Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இது 90% செயல்படுமாம்…. ஒப்புதல் அளித்த இந்திய மருத்துவ நிறுவனம்….!!

கொரோனாவுக்கு எதிராக 90% செயல்படக்கூடிய மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாடு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக 90% செயல்படக்கூடியதாகவும், 28 நாட்கள் இடைவெளியில் செலுத்தக்கூடியதாகவும், 2 டேஸ் முறையைக் கொண்டதாகவும் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி திகழ்கிறது. இந்நிலையில் இதனை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு நிறுவனம் சிப்லா நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி சிப்லா நிறுவனம் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

NHS ஊழியர்களுக்கு பிரித்தானியாவின் உயரிய விருது…. மகாராணியாரின் கையால் எழுதப்பட்ட பாராட்டு கடிதம்….!!

NHS நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிப்பதற்காக ஜார்ஜ் சிலுவை மற்றும் காலன்ட்ரி பதக்கம் ஆகியவற்றை வழங்க  மகாராணியார் அறிவித்துள்ளார். பிரித்தானியா நாட்டில் 73 ஆண்டுகளாக  NHS  நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தை கௌரவிக்கும் விதமாக மகாராணியார் ஜார்ஜ் சிலுவையை வழங்கியுள்ளார். மேலும் இதில் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிப்பதற்கு காலன்ட்ரி பதக்கம் (Queen’s Gallantry Medal)    வழங்குவதாகவும்  மகாராணியார் அறிவுறுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக கொரோனா  கால கட்டங்களில் துணிச்சலுடனும், மனிதாபிமானதுடனும் பணிபுரிந்த இந்த பதக்கத்தை பெரும் […]

Categories
உலக செய்திகள்

இது என்னவாக இருக்கும்…? திடீரென்று தெரிந்த அரிய சாதனம்…. அதிர்ச்சியில் உறைந்து போன வாலிபர்….!!

இங்கிலாந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவர் கடற்கரை வான்வெளியில் பெரிய பறக்கும் தட்டு போன்ற சாதனத்தை பார்த்து திகைத்துள்ளார். இங்கிலாந்தில் Devon கவுண்டி என்னும் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரைக்கு அருகேயிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 36 வயதுடைய matthew என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய கண்களுக்கு கடற்கரையின் வான்வெளியில் பெரிய பறக்கும் தட்டு போன்ற சாதனம் ஒன்று தென்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த matthew அதனை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் இந்த அதிர்ச்சிக்குரிய […]

Categories
உலக செய்திகள்

பிணத்துடன் பயணம் செய்த பயணிகள்…. உண்மையை உடைத்த செவிலியர்…. வெளிவந்த முக்கிய தகவல்….!!

ஓடும் பேருந்தில் ஊழியர் ஒருவர் இறந்து கிடந்ததை கூட அறியாத சகபயணிகள் சடலத்துடன் சுமார் 6 மணி நேரம் பயணம் செய்த சம்பவம் தொடர்பில் அவருடைய மகன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்விட்சர்லாந்திலுள்ள சூரிச்சில் பேருந்து ஒன்றில் பயணம் செய்த 64 வயதாகும் De sando என்பவர் திடீரென உயிரிழந்துள்ளார். ஆனால் இதனை கூட கவனிக்காத சக பயணிகளும், பேருந்து அலுவலர்களும் சடலத்துடன் 6 மணி நேரம் பயணம் செய்துள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து அவருடைய […]

Categories
உலக செய்திகள்

ஜாலியாக சென்ற பெண்கள்…. திடீரென்று மோசமான வானிலை…. இறுதியில் நடந்த சோகம்….!!

ஆல்பஸ் மலையிலுள்ள ஏற்றத்தில் இரண்டு பெண்கள் சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்த் ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள ஏற்றத்திற்கு இத்தாலியைச் சேர்ந்த 2 பெண்களும், 1 ஆணும் சென்றுள்ளார்கள். இவர்கள் மூவரும் மலையேற்றத்திலுள்ள vincent pyramid என்னும் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென வானிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் இவர்கள் மூவரும் கடும் பனியில் உறைந்துள்ளார்கள். இவர்களை மீட்பதற்கு இத்தாலிய மீட்புக்குழுவினர்கள் ஹெலிகாப்டர் ஒன்றில் சென்றும் கூட வானிலை […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! மீண்டும் விண்வெளிக்கு பறக்கயிருக்கும் இந்திய வீராங்கனை…. வாழ்த்துக்களை தெரிவிக்கும் பல தரப்பு கட்சியினர்கள்….!!

அடுத்த வார இறுதியில் விண்வெளிக்கு பயணம் செய்யவுள்ள தனியார் விண்வெளி நிறுவன குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவரும் பங்கேற்கவுள்ளார். அமெரிக்காவில் விர்ஜின் கேலடிக் என்னும் தனியார் விண்வெளி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தினுடைய தலைவருடன் சேர்ந்து 5 பேர் கொண்ட குழுக்கள் அடுத்த வார இறுதியில் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள “யூனிட்டி 22” ல் விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள். இதற்கிடையே இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிரிஷா என்பவர் துணை […]

Categories
உலக செய்திகள்

ஓடு தளத்திலிருந்து விலகிய விமானம்…. 43 பேர் பலி…. விசாரணைக்கு உத்தரவிட்ட பிலிப்பைன்ஸ் அரசு….

இராணுவ வீரர்களுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மிண்டானவ் தீவிலிருந்து ஜோலோ தீவிற்கு  96 ராணுவ வீரர்களுடன் சி -130 ஹெர்குலஸ் விமானம் சென்றது. இந்த விமானம் தரையிறங்கும் சமயத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து ஓடு பாதையிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 43 பேர் பரிதாமாக  உயிரிழந்துள்ளனர். மேலும் 53 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

இத என்ன செய்யலாம்…? திடீரென்று அடித்த ஜாக்பாட்…. திக்குமுக்காடிய இந்தியர்….!!

இந்தியாவைச் சேர்ந்த நபருக்கு லாட்டரி குலுக்கலில் 20 மில்லியன் திர்ஹாம் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது. இந்தியாவில் உள்ள கேரளாவில் சோமராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து துபாயிலுள்ள பல நிறுவனங்களில் டிரைவர் வேலையை பார்த்துள்ளார். இவர் சமீபத்தில் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கான லாட்டரி குலுக்கலில் முதல் பரிசு தொகையாக 20 மில்லியன் திர்ஹாமும், 2 ஆம் பரிசு தொகையாக 3 மில்லியன் திர்ஹாமும், 3 […]

Categories
உலக செய்திகள்

இதுல எல்லா வசதியும் இருக்கு…. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய மாடல்…. அதிரடியாக களமிறங்கும் ஐபோன்-13…!!

ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தவுள்ள பல வசதிகளைவுடைய புதிய ஐபோன்-13 னின் விலை 70,000 ரூபாயிலிருந்து தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமபடுத்தவுள்ள ஐபோன்-13 டெக் உலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஐபோன் 13 mini, 13 pro max, 13, 13 pro என்று 4 வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஐபோன்-13 னிலுள்ள கேமராவின் தரம் periscopic lens […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் கொடுத்தா தான் இவங்கள காப்பாற்ற முடியும்…. கடுமையாக பாதிக்கப்பட்ட 33,000 குழந்தைகள்…. முக்கிய தகவலை வெளியிட்ட ஐ.நா அதிகாரி….!!

உள்நாட்டு மோதலால் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு மட்டுமின்றி 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எத்தியோப்பிய அரசாங்கத்திற்கும், அந்நாட்டிலுள்ள டைக்ரே என்னும் பகுதியில் வாழும் மக்கள் விடுதலை முன்னணிக்குமிடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதனையடுத்து கடந்த மாதம் டைக்ரேவில் தாக்குதலை நடத்திய கிளர்ச்சியாளர்கள் மீகேலை என்னும் பகுதியை கைப்பற்றியுள்ளார்கள். இதனால் ஏற்பட்ட உள்நாட்டு மோதலின் காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு மட்டுமின்றி 4 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டருக்கு பதிலாக இது…. அதிரடியாக உருவாக்கப்பட்ட புதிய இணையத்தளம்…. மீண்டும் எழுந்து வரும் டிரம்ப்….!!

777 எழுத்துக்களை கொண்ட பதிவுகளை பதிவேற்றம் செய்யும் விதமாகவும், 3 நிமிட வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் விதமாகவும் ட்ரம்ப் குழுவினர்கள் புதுவித சமூக வலைத்தள பக்கத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிடும் சர்ச்சைக்குரிய கருத்தால் டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தினுள் நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதனால் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் ட்ரம்பினுடைய இணையதள பக்கத்திற்கு நிரந்தரமாக தடை உத்தரவை விதித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! தந்தம் போன்ற மூக்கு பகுதியா…? இதெல்லாம் இனப்பெருக்கத்திற்காக வந்திருக்கு…. ஆய்வின் முடிவில் வெளியான முக்கிய தகவல்…!!

ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் இனப்பெருக்கத்திற்காக ஆர்டிக் கடல் பகுதிக்கு வந்த அரியவகை இனமான நார்வால் எனப்படும் திமிங்கலத்தை கண்டறிந்துள்ளார்கள். ரஷ்ய நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் ஆர்டிக் கடல் பகுதியில் அழிந்து வரும் அரியவகை இனமான நார்வால் எனப்படும் திமிங்கலங்களை கண்டறிந்துள்ளார்கள். இந்த நார்வால் திமிங்கிலங்களுக்கு தந்தம் போன்ற கூர்மையான மூக்கு பகுதி காணப்படுகிறது. இந்நிலையில இந்த நார்வால் திமிங்கலங்கள் இனப்பெருக்கத்திற்காக ரஷ்யாவின் ஆர்டிக் கடல் பகுதிக்கு தற்காலிகமாக வந்திருப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த திமிங்கலங்கள் தந்தத்திற்காகவும் இறைச்சிக்காகவும் […]

Categories
உலக செய்திகள்

வயதான தம்பதியரின் நீண்ட முத்தம்…. கொரோனா காலத்தை புகைப்படமாக பதிவு செய்த கலைஞர்…. பின்னர் அடித்த ஜாக்பாட்….!!

ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்த புகைப்பட கலைஞர் ஒருவருக்கு இந்த ஆண்டுக்கான புலிட்சர் பரிசு கிடைத்துள்ளது. ஸ்பெயினில் வசித்து வரும் 85 வயதான பாஸ்கல் என்பவருக்கும், 82 வயதான அகஸ்டின் என்பவருக்கும் திருமணம் முடிந்து 60 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இவர்கள் இருவரும் கொரோனா காலகட்டத்தில் சுமார் 100 நாட்கள் பிரிந்து இருந்துள்ளார்கள். இதனையடுத்து 100 நாட்கள் கழிந்த பிறகு ஒன்றாக சேர்ந்த தம்பதியர் இருவரும் நீண்ட முத்தத்தை பகிர்ந்துள்ளார்கள். இந்த […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! இதென்ன கொடுமை…? கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாறும் தோல்…. மரபணு நோயால் பாதிக்கப்பட்ட பிஞ்சு குழந்தை….!!

20 லட்சம் பேரில் ஒருவரை மட்டுமே தாக்கக்கூடிய அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த 5 மாத பெண் குழந்தை 40 ஆண்டு காலம் மட்டுமே வாழ முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து நாட்டில் அலெக்ஸ் மற்றும் டேவ் என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லெக்ஸி ராபின்ஸ் என்னும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து இந்த குழந்தையினுடைய கைவிரல்கள் அசையாமல் இருந்திருக்கிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து மருத்துவரிடம் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! இவங்க மகள் மிகவும் குளிர்ச்சியானவளா…? இளவரசர் ஹரியின் பெருமித பேச்சு….!!

இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளியேறிய இளவரசர் ஹாரி தற்போது தங்களுக்கு பிறந்த மகளை குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய ஹரி-மேகன் தம்பதியர் தற்போது அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்கள். இந்த இரு தம்பதியருக்கும் கடந்த ஜூன் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் இளவரசர் ஹரி தன்னுடைய மகள் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தன்னுடைய மகளான லிலிபெட் டயானா மிகவும் குளிர்ச்சியானவள் என்றுள்ளார். மேலும் மேகனும் நானும் மிகவும் […]

Categories
உலக செய்திகள்

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் லண்டன்…. ஒன்றாக கூடிய ரசிகர்கள்…. படுகாயமடைந்த காவல்துறை அதிகாரிகள்….!!

இங்கிலாந்து அணி யூரோ கால்பந்து போட்டியின் காலிறுதியில் வெற்றி பெற்றதை கொண்டாடிய ரசிகர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பு தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து அணி 2020 க்கான யூரோ கால்பந்து காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இதனை கொண்டாடுவதற்காக இங்கிலாந்து தலைநகரான லண்டனில் கால்பந்து ரசிகர்கள் கூடியுள்ளார்கள். இதற்கிடையே லண்டனில் கொரோனா தொற்று காரணமாக சுகாதார நெருக்கடி இருந்து வருகிறது. இதனால் காவல்துறை அதிகாரிகள் லண்டனில் கூடிய கால்பந்து ரசிகர்களை […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இவ்ளோ பரிசு தொகையா…. இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்…. வாழ்த்துக்களை தெரிவித்த நண்பர்கள்….!!

துபாயில் பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு லாட்டரியின் மூலம் 20 மில்லியன் திர்ஹாம் கிடைத்துள்ளது. இந்தியாவிலுள்ள கேரளாவில் சோமராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு தன்னுடைய குடும்பத்துடன் துபாயில் கார் டிரைவராக பணிபுரிவதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர் சமீபத்தில் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த லாட்டரி டிக்கெட் குழுக்களின் முதல் பரிசாக 20 மில்லியன் திர்ஹாமும், 2 ஆவது பரிசாக 3 மில்லியன் திர்ஹாமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோமராஜன் வாங்கிய […]

Categories
உலக செய்திகள்

இது பயங்கரவாதத் தாக்குதலா…? விபத்துக்குள்ளான ராணுவ விமானம்…. செய்தி தொடர்பாளரின் முக்கிய தகவல்…!!

85 பேரை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் தரையிறங்கும் போது திடீரென்று விபத்துக்குள்ளான சம்பவம் பயங்கரவாத தாக்குதலால் ஏற்படவில்லை என்று பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஜோலா தீவிலிருந்து சி-130 என்னும் ராணுவ விமானம் சுமார் 85 ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. இதனையடுத்து இந்த ராணுவ விமானம் தரையிறங்கும் போது திடீரென்று விபத்துக்குள்ளானது என்று அந்நாட்டின் ராணுவ ஜெனரல் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை 15 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும், […]

Categories
உலக செய்திகள்

தரையிறங்கும் நேரத்தில் இப்படி நடந்துருச்சு…. 85 பேரை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம்…. செய்தித் தொடர்பாளர் தெரிவித்த முக்கிய தகவல்….!!

85 பேருடன் வானில் பறந்த ராணுவ விமானம் தரையிறங்கும் சமயத்தில் விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் ஜோலா தீவிலிருந்து c-130 என்னும் ராணுவ விமானம் 85 பேரை ஏற்றிச் சென்றுள்ளது. இந்த விமானம் தரை இறங்கும் சமயத்தில் திடீரென்று விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் ராணுவ ஜெனரல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விமானத்தில் சென்றவர்களை உயிருடன் மீட்பதற்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த கோர விபத்தில் […]

Categories
உலக செய்திகள்

கதறி அழுத சிறுமி…. ஆன்லைனில் திரட்டப்பட்ட நிதி…. இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்…!!

ஜெர்மனி அணி கால்பந்து போட்டியில் தோல்வியடைந்ததை தாங்கமுடியாமால் மைதானத்தில் வைத்து கண்ணீர் விட்டு கதறி அழுத சிறுமிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் சுமார் 29 லட்சம் ரூபாயை நிதியாக திரட்டியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற யூரோ கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்த போட்டியை காண வந்த சிறுமி, ஜெர்மனி தோல்வியடைந்ததை தாங்கமுடியாமல் மைதானத்தில் வைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிய நிலையில் இங்கிலாந்து பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று இடிந்த அடுக்குமாடி கட்டிடம்…. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. முழுவீச்சில் நடைபெறும் மீட்பு பணி….!!

12 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் மியாமி கடற்கரையில் 12 அடுக்குமாடி கட்டிட குடியிருப்பு வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வளாகம் திடீரென்று ஜூன் 25ஆம் தேதி இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் அதில் வசித்து வந்த பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளார். இதனால் இடிபாடுகளில் சிக்கியவர்களை […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று வெடித்த காரின் டயர்…. குடும்பத்தோடு ஆற்றில் மூழ்கிய சோகம்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சென்ற காரினுடைய டயர் வெடித்து சிதறியதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நரோவல் என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கார் ஒன்றில் புறப்பட்டு சூரா பண்டி கிராமம் நோக்கி சென்றுள்ளார்கள். இதனையடுத்து இவர்கள் சென்று கொண்டிருந்த காரினுடைய டயர் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]

Categories
உலக செய்திகள்

தலைவிரித்தாடும் பயங்கரவாதிகளின் தாக்குதல்…. சம்பவ இடத்திலேயே பலியான சோகம்…. குற்றச்சாட்டை முன்வைத்த பிரதமர்….!!

பயங்கரவாதி ஒருவர் உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்த தோடு மட்டுமின்றி அதனை வெடிக்கச் செய்ததில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியா நாட்டில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சோமாலியாவின் தலைநகரான மோகாதிசுவில் ஏராளமான பொதுமக்கள் அமர்ந்து ஹோட்டல் ஒன்றில் உணவை உண்டு கொண்டிருந்துள்ளார்கள். அப்போது திடீரென ஹோட்டலுக்குள் பயங்கரவாதி ஒருவர் புகுந்துள்ளார். இதனையடுத்து அவர் உடல் முழுவதும் கட்டி […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! கொரோனா தடுப்பூசியினால இந்த பிரச்சனை வந்திருக்கா…? தீர்வை கண்டறிந்த அறிவியலாளர்கள்….!!

கனட நாட்டின் அறிவியலாளர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு உருவாகும் ரத்த கட்டிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உகந்த தீர்வை கண்டறிந்துள்ளார்கள். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவுக்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான அஸ்ட்ராஜெனேகாவை செலுத்திக்கொண்ட சிலருக்கு இரத்தக்கட்டிகள் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட்டுள்ளத. இதனை கனடா நாட்டின் எம்.சி மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். அப்போது கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு உருவாகும் இரத்தக்கட்டிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு உகந்த […]

Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமை…. பெற்ற பிள்ளையை சடலமாக மீட்ட தந்தை…. பெரும் சோகத்தில் மூழ்கியிருக்கும் ப்ளோரிடா..

மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரரின் குழந்தை, இடிந்து விழுந்த 12 அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவில் 12 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த 12 அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய 22 பேரை மீட்பு பணி வீரர்கள் சடலமாக மீட்டுள்ளார்கள். இந்நிலையில் தொடர்ந்து 9-ஆவது நாளாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் மேலும் […]

Categories
உலக செய்திகள்

மிருகத்தை விட மோசமா நடத்துறாங்க…. தீவிரமாக பரவி வரும் பரிசோதனை முறை…. வெளியாகியுள்ள முக்கிய தகவல்….!!

பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்யும் முறைகளையும், ஹைமன் மறுசீரமைப்பு நடைமுறைகளையும் தடை செய்வதற்கான சட்டத்தை பிறப்பிப்பது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்யும் முறைகளும், ஹைமன் மறுசீரமைப்பு நடைமுறைகளும் இதுவரை இல்லாத அளவில் தற்போது அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மகளிர் தொண்டு நிறுவனங்கள் கூறியதாவது, தங்களுடைய சொந்த குடும்பத்தின் வற்புறுத்தலின் பேரிலே தற்போது இருக்கும் இளம் பெண்கள் தங்களது கன்னித்தன்மையை பரிசோதனை செய்யும் முறையை […]

Categories
உலக செய்திகள்

என்ன…! 19 பேரை காணவில்லையா…? மண்ணுக்குள் புதைந்த குடியிருப்புகள்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

ஜப்பானில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் பல குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகராக டோக்கியோ விளங்குகிறது. இந்த டோக்கியோவிற்கு அருகில் அட்டாமி என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஜப்பான் முழுவதும் கனமழை பெய்து வருவதால் அட்டாமி நகரத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த பல குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்ததையடுத்து அதில் வசித்து வந்த 19 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! கடல்ல தீ எரியுதா…? 5 மணிநேரம் போராடிய வீரர்கள்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

மெக்ஸிக்கோவில் இருக்கும் வளைகுடா கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் எரிவாயு குழாயில் திடீரென்று கசிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு வட்ட வடிவில் தீ ஏற்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவில் இருக்கும் வளைகுடா கடலுக்கடியில் எரிவாயு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீருக்கடியில் இருக்கும் எரிவாயு குழாயில் திடீரென்று கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலின் மேற்பரப்பில் வட்ட வடிவில் தீ ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கடலின் மேற்பரப்பில் தீப்பிடித்த இடத்திற்கு சற்று அருகே எண்ணெய் எடுக்கும் இடம் அமைந்துள்ளது. இதனையடுத்து தீப்பற்றி எரிந்த இடத்திற்கு தீயணைக்கும் படகுகள் […]

Categories
உலக செய்திகள்

இங்கயும் நல்லவங்க இருக்காங்க…. கதறி அழுத சிறுமி…. பிரபல நாடுகளில் நடைபெறும் போட்டி….!!

யூரோ கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி தோல்வியடைந்ததை கண்டு அந்நாட்டின் சிறுமி ஒருவர் கதறி அழுததை இங்கிலாந்து பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேலி செய்துள்ளார்கள். ஐரோப்பிய நாடுகளுக்கிடையே யூரோ கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதனால் இங்கிலாந்து-ஜெர்மனி நாடுகள் இந்த யூரோ கால்பந்து போட்டியில் மோதியுள்ளது. அதில் இங்கிலாந்து வெற்றி பெற்றதையடுத்து கால்பந்து போட்டியை மைதானத்தில் வந்து காணவந்த ஜெர்மனி சிறுமி ஒருவர் தன்னுடைய நாடு தோல்வியடைந்ததை கண்டு கதறி அழுதுள்ளார். இந்த புகைப்படம் சமூக […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! பள்ளிக்கூடத்திற்கு அருகே கல்லறையா…? பொது மக்களிடையே எழுந்த சந்தேகம்….!!

கனடாவில் பள்ளிக்கு அருகே சுமார் 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் செயின்ட் யூஜின்ஸ் என்னும் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது இந்த பள்ளிக்கூடம் கத்தோலிக்க திருச்சபையால் கடந்த 1912 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 1970 ஆம் ஆண்டு வரை இயங்கியுள்ளது. இதனையடுத்து தற்போது இந்த செயின்ட் யூஜின்ஸ் என்னும் பள்ளிக்கு அருகே சுமார் 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் உடல்கள் செயின்ட் யூஜின்ஸ் பள்ளியில் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! கழிவுநீரில் ஆய்வா…? வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!!

பெடரல் பாலிடெக்னிக்குகள், டெல்டா வகை கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதை சாக்கடை நீரின் ஆய்வில் கண்டறிந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் இருக்கும் அனைத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்தும் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த கழிவுநீர் பரிசோதனையை பெடரல் பாலிடெக்னிக்குகள், சூரஜ் மற்றும் Lausanne பகுதிகளில் நடத்தி வருகிறது. அதன் முடிவில் சூரச்சில் 33 சதவீத மாதிரிகளில் டெல்டா வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பெர்லினில் எடுக்கப்பட்டிருக்கும் மாதிரிகளில் பாதியளவில் டெல்டா வகை கொரோனா […]

Categories
உலக செய்திகள்

அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த பயணி…. அதிவேகமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி…. சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள்….!!

ரயில்வே துறை காவல் துறை அதிகாரி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பயணியை உயிருடன் மீட்டுள்ளார். இந்தியாவிலிருக்கும் மும்பையில் போரிவாலி என்னும் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 29-ஆம் தேதி இந்த ரயில்வே நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்ற ரயிலில் பயணி ஒருவர் ஏறுவதற்கு முயன்றுள்ளார். ஆனால் அந்த பயணியால் ஓடும் ரயிலில் ஏற முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர், பயணி […]

Categories
உலக செய்திகள்

நேரடி ஷோனு கூட பார்க்கல…. அதிர்ச்சியடைந்த நியூஸ் சேனல்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

நேரடி ஒளிபரப்பில் தலைப்புச் செய்திகளை வாசித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென “இந்த செய்தி நிறுவனம் தங்கள் யாருக்குமே ஊதியத்தை வழங்கவில்லை” என்று நிர்வாகத்தின் மீது குற்றம் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாட்டில் கேபிஎன் என்னும் செய்தி நிறுவனம் உள்ளது. இதில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் கலிமினா வழக்கம்போல நேரடி ஒளிபரப்பில் தலைப்பு செய்திகளை வாசிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் தலைப்புச் செய்திகளை வாசித்துக்கொண்டிருந்த கலிமினா திடீரென ஆடியன்ஸை நோக்கி “இந்த செய்தி நிறுவனம் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! புதிய ஆதி மனித இனமா…? இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு….!!

தற்போது இருக்கும் மனித இனத்துடன் ஒத்துப்போகாத ஆதி மனித இனத்தின் மண்டை ஓடு மற்றும் தாடைப் பகுதியை இஸ்ரேல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இஸ்ரேல் நாட்டிலிருக்கும் ராம்லா என்னும் பகுதியில் ஹீப்ரூ பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில் தற்போது இருக்கும் மனித இனங்களோடு ஒத்துப்போகாத ஆதி மனிதர்களுடைய மண்டை ஓடு மற்றும் தாடை பகுதி ஆராய்ச்சியாளர்களிடம் சிக்கியுள்ளது. இதனை ஆய்வு செய்த இஸ்ரேல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர், இந்த மண்டை ஓடு மற்றும் தாடை பகுதியை […]

Categories
உலக செய்திகள்

இதுலயா அலட்சியமா இருக்கணும்…. நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வடகொரியா…. முக்கிய தகவலை வெளியிட்ட ஊடகம்….!!

வட கொரிய அரசின் உயர் அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி அந்நாட்டின் தலைவர் அவர்களை கடுமையாக கண்டித்துள்ளார். வடகொரியாவில் இதுவரை எவருக்குமே கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்று அந்நாடு கூறி வருகிறது. இந்நிலையில் வடகொரிய அரசின் உயர் அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியமாக செயல்பட்டுள்ளார்கள். இதனால் வடகொரியா பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனையடுத்து வட கொரிய நாட்டின் தலைவரான கிம் ஜாங் உன் அந்நாட்டின் உயர் அதிகாரிகளை கடுமையாக கண்டித்துள்ளார் என்று […]

Categories
உலக செய்திகள்

என்ன…! வடகொரியாவில் நெருக்கடியான சூழலா…? அதிகாரிகளை கண்டித்த அதிபர்…. உண்மையை உடைத்த ஆராய்ச்சியாளர்….!!

கட்சித் தலைவர்களுடன் நடந்த சிறப்புக் கூட்டத்தில் உயர் அதிகாரிகளை வட கொரிய அதிபர் கடுமையாக கண்டித்துள்ளதாக அந்நாட்டின் பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் கட்சித் தலைவர்களுடன் நடந்த சிறப்பு கூட்டத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயர் அதிகாரிகளின் மீது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது அதிகாரிகளின் அலட்சியத்தாலயே மக்களின் பாதுகாப்பையும், நாட்டினுடைய […]

Categories
உலக செய்திகள்

இந்த சட்டம் நாட்டின் கலாச்சாரத்தை அழித்து விடும்…. அறிக்கையை தாக்கல் செய்த அரசாங்கம்…. பொங்கி எழுந்த பொதுமக்கள்….!!

ஒரு பெண், பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம் எனும் சட்டம் குறித்த அறிக்கையை தென்னாபிரிக்கா அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கும், ஓரின திருமணத்திற்கும் தென்அமெரிக்காவில் சட்டபூர்வ அனுமதியுள்ளது. இதனால் ஒரு பெண்ணும், பல ஆண்களை திருமணம் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்படி அனுமதி அளிக்குமாறு பாலின உரிமை ஆர்வலர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதனை பரிசீலனை செய்த […]

Categories
உலக செய்திகள்

இதில் முறைகேடு நடந்திருக்கு…. ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த பிரேசில்…. சுகாதாரத் துறை அமைச்சரின் அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வது குறித்த ஒப்பந்தத்தை பிரேசில் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. பிரேசில் கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 32 கோடி ரூபாய் செலவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியின் 20 கோடி டோஸ்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் பிரேசில் நாட்டினுடைய தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியினுடைய விரிவான ஆய்வுக்கு பிறகே தங்கள் நாட்டில் அதனை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

என்ன..! கூட்டு கடற்படை பயிற்சியா…? ரஷ்யாவின் அதிரடி சோதனை…. வெளியாகியுள்ள முக்கிய தகவல்….!!

கருங்கடலில் கூட்டு கடற்படை பயிற்சிகள் தொடங்கப்பட்டதையடுத்து ரஷ்யா மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, உக்ரைன் போன்ற 30 நாடுகள் ஒன்றாக சேர்ந்து கருங்கடலில் sea Breeze என்று அழைக்கப்படும் கூட்டுப் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் ரஷ்யா நாட்டிலுள்ள மாஸ்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் தெர்மல் டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா சமீபத்தில் சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரஷ்யா இந்த கண்டம் […]

Categories
உலக செய்திகள்

அதிபரின் உத்தரவால் நடத்தப்பட்ட தாக்குதல்… பதிலடி கொடுத்த பயங்கரவாத அமைப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் சிரியாவில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க படைகள் சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் ஐ.எஸ்., அல்கொய்தா பயங்கரவாத தடுப்பு, ஈராக் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் ஈரான், சிரியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் பதுங்கி செயல்பட்டு வரும் ஈராக் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் மீது அமெரிக்க படையினர் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் படைத்தளங்களை அமைத்து தொடர் […]

Categories
உலக செய்திகள்

அப்பாவி மக்களை கொன்று குவித்த பயங்கரவாதிகள்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…. துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிய ராணுவ வீரர்கள்….!!

பொதுமக்களை கொன்று குவித்த 21 அல் ஷபாப் பயங்கர வாதிகளுக்கு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை துப்பாக்கி சூடும் ராணுவ வீரர்கள் நிறைவேற்றியுள்ளார்கள். கிழக்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் சோமாலியாவில் அல் ஷபாப் என்னும் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பையும், துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியுள்ளார்கள். இவ்வாறு பயங்கர தாக்குதல் நடத்திய அல் ஷபாப் பயங்கரவாதிகள் 21 பேரை ராணுவத்தினர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்துள்ளார்கள். இதனையடுத்து ராணுவ நீதிமன்றம் 21 பேர் மீதான வழக்கை விசாரணை செய்து இவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! சும்மா போயிட்டு இருந்தவங்களுக்கு கத்திகுத்தா…? மர்ம நபரின் வெறியாட்டம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேரை மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியிலிருக்கும் எர்பட் என்னும் நகரிலுள்ள சாலையில் 2 பேர் நடந்து சென்று கொண்டிருந்துள்ளர்கள். அப்போது கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு மர்ம நபர் ஒருவர் அங்கு வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பின் கண்ணிமைக்கும் நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. அதிகளவு ஆழம் நிறைந்த ஏரி…. அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த நபர்கள்….!!

வியட்நாமில் அதிகளவு ஆழம் நிறைந்த ஏரியில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், அதிலிருந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் நாட்டின் தெற்கே பூவை என்ற இடத்தில் அதிக அளவு ஆழம் நிறைந்த ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் சுமார் 5 பேர் படகில் பயணம் செய்துள்ளார்கள். இந்நிலையில் திடீரென்று படகு ஏரியில் கவிழ்ந்ததில் அதிலிருந்த 5 பேரும் நீருக்குள் மூழ்கியுள்ளார்கள். ஆனால் அதில் 2 பேர் நீச்சலடித்து கறைக்கு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தேர்தலா…? இது சரியான தீர்வு அல்ல…. பதவியை ராஜினாமா செய்த பிரதமர்…!!

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் எடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவிய ஸ்வீடன் பிரதமர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஸ்வீடனில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதமர் தேர்தலில் ஸ்டெஃபான் என்பவர் வெற்றி பெற்று அந்நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அந்த வாக்கெடுப்பில் ஸ்டெஃபான் தோல்வியை தழுவியதால் ஒன்று ராஜினாமா அல்லது மறு தேர்தல் என்னும் முடிவை எடுப்பதற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால் ஸ்டெஃபான் […]

Categories
உலக செய்திகள்

இங்க கண்டிப்பாக தீவிரவாதிகளை அனுமதிக்கமாட்டோம்…. பிரபல நாட்டில் நடைபெறவிருக்கும் மாநாடு…. எச்சரிக்கை விடுத்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர்….!!

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தீவிரவாதிகளை சிறிதளவுகூட ஆப்பிரிக்க நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்க தலைமையிலான மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 83 நாடுகளினுடைய வெளியுறவு துறையின் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளார்கள். இந்த மாநாடு கூட்டத்திற்கு முன்னதாக ஜெர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பகிரங்கமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது ஈராக் மற்றும் சிரியாவில் தோன்றிய ஐ.எஸ் என்னும் […]

Categories
உலக செய்திகள்

எங்க நாட்டுக்குள்ள வரணுமா…? இத கட்டாயமாக கொண்டு வாங்க…. போர்ச்சுக்கலின் அதிரடி அறிவிப்பு….!!

இங்கிலாந்திலிருந்து தங்களுடைய நாட்டிற்குள் வரும் பயணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று போர்ச்சுக்கல் அரசாங்கம் அறிவித்துள்ளது. போர்ச்சுக்கல் நாட்டில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் போர்ச்சுக்கல் அரசாங்கம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகள் முழுமையான தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம் இல்லை என்றால் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றுள்ளது. மேலும் இந்தத் புதிய விதி […]

Categories
உலக செய்திகள்

என்ன…! ஆன்லைன் மூலம் திருமணமா…? கொரோனாவால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. மணமக்களை வாழ்த்திய பெற்றோர்கள்….!!

காதல் ஜோடிகளின் திருமணம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக தள்ளிக் கொண்டே போனதால் அவர்களுடைய பெற்றோர்கள் ஆன்லைனிலேயே தம்பதியருக்கு திருமணத்தை நடத்தி வைத்து தங்களுடைய ஆசிகளை மணமக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தியாவில் Dombivil என்னுமிடத்தில் Bhushan என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய உயர்கல்விக்காக கன்னட நாட்டிற்கு சென்று அங்கேயே குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இதனையடுத்து இவர் கன்னட நாட்டில் mandeep என்னும் பெண்ணை சந்தித்து காதலித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! சட்டென்று இடிந்து விழுந்த 12 மாடிக் கட்டிடம்…. தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகள்…. முக்கிய தகவலை வெளியிட்ட அதிகாரிகள்….!!

அமெரிக்காவில் 12 மாடி அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததில், இதுவரை எவரும் உயிருடன் மீட்கப்படாத நிலையில் 3 நாட்களாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவிலிருக்கும் ஃபுளோரிடாவில் கடந்த வியாழக்கிழமை 12 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர்கள் தொடர்ந்து 3 நாட்களாக இடிந்து விழுந்த கட்டிடத்தில் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய […]

Categories
உலக செய்திகள்

இன்னும் 1 மாசம் தான் டைம் இருக்கு…. வேகமாக பரவும் டெல்டா வகை கொரோனா….எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க மருத்துவர்….!!

அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ஒரு மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்க மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார். இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகின் பல பகுதிகளுக்கு தற்போது பரவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 20% பேர் இந்த டெல்டா வகையால் பாதிப்படைந்துள்ளார்கள். இதனையடுத்து இன்னும் ஒரு மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விட்டால் […]

Categories
உலக செய்திகள்

இனி இத நாங்க தர மாட்டோம்…. மீண்டும் எழுந்திருக்கும் புதிய சிக்கல்…. ஈரான் நாட்டின் அதிரடி அறிவிப்பு…!!

அணுசக்தி மையங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் முடிந்துள்ளதால், ஈரான் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இப்ராஹிம் ரைசி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அணுசக்தி மையங்களின் உள்ளே எடுக்கப்படும் புகைப்படங்களை ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் (ஐஏஇஏ)  பகிர்ந்து கொள்வதற்காக போடப்பட்டிருக்கும் ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. இதனால் தங்களுடைய அணுசக்தி மையங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை ஐ.நா […]

Categories

Tech |