Categories
உலக செய்திகள்

“சிங்கப்பூர்” மக்களே உஷார்….10 நாள் தான்…. ஓமிக்ரானால் முதல் பலி…. பதறும் மக்கள்….!!

சிங்கப்பூரில் பல நோய்களால் பாதிக்கப்பட்ட 92 வயது மூதாட்டி ஒருவர் ஓமிக்ரான் தொற்றால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் வசித்து வந்த 92 வயது மூதாட்டி ஒருவருக்கு ஏற்கனவே பல நோய்கள் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக உலகையே அச்சுறுத்தி வரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த 92 வயது மூதாட்டி ஓமிக்ரான் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அந்த மூதாட்டிக்கு சிகிச்சை கொடுத்த […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு: எல்லையில் “செத்து மடிந்த இந்தியர்கள்”…. பின்னணி என்னன்னு தெரியுமா…? தகவல் சேகரிக்கும் தூதரகம்…!!

அமெரிக்காவிற்குள் சட்டத்திற்குப் புறம்பாக கனடாவிலிருந்து நுழைய முயன்ற குழந்தை உட்பட 4 இந்தியர்கள் அந்நாட்டின் எல்லையில் கடும் குளிரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிற்குள் தேவையான ஆவணங்களின்றி நுழைந்த நபர்களிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை செய்தபோது திடுக்கிடும் உண்மை ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது அமெரிக்காவிற்குள் சட்டத்திற்குப் புறம்பாக கனடாவிலிருந்து நுழைய முயன்ற குழந்தை உட்பட 4 இந்தியர்கள் அந்நாட்டின் எல்லையில் கடும் குளிரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்: கண்ணீர்… மறைந்த “பௌத்த துறவி”…. இரங்கல் தெரிவித்த தலாய் லாமா….!!

10 க்கும் மேலான நூல்களை எழுதிய 16வது வயதில் துறவி பூண்ட வியட்நாமை சேர்ந்த திக் நாட் ஹான் தனது 95 ஆவது அகவையில் காலமாகியுள்ளார். வியட்நாமை சேர்ந்த திக் நாட் ஹான் தனது 16 ஆவது அகவையில் துறவி பூண்டுள்ளார். இவர் வியட்நாம் போர் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். மேலும் இவர் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பௌத்தமதம் குறித்து போதித்துள்ளார். இதனையடுத்து அமெரிக்காவின் சமூக உரிமைப் போராளியான மார்ட்டின் லூதர் கிங்கை […]

Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. திடீரென வெடித்த வெடிகுண்டு…. களமிறங்கிய அதிகாரிகள்….!!

பாகிஸ்தானிலுள்ள முகாம் ஒன்றில் திடீரென மோர்டார் ரக குண்டுகள் வெடித்து சிதறிய விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். பாகிஸ்தானில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தங்குவதற்காக வடமேற்கு கைபர் மாநிலத்தில் முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் திடீரென பழைய மோர்டார் ரக குண்டுகள் வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து படுகாயமடைந்த பலரை அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள். இந்த விபத்து குறித்து வெடிகுண்டு செயலிழப்பு […]

Categories
உலக செய்திகள்

“அடுத்த வைரஸ்” 40 நாடுகளிலா…? தீவிரம் எப்படி இருக்கும்…? இங்கிலாந்தின் பரபரப்பு அறிக்கை…!!

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஓமிக்ரானின் புதிய திரிபால் தற்போது வரை அங்கு 426 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக ஓமிக்ரான் உரு மாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் ஓமிக்ரானின் புதிய மாறுபாடான BA2 கண்டறியப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை அந்நாடு விசாரணையின் கீழ் உள்ள மாறுபாடு என்று வகைப்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை ஓமிக்ரான் […]

Categories
உலக செய்திகள்

“மிஷன் இம்பாசிபிள்”…. என்னப்பா இப்டி சொல்லிட்டீங்க?…. உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏமாற்றம்….!!!!

கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான “மிஷன் இம்பாஸிபிள்” என்ற படத்தில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்துள்ளார். இந்த படம் திரையுலகில் மாபெரும் வெற்றியை பெற்றது. அதோடு மட்டுமில்லாமல் இந்த படத்தின் ஆறு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி 7-ஆம் பாகத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த படம் 2023-ஆம் ஆண்டு ஜூலை […]

Categories
உலக செய்திகள்

உலகம் “பனிப்போரின் விழிம்பிலா”…? ஷாக் கொடுத்த ஐ.நா…!!

உலகம் பனிப்போரை விட மிகவும் மோசமான சூடான மோதலின் விளிம்பில் உள்ளதாக ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ கூறியுள்ளார். 2 ஆம் உலகப் போர் முடிந்த பின்னர் கடந்த 1991 ஆம் ஆண்டுவரை அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்குமிடையே நடந்த மோதலும், முறுக்களும் பனிப்போர் ஆகும். இந்நிலையில் ஐ.நா சபையின் பொது செயலாளரிடம் பத்திரிகையாளர்கள் “உலகம் 2 ஆம் பனிப்போரின் விழும்பில் இருக்கிறதா”? என்ற கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு அவர் “உலகம் பனிப்போரை விட மிகவும் மோசமான […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து “அதிரடி கொடுக்கும் ரஷ்யா”…. பதற்றத்தில் அண்டை நாடுகள்…. நடக்கப்போவது என்ன?…!!

ரஷ்ய நாட்டை சார்ந்த இராணுவத்தினர்கள் மற்றும் பல போர் எந்திரங்கள் பெலாரஸூக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா ஏராளமான ராணுவ படைகளை உக்ரைன் நாட்டின் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷ்யாவை அமெரிக்கா உட்பட ஏராளமான நாடுகள் பலமுறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா பெலாரஸ் ராணுவத்துடன் இணைந்து கூட்டு போர் ஒத்திகை பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன்படி ரஷ்யா தங்கள் நாட்டை சேர்ந்த ராணுவத்தினர்கள் மற்றும் பல பயங்கர போர் எந்திரங்களை பெலாரஸூக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து ரஷ்யாவின் இதுபோன்ற […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்து: கூலாக சென்று பயங்கரமாக மோதிய கார்கள்…. முக்கிய புள்ளி உட்பட பலரும் பலியான சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ஆப்கானிஸ்தானில் கார்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் சிக்கி 5 பேர் பலியான சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள தவுலத் அபாத் என்னும் மாவட்டத்திலேயே இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது. அதன்படி 2 கார்கள் ஒன்றோடொன்று அதி பயங்கரமாக மோதியுள்ளது. இதில் சிக்கி தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் ஆணைய தலைவரான ஜாம்ஷித் உட்பட 5 பேர் பலியாகியுள்ள நிலையில் 9 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இந்த விபத்து குறித்து […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! விடிய விடிய…. “கொட்டும் பனியில்”… குரங்குடன் போலீஸ்…. என்னன்னு பாருங்க…!!

அமெரிக்காவில் லாரி ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதிய விபத்தில் அதிலிருந்து தப்பி சென்ற 4 ஆய்வுகூட குரங்குகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறைப்பனியை கூட பொருட்படுத்தாமல் தேடி அழைந்துள்ளார்கள். அமெரிக்காவில் லாரி ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதிய விபத்தில் அதிலிருந்த நூற்றுக்கணக்கான ஆய்வுகூட குரங்குகளில் 4 அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த குரங்குகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதால் அதன் அருகே எவரும் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். இதனையடுத்து போலீசார் 1 குரங்கை தப்பிய […]

Categories
உலக செய்திகள்

யாரு கிட்டலாம் “5 வயது குழந்தை” இருக்கு…? அடுத்த மார்ச்சிலிருந்து…. வெளியான அதிரடி தகவல்…!!

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ஜப்பான் அரசாங்கம் 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பான் அரசாங்கம் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த ஜப்பான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து ஜப்பானிலுள்ள தடுப்பூசி பெறுவதற்கு தகுதியுடைய 80 லட்சம் சிறுவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

“உலகம் மோசமாக உள்ளது”…. எதுக்குன்னு தெரியுமா….? உண்மையை உடைத்த ஐ.நா பொதுச்செயலாளர்….!!

5 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட கொரோனா உட்பட பல காரணங்களால் உலகம் மிகவும் மோசமாகவுள்ளதாக ஐ.நா சபையின் பொது செயலாளர் கூறியுள்ளார். உலகம் 5 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட கொரோனா, காலநிலை மாற்றம் போன்ற பல முக்கிய காரணங்களால் மிகவும் மோசமாகவுள்ளதாக தனது 2 ஆவது ஆண்டு பதவி காலத்தை தொடங்கிய ஐ.நா சபையின் பொது செயலாளரான ஆன்டனியோ கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ஐ.நா சபையில் பொதுச் செயலாளருக்கு அதிகாரமில்லை என்று கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

முதல் முறையாக…. ‘காணொளி மூலம் சந்தித்த இரு நாட்டு தலைவர்கள்’…. என்ன பேசுனாங்கன்னு தெரியுமா?!!!!

முதல் முறையாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் காணொளி காட்சி வாயிலாக சந்தித்து பேசி கொண்டனர். அப்போது இருநாட்டு தலைவர்களும் அதிகரித்து வரும் சீனாவின் ராணுவ செல்வாக்கு மற்றும் வடகொரியாவின் அணுசக்தி திட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இரு நாடுகளும் இந்த விவகாரங்களில் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஒப்புதல் தெரிவித்தனர்.

Categories
உலக செய்திகள்

BIG ALERT: இதோ.. வந்தாச்சு “ஓமிக்ரானின் புதிய திரிபு”…. தலைதூக்குமா பாதிப்பு…? வெளியான பரபரப்பு அறிக்கை….!!

இங்கிலாந்தில் கடந்த 10ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உரு மாற்றமடைந்த ஓமிக்ரானின் புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் இங்கிலாந்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 10ஆம் தேதி ஓமிக்ரானின் புதிய மாறுபாடான பிஏ2 கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, புதிய திரிபு விசாரணையின் கீழ் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

அதிரடி அறிவிப்பு: கடலுக்கடியில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு…. கடுமையாக பாதிக்கப்பட்ட டோங்கா…. உதவிக்கரம் நீட்டும் பிரபல நாடுகள்….!!

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து சீனா கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட டோங்காவிற்கு பல உதவிகளை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. தெற்கு பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்கா கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டோங்காவிற்கு ஏற்கனவே பல நிவாரண பொருட்களை கப்பல் மற்றும் விமானத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது அந்நாட்டிற்கு ராஜங்க ரீதியில் பல உதவிகளை செய்து வரும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! இனி “தடுப்பூசி பாஸ்” கட்டாயம்…. பிரபல நாடு திட்டவட்டம்…. அங்கீகரித்த அரசியலமைப்பு சபை….!!

பிரான்ஸில் உணவகங்கள் உட்பட பொது இடங்களுக்கு செல்லும் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக கொரோனா தொடர்பான தடுப்பூசியை போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை அந்நாட்டின் அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது. பிரான்சில் வருகின்ற திங்கட்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள கொரோனா தொடர்பான தடுப்பூசி பாஸ்ஸை அந்நாட்டின் அரசமைப்பு சபை அங்கீகரித்துள்ளது. அதன்படி உணவகங்கள் உட்பட பொது இடங்களுக்கு செல்லும் 16 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கட்டாயமாக கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்தி கொண்டதற்கான பாஸ்ஸை வைத்திருக்க […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ்!…. “இந்தியாவின் அசத்தலான அறிமுகம்”…. ஒருமுறை சார்ஜ் செய்தாலே போதும்…. விலை எவ்ளோ தெரியுமா?!!!!

இந்தியாவை சேர்ந்த ‘Nexzu Mobility’ என்ற நிறுவனம் லித்தியம் பேட்டரியில் இயங்கும் புதிய மின்சார மிதிவண்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மிதிவண்டிகளில் 100 கி.மீட்டர் தூரம் வரை செல்ல ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தாலே போதும் என்று அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பாசிங்கா கார்கோ மாடல் வண்டி 51 ஆயிரத்து 575 ரூபாயும், பாசிங்கா மாடல் மிதிவண்டிக்கு 49 ஆயிரத்து 445 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நிறுவனம் கடந்த 2015-ஆம் ஆண்டில் மகாராஷ்டிர […]

Categories
உலக செய்திகள்

ஆச்சரிய தகவல்: “80 அடி” நீர்வீழ்ச்சியிலிருந்து விழுந்த “இளம்பெண்”…. உயிர் பிழைத்த சம்பவம்…. எப்படினு தெரியுமா…?

இங்கிலாந்தில் மலை உச்சியின் ஓரத்திலிருந்து சைக்கிளோடு கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண் ஒருவர் 5 மாதங்களுக்குப் பின் அதிலிருந்து மீண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் காரா என்ற இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக நார்வேயிலுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றிற்கு தனது காதலனுடன் விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார். அவ்வாறு சென்ற காரா 80 அடி உயரமுடைய மலை உச்சியிலிருந்து தலையில் ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிளோடு கீழே விழுந்துள்ளார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

“போச்சா!”…. பாகிஸ்தான் பிரதமர் இந்த வேலைதான் பாக்குறாரா?…. தலிபான்கள் ஆவேசம்….!!!!

தலிபான்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை கடுமையாக விமர்சித்துள்ளனர். அதாவது தலிபான் செய்தி தொடர்பாளர் ஒருவர் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கைப்பாவையாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செயல்பட்டு வருவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் தேசிய உணர்வுள்ள ஆப்கானியர்களை பாகிஸ்தான் அரசாங்கம் இஸ்லாமிய எமிரேட்ஸுக்கு எதிராக தூண்டி விட முயற்சி செய்கிறது. இது அவர்களுடைய சதிகளில் ஒன்று ஆகும். ஏற்கனவே பாகிஸ்தான் FATF அமைப்பினால் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அழிந்து விடும் என்று அவர் […]

Categories
உலக செய்திகள்

“தேசிய அரவணைப்பு தினம்”…. நெருக்கமாக உறங்கிய குட்டிகள்…. வெளியான நெகிழ்ச்சி வீடியோ….!!

ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்பட்டு வரும் தேசிய அரவணைப்பு தினத்தை முன்னிட்டு 2 ஆண் யானை குட்டிகள் ஒன்றோடொன்று நெருக்கமாக தூங்கும் காட்சிகள் தொடர்புடைய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் அசோகா, கவி என்ற 2 ஆண் யானை குட்டிகள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த 2 ஆண் யானை குட்டிகளும் ஒன்றோடொன்று நெருக்கமாக உறங்கிக்கொண்டிருந்துள்ளது. இதனை பூங்காவின் உரிமையாளர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளார்கள். இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதிகளின்” பலே திட்டம்… அதிரடியாக நடந்த தாக்குதல்…. நைசாக நழுவிய கைதிகள்….!!

குர்ஷித் கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டிலிருக்கும் சிரியாவிலுள்ள ஹவெரன் ஜெயிலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அங்கிருந்த ஏராளமான கைதிகள் தப்பி சென்றிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு குர்ஷித் கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க நாட்டிற்கு மிகவும் உதவி செய்துள்ளார்கள். மேலும் பிடிபட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளை சிறையில் வைத்து குர்ஷித் கிளர்ச்சியாளர்கள் கண்காணித்தும் வந்துள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் தொடங்கிய ஏர் இந்தியா சேவை!”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ஏர் இந்தியா சேவை 5 ஜி தொழில்நுட்ப பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. அதாவது ஏர் இந்தியா, அமெரிக்காவுக்கான விமான சேவைகளை ரத்து செய்திருந்தது. இந்நிலையில் மீண்டும் விமான சேவைகள் தற்போது தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் அதிவேக 5 ஜி அலைக்கற்றை தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தே பிறகு ஏர் இந்தியா சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

இரவில் தூக்கம் வரலையா…? இதோ.. வந்துட்டு “எளிய பயிற்சி”…. படுத்த 2 நிமிடத்தில்…. டிப்ஸ் கொடுத்த பிட்னஸ் குரு….!!

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் படுத்த இரண்டே நிமிடத்தில் தூங்குவதற்கு தேவையான எளிய பயிற்சி ஒன்றை கனடாவை சேர்ந்த பிட்னஸ் குரு தெரிவித்துள்ளார். கன்னட நாட்டை சேர்ந்த ஜஸ்டின் அகஸ்டின் என்பவர் டிக் டாக், தொலைக்காட்சி போன்றவைகளில் ஃபிட்னஸ் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவர் அண்மையில் இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நபர்களுக்கு படுத்த 2 நிமிடத்தில் தூங்குவதற்கு ராணுவத்தினர்கள் பயன்படுத்தும் எளிய பயிற்சி ஒன்றை கூறியுள்ளார். அதாவது இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நபர்கள் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!…. “இது சீனா செஞ்ச வேலை தானா?”…. இந்திய சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த மிரம் தரோன் ( வயது 17 ) என்ற சிறுவன் வேட்டையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளான். அப்போது அவனை சீன ராணுவம் கடத்திச் சென்றுள்ளது. அதாவது இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன வீரர்கள் அந்த சிறுவனை கடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவம், ஒருவேளை அந்த சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் வந்திருந்தால் சீனா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

பகிரங்க கடிதம்: எங்களுக்கு “கூடுதல் வரி விதிங்க”…. எதுக்குன்னு தெரியுமா…? கோரிக்கையால் ஆடிப்போன மாநாடு….!!

அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளை சேர்ந்த 102 பெரும் பணக்காரர்கள் கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு தங்களுக்கு கூடுதல் வரி விதிக்குமாறு டாவோஸ் மாநாட்டிற்கு ஆன்லைன் மூலம் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்கள். அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளை சேர்ந்த 102 பெரும் பணக்காரர்கள் தங்களுக்கு கூடுதல் வரியை விதிக்குமாறு ஆன்லைன் மூலம் உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாட்டிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்கள். இந்த கடிதத்தை அவர்கள் வறுமை மற்றும் கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு அனுப்பியுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. கண்ணிமைக்கும் நேரத்தில்…. 17 பேர் உடல் சிதறி பலி…. நெஞ்சை பதற வைக்கும் செய்தி….!!!!

இன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ‘கானா’ என்ற நாட்டில் சரக்கு லாரி ஒன்று வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு பொகாசா என்ற நகர் வழியாக சென்று கொண்டிருந்தது. இதையடுத்து லாரி அபியெட் என்ற சந்தை பகுதி வழியாக சென்றது. அப்போது அங்கு வேகமாக வந்த பைக் ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் லாரியில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. இதனால் ஏற்கனவே சரக்கு லாரியில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்தும் பயங்கரமாக வெடித்துள்ளது. மேலும் வண்டியில் ஏற்றப்பட்டிருந்த வெடிமருந்துகள் சக்தி […]

Categories
உலக செய்திகள்

ALERT: மக்களே.. “ஒரே நாளில்” கொத்தாக பாதித்த “கொரோனா”…. வெளியான பரபரப்பு தகவல்….!!

போர்ச்சுக்கலில் கடந்த ஒரே நாளில் மட்டும் 52,549 பேருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு அத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,00,000 த்தையும் தாண்டியுள்ளது. போர்ச்சுக்கலில் கடந்த ஒரே நாளில் மட்டும் 52,549 பேருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,03,169 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 33 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனால் அந்நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

WOW சூப்பர்…! இதோ… “புதிய சாதனை”…. தனியாக உலகை சுற்றிய “சிங்கப்பெண்”….!!

பெல்ஜியத்தில் வசித்துவரும் இளம் பெண்ணொருவர் 155 நாட்கள் சிறிய விமானம் ஒன்றில் உலகையே வலம் வந்து புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். பெல்ஜியத்தில் சாரா ரூதர்ஃபோர்டு என்னும் 19 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 155 நாட்கள் சிறிய விமானம் ஒன்றில் உலகை வலம் வந்துள்ளார். இதனையடுத்து கடந்த வியாழக்கிழமையன்று உலகை வலம் வந்து முடித்த சாரா மேற்கு பெல்ஜியத்தில் தரையிறங்கியுள்ளார். இந்நிலையில் சாரா இளம் வயதிலேயே உலகை வலம் வந்த சிங்கப் […]

Categories
உலக செய்திகள்

இனி வரும் ஆண்டுகளில்…. “2021-ஐ விட அதிக ஆபத்து?”…. உலக வானிலை நிறுவனம் கணிப்பு….!!!!

உலக வானிலை நிறுவனம் பூமியின் வெப்பநிலை பதிவுகளை ஆராய தொடங்கியதில் இருந்து இதுவரை ஏழு ஆண்டுகள் மிகவும் வெப்பமான ஆண்டுகளாக கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் 2021-ஆம் ஆண்டும் உண்டு என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை உலக வானிலை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது சராசரி உலக வெப்பநிலை கடந்த ஆண்டில் 1.11 டிகிரியாக அதிகரித்து காணப்பட்டுள்ளது. இருப்பினும் “எல் நினா” எனப்படும் சீதோஷ்ண நிலை மாற்றம் கடந்த ஆண்டு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். அதாவது “எல் நினா” என்பது பருவநிலையை […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்: “கிறிஸ்தவ நிகழ்ச்சியில்” வெறியாட்டம்…. நெரிசலில் சிக்கி பலரும் பலி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

லைபீரியாவின் தலைநகரில் நடைபெற்ற கிறிஸ்துவ நிகழ்ச்சி ஒன்றில் மர்ம கும்பல் நடத்திய கத்தி தாக்குதலையடுத்து அங்கிருந்த ஏராளமானோர் அலறியடித்து ஓடியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கர்ப்பிணி உட்பட 29 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லைபீரியாவின் தலைநகரான மான்ரோவியாவிலிருக்கும் கால்பந்து மைதானத்தில் வைத்து கிறிஸ்துவ நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இந்த கிறிஸ்துவ நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளார்கள். இந்நிலையில் அங்கிருந்த கூட்டத்தின் மீது மர்ம கும்பல் ஒன்று அதிபயங்கரமாக கத்தி தாக்குதலை நடத்தியுள்ளது. இதனை கண்டு […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டின்” திட்டம் இதானா..! போட்டுடைத்த ஜோ பைடன்…. என்னன்னு தெரியுமா…?

ரஷ்யா உக்ரைன் மீது அடுத்து தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது என்று அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் நிருபர்களிடம் கூறியுள்ளார். உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை குவித்துள்ள ரஷ்யா அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக ஓராண்டு ஆட்சி காலத்தை நிறைவு செய்த அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் நிருபர்களிடம் கூறியுள்ளார். மேலும் அவர் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் அமெரிக்க மக்கள் சோர்வடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொரோனாவை ஒழிப்பதற்கும், அதனால் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! “முன்னாள் போப் ஆண்டவருக்கு” பாலியல் வழக்கில் தொடர்பா…? வெளியான பரபரப்பு அறிக்கை… திக்குமுக்காடிய கத்தோலிக்கர்கள்…!!

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்த முன்னாள் போப் ஆண்டவர் முனி பேராயராக இருந்தபோது கையாண்ட 4 பாலியல் தொடர்புடைய வழக்கில் குற்றம் புரிந்ததாக குழு ஒன்று விசாரணையின் மூலம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் முனிச் உயர் மறைமாவட்ட பேராயராக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான முன்னாள் போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட் இருந்துள்ளார். இதனையடுத்து ஜெர்மனியின் முனிச் உயர்மறைமாவட்டத்தின் குழு ஒன்று கடந்த 1945 முதல் 2019 ஆம் ஆண்டு வரை தேவாலயங்களில் பாதிரியார்கள் செய்த பாலியல் ரீதியான […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”…. பிரதமர் வீட்டில் கொரோனா…. நெருங்கிய வட்டாரங்கள் சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குடும்பத்தில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது யார் ? என்ற விவரம் குறித்து அலுவலகம் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கொரோனாவால் போரிஸ் ஜான்சனின் மகள் ரோமி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போரிஸ்-கேரி ஜான்சன் தம்பதியினரின் 6 வார மகளான ரோமி கொரோனா பெருந்தோற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது தொற்றிலிருந்து அவர் விடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. “விஞ்ஞானிகளின் முயற்சி வீண் போகல!”…. ஆய்வில் வெளிவந்த அசத்தலான தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கண்டறிய ஆர்.டி.ஏ மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை உள்ளிட்ட முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே விஞ்ஞானிகள் வேறு சில வழிமுறைகளின் மூலம் எளிய முறையில் கொரோனா தொற்று பரவலை கண்டறிவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கொரோனா பரவலை எக்ஸ்ரே கதிர்களை பயன்படுத்தி கண்டறியும் வழிமுறையை ஸ்காட்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் 98% கொரோனா பரிசோதனை துல்லியமாக இருப்பதாக ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா இதை செய்தால்?”…. பேரழிவு நிச்சயம்!…. அமெரிக்க அதிபர் பகிரங்க எச்சரிக்கை….!!!!

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். அதாவது உக்ரைன் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு ரஷ்யா தான் முழு பொறுப்பு. ஒருவேளை ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால் அதற்கு தக்க பதிலடியாக ரஷ்யா பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் எங்களின் கூட்டாளிகள் ரஷ்யாவிற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த தயாராக இருக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் கிட்டதட்ட 600 மில்லியன் மதிப்பிலான அதிநவீன அணு ஆயுதங்களும் […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு…! இதோ ரெடியாகிட்டு “புதிய தலைநகரம்”…. பட்ஜெட் எவ்ளோனு தெரியுமா…? வெளியான அதிரடி தகவல்….!!

இந்தோனேஷியா 466 டிரில்லியன் ரூபாய் நிதி பட்ஜெட்டில் புதிய தலைநகரை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜாகர்தா முழுவதும் வருகின்ற 2050 ஆம் ஆண்டிற்குள் கடலில் மூழ்கி விடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தோனேஷிய அரசாங்கம் 466 டிரில்லியன் ரூபாய் நிதி பட்ஜெட்டில் நுசாந்த்ரா என்னும் புதிய தலைநகரை வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பட்ஜெட்டிற்காக இரண்டரை லட்சம் ஹெக்டர் நிலங்களை அரசு வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

திடீர் திருப்பம்: இவங்களும் “தேர்தலில்” போட்டியிடுவாங்க…. காற்றாக பரவிய தகவல்…. பாராட்டித் தள்ளிய அதிபர்….!!

அமெரிக்காவின் துணை அதிபருக்கும், தனக்குமிடையே கருத்து வேறுபாடு என்று பரவிய தகவலை மறுக்கும் விதமாக அந்நாட்டின் தலைவரான ஜோ பைடன் அவரை பாராட்டியுள்ளார். அமெரிக்காவின் தலைவரான ஜோ பைடனுக்கும், அந்நாட்டின் துணை அதிபருக்குமிடையே கருத்து வேறுபாடு என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு எடுக்கும் எந்த ஒரு முடிவிலும் கமலா ஹரிஷின் பங்களிப்பு கிடையாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதனை மறுக்கும் விதமாக அதிபர் ஜோ பைடன் கமலா ஹரிசை […]

Categories
உலக செய்திகள்

இதோ வந்துட்டு “அடுத்த வீடியோ”…. வழக்கு தொடர்ந்த பிரபல நிறுவனம்…. பதிலடி கொடுத்த அமெரிக்கா….!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரில் கடந்தாண்டு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதலுக்கு தங்கள் நாட்டின் உளவுத்துறை கொடுத்த பதிலடி தொடர்பான வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் கடந்தாண்டு அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் உளவுத்துறை ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதுதொடர்பாக நடந்த விசாரணையில் அமெரிக்கா ட்ரோன் […]

Categories
உலக செய்திகள்

“இப்படியும் பணம் சம்பாதிக்கலாம்?”…. ஒரே இரவில் கோடி கோடியாக…. கல்லூரி மாணவருக்கு அடித்த ஜாக்பாட்….!!!!

இந்தோனேசியாவில் உள்ள செமராங் என்ற பகுதியில் வசித்து வரும் சுல்தான் குஸ்டாஃப் அல் கோசாலி ( வயது 22 ) என்ற கல்லூரி மாணவர் கடந்த ஐந்து வருடங்களில் எடுக்கப்பட்ட சுமார் 1,000 செல்ஃபிக்களை NFT-களாக மாற்றி பின்னர் ‘Opensea’ சந்தையில் விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் அந்த கல்லூரி மாணவருக்கு ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் கிடைத்துள்ளது. அதாவது 18 முதல் 22 வயதிற்கு உட்பட்ட காலகட்டத்தில் கோசாலி தினமும் தனது கணினியின் முன் நின்றும் […]

Categories
உலக செய்திகள்

“மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!”…. அன்புடன் வரவேற்கும் பிரபல நாடு…. வெளியான செம அறிவிப்பு….!!!!

கனடா 2022-2024-ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டத்தை பிப்ரவரி மாதம் 11-ம் தேதி அறிவிக்க உள்ளது. அதாவது கனடா 2021-ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் புலம்பெயர்தல் மட்ட திட்டத்தை அறிவிக்கிறது. இந்த அறிவிப்பில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அறிவிப்பு, இந்த ஆண்டில் கனடாவுக்கான புலம்பெயர்தல் இலக்கு, மனித நேய மற்றும் குடும்ப புலம்பெயர்தல், பொருளாதாரம் ஆகிய திட்டங்களின் கீழ் கனடாவுக்கு புதிதாக எத்தனை பேர் வரவேற்கப்பட உள்ளார்கள் ? என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டில் ( 2022-ல் […]

Categories
உலக செய்திகள்

ஏலத்திற்கு விடப்படும் உலகின் “அரிய வகை வைரக்கல்”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

உலகிலேயே மிகவும் அரிதான ஒன்றான கருப்பு நிற வைரக்கல் மக்களின் பார்வைக்காக முதன்முறையாக துபாயில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த கருப்பு நிற வைரக்கல் அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் துபாயில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த கருப்பு நிற வைரக்கல்லுக்கு “எனிக்மா” என்று பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 555 கேரட் எடையுள்ள அந்த வைரம் கிட்டத்தட்ட 270 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சிறுகோள் அல்லது விண்கல் பூமியின் மீது மோதிய போது உருவாகி […]

Categories
உலக செய்திகள்

அதிரடி: கைது செய்யப்பட்ட போலீஸ்…. காரணம் தெரியுமா..? பிரபல நாட்டை உலுக்கிய சம்பவம்….!!

பிரான்சில் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய சந்தேக நபரை சுட்டுக் கொன்ற காவல் அதிகாரி கைது செய்யபட்டுள்ளார். பிரான்ஸில் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை பிடிப்பதற்காக காவல்துறை அதிகாரி துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டினால் அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைதொடர்ந்து பொது மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய குற்றத்திற்காக அந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை IGPN […]

Categories
உலக செய்திகள்

வீடியோ: “போர்வையாய் கிடந்த பனி”…. துள்ளித் துள்ளி மகிழ்ந்த நாய்கள்…. கவர்ந்திழுக்கப்பட்ட நெட்டிசன்கள்…!!

ஈராக்கில் போர்வை போர்த்தியது போல் கிடந்த பனியில் 3 நாய்கள் உற்சாகமாக துள்ளி விளையாடிய காட்சிகளை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். ஈராக்கில் தற்போது கடுமையான குளிர் காலம் நிலவி வருகிறது. இந்த காலநிலையால் அந்நாட்டிலுள்ள வீடுகள், சாலைகள் அனைத்தும் பனி போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் அந்நாட்டிலுள்ள சுலைமான் பகுதியிலிருக்கும் 3 நாய்கள் கொட்டிக் கிடந்த பனியில் உற்சாகமாக துள்ளி விளையாடியுள்ளது. இதனை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் […]

Categories
உலக செய்திகள்

“சபாஷ்!”…. முதல் முறையாக தமிழருக்கு…. அயல்நாட்டில் கிடைத்த அந்த பெருமை?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம் என்ற பகுதியை சேர்ந்த அன்வர் சாதக் ஆரம்பத்தில் அங்கு சாதாரண கணக்கராக வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு பல்வேறு நிறுவனங்களை ஆரம்பித்து தற்போது அனைவரும் வியந்து பார்க்கும் விதமாக வெற்றிகரமான தொழிலதிபராக மாறியுள்ளார். இந்நிலையில் அமீரக அரசு அவருடைய சாதனையை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு கோல்டன் விசா வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. ஆனால் ஐக்கிய அரபு […]

Categories
உலக செய்திகள்

இவங்க யாருன்னு தெரிஞ்சிடுச்சு…. தாக்குதலில் சிக்கிய இந்தியர்கள்…. தூதரகத்தின் பரபரப்புத் தகவல்….!!

ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களை அடையாளம் கண்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபியிலுள்ள விமான நிலையம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். அவ்வாறு படுகாயமடைந்த 6 பேரில் இருவர் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 2 இந்தியர்கள் யாரென அடையாளம் கண்டுள்ளதாக இந்திய […]

Categories
உலக செய்திகள்

இதோ… வந்தாச்சு இளம் வயது “சிங்கப் பெண்”…. நாடாளுமன்றத்தின் அடுத்த “தலைவர்” இவங்க தான்…!!

மால்டாவை சேர்ந்த மிக இளம் வயதுடைய பெண் ஒருவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 3 ஆவது புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மால்டாவை சேர்ந்த 43 வயதாகின்ற ராபர்ட்டா மெட்சோலா கடந்த 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் நடந்த அமர்வின் மூலம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 3 ஆவது புதிய தலைவராக மால்டாவை சேர்ந்த இளம் வயது ராபர்ட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Categories
உலக செய்திகள்

OMG : “இயற்கையின் சீற்றம்?”…. ஒட்டுமொத்தமாக அழிந்து போன ‘தீவு’…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கோ தீவு நாட்டில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த நாட்டில் பல தீவுகள் உள்ளது. அதேபோல் கடலுக்கு அடியில் சில எரிமலைகளும் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த நாட்டிலுள்ள ஒரு தீவில் அமைந்துள்ள “ஹுங்கா டோங்கோ” என்ற எரிமலையானது கடலுக்கு அடியில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி அந்த எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் சுனாமி அலைகள் கடலில் உருவானது. மேலும் அந்நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

அசத்தல்: “யூடியூப்பை” பார்த்து இப்படியும் செய்யலாமா…? கொரோனா நேரத்தில்…. கலக்கிய இந்திய குடும்பம்….!!

இங்கிலாந்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பயிற்சி பெற்ற விமானி ஒருவர் கொரோனா காலகட்டத்தில் யூடியூப்பை பார்த்து சொந்தமாக 4 பேர் பயணிக்கும் விமானம் ஒன்றை உருவாக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் அசோக் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பயிற்சி பெற்ற விமானியாக திகழ்கிறார். இந்நிலையில் அசோக் கொரோனா காலகட்டத்தில் யூடியூப்பை பார்த்து தன் மனைவியுடன் சேர்ந்து 4 பேர் பயணிக்கும் வகையிலான விமானம் ஒன்றை சொந்தமாக […]

Categories
உலக செய்திகள்

WARNING: “5ஜி” யால இவ்ளோ தீமை இருக்கா…? அச்சம் தெரிவித்த அதிகாரிகள்….!!

அமெரிக்காவில் செல்போன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் 5ஜி தொழில்நுட்பத்தின் சிக்னல்களால் விமானத்தை இயக்குவதில் பாதிப்பு ஏற்படும் என்று அதனை சார்ந்த அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவில் 5ஜி தொழில்நுட்பத்தை செல்போன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் விமான நிறுவன அதிகாரிகள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். அதாவது 5ஜி தொழில்நுட்ப சிக்னல்களால் விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் 5ஜி அலைக்கற்றையின் ஊடுருவல் விமானத்தின் அல்டிமீட்டர் போன்ற கருவிகளை பாதிப்படைய செய்வதால் அதனை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா இவ்ளோ ஏற்பாடா?…. “பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் 2022″…. வெளியான முக்கிய தகவல்….!!!!

வருகின்ற பிப்ரவரி 4-ஆம் தேதி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் வீரர்-வீராங்கனைகளுக்கு உதவும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் சிலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக பிரத்தியேக தானியங்கி மின்சார பேருந்துகள் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு இயக்கப்படுகிறது. இதற்கிடையே ஒலிம்பிக் கிராமம் வருகின்ற 27-ஆம் […]

Categories

Tech |