இந்தோனேசியா நாடாளுமன்றம் அந்நாட்டின் தலைநகரை ‘காளிமன்டன்’ என்ற இடத்திற்கு மாற்றுவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அந்த புதிய தலைநகரை கட்டமைப்பதற்கான மெகா திட்டம் 32 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ( இந்திய மதிப்பில் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ) வகுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ வெள்ளம், காற்று மாசு, நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக தலைநகரை மாற்ற முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த புதிய தலைநகருக்கு “நுசன்டரா” என்று பெயர் […]
Tag: உலகச் செய்திகள்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. மேலும் உலக நாடுகள் இன்னும் கொரோனா பாதிப்பில் இருந்து மீளாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொற்று நோய் பிரிவு தலைவர் பஹீம் யூனுஸ் “நாம் அனைவரும் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி பரபரப்பாக பேசியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஆபத்தான சூழ்நிலையை தவிர்ப்பதற்காக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல் […]
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி மீது நடத்திய ட்ரோன் தாக்குதலையடுத்து கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. ஏமன் நாட்டை சார்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி மீது அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலினால் கச்சா எண்ணெயை வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. இந்த கச்சா எண்ணெயின் விலை […]
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தின் காட்சிகளை ஆஸ்கர் விருது குழு தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளது இந்திய சினிமாவுக்கே கிடைத்த கவுரவம் என்று திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் பழங்குடியினத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் சட்டப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு உண்மை கதையாகும். இந்நிலையில் இந்த படத்தின் சில பகுதிகளை ஆஸ்கர் விருது குழு தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளது. இது குறித்து திரையுலக பிரபலங்கள் கூறியதாவது, […]
பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததோடு, 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்த அந்த நபர் சீனாவை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே முல்தான் நகர துணை ஆணையாளர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அந்த […]
சார்ஜியாவில் கடந்த ஒரே நாளில் மட்டும் சுமார் 7,521 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு அத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தையும் கடந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். சார்ஜியாவில் கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,521 ஆக உள்ளது. இந்நிலையில் சார்ஜியாவில் மொத்தமாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,06,864 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
சில நாட்களுக்கு முன்பாக காணாமல்போன வங்காளதேசத்தில் பார்டமன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிரபல நடிகை தலைநகரில் சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் ரைமா இஸ்லாம் என்பவர் 25 க்கும் மேலான படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவராக வலம் வந்துள்ளார். இவர் முதன்முதலாக பார்டமன் என்ற படத்தின் மூலமாகதான் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக காணாமல் போயுள்ளார். இதனை தொடர்ந்து அவரது கணவர் காவல் நிலையத்தில் […]
கடந்த புதன்கிழமை அன்று லண்டனில் உள்ள Greenwich-ல் பள்ளி சீருடையில் இருந்த மாணவியை ( 16 வயது ) மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதேபோல் வியாழக்கிழமை அன்று மர்ம நபர் ஒருவரால் 17 வயது மாணவி பாலியல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளார். ஆனால் இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஜியோப் வாரேன் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் கூறியதாவது, “இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு அந்த நபர் ஒரே ஆளாக […]
ஆஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பிய ஜோகோவிச்சை வரவேற்கும் விதமாக செர்பிய அரசு தங்கள் நாட்டு தேசிய கொடியின் வண்ணத்தினால் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை ஒளிரூட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் அந்நாட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஜோகோவிச்சை ஆஸ்திரேலிய படைவீரர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழையக்கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளார்கள். இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் தனிமையிலிருந்த ஜோகோவிச் தற்போது தனது தாயகமான செர்பியாவிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் செர்பிய அரசு ஜோகோவிச்சை […]
சீனாவின் தலைநகருக்கு வந்த சர்வதேச தபால் ஒன்றின் மூலமாகவே தங்கள் நாட்டிற்குள் ஓமிக்ரான் நுழைந்ததாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஓமிக்ரான் தங்கள் நாட்டிற்குள் பரவுவதற்கு சர்வதேச தபால்களே காரணம் என்று சீனா குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. அதாவது வெளிநாடுகளிலிருந்து பெய்ஜிங்கிற்கு வந்த தபால்களின் மூலமாக தான் தொற்று தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததாக சீனா தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச தபால்களின் உறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து மனித குலம் மீள்வதற்கு கூட்டு முயற்சிகள் தான் ஒரே வழி என்று உலக சுகாதார மன்றத்தின் உச்சி மாநாடு கூட்டத்தில் காணொளி மூலம் சீன அதிபர் கூறியுள்ளார். உலகப் பொருளாதார மன்றத்தின் உச்சிமாநாடு கூட்டம் நேற்று தொடங்கியுள்ளது. இதில் காணொளியின் மூலம் பேசிய சீன அதிபர் ஜின்பிங் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை வெல்வதற்கு கூட்டு முயற்சிகள் தான் ஒரே வழி என்று கூறியுள்ளார். மேலும் கொரோனாவுக்கு எதிராக […]
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டிலிருந்து டோங்கா தீவில் சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிடுவதற்காக விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடலுக்கடியிலுள்ள எரிமலை ஒன்று கடந்த சனிக்கிழமையன்று வெடித்து சிதறியுள்ளது. இதனால் ஏற்பட்ட சுனாமி டோங்கா தீவை பெருமளவு தாக்கியுள்ளது. ஆகையினால் டோங்கா தீவில் இணையத்தள சேவைகள் உட்பட அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டிலிருந்து டோங்கா தீவில் சுனாமியினால் ஏற்பட்ட இழப்புகளை கண்காணிப்பதற்காக விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே அமைந்துள்ள மாநிலம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் பாத்கீஸ் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் திடீரென 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் வீட்டின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் […]
ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்தி கொள்ளாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இயற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அதிரடியான மசோதா ஒன்றை நிறைவேற்ற தீர்மானம் செய்துள்ளது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொடர்பான தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டுமென்ற மசோதா வாகும். இந்த மசோதாவின்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நபர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் […]
அமெரிக்காவில் மிக பழமை வாய்ந்த காமிக் புத்தகத்தின் ஒரு பக்கம் 25 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றுள்ளது. அமெரிக்காவில் மிகப் பழமை வாய்ந்தவைகளுள் காமிக் புத்தகமும் ஒன்றாக திகழ்கிறது. இந்நிலையில் இந்த காமி புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஸ்பைடர்-மேன் பக்கம் ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த ஸ்பைடர்மேன் இடம்பெற்ற காமிக் புத்தகத்தின் ஒரு பக்கம் மட்டும் 25 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றுள்ளது.
கஜகஸ்தானில் எரிபொருள் விலையின் உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அங்கு அனுப்பப்பட்டிருந்த ரஷ்ய படைகள் அனைத்தும் தற்போது தங்களது நாட்டிற்கு திரும்பியுள்ளார்கள். கஜகஸ்தானின் பிரதமரான அஸ்கர் மாமின் புத்தாண்டையொட்டி எரிபொருட்களின் விலையை உயர்த்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 2-ம் தேதியிலிருந்து அந்நாட்டு பொதுமக்கள் பலரும் வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த போராட்டம் சில பகுதிகளில் கலவரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டின் அதிபரான காசிம் ரஷ்யப் படைகளின் உதவியை நாடியுள்ளார். அதன்படியே […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடுரோட்டில் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் அந்நாட்டில் பலவித கட்டுப்பாடுகளையும் தலிபான்கள் கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி இசைக்கும் தலிபான்கள் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்கள். அதாவது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இசைக் கருவிகளை பயன்படுத்த தலிபான்கள் தடை விதித்துள்ளார்கள். இந்நிலையில் பாக்தியா மாநிலத்திலுள்ள இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடிங்கிய தலிபான்கள் அதனை நடுரோட்டில் […]
ஜெர்மனியில் கொரோனாவுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 1,000ரத்துக்கும் மேலானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜெர்மனியில் கடந்த சனிக்கிழமையன்று தடுப்பூசியினை செலுத்தி கொள்ளாதவர்களுக்கு எதிராக அந்நாடு விதிக்கும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்து சுமார் 8 ஆயிரத்துக்கும் மேலானோர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுமார் 3,000 போராட்டக்காரர்கள் ஜெர்மனி நாட்டின் வடக்கு துறைமுக நகரமான ஹாம்பர்கில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்திலுள்ள தமிழர்கள் தங்களின் பாரம்பரியமிக்க நிகழ்ச்சியான தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள். தமிழர்களின் பாரம்பரிய மிக்க கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக தைப்பொங்கல் திகழ்கிறது. இதனை தமிழர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில் நடப்பாண்டின் தைப்பொங்கலை சுவிட்சர்லாந்திலுள்ள நீட்வால்டன் மாநிலத்தின் தமிழர்கள் மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடியுள்ளார்கள். இந்த தைப்பொங்கலை திரு. முரளிதரன் என்னும் தமிழர் ஒன்றிய தலைவர் தலைமை தாங்கியுள்ளார்.
துருக்கியில் பிசிஆர் பரிசோதனை இனி விமான பயணிகள் உட்பட உள்ளூர் மக்களுக்கும் தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது துருக்கியில் இதுவரை நாடக மேடைகள், திரையரங்குகள், பேருந்துகள், கச்சேரி அரங்குகள், உள்நாட்டு விமான சேவைகள், ரயில்கள் என எங்கு சென்றாலும் கொரோனா பிசிஆர் சோதனை முடிவுகள் கட்டாயம் என்ற விதி நடைமுறையில் இருந்தது. ஆனால் துருக்கி அரசாங்கம் தற்போது அந்த விதியை நீக்கியுள்ளது. அதாவது தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு மட்டுமே இது போன்ற விதிகள் பொருந்தும் […]
பிரிட்டனில் பொதுத்தேர்தல் நாளைக்கே நடந்தால் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள் ? என்ற கருத்து கணிப்பு Opinium இணையத்தில் நடைபெற்றது. மேலும் இந்த கருத்துகணிப்பானது சுமார் 2,005 பேரிடம் ஜனவரி 12 முதல் 14-ஆம் தேதி வரை நடத்தப்பட்டுள்ளது. அதில் 31% பேர் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கும், 41% பேர் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் வாக்களிப்பதாக கூறியுள்ளனர். அதேபோல் 9% பேர் டெமாக்ராட்ஸ், 4% பேர் SNP, 6% கிரீன், 8% மற்ற கட்சிகளும் […]
கஜகஸ்தானில் எல்.பி.ஜி எரிவாயுவால் தான் பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த எரிவாயுவின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டது. இதனால் கொந்தளித்த நாட்டு மக்கள் வரலாறு காணாத அளவிற்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கார்கள், வங்கிகள், அரசு கட்டிடங்களை கொளுத்திய போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதேபோல் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே நடந்த கலவரத்தால் கிட்டத்தட்ட 19 பாதுகாப்பு வீரர்கள் உட்பட 225 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு […]
முதல்முறையாக சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள ஹைடியன் மாவட்டத்தில் ஒருவருக்கு ‘ஒமிக்ரான்’ புதிய வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளது. இந்த நிலையில் மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட அந்த நபரை மட்டும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகளும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா நாட்டில் ‘ஹுங்கா டோங்கா’ என்ற தீவு பகுதியில் கடலுக்கு அடியில் திடீரென எரிமலை வெடித்து சிதறியுள்ளது. அதனை தொடர்ந்து சுனாமி அலையும் கடலில் உருவானது. இதனால் அந்த தீவில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் சுனாமி அலைகள் புகுந்தது. அதோடு மட்டுமில்லாமல் எரிமலை மீண்டும் வெடிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அங்குள்ள மக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க ஊடகங்கள், அமெரிக்காவின் மேற்கு […]
உலக சுகாதார நிறுவனம் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சில முக்கிய மருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா உருமாறி உருமாறி அனைவரிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் சில முக்கிய மருந்துகளை தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ஆர்த்ரைட்டிஸ் மூட்டு வலிக்காக பயன்படுத்தப்படும் பாரிசிடினிப் மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]
ஏமன் நாட்டை சேர்ந்த மரிப் நகரைக் கைப்பற்றுவதற்காக ஹவுதி அமைப்பினர்கள் மிகவும் கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ஏமன் நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு சவுதி அரேபியா ஆதரவைப் பெற்ற அரசாங்கம் பதவியேற்றுள்ளது. ஆனால் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர்கள் ஏமனில் பதவியேற்ற அரசை கவிழ்த்துள்ளார்கள். இதனையடுத்து தற்போது வரை ஏமன் நாட்டிலுள்ள எண்ணெய் வளம் நிறைந்த மரிப் நகரை கைப்பற்றுவதற்காக ஹவுதி அமைப்பினர்கள் தொடர்ந்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சவுதி […]
இங்கிலாந்து நாட்டின் தலைநகரில் கூகுள் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் வசதியாக பணியாற்றுவதற்காக 7,500 கோடி ரூபாயில் மிகப்பெரிய கட்டிடம் ஒன்றை வாங்கியுள்ளது. இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் பிரபல கூகுள் இணையதள நிறுவனத்தில் சுமார் 6,400 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களை 10,000 உயர்த்துவதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் லண்டனில் 7,500 கோடி ரூபாயில் புதிய அலுவலகம் அமைப்பதற்காக மிகப்பெரிய கட்டிடம் ஒன்றை கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த கட்டிடத்தை ஊழியர்கள் மிகவும் வசதியாக பணியாற்றும் […]
அமெரிக்காவில் உள்ள New Mexico என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று Hector Jesso, April Meadow, Michael ஆகிய மூவரும் குப்பை தொட்டிகளில் ஏதாவது கிடைக்குமா என்று சோதித்து பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு முனங்கல் சத்தம் ஒன்று கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. அது நாய்க்குட்டி அல்லது பூனைக்குட்டியாக இருக்கலாம் என்று நினைத்து மூவரும் தேடி பார்த்தனர். ஆனால் குப்பைத்தொட்டியில் தொப்புள்கொடி அகற்றப்படாத நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று பைக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் […]
நேற்று முன்தினம் பிரேசில் நாட்டின் தென் கிழக்கு நகரமான ஓரோ பெட்ரோ என்ற பகுதியில் உள்ள மலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும் வெடிப்பு சத்தத்துடன் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் அலறத் தொடங்கினர். இந்த திடீர் நிலச்சரிவால் மலையடிவாரத்தில் கட்டப்பட்டிருந்த 122 ஆண்டுகள் ( 1890-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ) பழமை வாய்ந்த பிரேசிலியா பங்களா தரைமட்டமானது. பின்னர் ஓரோ பெட்ரோ நகரம் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ சார்பில் அறிவிக்கப்பட்டது.
நைஜீரியாவிலுள்ள நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் டயர் கழன்றதில் அது பலமுறை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நைஜீரியாவிலுள்ள தாராபாவிலிருக்கும் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் அந்தப் பேருந்தின் ஒரு பக்க டயர் அதி வேகத்தின் காரணமாக கழன்றுள்ளது. ஆகையினால் அந்த பேருந்து பலமுறை உருண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறியதாவது, வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் அவ்வப்போது அதனை பரிசோதித்துக் கொள்ளுங்கள் […]
பாகிஸ்தான் அரசு பணக்கார வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யவே இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிரந்தர குடியுரிமை பெறும் வெளிநாட்டினர் இந்த புதிய சலுகையின் கீழ் பாகிஸ்தானில் நட்சத்திர வீடுகள், வீடுகள் மட்டுமில்லாமல் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலும் முதலீடு செய்யலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி காரணமாக வெளியேறி வரும் பெரும் பணக்காரர்கள் மற்றும் […]
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவு நாட்டில் சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டில் உள்ள சில தீவுகளில் கடலுக்கு அடியிலும், நிலப்பரப்பின் மீதும் எரிமலைகள் அமைந்துள்ளது. இந்த நிலையில் டோங்கா தீவு நாட்டில் உள்ள ஹுங்கா டோங்கா என்ற தீவு பகுதியில் கடலுக்கு அடியில் திடீரென எரிமலை வெடித்து சிதறியது. அதனைத் தொடர்ந்து சுனாமி அலையும் கடலில் உருவானது. பின்னர் அந்த தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் சுனாமி அலைகள் […]
ஜெர்மனியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவும் விதமாக ரோபோ ஒன்று அவனுக்கு பதிலாக பள்ளிக்கூடம் செல்லும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் ஜோஸ்வா என்னும் 7 வயது சிறுவன் வசித்து வருகிறான். இவனுக்கு நுரையீரலில் மிகவும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஜோஸ்வாவின் கழுத்தில் குழாய் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையினால் அச்சிறுவனால் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில்தான் அவதார் எனும் ரோபோ ஒன்று ஜோஸ்வானுக்கு பதிலாக கல்வி பயில்வதற்காக பள்ளிக்கு செய்துள்ளது. இந்த அவதார் ரோபோவின் மூலம் […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா முதல் அலையால் ஊரடங்கு அமலில் இருந்த போது லண்டன் டவுனிங் வீதியில் மது விருந்தில் கலந்து கொண்டார். இது குறித்த தகவல் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமில்லாமல் அரசியல்வாதிகளும், மக்களும் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது கோபப்பட்டனர். இதையடுத்து அவருடைய கன்சர்வேடிவ் கட்சியிலேயே மக்களின் இந்த கோபத்தை தணிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பு எழுந்தது. […]
உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை சார்ந்த இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா ஏற்கனவே கூடிய விரைவில் உக்ரைனை கைப்பற்றுவதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்நிலையில் உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை சார்ந்த இணைய தளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் இந்த ஹேக்கர்கள் உக்ரைன் நாட்டின் தனிநபர் விவரங்களை பொதுவெளி இணையதளத்தில் பதிவேற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து உக்ரைன் அரசாங்கம் கூறியதாவது, ரஷ்யா இதுபோல் பல சைபர் தாக்குதலை […]
இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான வணிகத்தின் அளவை வருகின்ற 2030 ஆம் ஆண்டிற்குள் இரு மடங்காக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக வணிகத்துறை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் வணிகத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் வணிகத்துறை அமைச்சரான ஆனி மேரி கூறியதாவது, இங்கிலாந்து மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான வணிகத்தின் அளவை வருகின்ற 2030ஆம் ஆண்டிற்குள் இரு மடங்காக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் வணிகம் […]
ஜிம்பாப்வேயில் கடந்த 2020 ஆண்டிலிருந்தே நடைமுறையிலிருக்கும் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளாலும், வறுமை உட்பட பல முக்கிய காரணங்களாலும் பள்ளி குழந்தைகள் மத்தியில் கருவுறுதல் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதாக அந்நாட்டின் பெண்கள் விவகார துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக ஜிம்பாப்வே திகழ்கிறது. இந்த ஜிம்பாப்வே நாட்டினுடைய பெண்கள் விவகார துறை அமைச்சரான சாய் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்காக அந்நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்தே போடப்பட்ட மிகக் கடுமையான […]
தென்னாபிரிக்காவில் முதல் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பரவலை தடுக்கும் பொருட்டு அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் தங்கள் நாட்டில் முக்கிய திட்டம் ஒன்றை செயல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உரு மாற்றமடைந்த ஓமிக்ரான் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அதிபர் ஜோ பைடன் பல நடவடிக்கைகளை அந்நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஓமிக்ரானை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு சுமார் 100 கோடி இலவச […]
பைசர் நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான மாத்திரையை தென் கொரியா இறக்குமதி செய்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடிய paxlovid என்னும் மாத்திரையை கண்டறிந்துள்ளார்கள். இந்த மாத்திரை கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை 90% வரை கம்மிப்படுத்துவதாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த paxlovid மாத்திரைகளை தென் கொரிய அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவ்வாறு இறக்குமதி செய்த அந்த மாத்திரைகளை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், 65 […]
கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தின் St.Gallen மாநிலத்தில் உள்ள Linsebuhi என்ற மாவட்டத்தில் இரவு நேரம் சுமார் 9 மணி அளவில் உரத்த இடி முழக்கம் போன்ற விசித்திரமான சத்தம் ஒன்று கேட்டு வருவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் புத்தாண்டுக்காக வாங்கிய பட்டாசுகளை தான் யாரோ கொளுத்திருக்கிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கருதி இருக்கின்றனர். ஆனால் பட்டாசு கொளுத்தும் போது ஏற்படும் வெளிச்சம் எதுவும் தென்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அங்குள்ள மக்கள் […]
அண்மையில் உலகிலேயே அதிக அளவு இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ்களை பெற்ற பாப் நட்சத்திரமான அரியானா கிராண்டேவின் சாதனையை முறியடித்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கைலி ஜென்னர். அதாவது அமெரிக்காவில் தொழிலதிபரும், சமூக ஊடக பிரபலமுமான கைலி ஜென்னரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நேற்று கிட்டத்தட்ட 30 கோடி பின்தொடர்பவர்களை பெற்றுள்ளது. இதன் மூலம் கைலி ஜென்னர் பிரபல பெண்மணியாக மாறியுள்ளார்.
வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி அபாயகரமான ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை சோதித்து வருகிறது. இதனால் சர்வதேச நாடுகள் வடகொரியாவின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் வடகொரியாவில் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். இருப்பினும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டின் ராணுவ திறனை வலுப்படுத்துவதில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் “பாலிஸ்டிக்” […]
அமெரிக்காவில் தன்னுடைய சுய சரிதை மூலம் புகழ்பெற்ற கருப்பின பெண்ணான மாயா ஏஞ்சலோவின் உருவம் பொறித்த நாணயம் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசித்து வந்த மாயா ஏஞ்சலோ என்பவர் பெண்ணுரிமைப் போராளியும், பிரபல எழுத்தாளருமாக திகழ்ந்துள்ளார். இவர் தன்னுடைய சுயசரிதை மூலம் அமெரிக்காவில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்துள்ளார். இந்த சுயசரிதையில் ஏஞ்சலோ தனக்கு சிறுவயதில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவலை எழுதியுள்ளார். இவருடைய இந்த சுயசரிதை அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இவர் 86 […]
உலக வெப்பமயமாதல் குறித்து ஆய்வு செய்த ஐரோப்பிய ஒன்றிய அறிவியலாளர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். உலக வெப்பமயமாதல் குறித்து ஆய்வு செய்த ஐரோப்பிய ஒன்றிய அறிவியலாளர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதாவது கடந்தாண்டில் உலக வெப்பநிலை 1 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிக வெப்பநிலை நிலவிய வருடங்களில் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது என்றும் கூறியுள்ளார்கள். மேலும் மீத்தேன் மற்றும் அதிக அளவிலான கார்பன் […]
பொலிவியாவில் தனியார் விமானம் ஒன்று எஞ்சின் கோளாறால் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பொலிவியாவில் சி 402 வகையை சேர்ந்த சிறிய விமானம் ஒன்றில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆகையினால் பறந்து கொண்டிருந்த அந்த இலகுரக தனியார் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமானம் என்ஜின் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சமவெளியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இருப்பினும் இந்த விமானத்தில் பயணம் செய்த 4 அதிகாரிகள் பயங்கர படுகாயங்களுடன் உயிருடன் தப்பியுள்ளார்கள்.
அமெரிக்காவில் மாற்று இதயம் கிடைக்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 57 வயது நபருக்கு அந்நாட்டின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியதை தொடர்ந்து அவருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசித்து வந்த 57 வயதாகின்ற டேவிட் பென்னட் என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டேவிட் மாற்று இதயம் கிடைக்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேளையில் அமெரிக்காவின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு அவருக்கு சிறப்பு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி […]
தென்னாப்பிரிக்காவிலுள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 2 மினி பேருந்துகள் ஒன்றோடொன்று மோதிய கோர விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். தென்னாபிரிக்காவிலுள்ள கெபெர்ஹா என்னும் நகரிலிருக்கும் நெடுஞ்சாலை ஒன்றில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பஸ் ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் இந்த மினி பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்து அந்த பேருந்து எதிரே வந்த மற்றொரு பஸ்சின் மீது அதி பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் 2 பிஞ்சு குழந்தைகள் […]
சென்னையை சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவன் இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் மிக உயரிய கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றதை தொடர்ந்து விஸ்வநாதன் ஆனந்த் தனது வாழ்த்துக்களை அச்சிறுவனுக்கு தெரிவித்துள்ளார். இத்தாலியில் vergani ஓபன் செஸ் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் சென்னையை சேர்ந்த 14 வயதாகும் பரத் சுப்பிரமணியம் என்பவர் கலந்து கொண்டுள்ளார். அவ்வாறு கலந்துகொண்ட பரத் vergani ஓபன் செஸ் போட்டிகளில் மொத்தமாகவுள்ள 9 சுற்றுகளில் 6.5 புள்ளிகளை வென்றுள்ளார். மேலும் இவர் மிக […]
கஜகஸ்தானின் அதிபர் அங்கு நடைபெற்று வரும் வன்முறை காரணமாக ஜனவரி 19 ஆம் தேதி வரை அவசர நிலை பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து தற்போது அந்நாடு முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தான் நாட்டின் பிரதமரான அஸ்கர் மாமின் 2022 ஆம் ஆண்டின் புதுவருடப் பிறப்பையொட்டி எரிபொருள் மீதான விலையை உயர்த்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீதியிலிறங்கி போராட ஆரம்பித்துள்ளார்கள். இந்த போராட்டம் அல்மாட்டி மற்றும் மேற்கு மங்கிஸ்டாவ் மாநிலங்களில் வன்முறையாக மாறியுள்ளது. இதனால் அந்நாட்டின் பிரதமரான அஸ்கர் […]
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை கட்டுபடுத்த அந்நாட்டில் கொண்டுவரப்பட்ட விதிமுறைகளின்படி பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் பலவித கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவிலும் கொரோனா பரவலைத் தடுக்க சில முக்கிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. […]