அமீரகத்திலுள்ள அபுதாபி இஸ்லாமிய வங்கி வெறும் 5 நிமிடத்தில் பொதுமக்களின் வங்கி கணக்கை தொடங்கும் வசதியை அந்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. அமீரகத்தில் அபுதாபி இஸ்லாமிய வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கி அமீரகத்திலுள்ள உள்துறை அமைச்சகத்திலிருக்கும் முகத்தை சரிபார்க்கும் வசதியை பயன்படுத்தி அந்நாட்டிலுள்ள பொதுமக்கள் வங்கிக்கு வராமலேயே தங்களது வங்கி கணக்கை தொடங்கிக் கொள்வதற்கு ஏற்றவாறு ஒரு சிறந்த வசதியை அந்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறு பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே வங்கியில் தன்னுடைய புத்தக கணக்கை தொடங்க வேண்டுமெனில் […]
Tag: உலகச் செய்திகள்
நாட்டில் நிலவும் பதற்றம் நிறைந்த சூழ்நிலையானது 6 மாதத்திற்குள் மாறிவிடும் என ஆப்கானிஸ்தான் அதிபர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நேட்டோ படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறுகின்றனர். இந்த நிலையில் அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களையும் கைப்பற்றி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கும் தலீபான்கள்களுக்கும் இடையே […]
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தற்போது உலகளவில் 19,95,58,123 நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. மேலும் தற்போது கொரோனாவின் 2 ஆவது அலை அனைத்து நாடுகளிலும் மிக வேகமாக தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் மிகவும் கொடிய தொற்றான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,95,58,123 ஆக உள்ளது. மேலும் 18,00,27,984 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்த பின்பு குணமடைந்துள்ளார்கள். இதனையடுத்து […]
கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 7 ஆவது இடத்திலிருக்கும் துருக்கியில் ஒரே நாளில் சுமார் 22,898 நபர்களுக்கு தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் துருக்கி 7 ஆவது இடத்திலுள்ளது. இந்நிலையில் ஒரேநாளில் துருக்கியில் சுமார் 22,898 நபர்களுக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து 2,53,468 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
அமெரிக்கா ஆப்கன் மக்களை தலிபான்களிடமிருந்து மீட்கும் வகையில் அமெரிக்காவில் மீள்குடியேற்றம் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியுள்ள நிலையில் தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்து வருவதோடு, தலிபான்கள் பல முக்கியமான பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க படையினருக்கு சுமார் இருபது ஆண்டு கால போரில் உதவியாக இருந்த ஆப்கன் குடிமக்கள் தற்போது தலிபான்களின் ஆதிக்கத்தால் அபாய நிலையில் உள்ளனர். இதையடுத்து அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் உள்ள […]
சீனாவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு கடனாக கொடுக்கப்பட்ட பெண் ராட்சத பாண்டா தற்போது ட்வின்ஸ் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது. சீன நாட்டின் தேசிய சின்னமாக கருதப்படும் அதிகாரமற்ற பாண்டா கரடிகளை வணிக அடிப்படையில் அனைத்து நாடுகளுக்கும் கடனாக வழங்கி வருகிறது. அதன்படி பிரான்ஸ் நாட்டிற்கும் Huan Huan என்னும் பெண் கரடியையும், Yuan Z என்னும் ஆண் கரடியையும் 10 வருடங்களுக்கு சீனா கடனாக கொடுத்துள்ளது. இந்நிலையில் Huan Huan என்னும் அந்த பெண் கரடி பிரான்ஸிலுள்ள பியூவல் மிருகக்காட்சிசாலையில் […]
லண்டன் வானிலை ஆய்வு மையம் இங்கிலாந்து உட்பட பல பகுதிகளுக்கு கன மழையினால் ஏற்படும் வெள்ளம் தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையை விடுத்ததோடு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பல முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. லண்டன் வானிலை ஆய்வு மையம் இங்கிலாந்து உட்பட பல பகுதிகளுக்கு கன மழையினால் ஏற்படும் வெள்ளம் தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக லண்டன் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இங்கிலாந்திலுள்ள பல இடங்களில் இடியுடன் கூடிய கன மழையினால் வெள்ள அபாயம் […]
ஈரானில் புதிதாக 37 ஆயிரத்து 189 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் ஈரான் நாடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் ஈரானில் புதிதாக 37 ஆயிரத்து 189 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஈரானில் பாதிப்பு எண்ணிக்கை 39,40,708-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 411 […]
வடகொரியா விடுத்துள்ள எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத தென்கொரியா அமெரிக்க இராணுவத்துடனான பயிற்சிக்கான நேரம் குறித்த விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. தென் கொரியா அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கோடைகால பயிற்சியில் ஈடுபடுவதற்கு முடிவுசெய்துள்ளது. இந்த முடிவுக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதாவது தென் கொரியாவின் இந்த முடிவு வடகொரியா மற்றும் தென்கொரியா நாட்டிற்கிடையே மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதில் கடுமையான சிக்கலை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தென்கொரியாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் […]
பிரித்தானியாவில் பயன்பாட்டில் இருக்கும் NHS-ன் கோவிட்-19 செயலியை மக்கள் அழித்து விட வேண்டாம் என்று அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் NHS-ன் கோவிட்-19 செயலி மூலம் அந்நாட்டு அரசாங்கம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு எச்சரித்து வந்தது. அதாவது பிரித்தானியாவில் இந்த செயலியின் மூலம் மக்கள் யாரெல்லாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், யாருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பதை எளிதாக தெரிந்துகொள்ள முடியும். அதேசமயம் இன்று யாருக்கேனும் […]
ஹெல்த் பாஸ்போர்ட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பிரான்ஸ் நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸானது உருமாறி பரவி வருகிறது. இதனை தொடர்ந்து பிரான்சில் டெல்டா வகை வைரஸ் பரவலை தடுப்பதற்காக அந்நாட்டு அரசு ஹெல்த் பாஸ்போர்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது வரும் 9ஆம் தேதி முதல் சுற்றுலாத்தலங்கள், திரையரங்கம், நீச்சல் குளங்கள் அருங்காட்சியங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வோருக்கு விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் கொரோனா சான்றிதழ் அல்லது […]
சீனாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் டெல்டா வைரஸால் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தற்காலிகமாக பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து தலைநகர் பெய்ஜிங்கிற்கு செல்லும் ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் விமான சேவைகளும் யாங்சோவின் கிழக்கு நகரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீனா முழுவதும் தொற்று பாதிப்பு பரவலாக அதிகரித்துள்ளது. மேலும் தொற்று பரவும் பகுதிகளை தடமறிதல் செயலிகளை பயன்படுத்தி கண்டறிய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு […]
அரை குறை ஆடை பெண்களுடன் பிரித்தானிய இளவரசி யூஜீனியின் கணவர் கும்மாளமடிக்கும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரித்தானிய இளவரசியான யூஜீனியின் கணவர் ஜாக் ப்ரூஸ்பேங்க் மத்தியதரைக்கடல் தீவு பகுதி ஒன்றில் அரைகுறை ஆடை அணிந்த சில பெண்களுடன் கும்மாளமடிக்கும் புகைப்பட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதிலும் ஜாக் ஒரு பெண்ணை இடுப்பை பிடித்து அணைத்தபடியும் இருப்பதும், மேலாடை இல்லாமல் ஒரு பெண் நிற்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால் அந்தப் பெண்கள் யார் என்பது […]
இந்தியா உட்பட பல முக்கிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான புதிய கொரோனா குறித்த விதிமுறைகளை கத்தார் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கத்தார் சுகாதார அமைச்சகம் தங்கள் நாட்டினுள் நுழையும் 6 ஆசிய நாடுகளுக்கான கொரோனா குறித்த புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வங்காள தேசம், பிலிப்பைன்ஸ், நேபாளம் போன்ற ஆசிய நாடுகளிலிருந்து கத்தாருக்கு வரும் பயணிகள் கட்டாயமாக கொரோனா குறித்த PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றுள்ளது. மேலும் அவ்வாறு உட்படுத்தப்படும் […]
சுவிட்சர்லாந்தில் தலிப்பான் என கூறி இளம்பெண்ணை அவமதித்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் 18 வயது இளம்பெண்ணை 36 வயதான நபர் ஒருவர் தீவிரவாதி என அடையாளப்படுத்தி அவரை அவமதித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சூரிச் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் 30 வயதான அந்த நபருக்கு 300 பிராங்குகள் அபராதமும், நீதிமன்றம் விவகாரங்களுக்கான கட்டணமாக 2,500 பிராங்குகளும், […]
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஆகஸ்ட் 2 ஆம் தேதியிலிருந்து இந்தியா ஏற்றுள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தமாக 15 உறுப்பினர் நாடுகள் உள்ளது. இந்த 15 உறுப்பினர் நாடுகளில் 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும், இந்தியா உட்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாகவும் உள்ளார்கள். இந்த உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சுழற்சி அடிப்படையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்கும். அதன்படி கடந்த மாதம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை […]
டெல்டா வகை வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை சீனா அரசு அமல்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் உகான் நகரில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரசினால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படைந்துள்ளனர். இதனை அடுத்து தொற்று பரவலானது சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இருந்தாலும் அதன் வீரியம் குறையவில்லை. மேலும் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் […]
அர்ஜெண்டினாவில் திடீரென இரண்டு ஏரிகள் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினாவில் உள்ள பழமையான இரண்டு ஏரிகளில் தண்ணீர் திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆய்வாளர்கள் ஏரியில் உள்ள தண்ணீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற காரணம் என்ன என்பது குறித்த குழப்பத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த ஏரிக்கு அருகே உள்ள தொழிற்சாலையிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் அவை ஏரியில் உள்ள தண்ணீரில் நேரடியாக வந்து […]
கலிபோர்னியாவில் மொத்தமாகவுள்ள வனப்பகுதியில் 32% திடீரென ஏற்பட்ட தீயினால் கருகி நாசமாகியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். வடக்கு கலிபோர்னியாவிலுள்ள வனப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் தற்போதுவரை 2.44 லட்சம் வரையிலான அதாவது மொத்தமாகவுள்ள வனப்பகுதியில் 32% காட்டுப்பகுதி திடீரென ஏற்பட்ட தீயினால் கருகி நாசமாகியுள்ளது. மேலும் இவ்வாறு ஏற்பட்ட திடீர் தீயினால் சுமார் 69 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சுமார் 9 கட்டிடம் சேதாரமாகியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளார்கள். […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த பெலாரஸ் நாட்டைச்சேர்ந்த தடகள வீராங்கனை “என்னை என் நாட்டுக்கு அனுப்பாதீர்கள்” என்று கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் நாட்டைச்சேர்ந்த தடகள வீராங்கனையான Kryststina Tsimanouskaya ( 24 ) 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக காத்திருந்த வேளையில் அவரது பயிற்சியாளர் அவரை திடீரென 4×400 ரிலே ஓட தயாராகுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் Kryststina-வின் பயிற்சியாளர் 200 மீட்டர் பந்தயத்திலிருந்து வெளியேற மறுத்தால் தேசிய அணியிலிருந்து வெளியேற்றப்படுவதோடு, […]
1800 ஆம் ஆண்டில் அடிமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட கருப்பின பெண் ஒருவரின் வாழ்க்கையை வரலாற்றாளர் ஒருவர் புத்தகமாக எழுதியுள்ளார். 1800ஆம் ஆண்டில் வெள்ளையர் ஒருவரின் வீட்டில் ஜூட் இன்னும் கருப்பின பெண் வேலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த கருப்பின பெண் அவருடைய எஜமான் வீட்டில் இரவு நேரத்தில் சமையலறைக்கு சென்று ஒரு துண்டு ரொட்டியையும், ஒரு துண்டு வெண்ணையையும் திருடி சாப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட வீட்டு முதலாளியின் மகள் ஜூட்டை பயங்கரமாக அடித்து சித்திரவதை செய்துள்ளார். இதனால் […]
நேட்டோ படைகள் திரும்ப பெறுதலே நாட்டின் பாதுகாப்பு மோசமடைவதற்கு காரணம் என்று ஆப்கான் அதிபர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்திரவிட்டுள்ளார். இதனால் நேற்றிலிருந்து நேட்டோ படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதனை தொடர்ந்து தலீபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருகிறது. மேலும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அமெரிக்கா தான் காரணம் என்று ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ளார். இது குறித்து […]
அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தினால் அதில் சென்ற 4 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா என்னும் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலிருந்து ராபின்சன் என்னும் ஆர்66 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அதில் சுமார் 4 பேர் சென்றுள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலையில் 4 பேருடன் சென்ற அந்த ராபின்சன் ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி ஹெலிகாப்டரில் சென்ற 4 பேரும் உயிரிழந்துள்ளார்கள்.
இந்தியா தங்கள் நாட்டின் ஒரு அங்கமாக கில்ஜித்-பல்டிஸ்தானை கூறிவரும் நிலையில், பாகிஸ்தான் அப்பகுதியை தங்களுடைய நாட்டின் ஒரு மாவட்டமாக அங்கீகரித்து அதற்கான சட்ட மசோதாவையும் இயற்றியுள்ளது. இந்தியா ஜம்மு காஷ்மீர், கில்ஜித்-பல்டிஸ்தான் மற்றும் லடாக் பகுதி போன்றவற்றை தங்களுடைய நாட்டின் ஒரு அங்கம் என்று கூறி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலுள்ள கில்ஜித்-பல்டிஸ்தானை அந்நாட்டின் ஒரு மாவட்டமாக அங்கீகரிக்கும் வகையிலான “26 வது சட்ட திருத்த மசோதா” என்று பெயரிடப்பட்டுள்ள மசோதா பாகிஸ்தான் நாட்டில் இயற்றப்பட்டுள்ளது. இவ்வாறு […]
விமான சேவைகளின் தடையானது வரும் 7 ஆம் தேதிக்கு பின்னரும் தொடரும் என எதிகாத் மற்றும் எமிரேட்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி வரை பல்வேறு நாடுகளிலிருந்து வரும் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த போக்குவரத்து தடையானது வருகிற 7ஆம் தேதி வரை தொடரும் என எதிகாத் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் இலங்கை வங்கதேசம் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் விமான சேவை […]
காட்டுத்தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக விவசாய மற்றும் வனத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டில் மத்திய தரைக் கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் உள்ள காடுகளில் சென்ற வாரம் தீ வேகமாக பரவி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் சிக்கி உயிரிழந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் விவசாயம் மற்றும் வனத்துறை அமைச்சர் பெகிர் பக்டிமிர்லி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் மனவ்காட் பகுதியைச் சேர்ந்த ஏழு பேரும் மர்மரிஸ் பகுதியில் […]
56 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட ரயில் சேவைகளை இரு நாட்டு பிரதமர்களும் காணொலி வாயிலாக துவக்கி வைத்தனர். இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே ஐந்து முக்கியமான ரயில் வழித்தடங்கள் உள்ளது. அதில் ஹல்டிபாரி-சிலாஹடி வழித்தடமும் ஒன்று. இந்த வழித்தடமானது கொல்கத்தா- சிலிகுரி இடையிலான அகல பாதையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இதனை அடுத்து வங்கப்பிரிவினைக்கு பிறகும் ரயில் சேவை இயக்கப்பட்டது. இதன் பின்பு 1956ல் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் காரணமாக ரயில் சேவையானது […]
ஈரான் நாடு தான் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு முழு பொறுப்பு என்று பிரித்தானியா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பிரித்தானிய வெளியுறவு செயலர் டொமினிக் ராப் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு ஓமன் கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் மீது நடந்த ட்ரோன் தாக்குதல் திட்டமிடப்பட்ட செயல் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த ட்ரோன் தாக்குதலில் பிரித்தானியவை சேர்ந்த ஒருவரும், ருமேனிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் […]
ஜெர்மனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 600 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே போராட்டக்களத்தில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் 10 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் […]
இந்தியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றமான டெல்டா வைரஸ் தற்போது சீனாவிலுள்ள 18 மாவட்டங்களில் பரவி கடந்த 10 நாட்களில் 300 க்கும் அதிகமான நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இவ்வாறு பரவிய கொரோனா வைரஸ் இந்திய நாட்டிலும் அதிகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் முதன்முதலாக இந்தியாவில் கொரோனா வைரஸின் உருமாற்றமான டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனாவின் உருமாற்றமான டெல்டா வைரஸ் […]
வீட்டிலிருந்த அனைத்து ஆண்களையும் முச்சந்திக்கு அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்த 2 பெண்களை பாலியல் தாக்குதல் நடத்திய பேயோட்ட வந்த மந்திரவாதியை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். ஹாலிஎல போகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மந்திரவாதி பேய் ஓட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் பேய் ஓட்டுவதாக கூறி அவ்வீட்டிலிருந்த அனைத்து ஆண்களையும் முச்சந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்பின் வீட்டில் ஆண்கள் இல்லாத சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திய மந்திரவாதி அங்கிருந்த 2 பெண்களின் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். இதுகுறித்து காவல்துறை […]
தலீபான்கள் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனை அடுத்து தெற்கு ஆப்கானிஸ்தானில் கந்தஹார் விமான நிலையம் அமைந்துள்ளது. இதன் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலைய தலைவர் மசூத் பஷ்டூன் தெரிவிக்கையில் “சனிக்கிழமை இரவு அன்று 3 ராக்கெட்கள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. […]
கடந்த 24 மணிநேரத்தில் மலேசியாவில் புதிதாக 17,150 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிதாக 17 ஆயிரத்து 150 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் […]
பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாகிஸ்தானில் 2 வீரர்கள் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினரின் மூன்று ராணுவ சோதனைச் சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் ஒன்பது பேர் காயமடைந்ததாகவும், இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ஷவால் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் கடந்த சனிக்கிழமை அன்று […]
13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 90 பைசா வெள்ளி ஸ்பூன் ஒன்று தற்போது சுமார் 2 லட்சத்திற்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் கார் புட் விற்பனை செய்த நபர் ஒருவர் மெல்லிய, ஒரு பழைய நசுங்கிய, நீண்ட கைப்பிடி கொண்ட 90 பைசா வெள்ளி கரண்டியை வாங்கி அதனை ரூ. 2 லட்சத்திற்கு ஆன்லைன் ஏலத்தில் விற்பனை செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 5 அங்குலம் கொண்ட அந்த கரண்டியை லாரன்ஸ் ஏலதாரர்களின் வெள்ளி நிபுணர் […]
தமிழகத்தில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு கனடாவிலுள்ள விண்வெளி வீராங்கனை பயிற்சி மையத்தில் அனுமதி கிடைத்துள்ள நிலையில், அவர் தமிழக அரசின் உதவியை கோரியுள்ளார். தமிழகத்திலுள்ள தேனி மாவட்டத்தில் உதயகீர்த்திகா என்னும் பெண்மணி வசித்து வருகிறார். இவருடைய எண்ணம் முழுவதும் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்பதிலுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்காக உதய கீர்த்திகா கனடாவிலிருக்கும் விண்வெளி வீராங்கனை பயிற்சி மையத்தில் பயிற்சி எடுக்க விண்ணப்பித்துள்ளார். இவருடைய விண்ணப்பத்தை கனடாவின் விண்வெளி வீராங்கனை பயிற்சி மையம் ஏற்றுள்ளது. ஆனால் இவர் […]
பிரான்சில் கடந்தாண்டின் துவக்கத்திலிருந்து போடப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக வீட்டில் அடங்கிக் கிடக்கும் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வன்முறையினால் சுமார் 102 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. அதன்படி பிரான்ஸ் நாட்டிலும் கடந்தாண்டின் துவக்கத்திலிருந்தே கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அந்நாட்டில் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படியான நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வீட்டிலேயே இருப்பதினால் குடும்பத்தில் ஏற்படும் […]
சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அந்நாட்டில் புதிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவிற்கு தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சுமார் லட்சக்கணக்கான மக்களுக்கு தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்நாட்டில் புதிய பயண தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு தொற்று […]
சுவிட்சர்லாந்தில் ஒரே நாளில் 50 நபர்கள் புகலிடம் கோருவோர் மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வரை சுவிட்சர்லாந்தில் உள்ள பெடரல் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் புகலிடம் கோருவோர் மையத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 50 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அந்த மையம் முழுவதும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மையத்தில் 152 பேர்கள் தங்கி இருந்து வரும் […]
பிரித்தானியாவில் நிதி அமைச்சர் ரிஷி சுனக் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் பயண கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மக்களின் விடுமுறை நாட்களை வீணடிக்காமல் காப்பாற்றும் விதமாகவும், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும் பயண கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் “மஞ்சள்நிற பட்டியலில்” உள்ளதால் பிரித்தானிய மக்கள் […]
சுறாக்களின் பற்றாக்குறையினால் கடலின் வளம் பாதிக்கப்படும் என ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர். உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் தங்களின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய கடமையை பெற்றுள்ளனர். இதை பாதுகாக்க தவறினால் சுற்றுச்சுழலில் ஏற்படும் சிறிய பாதிப்பும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் கடலில் வாழும் மிகப்பெரிய நீர்வாழ் விலங்கான சுறாவிற்கும் கடல்வள பாதுகாப்பிற்கும் சுற்றுச்சூழலில் நெருங்கிய தொடர்பு உண்டு. இது குறித்து 2007 ஆம் ஆண்டு நேஷனல் ஜியோகிராபி நிறுவனம் ஆய்வு ஒன்றை வெளியிட்டது. அதில் வெள்ளை […]
பிரான்சில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பிரான்சில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி கடவுச்சீட்டு மற்றும் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக லியோன், பாரீஸ், மான்ட் பீலியர், டூலூஸ், நான்டெஸ், மர்சேய் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் 150 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் தனித்தனியா நடைபெற்று வருகிறது. மேலும் “நாங்கள் கினி பன்றிகள் அல்ல தடுப்பூசி செலுத்தி கொள்வது எங்களது தனிப்பட்ட விருப்பம்” என்ற எழுதப்பட்ட பலகைகளை ஏந்தி நாடு முழுவதும் […]
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவின் திருமணவிழாவில் வெட்டப்பட்ட கேக்குகளிலுள்ள 794 கிராம் எடையுடைய ஒரு கேக் துண்டு தற்போது ஏலத்திற்கு வரவுள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் 5 அடி உயரம் மற்றும் 102 கிலோ எடை கொண்ட 5 அடுக்கு கேக் வெட்டப்பட்டதிலிருந்து தற்போது 794 கிராம் எடையுடைய ஒரு கேக் துண்டு […]
பிரேசிலில் ஒரே நாளன்று புதிதாக 37,582 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இந்த தொற்றின் பிடியிலிருந்து விடுபட அனைத்து நாடுகளும் சில கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டுக்குள் கொண்டு வருகிறது. இருப்பினும் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இந்நிலையில் பிரேசில் நாட்டில் ஒரே நாளில் புதிதாக 37,582 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 910 […]
தென்னமெரிக்காவில் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னமெரிக்காவில் பெருநாடு அமைந்துள்ளது. இந்த பெரு நாட்டின் வடமேற்கே ரிக்டரில் 6.1 ஆக பதிவாகிய மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 33.18 கிலோமீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இவ்வாறு உருவான இந்த நிலநடுக்கத்தால் பெரு நாட்டின் வடமேற்கே உள்ள ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடத்தின் […]
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தற்காலிகத் தலைவராக இந்தியா பொறுப்பேற்க உள்ளது. ஐ.நா பாதுகாப்பு சபையானது ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது. இதனை அடுத்து பிராந்திய உறுப்பு நாடுகளின் சுழற்சியின் படி இந்தியா பொறுப்பேற்க உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தலைமை பதவியை […]
புளோரிடா மாகாணத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அமெரிக்காவில் பாதிக்கப்படும் ஐந்தில் ஒருவர் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆகவுள்ளார். இந்த நிலையில் போன வாரம் மட்டும் மாகாணத்தில் 1,10,000 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதற்கு முந்திய வாரம் 73,000மாக பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. மேலும் […]
சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறி செயல்படுவோருக்கு உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பீட்டா மற்றும் டெல்டா வைரஸ் வகைகள் பரவியுள்ளதால் தொற்று பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நீண்டகால குடியேற்ற உரிமை மற்றும் நிரந்தர குடியேற்ற உரிமை வைத்திருப்பவர்கள் […]
இளைஞர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் பிரித்தானிய அரசு கபாப், டாக்ஸி சவாரி, சினிமா டிக்கெட்டுகள் உள்ளிட்ட இலவசங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 18 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு பிரித்தானியாவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இலவச திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 30 நிறுவனங்கள் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் […]
தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை அமெரிக்கா சுகாதார துறை வெளியிட்டுள்ளது. உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனால் அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையில் தீவிர தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து அமெரிக்காவில் மாடர்னா, பைசர், பயோடெக், ஜான்சன்& ஜான்சன் போன்ற தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை மக்கள் செலுத்தி வருகின்றனர். இதுவரை மொத்தமாக போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையானது 34,49,28,514 ஆகும். இதனை அமெரிக்க […]