உலகளவில் கொரோனா பாதிப்பு 55 லட்சத்தை தாண்டியது. தற்போது வரை 55 லட்சத்து 20 ஆயிரத்து 901 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனவால் பல்வேறு உலக நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்து 028 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 13 ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ், கடந்த ஜனவரி […]
Tag: உலகம்
கொரோனா ஊரடங்கு ஆரம்பித்து 2 மாதம் ஆகிவிட்டது, நம்முடைய இயல்பு வாழ்க்கைக்கு எப்போ திரும்புவோம் என்கிற ஏக்கம் மக்கள் மனசுல தொடர்ச்சியாக இருந்து கொண்டு தான் இருக்கு. இந்த மாதிரியான ஒரு சூழலில்தான் கொரோனா எப்போ முடிவுக்கு வரும், இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கிறதுக்கு ஏன் இவ்வளவு தாமதம் ? அப்படிங்கிற ஒரு கேள்வி ரொம்ப ஆழமாகவே எழுது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தாமதம் ஆகிறதா ? இல்லையா ? இதில் என்னென்ன நடைமுறையில் இருக்கிறது. […]
கடந்த சில வாரங்களாகவே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லையோர பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருகின்றது. இதன் தற்போதைய நிலை குறித்தும், பின்னணி குறித்தும் விரிவாக பார்க்கலாம். ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து அவற்றை மத்திய ஆட்சிக்கு உட்பட்ட யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது முதலே, இந்தியாவின் எல்லையோர நடவடிக்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தது சீனா. அருணாச்சல பிரதேசம், சிக்கிம் என பல ஆயிரம் கிலோமீட்டர் எல்லை நெடுக நீண்டகாலமாகவே அத்துமீறி வந்த சீனாவுக்கு இந்தியாவில் சமீப கால […]
மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் கண்ணாடிப் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. உலகிற்கே பெருத்த சவாலாக இருந்து, லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால், உலக நாடுகள் திணறி வருகின்றன. அதே வேளையில் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் கொரோனவால் பாதிக்கப்பட்டு மரணித்து போய் விடுகின்றனர். கொரோனா நோயாளிகளின் இருமல், தும்மல் துளிகள் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மீது படும்போது மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்றுக்கு உண்டாகின்றது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை […]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்காவுடன் கைகோர்க்க சீனா தயார் என்று தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் சீனா மீது கடும் கோபத்தில் இருக்கின்றன. குறிப்பாக கொரோனா தாக்குதலுக்கு சின்னாபின்னமாகி உள்ள அமெரிக்கா சீனாவை ”வந்து பார்” என்று சொல்லும் அளவிற்கு வார்த்தைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து வந்த நிலையில், அமெரிக்காவுடன் சேர்ந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீனா தயாராக இருக்கிறது என்று சீன நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் […]
கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தால், உலக அளவில் 10 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளன. இது குறித்து உலக உணவு திட்டத்தின் ஊட்டச்சத்து இயக்குநர் லாரன் லாண்டிஸ் கூறுகையில், “கரோனாவின் தாக்கம் உலகின் 10 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு தள்ளக்கூடும். மோசமான ஊட்டச்சத்திலிருந்து ஏற்கனவே பலவீனமான உடல்களில் இந்த நோய்த் தொற்று பேரழிவை ஏற்படுத்தும். அதே நேரத்தில், தினசரி […]
துப்பாக்கி வேண்டாம், ஏவுகணை வேண்டாம், எதிரியை துவம்சம் செய்ய புதிய லேசர் தொழில்நுட்பத்தை அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. பறக்கும் விமானத்தை நடுவானில் சுட்டு வீழ்த்தும் இந்த லேசர். பசுபிக் பெருங்கடலில் அமெரிக்கா நிறுத்தியுள்ள போர்க்கப்பலில் இருந்து ஆளில்லா விமானத்தை பறக்க விட்டு லேசர் மூலம் சுட்டு வீழ்த்தியது. ஆளில்லா விமானம் எரிந்த நிலையில் தாக்கப்பட்ட கீழே விழுந்தது. இது ஆளில்லா விமானத்துக்கு மட்டுமல்ல ஆள் இருந்தாலும், இதே நிலைதான் பொருந்தும. துப்பாக்கி, வெடிகுண்டு, ஏவுகணை வெறும் லேசர் […]
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25ம் தேதி நாடு முழுவதும் பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதி நிறைவடையும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை, நாடு […]
கொரோனா தடுப்பு பணிகளில் இந்தியாவின் செயல்பாடுகளை கண்டு உலக நாடுகள் வியந்து பார்க்கின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் கொடுந் தொற்றான கொரோனா 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில், தொழில்நுட்பத்தில் எங்களை மிஞ்சுவது யாருமில்லை என்று சொல்லக்கூடிய வல்லரசு நாடுகளும் கொரோனா பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கின்றது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கிய சீனா மீது தீராத கோபத்தோடு இருக்கின்றன. கொரோனாவின் கோரப் […]
எக்ஸ்போஷர் நோட்டிஃபிகேஷன் சிஸ்டம் அல்லது நோய்த் தொற்று உள்ளவர்களிடத்தில் தொடர்புடையவர்களை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை கூகுள், ஆப்பிள் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்து வெளியிட்டுள்ளன. இது செயலியாக செயல்படாமல், இயங்குதளத்தில் ஒன்றி, சுகாதார அமைப்புகளின் தரவுகளுக்கு ஏற்றவாறு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் இன்க் மற்றும் ஆல்பாபெட் இன்க் கூகுள் இணைந்து உருவாக்கும் புதிய தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பத்தை கரோனா தொற்று பரவலை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனை 22 நாடுகளில் செயல்படுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இது […]
தென்சீனக் கடல் பகுதிகளில் சீனா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீபகாலமாக அண்டை நாடுகளைச் சீண்டும் வகையில் அக்கடல் பகுதிகளில் உச்சபட்ச அத்துமீறும் வேளையில் சீனா ஈடுபட்டுவருகிறது. உலகைச் சூறையாடிவரும் கரோனா வைரஸ் எங்கு தோன்றியது என்பது குறித்து சுயாதீன விசாரணை மேற்கொள்ள இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் உலக சுகாதார அமைப்பிடம் கூட்டாகக் கோரிக்கைவைத்துள்ளன. இந்த விவகாரம் சீனாவின் பொறுமையைச் சீண்டும்வகையில் உள்ளதால், சினமடைந்த அந்நாடு தனது ஆதிக்கத்தை மேலும் […]
பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இருந்து 97 பேருடன் வந்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அங்குள்ள குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் 85 பயணிகளும், 12 விமான பணி குழுவினரும் சேர்த்து 97 பேர் பேர் இருந்துள்ளனர். கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சற்று முன்னதாக விமான கட்டுப்பாட்டு […]
உலக சுகாதார நிறுனத்தின் நிர்வாகக்குழு தலைவராக இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் பதவியேற்றுக் கொண்டார். உலக சுகாதார மையத்தின் இரண்டு மிகப்பெரிய அவைகளில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கக்கூடிய நிர்வாக குழு தலைவராக இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பாக தேர்வு செய்யப்பட்ட ஹர்ஷ்வர்தன் தற்போது பதவி ஏற்றுள்ளார். உலக சுகாதார அமைப்பை பொறுத்தவரை இரண்டு மிக முக்கிய பிரிவாக உள்ளது. ஓன்று உலக சுகாதார அமைப்பின் கீழ் சுகாதார […]
பாகிஸ்தானில் ஏர்பஸ் A320 விமானம் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக செய்தி வந்துள்ளது. 90 பேருடன் சென்ற விமானத்தில் விமான பணியாளர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்டோரும் சேர்த்து 100 பேர் இருப்பார்கள் என்று சொல்லப்படுகின்றது. இந்த விமானமானது இஸ்லாமாபாத் கராச்சியில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் குறைந்த செலவில் செல்லக் கூடியதாகும். இதில் பயணித்த 100பேரின் கதி என்னவென்று அதிகாரபூர்வமாக ஏதும் தெரியாதநிலையில் தற்போது மீட்புப்பணி நடைபெற்று […]
‘டூபீஸ்’நீச்சல் உடை அணிந்து கொரோனா வார்டில் பணிபுரிந்த நர்ஸ் விவகாரம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் ரஷியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கபட்டு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர் இழப்புகள் ஏறபட்டுள்ளது. ரஷிய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 193 கி.மீ. தொலைவில் உள்ள துலா என்ற நகரத்தில் இருக்கும் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு தனி வார்ட் ஒதுக்கி சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அதில் பணி செய்த இளம் நர்ஸ் தற்போது சர்சையை ஏற்படுத்தியுள்ளார். தற்போது […]
அமெரிக்க பொருளாதாரம் மீளாமல் இருந்தால் வர இருக்கும் அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் படுதோல்வி அடைவார் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் ஏராளமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கின்றது. இதனால் அங்கு பொருளாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பலருக்கும் வேலை பறிபோகி, வேலையில்லா திண்டாட்டம் தலைதூக்கியுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் வரும் நவம்பர் மாதம் […]
அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்கு படிக்க வர வேண்டும் என்று அமெரிக்கா சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. உலக அளவில் இந்தியர்களின் அறிவு பேசப்படும் ஒன்றாக இருக்கிறது, அ னைவரும் இந்தியர்களை பெரிதும் நேசிக்கிறார்கள். குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா இந்தியர்களை பெரிய பெரிய உயர் பதவிகளில் வைத்து அழகு பார்க்கிறது. அங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும், முக்கியமான பணிகளில் இந்தியர்கள் அமர்த்தப்படுவது வழக்கமான ஒரு நடைமுறையாக இருந்து வருகிறது. இதனால் இந்திய மாணவர்கள் பலரும் அமெரிக்காவில் சென்று […]
ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற பரபரப்பு தகவல் உலகளவில் எழுந்துள்ளது. இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் நல்லுறவு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் போட்டது. சுமார் ரூ.37 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தால் எஸ்.400 என்று அழைக்கப்படுகிற அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை 5 என்ற எணிக்கையில் இந்தியாவுக்கு வர இருக்கின்றது. ஆனால் இந்தியா ரஷியாவிடம் இருந்து […]
உலகளவில் கொரோனா பாதிப்பு 51 லட்சத்தை தாண்டியது. தற்போது வரை 15 லட்சத்து 03 ஆயிரத்து 350 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனவால் பல்வேறு உலக நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 925 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 34 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ், கடந்த ஜனவரி […]
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டதில் முதலிடம் அமெரிக்கா என்பது பெருமையே என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே கதறவிடும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 200க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனவால் தாக்கப்பட்டு, உயிரிழப்பு 3 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கி உருக்குலைந்து உள்ளது. அங்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு 16 லட்சத்தை நெருங்குகிறது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆயிரத்தை […]
கோவிட்-19 பரவலுக்குச் சீனாவை முழு பொறுப்பாக்கும் முயற்சி எந்நாளும் வெற்றி பெறாது என அந்நாட்டு அரசியல் ஆலோசனை மாநாட்டின் செய்தித் தொடர்பாளர் குயே வெய்மின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று (மே 19) பேசிய அவர், “உலக நாடுகளில் உள்ள சில அரசியல் தலைவர்கள் உள்நாட்டு அரசியலுக்காகவோ, மக்களை திசைதிருப்பும் நோக்கிலோ கோவிட்-19 பெருந்தொற்று பரவலுக்குச் சீனாவே முழுப் பொறுப்பு எனப் பழி சுமத்தி வருகின்றனர். இந்த முயற்சி எந்நாளும் வெற்றிபெறாது. இப்பெருந்தொற்று உலக சமூகத்தில் பல […]
உலகளவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை தாண்டியது. தற்போது வரை 50 லட்சத்து 599 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனவால் பல்வேறு உலக நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 156 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 70 ஆயிரத்து 918 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து […]
இமாச்சல பிரதேசம் லஹால், ஸ்பிட்டி பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- சீனா 3, 488 கி.மீ. தூர எல்லையை பகிர்ந்துள்ளது. இவற்றில் பல பகுதி எல்லைகள் வரையறுக்கப் படாமலே இருக்கிறது. இதனால்எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய-சீன நாட்டு வீரர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்ஏற்படும். இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநில எல்லையில் லஹால், ஸ்பிட்டி பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்ததாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது […]
முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் என அரசு அறிவித்துள்ளது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பல கட்டுப்பாடுகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. ஒரு சில நாடுகளில் தொற்றின் தாக்கம் குறைந்தாலும் பல நாடுகளில் தொற்றினால் ஏற்படும் தீவிரமடைந்து வருகின்றது. அவ்வகையில் வளைகுடா நாடான கத்தாரில் 24 மணி நேரத்தில் புதிதாக 1500-க்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை […]
கொரோனா தடுப்புப் பணிக்காக இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கண்ணுக்குத் தெரியாத கரோனா என்ற எதிரியுடன் போரிட்டு வருகிறது. இப்போரில் மக்களைக் காப்பாற்றும் சிப்பாய்களான களப்பணியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர். ஆனால், அந்த எதிரியை ஒரே அடியாக அழிக்கும் ஆயுதமான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிப்பதில் காலதாமதமாகியிருக்கிறது. இதனால், சில நாடுகளில் கரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், இந்தியாவில் கரோனா […]
பாகிஸ்தானில் இந்து தம்பதி கட்டாய மதமாற்றத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு பணம் அளிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. பாகிஸ்தானின் நவாப்ஷா மாவட்டத்திலுள்ள சிந்து பகுதிக்கு அருகிலுள்ள பள்ளிவாசலில் பரேல்வி கொள்கைகளைப் பின்பற்றும் ஜமாஅத் அஹ்லே சுன்னத்தின் தலைவர் முன்னிலையில், இந்து தம்பதியினர் நேற்று கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மதமாற்றம் நடைபெற்ற பின்னர் அந்தத் தம்பதியினருக்கு பணமும் அளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில காலங்களாக பாகிஸ்தானில் மத ரீதியிலான தாக்குதல்களும், கட்டாய மதமாற்றங்களும் நடைபெற்றுவருவதாகவும், […]
ஊரடங்கால் ஆப்பிரிக்காவிலுள்ள கறுப்பு காண்டாமிருகங்களைக் காப்பாற்றுவது பெரும் சவாலாக இருப்பதாக வனத்துறையினர் வருத்தமடைந்துள்ளனர். கரோனா வைரஸ் அச்சத்தால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்கா நாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வனவிலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால், விலங்குகளைப் பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமின்றி, வேட்டைக்காரர்கள் வனப்பகுதிக்குள் நுழைந்து, மருத்துவத் தன்மை கொண்ட காண்டாமிருகத்தின் கொம்புகளை வேட்டையாடிச் செல்கின்றனர். இதைக் கட்டுப்படுத்தவும் வனத் துறையினர் தீவிரமாக முயற்சி செய்து […]
ஐ.நா.வுக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக அமெரிக்க செலுத்த வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகளில் பேரிடரால் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டாலும் அங்கு சென்று உதவுவதற்கும், சர்வதேச அளவில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதனைத் தீர்த்துவைப்பதற்கும் முதல் ஆளாக நிற்பது ஐ.நா. சபைதான். இதற்காக ஐ.நா. சபை சிறப்பு அமைதி காக்கும் வரவு-செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக பணத்தை பல நாடுகள் அனுப்பிவருகின்றன. அந்த வகையில், இந்தத் திட்டத்திற்கான பணத்தில் 25 விழுக்காடு (சுமார் […]
தாறு மாறாக ஓடிய காரை சோதனையிட்ட காவல் அதிகாரிகள் வெட்டப்பட்ட பெண்ணின் சடலத்தை கண்டறிந்துள்ளனர் பிரிட்டனில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்றை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரித்ததில் காரில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்துள்ளனர். அந்தப் பெண் பர்மிங்காமைச் சேர்ந்த Gareeca(27) என்றும், அந்த ஆண் Wolverhamptonஐச் சேர்ந்த Mahesh(38) எனவும் தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் அவர்களது காரை சோதனையிட்ட போது காரில் இருந்த இரண்டு சூட்கேஸ்களை திறந்து பார்த்துள்ளனர். அதில் காவல் துறையினர் பெரும் அதிர்ச்சி […]
கொரோனா வைரஸ் தொற்றுநோயை 100 சதவீதம் தடுக்கக்கூடிய ஆன்டிபாடி கண்டுபிடிப்புயை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். கொரோனாவால் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் ஆன்டிபாடியை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பயோடெக் நிறுவனம் கண்டுபிடிப்பான ஆண்டிபாடி கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்டியாகோவை தளமாகக் கொண்டு இயங்கும் சோரெண்டோ தெரபியூடிக்ஸ் பயோடெக் நிறுவனத்தின் எஸ்.டி.ஐ -1499 என்ற ஆன்டிபாடி மருந்து ஆரோக்கியமான மனித உயிரணுக்களில் கொரோனா வைரஸை நுழைவதை […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சீனாவை மிஞ்சி உள்ளதால் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கண்ணுக்குத்தெரியாத கொடிய வைரஸ் உலக நாடுகளையே தும்சம் செய்துவருகிறது . சீனாவின் வுகாண் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 46 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது, உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிக்கப்படாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து உலக நாடுகள் […]
பேசும் பொழுது வெளிவரும் நீர்துளிகளினால் கொரோனா பரவும் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேசும்பொழுது தொற்று பரவுவது குறித்து அமெரிக்காவின் தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ப்ரோஸ்ட்டிங் இதழில் வெளிவந்துள்ளது. நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு நபர் பெட்டியின் உள்ளே இருபத்தி ஐந்து வினாடிகள் ஆரோக்கியமாக இருங்கள் என சத்தமாக மீண்டும் மீண்டும் […]
பொருளாதார தடையினால் சொந்த நாட்டிலேயே உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு அதிபர் கிம் ஜாங் முடிவு செய்துள்ளார். வடகொரியா அரசின் செயல்திட்டங்கள் உலகிற்கு தெரியாத அளவிற்கு ரகசியமாகவே இருந்து வருவதாக பல கருத்துக்கள் இருந்து வருகின்றது. அதற்கேற்றாற் போல் அதிபர் கிம் பற்றிய தகவல்கள் வெளியில் வராமல் இருந்தது. பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்ததாக தகவல் பரவியது. ஆனால் அதிபரின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாக தென்கொரியா தெரிவித்தது. இந்நிலையில் அணு ஆயுத சோதனை நடத்தியதாக குற்றம் […]
கனடாவில் மூங்கில் பற்றாக்குறை உள்ளதால், இரண்டு பெரிய சைஸ் பாண்டா கரடிகளை சீனாவிற்கு திருப்பி அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் கனடாவில் உள்ள கல்கரி வன உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இத்தருணத்தில் பூங்காவில் உள்ள வனவிலங்குகளை பூங்கா காப்பாளர்கள் பாதுகாப்புடன் பராமரித்து வருகின்றனர். விலங்குகளுக்குத் தேவையான உணவுகளையும் சரியான நேரத்தில் வழங்கி வருகின்றனர். ஆனால், பூங்காவில் உள்ள இரண்டு பாண்டா கரடிகளுக்குத் தேவையான மூங்கில் ஆனது கிடைக்காததால் காப்பாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். வழக்கமாக பாண்டாவுக்குத் தேவையான […]
உலகத்தின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 3.2% சரிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஐநா சபை தெரிவித்துள்ளது ஐநா சபை வெளியிட்ட அறிக்கையில் தொற்று தீவிரமடைந்ததற்கு முன்பாக அதாவது கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட கணிப்பில் நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பொருளாதாரம் 3.2% சரியும் என்றும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வந்தால் ஊரடங்கு மூன்றாம் காலாண்டுக்கு நீடிக்குமானால் பொருளாதாரம் சரிவு 4.9 சதவீதத்தை தொட்டுவிடும். இதன் காரணமாக […]
கொரோனா தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை ஜப்பான் வெளியிட்டுள்ளது கொரோனா தொற்று எந்த அளவுக்கு வேகமாக பரவுகின்றது என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்றை ஜப்பான் வெளியிட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பப்பட் உணவகத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் கொரோனா பரவலை சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜப்பான் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் உணவகத்தின் உள்ளே பத்து நபர்கள் வருகின்றனர். அதில் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர். அவர் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அனைவரிடமும் சகஜமாக பேசுகின்றார். அனைத்து […]
கொரோனா தொற்று எச்ஐவி போன்று உலகை விட்டு எப்பொழுதும் போகாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் தங்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கும் முடங்கிப்போன பொருளாதாரத்தை காப்பாற்றவும் தயாராக இருக்கும் நிலையில் கொரோனா தொற்று உலக மக்கள் மத்தியில் தங்கிவிடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால இயக்குனர் மைக்கல் ரியான் கூறியிருப்பதாவது, “மனித சமூகங்களில் இருக்கும் […]
உலகம் முழுவதிலும் 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கும் வாய்ப்புகள் இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதார அமைப்பின் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தெற்காசியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதனால் வழக்கமான சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தை பிறப்பு, நோய் தடுப்பு, சிசு பாதுகாப்பு, குடும்ப கட்டுப்பாடு போன்றவற்றில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் பள்ளிகள் மூலமே […]
குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை அலர்ஜி நோயினால் பெற்றோர் பெரிதும் அச்சத்தில் இருந்து வருகின்றனர் உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் பிரிட்டனில் குழந்தைகளிடம் புதிய வகையான அலர்ஜி நோய் பரவி வருகின்றது. குழந்தைகளுக்கு சுவாச நோய் போன்று கடுமையான காய்ச்சலுடன் தோலில் சிவப்பு தடிப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்த புதிய வகை நோய் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிப்பதுடன் இந்த நோய்க்கு பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தீவிர […]
கொரோனா தடுப்பு மருந்து எப்போது மக்களுக்கு கிடைக்கும் என்ற உண்மை தகவலை உலக சுகாதார நிறுவன உறுப்பினர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை உலக மக்களை சென்றடைவதற்கு இரண்டரை வருடங்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்புப் பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார். கொரோனாவுக்குரிய தடுப்பு மருந்து உருவாக்க குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதிக அளவு உற்பத்தி செய்து 7.8 பில்லியன் உலக மக்களுக்கு கொண்டு செல்ல […]
கொரோனா மட்டும் இறப்புக்கு காரணமில்லை என செவிலியர் ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த செவிலியர் நிக்கோல் என்பவர் இரண்டு வெவ்வேறு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து வருகின்றார். சமீபத்தில் இவர் காணொளி ஒன்றில் கண்ணீருடன் தகவல் […]
மகப்பேறு மருத்துவமனையில் நுழைந்து பச்சிளம் குழந்தை உட்பட பலரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆப்கானிஸ்தானில் இருக்கும் மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் 3 பேர் போலீஸ் உடையுடன் நுழைந்து நடத்திய தாக்குதலில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்திருக்கும் மகப்பேறு மருத்துவமனைக்குள் ஊடுருவிய அந்த நபர்கள் முதலில் கையெறி குண்டுகளை வீசி விட்டு பின்னர் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் சுட்டு தள்ளியுள்ளனர். அவர்களின் இந்த எதிர்பாராத […]
முன்னாள் போலீஸ் அதிகாரியை கொலை செய்துவிட்டு அவரது உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உக்ரைன் நாட்டில் காவல் துறை அதிகாரி ஒருவர் கழுத்தை வெட்டி அவரது உடல் பாகங்களை சமைத்த தந்தை-மகன் மீது வழக்கு பதிவாகி சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாக்சிம் மற்றும் யாரோஸ்லாவ் ஆகியோர் யெவ்ஜெனி பெட்ரோ என்பவரை உக்ரேனில் கொலை செய்ததாக குற்றம் சுமத்த பட்டனர். விசாரணை முடிவடைந்த நிலையில் தந்தை-மகன் இருவருக்கும் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. […]
தங்களுக்கு கொடுக்கப்பட்ட உணவை தயாரித்த வீடியோ காட்சியை பார்த்து வாடிக்கையாளர் அருவருப்படைந்துள்ளார் சீனாவில் தனது குழந்தைகளுக்கு ஆர்டர் செய்த சாப்பாடு சுவையாக இல்லை எனக்கூறி வாடிக்கையாளர் ஒருவர் அதனை திருப்பி அனுப்பி உள்ளார். அனுப்பப்பட்ட உணவிற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட உணவில் ஒரு சிகரெட் துண்டு கிடந்தது அதை வாடிக்கையாளர் வெய்ட்டரிடம் காட்டி கேட்டதற்கு தவறுதலாக விழுந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வாடிக்கையாளர் மேலாளரை அணுகி சிசிடிவி காட்சிகளை பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை […]
கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளின் மனநோய் என பெலாரஸ் நாட்டின் அதிபர் வர்ணித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடான பெலாரஸ் கொரோனா தொற்றை சிறிதும் பொருட்படுத்தாமல் இரண்டாம் உலகப் போரின் 75 வது வெற்றி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளது. அந்நாட்டின் தலைநகரான மின்ஸ்கில் நடைபெற்ற பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய அந்நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் கூறுகையில், “கொரோனா தொற்று […]
காவல் அதிகாரியின் இறுதிசடங்கில் குண்டுவெடித்து 40 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகின்றது. நாட்டின் சில பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பொதுமக்களை குறிவைத்து பயங்கரமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்நாட்டு ராணுவத்தினர் இந்த தலிபான் பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டில் இருக்கும் படையினருக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன்காரணமாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் […]
உலக நாடுகள் ஊரடங்கை தளர்த்தக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகையே அலற விட்டுக்கொண்டு இருக்கும் கொரோனாவுக்கு 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 87 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் முடங்கி, பொருளாதார நடவடிக்கை சீர்குலைந்துள்ளது. பொருளாதாரத்தில் இருந்து மீண்டு வருவதற்கு உலக நாடுகளுக்கு பல வருடங்கள் ஆகலாம் […]
கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கடும் ஆவேசமடைந்தார். உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை சல்லிசாக சிதைத்துள்ளது. இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 81 ஆயிரத்து தாண்டி உயிரிழப்பு சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் வெய்ஜியா ஜியாங், கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வரும் நிலையில் மற்ற நாடுகளைவிட […]
வயல்வெளியில் இருந்து 9 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அவள் தந்தையும் வளர்ப்பு தாயும் கைது செய்யப்பட்டனர் போர்த்துக்கல் நாட்டின் பெனிச் நகரில் கடந்த 7 ஆம் தேதி ஒருவர் தனது 9 வயது மகளை காணவில்லை என அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணையின் ஒருபகுதியாக 600 காவலர்கள் மாயமான சிறுமியை தேட களமிறங்கினர். காவல்துறையினருடன் சாரணர் அமைப்பை சேர்ந்த சிறுவர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இவர்கள் அப்பகுதியில் […]
சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்த சிறுமியிடம் என்னுடன் வந்து காரில் ஏறு என்று சொன்ன மர்ம நபரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் கனடாவில் Vancouver என்ற பகுதியில் மாலை 3 1/2 மணி அளவில் 12 வயது சிறுமி ஒருவர் சாலையில் மிதி வண்டி ஓட்டிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியின் அருகில் சென்று கவரும் வகையில் பேச்சுக் கொடுத்துள்ளார். பின்னர் சிறுமியிடம் என்னுடன் வா காரில் ஏறு என கூறியுள்ளார். […]