தடுப்பூசியை கட்டாயமாக்குவதன் மூலம்தான் மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என்ற எண்ணமில்லை என ஜெர்மன்அதிபர் கூறியுள்ளார். ஜெர்மன் அதிபர் ஏஞ்சல் மெர்க்கல் தடுப்பூசி குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தச் செய்தியில் அவர் கூறியதாவது “ஜெர்மனி மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது உறுதி செய்யப்படும். ஆனால் அதற்காக அவர்களை பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைப் போல கட்டாயத்திற்கு உட்படுத்த மாட்டோம். அதற்கு பதிலாக சமூக இடைவெளியை பின்பற்றுதல், கண்காணிப்பு மற்றும் பரிசோதனை அதிகரித்தல் செய்யப்படும். மேலும் தடுப்பூசியை காட்டயமாக்குவதன் […]
Tag: உலகச் செய்திகள்
பல்வேறு குற்றங்கள் செய்த முதியவர் ஒருவருக்கு ஒரு மாத கால சிறைதண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் என்ற நகரில் உணவகம் ஒன்று அமைந்துள்ளது இந்த உணவகத்திற்கு 69 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் மாஸ்க் அணியாமல் வந்துள்ளார். அவரை மாஸ்க் அணிய சொல்லி உணவக ஊழியர் ஒருவர் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த முதியவர் உணவக ஊழியரை தாக்கியும் இந்த காட்சியைப் படம் பிடித்த பெண்ணையும் தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து இவர் பல்வேறு […]
கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள தெற்கு பகுதியில் நேற்றிரவு 90 நிமிடங்களில் 75 மில்லி மீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. இந்த கனமழையினால் நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் கார்கள் இரண்டு அடி உயர நீரில் புதைந்துள்ளன. இதனை அடுத்து வெள்ளமானது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் புகுந்துள்ளதால் மின்சாரம் தடைபட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பெரு வெள்ளத்தினால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த […]
பயங்கரவாத ஆயதங்களை வீட்டில் வைத்திருந்தால் அவர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அளிக்கப்படும் என பிரித்தானிய நாட்டின் உள்துறை செயலாளர் கூறியுள்ளார். பிரித்தானிய நாட்டில் அச்சமூட்டும் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிராக புதிய தாக்குதல் ஆயுத சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே குற்றவியல் நீதி சட்டம் 1988 இன் கீழ் பயங்கரமான ஆயுதங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தனிப்பட்ட முறையில் வீட்டில் ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் […]
காணாமல் போன மகனை 24 வருடங்களாய் தேடி அலைந்த தந்தைக்கு கிடைத்த வெற்றிக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சீனாவிலுள்ள ஷாண்டோங் மாகாணத்தில் 1997ஆம் ஆண்டு வீட்டின் முன் ஜின்ஷேன் என்ற 2 வயது சிறுவன் ஒருவன் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது ஜின்ஷேனை கடத்தல் கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. இதனை அடுத்து அந்த சிறுவனின் தந்தை குவோ கேங்டாங் பல இடங்களில் அவனை தேடியுள்ளார். ஜின்ஷேன் கிடைக்கவில்லை என்பதால் அவனின் தந்தை குவோ கேங்டாக் சோர்ந்து […]
வீட்டில் கதவு தட்டும் சத்தத்தை கேட்டு திறக்க சென்றவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Colindale நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை உட்பட ஆண், பெண் மூவரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த வீட்டின் கதவை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் தட்டியுள்ளார். இதனை அடுத்து வீட்டில் உள்ளவர்கள் கதவை திறந்த போது மர்ம நபர் […]
இரத்தத்தானம் செய்ய முன் வராவிட்டால் அவசியமற்றவை என்று கருதப்படும் அறுவை சிகிச்சைகள் செய்யப்படமாட்டாது என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா மாகாணத்தில் மருத்துவமனையின் மருத்துவர்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது “ஜெனிவா மாகாணத்தில் மாதம் ஒன்றுக்கு 1000 பேர் இரத்ததானம் செய்வார்கள். ஆனால் தற்பொழுது வழக்கத்தைவிட கடந்த ஜூன் மாதத்தில் 800 பேர் மட்டுமே இரத்ததானம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிமாகியுள்ளதாலும், கோடை வெயிலின் தாக்கத்தாலும் […]
பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமான ஊழியர்களை தாக்கிய இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் இருக்கும் விமான நிலையத்திலிருந்து சூரிச் நகருக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது . இந்த விமானத்தில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் விமான ஊழியர்களின் அறிவுரைகளை மீறி அவர்களை தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண் எல்லை மீறயதால் அதே விமானத்தில் பயணம் செய்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை கைது செய்துள்ளார். மேலும் விமானம் […]
பாகிஸ்தானில் வழக்கறிஞரை கடித்த இரண்டு நாய்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியை சேர்ந்தவரும் மூத்த வழக்கறிஞருமான மிர்சா அக்தர் கடந்த மாதம் நடைபயிற்சிக்காக காலையில் வெளியில் சென்றிருந்தார். அப்போது இரண்டு நாய்கள் சேர்ந்து மிர்சா அக்தரை பயங்கரமாக கடித்துள்ளது. அதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக செல்லப்பிராணியின் உரிமையாளருக்கும், மிர்சாவுக்கும் இடையே நீதிமன்றத்தில் ஒப்பந்தம் […]
இத்தாலிய அணியின் யூரோ கால்பந்து இறுதிப் போட்டியின் வெற்றியை முன்னிட்டு அந்நாட்டின் ஜனாதிபதிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க வில்லை என்று இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மீது இத்தாலிய கால்பந்து ரசிகர்கள் குற்றம் சாட்டிள்ளார்கள். இங்கிலாந்த் இளவரசரான வில்லியம் தன்னுடைய குடும்பத்துடன் யூரோ கால்பந்திற்கான இறுதி போட்டியினை காண்பதற்காக Wembley என்னும் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். இதனையடுத்து யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணி மோதி கொண்டுள்ளது. அதில் இத்தாலிய அணி யூரோ கால்பந்து இறுதிப் […]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மிகவும் பிரபலமான சமையல் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். ஆஸ்திரேலிய நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்ற மாஸ்டர் செஃப் 13 ஆவது சீசன் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு போட்டியாக இறுதிச் சுற்றில் வங்காளதேசத்தை சேர்ந்த மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 2 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்ற […]
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அங்கு தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருக்கும் தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் செலுத்துவதற்கு தொடங்கியுள்ளார்கள். ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முழுமையாக வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்ததே இதற்கு காரணமாக திகழ்கிறது. மேலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் என்னும் நகரை கைப்பற்றியதோடு மட்டுமின்றி பல்வேறு நகரங்களில் […]
லண்டனில் வெறும் 90 நிமிடங்களில் சுமார் 75 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாநகரம் முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வானிலை ஆராய்ச்சி மையம், லண்டனில் இருக்கும் loddon என்னும் நதிக்கு அருகில் அமைந்திருக்கும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதோடு மட்டுமின்றி தெற்கு இங்கிலாந்தில் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதற்கிடையே லண்டனில் வெறும் 90 நிமிடங்கள் சுமார் 75 மில்லி […]
அபுதாபியில் நடக்கவுள்ள பறவைகள் கண்காட்சிக்காக அந்த நாட்டின் தேசிய பறவையை பழக்கப்படுத்தி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய பறவை பால்கன் ஆகும். அந்த நாட்டு மக்களின் வாழ்வோடு இணைந்தும் , கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவும் பால்கன் பறவை உள்ளது. இதற்கு தமிழில் வல்லூறு, ராஜாளி என்ற பெயர்களும் உண்டு. இந்த பறவைகளை மனிதர்களாலும் விலங்குகளாலும் வேட்டையாட முடியாத முயல் ,எலி போன்றவற்றை வேட்டையாட பயன்படுத்துகின்றனர். இந்த பால்கன் பறவையானது மணிக்கு 400 முதல் 500 கிலோ மீட்டர் […]
இந்தியாவிலிருந்து துபாய்க்கு வருகிற 21 ஆம் தேதி வரை விமான சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளது என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. துபாய் நாட்டிலுள்ள எமிரேட்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக கடந்த மாதம் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் விமான சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலீட்டு விசா, கோல்டன் விசா, பங்குதாரர் விசா மற்றும் மருத்துவ […]
பூனை மற்றும் எலிகளை வைத்து பரிசோதனை நடத்தியதில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தடுப்பு மருந்து பற்றிய தகவல்களை ஜார்ஜியா பல்கலைக்கழக பேராசிரியர் பகிர்ந்துள்ளார். உலக நாடுகள் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக பல்வேறு விதமான மருத்துவ பயன்பாடுகளை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா தொற்றை குணப்படுத்தும் ‘ஸ்பிரே’ என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் செயல்பாடு குறித்து ஆய்வுகள் நடத்தியதில் வெளியான தகவல்களை ஜார்ஜியா பல்கலைக்கழகப் பேராசிரியரான பால் மெக்கிரே வெளியிட்டுள்ளார்.அவர் கூறியதாவது “இந்த தடுப்பு மருந்தை […]
உலக நாடுகளில் உள்ள மக்கள் கொரோனா வைரஸிற்கு எதிராக செலுத்தி வரும் தடுப்பூசிகளை கலந்து போடுவதால் பெரும் ஆபத்து உருவாகும் என உலக சுகாதார தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் உள்ள மக்கள் கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த தடுப்பூசிகளை மக்கள் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணையாக போட்டுக்கொண்டு வருகின்றனர். அதிலும் சில நாடுகள் பக்கவிளைவுகளிலிருந்து தப்பிப்பதற்காக முதல் தவணை செலுத்திய பின் இரண்டாவது தவணை […]
மருத்துவமனையில் உள்ள கொரோனா அறையில் இருக்கும் ஆக்சிஜன் தொட்டி வெடித்து சிதறியதில் 54 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தெற்கு மாகாணத்தில் உள்ள தி குவாரல் நசிரியா என்ற பகுதியில் இமாம் ஹுசைன் என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனியாக சிகிச்சை அளிக்கும் அறை ஒன்று உள்ளது. இந்த அறையில் இருந்த ஆக்சிஜன் தொட்டி ஒன்று திடீரென வெடித்தது. இதனை அறிந்த தீயணைப்பு குழு மருத்துவமனைக்கு விரைந்து […]
விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விண்வெளி வீராங்கனையின் அனுபவங்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி நிறுவனமான Virgin Galactic மூலம் மெக்சிகோவில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை Spaceship to Unity என்ற ஓடத்தின் மூலம் விண்வெளிக்கு 6 பேர் கொண்ட குழு ஒன்று சென்றுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷா பந்த்லா ஆகியோர் சென்றுள்ளனர். இவர் ஆந்திராவில் உள்ள குண்டூரில் பிறந்து […]
இரு கோள்களும் நெருங்கி வரும் அற்புத நிகழ்வானது இன்று இரவு வானில் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வானில் பல அரிய சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்ற நிலையில் தற்போது செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றை ஒன்று நெருங்குவது போல இன்று இரவு வானில் தெரியும். அந்த சமயத்தில் இரு கோள்களுக்கிடையே வெறும் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இரு கோள்களுக்கு இடையில் சுமார் 4 டிகிரி தொலைவில் பிறை […]
சைபர் தாக்குதலுக்குள்ளான மாவட்டத்தில் சேவைகள் மற்றும் வர்த்தகங்கள் பாதித்துள்ள நிலையில் அந்த பகுதி மக்களுக்கு அரசு உதவிகளை வழங்குகிறது. ஜெர்மனி நாட்டில் உள்ள Anhalt-Bitterfeld மாவட்டத்தில் உள்ள குறும்பர்கள் (Hackers) சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் தன்னைத்தானே பேரழிவு மாவட்டமாக Anhalt-Bitterfeld அறிவித்துக் கொண்டுள்ளது. இதனை அடுத்து ஜெர்மனியின் தகவல் பாதுகாப்பு பெடரல் அலுவலகம் , Anhalt-Bitterfeld டை சைபர் தாக்குதல் பேரழிவுக்குள்ளான முதல் மாவட்டமாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து பெடரல் அலுவலகர்கள் தொடர்ந்து விசாரணை […]
மிகவும் குறுகிய காலத்திலேயே சீன நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதால் அக்கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் சேர்வதற்கு ஆர்வமாக உள்ளதாக நடிகர் ஜாக்கி சான் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். சீனாவின் திரைப்பட சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் நடிகர் ஜாக்கிசான் பெய்ஜிங்கில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி மிக குறுகிய காலத்திலேயே தாங்கள் கொடுத்த […]
சுரங்கப்பாதையின் வெளியில் நின்று கொண்டிருந்த லாரி தீடிரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள யூரி மாநிலத்தின் வாஸன் பகுதியில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. இந்த சுரங்கப் பாதையின் அருகில் நின்றுக்கொண்டிருந்த லாரி தீடிரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தகவலை அறிந்த போலீசார் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர்களோடு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் எந்த வித உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றும் சுரங்கப்பாதைக்கு வெளியே […]
சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதால் இந்திய இளைஞர் ஒருவர் 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர் நாட்டில் பாலச்சந்திரன் பார்த்திபன் என்ற 26 வயது இந்திய இளைஞர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் அவருக்கு தொண்டை வறட்சி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து மருத்துவமனையின் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் அவர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது […]
கியூபாவில் அமைதியான முறையில் போராட்டம் செய்யும் பொது மக்களை குறிவைத்து அந்நாட்டு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கிறது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கியூபாவில் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை கொரோனாவின் மூன்றாவது அலை போன்ற மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியும் கியூபா அரசுக்கு எதிராக அந்நாட்டில் மாபெரும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் […]
ஜோர்டான் நாட்டில் நடைபெற்றுவரும் மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு சதி செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகால சிறை தண்டனையை விதித்துள்ளது. ஜோர்டான் நாட்டில் நடைபெற்று வரும் 2 ஆம் அப்துல்லாவின் மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு சதி நடந்துள்ளது. இதற்கு தொடர்புடையதாகக் கூறி மன்னரின் சகோதரரான ஹம்ஸா பின் உசேன் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அதன்பின் 2 நாட்கள் கழித்து அரசியலமைப்பு சட்டத்திற்கு இணங்கி நடப்பதாக ஹம்சா பின் உசேன் கடிதம் ஒன்றை எழுதி […]
கொரோனாவின் நிலைமைகளை ஆராய்ந்து இங்கிலாந்தில் 11 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் பொது முடக்கம் போடுவதற்கு வாய்ப்பிருப்பதாக பிரதமர் தன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளார். இங்கிலாந்தில் ஜூலை 19ஆம் தேதியிலிருந்து கொரோனா குறித்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் குறைக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று பிரபல நிறுவனத்தின் பத்திரிகை சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ஜூலை 19 ஆம் […]
ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர் குழுக்கள் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தின் மீது நடத்திய சைபர் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்யாவை எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பெரிய மற்றும் சிறிய வர்த்தக நிறுவனங்களின் மென்பொருள்களை பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் பணியை செய்யும் நிறுவனமாக “கசேயா” திகழ்கிறது. இந்த “கசேயா” நிறுவனத்தின் மீது ரஷ்யாவை சேர்ந்த ஆர்.இ. வில் என்னும் ஹேக்கர் குழுக்கள் ரான்சம்வேர் என்னும் சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனையடுத்து இந்த ஹேக்கர் குழுவிற்கு ரஷ்ய […]
அமெரிக்க அதிபரான ஜோ பைடன், மூத்த ராஜதந்திரி மற்றும் வர்த்தக கொள்கை நிபுணரான பீட்டர் ஹாஸ் என்பவரை வங்காள தேசத்திற்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்துள்ளார். மூத்த தூதரக அதிகாரி மற்றும் வர்த்தக கொள்கை நிபுணரான பீட்டர் ஹாஸ் என்பவர் வெளியுறவுத் துறையின் 5 புவியியல் பணியகங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது வெளியுறவுத் துறையினுடைய வணிக விபரம் மற்றும் பொருளாதாரத்தின் முதன்மை துணை உதவி செயலாளராகவும், மாநிலத்தின் உதவி செயலாளராகவும் பணியாற்றுகிறார். மேலும் இவர் முன்னதாக பலவிதமான […]
ஆயுதங்கள், தோட்டக்கள் போன்றவற்றை பயணிகள் விடுதியில் பதுக்கி வைந்திருந்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்கா நாட்டில் உள்ள டெவன் நகரில் பயணிகள் விடுதி ஒன்று உள்ளது. அந்த பயணிகள் விடுதியில் இருந்து பணிப்பெண் ஒருவர் போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் விடுதியின் உள்ள எட்டாவது மாடியில் ஒரு டஜனுக்கும் அதிகமான ஆயுதங்களும் ,ஆயிரம் சுற்றுக்கு தேவையான துப்பாக்கித் தோட்டாக்களை பதுக்கி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த […]
ஹைதி நாடானது வறுமையில் தவிக்கும் போது அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அவரின் மனைவிக்கு விலையுயர்ந்த பங்களா ஒன்றை வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஹைதி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரோனி செலஷ்டினாவால் மீண்டும் கவனம் ஈர்கப்பட்டுள்ளது. இவர் தன் மனைவிக்கு கனடாவில் பங்களா ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த மாளிகையின் விலையானது 3.4 […]
சிரியா நாட்டில் நடந்துவரும் உள்நாட்டு போரினை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா பாதுகாப்பு சபையில் பாதுகாப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரியா நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களினால் உள்நாட்டுப் போரானது அரசுக்கு எதிராக நடந்து வருகிறது. இந்தப் போரில் சுமார் 6 லட்சம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 66 லட்சம் பேர் அகதிகளாக தப்பிச் சென்றுள்ளதாகவும் 67 லட்சம் பேர் தங்களது சொந்த நாட்டிலேயே வீடுகளை இழந்து தவிப்பதகாவும் தெரிய வந்துள்ளது. இதனைத் […]
60 ஆண்டுக்கால நட்பினை பாராட்டி இரு நாட்டு அதிபர்களும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். உலகிலுள்ள பல்வேறு நாடுகள் அணு ஆயுத விவாதத்திற்காக வடகொரியா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இந்த நிலையில் வடகொரியாவின் ஒரே முக்கிய வர்த்தக கூட்டாளியாக உள்ள சீனா நட்பு பாராட்டி வருகின்றது. இந்த நட்புறவு ஆனது 1930களில் சீனாவில் நடந்த காலனித்துவ போருக்கு எதிராக வட கொரியாவின் கொரில்லா படைகள் சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டன. மேலும் 1950 முதல் 53 வரை நடந்த […]
கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அதிகமாக போடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவும் ஓன்றாகும். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அமெரிக்காவில் மாடர்னா, பைசர், ஜான்சன் & ஜான்சன் மற்றும் பயோஎன்டேக் போன்ற தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை மக்கள் செலுத்தி வருகின்றனர். இதுவரை அமெரிக்காவில் சுமார் 33,35,65,404 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாக நோய்த் தடுப்பு […]
இத்தாலியர் ஒருவரை 600க்கும் மேற்பட்ட மக்கள் ஓன்று திரண்டு கற்களால் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 65 வயதான Giorgio scanu என்ற இத்தாலியர் ஹோண்டுராஸ் என்ற பகுதியில் பொறியாளராகப் பணிபுரியும் போது உள்ளூர்ப் பெண் ஒருவரை மணந்து கொண்டு இருபது ஆண்டுகளுக்கு முன்பே அங்கு குடியேறியுள்ளார். இதனையடுத்து scanu தனது குடியிருப்பிலுள்ள தோட்டத்தில் இருக்கும் பூக்களை சேதப்படுத்தியதற்காக 78 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் […]
போப் ஆண்டவர் தனது அறுவை சிகிச்சைக்கு பிறகு மக்களை நேரில் சந்தித்து பேசியதையடுத்து அவர்கள் மிகுந்த உற்சாகமடைந்து கோஷங்களை எழுப்பியுள்ளனர். வாடிகன் சிட்டியில் உள்ள புனித ஆலயத்தின் போப் ஆண்டவரான பிரான்சிஸ்க்கு 84 வயதாக்கின்றது. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் போப் ஆண்டவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு பெருங்குடல் சுருக்கம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த ஜூலை 4 […]
எத்தியோப்பியாவில் நடந்த பொதுத்தேர்தலில் அபி அகமது அவர்கள் மீண்டும் வெற்றிப்பெற்று பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். எத்தியோப்பியா நாட்டில் உள்ள டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கு இடையேயான உள்நாட்டுப் போர் கடந்த மாதம் தீவிரமடைந்தது. இதில் டிக்ரே மாகாணத்தின் மிகேலி நகரை கிளர்ச்சியாளர்கள் கைவசப்படுத்தியதில் இருதரப்புக்கும் மோதல் வலுப்பெற்றது. இதனால் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அந்த மாகாணத்தில் பஞ்சத்தில் தவிப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இதனை அடுத்து எத்தியோப்பியா நாட்டில் கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட […]
ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட ஆப்பிரிக்காவில் உள்ள சூடானின் கிழக்கு பகுதியில் அல்-அமீன் நகரத்தில் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒன்று உள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நேற்று திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த பயங்கரவாத நிகழ்விற்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை […]
இங்கிலாந்து நாட்டின் Virgin Group தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் அவரின் விண்வெளி பயணக் குழுவில் இந்திய வம்சாவளி பெண் இடம் பெற்றுள்ளார். விண்வெளி சுற்றுலா என்பது அதிசயமாகவும் ,சாதனையாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தின் ரிச்சர்ட் பிரான்சன் என்பவர் உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரும் Virgin Group தலைவரும் ஆவார். இவரால் 2004 ல் தொடங்கப்பட்ட Virgin Galactic விண்வெளி நிறுவனத்தின் மூலம் மெக்சிகோவிலிருந்து VSS Unity ஓடத்தில் விண்வெளிக்கு சென்றுள்ளனர். மேலும் இவருடன் சேர்ந்து 11 […]
ஆப்கானிஸ்தான் நாட்டினை தலிபான்கள் கைவசப்படுதியுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க படையினர் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த சுழலில் ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் வேகமாக கைவசப்படுத்தி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையானது சீனாவிற்கு கவலையை அளித்துள்ளது ஏனெனில் ஆப்கானிஸ்தானுடன் 8 கிலோமீட்டர் எல்லையில் ஜின்ஜியாங் […]
லடாக் எல்லைப் பிரச்சினைகளின் ஒப்பந்தங்களை சீனா முறையாக பின்பற்றவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அரசுமுறை சுற்றுப்பயணமாக 3 நாட்களுக்கு ரஷ்யா சென்றுள்ளார். இந்த பயணத்தில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் மற்றும் பல உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கமானது இருதரப்பு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவுகளை பலப்படுத்துவாதகும். மேலும் இந்த சந்திப்பினை தொடர்ந்து இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தங்களது பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ள […]
இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தோனேசியா நாட்டின் வடக்கில் சுலவேசி தீவின் அருகில் மானடோ நகரம் உள்ளது. இந்த மானடோ நகரில் பலம் வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 60 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது எனவும் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தினால் […]
கோவக்சின் தடுப்பூசிகளை அவசர காலப் பயன்பாட்டு ஒப்புதல் குறித்து முடிவு எடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனமானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து கோவக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதற்கு இந்தியாவில் மட்டும் அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. […]
தடுப்பூசி செலுத்தாதவர்களை பணியிலிருந்து நீக்கப்போவதாக பிஜூ தீவின் பிரதமர் அறிவித்துள்ளார். உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் கொரோனா வைரஸிற்கு எதிராக தடுப்பூசிகளை நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் செலுத்திக் கொண்டு வருகின்றனர். இன்னும் சில நாடுகளில் மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதை ஊக்குவிப்பதற்காக சலுகைகள் மற்றும் பரிசுகளை தெரிவித்தும் மேலும் பல நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தென் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜூ தீவின் பிரதமர் பிராங்க் பைனிமராமா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்று கடித்து குதறிய கரடி வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது. அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் 65 வயதான நர்ஸ் லியா லோகன் . இவர் கலிபோர்னியாவிலிருந்து மொன்டானா மாகாணத்திற்கு தனது சகோதரி மற்றும் தோழியுடன் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு ஓவாண்டே நகரை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அடைந்துள்ளார். அங்கு அவர்கள் மூவரும் இரவு உணவை முடித்துவிட்டு தனித்தனி கூடாரங்களில் ஓய்வு எடுத்துள்ளனர். அப்போது அங்கு வந்த […]
பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்ணை விமான ஊழியர்கள் இருக்கையில் கட்டி வைத்துள்ள காட்சி வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்கா நாட்டில் Dallas நகரில் விமான நிலையம் ஒன்று உள்ளது. அந்த விமான நிலையத்திலிருந்து Charlotteக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இதனையடுத்து விமானம் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பெண் கதவை திறக்க முயன்றுள்ளார். இதனை கண்ட விமான ஊழியர்கள் அவரை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சியில் விமான […]
தஜிகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நில அதிர்வினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஜிகிஸ்தான் நாட்டிலுள்ள ரஷீத் நகரின் தெற்கில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது குஜிட் நகரின் தென்கிழக்கில் 153 கிலோமீட்டர் தொலைவில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என மத்திய தரைக்கடல் புவியியல் மையம் கூறியுள்ளது. மேலும் இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் 85% பகுதியை கைப்பற்றி தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக அமெரிக்க படையினர் இருந்துள்ளனர். இதனை அடுத்து அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பைடனின் உத்தரவிற்கு இணங்கி அமெரிக்க படையினர் தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்ப உள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் 85 சதவிகித பகுதியை தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனை அந்த பயங்கரவாதிகள் படையின் ஒருவரான ஷாஹபுதீன் […]
ஹைதி அரசு அமெரிக்கா மற்றும் ஐ.நா. அமைப்பிடம் நாட்டில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் ஹைதிக்கு படைகளை அனுப்புமாறு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது மனைவி மார்டின் மோயிஸ்-க்கு அந்த சம்பவத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. இதையடுத்து அதிபரின் மனைவி மார்டின் மோயிஸ் புளோரிடாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் விமானம் மூலம் […]
கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கரடி இழுத்துச் சென்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் நர்ஸ் லியா லோகன்(65). இவர் தனது தோழி மற்றும் சகோதரியுடன் மொன்டானா மாகாணத்திற்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை இரவு ஓவாண்டே நகரில் 3 பேரும் தனித்தனி கூடாரத்தில் ஓய்வு எடுத்துள்ளனர். இந்த சமயத்தில் நள்ளிரவில் அப்பகுதியில் உள்ள கரடி ஒன்று கூடாரத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்த லியாவை இழுத்துச் […]