இந்திய அமைதி காக்கும் படையினர் 135 பேர் தெற்கு சூடானில் சிறப்பான சேவை ஆற்றியதால், ஐ.நா பதக்கத்தை வென்றுள்ளார்கள். தெற்கு சூடானிலிருக்கும் ஜொங்லீ மாநிலத்திலும், பிபோர் நிர்வாக பகுதியிலும் சிறப்பாக பணியாற்றிய 135 இந்திய அமைதி காக்கும் படையினருக்கும், 103 இலங்கையை சார்ந்தவர்களுக்கும் ஐ.நா பதக்கம் கிடைத்துள்ளது. இந்த அறிக்கையை தென் சூடானிலிருக்கும் ஐ.நா மிஷனான யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமைதிகாக்கும் பணியின் படைத்தளபதி கூறியதாவது, யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ்யினுடைய ஆணையை நிறைவேற்றுவதற்காக இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்தையும் பொருட்படுத்தாமல், […]
Tag: உலகச் செய்திகள்
ராணுவத்தின் கூட்டுப்படைகளின் மூலம் சீனாவின் செல்வாக்கால் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ள வேண்டும் என்று நோட்டோ தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். பிரேசில் நாட்டில் நோட்டா நாடுகளின் மாநாடு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு பின்பு, ராணுவ கூட்டுப் படையின் மூலமாக சீனாவின் பெரும் செல்வாக்கால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று நோட்டோ தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் சீன நாடு அதனுடைய சர்வதேச அளவிலான கடமைகளை நிறைவேற்றுவதற்கேற்ப செயல்படுமாறு நோட்டோவின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து இந்த மாநாட்டில் நோட்டோவின் […]
அமெரிக்க அதிபரான ஜோ பைடன், மீண்டும் மரபு விதிகளை மீறியுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராஜ குடும்பத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே அங்கு வந்து விட வேண்டும், கடைசியாகத்தான் மகாராணி வருவார். அதன்பின் நிகழ்ச்சி முடிந்தவுடன் முதலில் மகாராணியார் தான் செல்வார் என்பது நீண்ட காலமாகவே இருக்கும் மரபு ஆகும். இதேபோல் மகாராணியாருடன் தனியாக பேசும் எவரும் தாங்கள் எது குறித்து உரையாற்றினோம் என்பதை வெளியில் சொல்லக் கூடாது என்பதும் வழக்கத்திலிருக்கும் […]
ஆஸ்திரேலிய நாட்டை நாசம் செய்து வரும் பல மில்லியன் எலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டையே பல மில்லியன் எலிகள் நாசம் செய்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய கண்களை ஏதோ ஒன்று கடிப்பது போல் உணர்ந்திருக்கிறார். இதனையடுத்து அந்தப் பெண் பதறிப்போய் எழுந்து பார்த்தால், எலி ஒன்று தன்னுடைய கண்ணை கடித்துக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் அந்தப் பெண் […]
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் விளைவிக்கப்படும் பாஸ்மதி அரிசி குறித்த விவகாரத்தில், “பாஸ்மதி அரிசி” இருநாடுகளுக்கும் சொந்தம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் எல்லைப் பகுதியான பஞ்சாப்பில் பாசுமதி அரிசி பயிரிடப்படுகிறது. இதனால் 2 நாடுகளுமே பாசுமதி அரிசியின் மீது சொந்தம் கொண்டாடுகிறது. இதற்கிடையே இந்தியா அரிசியை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 6.8 பில்லியன் டாலர்களை சம்பாதிக்கிறது. மேலும் பாகிஸ்தான் சுமார் 2.2 பில்லியன் டாலர்களை அரிசி ஏற்றுமதி செய்வதன் மூலம் சம்பாதிக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய […]
முகாமிற்கு தீ வைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 4 அகதிகளுக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய அகதிகள் முகாம் கிரீஸில் அமைந்துள்ளது. இந்த முகாமில் கிட்டத்தட்ட 13,000 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இதில் தங்கியிருக்கும் அகதிகளில் சுமார் 70% பேர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆகும். இந்நிலையில் இந்த அகதிகள் முகாமில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து முகாமில் எவ்வாறு […]
நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஒற்றை இடத்தை அதிகமாக பெற்று இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பொறுப்பேற்றுள்ளார். இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருந்து கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சி செய்த பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு தற்போது நப்தாலி பென்னட் என்பவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் எதிரணிக் கூட்டணிக்கு 60 இடங்கள் கிடைத்துள்ளது. ஆனால் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு 59 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதையடுத்து வெறும் ஒற்றை இடம் […]
ஸ்விட்சர்லாந்தில் சில புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் புதிய சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முன்பாக அதுதொடர்பான வாக்கெடுப்பு பொதுமக்கள் மத்தியில் நடத்தப்படும். அதன்பின் பொது மக்களின் விருப்பத்திற்கிணங்கவே புதிய சட்டங்கள் அந்நாட்டில் அமல்படுத்தப்படும். அந்த வகையில் தற்போது சில முக்கிய சட்டங்கள் தொடர்பாக ஸ்விட்சர்லாந்தில் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அதில் ஒன்று, கொரோனா தொற்று தொடர்பான முடிவுகளை அரசாங்கமே எடுக்கலாம் என்பதாகும். இதற்கு 60.21% பொதுமக்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து […]
டெல்டா வகையை சார்ந்த கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் பொது முடக்கம் 4 வாரங்கள் நீட்டிக்கப்படுவது குறித்த அறிவிப்புகளை பிரதமரான போரிஸ் ஜான்சன் மக்களின் முன்பு அறிவிக்கவுள்ளார். இங்கிலாந்தில் டெல்டா வகையை சார்ந்த கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் ஜூன் 21-ஆம் தேதி விலக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்த பொது முடக்கம், தற்போது ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் சினிமாத்துறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விருந்தோம்பல் துறையின் […]
தந்தையால் கொல்லபட்டுள்ளார்கள் என்று கூறப்படும் பிள்ளைகளின் தாயார், தானும் அவர்களுடன் இறந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்பெயினில் ஏப்ரல் 27ஆம் தேதி தன்னுடைய இரு மகள்களை கூட்டி சென்ற தாமஸ் என்பவர், அவருடைய மனைவியான Beatriz Zimmerman னிடம் குழந்தைகளை இனி உயிருடன் காணமுடியாது என்று அச்சுறுத்தி விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்படியே தாமஸ் கூட்டிச் சென்ற இரு மகள்களில் மூத்த மகளான ஒலிவியா, Tenerf என்னும் கடற்கரையில் கடந்த வியாழக்கிழமையன்று 3000 […]
இரு தரப்பினரிடையே நடந்த இனவாத மோதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு சூடானிலிருக்கும் லேக்ஸ் மாகாணத்தில் தெயீத் மற்றும் கோனி என்ற இரு இன குழுக்கள் வசித்து வருகிறார்கள். இந்த இரு தரப்பினரிடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருவதால், அவர்கள் பழிவாங்குதல், கால்நடைகளை வேட்டையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ரும்பெக் ஈஸ்ட் என்னுமிடத்தில் மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த இரு தரப்பினர் இடையேயான மோதலில் மொத்தமாக 13 […]
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தங்களுடைய பெரும்பான்மையை நிரூபித்ததால் இஸ்ரேல் நாட்டின் பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார். இஸ்ரேல் நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு 30 இடங்களில் வெற்றி பெற்றும் கூட அவரால் கூட்டணி ஆட்சியை அமைக்க முடியவில்லை. இதனால் அந்நாட்டில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து கொண்டு வந்தது. இதனை தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்திய எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆட்சியை அமைப்பதற்கு முடிவு மேற்கொண்டுள்ளது. அதன்படி மொத்தம் […]
கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் திடீரென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 53 பேர் கொல்லப்பட்டத்துடன், 100 க்கும் மேலானோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டின் போகோ ஹராம் எனும் பயங்கரவாத கூட்டம் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நைஜீரிய நாட்டின் வடமேற்கு மாகாணத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் புகுந்துள்ளனர். இதனையடுத்து கிராமத்திற்குள் புகுந்த அந்த பயங்கரவாதிகள் கண்ணுக்கு தென்பட்டவர்களை […]
லண்டனில் பள்ளி மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்தது தொடர்பாக 15 வயதாகும் சிறுவனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மேற்கு லண்டனில் இருக்கும் Global Acadamy என்ற பள்ளிக்கு 15 வயதுடைய மாணவன் சென்று கொண்டிருந்துள்ளான். அப்போது மாணவன் கத்தி குத்து பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது, 14 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கிடையே சண்டை நடப்பதாக எங்களுக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாங்கள் சம்பவ […]
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் சேர்வது குறித்து தனது விருப்பத்தை கூறிய அமெரிக்காவை, அதில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகள் தொடங்கியுள்ளனர். ஈரான், ஜெர்மனி மற்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2015ஆம் ஆண்டில் கையெழுத்தானது. அவ்வாறு கையெழுத்தான ஒப்பந்தத்தில் தன்னுடைய அணு சக்திக்கான திட்டம், அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு அல்ல என்பதை உறுதி செய்வதற்கு ஈரான் சம்மதம் தெரிவித்தது. அதற்கு பதிலாக வல்லரசு நாடுகள் ஈரான் […]
கொரோனா தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பிரே வடிவிலான திரவநிலை தடுப்பு மருந்தை சீனா கண்டுபிடித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் பல விதமான தடுப்பு மருந்துகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் சீனா கொரோனா தொற்றுக்கு எதிராக ஸ்பிரே வடிவிலான திரவநிலை தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த திரவநிலை தடுப்பு மருந்தை மூக்கில் அடித்து, அதனை உள்ளிழுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது தடுப்புமருந்து நுரையீரலுக்குள் சென்று கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்கிறது. இந்த […]
அமெரிக்காவில் வீட்டிற்குள் புகுந்து உங்களுடைய குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி 3 சிறுமிகளை சீரழித்த அரக்கனுக்கு நீதிமன்றம் 85 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அமெரிக்க நாட்டின் டலாஷ் கவுண்டியில் ஆஸ்கர் கிங் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியிலிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புகுந்துள்ளார். இதனையடுத்து கிங் அடுக்கு மாடியிலிருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்து படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமிகளிடம் “உங்களுடைய குடும்பத்தினர்களை கொன்று விடுவேன்” என்று கூறிவிட்டு அவர்களிடம் சில்மிஷத்தில் […]
பிரேசில் நாட்டின் ஜனாதிபதி முகக்கவசமின்றி சைக்கிள் பேரணியை துவங்கி வைத்ததால் அந்நாட்டு அரசாங்கம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது. பிரேசில் நாட்டின் ஜனாதிபதியான ஜெய்ர் போல்சனாரோ தலைமையில் சாவ் பாலோ என்னும் நகரத்தில் “Accelerate For Chirst” என்னும் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றுள்ளது. இந்தப் பேரணியில் பலரும் தங்களுடைய மோட்டார் சைக்கிளுடன் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த வேளையில் பிரேசில் நாட்டு ஜனாதிபதி முககவசமின்றி, ஒரு ஹெல்மெட்டை மட்டும் அணிந்து கொண்டு இதனை துவக்கி […]
பெலாரஸ் நாட்டின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஆணைய கட்டிடத்தின் முன்பாக போலந்து வாழ் பெலாரஸ்யர்கள் தினந்தோறும் ஒன்று கூடி அலறல் ஒலியை எழுப்பி வருகின்றனர். பெலாரஸ் நாட்டில் 26 ஆண்டுகளாக லுகாஷென்கோ என்பவர் அதிபராக இருந்து வருகிறார். இவரை ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் பெலாரஸ் நாட்டில் ஆட்சி மாற்றத்தை விரும்பிய பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், கடந்தாண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் லுகாஷென்கோவே 80 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபர் பதவியை […]
80 பேர்களை கொன்று தின்ற 16 அடி நீளமுடைய முதலையை கிராம மக்களின் உதவியோடு வனவிலங்கு அதிகாரிகள் ஏரியிலிருந்து பிடித்து முதலை பண்ணை ஒன்றில் ஒப்படைத்துள்ளனர். உகாண்டா நாட்டின் விக்டோரியா ஏரியில் சுமார் 16 அடி நீளமுடைய 75 வயதாகும் முதலை ஒன்று வசித்து வந்துள்ளது. இந்த முதலை விக்டோரியா ஏரிக்கு மீன் பிடிப்பதற்காக வரும் கிராம மக்களில் இதுவரை சுமார் 80 பேர்களை கொன்று தின்றுள்ளது. இந்த முதலைக்கு அப்பகுதி மக்கள் ஒசாமா பின்லேடன் என்று […]
கொரோனா ஊரடங்கை பொருட்படுத்தாமல் முக கவசமின்றியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் தொடர்ந்து 2 ஆவது நாளாக விருந்து உண்பதற்காக பொதுமக்கள் கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொருட்டு அந்நாட்டு அரசு ஊரடங்கு விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஊரடங்கை பொதுமக்கள் எவரேனும் மீறினால் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரான்சிலிருக்கும் Esplanade des invalids என்னும் பகுதியில் விருந்து உண்பதற்காக தொடர்ந்து 2 ஆவது நாளாக முக கவசமின்றி, […]
இங்கிலாந்தின் தலைநகரில் காவல்துறையினர் கடந்தாண்டு நடத்திய சோதனையில் காருக்குள் போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது . லண்டனிலிருக்கும் Brent டிலுள்ள சாலையில் காவல் துறையினர் கடந்தாண்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அங்கு வந்த காரை மறித்து சோதனை செய்தனர். இதனையடுத்து காரினுள் போதைப் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்த காவல்துறையினர், அதனை ஓட்டிக் கொண்டு வந்த Azeem என்பவரை கைது செய்தனர். […]
ராணுவ போரின் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் கூறியதாக கே.சி.என் ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகொரிய தொழிலாளர் கட்சியின் சார்பாக மத்திய ராணுவ ஆணையத்தின் 2 ஆவது கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் தலைமை தாங்கியுள்ளார். இந்தக் கூட்டத்தில் கிங் ஜாங்-உன் பேசியதாவது, வடகொரிய நாட்டு ராணுவப் படையினர்கள் போர் புரியும் செயல்திறனை சற்று அதிகமாக மேம்படுத்த வேண்டும் என்றுள்ளார். மேலும் வடகொரியாவின் பாதுகாப்பையும் […]
அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்திலிருக்கும் உணவு விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் உணவு விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு அருகே நின்று கொண்டிருந்தவர்களின் மீது திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்குமிங்கும் ஓடியுள்ளனர். ஆனால் […]
அமெரிக்காவில் 2 மர்ம நபர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்த பொது மக்களின் மீது திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதன்படி அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பல்பொருள் விற்பனை அங்காடி அமைந்துள்ளது. இந்த அங்காடி கடைக்குள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திடீரென்று மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்கிருந்தவர்களின் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். […]
“கப்பல் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால்”, அதிலிருந்த வேதிப்பொருட்கள் கடலில் கலந்து மோசமான சுற்றுச்சூழல் மாசை உண்டாக்கியதால் இலங்கை அரசாங்கம் அட்டார்னி ஜெனரல் மூலம் சுமார் 40 மில்லியன் டாலர்களை கப்பல் உரிமையாளர்களிடம் கேட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த “எக்ஸ்பிரஸ் பியர்ல்” என்னும் கப்பல் நைட்ரிக் அமிலம் மற்றும் வேதிப் பொருட்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு குஜராத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் வேதிப்பொருட்களை ஏற்றி கொண்டு சென்ற “எக்ஸ்பிரஸ் பியர்ல்” கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு […]
அமெரிக்க பிரதமரின் பரிந்துரையின்படி பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரை நியூ ஜெர்சி மாவட்ட கோர்ட்டின் நீதிபதியாக நியமிப்பதற்கு நாடாளுமன்றம் செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற, பின்னர் பலவிதமான நிர்வாக பொறுப்புகளுக்கு வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்களை பரிந்துரை செய்துள்ளார். இவருடைய இந்தப் பரிந்துரைக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் வழங்கினால் மட்டுமே வெளிநாட்டு வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு நிர்வாக பொறுப்பு வழங்கப்படும். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ […]
சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்கு தைவான் நாட்டு மக்கள் ரெடியாக இருக்க மாட்டார்கள் என்று தேசிய செங்கி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசிகளை அதிகமாக வைத்திருக்கும் நாடுகள் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் பல நாடுகளுக்கு வழங்கி உதவி செய்து வருகின்றது. இந்நிலையில் தைவான் நாட்டு மக்கள் கொரோனா தொற்றால் […]
8 அங்குல நீளம் வரை கண்ணிமைகளை கொண்ட சீனப் பெண் ஒருவர், 5 ஆண்டுகளுக்கு முன் செய்த தன்னுடைய சொந்த சாதனையை முறியடித்து மீண்டும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சீனாவில் வசித்துவரும் யூ ஜியாங்சியா என்ற பெண் 8 அங்குல நீளம் வரை கண்ணிமைகளை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு செய்த தன்னுடைய சொந்த சாதனையையும் முறியடித்துள்ளார். இதுகுறித்து ஜியாங்சியா கூறியதாவது, தனக்கு இவ்வளவு நீண்ட […]
யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வாத் என்னும் இடத்திலிருந்து கிளம்பிய பேருந்து தாடு என்ற பகுதி நோக்கி சென்றுள்ளது. இதனையடுத்து யாத்ரீகர்கள் புனித பயணம் செய்வதற்காக அந்தப் பேருந்தில் பயணித்துள்ளனர். இந்நிலையில் பேருந்து குஜ்தார் மாவட்டத்தில் சென்றுகொண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த யாத்ரீகர்களில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். […]
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் வேட்டையில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் மற்றும் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். பலூசிஸ்தானிலிருக்கும் பொதுமக்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி பல தசாப்தங்களாக அந்த மாகாணத்தை ஆளும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு எந்தவித பலனும் கிடைக்காத நிலையில், பாகிஸ்தான் படைகளுக்கு எதிராகவும், பொது மக்களுக்கு எதிராகவும் சில ஊடுருவல்காரர்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதனையடுத்து கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவ படையினருக்கு எதிராக நடைபெற்ற […]
பிரபல நாட்டைச் சேர்ந்த சர்வதேச போதைப் பொருட்களை கடத்தும் கும்பலின் தலைவனை தமிழக காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தமிழகத்திலிருக்கும் தூத்துக்குடி கடலோரத்தில் அந்நியநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சென்று கொண்டிருந்த சுமார் 50 வயதுடைய வெளிநாட்டு நபரை காவல்துறையினர் கண்டுபிடித்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் இங்கிலாந்து நாட்டை […]
நதிக்கரையில் குவியலாக மண்டை ஓடுகளும், எலும்புகளும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலந்து நாட்டின் முன்னாள் ஆஷ்விட்ஸ் வதை முகாம் அருகே சோலா நதிக்கரை அமைந்துள்ளது. இந்த நதியின் கரையோரத்தில் 12 மண்டை ஓடுகளையும் எலும்பு கூடுகளையும் உள்ளூர் மக்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளும், சிறப்பு அதிகாரிகளும் விசாரணை செய்வதற்கு தொடங்கியுள்ளனர். இதனையடுத்து 1939 ல் ஜெர்மனிய நாஜி படைகள் 2 ஆம் உலகப்போரின்போது போலந்தின் பல பகுதிகளை கைப்பற்றி வதை முகாம்களை அமைத்துள்ளது. இந்த […]
அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் கருப்பினத்தவரை தன்னுடைய கால் முட்டியால் அழுத்தி கொலை செய்த சம்பவத்தை வீடியோ எடுத்து தைரியமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பெண்ணிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. Minneapolis என்னும் மாகாணத்தில் வைத்து அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய கால் முட்டியை கொண்டு George Floyd என்ற கருப்பினத்தவரின் கழுத்தில் அழுத்தியதால், அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் சென்ற 17 வயதுடைய Darnella Frazier என்ற பெண்மணி வீடியோ […]
கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று உறவினர்களுக்கு தெரியப்படுத்தும் நிகழ்ச்சியில் கலர்பொடி போடப்பட்டிருந்த கருவி திடீரென்று வெடித்ததால் வனப்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலை நாடுகளில் ஒரு பெண்ணின் கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று உறவினர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக ஒரு நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் ஆண் குழந்தை என்றால் நீல பொடியையும், பெண் குழந்தை என்றால் இளஞ்சிவப்பு பொடியையும் பலூன்கலில் போட்டு உறவினர்களின் முன்னிலையில் உடைப்பார்கள். அதேசமயம் வசதி படைத்தவர்கள் […]
ஜி7 நாடுகளின் 47வது உச்சி மாநாடு கூட்டத்தின் மூலம் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவது மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சர்வதேச பிரச்சினைகளுக்கு சில முக்கிய தீர்வுகள் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் கார்ன்வால் மகாணத்தில் வைத்து ஜி-7 நாடுகளின் 47வது உச்சி மாநாடு கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஜி-7 நாடுகளின் பிரதமர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைய தலைவரும், கவுன்சில் தலைவரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து மூடப்பட்ட அறைக்குள் ஜி-7 நாடுகளின் பிரதமர்களுடனும், […]
இந்திய அதிகாரிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு அனுமதியளிப்பது தொடர்பான மசோதா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய கப்பற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் கடந்த 2016 ஆம் ஆண்டில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இவரை கைது செய்தனர். இதனையடுத்து இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை அளிப்பதற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியா, பாகிஸ்தானிலிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் […]
அமெரிக்கா கோவேக்ஸ் திட்டத்திற்கு 8 கோடி தடுப்பூசிகளை வழங்குவதில் ஒரு பங்கு இந்தியாவிற்கு கிடைக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி சம அளவில் கிடைப்பதற்காக ஐ.நா ஆதரவுடன் கோவேக்ஸ் சென்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் உலக சுகாதார நிறுவனமும், அதனுடைய கூட்டாளி […]
கொரோனாவை கட்டுப்படுத்தி பொதுமக்கள் வாழ தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட “சிறப்பு நாடுகளின் பட்டியலில்” பிரபல நாடுகள் இடம்பெற்றுள்ளதாக புள்ளிவிவர தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி பொதுமக்கள் நல்லபடியாக வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ள சிறப்பு நாடுகளின் பட்டியலில் மஸ்கட், துபாய், அபுதாபி போன்ற நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டில் 74வது இடத்திலிருந்த […]
கணினியின் வாயிலாக மட்டுமே பார்க்கக்கூடிய பிட்காயினை பிரபல நாடு வாக்கெடுப்பு நடத்தி சட்டப்பூர்வ பணமாக மாற்றியுள்ளது. ஜப்பானியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட பிட்காயினை கணினியின் வாயிலாக மட்டுமே பார்க்கவும் முடியும், பரிமாற்றம் செய்யவும் இயலும். எனவே இதுவரை இந்த பிட்காயின் நாணயத்தை எந்த ஒரு நாடும் சட்டபூர்வ பணமாக மாற்றவில்லை. இந்நிலையில் எல்சல்வடார் என்னும் மத்திய அமெரிக்க நாடு இந்த பிட்காயினை சட்டப்பூர்வமாக மாற்ற வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதற்கு ஆதரவாக 62 வாக்குகள் விழுந்ததையடுத்து எல்சல்வடார் நாட்டின் அதிபரான […]
தவறான பாதையில் மிகவும் வேகமாக சென்ற கார், லாரியின் மீது நேருக்கு நேராக மோதிய விபத்தில் தாயுடன் 3 குழந்தைகளும் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் 29 வயதுடைய Zoe Powell என்பவர் தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவருடன் காரில் ஆக்ஸ்போர்டுஷையரிலிருக்கும் ஏ40 சாலையில் மிகவும் வேகமாக தவறான பாதையில் சென்றுள்ளார். இதனையடுத்து மிகவும் வேகமாக சென்ற இந்த கார் அதே சாலையில் வந்த லாரியின் மீது நேருக்கு நேர் […]
தந்தையுடன் காணாமல்போன சிறுமிகள் கடலுக்குள் 3000 அடி ஆழத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் வசித்து வரும் Tomas Gimeno மற்றும் Beatriz Zimmerman என்ற தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் Tomas Gimeno அவருடைய மனைவியான Beatriz Zimmerman னிடம் சண்டை போட்டுவிட்டு தன்னுடைய 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின் இவர்கள் குறித்த விவரம் எதுவும் கிடைக்காததால், Tomas ன் குடும்பத்தினர்கள் காவல் நிலையத்தில் புகார் […]
சரணாலயத்திலிருந்து பொதுமக்கள் வாழும் இடத்திற்கு நுழைந்து 1 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்டம் ஏற்படுத்திய காட்டு யானைகளை விரட்டுவதற்காக 150 வாகனங்கள், அவசர சேவை அலுவலர்கள்,400 காவல்துறையினர் டிரோன்களுடன் களத்தில் இறங்கியுள்ளார்கள். சீனாவின் Xishuangbanna என்னும் இயற்கை சரணாலயத்தில் இருந்து சுமார் 15 காட்டு யானைகள் மக்கள் வாழும் yuxi என்ற நகரத்தை அடைந்துள்ளது. இதனையடுத்து சுமார் 6 மணிநேரம் அந்த 15 காட்டு யானைகளும் அந்த பகுதியிலிருக்கும் வீடுகளை நாசம் செய்வது, குப்பைத் தொட்டிகளை உடைப்பது […]
பூமியிலிருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் பார்ப்பதற்கு நெப்டியூனை போல் மிகவும் குளிர்ச்சி வாய்ந்த புதுவித கோளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவிலிருக்கும் விண்வெளி மையமான நாசாவின் விஞ்ஞானிகள் பூமியிலிருந்து சுமார் 90 ஒளியாண்டுகள் தொலைவில் பார்ப்பதற்கு நெப்ட்யூன் போலிருக்கும் TOI-1231 b என்னும் புதுவித கொளை கண்டுபிடித்துள்ளனர். இந்த கோளானது அளவில் பூமியைவிட 3 1/2 மடங்கு பெரியதாக உள்ளது என்று நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தக் கோளில் பூமியில் நிலவும் சீதோஷண நிலை நிலவுவதற்கு […]
“கொரோனா தடுப்பூசி” போட்டுக்கொண்டால் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று நிறுவனங்கள் அறிவித்ததால், பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இத்தொற்றின் பிடியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் 75 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சீனாவிலிருக்கும் ஹாங்காங்கில் 15% விழுக்காடு பொதுமக்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார்கள். இதனால் […]
அமெரிக்க ஜனாதிபதி தன்னுடைய அதிகாரபூர்வ பயணத்தை தொடங்கியதோடு மட்டுமல்லாமல் ரஷ்ய நாட்டிற்கும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் 8 நாட்கள் ஐரோப்பிய உறுப்பு நாடுகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் தன்னுடைய அதிகாரப்பூர்வ பயணத்தின் விளைவாக அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் கடந்த புதன்கிழமை இங்கிலாந்து வந்து சேர்ந்தார். இதனையடுத்து ஜூன் 11 மற்றும் 13ஆம் தேதி Cornwall லில் நடக்கும் ஜி-7 உறுப்பு நாடுகளின் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்க […]
மூத்த ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டின் விமானப்படைக்கு பாத்தியப்பட்ட விமானத்தில் 16 மூத்த ராணுவ அதிகாரிகள் பயணித்துள்ளனர். இந்நிலையில் இந்த விமானம் Mandelay நகரிliருக்கும் ஐகான் என்னும் கிராமத்தில் திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 16 பேர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியதாக மியான்மர் […]
தாயின் விளையாட்டால் 6-வது மாடியிலிருந்து சட்டை கிழிந்து 3 வயது குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் Anna Ruzankina என்னும் தாய் தன்னுடைய 3 வயது Anastasia என்கின்ற குழந்தை அழுததால் 6 ஆவது மாடியிலிருந்து தூக்கி கீழே போடுவது போல் விளையாட்டாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் அந்த குழந்தையின் சட்டை கிழிந்ததால் சற்றும் எதிர்பாராதவிதமாக 6 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த Anna கீழே விழுந்த […]
பிரபல நாட்டைச் சேர்ந்தவர்கள் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அதிகளவு மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகள் 21.26 செண்ட்களை மின் கட்டணமாக செலுத்தியுள்ளது. ஆனால் ஜெர்மனி நாட்டவர்கள் கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அதிகளவு மின்கட்டணத்தை செலுத்தியுள்ளார்கள். இதனையடுத்து ஜெர்மனியில் பெரிய வீடுகளில் இருந்துகொண்டு அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது மின்சாரத்தை 3,500 கிலோவாட் மணி நேரம் பயன்படுத்துபவர்களுக்கு 1 கிலோவாட் மணிக்கு 30.43 செண்ட்கள் […]
பிரபல நிறுவனத்தை தடைசெய்த நைஜீரிய நாட்டை புகழ்ந்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பிரபல நிறுவனமான ட்விட்டருக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேபோல் நைஜீரியா நாடும் ட்விட்டர் நிறுவனத்திற்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து தங்களுடைய பேச்சுரிமையை அனுமதிக்காத மற்றும் அனைத்து தரப்பினரது கருத்துகளையும் கேட்காத ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத் தலங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு நாடுகள் […]