கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால் பள்ளிகள் மூடப்படும் என மியான்மர் நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மியான்மர் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்ததால் பள்ளிகளை கடந்த மாதம் முதல் திறந்துள்ளனர். இதனையடுத்து சில நாட்களாக மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் அங்கு 4,132 பேருக்கு புதிதாக டெல்டா […]
Tag: உலகச் செய்திகள்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல் நகர மேயரை அமெரிக்க அதிபர் நியமனம் செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்கா நாட்டின் லாஸ் ஏஞ்சல் நகரத்தின் மேயர் ஏரிக் கார்செட்டி ஆவார். இவர் அமெரிக்க தேர்தலின் போது அதிபர் ஜோ பைடனின் இணைத் தலைவராக பிரச்சாரத்தில் பணியாற்றியவர். இந்த நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக ஏரிக் கார் செட்டியை அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார். இதனை அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து எரிக் கார்செட்டி […]
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தாலிபான்கள் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் முழுவதும் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியேறுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இந்த அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைகளான ஈரான், தஜிகிஸ்தானை கைவசப்படுத்தியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் […]
ஹைதி அதிபர் ஜோவெனால் மாய்சே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஓமன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கரீபியன் கடலில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே மர்ம கும்பல் ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இந்த சம்பவத்தை ஓய்வு பெற்ற கொலம்பிய ராணுவ வீரர்கள் 26 பேர் மற்றும் 2 அமெரிக்க வீரர்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் […]
கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்களிடம் உள்ள 8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலும் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நாடுகளுக்கு முதன்மை அளிக்கப்படும் எனவும் பிற நாடுகளுக்கு ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து […]
93 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவில் நடந்த போட்டியில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பள்ளி மாணவர்களுக்காக “ஸ்பெல்லிங் பீ” என்னும் ஆங்கில வார்த்தைகளை தவறின்றி உச்சரிக்கும் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக ஜனாதிபதியின் மனைவி கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் 93 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக இந்த “ஸ்பெல்லிங் பீ” போட்டியில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சைலா அவந்த் கார்டே என்னும் 14 வயது […]
தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதியில்லை என்று கன்னட நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதால் அந்நாட்டில் போடப்பட்டிருக்கும் கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதனால் கனடாவிலிருக்கும் அனைவரும் தடுப்பூசியை கட்டாயமாகச் செலுத்திக் கொள்ளவேண்டும் என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளுக்கு சில கொரோனா குறித்த கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். அதாவது கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட […]
உலக அளவில் ஒரு நிமிடத்திற்கு 11 பேர் பசியால் உயிரிழப்பதாக ஆக்ஸ்பாம் அமைப்பு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 15.5 கோடி மக்கள் பசி கொடுமையை அனுபவித்து வருவதாகவும், ஒரு நிமிடத்திற்கு 11 பேர் பசியால் மரணிப்பதாக ஆக்ஸ்பாம் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி 15 ஆயிரத்து 840 பேர் ஒரு நாளைக்கு உயிரிழப்பதாகவும், கொரோனா காலகட்டத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் 52 லட்சம் மக்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தெற்கு சூடான், எத்தியோப்பியா, […]
அமெரிக்காவில் தற்போது வரை சுமார் 15,82,87,566 பேர் கொரோனாவிற்கான 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றி உலக நாடுகள் அனைத்தும் பரவிய கொரோனாவை விரட்டியடிப்பதற்காக அந்தந்த நாடுகள் தன் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவில் தற்போது வரை 33,23,45,797 ( 33.2 கோடி ) கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு போடப்பட்டிருப்பதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. மேலும் […]
வங்காளதேசத்தில் அமைந்துள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் 52 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்காள தேசத்தின் தலைநகரில் 6 தளங்களைக் கொண்ட உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான ஹஸிம் ஜூஸ் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மேல் தளங்களிலிருந்து கீழே குதித்ததால் படுகாயமடைந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி […]
சிறிய ரக விமானம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடன் நாட்டில் ஒரேப்ரோ நகரத்தில் விமான நிலையம் ஒன்று உள்ளது. அந்த விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரு விமானி மற்றும் 8 ஸ்கை டைவிங் வீரர்கள் பயணித்துள்ளனர். இதனையடுத்து அந்த விமானம் புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]
பிரான்ஸின் பாதுகாப்பு ஆலோசனை செயலாளர் தன் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனால் அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களுக்கு கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு ஏற்றவாறு சில முக்கிய தகவல்களை கொடுத்து வருகிறது. அதன்படி பிரான்ஸின் பாதுகாப்பு ஆலோசனை செயலாளர் தன் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் […]
இங்கிலாந்தின் தலைநகரில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் இதுவரை எவரையுமே கைது செய்யவில்லை என்று துப்பறிவு தலைமை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் தலைநகரான லண்டனிலுள்ள Lambeth என்னும் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து துப்பறியும் தலைமை ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது, 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் […]
போலி சான்றிதழ்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து விசாவினை பெற்றுக் கொள்பவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கப்படும் என்று துபாய் நாட்டின் மூத்த வழக்கறிஞர் ஒருவர் எச்சரித்துள்ளார். துபாய் நாட்டில் வசித்து வந்த சிரியாவைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் தன்னுடைய மகனின் விசாவிற்காக போலியாக அனைத்து சான்றிதழ்களையும் தயார் செய்து அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார். இவரின் இந்த திருட்டுத்தனத்தை தூதரக அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள். இது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது […]
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் மத்தியில் நிவேதா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை அடுத்து சில வினாடிகளில் அதே மாகாணத்தில் ஸ்டாக்டன் நகரில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் […]
முன்னாள் அதிபர் கூகுள், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடங்கங்களின் மீது வழக்கு தொடுத்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூகுள், ட்விட்டர் , ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் வன்முறையை தூண்டக்கூடிய விதத்தில் அவருடைய கருத்துக்கள் மற்றும் தகவல்கள் இருந்ததால் ட்ரம்பு மீது பல்வேறு புகார்கள் எழும்பியது. இதனால் சமூக ஊடகங்களான கூகுள், ட்விட்டர் , ஃபேஸ்புக் ஆகியவற்றில் இருந்த ட்ரம்பின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனை […]
அடுக்குமாடி கட்டிடக் குடியிருப்பு இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் மாயமான 80 பேரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை உள்ளது. இந்த மியாமி பகுதியின் அருகில் 12 தளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த குடியிருப்பானது கடந்த 25ஆம் தேதி திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அந்த குடியிருப்பில் இருந்த 80 பேர்கள் மாயமாகி உள்ளனர். இதனை அறிந்த தீயணைப்பு குழு அவர்களை மீட்பதற்காக சம்பவ […]
சந்தையில் அதிக விலைக்கு விற்கும் மியாசாகி மா மரங்களை பாதுகாக்க மத்தியபிரதேச நபரொருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானிய மியாசாகி மாம்பழங்கள் கடந்தாண்டு சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ரூபாய் 2.70 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜபல்பூரில் வசிக்கும் சங்கல்ப் பரிஹாஸ் என்பவர் தன்னுடைய மனைவியுடன் சென்னையிலுள்ள ரயில் ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்போது அருகில் இருந்த நபர் ஒருவர் பரிஹாஸிற்கு 2 மா கன்றுகளை கொடுத்துள்ளார். அதனை ஏற்றுக்கொள்ள பரிஹாஸ் தன்னுடைய வீட்டில் அந்த […]
ஊழல் வழக்கில் சாட்சி சொல்ல மறுத்ததால் முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிபருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை அளித்து அரசியல் சாசன கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா ஆவார். ஜுமா பதவி வகித்த ஒன்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல் வழக்கில் சாட்சி சொல்ல மறுத்ததால் அவரின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட் அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கடந்த […]
அகதிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் தற்போது அதிரடியான தண்டனை ஒன்றை பிறப்பித்துள்ளது. ஜெர்மனியில் Burbach என்னுமிடத்தில் புகலிட மையம் ஒன்று அமைந்துள்ளது. இதில் அகதிகள் வசித்து வருகிறார்கள். இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு புகலிட மையத்தின் பாதுகாவலர்களும் சமூக சேவகர் ஒருவரும் ஒன்றாக சேர்ந்து அங்கு வாழும் அகதிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்கள். அதாவது அங்கு வாழும் அகதி ஒருவரை புகலிட மையத்தின் பாதுகாவலர்கள் அடித்து சித்திரவதை […]
சிறிய வகை பயிற்சி விமானம் ஒன்று மலையின் மீது மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வடக்கே கேசர்வான் மாகாணம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி நண்பகல் 1.30 மணியளவில் பெய்ரூட் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரு விமானி உட்பட 2 பேர் பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து இந்த விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டு […]
ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவான நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பைசாபாத் நகரில் நேற்று மதியம் 1.50 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியிலிருந்து 167 கிலோ மீட்டர் ஆழத்திலும் பைசாபாத் நகரிலிருந்து 96 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இதனையடுத்து இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் […]
உலகிலேயே குள்ளமான பசுவை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது. வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து சாரிகிராம் என்ற பகுதி 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஷிகோர் என்பவர் வேளாண் பண்ணை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் உலகிலேயே குள்ளமான பசு ஒன்று உள்ளது. அந்த பசுவிற்கு ராணி என பெயர் சூட்டியுள்ளனர். இந்தப் பசுவின் உயரம் மற்றும் எடையானது 50 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 26 கிலோகிராம் ஆகும். […]
சுற்றுலா பேருந்தில் கஞ்சா கடத்திய இரட்டை சகோதரர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் ஆர்கு மாகாணத்தில் எல்லை தாண்டி சென்ற சுற்றுலா பேருந்து ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த பேருந்தில் இருந்த இரட்டை சகோதரர்கள் சுற்றுலா செல்வது போல நடித்து கஞ்சா கடத்தி வந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் அந்த சுற்றுலா பேருந்தை மடக்கி அதிலிருந்து 116 கிலோ கஞ்சாவை எடுத்துள்ளனர். இந்த போதை பொருளின் மதிப்பு ஒரு மில்லியன் சுவிஸ் […]
துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கப்பல் திடீரென வெடித்து சிதறியதில் கட்டிடங்கள் அதிர்ந்தன. துபாய் நாட்டில் உள்ள ஜெபெல் அலி துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு கப்பல் திடீரென வெடித்து சிதறியது. இந்த தீ விபத்தினால் துறைமுகத்திற்கு 25 கி.மீ தொலைவில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள ஜன்னல்கள் மற்றும் சுவர்கள் அதிர்ந்ததில் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதனை அடுத்து கப்பலினுள் ஏதேனும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருந்தனவா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டுனர் உரிமம் இன்றி 20 ஆண்டுகளாக வாகனம் ஓட்டுபவரை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் லூசர்ன் நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் வேகமாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த சோதனையில் காரை ஓட்டிச்சென்ற அறுபது வயதுடைய நபர் குடிப் போதையில் இருப்பதாக நினைத்த போலீசார் அவரை விசாரித்துள்ளனர். இந்த நிலையில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த இருபது வருடங்களாக ஓட்டுநர் உரிமம் இன்றி அவர் வாகனம் ஓட்டுவது […]
போப் பிரான்சிஸ் அறுவை சிகிச்சைக்குப்பின் தற்போது குணமடைந்து வருவதாக வாடிகன் செய்தி தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ் ( 84 ) கடந்த 4-ந்தேதி சிகிச்சைக்காக இத்தாலியில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் அவருக்கு செய்யப்பட்ட மூன்று மணி நேர அறுவை சிகிச்சையில் அவருடைய பெருங்குடலின் இடதுபாகம் நீக்கப்பட்டதாகவும், தற்போது உடல் நலத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருவதாக வாடிகன் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் போப் பிரான்சிஸ் […]
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் 15 தினங்களே இருக்கும் நிலையில், டோக்கியோவில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்கு அவசரகால நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 15 தினங்களே உள்ளது. இதற்கிடையே டோக்கியோவில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் பாதிப்பு தினந்தோறும் 920 ஆக அதிகரித்துள்ளது. இதனால் டோக்கியோவில் அவசரகால நிலையை பிறப்பிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி அங்கு தேவையின்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்தல் […]
ஈரான் நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். அமெரிக்க ராணுவம் கடந்தாண்டு ஈரான் நாட்டின் தலைநகரில் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி உயிரிழந்துள்ளார். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் அந்நாட்டிலிருக்கும் அமெரிக்க படைகள் மீதும், அமெரிக்கத் தூதரகத்தின் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க ராணுவம் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் […]
தஜிகிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.1 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. தஜிகிஸ்தானில் உள்ள துசான்பே நகரிலிருந்து தென்கிழக்குப் பகுதியில் சுமார் 393 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 4.22 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியுள்ளது. இதனை அடுத்து இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து […]
ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. தைவான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஹுவாலியர் கவுண்டியில் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் நேற்று இரவு 7.24 மணிக்கு நில அதிர்வானது உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனை அடுத்து சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் இந்த நிலநடுக்கம் 9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக கூறியுள்ளது. மேலும் […]
ஹைதி நாட்டு அதிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கரீபியன் கடலில் பல்வேறு தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. அந்த நாட்டில் இருக்கும் போர்ட்டோ பிரின்ஸ் நகரில் உள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில் ஹைதியின் அதிபர் ஜோவெனல் மாய்சே நேற்று மர்ம கும்பல் ஒன்றால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இக்கோரச் சம்பவத்தில் அவரது மனைவி மார்ட்டின் மாய்சேவும் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய இராணுவ தளபதி எம்.எம்.நரவனே இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவர் இங்கிலாந்து பயணத்தை முடித்த பின்பு இத்தாலி சென்றுள்ளார். இதனையடுத்து அவர் இத்தாலியின் முப்படை தளபதி மற்றும் ராணுவ தளபதியுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையே பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதே ஆகும். மேலும் […]
புற்களை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இளம்பெண் மீது சிறிய வகை விமானம் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் மொன்றியல் பகுதிக்கு வடக்கே விமான ஓடுதளம் ஒன்று உள்ளது. இந்த ஓடுதளத்தின் அருகில் 27 வயதுடைய இளம் பெண் ஒருவர் புல் வெளி சமப்படுத்தும் இயந்திரத்தைக் கொண்டு அப்பகுதியில் இருக்கும் புற்களை சமன்படுத்தி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் விமான ஓடுதளத்தில் தரையிறங்குவதற்காக வந்த சிறிய வகை விமானம் ஒன்று அப்பெண்ணின் மீது மோதியதில் […]
பொதுமக்கள் பிரார்த்தனைக்காக கூடியிருந்த தேவாலயம் ஒன்றில் திடீரென நுழைந்த முதலையுடன் செல்பி எடுத்த பாதிரியாருக்கு அமெரிக்க வனத்துறை அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தில் விக்டர் என்னும் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி வழக்கம்போல் பொதுமக்கள் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்கள். அப்போது தேவாலயத்திற்குள் திடீரென முதலை ஒன்று நுழைந்துள்ளது. இந்த முதலையை கண்ட தேவாலயத்திலிருந்த பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தலை தெறித்து ஓடியுள்ளார்கள். […]
கொரோனா தொற்றுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசி தீவிரமாக செயலாற்றுவதால் அதனை குழந்தைகளுக்கு செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா அதற்கான ஆரம்ப கட்ட சோதனை பணிகளை தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என்னும் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக மிகவும் தீவிரமாக செயலாற்றுகிறது. இதனால் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை 12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த திட்டமிட்டுள்ள […]
ஒரே நாளில் சுமார் 8.4 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பைப் பெற்ற அமேசான் நிறுவனத்தின் தலைவர் தனது முந்தைய உலக பணக்காரர் என்னும் சாதனையை முறியடித்துள்ளார். பென்டகன் நிறுவனம் மைக்ரோசாப்ட் உடன் போட்டிருந்த 10 பில்லியன் டாலர் மதிப்புடைய ஜெடி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் மைக்ரோசாஃப்ட் உடனான அமேசான் நிறுவனத்தின் பங்கு 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் அமேசான் நிறுவனத்தினுடைய தலைவரான ஜெப் பெசோஸ் என்பவருக்கு ஒரே நாளில் சுமார் 8.4 பில்லியன் […]
கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவருடன் இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் இருந்ததால் அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் டென்னிஸ் விளையாட்டின் ரசிகை ஆவார். இந்நிலையில் இளவரசி கேட் மிடில்டன் சமீபத்தில் வாஷிங்டன் நகரில் நடைப்பெற்ற டென்னிஸ் போட்டியை காண சென்றுள்ளார். இதையெடுத்து அங்கு அவருடன் இருந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டில் […]
விளையாட்டு மைதானத்தில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோ நாட்டில் மோரிலாஸ் மாகாணத்தில் குவர்னவாகா பகுதியில் புளோரஸ் மேகன் என்ற விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கால்பந்து போட்டி நடந்து கொண்டிருக்கும் போது தீடிரென மர்ம நபர்கள் மைதானத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதன் பின் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் தப்பிச் சென்று விட்டனர். இந்த […]
பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் பள்ளி மாணவர்களை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் கட்டுனா மாநிலத்தில் இருக்கும் பெத்தேல் பாப்ஸ்டிக் என்ற பள்ளியில் நடைபெற்ற பரீட்சையில் பங்கேற்பதற்காக மாணவர்கள் வந்திருந்தனர். இதனையடுத்து பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மர்மநபர்களால் கடத்தப்பட்டவர்களில் ஒரு ஆசிரியை மற்றும் 26 […]
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் 2 வாலிபர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் ஓஹியோ மாகாணத்தில் சின்சின்னாட்டி பகுதியில் இருக்கும் ஒரு பூங்காவில் வாலிபர்கள் 400 ஒன்று சேர்ந்து சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது தீடிரென மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 மற்றும் 19 வயதுடைய 2 வாலிபர்கள் சம்பவ […]
கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீதியில் தஞ்சம் அடைந்தனர். பிஜூ தீவின் தெற்கு பகுதயில் 537.93 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று முன்தினம் மாலை 6.47 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோளில் 5.0 ஆகப் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அங்குள்ள மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் […]
பழங்குடி மக்களுக்காக போராடிய மற்றும் பாதிரி யாராக பதவியேற்ற தேன் ஸ்வாமி மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உடல்நலம் குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 1937 ஆம் ஆண்டு பிறந்த ஸ்டேன் சுவாமி 1957 ஆம் ஆண்டு துறவியாகியுள்ளார். அதன் பின்னர் 1970 ஆம் ஆண்டு பாதிரியாராக பதவியேற்றுள்ளார். இதனையடுத்து இவர் சுமார் 36 வருடம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று அங்குள்ள பழங்குடியின மக்களின் உரிமையை பெற்றுத் தருவதற்காக போராடியுள்ளார். இதனைத் […]
பூங்காவில் வைத்து 2 பெண்களை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இளைஞனின் குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. லண்டனிலுள்ள Barnett Grove என்னும் பகுதியில் டானியல் ஹுசைன் என்னும் 19 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் Wembley என்னும் பூங்காவில் வைத்து பிறந்தநாள் விழாவை கொண்டாடிய 2 சகோதரிகளை கத்தியால் பயங்கரமாக குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பூங்காவிலுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதற்கிடையே பூங்காவில் இருந்த எவரோ அங்கு […]
காலங்காலமாக பெண்கள் மட்டுமே வாழும் வனப்பகுதி ஒன்றில் தற்போது வரை அனைவரும் பிறந்த மேனியாகவே சுற்றி திரியும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் பப்புவா என்னும் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காலங்காலமாகவே பெண்கள் மட்டுமே வாழ்கிறார்கள். அதோடு மட்டுமின்றி அந்த பப்புவா வனப் பகுதிக்கு ஏதேனும் பெண்கள் செல்ல நினைத்தால் அவர்கள் கட்டாயமாக ஆடைகளை கலைத்து விட்டு பிறந்த மேனியாக தான் சொல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் ஏதேனும் ஆண்கள் அத்துமீறி […]
ரஷ்யாவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் தீடிரென மாயமானதால் பரப்பரப்பு ஏற்ப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டில் இருந்து 28 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் விமானம் கம்சட்கா தீபகற்பத்தின் மேலே பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உட்பட 22 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் பயணம் செய்ததாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மாயமான விமானத்தை கம்சட்கா தீபகற்பத்தில் இருக்கும் மேற்கு கடற்கரையில் உள்ள பழனா நகரின் அருகில் இரண்டு […]
அமெரிக்காவின் 245 ஆவது சுதந்திர தினம் வான வேடிக்கைகளுடன் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டனில் 245 ஆவது சுதந்திர தினம் வான வேடிக்கைகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரின் குடும்பத்தார்கள் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து கண்டு மகிழ்ந்தனர். இதுவே அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் சுதந்திர தின விழாவாகும். இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, கடந்த […]
சூயஸ் கால்வாயில் எகிப்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருந்த எவர் கிவன் சரக்கு கப்பல் ஜூலை மாதம் 7ஆம் தேதி விடுவிக்கப்படவுள்ளது. எவர் கிவன் ஜப்பானிய சரக்குக் கப்பல் கடந்த மாதம் மார்ச் 23ஆம் தேதி அன்று சூயஸ் கால்வாயை கடக்க முயற்சித்தப் போது தரைதட்டி நின்றுள்ளது. இந்தக் கப்பல் சுமார் ஒரு வாரகாலமாக அங்கேயே நின்றதால் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் பல கப்பல்கள் திணறின. இதனால் போக்குவரத்து தடைப்பட்டதால் […]
ஜூலை 19ஆம் தேதிக்குப் பிறகு இங்கிலாந்தில் தொடரும் மற்றும் நீக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு நாடு பழைய நிலைக்கு திரும்பும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 19 ஆம் தேதிக்கு பிறகு 6 பேர் மட்டுமே கூட வேண்டும் என்ற விதி நீங்கி பொது இடங்களில் எத்தனை பேர் வேண்டுமானாலும் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படவுள்ளது. மேலும் […]
தன்னுடைய உயிரையும் துச்சமாக கருதி கடலினுள் உயிருக்கு போராடிய இலங்கை பெண்மணியை காப்பாற்றிய பாகிஸ்தானியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் Ajman marina என்னும் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகம்மது என்பவர் சென்றுள்ளார். அப்போது திடீரென கடலுக்குள் இருந்து “என்னை காப்பாற்றுங்கள்” என்று கூறிக்கொண்டே ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த முகம்மது தன்னுடைய உயிரையும் துச்சமாக கருதி கடலுக்குள் விழுந்து அந்த பெண்ணை […]