தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொள்ளும் போது திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டரை தலிபான் போராளிகள் சுட்டு வீழ்த்தியுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஹெல்மண்ட் என்னும் மாகாணத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அதன் காவல்துறை தலைமை அதிகாரியையும் சிறை பிடித்துள்ளார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். அப்போது திடீரென ஹெலிகாப்டரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் ஹெல்மெண்ட் மாவட்டத்தில் அவசர அவசரமாக அதனை ராணுவத்தினர்கள் தரையிறக்கியுள்ளார்கள். இதனை […]
Tag: உலகச் செய்திகள்
ஜப்பான் தலைநகரில் நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் வெற்றி பெற்ற சீன நாட்டின் வீராங்கனைக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற மகளிர் 49 கிலோ பளுதூக்கும் போட்டியில் சீனாவைச் சேர்ந்த ஹு ஜிஹூய் என்பவர் மொத்தமாக 219 கிலோவை தூக்கி தங்கப்பதக்கத்தை […]
துனிசியா நாட்டின் பிரதமர் அந்நாட்டில் கொரோனாவை முறையாக கையாளாத காரணத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் 18 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பொருளாதாரத்திலும் துனிசியா மிக மோசமான நிலையை அடைந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் துனிசிய பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சி கொரோனா தொற்றை முறையாக கையாளாதது தான் இந்த நெருக்கடியான நிலைக்கு காரணம் என்று கூறி பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் […]
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை ஈரான் அரசு வன்முறையாக கையாண்டதற்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள குஜெஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து வெப்பத்தின் காரணமாக நீர்நிலைகள் வறண்டு போய் காணப்படுகின்றன. இதனால் அங்குள்ள பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறையினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பகல் வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது கடந்த சில […]
தலீபான்களுக்கு பயந்து இராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து தலீபான்கள் அந்நாட்டை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆப்கான் எல்லைப்குதிகளை கைப்பற்றுதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையேயுள்ள எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தலீபான்களின் வன்முறை செயலுக்கு அஞ்சி ஆப்கானைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று தகவல்கள் […]
பிரித்தானியா நாட்டில் அடுத்த பத்து ஆண்டுகளில் வெப்பநிலை அதிகமாகும் என்பதால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரும் என்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார். உலக அளவில் வெப்பநிலையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவில் அதிக வெப்பநிலை பதிவாகி மக்கள் இறக்கும் மோசமான நிலை உருவாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இங்கிலாந்தில் காலநிலை மாற்றத்தால் வெப்பம் 40 டிகிரிக்கு மேல் பதிவாகி பொருளாதாரம், போக்குவரத்து மற்றும் நீர் பற்றாக்குறை போன்றவை ஏற்படும் என்றும் கூறியுள்ளனர். […]
குடிநீர் பற்றாக்குறையினால் பொதுமக்கள் போராட்டம் ஈடுபட்டதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் Khuzestan பகுதியில் அதிக எண்ணெய் வளம் மிகுந்து காணப்படுகிறது. இந்த Khuzestan பகுதியிலுள்ள Ahvaz நகரில் குடிநீர் பற்றாக்குறையினால் பொதுமக்கள் கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து Ahvaz நகரத்தில் கடந்த திங்கட்கிழமை 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் வற்றி மக்கள் […]
ஸ்விட்சர்லாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியின் 2 டோஸ்ஸையும் செலுத்தி கொண்ட பின்னர் சுமார் 362 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இத்தொற்றின் பிடியிலிருந்து உலக மக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியின் 2 டோஸ்ஸையும் செலுத்தி கொண்ட சுமார் 362 நபர்களுக்கு தொற்று […]
அமெரிக்காவில் ஏற்பட்ட மணல் புயலின் காரணத்தால் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் சுமார் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் யூட்டா என்னும் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலம் பாலைவனங்களால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் யூட்டா மாநிலத்திலுள்ள கனோஷ் என்னும் பகுதியில் திடீரென மணல் புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சென்ற சுமார் 20 க்கும் மேலான வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதுகுறித்து தகவலறிந்து வந்த […]
ஈரானில் கடும் வெயிலினால் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கு அந்நாட்டு அரசாங்கத்தால் முடியாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களை குறிவைத்து காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக நிலவுவதால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் வறண்டதால் தண்ணீருக்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படும் பொதுமக்களுக்கு அரசாங்கத்தாலும் நீரை வழங்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக […]
திருமணமாகாத நேபாள இளம்பெண் கர்ப்பமான நிலையில் குழந்தை பிறந்தவுடன் மண்டை ஓட்டை நசுக்கி கொலை செய்தது தொடர்பான வழக்கில் அவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் புதுவித தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமாகாத தற்போது 24 வயதாகும் பபிதா என்னும் இளம்பெண் 6 மாத கர்ப்பமாக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திருமணமாகாமல் இருந்ததால் தான் கர்ப்பமாக இருப்பதை யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட பபிதா இங்கிலாந்தில் […]
ஜப்பான் நாட்டில் காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டில் ஷிமோகிடா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் இன்று உள்ளூர் நேரமான காலை 6 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 70 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவிலிருந்து வடமேற்கில் லுவூக் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த லுவூக்கிலிருந்து 200 கிலோமீட்டர் மீட்டர் தொலைவில் சுலவேசியில் பாலு என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியிலிருந்து 97 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டும் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகவும் பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் […]
கொரோனா வைரஸ் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சர்ச்சையாக பதிவிட்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இங்கிலாந்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து நாட்டில் தினசரி வைரஸ் தொற்றால் 30000திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இங்கிலாந்து நாட்டில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைபடுத்தி இருந்துள்ளார். இது குறித்து ஒன்றை சாஜித் ட்விட்டரில் […]
துனிசியா நாட்டிலே அமைதி ஏற்படுத்துவதற்காக பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சி அவரை பணி நீக்கம் செய்யதுள்ளனர். ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் துனிசியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் கொரோனா தொற்றை தவறாக கையாண்டதால் அரசின் மீது ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற கைஸ் சையத் இந்த தவறுக்கான முழு பொறுப்பையும் […]
கனடா நாட்டில் கடுமையான புயல் தாக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. கனடா நாட்டின் தலைநகரான Ottawa பகுதியை கடுமையான புயல் தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது நேற்றிரவு கனடா நாட்டின் உள்ளூர் நேரமான 8.15 மணிக்கு தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் பலத்த காற்று மட்டும் பனிக்கட்டி போன்ற கல் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி […]
சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பாக திரிக்கப்பட்ட கருத்துகளே இணையதள வாசிகளால் அதிகளவு பகிரப்படுவதாக அமெரிக்க மாணவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் மத்திய புளோரிடா பல்கலைகழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்கள் சமூக ஊடகம் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார்கள். இந்த ஆய்வில் மொத்தமாக சுமார் 47,000 சமூக ஊடக பதிவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் 23,000 சர்ச்சைக்குரிய பதிவுகளும், 24,000 சர்ச்சையில்லாத பதிவுகளும் ஆகும். இந்த ஆய்வின் முடிவில் உண்மைக்குப் புறம்பாக திரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய […]
ஆஸ்திரேலியா நாட்டில் கொரோனா அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் 6.56 லட்சத்திற்கும் மேலான மக்களுக்கு தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்று பாதிப்பினால் 10,700 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா அரசு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து மெல்போன், பிரிஸ்போன் போன்ற பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்களின் தாக்குதல் அதிகமாகியுள்ளதால் இரவு நேரத்தில் மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கொன்று வருகின்றனர். இதுவரை மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆண் மற்றும் பெண் பத்திரிக்கையாளர்கள், மனித ஆர்வலர்கள் போன்ற 33 பேரை கொன்றுள்ளனர். இதனை தொடர்ந்து […]
அமெரிக்காவில் 38வது வெப்பக் காற்று பலூன் திருவிழாவானது கோலாகலமாக நடைபெற்றது. அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் ரெடிங்டன் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் HOT AIR BALLON திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த திருவிழாவானது 37 வருடங்களாக நடந்து வரும் நிலையில் சென்ற 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த ஆண்டு 38 வது HOT AIR BALLON திருவிழாவானது கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு மக்கள் கலந்துகொண்டு வானத்தில் பலூனில் […]
சீனாவில் பெய்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளப் பாதிப்பினால் 75000 கோடி ரூபாய் பொருள்கள் சேதமடைந்துள்ளன. இந்த பேரிடரில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுதை அடுத்து அதில் 12 பேர் சுரங்கரயில் பயணிகள் ஆவர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இந்த கனமழையினால் 12.4 லட்சம் பேர் […]
நைஜீரியா நாட்டில் பள்ளி ஒன்றில் கடத்தப்பட்ட மாணவர்களை மீட்கும் பணியில் அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. நைஜீரியா நாட்டில் உள்ள கடுனா மாகாணத்தில் பேப்டிஸ்ட் அகாடமி பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடத்தல்காரர்கள் கடத்தி சென்றுள்ளனர். இந்த நிலையில் கடத்தல்காரர்கள் ஒரு மாணவருக்கு 5 லட்சம் வீதம் பிணைத்தொகையை கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து உடல் நலம் காரணமாக ஒரு மாணவரை கடத்தல்காரர்கள் […]
துனிசியாவில் ஏற்பட்டுள்ள பல சிக்கல்களை முன்னிட்டு ஏராளமானோர் அந்நாட்டின் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தற்போது அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். துனிசிய நாட்டில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. இதனால் துனிசிய நாட்டின் பொருளாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பலரும் வேலையின்றி தவித்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை துனிசிய நாடு. முழுவதும் ஏராளமானோர் அந்நாட்டின் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்குமிடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் அங்குள்ள பல பகுதிகளை கைப்பற்றியுள்ளார்கள். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த திட்டமிட்ட அரசாங்கம் கத்தார் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளின் பிரதிநிதியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து […]
துனிசிய அதிபர் கயீஸ் நாடாளுமன்றத்தை முடக்க முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சி பதவி நீக்கம் செய்யப்படுவதாக பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். துனிசிய பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சி அந்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராத காரணத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் அந்நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட காரணத்தினால் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும் இளைஞர்களும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினருக்கும், […]
தெற்கு இங்கிலாந்தில் 1 மணி நேரத்தில் சுமார் 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ள நிலையில் லண்டன் உட்பட பல பகுதிகளுக்கு புயல் தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது. தெற்கு இங்கிலாந்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் லண்டன் உட்பட பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் லண்டனிலிருக்கும் Newham மற்றும் Whipps Cross மருத்துவமனைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வரும் நோயாளிகளை வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு […]
கடுமையான மது போதையிலிருந்த பெண் ஒருவர் அவருடைய ஜோடியை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக அவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் Britanny Stone என்னும் 28 வயதுடைய பெண்ணொருவர் அடுக்குமாடி குடியிருப்பு அவருடைய ஜோடியுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து ஜோடி இருவருக்குமிடையே திடீரென ஒருநாள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த பிரிட்டானி ஸ்டோன் சரியான மது போதையில் இருந்தபோது தன்னுடைய ஜோடியை கத்தியை கொண்டு தலையில் […]
ஆப்கானிஸ்தான் படைக்கு ஆதரவாக அமெரிக்கா தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தும் என்று அந்நாட்டு ராணுவத்தின் கமாண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வரும் நிலையில் தலிபான்களின் தாக்குதல் கடந்த சில நாட்களாக அந்நாட்டில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க ராணுவத்தின் கமாண்டர்களில் ஒருவரான கென்னத் மெக்கன்சி ஆப்கானிஸ்தான் படைகளுக்கு உதவும் வகையில் அமெரிக்கா வான்வெளி தாக்குதலை தொடர்ந்து நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். […]
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வன்முறையாக வெடித்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் அந்நாட்டு அரசு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை அழிப்பதாக கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன்படி சுமார் ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேர் நேற்று முன்தினம் பிரான்ஸ் […]
சீனாவில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அதனை கட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 5 தொழிலாளர்களில் 2 பேர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் 3 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தெற்கு சீனாவில் குவாங்டாங் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாட்டத்திலுள்ள ஜூஹாய் என்னும் நகரத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் கட்டும் பணியில் சம்பவத்தன்று சுமார் 5 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு […]
மலேசிய நாட்டில் தேசிய அளவிலான ஊரடங்கு அமலில் இருந்து கூட தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10,000 த்திற்கும் அதிகமாகவுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி மலேசிய நாடும் தங்களுடைய நாட்டில் தேசிய அளவிலான ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. இருப்பினும் கடந்த 13 ஆம் தேதியிலிருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000 த்துக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே […]
இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் நாட்டின் பாதுகாப்பு படையினருக்கு தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டும் என்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஈராக் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். ஈராக் நாட்டில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இனி அமெரிக்கப் படையினரின் உதவி தேவையில்லை என்று அந்நாட்டின் பிரதமர் கூறியுள்ளார். இதற்கிடையே அமெரிக்காவுடன் ஈராக் அடுத்த வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. இவ்வாறான சூழலில் இந்த […]
பல வங்கிகளில் கடன் பெற்று செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் பணிக்கு சாதகமான பதில் வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் விஜய் மல்லையா. இவர் பல வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று விட்டார். இவரின் பெயரில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் தொகை உள்ளது. இதனால் (CBI) குற்றப்பிரிவு துறை மற்றும் அமலாக்கத்துறை விஜய் மல்லையா மீது […]
இங்கிலாந்து சுகாதார செயலாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்த தவறான கருத்தை பதிவிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து சுகாதார செயலாளர் கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிறகு அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் லேசான அறிகுறிகள் வந்தவுடனே அவர் செலுத்திக் கொண்ட கொரோனா தடுப்பூசி மிக அருமையாக செயல்பட்டு அதிலிருந்து தன்னை பூரணமாக குணமடைய செய்துவிட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுகாதார செயலாளர் பதிவிட்டுள்ளார். அதோடு […]
உலகிலுள்ள மிகப்பெரிய நாடுகளில் இந்தியா தான் இறக்குமதிக்கு அதிகமான வரியை வசூலிக்கும் நாடாக திகழ்கிறது என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்தியாவில் பெட்ரோல் விலையை போல் டீசல் விலையும் ரூபாய் 100 தொடவுள்ளது. இதனால் பொதுமக்கள் பைக், கார் போன்ற மோட்டார் வாகனங்களை விட்டுட்டு எலக்ட்ரானிக் வாகனங்களின் மீது ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்கள். இவ்வாறான சூழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் இந்திய நாட்டில் பிரபல எலக்ட்ரானிக் கார் நிறுவனமான டெஸ்லாவை […]
ஆளில்லா விமானங்களை ( ட்ரோன் ) ஜம்மு பகுதியில் பயன்படுத்தி வரும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. நேற்று செக்டார்களின் கமாண்டர்கள் அளவில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் எல்லை பாதுகாப்பு படைகள் இடையிலான கூட்டத்தில் எல்லையில் பயங்கரவாத நடவடிக்கைகள், பாகிஸ்தானின் ட்ரோன் பயன்பாடு, எல்லை நிர்வாகம் தொடர்பான இதர விவரங்கள், சுரங்கப்பாதைகள் அமைத்தல் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்திய அதிகாரிகள் பாகிஸ்தான் ஜம்மு பகுதியில் ட்ரோன்களை பயன்படுத்தி வருவது குறித்து கடும் கண்டனத்தை […]
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனில் ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து பேசியதால் பாகிஸ்தான் அரசு கடும் கண்டம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் நெடுங்காலமாக பிரதமர் பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப் . இவர் பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதால் பதவியை இழந்தார். இதனை அடுத்து இவர் 2019 ஆம் ஆண்டில் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்வதற்கு லாகூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்ததை […]
சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ள குடியரசு தலைவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கவுள்ளார் என்று சட்டப் பேரவையின் தலைவர் தெரிவித்துள்ளார். புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி சில முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதாவது ஆகஸ்ட் 2 ஆம் தேதி சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சி போன்றவை சட்டப்பேரவையில் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு விழாவிற்கு இந்திய […]
கெர்மடக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து நாட்டில் கெர்மடக் தீவானது அமைந்துள்ளது. இந்த தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் மையம் கொண்டிருந்துள்ளது. இதனை அடுத்து ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கமானது 5.8 ஆக பதிவாகியுள்ளது. இதனை புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்து எந்தவொரு தகவல்களும் […]
வெறும் 30 மில்லி செகண்டில் கனட நாட்டின் பெண்கள் ரிலே அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 4×100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலே போட்டி நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்ற ரிலே போட்டியில் கனட நாட்டின் பெண்கள் ரிலே அணி வெறும் 30 மில்லி செகண்டில் 3:32.78 என்னும் மணிக்கணக்கில் 2 ஆவது இடத்தை […]
சீனாவை டைபூன் இன் ஃபா புயலானது இன்று மாலை ஜெஜியாங் பகுதியில் தாக்கப்போவதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. சீனாவின் மத்திய பகுதியில் பெய்த கன மழையினால் ஹெனான் மாகாணம் பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் டைபூன் இன் ஃபா புயலானது கடலில் மையம் கொண்டுள்ளதால் ஜெஜியாங் பகுதியைத் இன்று மாலை தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் வேகம் மணிக்கு 155 முதல் 191 கிலோமீட்டரில் வீசக்கூடும். இதனால் கடலில் பெரும் பேரலைகள் மற்றும் கன […]
பிரீமியர் லீக் கால்பந்து போட்டியை காணவரும் ரசிகர்கள் தடுப்பூசி கடவுசீட்டு வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையை பிரித்தானியா அரசு செயல்படுத்தவுள்ளது. பிரித்தானிய நாட்டு மக்களை தடுப்பூசி போட வைப்பதற்காக அந்நாட்டு அரசானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் அந்நாட்டு இளைஞர்களை போடவைப்பதற்காக பல்வேறு முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவில் பிரீமியர் லீக் கால்பந்து விளையாட்டு வரும் அக்டோபர் மாதத்தில் ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்வுகளில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுவர் […]
அமேசான் நிறுவன தலைவருடன் ராக்கெட்டில் 7 நிமிடம் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட ஆலிவர் டேமன் என்பவர் இதுவரை அமேசான் நிறுவனத்திலிருந்து எந்த ஒரு பொருளையும் வாங்கியதில்லை என்று கூறியுள்ளார். உலகப் பணக்காரர்களில் ஒருவராகவும், அமேசான் நிறுவனத்தின் தலைவராகவும் ஜெப் பெசோஸ் என்பவர் திகழ்கிறார். இவர் கடந்த 20ஆம் தேதி நியூஸ் ஷெப்பர்ட் என்னும் ராக்கெட்டில் 7 நிமிடம் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார். இந்த ராக்கெட்டை அவருடைய புளு ஆர்ஜின் என்னும் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமேசான் […]
ஸ்விட்சர்லாந்திலுள்ள சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் Buochs என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள A2 என்னும் மிகவும் முக்கியமான சாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் காரில் சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள் காரில் திடீரென புகை வெளியேறியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உடனடியாக காரை விட்டு வெளியேறி சாலையின் ஓரத்தில் நின்றுள்ளார்கள். இதனையடுத்து புகை வெளியேறிய அந்தக் […]
சுகாதார பணியாளர்களுக்கென பாதுகாப்பில்லாத பிபிஇ என்னும் கிட்டை இங்கிலாந்து அரசாங்கம் சுமார் 2.1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பில் மக்களுடைய வரிப் பணத்தில் இருந்து வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க சுமார் 372 பில்லியன் பவுண்ட்டுகளை செலவழித்துள்ளது. இதில் ஒரு பாதியை அதாவது சுமார் 2.1 பில்லியன் பவுண்டுகளை சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக செலவழித்துள்ளது. ஆனால் இந்த பிபிஇ கிட் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பானது […]
முன்னாள் ஜனாதிபதி ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் வர்த்தக அமைச்சராக இருந்தவர் உட்பட 7 தலைவர்களின் மீது பொருளாதார தடையை விதித்த சீன அரசாங்கத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் கடந்தாண்டு சீன அரசாங்கம் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா ஹாங்காங்கிலுள்ள பல சீன அதிகாரிகளின் மீது பொருளாதாரம் ரீதியாக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதோடு மட்டுமின்றி அமெரிக்கா தன்னுடைய வணிக சமுதாயத்திற்கு ஒரு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. […]
சிறுமியை 17 வயது சிறுவன் போல நடித்து பேசி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த 23 வயதான இளைஞர் கிறிஸ்டியன் மைக்கேல் ஆவார். இவர் சமூக ஊடகம் ஒன்றில் 14 வயது சிறுமியுடன் 17 வயது சிறுவன் போல நடித்து பேசியுள்ளார். இதனையடுத்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி நட்பு பாராட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமியை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அதனால் மைக்கேலின் வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார். இதனை […]
கொரோனா இரண்டாவது அலையை கட்டுக்குள்கொண்டு வருவதற்கு ஆஸ்திரேலியா அரசு அளித்த கட்டுப்பாடுகளால் அந்நாட்டு மக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸானது கடந்த ஆண்டு சீனாவில் உகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸை பல்வேறு நாடுகள் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிக்கித் தவித்த நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் மட்டும் தீவிர நடவடிக்கைகள் மூலம் வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து முதல் அலையில் ஆஸ்திரேலியா அரசு […]
பெகாசஸ் மென்பொருள் மூலம் மக்கள் நிம்மதியாக இருப்பதாக NSO நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து தலைவர்களின் செல்போன் உரையாடல்கள் குறுந்தகவல்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பெகாசஸ் மென்பொருள் கண்காணிப்பதாக வெளியான தகவல்கள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொடங்கி பிரான்ஸ் அதிபர் மேக்ரன் வரை பலரும் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் பல தலைவர்களும் தங்களது செல்போன்களையும் அதன் எண்ணையும் மாற்றி வருகின்ற நிலையில் பெகாசஸ் மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேல் […]
ஹைதி அதிபரின் இறுதிசடங்கில் ஏற்பட்ட கலவரத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கரீபியன் தீவில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே கூலிப்படை ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் மனைவி படுகாயமடைந்தார். இதனை அடுத்துஅவர் அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் திரும்பியுள்ளார். இந்த நிலையில் ஜோவெனால் மாய்சே இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த இறுதிச்சடங்கில் அதிபரின் மனைவி மார்ட்டின் மோயிஸ் தனது மூன்று பிள்ளைகளுடன் கலந்து […]