இங்கிலாந்தில் 11 வயது சிறுவன் ஒருவன் ஸ்காட்லாந்தில் உள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள அலெக்சாண்டர் ஹாமில்டன் நினைவு பூங்காவில் கடந்த சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த அவசர சேவையாளர்கள் குழந்தையை குளத்திலிருந்து மீட்டுள்ளனர். ஆனால் அந்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் […]
Tag: உலகச் செய்திகள்
ஆப்கானிஸ்தானில் தற்போது ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களின் வன்முறையை கட்டுப்படுத்த சுமார் 31 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அந்நாட்டு அரசாங்கம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருக்கிறார்கள். இவர்களுடைய வன்முறை செயல்களை கட்டுக்குள் கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசாங்கம் இரவு நேர ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த இரவு நேர ஊரடங்கு ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள மொத்த மாவட்டங்களில் 31 மாவட்டங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. […]
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அமெரிக்க அதிபர் கிளிண்டன் நடந்து கொண்ட முறை குறித்து 24 வருடங்களுக்கு பிறகு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த 1997-ஆம் ஆண்டு பணிபுரிந்த பில் கிளிண்டன் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது என்னென்ன செய்தார் என்பது குறித்த தகவல் ஆவண காப்பகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது 24 வருடங்களுக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அந்நாட்டின் புதிய பிரதமராக டோனி […]
வங்காளதேசத்தில் மிக வேகமாக கொரோனா அதிகரிப்பதைத் தொடர்ந்து கடந்த முறையை காட்டிலும் மிகவும் கடுமையான கட்டுப்பாடுடன் கூடிய மொத்தமாக 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை சரிசெய்ய அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இதனை முன்னிட்டு வங்காள நாட்டு அரசாங்கம் இன்று […]
சீனாவில் பெய்துள்ள வரலாறு காணாத மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோடிகணக்கில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையானது 100o ஆண்டுகளுக்கு பின் வரலாறு காணாத அளவிற்கு பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த வெள்ளத்தில் சுமார் 75000 கோடி அளவுக்கு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கனமழையினால் சுரங்கப்பாதைகள், […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8ஆகப் பதிவாகியுள்ளது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன் நாட்டில் கலடாகன் பகுதி அமைந்துள்ளது. இந்த கலடாகன் பகுதிக்கு தென்மேற்கில் நேற்று இரவு 8.49 மணிக்கு மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 104.3 கிலோமீட்டர் மையம் கொண்டிருந்துள்ளது. மேலும் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த […]
மின்சார வாகனங்களை இந்தியாவில் சந்தைப்படுத்துதல் குறித்து யூடிப்பர் மதன் கௌரி கேட்டதற்கு டெஸ்லா நிறுவனத் தலைவர் பதிலளித்துள்ளார். உலகின் கார் தொழில் நுட்ப முன்னணி நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா நிறுவனம் திகழ்ந்துவருகிறது. இந்த நிறுவனத்தில் எரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனமானது தங்களின் வாகனங்களை பல்வேறு நாடுகளில் சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் தற்போது மின்சார வாகனங்களை பற்றிய புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து பிரபல யூடிப்பர் […]
பாகிஸ்தானில் தனது மனைவி மற்றொருவருடன் தகாத முறையில் உறவு வைத்திருப்பதாக சந்தேகமடைந்த கணவர் அவருடைய கூட்டாளிகளுடன் ஒன்றாக சேர்ந்து கள்ளக்காதலனாக நினைத்தவரின் காது மற்றும் மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் அப்துல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவிக்கு முகமது என்பவருடன் தகாத முறையில் உறவு இருப்பதாக சந்தேகமடைந்துள்ளார். இந்நிலையில் அப்துல் தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்று வீட்டிற்குள் நுழைய இருந்த முகமதை தனியாக அழைத்து சென்றுள்ளார்கள். அதன்பின் அப்துல் மற்றும் அவருடைய […]
ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 50 பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் போடப்பட்ட ஊரடங்கு 4 வாரங்களாக தொடர்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள சிட்னி […]
பிரான்ஸ் அரசாங்கம் அடுத்த வாரம் அமலுக்கு வரவுள்ள கொரோனா குறித்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நூற்றுக்கும் மேலான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகராக பாரிஸ் நகரம் திகழ்கிறது. இதனையடுத்து உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் பல கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அதன்படி பிரான்ஸ் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் கொரோனா குறித்த புதுவித சான்றிதழ் […]
சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்தாதவர்களை போடவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து சென்ற வாரம் 3033 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வாரம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4692 ஆகும். இது சென்ற வாரத்தை விட இந்த வாரம் 55% அதிகமாகும். இந்த கொரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 97% பேர் டெல்டா வகை வைரஸால் […]
பிரித்தானியா இளவரசர் அவரின் வாழ்க்கை தொடர்பான முழு தகவல்கள் அடங்கிய புத்தகத்தை 4 பிரிவாக வெளியிடவுள்ளார். பிரித்தானிய நாட்டு மகாராணியின் பேரனும் இளவரசருமான ஹரி அவரது வாழ்க்கை தொடர்பான முழு தகவல்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த சம்பவத்திற்காக முதன்மை நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயல்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புத்தகம் நான்கு பாகங்களாக அமையும். அதில் முதல் புத்தகம் அடுத்த ஆண்டும், 2வது புத்தகம் எலிசபெத் ராணியின் மறைவுக்குப் பின்னரும் வெளியாகும். இதனை […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்துக்கும் தாலிபான்களுக்கும் இடையில் நடைபெற்ற தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு ராணுவத்திற்கும் அவர்களுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம் இரண்டு பகுதிகளில் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் ஒரு பகுதியில் 30 தாலிபான்கள் உயிரிழந்ததாகவும் 17 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு இடமான வடக்கு ஜாவ்சான் பகுதியில் உள்ள […]
மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு விசா தொடர்பான விண்ணப்பங்களை 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பிரான்ஸ் அரசு வழங்க தொடங்கியுள்ளது. பிரான்ஸ் அரசாங்கம் கொரோனா காரணமாக விசா தொடர்பான விண்ணப்பங்கள் அளித்தலை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது. இந்த விண்ணப்பங்கள் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்ட நிலையில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தவித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் அந்நாட்டு அரசானது விசா தொடர்பான விண்ணப்பங்களை வழங்க தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் […]
கனடாவிலிருந்து எப்போது நற்செய்தி வரும் என்று பல குடும்பங்களும் நகையை விற்று வேலையை விட்டு காத்து கொண்டிருக்கின்றன. பெங்களூருவைச் சேர்ந்த Aashray kovi (28) என்பவர் கனேடிய புலம்பெயர்தல் அதிகாரிகளிடமிருந்து நற்செய்தி வராதா என்று மின்னஞ்சல்களை நாளொன்றுக்கு பல முறை சோதித்துக் கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளார் . மேலும் Aashray கனடாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அவருடைய confirmation of permanent residency ( COPR ) ஆவணமானது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு முன்னதாகவே காலாவதியாகி விட்ட காரணத்தினால் […]
உலக பணக்கார நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவிற்கு மிக எளிதில் கிடைக்கும் கொரோனா தடுப்பூசியை வினியோகம் செய்வதில் அந்நாடு ஆர்வம் காட்டாததால் தற்போது சில முக்கிய இடங்களில் தொற்று வேகமாக பரவியதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் பொதுமக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கோரியுள்ளார். உலக பணக்கார நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக ஸ்காட் மோரிசன் இருந்து வருகிறார். இதனையடுத்து ஆத்திரேலியா பணக்கார நாடு என்பதால் கொரோனா குறித்த தடுப்பூசி மிக எளிதில் கிடைத்துள்ளது. இருப்பினும் அதனை வினியோகம் செய்வதில் அந்நாட்டு […]
இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத்திற்கு வருகை புரிந்த சீன அதிபருக்கு பொது மக்கள் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள். சீனாவின் அதிபராக ஜின்பிங் இருந்து வருகிறார். இவர் இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத் என்ற பகுதிக்கு முழுமையான அறிவிப்பின்றி வருகை புரிந்துள்ளார். இருப்பினும் இவர் திபெத்திலுள்ள விமான நிலையத்திற்கு வந்தவுடன் திபெத் மக்கள் சீன அதிபருக்கு பாரம்பரிய உடையணிந்து கொண்டு மிகவும் அமோகமான வரவேற்பை கொடுத்துள்ளார்கள். இதனையடுத்து சீன அரசாங்கம் பிரம்மபுத்திரா நதியில் […]
இங்கிலாந்தில் 2 ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட 200 கிலோ கிராம் எடையுள்ள வெடிகுண்டு ஒன்று கட்டிட பணிக்காக பள்ளம் தோண்டும் போது கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கூகுள் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த நகரில் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அந்தப் பள்ளத்தில் 2 ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சுமார் 200 கிலோ கிராம் எடையுடைய வெடிகுண்டு ஒன்று சிக்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கட்டுமான பணியாளர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் […]
பிரித்தானியாவில் 11 வயது சிறுமி ஒருவர் நள்ளிரவில் மாயமானது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Bolton என்ற பகுதியில் வசித்து வரும் மிஸ்ரா மற்றும் அஷீமா என்பவர்களுடைய 11 வயது மகளான பாத்துமா காதிர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 10.45 மணி அளவில் காணாமல் போனதாக அந்த சிறுமியுடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பால்டனிலிருந்து கிரேட்டர் மான்செஸ்டருக்கு ரயிலில் சென்ற பாத்துமா மற்றொரு […]
இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசியை பிரேசில் நாட்டில் பரிசோதனை செய்வதற்கான அனுமதியை அந்நாடு தடை செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய நாட்டில் கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் கோவேக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் பிரேசிலுடன் கோவேக்சின் தடுப்பூசி தொடர்பான ஒப்பந்தத்தை போட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இவ்வாறான சூழலில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசி குறித்து பிரேசிலுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து […]
பிரான்சிலுள்ள மருத்துவமனை ஒன்று தங்கள் நிர்வாகத்தில் பணிபுரியும் ஊழியர்களை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு கட்டாயப்படுத்தியதால் அவர்கள் மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பிரான்சில் Montelimar என்னும் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் மருத்துவமனை நிர்வாகம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமின்றி தடுப்பூசியை செலுத்தி கொள்ளாவிடில் வேலையை விட்டு சென்று விட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் […]
ஜெர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரத்தை சுத்தம் செய்வது போல் நடித்த பெண் நிருபர் அதற்காக மன்னிப்பு கேட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். ஜெர்மனியில் RTL தொலைக்காட்சியில் பணிபுரிந்தவரும், Good Morning Germany, Good Evening RTL உள்ளிட்ட பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவருமான Susanna Ohlen (39) நிகழ்ச்சி ஒன்றை தொகுப்பதற்காக Bad Munstereifel என்ற நகரத்துக்கு தனது செய்தி குழுவுடன் சென்றுள்ளார். அங்கு RTL தொலைக்காட்சியில் ஒலி பரப்புவதற்காக ‘பெருவெள்ளத்துக்குப் பின் […]
இதுவரை அமெரிக்காவில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் விவரமானது வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனால் தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க தனியார் நிறுவனங்கள் தயாரித்த பைசர், பயோடெக், ஜான்சன்&ஜான்சன், மாடர்னா தடுப்பூசிகளை மக்கள் செலுத்தி வருகின்றனர். இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 34,03,63,922 தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த […]
இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் தனியார் நிறுவனத்துடன் பிரேசில் செய்த ஒப்பந்தமானது ரத்தாகியுள்ளது. இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவக்சின் தடுப்பூசிகளை வாங்குவதற்கு பிரேசில் நாடானது அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளது. இதில் முதல் தவணையாக 4 லட்சம் கோவக்சின் தடுப்பூசிகளை பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனம் மூலமாக பிரேசில் நாட்டுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியின் விலையானது பைசர் தடுப்பூசியைவிட அதிகமாக உள்ளது. மேலும் கொரோனாவில் அதிகமானோர் உயிரிழந்ததற்கு தடுப்பூசி விவகாரத்தில் […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று மாலை கோலாகலமாக தொடங்கிய ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் கலந்து கொண்டுள்ளார். உலக அளவில் பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020 ல் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளானது இந்த ஆண்டு நேற்று மாலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. இதில் மற்ற நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டியானது உலக அளவில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இதனால் நேற்று மாலை டோக்கியோவில் கலைநிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக […]
இத்தாலியில் வணிக வளாகத்திற்குள் செல்ல வேண்டுமெனில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா குறித்த சான்றிதழை காட்ட வேண்டும் என்ற புதிய விதி ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் வணிக வளாகங்களுக்குள் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் செல்ல வேண்டுமெனில் கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டதற்கான சான்றிதழையோ அல்லது தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவையோ காட்ட வேண்டும் என்ற புதிய விதி ஆகஸ்ட் […]
எந்த விலங்கினத்தில் உள்ள ஆண்டிபாடி நோய் எதிர்ப்பு பொருள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் ? என்ற ஆய்வினை துபாய் மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகம் மேற்கொண்டு வருகிறது. துபாய் மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்தின் சார்பில் கொரோனா வைரஸை விலங்குகளின் ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு பொருள் எதிர்த்துப் போராடுமா ? என்ற ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மான், சிங்கம், ஒட்டகம், புலி, பூனை, குதிரை, ஆடு, நாய் உள்ளிட்ட 18 வகையான […]
ஐரோப்பிய மருந்து நிறுவனம் அமெரிக்க நாட்டின் கொரோனா குறித்த மாடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைவருக்கும் தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா குறித்த பெரும்பாலான தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் 12 வயதிற்கு மேலான குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாடு கொரோனாவிற்கு எதிராக செலுத்தப்படும் […]
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அடுத்த வாரம் இந்திய நாட்டின் பிரதமர் மற்றும் வெளியுறவு துறை மந்திரியை சந்தித்து பேசவுள்ளார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் டோனி பிளிங்கன் என்பவர் வெளியுறவுத்துறை மந்திரி பொறுப்பை வகிக்கிறார். இந்நிலையில் இவர் வருகின்ற 28 ஆம் தேதி முதல்முறையாக இந்தியாவிற்கு பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்பின் இவர் இந்திய நாட்டின் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து பேசுவதற்கு திட்டம் தீட்டியுள்ளார். இந்த சந்திப்பில் அமெரிக்க […]
சமூக வலைதளமான யூ டியூப் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ பேசிய கொரோனா பற்றிய தவறான தகவல் குறித்த வீடியோவை நீக்கியுள்ளது. சமூக வலைதள நிறுவனங்கள் கொரோனா குறித்த தவறான தகவல்கள் அதிகாரபூர்வமற்ற அறிவியலுக்கு புறம்பானவையாக இருக்கும் பட்சத்தில் அவை குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆதாரமற்ற தவறான தகவல்கள் அடையாளம் காணப்பட்டு அவை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ ஹைட்ரோ குளோரோகுயின் மருந்தானது […]
இந்தியாவின் இலக்கான 450 ஜிகாவாட் அளவில் மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதற்கான நோக்கத்தை அடையும் வகையில் கொடிய கொரோனா காலத்திலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் தீவிரமாக செயல்படுவது பாராட்டுக்குரியது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதற்கிடையே கார்பனை அதிகளவில் பயன்படுத்தும் எரிசக்திகளுக்கு பதிலாக மாற்று எரிசக்திகளுக்கு உலக நாடுகள் அனைத்தும் மாறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பிரதமரான மோடி தலைமையிலான அரசாங்கம் சூரிய […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களின் மீது அமெரிக்கா விமானப் படையின் மூலம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறிவிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் மீண்டும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளார்கள். அதாவது தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் பல மாவட்டங்களையும், பக்கத்து நாடுகளின் முக்கிய எல்லைப் பகுதிகளையும் கைப்பற்றியுள்ளார்கள். இவர்களை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் […]
மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டிலுள்ள மிகவும் மோசமான சிறையிலிருக்கும் கைதிகள் சுமார் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான கருத்தை தெரிவிப்பதற்கு சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. மியான்மர் நாட்டில் நடந்துவரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக பலரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே மியான்மரிலுள்ள யாங்கூன் நகரிலிருக்கும் இன்சைன் என்னும் சிறை மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் இன்சைன் சிறையிலுள்ள கைதிகள் மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு […]
லண்டனிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து வந்து அங்கிருப்பவர்களை தாக்குதல் நடத்தியது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை கைது செய்துள்ளார்கள். இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் Asda Clapham junction என்னும் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டினுள் மர்ம நபர் ஒருவர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து கொண்டு நுழைந்துள்ளார். அவ்வாறு நுழைந்த அந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்த பொது மக்களையும், சூப்பர் மார்க்கெட் ஊழியர்களையும் […]
தன்னுடைய 4 மாத குழந்தையை மீட்புப் பணியாளர்களிடம் தூக்கி வீசி காப்பாற்றிய பின் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவில் கடந்த 1,000 வருஷத்தில் இல்லாத அளவில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டத்திலிருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் படுகாயமடைந்துள்ளார்கள். […]
ஆப்கானிஸ்தான் நாட்டினை தாலிபான்களின் கட்டுப்பாட்டில் முழுவதுமாக கொண்டுவரப் போவதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க நேசோட்டு படைகள் வெளியேறுகின்றனர். மேலும் அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து படைகளும் வெளியேறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தாலிபான்கள் நாட்டை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள 400 மாவட்டங்களில் 200 தாலிபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், ஈரான், கஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற […]
மத்திய சீனாவில் பெய்த கனமழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டத்தில் மிகவும் கடுமையான கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை கடந்த 1000 வருஷத்தில் இல்லாத வகையில் ஒரே நாளில் பெய்துள்ளது. இவ்வாறு பெய்த கனமழையால் ஹெனான் மாவட்டத்திலுள்ள பல்வேறு நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பெருவெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி இதில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளார்கள். […]
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதமராக இருந்த ஜேக்கப் ஜுமா என்பவரின் மீது பலவிதமான ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பான பல விதமான ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால் ஜூமா நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையின் காரணமாக ஜூமா கடந்த 7ஆம் தேதி […]
கொரோனா தொடர்பான அரசு சான்றிதழுக்கு பதிலாக போலியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுவிட்சர்லாந்து குற்றவியல் சட்டப் பிரிவின்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். சுவிட்சர்லாந்து நாட்டில் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமென்றால் கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கும், தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கும், தொற்று பாதிப்பில்லை என்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் அந்நாட்டு அரசாங்கம் கொரோனா குறித்த சான்றிதழ் ஒன்றை வழங்குகிறது. ஆனால் பொதுமக்கள் கொரோனா குறித்த […]
இந்திய நிதி அமைச்சகத்தின் இணைச் செயலர் உட்பட 25 பேர் ஐ.நாவின் சிறப்பு வரி குழுவில் இடம் பெற்றுள்ளார்கள். 2021-2025 ஆம் ஆண்டிற்கான ஐ.நா வின் வரி குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சிறப்பு வாய்ந்த குழுவில் இந்திய நிதி அமைச்சகத்தின் இணை செயலாளர் உட்பட உலகம் முழுவதிலுமுள்ள வரித்துறையின் மிகவும் சிறப்பு வாய்ந்த நபர்கள் 25 பேர் இடம் பெற்றுள்ளார்கள். இந்த ஐ.நாவின் சிறப்பு வரி குழுவிற்கு நியமனம் செய்யப்பட்டிருப்பவர்கள் வரி தொடர்பான விஷயத்தில் […]
சீனாவில் பச்சிளம் குழந்தை ஒன்று 24 மணி நேரத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இதுவரை 33 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் Henan மகாணத்திலிருந்து வேறு இடத்திற்கு பாதுகாப்பு கருதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். Henan மகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த நிலையில் Xingyang என்ற நகரில் பச்சிளம் குழந்தை ஒன்று கட்டிட […]
ஆசிய கடலுக்கு 2 போர்க்கப்பல்களை அனுப்பிய பிரித்தானியாவின் செயலுக்கு சீனா வன்மையாக எச்சரித்துள்ளது. பிரித்தானியா நாட்டின் பாதுகாப்பு செயலாளர் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அதில் இந்த வார தொடக்கத்தில் 2 போர்க்கப்பல்களை நிரந்தரமாக ஆசிய கடலுக்கு அளிக்கும் திட்டமாகும். இந்தத் திட்டமானது ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் அமெரிக்காவுடனான செயல்பாடுகளை ஆதரிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்காக பிரித்தானியாவை சீனா கடுமையாக எச்சரித்துள்ளது. அதில் “சீனாவைச் சுற்றியுள்ள கடலின் சர்வதேச சட்டத்தின் படி கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து சுதந்திரத்தை […]
சவூதியின் இளவரசர் மசூதிகளின் பாதுகாப்பு பணிகளுக்கு முதன்முறையாக ராணுவபடையில் உள்ள பெண்களை நியமனம் செய்துள்ளார். சவூதியின் இளவரசர் முகமது பின் சல்மான் ஆவார். இவர் சவூதியிலுள்ள பெண்களுக்கு என பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார். அதில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் பாதுகாவலர் இன்றி பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் அதிக கட்டுப்பாடு வழங்குதல், பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை, ராணுவத்தில் பெண்கள் சேர்ப்பு என பலவற்றை அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதன் முறையாக இராணுவ […]
இங்கிலாந்து அரசு வெளியிட்ட பட்டியலிலுள்ள துறைகளை சேர்ந்தவர்களில் 2 டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றிருப்பவர்களுக்கு மட்டும் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் 16 துறைகளையுடைய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளில் பணியாற்றுபவர்கள் தொற்று பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்கள். இதனால் இந்த 16 துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 16 துறைகளை சேர்ந்த தொழிலாளர்களில் […]
சீனாவில் பணிபுரிந்து வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நபரொருவர் மரணமடைந்தது தொடர்பான விசாரணையில் அதிரவைக்கும் உண்மை ஒன்று வெளிவந்துள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த conner reed என்பவர் சீனாவிலுள்ள வுஹானில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் திடீரென conner அவருடைய அறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இவருடைய மரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வந்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது conner […]
உணவகத்திற்கு வெளியே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உணவகம் ஒன்றில் மக்கள் உணவருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது உணவகத்திற்கு வெளியே மர்ம நபர் ஒருவரால் இருபது முறைக்கும் மேலாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவருந்திக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியில் தலைதெறிக்க ஓடியுள்ளனர். மேலும் அங்கிருந்த இருவர் படுகாயமடைந்ததை அடுத்து அவசர மருத்துவ உதவி குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் துப்பாக்கி […]
மத்திய சீனாவில் கடந்த சில தினங்களாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் கனமழை பெய்துள்ளது. மத்திய சீனாவில் கடந்த சில தினங்களாகவே கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் கடுமையான கனமழை பெய்துள்ளது. இவ்வாறு பெய்த கன மழையால் சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் கடுமையான பீதியிலுள்ளார்கள். மேலும் மத்திய சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போது […]
ஒருவாரகாலமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கரடியிடம் சிக்கிய நபரை அமெரிக்கா கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கோடியாக் என்ற பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதி வழியாக அமெரிக்கா கடலோர காவல் படையினர் குழு Kotzebue-விலிருந்து Nome-க்கு ஹெலிகாப்டர் மூலமாக சென்றுள்ளனர். அப்போது ஒரு குடிலின் மேல் SOS என்ற அவசர உதவி குறிப்பை கண்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஒருவர் குடிலின் மேல் ஏறி இருகைகளையும் அசைத்து தன்னை காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அமெரிக்கா […]
இந்தியாவை போன்று சீனா தனது எல்லைப்பகுதியை பாதுகாப்பதற்கு திபெத்திய இளைஞர்களை பணியமர்த்த இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே 1962ல் போரானது நடைபெற்றது. இந்தப் போருக்குப் பின் மத்திய கேபினட் செயலாக்கமானது சிறப்பு முன்னணி படை என்ற ஒரு அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பில் இந்தியாவில் இருக்கும் பாரம்பரிய திபெத்தியர்கள், தலாய்லாமாவின் தலைமையிலுள்ள மாணவர்கள் இடம்பெற்றுவுள்ளனர். இவர்களுக்கு அமெரிக்க கண்காணிப்புத்துறையும், இந்திய ராணுவமும் பயிற்சி அளித்துள்ளனர். இந்த படையில் உள்ளவர்கள் மலைப்பிரதேச […]
அமீரகத்தில் “கிளவுட் சீடிங்” முறை மூலம் மழைப்பொழிவு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. “கிளவுட் சீடிங்” எனப்படுவது விமானம் மூலம் வானிற்கு கொண்டு செல்லப்படும் ரசாயன உப்புகளை தாழ்வாக இருக்கும் மேகங்களில் தூவுவது ஆகும். இதனால் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது. இதற்காக பீச் கிராப்ட் கிங் ஏர் சி-90 என்ற விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கடந்த 2019-ஆம் ஆண்டில் மொத்தம் 247 முறை கிளவுட் சீடிங் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் […]