒரு பகுதியான கோவிட்- 22 பற்றிய தகவலை நம்மிடம் பகிர்ந்துள்ளார். அதில் “இந்த கோவிட்- 22 வைரஸ் ஆனது மிகவும் ஆபத்தான […]
சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்த இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளார். அனைத்து நாடுகளிலும் கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் இங்கிலாந்தில் சர்வதேச விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்தலின் போது அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் மூலம் கொரோனா பரிசோதனை 2 முறை செய்யப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் சுகாதார துறை செயலாளர் திடீரென கொரோனா பரிசோதனை செய்யும் அரசால் […]
ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி வெளியேறிய இங்கிலாந்து மருத்துவ மாணவர் ஒருவர் அந்நாட்டில் மக்கள் படும் அவதி குறித்து கூறியுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த 25 வயதுடைய மருத்துவ மாணவர் ஒருவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலிலுள்ள விமான நிலையத்தின் வாசலில் சுமார் 24 மணி நேரம் காத்திருந்துள்ளார். அதன்பின் அவர் காபூல் விமான நிலையத்திற்குள் நுழையும்போது தலிபான் பயங்கரவாதி ஒருவர் மாணவரை அச்சுறுத்தும் விதமாக பேசியுள்ளார். அதாவது உலக நாடுகள் மட்டும் தங்களை கவனிக்காமல் இருந்திருந்தால் உன்னுடைய இந்த இங்கிலாந்து […]
செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து கொரோனா காலகட்டத்தில் தடை விதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளிலிருந்து இனி பயணிகள் விமான சேவையை தொடங்குவதற்கு ஓமன் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதிலும் மிக முக்கியமாக வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு அந்தந்த அரசாங்கம் தடை விதித்துள்ளது. அதன்படி ஓமன் அரசாங்கமும் சிகப்பு பட்டியலில் இருந்த இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து […]
பிரித்தானியாவில் கல்வி பயின்ற இளைஞர் ஒருவர் தலிபான்களுக்கு எதிராக துணிச்சலுடன் போராடும் சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷிர் மாகாணத்தின் புகழ்பெற்ற தளபதியின் மகனான Ahmad Massoud (32) தலிபான்களுக்கு எதிராக தனது கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் Ahmad Massoud தலிபான்களுக்கு தங்களது போராளிகள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள் எனவும், இதுவரை 100 தலிபான்களை கொன்றுள்ளதாகவும் கூறியுள்ளார். பிரித்தானியா மற்றும் அமெரிக்க ராணுவத்தினரால் பயிற்சி அளிக்கப்பட்ட போராளிகள் தற்போது காபூல் […]
நின்று கொண்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உம் அல் குவைனில் அல் ரபா என்ற பகுதியில் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இதில் வெளிநாட்டு கப்பல்கள், மீன்பிடி கப்பல்கள், படகுகள் ஆகியவை வந்து நிற்கும் தளமாக உள்ளது. இதனையடுத்து மீன்பிடி மற்றும் சரக்கு ஏற்றிச் செல்வதற்காக அந்தத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென […]
தலிபான்களை “நான் நம்பவில்லை” என்று அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் வெளியேறும் என்று அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பிலிருந்தே தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி தற்போது அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டினுடைய இந்த நிலைமைக்கு அமெரிக்காவின் மேல் குறிப்பிட்ட முடிவே காரணம் […]
காசா முனையிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் தீப்பற்றி எரியக்கூடிய பலூன்களின் மூலம் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டின் விமானப்படையினர் அதிரடியான வான்வெளி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள். இஸ்ரேலுக்கும் அந்நாட்டால் பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் காசா முனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்குமிடையை தொடர்ந்து பல வருடங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் நாட்டினுடைய வடக்குப் பகுதியை குறிவைத்து தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள். அதாவது பாலஸ்தீனர்கள் பலூன் முழுவதும் […]
பணத்திற்காக பள்ளி மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை கடத்திச் சென்று அவர்களின் பெற்றோர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது அங்குள்ள பயங்கரவாதிகளின் வழக்கமாகிவிட்டது. இதனை அடுத்து அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் இருக்கும் பள்ளி ஒன்றில் மாணவர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி கடத்தி சென்றுள்ளனர். அவர்கள் மொத்தம் 126 மாணவர்களை கடத்தி பணய கைதிகளாக வைத்துள்ளனர். ஒவ்வொரு மாணவருக்கும் சுமார் 10 லட்சம் […]
இந்தியா ஒரு சொர்க்கபூமி என்று இந்திய விமானத்தின் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து மீண்டு வந்த ஆப்கன் பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்க பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டை தலிபான்கள் முழுவதும் கைப்பற்றி தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனால் அந்நாட்டிலுள்ள பலரையும் வெளிநாட்டு விமானங்கள் தலிபான்களிடமிருந்து மீட்பதற்கு முயன்று வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 168 பேரை இந்திய விமானப் படையினர்கள் விமானத்தின் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்டு இந்தியாவிற்கு […]
ஆப்கானிஸ்தான் நாட்டினுடைய ராணுவ வீரர்களுக்கும், மர்ம நபர்களுக்குமிடையே காபூல் விமான நிலையத்தின் நுழைவுவாயில் முன்பாக நடந்த துப்பாக்கி சூட்டில் ஆப்கன் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அந்நாட்டிலுள்ள ஏராளமானோர் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்து வருகிறார்கள். அவ்வாறு காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளதால் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் […]
சீக்கிய கோவிலுக்கு செல்ல இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் சிறப்பு அனுமதி வழங்கிய பின்னரே இந்தியர்கள் அங்கு சென்று வருகின்றனர். இதனையடுத்து அங்குள்ள கர்தார்பூரில் இருக்கும் சீக்கிய கோவிலுக்கு இந்திய சீக்கியர்கள் சென்றுவர சிறப்பு வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த மே 22-ஆம் தேதி முதல் அக்கோவிலுக்கு செல்ல பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. இந்த நிலையில் சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் நினைவு தினம் […]
அபுதாபி பட்டத்து இளவரசருக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவின் சார்பில் சுமார் 17,000 ஆப்கானியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் முக்கியமாக அமெரிக்கா ராணுவ அதிகாரிகளுடன் பணியாற்றியவர்கள், மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்கள் போன்றோர் மீட்கப்பட்டுள்ளனர். அதிலும் தலீபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி அமெரிக்கா ராணுவத்திடம் அடைக்கலம் புகுந்துள்ளனர். இவர்கள் […]
தலீபான்களுக்கு எதிரான தாக்குதலில் ரத்தம் சிந்தவும் தயார் என்று அகமது மசூத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பாஞ்ஷிர் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இது போராட்டக்காரர்களின் கோட்டையாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 199௦ ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய தலீபான்களால் கூட இவர்களை நெருங்க முடியவில்லை. தற்பொழுது ஆப்கானை கைப்பற்றியுள்ள தலீபான்கள் தங்களுக்கு சமமாக இருக்கும் பாஞ்ஷிர் போராட்டக்காரர்களை அடிபணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பள்ளத்தாக்கு அகமது மசூத் மற்றும் அவரின் ஆதரவாக செயல்படும் முன்னாள் துணை […]
சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இடைக்கால அதிபராக 2019ஆம் ஆண்டு முதல் 2020 வரை பணியாற்றியவர் ஜெனீன் அனீஸ். இவர் 2019 ஆம் ஆண்டில் அதிபராக இருந்த இவோ மொரலீசின் ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுப்பப்பட்டது. இதனால் இந்த நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அனீஸ் கைது செய்யப்பட்டார். மேலும் இவோ மொரலீசின் ஆதரவாளர்கள் ஜெனீன் அனீஸ் இடைக்கால […]
டி-ஷர்ட்டில் கேலிச்சித்திரம் அச்சிடப்பட்டுள்ளதற்கு இணையவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தும் விற்பனை செய்ய தடை விதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனால் அங்கிருந்து பொதுமக்கள் அவர்களின் சொந்த நாட்டிற்கே திரும்பி வருகின்றனர். இதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் காத்து கிடக்கின்றனர். இந்த நிலையில் காபூலில் இருந்து அமெரிக்கா c -17 ராணுவ விமானத்தின் சக்கரத்தில் பயணித்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நடுவானில் கீழே விழுந்து பலியான சோகம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]
இந்தியா திரும்பிய சந்தோஷத்தில் கட்டி அணைத்து முத்தமிடும் குழந்தையின் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படை விமானத்தை அங்கு அனுப்பியது. அதில் இந்தியர்களுடன் இணைந்து 168 ஆப்கான் மக்களும் இந்தியா வந்தடைந்துள்ளனர். https://twitter.com/i/status/1429324388420112384 அதில் இந்தியா திரும்பிய குழந்தைகளில் ஒன்று அங்கிருந்து தப்பித்து வந்த […]
வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களின் சந்திப்பில் அதிபர் ஜோ பைடன் தலீபான்கள் குறித்து பேசியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறுமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் வெளியேறினர். இதனால் அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இந்த நிலையில் தலீபான்கள் அந்நாட்டின் முழு அதிகாரத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா தான் காரணம் என்று பல்வேறு உலக நாடுகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் […]