Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்று ஏற்பட்டாலும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை.. சீனா வெளியிட்ட தகவல்..!!

சீனாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று சற்று அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், அதன் பின்பு படிப்படியாக உலக நாடுகளில் பரவ தொடங்கியது. எனினும் சீனா கொரோனா பரவலை கட்டுப்படுத்தி விட்டது. அதன்பின்பு, தடுப்பூசி செலுத்தும் பணி, உலக நாடுகளில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இதனால், பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று குறைந்து மக்கள், இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே […]

Categories
உலக செய்திகள்

“எங்களின் தாக்குதலை தடுக்க முடியாது!”.. உலக நாடுகளை எச்சரித்த ரஷ்ய ஜனாதிபதி..!!

ரஷ்யாவின் ஜனாதிபதியான விளாடிமிர் புடின் பிரிட்டனுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின் உலக நாடுகளை எச்சரித்திருக்கிறார். ரஷ்ய அரசு, கடந்த ஜூன் மாதத்தில் தங்கள் கடல் பகுதிக்குள் சட்டத்திற்கு புறம்பாக பிரிட்டன் போர்க்கப்பல் புகுந்ததாக தெரிவித்தது. மேலும் எச்சரிப்பதற்காக அதன்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, விரட்டி அடித்ததாகவும் தெரிவித்திருந்தது. எனினும் ரஷ்யாவின் இந்த அறிக்கையை பிரிட்டன் அரசு மறுத்திருந்தது. மேலும் தங்கள் போர்க்கப்பல்களை யாரும் தாக்கவில்லை என்றும் கூறியது. ஆனாலும் சில தினங்கள் கழித்து ரஷ்ய அரசு, தாங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு…. புதிதாக 53,476 பேருக்கு தோற்று உறுதி..!!

 இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிக அளவில் பரவிக் கொண்டு வருகின்றது. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு […]

Categories
உலக செய்திகள்

சீனாவுடனான தற்போதைய நிலை…. பல நாடுகள் இந்தியாவை நம்புகின்றன – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம்

இந்தியா பல்வேறு நாடுகளின் நம்பிக்கையை பெற்றிருக்கின்றது என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது தனது கருத்துக்களை கூறியுள்ளார். அதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி விட்ட சவாலிணை சந்திக்கக்கூடிய இத்தகைய நேரத்தில், ஜனநாயக நாடுகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டும் என கூறினார். மேலும் சீனா ராணுவத்தினர் ஆரம்பித்த மோதல்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் ஏற்றுக்கொள்ள இயலாத அணுகுமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்திய ராணுவ […]

Categories
உலக செய்திகள்

நீங்க கண்டிப்பா வரணும்….! ”போன் போட்ட ட்ரம்ப்” மாஸ் காட்டும் மோடி …!!

ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஜி-7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியபோது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அடுத்த ஜி 7 நாடுகளின் உச்சிமாநாடு அமெரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள […]

Categories

Tech |