சீனாவிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனாவால் தற்போது வரை உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56.44 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அனைத்து நாடுகளிலும் அதிகமான […]
Tag: உலகச் செய்திகள்
அமெரிக்காவில் கொரோனாவின் டெல்டா வகை மாறுபாட்டை போன்றே ஓமிக்ரானால் தற்போது நாளொன்றுக்கு 2000 பேர் உயிரிழக்கிறார்கள் என்ற அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவின் முதல் முதலாக தோன்றிய ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவின் முந்தைய மாறுபாடான டெல்டாவை போன்றே தற்போது உலக நாடுகளுக்கு பரவும் ஓமிக்ரானால் அமெரிக்காவில் நாளொன்றுக்கு 2,000 பேர் உயிரிழக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஓமிக்ரானால் அமெரிக்காவில் தற்போது வரை சிகிச்சை பலனின்றி 8,66,000 […]
ஜனவரி 17 முதல் 23 வரையிலான ஒரு வார கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 2 கோடியை 10 லட்சம் பேருக்கு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு ஜனவரி 17 முதல் 23 வரையிலான ஒருவார கால கொரோனா பாதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரே வாரத்தில் புதிய உச்சமாக 2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் […]
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவையின் பொதுச் செயலாளர் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பான முக்கிய தகவல்களை கூறியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவையின் பொதுச் செயலாளரான அண்டனியோ ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மென்மேலும் அதிகரிப்பதை நாம் கட்டாயமாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசியதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி 6 மாதங்கள் ஆகியும் கூட அந்நாடு தற்போதுவரை ஊசலாடிக் கொண்டே தான் இருக்கிறது என்றுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானின் மக்களது அடிப்படை […]
தங்கள் பிள்ளைகள் ஆணுக்கு ஆண் பெண்ணுக்குப் பெண் என்று ஒரே பாலின ஈர்ப்பாளர்களாக இருந்தால் அவர்களை ஆதரியுங்கள் என்று பெற்றோர்களுக்கு வாடிகனில் பேசிய போப் ஆண்டவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாடிகனில் நடைபெற்ற வாராந்திர சந்திப்பு கூட்டத்தில் பேசிய போப் ஆண்டவர் பெற்றோர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது தங்களது பிள்ளைகள் ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்று ஒரே பாலின ஈர்ப்பாளர்களாக இருந்தால் அவர்களை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் அவ்வாறு இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்கள் ஒருபோதும் […]
இங்கிலாந்தில் சுகாதார துறை ஊழியர்கள் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாவிட்டால் அவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்று அந்நாடு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இங்கிலாந்தில் தற்போது வரை 77,000 சுகாதார துறை ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளரான சாஜித் ஜாவித் கூறியுள்ளார். இந்நிலையில் அவர் அதிரடியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது சுகாதாரத்துறை ஊழியர்கள் கட்டாயமாக ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதிக்குள் […]
இலங்கையில் 1 அடி நீளமுடைய வெள்ளை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருக்கும் களுத்துறை மாவட்டத்திலுள்ள வீடு ஒன்றிற்கு 1 அடி நீளமுடைய வெள்ளை நிறத்திலான சிவந்த கண்களையுடைய அணியில் ஒன்று வந்துள்ளது. இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் களத்துறை காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த அணில் பிடிக்கப்பட்டு தேசிய மிருககாட்சி சாலையில் ஒப்படைக்கப்படும் என்று உள்ளூர்வாசிகள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
சீனா நன்கொடையாக 1 மில்லியன் அரிசியை வழங்கியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிலையில் அந்நாட்டின் எதிர்க்கட்சி இது தொடர்பாக அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளது. சீன அரசு 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த அரிசி வருகின்ற மார்ச் மாதத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என அந்நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங் கொழும்புவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மேல் குறிப்பிட்டுள்ள தகவல் தொடர்பாக அதிரடியான […]
துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லில் இருக்கும் விமான நிலையத்தில் காலநிலை மாற்றத்தால் பனி குவிந்து காணப்படும் நிலையில் 2-வது நாளாக அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லில் காலநிலை மாற்றத்தால் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டிலுள்ள விமான நிலையத்தில் ஏராளமான பனி குவிந்து காணப்படுகிறது. அவ்வாறு குவிந்து காணப்படும் பனியால் 2 ஆவது நாளாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மிக கடுமையான பனிப்பொழிவால் 4,600 பேர் சாலைகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள். மேலும் இந்த […]
ஜெர்மனியில் ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் நிலையில் அரசு அவர்களுக்கு ஊதிய இழப்பீட்டினை வழங்கி வந்தது. ஆனால் இனி பூஸ்டர் தடுப்பூசி பெற்று கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு ஊதிய இழப்பீடு வழங்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஒரு டோஸ் தடுப்பூசியை மட்டும் பெற்றுக் கொண்டவர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்புயல் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் கிட்டதட்ட 16 மில்லியன் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வீடுகளிலேயே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய விமான நிலையமான இஸ்தான்புல் விமான நிலையம் மூடப்பட்டது. அதாவது ‘பனி’ காற்றுடன் சேர்ந்து மழைபோல் கொட்டியதால் அந்த விமான நிலையத்தின் மேற்கூரை எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த […]
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 5,01,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனாவிலிருந்து முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனா அடுத்தடுத்து பல உருமாற்றங்களை பெறுவதால் உலகநாடுகள் பெரும் அச்சத்திலுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் உச்சகட்ட பாதிப்பாக கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 5,01,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,02,548 ஆக அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமின்றி […]
வடகொரியா கடந்த ஒரேநாளில் 2 க்ரூஸ் ரக ஏவுகணைகளை சோதித்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வடகொரியா கொரோனா மற்றும் உலக நாடுகளின் பொருளாதார தடை போன்ற காரணங்களால் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. ஆனால் வட கொரியா தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருவது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரே நாளில் மட்டும் 2 க்ரூஸ் ரக ஏவுகணைகளை வடகொரியா சோதித்துள்ளதாக தென்கொரிய […]
உலகில் தோன்றிய முதல் நட்சத்திரம் மற்றும் விண்மீன்களின் பிறப்பை கண்டறிய அரியேன் ராக்கெட்டின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெற்றிகரமாக பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது இலக்கை அடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஜேம்ஸ் வெப் அதிக சக்தி வாய்ந்த மற்றும் உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியாக கருதப்படுகிறது. இந்த தொலைநோக்கியின் முதல் பணி விண்மீன்களின் பிறப்பை கண்டறிவதே ஆகும். மேலும் பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரங்களை அறிவதுமாகும். இதனை நாசா கடந்த மாதம் […]
உலகிலுள்ள 180 நாடுகளை ஆய்வு செய்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அரசு சாரா அமைப்பு நடப்பாண்டிற்கான ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகிலுள்ள 180 நாடுகளை ஆய்வு செய்யும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அரசுசாரா அமைப்பு வருடந்தோறும் 100 மதிப்பெண்களின் அடிப்படையில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் 100 மதிப்பெண்களிலிருந்து படிப்படியாக குறையும் நாடுகள் ஊழல் நிறைந்த நாடாக கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்தாண்டிற்கான ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. […]
இஸ்ரேலில் கொரோனா தொடர்பான தடுப்பூசியின் 4 ஆவது டோஸ்ஸை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்திக் கொண்டால் 3 முதல் 5 மடங்கு ஆபத்தான உடல்நலக்குறைவு ஏற்படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அரசுக்கான ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசியினை செலுத்தி வருகிறது. அதன்படி இஸ்ரேலில் கொரோனா தொடர்பான தடுப்பூசியின் 4 ஆவது தவணையை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்திக்கொள்ள அந்நாட்டின் அரசு ஆலோசனை குழு […]
ரஷ்யா கடந்த 2014 ஆம் ஆண்டு போரிட்டு கிரீமியாவை தன்னுடன் இணைந்துள்ள நிலையில் உக்ரேனுக்கு அவசர கால நிதியாக 10,138.80 கோடி ரூபாய் நிதி வழங்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் உர்சுலா தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரேன் நாட்டின் எல்லையில் தனது படையை குவித்து வருகிறது. இதைதொடர்ந்து ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது […]
உலகம் முழுவதுமுள்ள மக்கள் தொகையில் 52.5 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியினை முழுமையாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகிறது. அதன்படி உலகம் முழுவதுமுள்ள மொத்த மக்கள்தொகையில் 52.5 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியினை […]
ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவால் தற்போது வரை 42 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பருவநிலை மாற்றத்தால் மிகவும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த பனிப்பொழிவில் சிக்கி தற்போது வரை 42 பேர் பலியாகியுள்ளார்கள். மேலும் 118 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி 2,000 ரத்துக்கும் மேலான வீடுகள் இந்த கடுமையான பனிப்பொழிவால் சேதமடைந்துள்ளது. இந்த தகவலை தேசிய பேரிடர் […]
ஜெனிவாவில் முதியவர்களை குறிவைத்து நடக்கும் மோசடி தொடர்பாக அந்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். ஜெனிவாவில் முதியவர்களை குறிவைத்து மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் பணமோசடி செய்யும் நிகழ்வு அம்பலமாகியுள்ளது. அதாவது மர்ம நபர்கள் குறிவைக்கும் நபர்களிடம் தொலைபேசியில் அழைப்பு விடுத்து தான் ஒரு காவல்துறை அதிகாரி என்று கூறுவார்களாம். மேலும் நீங்களோ அல்லது உங்களது உறவினர்களோ போக்குவரத்து விதியை மீறி விட்டீர்கள் என்று கூறி அபராதம் செலுத்தும்படி நிபந்தனை செய்வார்களாம். இந்த தொலைப்பேசி மோசடியில் […]
பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் புழுதி புயல் வீசிய இடத்திற்கே சென்று அந்த சம்பவத்தை தொகுத்து வழங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வசித்து வரும் சாந்த் நவாப் என்ற செய்தியாளர் நியூஸ் சேனல் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் புழுதி புயல் வீசுவதை நேரில் சென்று தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சவுதி மற்றும் துபாயில் வீசும் புழுதிப்புயல் தற்போது பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் கிளம்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த புழுதி புயலின் காரணத்தினால் […]
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நிற்கும் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களது படகுகளை பறிமுதல் செய்துள்ளார்கள். மேலும் அந்த படகுகளை இலங்கை கடற்படை வீரர்கள் முகாம் ஒன்றில் நிறுத்தி வைத்துள்ளார்கள். இந்நிலையில் இலங்கை அரசு கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக முகாமில் நிற்கும் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதற்கு […]
அமெரிக்காவில் தாயிடம் சென்று 3 கோடி ரூபாய் தருகிறேன் உங்கள் குழந்தையை தன்னிடம் தருமாறு கேட்ட பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவில் தாயொருவர் 12 மாத குழந்தையுடன் சுய பரிசோதனைக்காக வால்மார்ட்டின் முன்பாக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஏற்கனவே அழகான குழந்தை ஒன்றை வாங்க வேண்டுமென்று நினைப்பிலிருந்த 49 வயது பெண்மணி ஒருவர் அந்த தாயின் அருகே வந்துள்ளார். இதனையடுத்து அந்த 49 வயது பெண்மணி சுய பரிசோதனைக்காக நின்றுகொண்டிருந்த தாயிடம் சென்று நீல […]
இங்கிலாந்தின் உச்சநீதிமன்றம் அமெரிக்காவிற்கு நாடு கடத்துவது தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. லண்டன் காவல்துறை அதிகாரிகளால் விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனரான அசாஞ்சே பாலியல் வழக்கு தொடர்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அசாஞ்சே அதன் நிபந்தனை விதியை மீறி ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜாமீன் நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக லண்டன் காவல்துறை அதிகாரிகள் […]
உலக சுகாதார அமைப்பு வியூகிக்கும் நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் கையாண்டாலே கொரோனா நடப்பாண்டில் முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்று அந்த நிறுவனத்தின்ப் தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவில் முதன்முதலாக கடந்த 2019 ஆம் ஆண்டு தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. மேலும் பல உருமாற்றங்களை பெற்ற கொரோனா சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரானாக மாறியுள்ளது. இந்த ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு பரவி கொரோனாவின் 3 ஆவது அலையை வீசத் தொடங்கியுள்ளது. […]
ஜெர்மனியில் சொற்பொழிவு அரங்கத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்த பொது மக்களின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். ஜெர்மனியிலுள்ள ஹீடெல்பெர்க் என்னும் பகுதியில் சொற்பொழிவு அரங்கம் ஒன்று உள்ளது. இந்த அரங்கத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த அப்பாவி பொது மக்களின் மீது திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் பலரும் படுகாயமடைந்துள்ளார்கள். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த மர்ம நபரை […]
துருக்கியில் கடும் பனியில் சிக்கி தவித்த 200 க்கும் மேலானோரை மீட்புக்குழுவினர்கள் பத்திரமாக காப்பாற்றியுள்ளார்கள். துருக்கியிலுள்ள டியார்பகிர் என்னும் மாநிலத்தில் கடுமையாக பனிப்புயல் வீசியுள்ளது. இதனால் அங்குள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 47 கார்களும், 1 பஸ்களும் உறைபனியில் சிக்கியுள்ளது. அவ்வாறு சிக்கிய காரையும், பஸ்ஸையும் பனி கொஞ்சம் கொஞ்சமாக மூட தொடங்கியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர்கள் பனியால் மூடப்பட்டிருந்த கார் மற்றும் பேருந்துகளில் சிக்கியிருந்த 200-க்கும் மேலானோரை மீட்டுள்ளார்கள்.
இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பைசர் தடுப்பூசியை செலுத்தி வருகின்றது. மேலும் இஸ்ரேல் அரசு ஒமிக்ரான் பரவலில் இருந்து தங்கள் நாட்டை பாதுகாக்கும் வகையில் நான்காவது டோஸ் தடுப்பூசியை 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தி வருகிறது. அதேபோல் பூஸ்டர் தடுப்பூசிக்கான இடைவெளியை சில நாடுகள் குறைத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 4, 5 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்துவது நல்லது இல்லை. அதற்கு பதிலாக தடுப்பூசியை ஆண்டுக்கு […]
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தனது தாய் வயதிலிருக்கும் பெண்ணொருவரை திருமணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அலெக்சாண்டர் என்னும் 25 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வருடத்திற்கு முன்பாக தனது தாய் வயதிருக்கும் பெண்ணொருவரை சந்தித்து அவரிடம் காதல் வலையில் சிக்கியுள்ளார். அதன்பின்பு இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று தங்களது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக நகர்த்தியுள்ளார்கள். இந்த ஜோடியை பலரும் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில் இருவரும் திருமணம் செய்துள்ளார்கள். இது […]
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான மன்ஃப்ரெட் தியரி முக்லர் (73) சில காலங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென காலமானார். இவர் வடிவமைத்த ஆடைகளை ஜார்ஜ் மைக்கேல், கார்டி பி, நிக்கோல் கிட்மேன், ரிஹானா, மேகன் ஃபாக்ஸ், டேவிட் போவி, லேடி காகா, சிண்டி க்ராஃபோர்ட் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் அணிந்துள்ளனர். இந்த நிலையில் மன்ஃப்ரெட் தியரி முக்லர் (73) கடந்த 23-ஆம் தேதி […]
ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 17 ஆம் தேதி நடத்திய ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து மீண்டும் தற்போது 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவம் தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டின் அதிபரான மன்சூரின் ஆதரவைப் பெற்ற ஹாதி கிளர்ச்சியாளர்களுக்கும், ஈரான் நாட்டின் ஆதரவுடைய ஹவுதி படையினருக்குமிடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடந்து வருகிறது. இதில் ஹாதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் உதவி செய்து வருகிறது. இதனால் கடுப்பான […]
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரானின் மிக தீவிரமாக பரவும் தன்மையால் புதிய உருமாறிய வைரஸ்கள் தோன்றலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி பெரும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனா தொற்று பல உரு மாற்றங்களை பெற்று உலக நாடுகளுக்கு பரவி வருவது அனைவரிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சமீபத்தில் கூட தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு […]
பெருவில் கப்பலில் திடீரென ஏற்பட்ட கசிவு காரணமாக 6,000 பேர்லல் எண்ணெய் கடலில் கலந்துள்ள நிலையில் அந்நாடு தெரிவித்த கவலையை போக்கும் விதமாக ஏராளமான தன்னார்வலர்கள் அதனை அகற்ற தங்களது முடியை தானம் செய்துள்ளார்கள். பெருவில் கப்பலொன்று சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய் கொண்டு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கப்பலில் இருந்த 6,000 பேர்லல் எண்ணெய் கடலில் கசிந்துள்ளது. இந்த எண்ணெய் கசிவால் 3 கிலோமீட்டர் கடற்கரை பரப்பு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெருவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் […]
மெக்சிகோவில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் வசித்து வரும் லூர்து மால்டனோடா என்பவர் அந்நாட்டில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் லூர்து தன்னுடைய சொந்த வாகனத்தில் ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார் அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் லூர்துவை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். இதனால் சம்பவ இடத்திலேயே லூர்து பரிதாபமாக உயிரிழந்தது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் […]
துபாயில் யாருமில்லாத இடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட பூச்சி மற்றும் புழுக்களை வைத்து அவர் இறந்த மணி நேரத்தை துல்லியமாக அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள். துபாயில் யாரும் தங்காத கட்டிடத்திலிருந்து அதிகாரிகள் சடலம் ஒன்றை எடுத்துள்ளார்கள். இந்நிலையில் அந்த சடலத்தில் தோன்றிய பூச்சி மற்றும் புழுக்களை வைத்து ஆய்வின் மூலம் அவர் இறந்த மணி நேரத்தை அதிகாரிகள் துல்லியமாக கண்டுபிடித்துள்ளார்கள். அதன்படி அந்த சடலம் 63 மணிநேரம் 30 நிமிடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துள்ளதாக […]
அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்த ஜெர்மன் நாட்டின் கடற்படை தளபதி ரஷ்யா-உக்ரைன் எல்லை தொடர்பாக பேசிய கருத்து ஒன்று சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையில் கிரீமியா தொடர்பாக பல காலமாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் தங்களது படைகளை குவித்து வருவதால் அமெரிக்கா உட்பட பல நாடுகள் அதற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு இருக்க அரசு முறை பயணமாக இந்தியா சென்றிருந்த […]
சிரியாவில் நடந்த மிகக்கடுமையான இருதரப்பு துப்பாக்கி சண்டையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் உட்பட 100க்கும் மேலானர் கொல்லப்பட்டுள்ளார்கள். சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சிரியாவிலுள்ள ஹசாகா நகரில் அமைந்துள்ள குர்ஷித் இன போராளிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் சிறைச்சாலை ஒன்றின் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்கள். இந்த தாக்குதலை பயன்படுத்தி தங்களது இயக்கத்தின் தலைவர் உட்பட பலரையும் விடுவிக்க நினைத்துள்ளார்கள். ஆனால் சிறையை பாதுகாத்து வந்த குர்ஷித் இன போராளிகள் […]
அர்மீனியாவின் ராணுவ தலைவர் உட்பட பல பொறுப்புகளிலிருந்து விலக்கப்பட்ட சர்கிஸ்சியன் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அர்மீனியாவின் ராணுவ தலைவர் உட்பட பல பொறுப்புகளிலிருந்து அந்நாட்டின் அதிபரான சர்கிஸ்சியன் விலக்கப்பட்டுள்ளார். இதனால் அர்மீனியாவின் அதிபரான சர்கிஸ்சியனுக்கும், அந்நாட்டின் பிரதமரான நிகோல் என்பவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சர்கிஸ்சியன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தான் அர்மீனியாவின் அதிபர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அர்மீனியாவின் ஆட்சி அதிகாரம் மற்றும் […]
அமெரிக்காவிலுள்ள 22 மாத குழந்தை ஒன்று தனது தாயின் இணையத்தை பயன்படுத்தி 1.4 லட்சம் மதிப்புடைய மரச்சாமான்களை ஆர்டர் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பிரமோத் மற்றும் மது என்ற தம்பதியினர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அலெக்ஸ் குமார் என்ற 22 மாத குழந்தை ஒன்று உள்ளது. இதனையடுத்து குமார் தனது தாய் இணையத்தை பயன்படுத்துவதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது தாய் செய்வது போலயே 22 மாத குழந்தையான குமார் […]
சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு சில இடங்களில் வேகமாக பரவி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் சமீப காலங்களாக கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பிரதமர் என அனைவரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேபாள நாட்டின் முன்னாள் பிரதமரான கே.பி. சர்மா […]
அமெரிக்காவில் shop alley என்ற நிறுவனம் இந்தியர்கள் குளிர் காலங்களில் அதிகமாக பயன்படுத்தும் monkey cap பை 2,000 த்துக்கு விற்பனை செய்துள்ளது. அமெரிக்காவிலுள்ள shop alley என்ற நிறுவனம் குளிர்காலங்களில் இந்தியர்கள் பயன்படுத்தும் monkey கேப்பை 2000 ரூபாய்க்கு ஆன்லைனில் விற்பனை செய்துள்ளது. இதனால் கொந்தளித்த இந்தியர்கள் இணையத்தில் தங்களது கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது சாலையோர கடைகளில் இந்த மங்கி கேப் 100 முதல் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்கள்.
பெல்ஜியம் அரசு அந்நாட்டில் அரசு அலுவலக மேலதிகாரிகளுக்கு புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது அரசு அலுவலக மேலதிகாரிகள் பணி நேரம் தவிர்த்து பிற நேரங்களில் ஊழியர்களை அழைக்க கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த உத்தரவானது பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பெல்ஜியம் அரசு ஊழியர்கள் “Right to Disconnect” என்ற இந்த முறையை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இங்கிலாந்திலுள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம் நடத்திய கருத்து கணிப்பு ஒன்றில் முக கவசம் அணியும் ஆண்களே கவர்ச்சிகரமாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் கார்டிஃப் பல்கலைக்கழகம் பெண்களிடம் கேட்ட கருத்துக் கணிப்பின் முடிவிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பெண்களிடம் மாஸ்க் அணியாத ஆண்களின் புகைப்படங்களையும், அதனை அணிந்த புகைப்படத்தையும் வைத்து ஒப்பிட்டு கருத்துகணிப்பு கேட்டதில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. ஆகையினால் இங்கிலாந்திலுள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம் முக கவசம் அணியும் ஆண்களே கவர்ச்சிகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் தம்பதியர்கள் வித்தியாசமான முறையில் சுடுகாட்டில் வைத்து prewedding போட்டோ ஷூட்டை எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். தாய்லாந்திலுள்ள தம்பதியர்கள் வித்தியாசமான முறையில் சுடுகாட்டில் வைத்து தங்களது prewedding போட்டோ ஷூட்டை எடுத்துள்ளார்கள். அதாவது பேய்கள், இறுதி சடங்குகள், கல்லறை போன்றவற்றை மையமாக வைத்து அந்த தம்பதியினர்கள் prewedding ஃபோட்டோஷூட்டை எடுத்துள்ளார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் வசித்து வரும் 29 வயது இளம்பெண் ஒருவர் தனது கர்ப்ப காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோமாவில் குழந்தையை பெற்றெடுத்த அனுபவத்தை அவர் தற்போது பகிர்ந்துள்ளார். இங்கிலாந்தில் வசித்து வரும் 29 வயதாகின்ற Ellie என்பவர் தனது கர்ப்ப காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தனது குழந்தையை 10 வாரங்களுக்கு முன்னதாகவே அவர் சி பிரிவு மூலம் பெற்றெடுத்துள்ளார். ஆனால் அவர் குழந்தை இந்த மண்ணுலகிற்கு வரும் சமயத்தில் கோமாவிற்கு சென்றுள்ளார். அதன் பின்பு 5 […]
சுவிட்சர்லாந்தில் மனிதர்களை அச்சுறுத்தி வந்த ஓநாய் கடந்த வெள்ளிக்கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள கிராபண்டனில் என்னும் பகுதியில் ஓநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உள்ளூர் அதிகாரிகள் ஓநாய்களை ரப்பர் தோட்டாக்களின் மூலம் பயமுறுத்த பல முயற்சிகளை எடுத்ததை தொடர்ந்து அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் அண்மையில் ஓநாய் ஒன்று அப்பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரை 2 மீட்டர் இடைவெளிக்குள் பின்தொடர்ந்து சென்றுள்ளது. ஆகையினால் பொதுமக்களை பாதுகாக்கும் […]
அயர்லாந்தில் உள்ள கார்லோ என்ற நகரில் இரண்டு இளைஞர்கள் இறந்து போன முதியவர் ஒருவரின் உடலை உயிருடன் இருப்பது போல முட்டுக்கொடுத்து தபால் நிலையத்திற்கு இழுத்து சென்றுள்ளனர். அதாவது Peader Doyle ( வயது 66 ) என்ற அந்த முதியவருக்கு வரவேண்டிய ஓய்வூதியத்திற்கு ஆசைப்பட்டு இரண்டு இளைஞர்கள் இந்த மோசமான செயலை செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர்கள் முதியவரின் உடலை தபால் நிலையத்திற்கு இழுத்து சென்ற போது அங்குள்ள ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த […]
ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெர்மன் கடற்படை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே நீண்டகாலமாக பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க ஜெர்மன் நாட்டின் கடற்படை தலைவரான schoenbach சமீபத்தில் இந்தியாவின் தலைநகரில் பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவை உக்ரேனால் ஒருபோதும் மீட்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ரஷ்யாவின் அதிபரான புடின் […]
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் செய்தது போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் நடித்து வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி பாடலில் அவர் செய்தது போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் நடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு […]
ஸ்வீடனில் கொரோனாவை ஒழிப்பதற்காக போடப்பட்ட புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலைநகர் உட்பட பல முக்கிய பகுதிகளில் பொது மக்கள் வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஸ்வீடனில் கொரோனாவை ஒழிப்பதற்காக பல புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டதற்கான பாஸ்போர்ட் மற்றும் கட்டாயமாக முககவசம் அணிதல், பொது நிகழ்ச்சிகளில் குறைவான மக்கள் கலந்து கொள்ளுதல் போன்ற புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுவீடனின் […]