அமெரிக்காவில் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு மட்டுமின்றி கொலை மிரட்டலும் விடுத்த இளைஞனுக்கு நீதிமன்றம் தற்போது அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள pee Ridge என்னும் பகுதியில் ஆஸ்டன் ஹில் என்னும் 32 வயதுடைய நபர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 10 வயது சிறுவனினுடைய உடையை கழட்டி பாலியல்ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சிறுவனிடம் இதை வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அதன்பின் […]
Tag: உலகச் செய்திகள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஆஸ்திரேலியா தற்போது ராணுவம் மற்றும் ஹெலிகாப்டரை களத்தில் இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல நாடுகளில் சர்வதேச பயணங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா மட்டும் சொந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளிலிருந்து திரும்புவதற்கு குறிப்பிட்ட காலம் மட்டுமே அவகாசம் வழங்கியது. மேலும் எல்லைகளை மூடியதோடு பலரும் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு […]
நேஷனல் ஜாக்ரஃபிக் எனப்படும் தேசிய பூகோளவியல் நிறுவனம் துபாயின் எதிர்கால அருங்காட்சியகத்தை உலகின் 14 அழகான அருங்காட்சியகத்தில் ஒன்றாக தேர்வு செய்துள்ளது. துபாய் நகரின் ஷேக் ஜாயித் சாலையில் கட்டிடக் கலைக்காக சர்வதேச விருது பெற்ற எதிர்கால அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும் அதன் கட்டிட கலையையும் கொண்டதாக திகழ்கிறது. இந்நிலையில் நேஷனல் ஜாக்ரஃபிக் எனப்படும் தேசிய பூகோளவியல் நிறுவனம், உலகின் 14 அழகான அருங்காட்சியகத்தில் ஒன்றாக, துபாயிலுள்ள கட்டிடக்கலையின் அதிசயமாக திகழ்ந்து […]
பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் கடந்த ஆறு வருடங்களில் மட்டும் 22 ஆயிரம் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பெண் உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் 77 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டதாகவும் கடுமையான தண்டனைகள் இல்லாததால் குற்றங்களும் அதிகரித்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான […]
கந்தகார் விமான நிலையத்தில் திடீரென ஏவுகணைகள் பயங்கரமாக மோதியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் விமான நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்த விமான நிலையத்தில் திடீரென ஏவுகணைகள் மோதியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு, கனமழை, கொரோனா தொற்று பாதிப்பு, தலிபான் பயங்கரவாதம் என அடுத்தடுத்து அந்நாட்டில் பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ஏவுகணைகள் மோதியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கொரோனா கட்டுபாடுகளை மீறி செயல்படுவோருக்கு அந்நாட்டில் தங்குவதற்கான நிரந்தர உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பீட்டா மற்றும் டெல்டா வைரஸ் வகைகள் பரவியுள்ளதால் தொற்று பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்களுக்கு அந்நாட்டில் நிரந்தரமான தங்குவதற்கான உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நீண்டகால […]
ட்விட்டர் பக்கத்தில் தன்னை பின்தொடர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு நன்றி தெரிவித்த இளம் பெண்ணிற்கு அவர் அளித்த பதில் குறித்து இணையதள வாசிகள் கிண்டல் அடித்து வருகிறார்கள். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் என்பவர் திகழ்கிறார். இவர் ட்விட்டர் பக்கத்தில் பல நபர்களுடன் உரையாடி வருகிறார். இவ்வாறான சூழ்நிலையில் எலான் மஸ்க் ரெபேக்கா என்னும் பெண்ணின் ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்ந்துள்ளார். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ரெபேக்கா என்னும் அந்த […]
கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது கரியமில வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் புவியின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது என்று 153 நாடுகளை சேர்ந்த 14,000 விஞ்ஞானிகள் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். ஒரேகான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் பருவநிலை மாற்றம் குறித்து 153 நாடுகள் சேர்ந்த 14,000 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் செய்து குறிப்பாவது, கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொழில் […]
பிரித்தானியாவில் தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் பெண் ஒருவருடைய எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள கிங்ஸ்டன் அப்பான் ஹல் என்ற நகரில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பெண் ஒருவருடைய எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணின் எலும்புக்கூடு கால்களுக்கு இடையில் நீல நிற பாட்டிலில் பிரவுன் நிற திரவம் ஒன்று இருந்ததாகவும் அந்த பாட்டில் சீல் செய்யப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் 70 நிபுணர்கள் கொண்ட தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு ஒன்று […]
சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் புதிதாக 55 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 64 பேருக்கு நேற்று முன்தினம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் தேதி இந்த அதிகபட்சமாக 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், அதன்பிறகு பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளதாக பரபரப்பு […]
உலகின் மிகப்பெரிய கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர். இலங்கையிலுள்ள ரத்தினபுரி என்ற இடத்தில் அதிக அளவு ரத்தினங்கள் கிடைக்கின்றன. இதனால் அப்பகுதியை ‘ரத்தின தலைநகரம்’ என்று அழைக்கின்றனர். இதனையடுத்து கமாகே என்பவர் அப்பகுதியில் வசித்து வருகிறார். அவர் ரத்தின கற்கள் விற்கும் வியாபாரம் செய்து வாழ்கிறார். இந்த நிலையில் கமாகே தனது வீட்டின் பின்புறம் தொழிலாளர்களை வைத்து கிணறு ஒன்று தோண்டியுள்ளார். அப்பொழுது அங்கே பெரிய கல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தக் கல்லை சாதாரணமாக […]
இடுப்பை உடுக்கை போன்று வைத்துள்ள பெண்ணிடம் நடத்திய நிகழ்ச்சியில் அவர் கூறிய பராமாரிப்புகளும் ரகசியங்களும் வியப்படைய வைக்கின்றன. வியட்நாமை சேர்ந்த 26 வயதான பெண் அன் கி ஆவார். இவர் அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இதன் பின்பு பகுதிநேர வேலையாக நடனமாடியும் வருகிறார். இதனையடுத்து புளோரிடா மாகாணத்தில் அன் கி வேலை பார்க்கும் உணவகத்திற்கு துய் ங்கா என்பவர் வருகை புரிந்துள்ளார். இவர் வியட்நாமைச் சேர்ந்த தொலைக்காட்சி பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது […]
அலுவலக உதவியாளருடன் நெருக்கமாக இருந்த சுகாதார துறை செயலாளரை அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். பிரித்தானியா நாட்டு சுகாதார துறை செயலாளரான Matt Hancock கும் அவரது உதவியாளருமான Gina Coladangeloவும் அலுவலகத்தில் முத்தமிடும் காட்சியானது வலைதளத்தில் வெளியாகி அனைவரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் Gina Coladangelo ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இருவரும் இந்த சம்பவம் காரணமாக தலைமறைவாகி உள்ளனர். இந்த நிலையில் Matt Hancock வுடன் இத்தனை […]
பிரத்தானியா நாட்டு இளவரசர் மற்றும் அவரது மனைவி இருவரும் ஒபாமா தம்பதியினரை முன்மாதிரியாக கொண்டு செயல்வடுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிரித்தானிய நாட்டு இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் விண்ட்சர் மாளிகையிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவிடம் வாழ்க்கை தொடர்பான ஆலோசனைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஹரி மற்றும் மேகன் இருவரும் ஒபாமா தம்பதியுடன் நீண்ட கால […]
ஐ.நா. அலுவலகத்தில் தலீபான்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு பலத்தப்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையே போரானது நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் அதில் எந்த பயனும் கிடைக்கவில்லை. மேலும் ஆப்கான் அரசுக்கு உதவியாக இருந்த நேட்டோ படைகள் அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 1 […]
3வது தவணை தடுப்பூசியை 60 வயது மேலுள்ளவர்களுக்கு செலுத்த போவதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸ் கிருமியானது தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே வருவதால் இரண்டு தவணைகளுக்கு மேலாக மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்துவது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல் […]
மெக்ஸிகோவில் இரண்டு காவல்துறையினர் பொது இடத்தில் வாகனத்தை நிறுத்தி சீருடையுடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ள Ecatepec de morelos என்ற நகராட்சியில் இரண்டு காவல்துறையினர் ரோந்து வாகனத்தை நிறுத்தி கடமையில் இருந்த வேளையில் சீருடையுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். அதனை அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் வீடியோ எடுப்பதை கூட கவனிக்காமல் அந்த இரண்டு காவல்துறையினரும் உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் […]
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலுள்ள முக்கிய தலைவர்கள் பெகாசஸ் என்னும் மென்பொருளின் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து என்.எஸ்.ஓ நிறுவனம் அதனை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளை தயாரித்துள்ளது. இந்நிலையில் இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலுள்ள தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறான சூழலில் என்.எஸ்.ஓ நிறுவனம் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்த முடியாதவாறு முடக்கியுள்ளது. […]
ஆப்கானிஸ்தானில் இருவேறு பகுதிகளில் நடந்த வாகன விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள லக்மன் பகுதியில் எதிர்பாராதவிதமாக இருவேறு வாகன விபத்துகள் ஏற்பட்டதாகவும் அதில் 18 பேர் பலத்த காயமடைந்ததாகவும் 20 பேர் உயிரிழந்ததாகவும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று தவ்லாதலை என்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனத்தில் இருந்த 8 பேர் காயமடைந்ததாகவும், 12 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் நேற்று திடீரென […]
ஜப்பானில் இதுவரை இல்லாத வகையில் தினசரி தொற்று பாதிப்பு 10,000 த்தை கடந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் 4 நகரங்களில் கொரோனா கால அவசர நிலையை பிறப்பித்துள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் 2020ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறான சூழலில் ஜப்பானில் இதுவரை இல்லாத அளவில் கொரோனாவின் பாதிப்பு தினந்தோறும் 10,000 த்தை தாண்டி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் நாட்டின் அரசாங்கம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. […]
ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் தலிபான்களின் பயங்கரவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக அந்நாட்டு மக்கள் வெளிநாட்டிற்கு செல்லும் நோக்கில் பாஸ்போர்ட் அலுவலகங்களை நோக்கி படையெடுத்து செல்கின்றன. ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் பலரும் அந்நாட்டில் அதிகரித்து வரும் தலிபான்களின் பயங்கரவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாட்டுக்கு செல்லும் நோக்கில் பாஸ்போர்ட் அலுவலகங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக தினசரி பத்தாயிரம் பேராவது தலைநகர் காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்க படைகள் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் […]
சுவிட்சர்லாந்தில் இரவு நேர பணியில் பொறுப்பேற்று சுமார் 8 ஆண்டுகளாக தூங்கிய காவலர் ஒருவரை சிறை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் வலைஸ் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் Cretelongue என்னும் சிறையில் இரவு நேரம் பணியில் காவலர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இவரும், சக ஊழியரும் சுமார் 8 ஆண்டுகள் செய்ததுபோல சம்பவத்தன்றும் இரவு நேர பணியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்கள். அப்போது திடீரென 3 துறை சார்ந்த அதிகாரிகள் அந்த சிறையில் ஆய்வுக்கு […]
இஸ்ரேல் கப்பல் மீது ஓமன் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் வியட்னாமில் சமீபத்தில் நடந்த அணு ஆயுத தயாரிப்பினை குறைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியுற்றதையடுத்து இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து ராணுவம் கடந்த வியாழக்கிழமை அன்று அரபிக்கடலில் ஓமன் அருகே இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு மஸ்கட்டிலிருந்து 300 கிலோ மீட்டர் […]
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஐ.நா வளாகத்தின் மீது அரசாங்கத்திற்கு எதிரான சில சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்று ஐ.நா தூதரகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகரிலுள்ள ஐ.நா வளாகத்தின் மீது அரசுக்கு எதிரான சில சமூக விரோதிகள் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடந்த தாக்குதலில் பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டதோடு மட்டுமின்றி சில அதிகாரிகள் காயமடைந்துள்ளார்கள். இருப்பினும் […]
சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் 2019 இல் அந்நாட்டில் வந்த சட்டத்தை தொடர்ந்து அரசு வழங்கும் நலத்திட்டங்களை தவிர்த்து வருகிறார்கள். சுவிட்சர்லாந்து நாட்டில் 2019 ஆம் ஆண்டு புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. அதாவது ஸ்விட்சர்லாந்திலுள்ள பெடரல் சட்டத்தின் 63வது பிரிவின்படி வெளிநாட்டவர்கள் அந்நாட்டில் வாழ்வதற்கான உரிமைகளைப் பறிப்பது தொடர்பான சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதனால் சுமார் 4000 பேர் சுவிட்சர்லாந்தில் வாழும் உரிமையை இழந்துள்ளார்கள். இவர்கள் சுவிட்சர்லாந்து அரசின் நலத்திட்டங்களை பெறுவதினால் வாழிட உரிமையை இழந்தவர்கள் அல்ல என்றாலும் […]
என்.எஸ்.ஓ குழுமம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருளின் மூலம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையில் இஸ்ரேல் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்னும் குழுமம் பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து இந்த பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளின் மூலம் இந்தியா உட்பட பல நாடுகளிலிருக்கும் தலைவர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இஸ்ரேல் நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும் […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 11 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆணுறைகள் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் HIV-க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிம்பிக்கில் பாரம்பரியமாக ஆணுறை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
டெக் ஜாம்பவான் சுந்தர் பிச்சை 2 டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் மட்டும் தங்களது பணியை தொடங்குவதற்காக நிறுவன வளாகங்களுக்கு அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார். கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூகுள் பிளாக்கில் தங்களது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் பதிவிட்டுள்ளதாகவும் அக்டோபர் 18 வரை ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அந்த இமெயிலில் பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு […]
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அந்நாட்டு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது தொடர்பில் கருத்து தெரிவித்த இந்தியாவிற்கு பாகிஸ்தான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு நடந்த தேர்தலுக்கு இந்தியா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதாவது இந்தியாவின் வெளியுறவு துறையின் செய்தித் தொடர்பாளர் இதுதொடர்பான கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் காஷ்மீரை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததை மறைப்பதற்கான முயற்சி இந்த […]
இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து கலை பொக்கிஷங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் கலை மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் சோழர் கால சிலைகள் உட்பட 8 பழங்கால சிலைகள் மற்றும் ஆறு ஓவியங்கள் ஆகியவை கன்பெர்ரா தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 13 கலைப் பொருள்கள் மற்றும் சிலை கடத்தல் குற்றவாளியான சுபாஷ் கபூரிடமிருந்து வாங்கப்பட்ட சிலை என மொத்தம் […]
மறுசுழற்சி முறையில் 96% அசலை தரக்கூடிய தாவர எண்ணெய் அடிப்படையிலான புதிய பிளாஸ்டிக்கை ஜெர்மனி அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ஜெர்மனி நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றிலுள்ள வேதியியல் பொருட்களின் அறிவியல் துறை தலைவர் ஸ்டீபன் என்பவர் சுற்றுச்சூழலுக்கு தீங்கு தரக்கூடிய புதைபடிவ எரிபொருள்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக தாவர எண்ணெய் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிளாஸ்டிக்கை கண்டறிந்துள்ளார். இந்த தாவர எண்ணெய் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிளாஸ்டிக்கை 10 முறை கூட மறுசுழற்சி செய்து கொள்ளலாம் என்று […]
இந்தியாவுடன் இருக்கும் தங்கள் நாட்டு எல்லையை வலுப்படுத்த நினைத்த சீனா திபெத் இளைஞர்களின் உண்மை மாறாத குணத்தை பரிசோதித்த பிறகு அவர்களை குடும்பத்தில் ஒருவர் என்ற அடிப்படையில் ராணுவத்தில் சேர்த்து வருகிறது. இந்தியா-சீனா எல்லையான Line Of Actual Control என்னும் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திபெத் இளைஞர்களினுடைய உண்மை மாறாத குணத்தை பரிசோதனை செய்து அவர்களை குடும்பத்தில் ஒருவர் என்ற அடிப்படையில் […]
மத்திய கிழக்கு நாடுகளில் டெல்டா வகை கொரோனாவினால் பெரும்பாலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் மொத்தமாகவுள்ள 22 நாடுகளில் 15 நாடுகள் டெல்டா வகை கொரோனாவின் 4 ஆவது அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே டெல்டா வகை கொரோனா இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி தற்போது சிறிதளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் இந்த வகை டெல்டா கொரோனாவினால் அமெரிக்கா போன்ற பிரபல நாடுகள் […]
சவுதி அரேபியாவில் தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளிலிருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள சுற்றுலா தலங்களுக்குள் நுழையலாம் என்று அந்நாட்டு அரசு புதுவித உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதேபோல் தொற்று குறைந்த நாடுகளும் கொரோனாவிற்காக போடப்பட்ட சில கட்டுப்பாடுகளை தளர்த்தியும் வருகிறது. அதன்படி சவுதி […]
இஸ்ரேலில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல் அவிவில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தில் ஜனாதிபதி Isaac Herzog (61) நேற்று Pfizer தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்தி கொண்டார். மேலும் Pfizer தடுப்பூசியின் இரண்டாவது டோஸை ஐந்து மாதங்களுக்கு முன்பு போட்டுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை […]
தனது குடும்பத்தார் சம்மதத்துடன் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபருக்கு வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தோனேசியாவில் உள்ள Lombok Tengah பகுதியைச் சேர்ந்த Nur Khusnul Kotimah என்ற பெண்ணுக்கும் Korik Akbar என்ற வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் Korik Akbarரின் முன்னாள் காதலி Yunita Ruri இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் Ruri திருமணம் நடைபெறும் இடத்திற்கே விரைந்து வந்துள்ளார். இதனையடுத்து Korik Akbarரிடம் தன்னையும் திருமணம் […]
சுமார் 6.52 செ.மீ அளவிற்கு தனது வாயை திறந்து காட்டி அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தற்போது பெரியவர்கள், சிறுவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் கின்னஸ் சாதனை புரிந்து வருகின்றனர். மேலும் அசாத்தியமான செயல்களை கூட மக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து முடித்து சாதனை புரிகின்றனர். இந்நிலையில் சுமார் 6.52 செ.மீ அளவிற்கு தனது வாயைத் திறந்து காட்டி அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அந்த […]
பாரிசில் ரோட்டில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த திறந்தவெளி காபி ஷாப்பிற்குள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இறந்துள்ளது. இதனையடுத்து அந்த கார் சாலையில் உருண்டு அருகிலிருந்த திறந்தவெளி காபி ஷாப்பிற்குள் பாய்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திடீரென கார் ஒன்று காபி ஷாப்பிற்குள் பாய்ந்ததால் அங்கிருந்து காபி குடித்துக் கொண்டிருந்த 35 வயதுடைய பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். […]
ஜெர்மன் சுகாதாரத்துறை அந்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் சுகாதாரத்துறை ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடாமல் ஜெர்மனிக்கு வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வருகிறார்களா என்பதை விட தடுப்பூசி போட்டிருக்கிறார்களா என்பதற்காகவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ஜெர்மனிக்கு விமானம் மூலம் வருபவர்களுக்கு […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களுக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்புமமில்லை என்று பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பத்திரிக்கையாளர்களிடம் பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் தலிபான் பயங்கரவாதிகள் குறித்த முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான்களுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் […]
ஸ்மார்ட் போன் செயலி வேலை செய்யாததால் பயன்பாட்டாளர்கள் அதனுடைய நிறுவனத்தில் புகார் அளித்துள்ளனர். மனிதனின் தேவைகள் நவீன நாகரீகத்திற்கு ஏற்ப அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அதிலும் ஸ்மார்ட்போன் வந்த பிறகு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். நாம் உபயோகிக்கும் செயலிகளில் அதிக அளவு ஸ்னாப் சாட் எனும் செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலியானது புகைப்படங்களை எடுத்து அதில் கிராப்பிங் மற்றும் எடிட்டிங் போன்ற வேலைகளை செய்து பிறருக்கு அனுப்பும். இந்த நிலையில் 1,25000 பேர் தங்களுக்கு ஸ்னாப் சாட் […]
மறைந்த புகைப்பட செய்தியாளரின் இறப்பு குறித்து அமெரிக்கா செய்தி பத்திரிக்கை புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து ஆப்கான் நாட்டில் ராணுவத்தினருக்கும் த்லீபான்களுக்கும் நடக்கும் தாக்குதல்கள் குறித்து தகவல் சேகரிப்பதற்காக கடந்த 17 ஆம் தேதி இந்தியாவைச் சேர்ந்த ராய்டர்ஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர் ஒருவர் சென்றுள்ளார். இதனை தொடரந்து ஆப்கான் ராணுவத்தினருக்கும் தலீபான்களுக்கும் இடையில் தாக்குதல் எற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இராணுவத்தினருடன் இருந்த […]
கப்பலில் இருந்த மரக்கட்டைகளை வண்டுகள் சேதப்படுத்தியுள்ளதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் நியூ ஆர்லியன்ஸ் நகரில் கடந்த ஜூலை 17ஆம் தேதி பான் ஜாஸ்மின் என்ற சரக்கு கப்பலானது நின்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் இருந்த மரக்கட்டைகளின் மேல் ஆசிய வண்டுகள் மற்றும் ஒரு வகை எறும்புகள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வண்டுகள் மற்றும் எறும்புகள் மரங்களையும் பயிர் விளை நிலங்களையும் சேதப்படுத்தும் என கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து கப்பலிலிருந்து மரக்கட்டைகள் இறக்கினால் தான் […]
இருதலை பாம்புகள் இரையை ஒன்றாக விழுங்கும் காட்சியானது வலைதளங்களில் வைரலாக பரவி அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகத்திலுள்ள ஊர்வன இனங்களில் பாம்புக்கு என்ற தனி சிறப்பும் அதே நேரங்களில் பயமும் அனைவர் இடத்தில் உண்டு. மேலும் “பாம்பை கண்டால் படையே நடுங்கும்” என்ற பழமொழியையும் அனைவரும் அறிவர். அதே மாதிரியான பாம்பை பற்றிய சுவாரசியமான நிகழ்வு ஒன்றை பிரபல விலங்கின நிபுணரான Brian Barczyk தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு தலை கொண்ட பாம்புகள் […]
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என நியூயார்க் நகர மேயர் அறிவித்துள்ளார். உலக அளவில் பரவி வரும் கொரோனாவினால் அதிக அளவு பாதித்தவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் தீவிர பணி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனா பரவல் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் பரவல் அதிகரித்து வருவகிறது. அதிலும் குறிப்பாக புளோரிடா, […]
தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கங்களினால் அலாஸ்காவை சுற்றியுள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் அலாஸ்கா மாகாணத்தில் சிக்னிக் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் தென்கிழக்கு பகுதியில் இருந்து 146 கிலோமீட்டர் தொலைவில் நேற்று இரவு 8.32 மணிக்கு சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து பூமியின் ஆழத்தில் இருந்து 44.9 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று […]
ஆணு ஆயுத வலிமையை மேம்படுத்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கையானது உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகிலுள்ள சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும் சீனாவும் இருந்து வருகிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இரு நாடுகளும் வணிகத்தில் அதிகளவு வரிகளை விதித்து உலகையே நடுங்க வைத்துள்ளன. இதனை தொடர்ந்து சீனாவில் உகான் நகரில் கொரோனா வைரஸ் உருவாகியதாக அமெரிக்கா சந்தேகித்து வருகிறது. இதனை பற்றி அறிந்து கொள்ளவும் அமெரிக்க அதிபர் ஜோ […]
இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 19-ஆம் தேதி பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்த ஊரடங்கு தளர்வின் படி பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது, பொது இடங்களில் கூடுவது ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களும் இயல்பு நிலையை நோக்கி திரும்பத் தொடங்கினர். அதோடு மட்டுமில்லாமல் மதுபான விடுதிகளுக்கும் இரவு நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மருத்துவ நிபுணர்கள் இவ்வாறு முழுமையாக கட்டுப்பாடுகளை தளர்த்தினால் […]
நேற்று வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா தீவு பகுதியில் 8.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நேற்று வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா தீவில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. இதையடுத்து சுமார் 56 மைல் ( 91 கிலோ மீட்டர் ) தொலைவில் பெர்ரிவில் நகரின் தென்கிழக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு அலாஸ்கா மற்றும் தெற்கு அலாஸ்கா […]
நியூயார்க் மேயர் அந்நகரில் உள்ள மக்களில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த தொடங்கியுள்ளது. கலிபோர்னியா, புளோரிடா, லூசியானா, டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் டெல்டா வகை […]