கொரோனா பரிசோதனைக்கான இலவச சோதனை கருவிகள் வாங்கும் இணையதளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்படவில்லை என பிரித்தானியா நாட்டு மக்கள் கூறியுள்ளனர். பிரித்தானிய நாட்டில் கடந்த சில மாதங்களாகவே விதிக்கப்பட்டிருந்த கொரானா விதிமுறைகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. இதனை அடுத்து பிரித்தானியா நாட்டு மக்கள்கொரோனா பரிசோதனைக்காக அரசாங்க வலைதளத்தில் ‘at-home kits’ என்ற இலவச சோதனை கருவிகளை வாங்க முயற்சித்துள்ளனர். அப்போது அதில் “இணையதளம் மூலமாகவோ அல்லது சேவை மையத்தின் மூலமாகவோ இன்று சோதனைக் கருவிகளை வாங்க முடியாது […]
Tag: உலகச் செய்திகள்
சீனாவின் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து வந்த மருத்துவர் ஒருவர் குரங்கு “பிவி” தொற்றால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிலுள்ள விலங்குகள் ஆராய்ச்சி நிலையத்தில் மருத்துவர் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மார்ச் மாதத்தில் உயிரிழந்த 2 குரங்குகளை ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து இவருக்கு வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் விலங்குகள் ஆராய்ச்சி நிலைய மருத்துவர் திடீரென கடந்த மே மாதம் 27-ம் தேதியன்று உயிரிழந்துள்ளார். இவருடைய […]
ஜப்பான் நாட்டின் தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள நொடிக்கு 319 டெராபைட் வேகத்தில் இயங்கக்கூடிய இன்டர்நெட் டெக்னாலஜிக்கு தற்போது நெட்டிசன்களின் கவனம் சென்றுள்ளது. லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே ஒரு நொடிக்கு 178 டெராபைட் வேகத்தில் இன்டர்நெட்டை இயக்கி சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். இந்நிலையில் தற்போது ஜப்பான் நாட்டின் தேசிய தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் சாதனையை முறியடித்துள்ளார்கள். அதாவது ஜப்பான் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு நொடிக்கு 319 […]
ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் பாகிஸ்தானில் மர்ம கும்பலால் கடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தூதர் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளை ஆப்கானிஸ்தான் திரும்பி அழைக்கவுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரான நஜிப் அலிகேலின் மகள் 27 வயதான சில்சிலா அலிகேல் ஆவார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் மர்ம கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கடத்திய கும்பலிடம் இருந்து துன்புறுத்தப்பட்ட நிலையில் சில மணி நேரங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தினால் […]
காஷ்மீர் பகுதியில் லக்க்ஷர் ஏ தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான அபு அக்ரம் காவல்துறை பாதுகாப்பு படையினர்களால் கொல்லப்பட்டார். காஷ்மீரின் தெற்கே உள்ள பகுதியில் லக்க்ஷர் ஏ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக காவல்துறை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து காவலர்கள் நேற்று இரவு நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் சாதிக் கான் பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்பு அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தாக்குதல் […]
OPEC மற்றும் அதன் கூட்டு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே டீசல் மற்றும் பெட்ரோலின் விலை 100ஐ எட்டியுள்ளது. இதனால் சரக்கு வாகன கட்டணங்கள் உயர்ந்து காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேறியுள்ளது. இந்த எரிபொருட்கள் விலை […]
சுவிட்சர்லாந்து நாட்டில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வருங்காலங்களில் பலவித இன்னல்களை சந்திக்க நேரிடும் என அந்த நாட்டு அரசு கூறியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அந்நாட்டு அரசானது சலுகைகளை வழங்கி வருகிறது. இதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டித்தும் வருகிறது. இதனை அடுத்து சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி செலுத்தியர்களின் எண்ணிக்கையை விட கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் லிபரல் கட்சியின் தலைவரான Jürg Grossen கூறியதில் “மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க விரும்பினால் […]
இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியா நாட்டில் கோரண்டலோ என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 160.32 மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கைகள் ஏதும் […]
ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரித்தானியர்களுக்கு அவர்களை சொந்த நாட்டுக்குள் அனுமதிக்கும் போது தனிமைப்படுத்த கூடாது என்று பலரும் இணையத்தில் உருவாக்கப்பட்ட புகாரில் கையெழுத்திட்டுள்ளனர். ஜூலை 19-ஆம் தேதி முதல் ஆம்பர் பட்டியலில் உள்ள நாடுகளில் பிரித்தானியாவில் முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரித்தானியர்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என்று பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் Grant Shapps கூறியிருந்தார். அதேசமயம் பிரித்தானிய அரசு வழங்கும் தடுப்பூசியை போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே தனிமைபடுத்துதல் அவசியமில்லை என்றும், ஜெர்மனியில் தடுப்பூசி […]
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு சவுதி அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து வரும் ஹாஜிகளுக்கு புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை. மெக்காவில் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள ஏராளமான இஸ்லாமியர்கள் குவிந்துள்ளார்கள். இதற்கிடையே சவுதி அரசாங்கம் அந்நாட்டில் வாழும் 60,000 பேருக்கு மட்டுமே புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து வரும் ஹாஜிகளுக்கு புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள சவுதி அரசாங்கம் அனுமதி […]
சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட சில அலுவலகங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியில் பணிபுரியும் 39 வயது பெண் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் தான் பணியாற்றும் இடத்தில் தனக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் மதிய உணவின் போது அனைவருடனும் அமர்ந்து சாப்பிட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், வேலை பார்க்கும் போது முழு நேரமும் FFP2 மாஸ்க் அணிந்தே வேலை பார்க்க வேண்டும் என்று நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். […]
பிக் பிரதமர் என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியா சென்ற பிரிட்டன் செய்தியாளர் கொரோனா குறித்த விதிமுறைகளை மீறியதால் அவர் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் அனைவரும் கொரோனா குறித்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு விடுதியில் 2 வாரங்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி மாஸ்க் அணிந்த 30 வினாடிகளுக்குப் பின்புதான் தனக்கான உணவை மற்றவர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அந்நாட்டில் உள்ளது. […]
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள 20 க்கும் மேலான மாவட்டங்களில் பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்குமிடையே பயங்கர மோதல் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனால் பாதுகாப்பு படையினர் தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும், ராணுவத்தினரும் கொல்லப்படுகிறார்கள். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக பாதுகாப்பு படையினர்கள் தலிபான்களின் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 950 க்கும் மேலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வாறான சூழலில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு படைகளின் […]
பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து மற்றும் லாரி எதிரெதிரே மோதிக்கொண்டதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கானில் என்னும் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது இந்த பயணிகள் பேருந்திற்கு எதிராக அதே நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் திடீரென பயணிகள் பேருந்தும் எதிரே வந்த லாரியும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் 30 பேர் […]
நேபாள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போது நியமிக்கப்பட்ட பிரதமர் வெற்றி பெற்றுள்ளார். நேபாளத்தை ஆண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரதமர் கே.பி சர்மா உட்கட்சியின் மூலம் எழுந்த சதியால் பதவியை இழந்துள்ளார். இதனையடுத்து பதவியை இழந்த கே.பி சர்மா மீண்டும் பிரதமர் பதவிக்கான தேர்தலை அறிவிக்கும்படி அதிபர் பித்யாதேவி பண்டாரியிடம் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி அதிபர் பித்யா தேவியும் நாடாளுமன்ற சபையை கலைத்து மீண்டும் பிரதமர் தேர்தல் நடைபெறுவதற்கான புதிய தேதிகளை […]
அமெரிக்காவில் 13 வயது சிறுவன் ஒருவனை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள Baton Rouge எனும் பகுதியை சேர்ந்த Alvah Davis ( 46 ) என்பவர் தனது 13 வயது மகனை இரண்டு மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுவனின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சிறுவனின் தாயார் தான் வீட்டில் இல்லாதபோது இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே Davis குறித்து நீதிமன்றத்தில் […]
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எல்லை தாண்டி வந்து உதவுவதாக ஆப்கானிஸ்தான் உளவுத்துறை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானின் முதல் துணை அதிபர் அம்ருல்லா சலே தலீபான் பயங்கரவாதிகள் அந்நாட்டின் அரசுக்கு எதிராக ஈடுபட்டு வரும் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் உளவுத்துறை அந்நாட்டை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மற்றும் ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து தலீபான்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது. மேலும் […]
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈரான் இழுபறி செய்வதாக அமெரிக்கா கூறுகிறது. ஈரான் நாடுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018 ல் வெளியேறியது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தமானது மறைமுகமாக இரு நாடுகளுக்கு இடையில் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் நடைபெற்றது. இதில் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் கைதிகளைப் பரிமாற்றம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் ஈரானில் அதிபர் தேர்தல் ஆனது நடைபெறவுள்ளது என்பதால் இந்த […]
பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் அந்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஊரடங்கு கட்டுபாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். பிரான்சில் பீட்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே பிரான்சிலிருந்து வருபவர்களுக்கு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிரான்சில் கொரோனோ தடுப்பு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார். […]
பெட்ரோல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விழுந்ததில் 13 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் கிசுமு-புசுயி என்ற நெடுஞ்சாலை ஒன்று கென்யாவில் உள்ளது. அந்த சாலையில் டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையில் எதிரே வந்த பால் வண்டியின் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியின் ஓட்டுநர் ஸ்டியரிங்கை திருப்பியுள்ளார். இதனால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அதிலிருந்த பெட்ரோல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. […]
spanish தீவுகளில் இருந்து வரும் பயணிகள் 10 நாட்களுக்கு தங்களை தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. உலகின் அதிசயமான spanish தீவுகள் இன்று காலை 4 மணி வரை மட்டுமே பச்சை நிற நாடுகளின் பட்டியலில் இருந்துள்ளது. இதன் பின்னர் Amber நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த Amber நாடுகளின் பட்டியல்களில் சேர்க்கப்பட்டதனால் spanish தீவுகளில் இருந்து வரும் பயணிகள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். […]
அமெரிக்காவில் அடுத்தடுத்து அரங்கேறும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகமாக நடந்தேறி வருகின்றன. இந்த நிலையில் நேற்று போர்ட்லேண்ட் நகரில் இரண்டு பேர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் விளையாட்டு அரங்கத்தின் அருகில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நாலு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவங்களினால் […]
பிரான்ஸ் அரசு “கோவிஷீல்ட்” கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தங்களது நாட்டுக்குள் பயண அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெற்ற இந்திய சீரம் நிறுவனத்தின் “கோவிஷீல்ட்” தடுப்பூசி பல நாடுகளிலும் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியானது ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுவோர் போட்டுக் கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பூசியின் பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. அதேசமயம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே […]
ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள அறிவியலாளர்கள் சிலந்தியின் விஷயத்தில் காணப்படும் மூலக்கூறிலிருந்து மாரடைப்பைத் தடுப்பதற்கான மாற்று மருந்தை உருவாக்கி அதனை பரிசோதனை செய்து வருகிறார்கள். பிரேசர் தீவிலுள்ள ஒரு வகையான சிலந்தியின் விஷயத்தில் ஹை 1ஏ என்னும் புரத மூலக்கூறு அமைந்துள்ளது. இந்த புரதத்திலிருந்து மாரடைப்பை தடுப்பதற்கான மாற்று மருந்தை ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக அறிவியலாளர்கள் உருவாக்கி அதனை பரிசோதனை செய்து வருகிறார்கள். இந்த சிலந்தியின் விஷத்திலுள்ள ஹை1ஏ என்னும் புரத மூலக்கூறு மாரடைப்பால் ஏற்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய […]
பெருங்கடலில் உள்ள கழிவுகளை நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி குப்பைகளை அகற்றும் திட்டமானது வருகிற ஜூலை 27 தேதி தொடங்க உள்ளதாக தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. உலகில் ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் பெருங்கடல்களில் சுமார் 20 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் குப்பையை தூய்மைப்படுத்தும் விகிதத்தைவிட குப்பைகள் குவிக்கப்படும் அளவு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனை அடுத்து 2013 ஆண்டிலிருந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று கழிவு மற்றும் […]
16 ஆண்டுகள் பணி செய்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ததற்காக பன்னாட்டு நிறுவனம் அவருக்கு 125 மில்லியன் டாலர்களை அளிக்கவேண்டும் என அமெரிக்கா நீதிமன்றம் கூறியுள்ளது. அமெரிக்காவில் மார்லோ ஸ்பேத் என்ற பெண் வால்மார்ட் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் 16 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் டவுன் சிண்ட்ரோம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வால்மார்ட் நிறுவனமானது அவரது பணியில் நேர மாற்றம் செய்துள்ளது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஜப்பானுக்கு சென்ற உகாண்டா பளுதூக்கும் வீரர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உகாண்டாவில் 20 வயதாகும் பளு தூக்கும் வீரரான ஜூலியஸ் செகிடோலெக்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜப்பான் நாட்டில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். இதற்கிடையே உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா குறித்த பரிசோதனை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு செய்யப்படுகிறது. அதன்படி வீரர்கள் […]
சந்திரன் பூமியை சுற்றும் பாதையில் ஏற்படும் மாற்றத்தால் வருகின்ற 2030ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருக்கும் கடலோர நகரங்கள் மிகவும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெருங்கடல்களில் கடந்த 2019 ஆம் ஆண்டில் சுமார் 600க்கும் மேலான பெரிய அலைகள் உருவாகியுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவின் கடற்கரையில் அமைந்துள்ள கடல் பகுதிகள் குறித்து அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா ஆய்வு செய்துள்ளது. இந்நிலையில் தற்போது இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள செய்து […]
பாகிஸ்தான் அரசாங்கம், பாரிஸ் நாட்டைச்சேர்ந்த பயங்கரவாத தடுப்பு அமைப்பின் பட்டியலில் இருந்து விலகும் நோக்கில் தங்கள் நாட்டில் சட்ட மசோதா ஒன்றை இயற்றியுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கம் ஏற்கனவே கடன் சுமையில் சிக்கித் தவித்து வரும் நிலையில் பாரிஸ் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பு பாகிஸ்தான் நாட்டை கிரே பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசாங்கம் உலக வங்கி உட்பட பெரிய இடங்களிலிருந்து நிதி உதவிகளை பெற முடியாது. இந்த பட்டியலில் இருந்து வெளியேற பயங்கரவாத […]
NHS என்னும் கொரோனா செயலி மூலம் எச்சரிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்துதலுக்கு ஈடுபடுத்துவது தொடர்புடைய விஷயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் இங்கிலாந்தில் உணவு போன்ற முக்கிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று பல நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை NHS என்னும் கொரோனா செயலி தம்முடைய பாதுகாப்பை கருதி சுய தனிமைப்படுத்துதலுக்கு அறிவுறுத்தும். இதன் விளைவாக தற்போது வரை சுமார் 5,00,000 மக்கள் தங்களை சுய தனிமைப்படுத்துதலுக்கு ஆளாக்கியுள்ளார்கள். இதனால் இங்கிலாந்து […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவி வரும் மோசமான சுழலுக்கு பிராந்திய நாடுகள் குவாட் என்ற கூட்டமைப்பு ஏற்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் இருபது வருடங்களாக அமெரிக்கா நேட்டோ படைகள் அந்நாட்டு ராணுவத்திற்கு உதவி புரிந்து வந்துள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் அமெரிக்க படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இவர்கள் வெளியேறுவதை தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானை தங்களின் கைவசப் படுத்தியுள்ளனர். இதனால் அங்கு சில […]
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரத்தில் இன்னும் 5 நாட்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். இதனை அடுத்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு மத்தியில் இந்தப் போட்டியானது நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்குகொள்ளும் போட்டியாளர்கள் பரிசோதனைக்கு பிறகே அனைவரும் ஒலிம்பிக் கிராமத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தனிஅறையில் தங்கப்படுவார்கள். இந்த நிலையில் […]
அமெரிக்க கப்பற்படை அனைத்து விதமான வானிலையிலும் இயங்கக்கூடிய சிறப்பு வாய்ந்த 2 ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் என்னும் நிறுவனம் தயாரிக்கும் 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான MH-60 R ரக ஹெலிகாப்டர்கள் மழை, வெயில், புயல் என எந்த மிதமான வான் நிலையிலும் இயங்கக்கூடியது. இந்நிலையில் அமெரிக்காவின் கடற்படை விமான நிலையத்தில் வைத்து இந்த எம்.ஹெச். 60 ரகத்தின் 2 ஹெலிகாப்டர்களை இந்திய கப்பல் படையிடம் ஒப்படைப்பதற்கான […]
பிரான்ஸ் நாட்டில் கட்டுமான பணிகளின் போது தீடிரென மின்கோபுரம் சரிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் வடக்கிலுள்ள பாரா மாகாணத்தில் பகாஜா என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மின்கோபுரம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது தீடிரென மின்கோபுரம் சரிந்து விழுந்ததில் அங்குள்ள பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதனை அறிந்த மீட்புக்குழு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். அதில் 7 பேர் […]
பிரான்ஸிலில் இருந்து பிரித்தானியாவுக்கு வருகை தருபவர்கள் 10 நாட்களுக்கு தனிமைபடுத்தப்பட வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சீனா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸானது பல்வேறு நாடுகளில் பரவி உருமாறி வருகிறது. இவ்வாறு உருமாறி வரும் கொரானா வைரஸிற்கு உலக சுகாதார அமைப்பு பல்வேறு பெயர்கள் வைத்துள்ளது. மேலும் இந்தியாவில் உருமாறிய கொரானா வைரஸிற்கு டெல்டா என்றும் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸிற்கு பீட்டா என்றும் பெயர் வைத்துள்ளனர். இதனை அடுத்து பிரான்சில் பரவிவரும் பீட்டா வைரஸ் பிரித்தானிய […]
தாலிபான்கள் வன்முறை தாக்குதல் நடத்தியதில் புகைப்பட செய்தியாளர் உயிரிழந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் அவர்களின் கைவசம் கொண்டு வந்துள்ளதை அடுத்து அங்கு அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல் வலுப்பெற்றது. அதில் கந்தகார் பகுதியில் ஸ்பின் போல்டக் இடத்தில் தலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட தாக்குதலில் இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஸ் சித்திக் கொல்லப்பட்டார். மேலும் இவர் கொரோனா காலகட்டங்களில் கங்கை நதிக்கரையில் பிணங்கள் எரிக்கப்படுவதை தனது புகைப்படத்தின் வாயிலாக […]
தென்ஆப்பிரிக்காவில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று இந்திய துணை தூதரகம் ட்வீட் செய்துள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபராக ஜுமா என்பவர் இருந்துள்ளார். இவர் ஜூலை 7ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து தென்னாப்பிரிக்க நாட்டில் பல இடங்களில் வன்முறை கிளம்பியுள்ளது. இந்த வன்முறையில் இந்திய வம்சாவழியினர் குறிவைத்து தாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்கள், இந்திய அரசாங்கம் […]
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதள பக்கங்களில் பரவும் கொரோனா குறித்த தவறான கருத்தாலயே பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளின் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இந்த கொடூர நோய்த்தொற்றின் பிடியிலிருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் அனைத்து நாடுகளிலும் கொரோனா குறித்த தடுப்பூசியை எடுத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் தயக்கம் […]
பிரிட்டன் சுகாதார துறை அமைச்சர் சஜித் ஜாவித்துக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் சுகாதார துறை அமைச்சர் சஜித் ஜாவித்துக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிறகு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை அன்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து “இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியும் போட்டு விட்டேன். எனது பிசிஆர் முடிவுக்காக […]
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதலினால் உயிரிழந்த புகைப்பட செய்தியாளர் குடும்பத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை இரங்கல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தாலிபான்கள் நாட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்த மோதல் குறித்து செய்தி சேகரிக்க ராய்ஸ்டர் நிறுவனத்தின் புகைப்படப் செய்தியாளர் டேனிஷ் சித்திக் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து கந்தகாரின் அருகில் உள்ள ஸ்பின் போல்டக் பகுதியில் தாலிபான்களுக்கும் இராணுவத்திற்கும் ஏற்பட்ட […]
அரியவகை வைரஸ் தொற்றானது நைஜீரியாவைச் சேர்ந்தவருக்கு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் உறுதிசெய்துள்ளது. அமெரிக்கா நாட்டில் டெக்ஸாஸ் மாகாணத்தில் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் வசித்து வருகிறார். இவர் லாகோஸ் நகரிலிருந்து நைஜீரியா, டல்லாஸ் போன்ற இடங்களுக்கு பயணம் செய்து வந்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு பரிசோதனை செய்ததில் மங்கிபாஸ் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நோய் தொற்று குறித்து அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் […]
இந்திய கடற்படையிடம் நவீன கடல்சார் ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடற்படை இரண்டு நவீன கடல்சார் ஹெலிகாப்டர்களை நாட்டின் போர் திறனை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளது. மத்திய அரசு இந்திய பாதுகாப்பு படையை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டு நவீன கடல்சார் ஹெலிகாப்டர்களை நாட்டின் பலத்தை வலுப்படுத்தும் விதமாக இந்திய கடற்படை அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளது. மேலும் இந்திய அதிகாரிகளிடம் எம்எச்-60-ஆர் ஹெலிகாப்டர்கள் நேற்று அமெரிக்காவில் உள்ள கடற்படை […]
சுவிட்சர்லாந்தில் பெய்த கனமழை காரணமாக குளங்கள் ஏரிகள் அனைத்தும் நிரம்பி ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் பெய்த கனமழை காரணமாக குளங்கள் ஏரிகள் அனைத்தும் நிரம்பி ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் Biel ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் கரையை உடைத்து தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வியாழக்கிழமையிலிருந்தே குடியிருப்புகளை விட்டு வெளியேற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்ந்த பொருள்களை […]
கொரோனா காலகட்டத்தில் மற்ற நோயாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், கனடாவில் வசித்து வரும் ஒருவருடைய தாய் கணையப் புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் அவருடைய குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கனட நாட்டில் sharon என்பவரும் அவருடைய குடும்பத்தாரும் வசித்து வருகிறார்கள். இவருடைய தாய் இலங்கையில் பிறந்துள்ளார். இதனால் sharon னின் பெற்றோர்கள் இலங்கை நாட்டிற்கு செல்வதற்கு முடிவு செய்து 6 மாதத்திற்கு முன்பாக அங்கு சென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் கனடா நாட்டிற்கு திரும்புவதற்கு முன்பாக இலங்கையில் கொரோனா குறித்த […]
அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் 96 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாகக் கொண்ட மற்றும் ரிக்டரில் 5.7 ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் தெற்கு சாண்ட்விச் தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவில் பொதுமக்கள் எவரும் வசிக்கவில்லை. இந்நிலையில் 96 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாகக் கொண்ட மற்றும் ரிக்டரில் 5.7 ஆக பதிவாகிய மிகவும் கடுமையான நிலநடுக்கம் தெற்கு சாண்ட்விச் தீவில் உணரப்பட்டுள்ளது. இந்த தகவலை […]
நீதிமன்ற காவலில் இருந்த ஸ்டான் சுவாமி சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்துள்ள நிலையில் ஐ.நாவின் நல்லிணக்க அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வன்முறையை தூண்டியதாக கூறி ஸ்டான் சுவாமியின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற காவலிலிருந்த ஸ்டான் ஸ்வாமி உடல்நல குறைபாட்டால் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதற்கிடையே ஸ்டான் ஸ்வாமியை நீதிமன்ற காவலில் நடத்திய விதம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் ஐ.நாவின் நல்லிணக்க அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மனித உரிமைகளை […]
வியட்நாமில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை நோக்கி 8 அடி நீளமுடைய ராஜநாகம் ஒன்று வேகமாக வந்து வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்வது தொடர்புடைய வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வியட்நாமில் த்ராங் என்னும் பகுதியிலுள்ள ஒரு வீட்டடின் முன்பு குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது குழந்தைக்கு அருகே அவருடைய தாத்தாவும், தந்தையும் இருந்துள்ளார்கள். இதனையடுத்து குழந்தையின் தாத்தா வாசலிலிருந்து 8 அடி நீளமுடைய ராஜநாகம் ஒன்று வீட்டிற்குள் நுழைவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாசலில் நின்று […]
ஆப்கானிஸ்தானின் அதிபர் தங்கள் நாட்டில் நிலவும் அசாதாரண சூழலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் சுமார் 20 வருடங்களாக தங்கியிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறுவதை அடுத்து அந்த நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு மோசமான நிலைமை தொடர்வதாகவும் இதற்கு ஒரு வகையில் பாகிஸ்தானும் காரணம் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டில் சமாதான முன்னெடுப்பில் பாகிஸ்தான் எதிரான பங்களிப்பை கொண்டுள்ளதாகவும் அஷ்ரப் கனி குற்றம் கூறியுள்ளார். […]
ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மக்கள் வெளியேறுவதை தொடர்ந்து பூட்டி இருக்கும் வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்பினால் 110 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1300 க்கும் மேலான மக்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனி மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வீடுகள் மற்றும் […]
அதிக அளவிலான தடுப்பூசிகளை மக்கள் செலுத்தியுள்ளதாக அமெரிக்கா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றால் அதிக அளவிலான பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து அமெரிக்கா நாட்டு மக்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களான மாடர்னா, பைசர், பயோஎன்டேக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் போன்றவைகள் தயாரிக்கும் தடுப்பூசிகளை […]