ஊழல் வழக்கில் கைதான சமூக விவகாரத்துறை அமைச்சருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தோனேசியாவில் கொரோனா பாதுகாப்பு பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்ததாக அப்போது இருந்த சமூக விவகார அமைச்சரான Juliari Batubara மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து Juliari Batubara அவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஊழல் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த இந்தோனேசியாவின் ஜகார்த்தா ஊழல் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை […]
Tag: உலகச் செய்திகள்
ஆப்கனிஸ்தானில் உள்ள பெண்களின் நிலைமை குறித்து ஆயிஷா குராம் என்ற மாணவி காணொளியில் பேசியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் கல்வியில் உயர்ந்து சாதனை படைக்க விரும்பும் பெண்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வரும் 22 வயதான ஆயிஷா குராம் என்ற மாணவி காணொளி ஒன்றில் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்களால் அந்நாட்டில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்திற்கு உதவும் வகையில் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் காபூலுக்கு வருகை தந்து தலிபான்களின் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான குரேஷி கடந்த சில நாட்களுக்கு முன்பு சில முக்கிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரஷ்ய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைதி பாகிஸ்தான் நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள […]
மெக்சிகோவில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் கனமழையுடன் வீசிய காற்றினால் 8 பேர் உயிரிழந்ததோடு மட்டுமின்றி பலரும் படுகாயமடைந்துள்ளார்கள். மெக்சிகோவில் வெராகூரூஸ் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் கிரேஸ் என்னும் சூறாவளி புயல் மிகுந்த கன மழையுடன் வீசியுள்ளது. இவ்வாறு பெய்த கன மழையினால் வெராகூரூஸ் மாவட்டம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி அந்நாட்டிலுள்ள பல இடங்களில் மழை நீரும் தேங்கியுள்ளது. மேலும் இந்த கிரேஸ் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டிலுள்ள மாவட்டம் ஒன்றில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக சேர்ந்து கல்வி பயில கூடாது என்ற புதிய விதிமுறையை அமலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியதால் அந்நாட்டில் அவர்களுடைய ஆட்சியே நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் தலிபான்களின் முக்கிய தலைவர்கள் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து ஆண்களும், பெண்களும் சேர்ந்து கல்வி பயில்வது தொடர்பாக கலந்து பேசியுள்ளார்கள். இந்நிலையில் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் […]
ஹரிமேகன் தம்பதியினர் மீது ராஜகுடும்பம் நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் ஹரி. இவர் ராஜ குடும்பத்தின் வழக்கத்திற்கு மாறாக விவாகரத்தான மேகன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருந்த போதிலும் ராஜ குடும்பம் அவரை ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து ஹரி மேகனை அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வந்ததிலிருந்தே ராஜ குடும்பத்தில் சண்டையும் சச்சரவுமாக இருந்தது. இதனை தொடர்ந்து ஒரு நாள் ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறி […]
விமான நிலையத்தில் கூடியிருந்த மக்கள் முன்பு தலீபான்கள் அமைப்பச் சேர்ந்த ஒருவர் பேசும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு விமானத்தின் மூலம் தப்பிச் செல்கின்றனர். இதனால் காபூல் விமானத்திலேயே பொதுமக்கள் முகாமிட்டு காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் விமான நிலையத்தில் திரண்டிருக்கும் பொதுமக்கள் முன்பு தலீபான்கள் அமைப்பச் சேர்ந்த […]
ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்போவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருக்கும் நிலைமை குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா பிரித்தானியா போன்ற 21 நாடுகள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலை உலக நாடுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆப்கானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமியரின் சுதந்திரம், கல்வி, வேலை போன்ற பொதுவான உரிமைள் பற்றி மிகுந்த கவலையளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தலீபான்கள் அமைப்பினர் […]
அமெரிக்கா வீரர்களை தலீபான்கள் தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுக்கிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கைவசம் சென்றுள்ளது. இவர்களுக்கு அஞ்சி அங்குள்ள பொதுமக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பேட்டி ஒன்றை செய்தியாளர்களிடம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஆப்கானிஸ்தானிலிருந்து தலீபான்களால் பாதிக்கப்படையக் கூடிய பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி […]
அமெரிக்காவை கேலி செய்யும் விதமாக தலீபான்கள் வெளியிட்ட புகைப்படமானது சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனையடுத்து தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய சில நாட்களிலேயே அவர்களின் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு பயந்து அங்கிருக்கும் பொதுமக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு விமானத்தின் மூலம் தப்பித்து சென்று வருகின்றனர். சிலர் அங்கேயே முடங்கி உள்ளனர். அதிலும் தலீபான்கள் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கூறினர். ஆனால் தற்பொழுது […]
மருத்துவ படிப்பின் செலவிற்காக மாணவர்கள் பாலியல் தொழில் புரியும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 90% மருத்துவ மாணவர்கள் வேலையின்றி தங்களது படிப்பு செலவிற்காகவும் தினசரி வாழ்க்கை நடத்துவதற்காகவும் பாலியல் தொழில் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை ஆதரிக்கவும், அங்கீகரிக்கவும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்பட பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்திற்கு பயிற்சி மருத்துவர்கள் தங்களது அழைப்புகளை விடுத்துள்ளனர். இந்த பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் பொருளாதார மாற்றங்களுக்காக போராடும் தேசிய […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்துள்ள நிலையில் திடீரென அங்கு ஏற்பட்ட தகராறினால் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புவதற்காக காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளார்கள். மேலும் இந்தியா, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் விமானத்தின் மூலம் தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காகவும் […]
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை தலிபான்கள் படுகொலை செய்துள்ளார்கள் என்னும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் நிர்வாகிகள் அதனை பலப்படுத்துவதற்கு முயற்சி செய்துள்ளார்கள். இதனால் தலிபான்களுக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்குமிடையே பகை உணர்வு வளர்ந்துள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள்காக சில வியாபாரிகள் நிதியை திரட்டியுள்ளார்கள். இவர்களை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் கடத்தி சென்றுள்ளார்கள். […]
ஆப்கானியர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கடந்த ஞாயிறுகிழமை என்று கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் தலீபான்களுக்கு அஞ்சி பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “பாரிஸிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு நான்காவது மீட்பு விமானமானது கடந்த வெள்ளிகிழமை மாலை அன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 4 […]
லண்டனில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் எனும் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 9.30 மணி அளவில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் ஜெரோமே கிரேஸ்ஸ்ன்ட் என்னும் பகுதியில் ஆண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக அதிகாலை 2.15 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Lee Peacock (49) எனும் நபருக்கு […]
சாலையோரம் நின்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள பெர்க்ஷைர் கவுன்டியில் இருக்கும் தாட்சம் பகுதியில் A4 நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை அன்று அதிகாலை 12.15 மணியளவில் பெண் ஒருவர் Cox’s Lane சந்திப்பை கடந்துள்ளார். அப்போது அந்த வழியில் ஓரமாக வாகனங்கள் நிற்கும் பகுதியில் குழந்தையை அமர வைக்கும் இருக்கை ஒன்று கீழே கிடந்துள்ளது. அதைக் கண்டதும் அவர் ஏதோ விபத்து […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலிலுள்ள விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என்று ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நாட்டு மக்களை அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அப்பகுதியிலுள்ள வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளார்கள். இதனால் விமான நிலையத்தின் வெளியே பாதுகாப்பு ரீதியாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்க தூதரகம் அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது அமெரிக்க குடிமக்கள் எவரும் […]
இங்கிலாந்திலுள்ள உலகிலேயே மிகப்பெரிய லாட்டரி நிறுவனமான யூரோ மில்லியன்சில் ஒரே நாளில் சுமார் 25 மில்லியன் யூரோக்களை அடிப்படையாகக் கொண்டு குலுக்கள் முறை நடைபெறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய லாட்டரி நிறுவனமாக இங்கிலாந்திலுள்ள யூரோ மில்லியன் ஜாக்பாட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நபரொருவர் சுமார் 161 மில்லியன் யூரோக்களை வென்று வீடு மற்றும் ஏழை மக்களுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ளார். அதேபோல் இந்த […]
பிரான்சில் 140 முதல் 350 யூரோக்கள் வரை செலவிட்டு சிலர் கொரோனா குறித்த போலி சுகாதார ஆவணத்தை பெறுகிறார்கள். பிரான்சில் கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டவர்களுக்கும், கொரோனா குறித்த பரிசோதனையில் நெகட்டிவ் என்ற முடிவு வந்தவர்களுக்கும் அந்நாட்டின் அரசாங்கம் சுகாதார பாஸ் என்னும் ஆவணத்தை கொடுக்கிறது. மேலும் இந்த சுகாதார ஆவணம் இருந்தால்தான் ரயில்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையையும் பிரான்ஸ் அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் விமான நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளதால் அங்கு உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு புறப்பட தயாராக இருந்த விமானத்தை சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அங்கிருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளார்கள். இதனால் காபூல் விமான நிலையத்தில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுமாறு அதிலுள்ள சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் இந்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் இருக்கும் பல்கலைக்கழகமொன்றில் சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து தற்போது காபூல் தலிபான்களின் வசமுள்ளதால் அங்கிருந்து தப்பிக்க நினைத்த மருத்துவர் அவருடைய மனைவியுடன் காபூல் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் சொந்த நாட்டினுடைய ஆதரவின்றி விமான நிலையத்திற்குள் […]
முள்வேலியை தாண்டி குழந்தைகள் தூக்கி எறியப்பட்டதற்கு இராணுவ அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனையடுத்து மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் பெரும் கூட்டம் திரண்டது. ஆனால் இதில் சிலர் தப்பிச் செல்ல இயலாதவர்கள் தங்களது குழந்தைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் விமான நிலையத்தை சுற்றியுள்ள […]
இங்கிலாந்திலுள்ள ரயில்வே நிலையத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் வன்முறை தொடர்பான அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்துள்ளாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் மீது காவல்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்கள். இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் என்னும் பகுதியில் விக்டோரியா ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் 17 வயதுடைய நபர் ஒருவரும், அவருடைய நண்பரும் கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்துள்ளார்கள். இது குறித்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளுக்கு […]
ஆப்கானிஸ்தான் நாடு தொடர்பாக அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் எடுக்கும் முடிவுகள் எதிர்கட்சிகள் உட்பட அனைவருக்கும் அவருக்கு எதிரான கேள்வியை எழுப்பும் விதமாக அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முழுவதும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றிய தலிபான்கள் கடந்த ஞாயிறு முதல் அந்நாட்டின் தலைநகரான காபூலையும் கைப்பற்றியுள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாடு தொடர்பாக அமெரிக்க அதிபரான ஜோ […]
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி வந்த இந்திய பெண் ஒருவர் தனது பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றியதோடு அந்நாட்டில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து மக்கள் அங்கிருந்து வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு விமானம் மூலம் தப்பிச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனைச் சேர்ந்த சவிதா சஹி என்ற பெண் கடந்த 8 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்து வருகிறார். இவர் அமெரிக்கா ராணுவ மருத்துவ குழுவில் பணிபுரிந்துள்ளார். இதனையடுத்து […]
ஆப்கானிஸ்தானை ஆளப்போகும் தலீபான்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஞாயிறுகிழமை அன்று தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றினர். இதனால் நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சென்றுள்ளது. மேலும் ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்றம் போன்ற அரசு அலுவலகங்களை அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். தற்பொழுது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் பொறுப்பிற்கு ஏழு முக்கிய தலீபான்கள் வரப்போகிறார்கள் என்று […]
சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்வது தொடர்பாக மக்கள் தொகை மற்றும் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தில் செய்யப்பட்ட சட்டத்திருத்த மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 1976 முதல் 2016 வரை அனைவரும் ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற திட்டம் நடைமுறையில் இருந்துள்ளது. இதனால் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வாலிபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதோடு மட்டுமின்றி சீன அரசாங்கம் ஒரு அபாய எச்சரிக்கையும் உணர்ந்துள்ளது. அதாவது இவ்வாறு இளம் வயதினரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே […]
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து அரசாங்கம் விலகியதையடுத்து சுமார் 20,000 லாரி ஓட்டுனர்கள் இங்கிலாந்திலிருந்து அவர்களுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது கோழி இறைச்சி பற்றாக்குறையினால் பிரபல உணவு நிறுவனத்தைச் சேர்ந்த 45 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து அரசாங்கம் விலகியதையடுத்து அந்நாட்டில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனையடுத்து சுமார் 20,000 லாரி ஓட்டுனர்கள் இங்கிலாந்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதால் அவர்களுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்கள். இதனால் லாரி ஓட்டுநர்களின் பற்றாக்குறையும் இங்கிலாந்தில் […]
கொரோனா தொற்றுக்கு எதிராக ஆன்டிபாடி சிகிச்சை முறை பயனளிக்கும் என்று MHRA நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் ஆய்வகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபாடிகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் உடலில் இருக்கும் வைரஸை எதிர்த்து போராடக்கூடிய சிகிச்சைக்கு மருத்துவ மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனமான MHRA ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து Regeneron மற்றும் Roch ஆகிய ஆய்வு நிலையங்கள் இணைந்து ஆன்டிபாடி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அமெரிக்காவுடன் போட்டுள்ள முக்கிய ஒப்பந்தம் தொடர்பான முக்கிய தகவலை தலிபான்களின் முன்னணி பேச்சுவார்த்தையாளர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அமெரிக்க நாட்டின் அதிபர் அறிவித்த முதலில் இருந்தே தலிபான்கள் அந்நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றியுள்ளார்கள். இதனையடுத்து தலிபான்களின் முன்னணி பேச்சுவார்த்தையாளரான அனஸ் ஹக்கானி தலிபான் பயங்கரவாதிகள் குழு அமெரிக்காவுடன் போட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறும் என்று அந்நாடு […]
இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்களை தலீபான்கள் தேடி கொன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுகிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சென்றது. இதனை அடுத்து ஆட்சியைப் கைப்பற்றிய சில நாட்களிலேயே தலீபான்கள் அவர்களின் உண்மையான சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானின் 102 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்காக ஏராளமான மக்கள் ஆப்கானிஸ்தான் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். […]
தண்டவாளத்தில் மயங்கி கிடந்தவரை போலீஸ் அதிகாரி காப்பாற்றிய சம்பவமானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள Bronx என்ற நகரில் சுரங்க ரயில் நிலையம் ஒன்று உள்ளது. அந்த ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தண்டவாளத்தில் விழுந்து மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட NYPD அதிகாரி ஒருவர் உடனே அவரை தண்டவாளத்தில் இருந்து தூக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் பயணியை தனியாக தூக்க முடியவில்லை. இதைக் கண்ட மற்றொரு பயணியும் தண்டவாளத்தில் இறங்கி இருவரும் சேர்ந்து […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டின் கொடியை தனது உடலில் சுற்றிக் கொண்டு சென்ற நபரொருவரை தாக்குவது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார். இவர்கள் ஆப்கானிய பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்து ஊடக துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அனுமதி கொடுக்காமல் அவர்களை துரத்தியடித்துள்ளார்கள். மேலும் இவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பல கொடூர செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் 20 வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட தற்போது மிகவும் கொடூரமானவர்களாக இருக்கிறார்கள் என்று தலிபான்களால் விரட்டியடிக்கப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள அரசு செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் ஷப்னம் என்ற பெண் ஒருவர் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் பெண்கள் ஊடகத்தில் இனி வேலை செய்யக்கூடாது என்ற புதிய விதிமுறையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் அரசு செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த […]
ஆப்கானை விட்டு வெளியேறும் மக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்ற உறுதி அளிக்கும் விண்ணப்பம் பெறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுக்கிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனால் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இவர்களுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி மற்ற நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்கா மக்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கத்திற்கு கொடுப்பதாக உறுதியளிக்கும் விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி […]
அமெரிக்க நாட்டின் அதிபர் பதவியை இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்நாட்டின் துணை அதிபர் வகிப்பது தொடர்பான வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக 47% பேர் வாக்களித்துள்ளார்கள். அமெரிக்க நாட்டின் துணை அதிபரான கமலா ஹரிஷ் அந்நாட்டின் அதிபர் பதவியை வகிப்பது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் 49 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற போவதாக அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அதிபர் ஆப்கானிஸ்தானிலிருந்து […]
அமெரிக்க மீட்பு விமானத்தின் மூலம் தப்பிச்சென்ற ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மிக பிரபலமான பாப் பாடகி தற்போது துருக்கியில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான்கள் அந்நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றியுள்ளார்கள். இதனையடுத்து தலிபான்களால் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த Aryana sayeed என்பவர் மிகவும் பிரபலமான பாப் பாடகியாக திகழ்கிறார். இந்நிலையில் இவர் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியதைடுத்து அவருடைய […]
மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பேசிய காணொளியானது வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து கோபன்ஹேகனைச் சேர்ந்த ஆப்கான் மகளிர் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டனும், இணை நிறுவனருமான கலிடா போபால் கடந்த புதன்கிழமை அன்று காணொளி மூலமாக ராய்ட்டர்ஸிடம் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “கடந்த காலங்களில் பெண்களை தீவிரவாதிகள் துன்புறுத்தியும் […]
தேசிய கொடியை பெண் ஒருவர் முத்தமிடும் காட்சியானது வெளியாகி அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். இருப்பினும் சிலர் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் கூறிவருகின்றனர். இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் அந்நாட்டு கொடிக்கு பதிலாக அவர்களின் வெள்ளைக் கொடியை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் 1919 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலையான பிறகு கருப்பு, […]
காபூலிலுள்ள விமான நிலையத்திற்கு செல்லும்போது ஆப்கானிய மக்கள் எந்தெந்த சிக்கல்களை எல்லாம் சந்திக்கிறார்கள் என்பது தொடர்பான செய்தியை சேகரிக்கச் சென்ற சர்வதேச பத்திரிகையாளர் உட்பட சேனல் குழுவினர்களை தலிபான்கள் துப்பாக்கியால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான்கள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்க நாட்டின் ஊடக நிறுவனமான CNN னிலிருந்து சர்வதேச பெண் செய்தி சேகரிப்பாளர் ஒருவரும், ஊடக குழுவினர்களும் சேர்ந்து செய்தி […]
சுதந்திர தினவிழாவிற்காக சாலையில் ஊர்வலம் சென்றவர்களை தலீபான்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்கள் கைவசம் சிக்கியுள்ளது. இதனால் ஆப்கான் நாட்டில் இருந்து பல்வேறு மக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானின் 102வது சுதந்திர தினமானது கொண்டாடப்பட்டது. அதில் Asadabad நகரில் உள்ள மக்கள் ஆப்கான் தேசியக் கொடியுடன் சாலையில் நேற்று ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த ஊர்வலத்தில் தேசிய கொடியை அசைத்த பொதுமக்களை குறிவைத்து தலீபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு […]
இரகசிய சிறப்பு படை ஒன்று குடிமக்களை மீட்பதற்காக காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கடந்த ஞாயிறுகிழமை அன்று கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சென்றுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி பல்வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்து குடிமக்களையும் அவர்களை மீட்டெடுக்க சுவிஸ் குழுவுடன் இணைந்து உதவிபுரிந்த அந்நாட்டை சேர்ந்தவர்களையும் மீட்பதற்காக சுவிட்சர்லாந்து அரசு இரகசிய சிறப்பு படை ஒன்றை ஆப்கானிற்கு அனுப்பியுள்ளது. இந்த […]
காபூல் விமான நிலையத்தில் பொதுமக்கள் விரட்டி அடிக்கப்படும் காட்சிகள் வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழுஅதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் நாடு முழுவது பதற்றம் நீடித்து வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதிலும் விமானம் மூலம் மற்ற நாடுகளுக்கு தப்பித்துச் சென்று அகதிகளாக வாழ்கின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதுவரை காபூல் விமான நிலையத்தில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் […]
தலீபான்களிடம் ஒப்படைக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பெண்ணின் தாய் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பாத்திமா. இவர் தனது கணவருடன் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளார். இதனை அடுத்து அவரது கணவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து நிமிஷா பாத்திமா கடந்த 2019 ஆம் ஆண்டு 400 தீவிரவாதிகளுடன் இருந்த ஆப்கான் படையினரிடம் சரணடைந்தார். இவரை தலீபான்கள் சிறை வைத்திருந்தனர். மேலும் கடந்த ஞாயிறுகிழமை […]
பிரித்தானியாவிற்கு தப்பிச் சென்ற அனுபவம் குறித்து பெண் தொழிலதிபர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த 15 ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி விமானம் மூலம் மற்ற நாட்டிற்கு தப்பி செல்கின்றனர். இதுவரை காபூல் விமான நிலையத்தில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் தலீபான்களினால் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியதை அறிந்து அரசியல் ஆர்வலரும் தொழிலதிபாருமான ஹசினா சையத் பிரித்தானியாவிற்கு விமானம் மூலம் தப்பிச் […]
ஆப்கான் இளைஞர் தன்னுடைய இறப்பிற்கு பிரித்தானியா அரசு தான் பொறுப்பு என்று ஆங்கில ஊடகத்தில் பேட்டி அளித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் ஆப்கான் மக்கள் விமானம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு தப்பி வருகின்றனர். ஏனெனில் தலீபான்களின் சட்டம் மிக கடுமையாக இருக்கும் என்பதால் உயிர் பயத்தில் தப்பி செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கான் தலைநகர் காபூலில் இருக்கும் இளைஞர் ஒருவர் பிரபல ஆங்கில ஊடகமான metro.co.uk என்னும் நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் […]
இராணுவ வீரர்கள் உண்ணும் கப் கேக்கில் கஞ்சாவை கலந்து கொடுத்த உணவக பொறுப்பாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படவுள்ளது. கனடாவில் உள்ள New Brunswickச் சேர்ந்த Chelsea Cogswell என்ற பெண் அங்குள்ள இராணுவ உணவகம் ஒன்றில் பொறுப்பாளராக இருந்துள்ளார். அங்கு உணவு உண்ண வரும் துப்பாக்கி சூடும் பயிற்சியில் ஈடுபடும் இராணுவ வீரர்களுக்கு கேக்கில் கஞ்சா கலந்து கொடுத்துள்ளார். இதனால் இராணுவ வீரர்களுக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம், போன்றவை ஏற்பட்டதுடன் மன ரீதியாகவும் பாதிப்படைந்துள்ளனர். […]
ஆப்கானிஸ்தானில் ஷரியத் சட்டம் அமலுக்கு வரும் என்று தலீபான்களின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் தலீபான்களுக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஜலாலாபாத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பர்தா அணியாத 3 பெண்களை தலீபான்கள் சுட்டுக் கொன்றனர். இது குறித்து தலீபான்களின் மூத்த தலைவர் வாஹித்துல்லா ஷாஷ்மி செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் […]
தாய்மார்கள் குழந்தைகளை காப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் முள்வேலி மேல் தூக்கி எறிந்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றியதோடு நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனை அடுத்து ஆப்கான் செய்தி தொடர்பாளர் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று பேட்டி ஒன்றை அளித்திருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக அன்றே பெண்கள் சாட்டையால் அடிக்கப்பட்டு இரத்தம் சிந்தி வீழ்ந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகி […]
ஆப்கான் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கடந்த ஞாயிறுகிழமை அன்று கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கை வசம் சென்றது. இதனையடுத்து ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு தனது குடும்பத்துடன் வெளியேறினார். மேலும் அவர் பணத்தை நிரப்பிக்கொண்டு ஹெலிகாப்டரில் சென்றதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய அஷ்ரப் கனியின் விமானம் தஜகிஸ்தானில் […]